Sunday, January 3, 2010

சாணி அள்ள பிறந்தவன்--- புது பட கதை

ஹாலிவுட் பட DVDயை பார்த்து அதுல நம்ம ஊரு செண்டிமெண்டை சேர்த்து படம் எடுத்து ஹிட் ஆக்கும் பார்முலாவை பிடிச்சு இனி அடுத்த படத்தை அதே மாதிரி இயக்கி மக்களை பொலிபோட்டுவிடவேண்டியதுதான் என்று சபதம் செய்யும் போர்ரரசு, கதை சொல்ல ஓடுகிறார் தளபதி குஜயிடம்.

"போர்"ரரசு: பாஸ் இந்த முறை எல்லாமே வித்தியாசம், இந்த முறை ஊர் பேரில் படம் கிடையாது, படத்துக்கு பெயர் சாணி கேப்சன் அள்ளப்பிறந்தவன். டைட்டிலே அதிரடியா இதுவரை யாரும் செய்யாத மாதிரி ஒரு எறுமை மாடு பேக்கை குளோசப்பில் காட்டுறோம் சாணி போடும் பொழுது அது தரையில் விழாம எதிரே இருக்கும் சுவரில் துப்பாக்கி குண்டால் சுடுவது போல் தட தடன்னு 1000வாட்ஸ் சவுண்டில் போய் விழுது, போய் விழும் ஒவ்வொரு உருண்டையும் ஒரு ஒரு புள்ளியாக மாறி சாணின்னு பார்ம் ஆவுது. கீழே கேப்சன் அள்ளப்பிறந்தவன் என்று சுவரை பிளந்துக்கிட்டு வருது.

குஜய்: ஆஹா ஒருமுடிவோடதான் கிளம்பி வந்திருக்கார் போல...சரி கதை என்னா சொல்லுங்க.

போர்ரரசு: ஓப்பனிங் சீன் அமெரிக்காகாரன் உங்க போட்டோவை வெச்சுக்கிட்டு “ஐ நீட் ஹிம் இமிடியட்லி” என்று 500 டெசிபல் சவுண்டில் கத்துகிறான், கேமிராவைதடதடன்னு ஆட்டுறோம், அப்படியே அடுத்த சீன் ஜப்பான் காரன் ““ஐ நீட் ஹிம் இமிடியட்லி” 500 டெசிபல் சவுண்டில் கத்துகிறான், கேமிராவை தடதடன்னு ஆட்டுறோம்.இப்படியே பலநாட்டு ஆளுங்க உங்களை தேடுறாங்க.

குஜய்: ஏன்?

போர்ரரசு: அங்கதான் இருக்கு ட்விஸ்ட்! வெளிகிரகத்தில் இருந்து வந்த வினோத உருவம் கொண்ட பூச்சி மக்களை கடிச்சு கொல்லுகிறது, துப்பாக்கியால் சுட்டாலும் அது சாகமாட்டேங்குது, ராக்கெட் விட்டு அடிச்சாலும் அது சாகமாட்டேங்குது, உலகம் முழுவதும் அது தரைக்கு அடியில் பரவுது, அது எங்க எப்ப வரும் என்று சொல்லமுடியாது.ஆனா திடிர் என்று வந்து ஒரு ஊரையே காலி செஞ்சுடும். உங்களுக்கு ஒரு தங்கை, உங்க அப்பா அம்மா நீங்க சின்னவயசில் இருக்கும் பொழுதே செத்துபோய்ட்டாங்க, தங்கச்சின்னா உங்களுக்கு உசுரு.. உங்க ஊருக்கு பக்கத்து ஊரு வரைக்கும் அந்த பூச்சிகள் பரவிடுது.

