Sunday, November 22, 2009

ப்ளைட் வாங்க போனேன்! படங்களுடன்(அபாயகுறி)

கடந்த வாரம் துபாயில் ஏர்போர்ட் எக்ஸ்போ2009 வெகு விமர்சையாக நடந்தது, சென்னையில் இருந்து இதில் பங்கெடுக்க வந்த SHATS என்ற நிறுவனத்தினால் எனக்கு எக்ஸ்போவுக்கு செல்ல 100$ மதிப்புடைய பாஸ் கிடைத்தது. நண்பகளிடம் போன் செய்து கேட்டால் வரமுடியாது வேலை இருக்கு என்று சொல்லிவிட்டார்கள், சரி நாம மட்டுமாவது போய் ஒரு ப்ளைட்டை பேசி விலைக்கு வாங்கி வந்துடலாம் என்று போனேன்.

ஏகப்பட்ட கெடுபிடி ஜட்டியோடு நிக்க விடாத குறையாக செக் செய்தார்கள். ச்சே என்னடா இதுன்னு நொந்துக்கொண்டே போனேன். பிறகுதான் தெரிந்தது ஏன் அப்படி கெடுபிடி என்று. உலகில் இருக்கும் பல நாடுகளின் விமானங்கள், போர் விமானங்கள் என்று அனைத்திலும் நாம் ஏறி பார்க்கலாம் என்பதால் தான் அப்படி கெடுபிடி. பல அரபிகள் பிடிச்ச பிளைட்டை பேசி விலைக்கு வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.

மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்த ஏர் ஷோ 5 மணி வரை நடந்தது, நின்ன இடத்தில் இருந்து சுற்றுவட்டாராம் அதிர கிளம்பும் அமெரிக்க போர் விமானம், அவனோட கண்போலவே இனிக்கியோண்டு சைனா ப்ளைட் இவர்கள் வானில் போட்ட ஆட்டம் பார்க்க அதிரடியாக இருந்தது.

12 பேர் வரை பயணம் செய்யக்கூடிய ஹெலிகாப்டர், உள்ளே இருக்கும் பெண்ணையும் சேர்த்து கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டானுங்க அதனால் இதை வாங்கவில்லை.


நான்கு பேர் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய ராயல் எக்ஸிகூட்டிவ் பிளைட்! இறங்கி வரும் அரபி துண்டு போட்டு பேசி முடிச்சுட்டார். ஸ்டோர்ரூமில் இந்த மாடல் பிளைட் ஸ்டாக் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

எங்க ஆரம்பிச்சு எங்க துடைச்சு முடிப்பதுன்னு தெரியலையே, ஒட்டகத்துக்கு பதிலா திடிர் என்று ப்ளைட்டை கொடுத்தா என்ன செய்வேன் அவ்வ்வ்வ்வ்


யூஏஇ போர் விமானம், அண்ணன் சண்டைக்கு போகும் பொழுது கெத்தா போய் இறங்கலாம் என்று கேட்டால் அருவா, கத்தி எல்லாம் வைக்க ஸ்டாண்ட் இல்லன்னு சொல்லிட்டாங்க.ஆகையால் இதையும் வாங்க முடியவில்லை.


வெளியில் அம்புட்டு காத்தாடி வெச்சு இருக்கானுவோ, உள்ளார ஒன்னு கூட இல்ல அதான் இதையும் வாங்கவில்லை, அமெரிக்க போர் விமானம்.


அழகிய லைலா டன் டன் டன் மன்மத புயலா டன் டன் டன்(இப்படிதானே ரம்பா அம்மாம் பெரிய காத்தாடிக்கு முன்னாடி நின்னு ஆடும்) அதான் நானும் அப்படி நின்னு பார்த்தேன்!


இந்த புள்ள ஒரே அடம் நீங்க வாங்கும் பிளைட்டில் அப்படியே என்னை வீட்டில் ட்ராப் செஞ்சுவிட்டுவிடுங்கன்னு...தப்பி வருவதுக்குள் பெரும்பாடா போச்சு...

ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம் எல்லாம் கிடையாதுன்னு சொல்லிட்டானுங்க


நெக்ஸ்ட் தீபாவளி வரைக்கும் நமத்து போகாம இருக்க கியாரண்டி தர மாட்டேன் என்று சொல்லிட்டார்கள், இந்த ராக்கெட்டுங்களுக்கு.


