Saturday, May 29, 2010

இலக்கிய குடும்பத்தின் புதுவரவு!


காலையில் எழுந்ததும் காபியோடு நியுஸ் பேப்பர் படிப்பது பலருக்கு பழக்கம் என்றால், இந்த குடும்பத்தில் இருக்கும் ரெண்டு டிக்கெட்டுக்கும் காலையில் காப்பியோடு கம்பராமாயணமும், கபிலரும் எழுதிய புக்கு தேவைப்படும்.


இருவரும் வீட்டில் பேசிப்பது தலைவன் தலைவி என்று தமிழ்பாடத்தில் வரும் செய்யுள் ரேஞ்சுக்கு இருக்கும் என்று நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்தன.

ஊருக்கு போகிறோம் என்றால் நாம எல்லாம் துணி, பணம் எல்லாம் எடுத்து வைப்போம், இந்த குடும்பம் புக்கை தவிர வேற எதுவும் எடுத்துவைக்காது, இதுல தலைவர் ஆங்கில கவிதையை தமிழில் மொழிபெயர்ப்பார் என்றால், தலைவி தமிழ் கவிதையை புரிகிற மாதிரி எழுதிகிறேன் என்று நம் முழியை பெயர்ப்பார்.. நல்ல சோடி பொருத்தம். இப்படி இம்சையை கொடுக்கும் இருவருக்கும் நேற்று புதிய வரவாக "அமுதினி" என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய் & சேய் இருவரும் நலம்.

குழந்தை அழுவும் பொழுது குற்றால குறவஞ்சி பாடி தூங்க வைக்கிறார்களாம். அமுதினிக்கு தாய்பாலை அம்மா தருகிறார்கள் என்றால் சித்தார்த் தமிழ்பாலை தருகிறார். குழந்தைக்கும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த இப்பொழுதே அகநானூறு, புறநானூறு, எட்டுத்தொகை எல்லாம் வாங்கி போய் கொடுத்து குழந்தைக்கு படிக்க சொல்லி தருகிறாராம். குழந்தை பிறந்து ஜஸ்ட் 24 ஹவர்ஸ் தான் ஆகிறது.

வாழ்த்துக்கள் காயத்ரி & சித்தார்த்

25 comments:

  1. எளக்கியம் வளர்த்த வந்து அவதரித்திருக்கும் அமுதினி குட்டிப்பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. [[[குழந்தைக்கும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த இப்பொழுதே அகநானூறு, புறநானூறு, எட்டுத்தொகை எல்லாம் வாங்கி போய் கொடுத்து குழந்தைக்கு படிக்க சொல்லி தருகிறாராம்.]]]

    இதுதான் பயமா இருக்கு..! எதுக்கும் இந்தக் குட்டி வலையுலகத்துக்குள்ள வர்றதுக்குள்ள நம்ம வாழ்க்கையை முடிச்சுக்க வேண்டியதுதான்..!

    ReplyDelete
  3. என்னைக்காவது இருப்போம்னு சொல்லியிருக்கியாய்யா...விளங்கிரும்..

    வாழ்த்துக்கள்.. பாப்பாவுக்கு.

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  4. என்னைக்காவது இருப்போம்னு சொல்லியிருக்கியாய்யா...விளங்கிரும்..

    வாழ்த்துக்கள்.. பாப்பாவுக்கு.

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  5. ஒரு குழ்ந்தையின் புதுவரவைக்கூட இவ்வளவு நையாண்டியுடன் உன்னால் மட்டுமே எழுத முடியும்.

    குட்டிப்பாப்பாவுக்கும் பெரிய பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. // உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[குழந்தைக்கும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த இப்பொழுதே அகநானூறு, புறநானூறு, எட்டுத்தொகை எல்லாம் வாங்கி போய் கொடுத்து குழந்தைக்கு படிக்க சொல்லி தருகிறாராம்.]]]

    இதுதான் பயமா இருக்கு..! எதுக்கும் இந்தக் குட்டி வலையுலகத்துக்குள்ள வர்றதுக்குள்ள நம்ம வாழ்க்கையை முடிச்சுக்க வேண்டியதுதான்..!//

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  7. குட்டிக் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் இலக்கியவாதிகளுக்கும் குட்டிப்பாப்பாவுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. குட்டிப்பாப்பாவின் புது வரவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. புது வரவுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. மாமு rocking post. இந்த ஜோடியைப் பார்க்கிறப்போ நானும் இதே தான் நினைப்பேன். குட்டிதேவதைக்கு வாழ்த்துகள்.

    மே 28ல் பிறந்தவங்க பெரியளா ஆவங்க, அமுதினியும் அப்படி ஆக வாழ்த்துகள்

    ReplyDelete
  12. அணிலாடும் முன்றில் வாழ் சித்தார்த் -காயத்ரி-அமுது இனி என்னும் அமுதினிக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. புதுவரவான குட்டிப்பாப்பாவுக்கு வாழ்த்துகள். அழகான பதிவு குசும்பன்.

    ReplyDelete
  14. //இதுல தலைவர் ஆங்கில கவிதையை தமிழில் மொழிபெயர்ப்பார் என்றால், தலைவி தமிழ் கவிதையை புரிகிற மாதிரி எழுதிகிறேன் என்று நம் முழியை பெயர்ப்பார்..//

    ROFTL :))))))))))))))

    Vaazhthukkal ilakkiya kudumbaththukku :D

    ReplyDelete
  15. ஆஹா.. இவங்க வயித்துக்குள்ள இருக்கும்போது லேர்ந்தே .. வகுப்பெடுக்கிறாங்களா இருக்கும்.. நல்லா விசாரிங்க :)

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. அமுதினி குட்டிப்பாப்பாவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. அமுதினி குட்டிப்பாப்பாவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. புதிய வரவான் இனிய அமுதினிக்கு நல்வாழ்த்துகள் = பெற்றவர்கள் காயத்ரி - சித்தார்த் - நல்வாழ்த்துகள்

    பகிர்ந்த குசும்பனுக்கும் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  20. //குழந்தைக்கும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த இப்பொழுதே அகநானூறு, புறநானூறு, எட்டுத்தொகை எல்லாம் வாங்கி போய் கொடுத்து குழந்தைக்கு படிக்க சொல்லி தருகிறாராம். //

    உளவுத்தகவலில் நீர் மங்குனி ஐயா.. சுமார் 7 மாதங்களாக ஏராளமான இலக்கியங்களை பாபபா கேட்டுக் கொண்டிருக்கிறாள்.. ஆடியோ சிடியில் ஒலிக்க விட்டு இந்தம்மா தூங்கிடுவாங்க.. பாப்பா, சமர்த்தா கேட்டுட்டு இருப்பா.. சந்தடி சாக்குல நான் கூட அவ அம்மா கூட சேர வேணாம்னு சொல்லி வச்சிருக்கேன்..:))


    நம்ம வீட்டு குட்டிப் பாப்பாவுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்..

    ReplyDelete
  21. வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. குட்டிப்பாப்பாவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் காயத்ரி & சித்தார்த்

    ReplyDelete
  24. அமுதினிக்கு அன்பானா வாழ்துக்கள் :-))

    ReplyDelete