நீங்க அன்னைக்கு வழக்கம் போல் காலையில் எழுந்து சுவரில் சாணி அடிச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க ஊருக்கும் அந்த பூச்சிங்க வந்துடுது, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி உங்க வீட்டுக்கு வருது வீட்டில் இருந்து தங்கச்சி வீல் என்று சத்தம் கேட்குது பதறி அடிச்சு கையில் ஒரு சாணி உருண்டையோட ஓடுறீங்க, அங்க அந்த பூச்சிங்க உங்க தங்கச்சியை கடிச்சிடுது.கையில் இருந்த சாணியை தூக்கி மலிங்கா த்ரோ அடிப்பது போல் அடிக்கிறீங்க, எல்லா பூச்சிம் செத்து விழுந்துடுது. இருந்தாலும் உங்க தங்கச்சியை காப்பாற்ற முடியல.தங்கச்சி சாகும் பொழுது அண்ணே என்னை கடிச்ச பூச்சை இந்த உலகத்தை விட்டு துரத்திடனும் ஊர் முழுக்க இதுபோல் எத்தனை தங்கச்சி இருக்காங்க என்று சொல்லி செத்துடுறாங்க.

தங்கச்சியை எரிச்சிட்டு திரும்ப வீட்டுக்கு வரும் பொழுதுதான் தெரியுது யாராலையும் கொல்லமுடியாத அந்த பூச்சிகளை நீங்க கொன்னது, மறுநாள் உலகின் அத்தனை பேப்பரிலும் உங்க போட்டோ வருது ஆள் ஆளுக்கு அவுங்க அவுங்க வீட்டுல இருந்து மாட்டு சாணியை எடுத்து அடிச்சு பார்க்கிறாங்க அந்த பூச்சிங்க சாக மாட்டேங்குது.

ஏதோ உங்க வீட்டு மாட்டு சாணியில் மட்டும் விசேசம் இருப்பது தெரிஞ்சு அந்த பார்முலாவை கண்டுபிடிக்க ஒரு சர்வதேச தீவிரவாத கும்பல் லோக்கல் ரவுடிங்க கூடசேர்ந்துக்கிட்டு பிரச்சினை செய்யுறாங்க, மறுபக்கம் இந்த உலகை அழிக்கும் பூச்சிங்க, கடைசியில் அனைவரையும் எப்படி ஜெயிக்கிறீங்க என்பதுதான் கதை.

குஜய்: ஏன் என்னிடம் இருக்கும் மாடு போடும் சாணியில் அப்படி என்ன விசேசம்?

போர்ரரசு: அங்கதான் இருக்கு நம்ம படத்தோட ட்விஸ்டே, மக்களுக்கு மெசேஜ் சொல்றோம் நீங்க மாடுங்களுக்கு போடுவது இயற்கை உரம் போட்டு வளந்த புல்லு வைக்கோலை, நீங்க உங்க மண்ணையும் பொண்ணு போல பார்த்துக்குறீங்க, அதோடு நீங்க மாட்டுக்கு புண்ணாக்கு போடும் பொழுது வெறும் புண்ணாக்கு மட்டும் போடுவது இல்லை அதோடு சேர்த்து உங்க அன்பையும் போடுறீங்க. அதான் மேட்டரே.

தீவிர வாதிங்க உங்க மாட்டு சாணியை பாக்கெட் போட்டு வித்தா கோடீஸ்வரர்களாயிடலாம் என்று பிளான் போட்டு உங்க மாட்டை எல்லாம் கடத்த வராங்க, பூச்சிங்க உங்களை தேடிக்கிட்டு வருது ஒரு பக்கம் பூச்சி, ஒரு பக்கம், எப்படி ஜெயிக்கிறீங்க என்று சாணி பறக்க சொல்றோம்..

தந்திரசேகர்: மகனே இது செம சான்ஸ்டா இதுல நடிச்ச அடுத்த முதல்வர் நீதான்...

குஜய்: தயாரிப்பாளர் யாரு போர்ரரசு?

போர்ரரசு: ஆவிஎம்

குஜய்: யார் வேண்டும் என்றாலும் தயாரிக்கட்டும் ஆனா படத்தை அவுங்களே தான் ரிலீஸ் செய்யனும், அவுங்க பன் பிக்சருக்கு வித்துட கூடாது?

தந்திரசேகர்: ஏன் மகனே?

குஜய்: யப்பா நீ வேற படம் முடிஞ்சி பேசாம இருக்கலாம் என்றால், காலையில் இருந்து நைட் வரை புரோகிராம் செட்டியூல் போட்டு ஊர் ஊரா தியேட்டர் தியேட்டரா என்னை அனுப்பி டான்ஸ் ஆட உடுறாங்கப்பா, காதலில் கவுந்தேன் கோகுலை விட என்னை கேவலமா ஊர் ஊரா அனுப்பி ஆடவுடுறாங்கப்பா..வலிக்குதுப்பா வேண்டாம் அழுதுடுவேன்...

