Monday, May 24, 2010

இராவணன் பதிவர்களின் பார்வையில்!!!

எல்லாம் உங்களால் தான் இதோ 200000000000 லட்சம் ஹிட்ஸ் 23222 பாலோயர்ஸ் கொடுத்த உங்களுக்கு நன்றி!

மணியின் 20வது படம், தமிழில் ரொம்ப நாட்களுக்கு பிறகு அவர் எடுத்து வந்திருக்கும் படம்,விக்ரம், ஐஸ்வர்யா ராய், ARR என்ற பெரும் கைகள் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம். என்ற எதிர்பார்ப்பில் தான் சென்றேன் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கா என்றால்..விடை கடைசியில்.

கதைக்கு அவ்வளோவாக கஷ்டப்படவில்லை, கதையின் கரு இராமாயணத்தில் இருந்தே உருவப்பட்டு இருக்கிறது. சீதைக்கு பதிலாக ஐஸ், இராவணனாக விக்ரம், இராமனாக பிருதிவிராஜ். இதில் முக்கியமாக அனுமார் பாத்திரம் பற்றி எதுவுமே இல்லை. ஐஸ்ஸை கடத்துவது வரை ஓக்கே அதன் பிறகு மீட்கும் காட்சியில் சரி சொதப்பல்.இந்த மாதிரி கதை என்று முடிவு செய்தவுடன் கொஞ்சம் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இராவணன் வென்று இருப்பான்.

ஹீரோ சுடும் பொழுது வில்லன் தப்பிப்பது ஹிரோஷிமா நாகசாகி என்ற ஜப்பான் படத்தில் இருந்தும், ஹீரோயின் அப்பா வீடு செட் வாஷிங்டன் என்ற அமெரிக்க படத்தில் இருந்தும் அப்பட்ட காப்பி! ARR கொஞ்சம் சொந்த பாட்டில் இருந்தே காப்பி அடிப்பதை நிறுத்திக்கலாம், அதுமட்டும் இன்றி சீதையிடம் காதலை இராவணன் சொல்லும் பொழுது இசை இல்லாமல் இருந்திருக்கலாம்,சில நேரங்களில் இசை என்பது ஒன்றும் இல்லாம இருப்பது நன்றாக இருக்கும், இனி ARR கொஞ்சம் இசையில் கவனம் செலுத்தவேண்டும்.

படத்தில் நிறைகளே இல்லாமல் இல்லை விக்ரம் அப்படியே விக்ரமாக வந்துபோகிறார், பிரிதிவிராஜ் கொஞ்சம்தமிழில் பேசுகிறார்.
மொத்தத்தில் இராவணன் - மீண்டும் மரணம்

(The End இங்கிலீஸிலும் ஏதும் பஞ்ச் சொல்லனுமுல்ல)

டிஸ்கி: தியேட்டரில் சீட்டில் யாரோ பப்பிள்காம் ஒட்டி என் பேண்ட் வீனாக போய்விட்டது, அதுக்கு காரணம் கேட்டுமெயில் அனுப்பியிருக்கேன். என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் சத்யம் நிர்வாகிகள்.முதல் காட்சியை மணி,விக்ரம், ஐஸ் ஆகியோருடன் பார்த்தேன். அவர்கள் தேவியில் பார்த்தார்கள், நான் சத்யத்தில் முதல்காட்சி பார்த்தேன்.

பின்னூட்டம்:
பாஸ் அப்ப நாங்க தப்பிச்சிட்டோம்?--சூரக்கோட்டை சிங்ககுட்டி

உங்கள் விமர்சனத்துக்காகதான் வெயிட்டிங்!-- காத்திருக்கும் காத்தவராயன்

ஆக டீவிடி வந்த பிறகு பார்த்துக்கலாம்-- கண்டுபிடிப்பு கண்ணன்

முடிவா என்ன சொல்றீங்க படம் பார்க்கலாமா வேண்டாமா?--- கொக்கி குமாரு

புறாவை விட படம் நல்லா இருக்குல்ல!--- சந்தோச சந்தாணம்

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க படத்தை குடும்பத்தோட தியேட்டருக்கு போய் போஸ்டர் பார்க்கலாம் என்று இருந்தோம்!