ஒரே ஒரு ஆளைதான் கூட்டிக்கிட்டு போகலாமாம் அதுவும் பின்னாடி உட்காரவெச்சு, நடுவுல ஒரு தடுப்பு வேற, வேலைக்கே ஆவாத ப்ளைட், இதை வாங்க நான் என்ன மடையனா?

ஆள் இல்லாத உளவு விமானம், படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போறவங்க மேட்டரை எல்லாம் அவுங்க வூட்டு அம்மணிங்க கிட்ட போட்டு கொடுப்பது போல் செட்டிங் செய்ய சொல்லி இருக்கேன்.
***********
ஒரே ஒரு ப்ளைட் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு, சரி வாங்கலாம் என்று பேசி விலை எல்லாம் பேசி முடிச்சுட்டு, ஏர்ஹோஸ்டஸ் பத்து பேரு வேண்டும் என்றேன் அதுக்கு என்ன பதினைந்தா கொடுத்துடுறோம் என்றார்கள், சரி எந்த ஊரு ஏர்ஹோஸ்டஸ் என்றேன் ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ் என்றார்கள்... அங்க பிடிச்ச ஓட்டம் வீட்டில்தான் வந்து நின்றேன். ரிட்டையர்ட் ஆகவேண்டிய பாட்டியை (உன்னை போல் ஒருவன் லெட்சுமி மாதிரி) எல்லாம் ஏர் ஹோஸ்டஸா போட்டா ஏர் இந்தியா நஷ்டத்தில் ஓடாம லாபத்திலா ஓடும். யாராவது சொல்லி புரியவையுங்கப்பா!

75 comments:

  1. கலக்கல் பதிவு அண்ணே....

    ReplyDelete
  2. ஆஹா.....! பதிவுலக வரலாற்றில் மீ தி பஸ்டே....................ய்!

    ReplyDelete
  3. குசும்புத்தனத்தின் அளவுக்கு எல்லையே இல்லாமல் பதிவு முழுக்க இருக்கும் ஊசி குத்தல்களை வெகுவாக ரசித்தேன்..!

    அப்பனே குசும்பா நீடுழி வாழ்க..!

    ReplyDelete
  4. கோட் சூட்டெல்லாம் போட்டு வெள்ளைக்கார தொற மாதிரியே இருக்கேடா தம்பி, ப்ளாஸ் வச்ச கேமரா கொண்டு போகலையா ?
    :)

    ம்ஹூம் ம்ஹூம் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

    ReplyDelete
  5. /*கோட் சூட்டெல்லாம் போட்டு வெள்ளைக்கார தொற மாதிரியே இருக்கேடா தம்பி, ப்ளாஸ் வச்ச கேமரா கொண்டு போகலையா ?
    :)

    ம்ஹூம் ம்ஹூம் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு*/

    அந்த ஐடியா கொடுத்த சிகாமணி நீங்க தானா...
    நீங்க "ப்ளாஸ்"சுன்னு சொன்னது அவரு காதுலே பிளாஸ்க்குனு விழுந்துருச்சு போலே....

    அதான் அன்னிக்கு அவரு வீட்லே போய் அவரை பார்க்க போன அன்னிக்கு, ஒரு கேமரா கூட ஒரு தெர்மாஸ் பிளாஸ்க்கை கட்டி கிட்டு இருந்தாரா... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    அது கூட பரவா இல்லே... சூடா படம் பிடிச்சிட்டு வருறதுக்கு அண்ணன் கோவி கொடுத்த ஐடியாவை செயல் படுத்திகிட்டு இருக்கேன்னு சொல்லி ஒரு வெற்றி சிரிப்பு வேற சிரிச்சாரு பாருங்க.... அன்னிக்கு என் பாஸ்போர்டை கிளிச்சி போட்டவன்தான் நானு.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. நன்றி பெ.சொ.வி

    நன்றி உண்மை தமிழன் அண்ணாச்சி

    நன்றி அது என்னா வெள்ளைகார தொரை மாதிரின்னு சொல்லிட்டு ப்ளாஸ் வெச்ச கேமிரா இல்லையான்னு கேட்டுக்கிட்டு, கொழுப்பு தானே!!! அண்ணே நாம எல்லாம் 5000வாட்ஸ் போக்கஸ் லைட்டுக்கு முன்னாடி நின்னாலும் சேம் கலரில் தான் இருப்போம்!:)

    ReplyDelete
  7. சலிப்பு தட்டாமல் சிரிப்பை வரவழைத்தது..ஆமா அப்படியே சொந்தமா ப்ளைட் வாங்கிட்டாலும் ஆள் வைச்சு ஓட்டுவீங்களா இல்ல நீங்களே ஓட்டுவீங்களாபாஸ்?