52 comments:

  1. வயிறு வலிக்கிது...
    சிரிச்சு சிரிச்சு...
    :))

    ReplyDelete
  2. //இதுவரை யாரும் செய்யாத மாதிரி ஒரு எறுமை மாடு பேக்கை குளோசப்பில் காட்டுறோம் சாணி போடும் பொழுது அது தரையில் விழாம எதிரே இருக்கும் சுவரில் துப்பாக்கி குண்டால் சுடுவது போல் தட தடன்னு 1000வாட்ஸ் சவுண்டில் போய் விழுது,//

    இது ஏற்கனவே வடிவேலு எமனாக நடிக்கும் படத்துல காட்டிவிட்டங்கைய்யா !

    ReplyDelete
  3. நன்றி ஜெகதீசா நல்லா இருப்பா! போய் நிம்மதியா தூங்குங்க:)

    நன்றி ஊர் சுற்றி

    நன்றி கோவி, என்னது இந்த சீன் ஏற்கனவே படத்தில் வந்துட்டா? அவ்வ்வ் அப்ப கோர்ட்டில் கேஸ் போட்டுவிடுவோமா?

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா

    ஏன் பீதியை கிளப்புறீக ...

    ReplyDelete
  5. //இயற்கை உரம் போட்டு வளந்த புல்லு வைக்கோலை, மண்ணையும் பொண்ணு போல பார்த்துக்குறீங்க, மாட்டுக்கு புண்ணாக்கு போடும் பொழுது அன்பையும் போடுறீங்க//
    நல்ல மெசேஜ்தான்

    ReplyDelete
  6. சொல்ல முடியாது.. இந்த கதை நாளைக்கே படமாவும் வரலாம்!

    தலைவர் டி ராஜெந்தர் "விஜய" டி ராஜெந்தர்ன்னு பேர மாத்தினதுல இருந்து அவருக்கு அடுத்து விஜய டார்கெட்டாகிட்டாங்கப்பா!

    ReplyDelete
  7. படத்தோட கதை ரகளையா இருக்கு, கண்டிப்பா சூப்பர் டூப்பர் ஹிட்.

    குஜய் நடிச்ச “எறா” படத்தையும் பன் பிக்ஸர்ஸ் வாங்கிடுச்சே, அதுக்கும் ஊர் ஊரா போய் ஆடணுமே!!! வாழ்க குஜய், வளர்க அவரது புகள்

    ReplyDelete
  8. வழக்கம் போல நல்ல கற்பனை. யாராவது காப்பி அடிச்சு படம் எடுக்க போறாங்க.

    ReplyDelete
  9. //குசும்பன் said...

    நன்றி ஜெகதீசா நல்லா இருப்பா! போய் நிம்மதியா தூங்குங்க:)

    நன்றி ஊர் சுற்றி

    நன்றி கோவி, என்னது இந்த சீன் ஏற்கனவே படத்தில் வந்துட்டா? அவ்வ்வ் அப்ப கோர்ட்டில் கேஸ் போட்டுவிடுவோமா?
    //

    என்ன கேஸ் ? டியர் கேஸா ? நோஸ் கேஸா ? எதுவாக இருந்தாலும் பார்த்துப் போடுங்கப்பா

    ReplyDelete
  10. ஹா ஹா வழக்கம் போல குசும்பன் காமெடி. நல்லா இருக்கு. ஜெகு அண்ணன் சொன்ன மாதிரி வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி.

    ReplyDelete
  11. //
    ஹா ஹா வழக்கம் போல குசும்பன் காமெடி. நல்லா இருக்கு. ஜெகு அண்ணன் சொன்ன மாதிரி வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி.
    //
    நான் பதிவைப் படிக்காததால சிரிச்சேன்...
    அப்ப பித்தன் வாக்கு "தம்பி" யும் பதிவைப் படிக்கலையோ....

    ReplyDelete
  12. // பித்தனின் வாக்கு said...