விமர்சனம் செய்கிறேன் என்று இப்படி எழுதுவதுதான் முறையா? இதோ ஒருவர் டீவிடியில் பார்க்கலாம் என்கிறார் இதுக்குதான்ஆசைப்பட்டிங்களா?

ச்சே ஒருபடத்தை கூட காப்பி அடிக்காமல் எடுக்க மாட்டாங்களா?
******************


பதிவின் தலைப்பு: மணி என்கிற பாப்பார பாடுவின் அபத்தம்
இராவணன் இதை பற்றிய என் கருத்தை பின்னால் பதியலாம் என்றுதான் இருந்தேன் ஆனால் பூனூல் போட்ட பார்பன சக்திகள் இராவணனை அழிக்க திரும்ப இராமன் அவதரித்து விட்டதாக கூக்குரல் இடுவதுக்கு எதிர் கருத்து பதியவில்லை என்றால் பார்பனீயம் தலைவிரித்து ஆடும் என்பதுக்காகவே இந்த பதிவு, மணிரத்தினம் இல்லை மணிவிஷம், இவர் யார் என்று பார்த்தால் எல்லா படத்திலும் சூத்திரர்களை கேவலமாக சித்தரித்துக்கொண்டு வரும் ஒரு விஷம், இந்த விஷம் இந்த படத்திலும் தன் புத்தியைகாட்டாமல் இல்லை இவர் எத்தனன சட்டை போட்டாலும் சட்டைக்குள் நெளியும் பூனூல் வெளியில் தெரியாமல் இல்லை. இருவரில் பெரியார் பற்றி டீடெயிலாக எதுவும் சொல்லாத பொழுதே இவரின் சுயரூபம் தெரியும். ஆக மொத்தத்தில் இராவணன் ஒரு மலக்குவியல்.


பின்னூட்டம்
சிறந்த ஒரு மாற்று பார்வை!

வித்தியாசமாக எழுதவேண்டும் என்பதுக்காகவே எழுதியது போல் இருக்கு!
*********************


படத்தின் தலைப்பு: இராவணன் சொல்லப்படாத பெண் உணர்வின் வலி


உலக தரத்தில் வெளிவந்திருக்கும் முதல் படம் என்றே சொல்லலாம், இராவணன் வாழ்ந்தானா இல்லையா என்ற விவாதத்தில் நுழைவது தேவை இல்லாதசெயல், படத்தை ஒரு குறியீடாக அனுகவேண்டும் அனுகினேன்! இன்னும் அந்த மயக்கத்தில் இருந்து வெளிவரவில்லை. இராவணனாக நடிக்கும் புதுமுகம் விக்ரம் என்ற பையன் அருமையாக நடித்திருக்கிறான். இவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று நிச்சயமாக சொல்லலாம்.

மிகுந்த வன்மத்தோடும் சற்றே மிகையோடுமாய் பதிவு செய்திருக்கிறது இப்படம். வறுமையும் காமமும் தத்தமது கோரத் தாண்டவங்களை நிகழ்த்திக் காட்டும் பிரதான இடமாக இவர்களின் வாழ்விருக்கிறது. இவர்களின் வாழ்வை மொத்தமாய் உறிஞ்சிக் குடித்து வீங்கிப் பெருத்திருக்கும் பண முதலைகளையும், அதிகார வர்க்கத்தினரையும் இப்படம் கடுமையாய் சாடியிருக்கிறது. சீதையாக வரும் குறீயிடு படத்தில் சொன்ன செய்தியை விட சொல்லாத செய்தியும் அந்த காதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதமும் அருமை.


முழுக்க சிதறியிருக்கும் கதாபாத்திரங்களுக்கு விரிவாய் சொல்லப்படாது விட்ட அழுத்தமான பின்புலம் இருக்கிறது. அதை ஒரு காட்சியின் மூலமோ, சிறியதொரு உரையாடலின் மூலமோ மொத்தமாய் பார்வையாளனுக்கு கடத்தி விட முடிவது அதி நேர்த்தியான இயக்கமாகத்தான் இருக்க முடியும்.


பின்னூட்டம்
திரைப்படத்தை விமர்சனமாய் பதிவு செய்தலில் தேவையான நேர்த்தி மிகச் சிறப்பாய் இந்தப் பதிவில் பங்கு கொண்டிருக்கிறது.