    ReplyDelete
  8. நல்லா இரு... அன்னைக்குன்னு ஆணி அதிகமா போச்சு மச்சி...!

    ReplyDelete
  9. ஏண்ணே சில போட்டோல கோட்டு சூட்டை எல்லாம் ப்ளைட்டு மேல காய போட்டிருக்காங்க? ஓரமா கொடியில காய போட வேண்டியது தானே?

    ReplyDelete
  10. அப்ப எதுவுமே வாங்கலையா? அவ்வ்வ்வ்

    சீக்கிரம் ஏதாவது ஒன்னு வாங்கி விளையாட பையனுக்கு கொடுங்கண்ணே.

    போட்டோஸ் எல்லாம் கலக்கல். நான் எங்க வூட்டு மொட்டை மாடியில இருந்து கொஞ்ச நேரம் பார்த்தேன்.

    ReplyDelete
  11. சூப்பரப்பு...

    ப்ளைட் வாங்கிடுவீங்க அப்படின்னு நினைச்சேன், கடைசில இப்படி ஏமாத்திட்டீங்களே... அவ்.....அவ்....

    ReplyDelete
  12. படங்கள் எல்லாம் அருமை , போன வருஷம் போய்ருந்தேன் ...இந்த தடவை பாஸ் கிடைக்கலே .

    ReplyDelete
  13. வட போச்சா, ஆணிப்புடுங்குற நேரத்துலே இந்த ஈவன்ட் வெச்சு போகமுடியாமல் செய்துட்டாங்கப்பா

    சரி இந்த பதிவை பார்த்து அங்கெ போன திருப்தி எனக்கு,

    கமெண்ட்ஸ் சூப்பர்

    ReplyDelete
  14. அண்ணே, தலைப்பைப் பாத்துட்டு ஓசில ஒரு ரவுண்டு கேக்கலாம்னு வந்தா ஒண்ணுகூட வாங்கலியா? அவ்வ்வ். பிளைட் ஓட்ட லைசன்ஸ் எல்லாம் வச்சிருக்கீங்களா? ட்ராபிக் போலீஸ் பிடிச்சுடப்போறாங்க.

    ReplyDelete
  15. VIP PASUKKU OSIYIL BUFFET KODUTHTHAARKALE ATHAIPPATRI ETHUVUM EZUTHAVILLAI EN KIDAIKKALAYA?

    ReplyDelete
  16. \\உன்னை போல் ஒருவன் லெட்சுமி மாதிரி)\\

    அல்டிமேட் நக்கல்

    ReplyDelete
  17. மேல் படத்துல ஷேக்கு.
    கீழ் படத்துல பேக்கு.

    ReplyDelete
  18. //உள்ளே இருக்கும் பெண்ணையும் சேர்த்து கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டானுங்க அதனால் இதை வாங்கவில்லை.// வீட்டுக்கார அம்மாவுக்குத் தெரியுமா??

    ReplyDelete
  19. கால் தரையில ஊனாம ஓட்டனுமாமில்ல பிளைட்டை..சுசூப்பர்

    ReplyDelete
  20. " ஆள் இல்லாத உளவு விமானம், படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போறவங்க மேட்டரை எல்லாம் அவுங்க வூட்டு அம்மணிங்க கிட்ட போட்டு கொடுப்பது போல் செட்டிங் செய்ய சொல்லி இருக்கேன்."

    இதில் ஏதோ ஆயல் நாட்டு சரக்கின் சதி இருப்பதாக தெரிகிறது........ அண்ணா இந்த ப்ராஜெக்ட்யை ஒரு இரண்டு வருஷம் தள்ளி வைங்க .....