    ஹா ஹா வழக்கம் போல குசும்பன் காமெடி. நல்லா இருக்கு. ஜெகு அண்ணன் சொன்ன மாதிரி வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி.//

    ஜெகு தம்பி வயிறு குலுங்க சிரிக்க மாட்டார் அவரு டயட்டுல இருந்து வயிறைக் குறைச்சிக்கிட்டார்.
    :)

    ReplyDelete
  13. //Blogger ஜெகதீசன் said...

    //
    ஹா ஹா வழக்கம் போல குசும்பன் காமெடி. நல்லா இருக்கு. ஜெகு அண்ணன் சொன்ன மாதிரி வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி.
    //
    நான் பதிவைப் படிக்காததால சிரிச்சேன்...
    அப்ப பித்தன் வாக்கு "தம்பி" யும் பதிவைப் படிக்கலையோ....//

    அப்துல்லாவை பின்பற்றி அனைவருக்கும் அண்ணன் ஆகிட்டாரு போல பித்தனின் வாக்கு தம்பி !

    ReplyDelete
  14. விஜய படத்தைபத்தி நம்ம வலையுலகில் பிரித்து மேய்வதைப்பத்தி சமீபத்தில் நாளிதழில் ஒன்றில் குறிப்பிட்டிருந்தாங்க. இனி விஜய் தவிர மற்ற ஹீரோக்கள் படம் ரிலீசான கையோட நெட்டுலதான் உட்காருவாங்கன்னு நினைக்கறேன்.

    ReplyDelete
  15. நீங்க சொன்னது மாதிரி இந்த படம் எந்த மாற்றமும் இல்லாம வரக்கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை. சாணி தமிழ் பெயர் தானே இல்லை சாணம்னு வெச்சுக்கலாமா ? வரி விலக்கு மிஸ் ஆகிடப்போகுது.

    ReplyDelete
  16. :)))

    இந்தப்படத்துல பன்ச் டயலாக்கே இல்லியா,

    படத்தின் தலைப்புக்கு ஏற்றமாதிரி ஒரே ஒரு பன்ச் டயலாக்காவது சொல்லுங்களேன் ப்ளீஸ்.

    இன்னும் சிரிக்கனும் போல இருக்கு :)))))))

    ReplyDelete
  17. குஜய் படத்துல குஜிலிங்க நல்லா இருக்குமே... இந்த படத்துல குஜிலி அந்த மாடா??

    ReplyDelete
  18. hahahaha.. super..

    குஜய் ரசிகரை பின்னூட்டத்தில் தேடினேன். காணவில்லை.

    ReplyDelete
  19. ஒனக்காக சிரிக்கிறேன் :)))

    ReplyDelete
  20. போஸ்டரில் சாணி அடிச்சி பார்த்து இருக்கேன் இப்படி போஸ்டரே சாணி’யா பார்த்ததில்லை :)

    ReplyDelete
  21. ஏன் இந்த கொலவெறி?

    ReplyDelete
  22. ஏன் இந்த கொலவெறி?

    கலக்கல்.. :)

    வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி!

    இப்படிக்கு,
    வேட்டைக்காரன் படத்துக்கு
    டிக்கெட் கிடைக்காமல் திரும்பியோர் சங்கம்!!

    ReplyDelete
  23. இந்தப் படத்து போஸ்டர்லயோ அல்லது கட் அவுட்லயோ யாராச்சும் சாணியடிச்சா கூட சமாளிச்சுக்கலாம். நல்ல கதை மச்சி. உனக்கு கோடம்பாக்கத்துல நல்ல எதிர்காலம் இருக்குடே.

    ReplyDelete
  24. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..

    ReplyDelete
  25. குசும்பா, நீங்க பண்ற குசும்பை விட கலையரசன் குசும்பு பெருங்குசும்பா இருக்கேப்பா. வேட்டைக்காரன் படத்துக்கு டிக்கட் கிடைக்கலையாம்!! தியேட்டர்ல ஆப்பரேட்டர் ஈ ஓட்டலாம்ன்னு பார்த்தா ஈ கூட நான் இந்தப் படத்தைப் பார்க்க மாட்டேன்னு சொல்லிப் பறந்தோடுதுன்னு ஃபீல் பண்றாரு.