மிகச் சிறப்பான அங்கீகாரம்.

என்னை அழ வைத்த திரைப்படம்.. ஒரு நாள் இரவு முழுவதும் தூக்கத்தை திருடி சென்றுவிட்டது.


****************


பதிவின் தலைப்பு: இராவணன்-350கோடி -எடுத்தவன் கேடி
இராவணன் பட்ஜெட் 120கோடியாம், விற்பனை ஆனது 350கோடியாம் எதிர்பார்க்கும் வசூல் 550கோடியாம், தெருகோடியில் இருக்கும் ஒருவனுக்கு இந்த கோடிக்கு எத்தனை சைபர் என்று கூட தெரியாது. ஆனால் சினிமா வியாபாரம் கோடிகளில் நடக்கிறது, இந்த படத்தை வாங்கியிருப்பது யார் என்று பார்த்தால் ரிலையன்ஸ், ரிலையன்ஸ் சுரண்டல் பற்றி நம் தோழர் ஏற்கனவே இங்கு எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

அம்பானி சகோதரர்களுக்குள் சண்டை என்றதும் பங்கு சந்தை சரிகிறது, மத்திய அரசு பேசுகிறது. அம்பானி சகோதர்களுக்குள் சண்டை என்றதும் நீதிமன்ற கதவுகள் இரவில் கூட திறந்திருந்து தீர்பு சொல்கிறது, தேங்கி கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை லட்சத்தி சொச்சம் ஆனால் அம்பானிக்கள் வழக்குகள் விரைவில் முடிக்கப்படுகின்றன. ஆற்றுபடுகை வாயுவை பங்கு பிரிப்பதில் தகறாராம் அதுக்கு உடனடி தீர்ப்பாம், இங்கே பின்பக்கம் வழியாக வாயு வரக்கூட தெம்பு இல்லாமல் கிடக்கிறான் பாமரன்.அவன்குடிக்க கஞ்சி இல்லாமல் கிடக்கும் பொழுது வாய் திறக்க மறுக்கிறது இந்த மத்திய மாநில அரசுகள், பண முதலைகளின் கறுப்பு பணங்கள்புழங்கும் இடத்தினை பற்றி அரசுகள் எதும் கண்டுக்காமல் இருப்பது பற்றி நம் தோழர்கள் விரைவில் போராட்டம் நடத்துவார்கள்.
பின்னூட்டம்:
அன்றும், இன்றும் வல்லான் வகுத்ததே வாய்க்கால் ..

இந்த கட்டுரைக்கான ஆதாரங்களும் மேற்கோள்களும் எங்கிருந்து பெறப்பட்டன என்று தெளிந்தால் நலம்.
******************


பதிவின் தலைப்பு: எழுதிமுடிக்கப்பட்ட சரித்திரம்



இராவணன் என்ற பெயரே எத்தனையோ செய்திகள் சொல்கின்றன, இராவணன், இரா-வணன் ,ணன், இரா என்றால் இராவில் உலா வருபவன்,வணன் என்றால் வணத்தில் இருப்பவன், வணத்தில் இரவில் உலாவருபவன் எப்படிபட்டவனாக இருப்பான் என்பதுக்கு கபிலர் ஒரு பாட்டில்சொல்கிறார்.



"கன்றும் உண்ணாது கலத்தினும் படாதுநல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாதுபசலை உணீஇயர் வேண்டும்திதலை அல்குல் என் மாமைக் கவினே "



தழுவிக்கொள்ள இனிமைதரும் தலைவியாம். காந்தள் கண்கள், பசுமை முதிர்ந்த முல்லையின் செவ்விப்பூக்கள், குவளைமலர்களுடன் இடையிடையே இணைத்துக்கட்டிய அழகிய மாலைபோல நறுமணம் உடையவளாம். ஹும்ம்ம். படத்தின் கதை பற்றி நாம் புதுசாக சொல்ல ஒன்றும் இல்லை ஆனால் மணி எப்படி புதிதாய் கதை சொல்வது என்று பார்க்கும் பொழுது பிரம்மிப்பே மிஞ்சுகிறது. ஒரு அரக்கனால் கடத்தப்பட பெண்ணின் மணதில் கணவனை பற்றிய எண்ணங்களும் காமமும் எப்படி பொங்கும் என்று சொல்லியிருப்பது அழகு.