    ReplyDelete
  21. //அழகிய லைலா டன் டன் டன் மன்மத புயலா டன் டன் டன்(இப்படிதானே ரம்பா அம்மாம் பெரிய காத்தாடிக்கு முன்னாடி நின்னு ஆடும்) அதான் நானும் அப்படி நின்னு பார்த்தேன்!//

    நல்லவேளை.. வழக்கம் போல லுங்கியோட போகலை. :))

    ReplyDelete
  22. நல்லவேளை.. வழக்கம் போல லுங்கியோட போகலை. :))


    இஹ்ஹ்ஹிஹிஹ்ஹிஹிஹி

    ReplyDelete
  23. நைனா நல்ல வேளை கோட் வாடகைக்கு
    கொடுத்தவன் வந்து அடிச்சு வாங்கிட்டு போகும்
    பொழுது நீங்க வரவில்லை:)

    நன்றி பூங்குன்றன்.வே

    நன்றி சுபைர் கூப்பிட்டா வரனும், வேலை என்னைக்கு
    வேண்டும் என்றாலும் பார்த்துக்கலாம், இதை இனி பார்க்க
    முடியுமா?:))


    ஆதவா சிலருக்கு லைட் கலர்தான் கண்ணுக்கு தெரியாது,
    டார்க் கலருமா உனக்கு கண்ணுக்கு தெரியல! இனி உனக்கு
    கல்யாணம் ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    நன்றி இராகவன் அண்ணா

    நன்றி சுந்தர்

    நன்றி அபுஅஃப்ஸர், ரொம்ப டிப்பரண்டா இருந்துச்சு!

    நன்றி Subankan, ப்ளைட் ஓட்ட எல்லாம் லைசன்ஸ் எல்லாம்
    வேண்டாம், சைக்கிள் ஓட்டுவதை விட ஈசி! ஒரு உந்து உந்தினா பிளைட்
    மேல பறக்கும், ஒரு ப்ரேக் போட்டா கீழே இறங்கிடும். ரொம்ப சுலபம்.


    Barari அய்யய்யோ என்னங்க சொல்றீங்க பாஸ் வெச்சு இருந்தவங்களுக்கு
    சாப்பாடு போட்டாங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போச்சே போச்சே!:(

    நன்றி முரளிகண்ணன்

    நன்றி செந்தழல் ரவி அண்ணாச்சி, உங்களுக்கு அழகில் நான் போட்டியா
    வந்துடுவேன் என்று பயம் உங்களுக்கு:)

    சுப.தமிழினியன், நெருப்புன்னு சொன்னா வாய் சுட்டுவிடவா போவுது,
    சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா,குடும்பத்தில் குண்டு வைக்க இவ்வளோ
    ஆசையா உங்களுக்கு?:)

    நன்றி தண்டோரா அண்ணாச்சி, ஒரு சுவிட் போட்டா ஜொய்ய்ய்ங்ங்ன்னு பறக்கபோவுது


    நன்றி கலகலப்பிரியா

    நன்றி டம்பி மேவீ கொஞ்சம் செலவு ஆகும் பரவாயில்லையா?


    சஞ்சய் மாமோய் ச்சீ பேட் பாய்:)

    ReplyDelete
  24. படங்களுடன் கமென்ட் அசத்தல்.

    ReplyDelete
  25. //எக்ஸ்போவுக்கு செல்ல 100$ மதிப்புடைய பாஸ் கிடைத்தது.//

    பாஸுக்கு 100 டாலரா என்ன பாஸ் சொல்றீங்க????????

    :)

    ReplyDelete
  26. படங்கள் அழகு!

    கோட்டு சூட்டு போடுறா ராசா கணக்கா நிக்கிறீயளே !

    மிளகாய் திருஷ்டி சுத்தி கேஸ் அடுப்புல போடுங்க வெடிக்கும் நல்லாவே!

    ReplyDelete
  27. "ப்ளைட் வாங்க போனா.. ப்ளைட் வச்சியிருக்கறவங்களை கூப்பிட்டு போகனும்!!(கொலைவெறி)"

    ReplyDelete
  28. //"ப்ளைட் வாங்க போனா.. ப்ளைட் வச்சியிருக்கறவங்களை கூப்பிட்டு போகனும்!!//

    குசும்பனுக்குத் தெரிஞ்ச சொப்பனசுந்தரி கார் தான் வச்சிருந்தாங்க.. ப்ளைட் இல்ல..