    ReplyDelete
  26. படத்துல சில முக்கியமான பஞ்ச் டயலாக் வேணுமே, என்னுடைய சில யோசனைகள்:

    "மாடு போட்டா அது சாணி, அத்தால அடிக்கிறது என் பாணி"
    "நான் பயப்படறது பூச்சி, பூச்சிக்கு இல்லடா......தலயோட ஆச்சி(ஆட்சி)க்கு"

    ReplyDelete
  27. //KVR said...
    குசும்பா, நீங்க பண்ற குசும்பை விட கலையரசன் குசும்பு பெருங்குசும்பா இருக்கேப்பா. வேட்டைக்காரன் படத்துக்கு டிக்கட் கிடைக்கலையாம்!! //

    கேவியார் மாமா... டிக்கெட் கிடைக்காம வந்த சங்கத்துல குசும்பனாரும் இருக்காருங்கோவ்!!

    ReplyDelete
  28. நல்லா இருக்கு காமெடி.இதன் ஷூ(shitingkai)ட்டிங்கை மாட்டு தாவணியில் வைத்து விடுலாமா முசும்பன்.

    ReplyDelete
  29. குசும்பு ஓ.கே.
    குசும்பன் மிஸ்ஸிங்.

    ReplyDelete
  30. முடியலீங்க... :)) வகுறு வலிக்கி..

    ReplyDelete
  31. இந்தக் கதைக்கு குஜய் மட்டுமல்ல, குஜித், குனுஷ்,கும்பு,குஜயகாந்த்.குஜினிகாந்த்,கொஞ்சம் விட்டா குமல்,குரத் இப்படி எல்லாரும்,, ஏன் விட்டா எல்லாத் தமிழக ஹீரோக்களும் நடிக்கலாம்...
    நல்ல நக்கல் :-)

    ReplyDelete
  32. :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  33. குசும்புணா இதன் குசும்பு

    ReplyDelete
  34. //புண்ணாக்கு மட்டும் போடுவது இல்லை அதோடு சேர்த்து உங்க அன்பையும் போடுறீங்க. அதான் மேட்டரே.//

    தாங்க முடியலை :)

    ReplyDelete
  35. ஏம்ப்பு...நல்லக் கத எழுதுறியே. அடுத்தப் படத்துக்கு எப்ப பூஜை போடுவோம். அட்வான்ஸ் எவ்ளோ?

    ReplyDelete
  36. தல எதுக்கு விஜயை குஜய்ன்னு போட்டீங்க...அவர பாத்தா பயம்ம்மாஆ இருக்கா..................

    ReplyDelete
  37. அமர்க்களம்.
    அடுத்தது குஜீத் தை வைத்து குசும்பு பண்ணவும். வாசகர் விருப்பம்.

    ReplyDelete
  38. உங்களுக்கு கற்பனை அதிகம் , ரொம்ப காமெடியா இருக்கு

    ReplyDelete
  39. last para பட்டை !!
    ;)

    ReplyDelete
  40. மாப்பி,
    நீ பாட்டுக்கு இது மாதிரி எதாவது எழுதி எதுவும் கிடைக்காம இதை படமா எடுத்தாலும் எடுப்பானுங்கடா..

    ReplyDelete
  41. that is soooo lovely :) just beautiful :)

    ReplyDelete
  42. D.R.Ashok said...
    //இயற்கை உரம் போட்டு வளந்த புல்லு வைக்கோலை, மண்ணையும் பொண்ணு போல பார்த்துக்குறீங்க, மாட்டுக்கு புண்ணாக்கு போடும் பொழுது அன்பையும் போடுறீங்க//
    நல்ல மெசேஜ்தான்

    ///

    ஆமா .. இந்த மெஸேஜ்க்காக இதுக்கு மாநில அரசு விருது கிடைக்குமில்ல..

    ReplyDelete
  43. ஹலோ குசும்பன்!
    படக்கதை நல்ல இருக்கு. ஆனா த்ரிஷா வோட Love, Opening Song மிஸ் ஆயிடுச்சு. Update பண்ணி second version release பண்ணுங்க. இல்லாட்டி நம்ம தமிழ் பட கலாச்சார சீரழிவுக்கு நீங்க காரணம் அப்டின்னு நாளைக்கு சரித்திரம் நல்லமல தப்பா பேசிட போகுது.

    ReplyDelete
  44. வாய்ப்பே இல்லனா :) இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்!

    ReplyDelete