இராவணன் தூக்கி சென்றதால் சீதை கற்பு போனதா என்ற சந்தேகத்தில் இராமன் சீதையை சீ (சி)தை ஏற்றினா ச்சீ ச்சீ தை (அ)தை என்னவென்று சொல்வது?,கற்பு என்ற உடன், அது பெண் சம்பந்தப்பட்டது மட்டுமே என்பதான கருத்தில் இருந்து வெளியே வர இன்னும் காத்திருக்கிறோம். அரை நூற்றாண்டாவது ஆகும் என்றும் தோன்றுகிறது.
நன்றி மரகதம் அம்மாள்! இப்படி ஒரு படத்தை எடுக்க குழந்தையை பெத்து தந்ததுக்கு.

பின்னூட்டம்
வழக் கலக்

தல டச்

வார்த்தை விளையாட்டு

இது உங்க ஏரியா அடிச்சுக்க ஆளே இல்லை!
*****************


படத்தின் தலைப்பு: இராவணன் காட்டின் நிழலும், நதியில் ஓடும் அழகியலும்!


கம்பரின் படைப்புலகம் பெரும்பாலும் அகவுணர்வுகளின் போராட்டம் சார்ந்து இயங்கக்கூடியது. இதை எழுத்தில் வாசகனிடம் கடத்திக் கொண்டு வருவதே சவாலானது எனும் போது பல விவரணைகளுடன் சாவகாசமாக உருவாக்கப்படும் இந்த எழுத்தைச் சிதைக்காமல் திரையில் கொண்டு வருவது இன்னுமொரு மகத்தான சவாலை எதிர்கொள்வதற்கு ஒப்பானது.


நான் கம்பரின் சில குறுங் கவிதைகளை மாத்திரம் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த நாவலை வாசித்ததில்லையென்பதால் திரைப்படத்தைப் பின்தொடர சிரமமாயிருந்தது. ஆனால் நாவல் திரைப்படமாகும் போது மூலப்படைப்பை படித்திருக்க வேண்டும் என்பது பொது விதியல்ல. அது அல்லாமலே திரைப்படமும் நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை சமயங்களில் கூடுதலாகவே ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு சத்யஜித்ரேவின் 'சாருலதா'வை ரசிக்க வேண்டுமெனில் தாகூரின் 'சிதைந்த கூடு' சிறுகதையை வாசித்திருக்க வேண்டுமென்பதில்லை என்பது என் தனிப்பட்ட அனுபவம்.


அதுபோல் லெமன் ட்ரீ என்ற ஒரு ஆங்கில படம் நான் பார்த்த பொழுது எலுமிச்சையின் அற்புத மணம் படம் முழுவதும் நான் உணர்ந்தேன் அதுமாதிரி இதில் இராவணன் சீதையை காட்டுக்குள் தூக்கி சென்றதும் நானும் காட்டுக்குள்ளேயே ஒரு மரம் போல் ஒரமாக நிற்பது போல் உணர்ந்தேன்.


பல வருடங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு சூழ்நிலை காரணமாக விலகுகிற இளைஞனின் மனக்கொந்தளிப்பும் சோகமும்தான் இத்திரைப்படம் முக்கிய புள்ளி. ஆனால் 'புகுந்த வீட்டிற்கு' செல்கிற பெண் சமூகமும் ஏறக்குறைய இதே வேதனையை இயல்பாக ஆண்டாண்டு காலமாக அனுபவிக்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.


பின்னூட்டம்:
எலுமிச்சையின் அற்புத மணம் / இதுல என்னய்யா அற்புதம் இருக்கு :) :)
உங்கள் பதிவு படித்துவிட்டு படம் பார்த்தது உபயோகமாய் இருந்தது.ஆனாலும், நீங்கள் உபயோகிக்கும் ஜெமோத்தனமான ‘முதிர்ச்சியடைந்த பார்வையாளன்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் லேசான எரிச்சலைத் தருகிறது :(


இந்த படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிடீர்கள்.Before sunrise and Before sunset படங்களை பார்த்திருகிறீர்களா ?