    ReplyDelete
  29. //ஆள் இல்லாத உளவு விமானம், படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போறவங்க மேட்டரை எல்லாம் அவுங்க வூட்டு அம்மணிங்க கிட்ட போட்டு கொடுப்பது போல் செட்டிங் செய்ய சொல்லி இருக்கேன்.
    //

    உள்ளேன் ஐயா.

    btw, நாளைக்கு நீங்க சரவணபவன்ல டயட் சாப்பாடு சாப்பிட்ட போட்டோவெல்லாம் வெளியுலகுக்கு வரப் போகுது, சாக்கிரதை.

    ReplyDelete
  30. குசும்பன் எதிர் பார்த்ததை விட போட்டோவில் ரொம்ப அழகா இருக்கீங்க...:-))
    ப்ளைட் பக்கத்திலே நீங்க நிற்கும் போது எது ப்ளைட் எது நீங்கன்னு தெரியாத அளவிற்கு கம்பீரமா இருக்கீங்க....:-))
    உங்க லுக் எக்ஸிகூட்டிவ் லுக்கா இருக்கு...:-))

    ReplyDelete
  31. அட! துபாயிலகூட கோட்டெல்லாம் வாடகைக்கு விடுறாங்களே!!!

    :)

    ReplyDelete
  32. குசும்பு உச்சம்.... :))))))))

    அப்துல்லா கமெண்ட் சூப்பர் !!!

    ReplyDelete
  33. சிரிச்சி முடியல தலைவரே, கலக்கலான பதிவு.

    ReplyDelete
  34. குசும்பன் கார்டூன்ஸ்ன்னு தலைப்ப குடுத்திருக்கலாம்.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  35. படத்துக்கான கமெண்ட் எல்லாமே சிரிப்பையே வரவழைத்தது;))

    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  36. முதல் படத்தில் கோட்டுக்கு மேட்சா விமானம் செலக்ட் செஞ்சுருக்கீங்க.

    மூன்றாவது படத்தில் உங்களுக்கு கான்ராவா விமானம் செலக்ட் செஞ்சுருக்கீங்க.

    உங்க விஷுவல் டேஸ்ட் என்னை வியக்க வைக்குது :)

    ReplyDelete
  37. தல அன்னிக்கு பேசுறப்பவே வாயுல இருந்து "Waterfalls" ஊத்துற சத்தம் கேட்டுச்சு அதுக்கு அந்த அம்மணி தான் காரனமோ..:)

    ReplyDelete
  38. அடுத்த முறை வரும் போது ரெண்டு வாங்கிட்டு வாங்க!

    ReplyDelete
  39. போஸ்ட் கமெண்ட் சூப்பர்..அதைவிட/கீழை ராஸா said...

    குசும்பன் எதிர் பார்த்ததை விட போட்டோவில் ரொம்ப அழகா இருக்கீங்க...:-))
    ப்ளைட் பக்கத்திலே நீங்க நிற்கும் போது எது ப்ளைட் எது நீங்கன்னு தெரியாத அளவிற்கு கம்பீரமா இருக்கீங்க....:-))
    உங்க லுக் எக்ஸிகூட்டிவ் லுக்கா இருக்கு...:-))
    / இந்த கமெண்ட் இன்னும் சூப்பர்!! :)))

    ReplyDelete
  40. \\உன்னை போல் ஒருவன் லெட்சுமி மாதிரி\\
    ஒரு தடவ தூரத்துல இருந்து பாக்க சிம்ரன் மாதிரி இருக்காங்களேன்னு
    ஒரு ஏர் ஹோஸ்டஸ்-அ கூப்டா...
    பக்கத்துல வந்த உடனேதான் தெரிஞ்சுது... வாரணம் ஆயிரம்-ல வர வயசான சிம்ரன் மாதிரி இருக்காங்கனு
    உடனே தூங்கிட்டேன்.

    ReplyDelete
  41. மேட்டரெல்லாம் சூப்பர்தான். அந்தப் புள்ளயோட மெயிலய்டி.....


    //போடாம போறவங்க மேட்டரை எல்லாம் அவுங்க வூட்டு அம்மணிங்க கிட்ட போட்டு கொடுப்பது போல்//

    நான் தப்பிச்சேன்(மேலக் கேட்ட மேட்டரையுமா போட்டுக் கொடுக்கும்?).

    ReplyDelete
  42. லொள்ளுக்கு ஒரு அளவு இல்லாம போச்சு.