திரைப்பட விழாக்களில் இதை அச்சிட்டே தந்து விடுகிறார்கள். கதைச்சுருக்கத்தை அறிந்து கொண்டாலும் இதை இயக்குநர்கள் எவ்வாறு நுணுக்கமான காட்சிகளினாலும் உணர்வுகளினாலும் திரைப்படமாக்கியிருக்கிறார் என்பதையே ஒரு முதிர்ச்சியடைந்த பார்வையாளன் கவனிப்பான்
***************************


நேற்று ட்விட்டரில் நான் சொன்ன
"சுகுணா, அய்யனார்,வினவு, இவங்களிடம் இருந்து இராவணனை காப்பாற்ற வரம் கொடு சிவனே!!!" இதுவே இந்த போஸ்ட் எழுத வைத்தது!:))
அப்புறம் இன்னொரு மேட்டர் இங்கே ஒளிப்பரப்பாகும் ஒரு மலையாள ரேடியோ சேனலில் இராவணன் 350 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருப்பதுக்கு முக்கியமாக நால்வர் காரணம் என்றார்கள்.
1)மணி 2)அபிஷேக் 3) ARR 4)??????? இந்த பதிலை கேட்டு நெஞ்சு வலியே வந்துட்டு ரசூல் பூக்குட்டியாம், அடேய் பாவிங்களா ரசூல் பூக்குட்டியோட எடுபுடிதான் ARR என்றும் சொல்றீங்களா டா?
**************************************

48 comments:

  1. super பில்ட் அப்..... அசத்திட்டீங்க....!

    ReplyDelete
  2. செம சேட்டை.... ஹாஹஹா..

    ReplyDelete
  3. கலக்க்க்க்க்க்கல்ல்ல்ல்ல்ல்..

    ReplyDelete
  4. போச்சு..இராவணன் வந்த பின்னாடி வலையுலகம் என்ன பண்ணும்..எல்லாமே எழுதியாச்சே...

    ReplyDelete
  5. நாலாவது பதிவு யாரு தல, எனக்கு புரியலை.... :-)

    ReplyDelete
  6. என்னா குசும்பு...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்........

    ReplyDelete
  7. //முரளிகுமார் பத்மநாபன் said...

    நாலாவது பதிவு யாரு தல, எனக்கு புரியலை.... :-) //

    மாம்ஸ்!! இவர என்ன பண்ணலாம்...?

    ReplyDelete
  8. அன்பின் குசும்பரே,

    சில வார்த்தைகள் மாத்திரம் :(((

    விமர்சகர்களைப் பழிக்கிறீரா இல்லை விமர்சனத்தைப் பழிக்கிறீரா என்று தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

    வாழ்க நின் குசும்பு..

    ReplyDelete
  9. சூப்பரப்பு... கலக்கிபுட்டீங்க போங்க!

    ReplyDelete
  10. கேபிள், சுகுணா, அய்யனார், வினவு, நர்சிம், சுரேஷ் கண்ணன் என அனைவரையும் கலாய்த்திருக்கிறீர்கள். i enjoyed this post very much :)

    ReplyDelete
  11. பாஸ்!.....பின்றீங்க!.....சிரிச்சு மாளலை!..

    ReplyDelete
  12. வாங்கன்னே டீ குடிக்கலாம் ...

    //கேபிள், சுகுணா, அய்யனார், வினவு, நர்சிம், சுரேஷ் கண்ணன்//

    அப்படியே.. அசத்தல் ...

    ReplyDelete
  13. பாதிக்கு மேலே ப‌டிக்க‌ முடிய‌வில்லை,ஏனென்றால் ப‌டிப்ப‌தா,சிரிப்ப‌தா எதை முத‌லில் செய்வ‌து என்று குழ‌ப்ப‌ம்.
    செம‌ க‌ல‌க்க‌ல்‍ . டிவி பாதிப்பு அதிக‌மாக‌ இருப்ப‌து போல் தோன்றினாலும் வ‌லைப்ப‌திவு ம‌ற்றும் பின்னூட‌ங்க‌ளையும் விடாம‌ல் ப‌டிப்ப‌து போல் தெரிகிற‌து.

    ReplyDelete
  14. அடேயப்பா !
    உலக மகா நடிகர்தான் .
    SUPPER KALAKKAL

    ReplyDelete
  15. ஆரம்பத்துல சீரியஸா படிச்சி பல்பு வாங்கிட்டேன்!

    ReplyDelete
  16. உம்மைவிட....குசும்புக்கு உலகத்தில் உசந்தவர் யாருமில்ல!!! யாருமில்ல!!

    வாங்கிக்கிட கிடைச்சாங்க நம்ப பதிவர்கள்!...!

    கேபிள், நர்சிம், அய்யனார் விமர்சனம்தான் எழுதினதுதான் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருந்தது.

    ReplyDelete
  17. //ஆரம்பத்துல சீரியஸா படிச்சி பல்பு வாங்கிட்டேன்//

    same blood :(

    ReplyDelete
  18. //கேபிள், சுகுணா, அய்யனார், வினவு, நர்சிம், சுரேஷ் கண்ணன்//


    இவங்க பதிவெல்லாம் கொஞ்சம் டரியலகத்தான் இருக்கும் :)

    மொத்தமா படிக்கும் போது தலை சுத்துது :)

    ReplyDelete
  19. என்னா நக்கலு, நையாண்டி, எகதாசி.... பின்னுறீங்க குசுன்பன்.

    ReplyDelete
  20. ச்சே. நான் சீரியஸா படிச்சுட்டு வந்து வாலு மாதிரியே பல்பு :)))))))))))))

    ReplyDelete
  21. ஓகே..

    என்னைக் கும்மாம விட்டதுக்காக ஒரு நன்றி..!

    ReplyDelete
  22. ஒக்கால பிரிச்சு மேஞ்சிட்ட போ.....

    ReplyDelete
  23. ஆண்டவா
    என் வேண்டுகோளை ஏற்கவில்லையா

    http://twitter.com/spinesurgeon/status/14620422194

    ReplyDelete
  24. சிங்கத்துக்கும் போட்டுடுப்பா

    ReplyDelete
  25. ஹா ஹா ஹா மொத விமர்சனம் கலக்கல் :-)))

    ReplyDelete
  26. /என்னைக் கும்மாம விட்டதுக்காக ஒரு நன்றி..//

    உ.தாண்ணே. உங்களை கும்முறதுன்னா இன்னும் பதினைஞ்சு பக்கம் எழுதனுமில்லை..

    குசும்பா அட்டகாசம்..

    ReplyDelete
  27. எப்பூடி இப்பூடி!

    ReplyDelete
  28. சாமீய்ய்ய் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். (என்ன உண்மைன்னெல்லாம் கேட்க கூடாது)

    ReplyDelete
  29. கலக்கல் ஸ்பெஷல். பின்னூட்டங்களும் கூடுதல் சிறப்பு. பலருக்கும் கோஸ்ட்டாக எழுதப்போகலாம் நீங்கள்.!

    ReplyDelete
  30. ரொம்ப அருமையா உள்வாங்கி நக்கல் பண்ணி இருக்கீங்க ! கலக்கல். அதுவும் பின்னூட்டம் டாப்.

    ReplyDelete
  31. //எல்லாம் உங்களால் தான் இதோ 200000000000 லட்சம் ஹிட்ஸ் 23222 பாலோயர்ஸ் கொடுத்த உங்களுக்கு நன்றி//

    இதைப் பார்த்ததுமே புரிஞ்சிப் போச்சி வழக்கமான குசும்பனின் கலாய்த்தல்னு

    ReplyDelete
  32. ரசித்தேன்...

    ReplyDelete
  33. திரைப்பட விமர்சன பதிவுகளை விமர்சனமாய் பதிவு செய்தலில் தேவையான நேர்த்தி மிகச் சிறப்பாய் இந்தப் பதிவில் பங்கு கொண்டிருக்கிறது. இது உங்க ஏரியா அடிச்சுக்க ஆளே இல்லை!

    :-)))

    ReplyDelete
  34. நன்றி விதூஷ்

    நன்றி சித்ரா

    நன்றி பிரபு

    நன்றி நர்சிம்

    நன்றி அமுதா கிருஷ்ணா(இன்னும் 1000 வெரைட்டியா எழுதுவாங்க)
    மணிக்கு எப்படி படம் எடுக்கனும் என்று எல்லாம் சொல்லிக்கொடுப்பாங்க பாருங்க:)))

    நன்றி முரளிகுமார், உம்மை கொல்லனும்!