    :)))))))

    ReplyDelete
  43. அன்பின் குசும்பா

    சூப்பர் கார்ட்ட்டூன்

    கருப்புதான் எனக்கும் பிடிச்ச கலரு

    எல்லாப்படத்துலேயும் சூப்பரா இருக்கேப்பா

    முன்னால ஒரு இடுகைலே ஒட்டகம் மேச்சப்போ எடுத்த படத்துல இருந்த கமெண்டுக்கு இப்ப பதிலு - ப்ளைட் துடைக்கச் சொன்னா எப்படின்னு - ம்ம்ம்ம்ம்

    எல்லாரும் சூப்பரா மறுமொழி போடாறாங்கபா

    நல்வாழ்த்துகள் இனியன் - அய்யோ குசும்பன்

    ReplyDelete
  44. அந்த கூர்மையான..நகைச்சுவை உணர்வை மெச்சுகிறேன்.

    :))

    ReplyDelete
  45. குசும்பன் எதிர் பார்த்ததை விட போட்டோவில் ரொம்ப அழகா இருக்கீங்க...:-))
    ப்ளைட் பக்கத்திலே நீங்க நிற்கும் போது எது ப்ளைட் எது நீங்கன்னு தெரியாத அளவிற்கு கம்பீரமா இருக்கீங்க....:-))
    உங்க லுக் எக்ஸிகூட்டிவ் லுக்கா இருக்கு...:-))

    ReplyDelete
  46. //என்ன குசும்பா கடைசி வரைக்கும் உங்க போட்டவ போடவே இல்லை? ரொம்ப ஆசையா வந்து பார்த்தேன், அது போகட்டும் அது யாரு கோட்டு சூட்டுகுள்ள ஒரு பய??//

    ReplyDelete
  47. கோட்டை மாட்டிகிட்டு கோட்டைவிட்டுட்டீங்களே தல....

    கரும்புலியின் வான் படை தளபதின்னு சொல்லி ஒன்னுக்கு ரெண்டா (ஃபிளைட்டை) வாங்கிருக்கலாம்ல...கெட்டப் அப்படி தானே இருக்கு... :-))

    ReplyDelete
  48. குசும்பன்,

    பதிவெண்டாப் பதிவுதான்... விளக்கங்கள் மிக அருமை

    ReplyDelete
  49. குசும்பு..
    பேசாம , ஒரு ஓட்டை ப்ளைட் வாங்கி ,
    நம்ம ஊரு ஏர் ஹோஸ்டல பாரஸுட் இல்லாம அனுப்பிருக்கலாம்...
    என்னமோ போங்க.... ஆக மொத்தம் வடை போச்சு.., ����

    ReplyDelete
  50. குசும்பு ன்னா குசும்பு தான் !

    குடும்பத்தோடு சிரித்தோம்

    குசும்பரே!

    ReplyDelete
  51. படமெல்லாம் நல்லாயிருந்தது. ஆனா எல்லாப் படத்துலயும், டை கட்டிக்கிட்டு ஒருத்தர் நின்னு ப்ளைட் வியூவக் கெடுத்துட்டாரு :) யாருங்க அது ?

    ReplyDelete
  52. நன்றி சூரியன்

    நன்றி அன்பு

    நன்றி மாதேவி

    நன்றி ஆயில் (மிளகாயோட ரெண்டு வெடியையும் போடுவதுதானே
    உங்க திட்டம்)

    நன்றி அதுக்கு முன்னாடி அந்த பிளைட்டை வெச்சு இருந்த
    சொப்பனசுந்தரியை????


    நன்றி இராம்

    நன்றி புருனோ

    நன்றி KVR, முதலில் போட்டோவை அனுப்பும் வழியை பாருங்க!

    நன்றி கீழை ராஸா, கொலைவெறியோடு காத்திருக்கிறேன்:)

    நன்றி அப்துல்லா, வாங்க நேரா சொல்றேன்:)

    நன்றி பட்டா பட்டி

    நன்றி தர்ஷன்

    நன்றி சரவணக்குமார்

    நன்றி பாலகுமாரன்

    நன்றி நிகழ்காலத்தில்

    நன்றி நாதஸ் (கரகாட்டகாரன் நாதஸா நீங்க:)

    நன்றி ஸ்வாமி உங்கள் தொலை நோக்கு பார்வை மெய்சிலிர்க வைக்கிறது:))
    அவ்வ்வ்வ்வ்

    நன்றி வினோத், அது உள்ளே நுழையும் முன்பு ரவுண்டு கட்டி நின்னு பேசிக்கிட்ட
    பொண்ணுகளை பார்த்து வந்தது.