    நன்றி அகல்விளக்கு, சொல்லி திருத்துங்க முரளியை.

    நன்றி சென்ஷி, விமர்சனத்தை தான் நக்கல் அடிக்கிறேன்!
    வரவர என் பதிவையும் சீரியஸா படிக்கிறாய்ங்கப்பா!:(((

    நன்றி பிள்ளையாண்டான்

    நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

    நன்றி நேசன்

    நன்ற் செந்தில்

    நன்றி வடுவூர் குமார்

    நன்றி லேகா

    நன்றி பனித்துளி சங்கர்

    நன்றி வால் (நக்கல் தானே முதல் வரியிலேயே ஹிட்ஸ் பத்தி புரியாம
    இவரு சீரியஸா படிச்சாராமா..யார்கிட்ட கதை)

    நன்றி அசோக்

    நன்றி மின்னல், அப்ப எழுதியவனை கொஞ்சம் நினைச்சு பாருங்க:))

    நன்றி ஸ்ரீவி சிவா

    நன்றி பிளே கிங்

    நன்றி மயில் (நீங்களுமா?))

    நன்றி உ.த, அண்ணே நீங்க ஒன்னை இங்க கவனிக்கனும்
    இங்க நான் நக்கல் அடிச்சிருப்பது சினிமாவுக்கு விமர்சனம்
    எழுதுகிறவர்களை, திரைக்கதையை அப்படியே எழுதுபவர்களை அல்ல:)))

    நன்றி விக்னேஷ்வரி

    நன்றி VISA

    நன்றி டாக்டர் சார், உங்கள் வேண்டுகோளில் ஒரு மகான் பெயர் இருப்பதால்
    அவரை கும்முவது தவறு என்று விட்டுவிட்டேன், கு என்று ஆரம்பம் ஆகும் பெயர்:))

    ரவி அண்ணே சிங்கம் படத்துக்கா???அவ்வ்வ் படம் ஸ்டில்லை பார்த்தாலே வவுத்தை கலக்குது!

    நன்றி ராஜாராம்

    நன்றி கிரி

    நன்றி கேபிள், உ.தாவுக்கு சொன்ன பதில் சரிதானே?:)))

    நன்றி மஞ்சூரார்

    நன்றி இராமசாமி கண்ணன்

    நன்றி இளா (புரியல!)

    நன்றி கபீஷ்

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி ஆதி ஏன்யா இந்த கொலவெறி உமக்கு!

    நன்றி புலவன்

    நன்றி மணிகண்டன்

    நன்றி முகிலன்

    நன்றி அரைகிறுக்கன்

    நன்றி RR (அவ்வ்வ்வ் இங்கேயுமா?:)

    நன்றி கார்க்கி

    நன்றி முகிலன்

    ReplyDelete
  35. கலக்கிட்ட மாம்ஸ்
    இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்!!

    ReplyDelete
  36. ஹா, ஹா,ஹா! இன்னும் என் விமர்சனத்தை விரிவாக எழுதியிருக்கலாம்.((-. கடைசி விமர்சனம் பைத்தியக்காரனுடையது இல்லையா?

    ReplyDelete
  37. இதில் அண்ணன் உண்மைத் தமிழனைப் புறக்கனித்தற்காக கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  38. 50 நானா

    இருந்தும் மனம் சந்தோசமடையவில்லை.

    "அண்ணன் உத அவர்கள் எழுதியது போல் திரைக் கதை எழுதினால் கூகிள் காரன் 1000 திர்ஹாம் ஃபைன் கேட்டு கடிதம் அனுப்புகிறான்" அப்படின்னாவது எழுதிருக்கனும்
    அவரை உதாசீனப் படுத்தியது தப்பு

    ReplyDelete
  39. //நன்றி உ.த, அண்ணே நீங்க ஒன்னை இங்க கவனிக்கனும்
    இங்க நான் நக்கல் அடிச்சிருப்பது சினிமாவுக்கு விமர்சனம்
    எழுதுகிறவர்களை, திரைக்கதையை அப்படியே எழுதுபவர்களை அல்ல:)))//
    total family damage! உ.த. அண்ணன் தன் சொந்தசெலவில் சூனியம்!

    ReplyDelete