    நன்றி வால்! (ஆமாம் நீங்க எதை சொன்னீங்க)

    நன்றி சந்தனமுல்லை, நானே அவர் மேல கொல வெறியில் இருக்கேன்:)

    நன்றி ராஜாராம்

    நன்றி கோபி

    நன்றி விஸ்வநாதன் (வயதான சிம்ரன் உங்களுக்கு கசக்குதாய்யா,அவ்வ்வ்வ்வ்)

    நன்றி கல்ப் தமிழன்

    நன்றி அரங்கப்பெருமாள் (குசும்புஒன்லி@ஜிமெயில்.காம்) போதுமா?:)

    நன்றி புதுகைத் தென்றல்

    நன்றி சீனா அய்யா,வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    நன்றி சுரேகா

    நன்றி ஜெகதீசன், நீங்களுமா? அவ்வ்வ்

    நன்றி இளைய கவி, அவருதான் லியாண்டர் டிகாப்ரியோ:)

    நன்றி ரோஸ்விக், என்ன ஒரு வில்லதனம்:)

    நன்றி கவ் பாய்:)

    நன்றி பட்டா பட்டி

    நன்றி பொற்கோ

    நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  53. சரவணன்

    பாதி flight படமே இல்லை. முடிந்தால் மெயில் அனுப்பவும்.

    கல்யாணம் அகி, ஜூனியர் வந்தும் இன்னும் குசும்பு குறைஞ்ச பாடில்லை.


    த.பாலு.

    ReplyDelete
  54. படங்களுடன் கமெண்டுகள் யாவும் அருமை. ரசித்துச் சிரித்தேன்:)))!

    ReplyDelete
  55. //எங்க ஆரம்பிச்சு எங்க துடைச்சு முடிப்பதுன்னு தெரியலையே, ஒட்டகத்துக்கு பதிலா திடிர் என்று ப்ளைட்டை கொடுத்தா என்ன செய்வேன் அவ்வ்வ்வ்வ்//

    அப்போ துபாய்ல ஒட்டகம் தான் துடைகிறீங்களா? அவ்வ்வ்வ்

    // இதை வாங்க நான் என்ன மடையனா?//

    அப்போ இல்லியா?

    ReplyDelete
  56. ஆமா..அந்த காத்தாடி வெச்ச போர் விமானமாச்சும் வாங்கிட்டு வந்திருக்கலாம்..
    ஆபிஸ்ல கரண்ட் போனா அதை ஓடவிட்டு கொஞ்ச நேரம் காத்தாச்சும் வாங்கலாம்!!

    ReplyDelete
  57. ஓடிவரும் விமானத்தைத் திரும்பிப் பார்க்காமலே ஒரே கையால் தடுத்து நிறுத்தும் சூப்பர்மேன் வாழ்க. :-)

    ReplyDelete
  58. எப்போதும் போல் கலக்கல் குசும்புகள்.

    அப்புறம் உங்க வீட்டு பைலட் கிட்ட இந்த பதிவ காமிச்சீங்களா. . .

    ReplyDelete
  59. அப்புறம் அந்த டைலர் கட எங்க இருக்கு . . . .

    ReplyDelete
  60. குசும்பண்ணே கோட்டு எங்கே வாடகைக்கு எடுத்தீங்க... கொஞசம் லைட்டு கலர்ல எடுத்திருக்லாமுல்ல..ஹஹஹ

    ReplyDelete
  61. இத எப்பிடி மிஸ் பண்ணினேன்? செமை.!!

    ReplyDelete
  62. மெல்ல ஆடி அசைஞ்சு அண்ணன் அப்துல்லாவின் கடையிலிருந்து இப்பத்தான் வந்தேன்:)

    ReplyDelete
  63. //ஒரே ஒரு ஆளைதான் கூட்டிக்கிட்டு போகலாமாம் அதுவும் பின்னாடி உட்காரவெச்சு, நடுவுல ஒரு தடுப்பு வேற, வேலைக்கே ஆவாத ப்ளைட், இதை வாங்க நான் என்ன மடையனா?//

    முடியலை:))))

    ReplyDelete