Wednesday, November 18, 2009

வலைப்பதிவர்களின் டீலா நோ டீலா! (கேம் ஷோ)



வலையுலக மக்கள் டீலா நோ டீலா நிகழ்ச்சியில் கலந்துக்கிற மாதிரியான ஒரு கற்பனை, இங்கு டீலே வேற!

வால்பையனுக்கு ரூல்ஸை சொல்லுகிறார் ரிஷி, இங்க பாருங்க இந்த பக்கம் புகையிலை, பீடி, சிகரெட், பில்டர், கஞ்சா, சாராயம், கள்ளு, பீர், ஒயின், விஸ்கி, பிராந்தி, ஓட்கா, டகிளா,ஷாம்பெயின் என்று ஒவ்வொரு பொண்ணுங்க கையில் இருக்கும் பெட்டியிலும் ஒன்னு ஒன்னு இருக்கும். நீங்க ஒரு பெட்டிய எடுத்து இங்க வெச்சுக்கிட்டு மத்ததை எல்லாம் ஓப்பன் செய்ய சொல்லனும். அப்படி ஓப்பன் செய்யும் பொழுது டீல் பேசுவோம், உங்க பெட்டியில் விலை அதிகமான ஷாம்பெயினும் இருக்கலாம், இல்ல பீடி கட்டும் இருக்கலாம். உங்க லக்கை பொருத்து.


ரிஷி: இப்ப முதல் ரவுண்ட்

வால்: எனக்கு ஒரு லார்ஜ்

ரிஷி: யோவ் இது விளையாட்டோட முதல் ரவுண்ட், இப்ப என்ன செய்யனும் நீங்க அங்க நிக்கிற பொண்ணுங்க கையில் இருக்கும் பெட்டியை ஓப்பன் செய்யனும்!

வால்: முதலில் அவுங்களை எனக்கு பாலோயரா ஆக சொல்லுங்க அப்புறம் நான் அவுங்க பாலோயரா ஆகி அப்புறம் ஓப்பன் செய்கிறேன், எனக்கு பாலோயரா இல்லாதவங்க பொட்டிய எல்லாம் நான் ஓப்பன் செய்வது இல்லை!

ரிஷி: நீங்க ரூல்ஸை பாலோ செய்யாததால் உங்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறேன்.

வால்: ஹல்லோ அப்ப முதலில் ரூல்ஸை என்னை பாலோ செய்ய சொல்லுங்க, நான் உடனே ரூல்ஸை பாலோ செய்யுறேன், இதுதான் என் கொள்கை!

ரிஷி: ஆண்டவா...........


************

அடுத்து தண்டோரா!


ரிஷி: சார் உங்களை அறிமுக படுத்திக்குங்க!


தண்டோரா: என் அடுத்தவரி பெயர் அடுத்தவரி தண்டோரா அடுத்தவரி ஆச்சரியகுறி.


ரிஷி: என்ன சார் அது அடுத்தவரி அடுத்தவரின்னு சொல்றீங்க?


தண்டோரா: என் பெயரை கவிதையா சொன்னேனுங்க, எழுதும்பொழுது என்றால் ஒரு Enter தட்டி தட்டி கவிதையா மாத்திடுவேன், பேசும்பொழுது இப்படி சொன்னாதானே கவிதைன்னு புரியும்.


ரிஷி: என்ன கொடுமை சார் இது?


தண்டோரா: ஆஹா பின்னூட்டம் வேற போட்டுவிட்டீங்களா?


ரிஷி: என்னது பின்னூட்டமா?


தண்டோரா: ஆமா நான் சொன்ன கவிதைக்கு நீங்க சொன்ன பின்னூட்டம் என்ன கொடுமை இது! இதையும் கவிதையா என்ன அடுத்த வரி கொடுமை அடுத்தவரி இது அடுத்தவரி கேள்விகுறின்னு சொல்லி இருந்தீங்கன்னா நீங்களும் கவிஞரா ஆகி இருக்கலாம்.


ரிஷி: ஆஹா வேண்டாம் சார் வாங்க ஆட்டத்துக்கு போகலாம். இப்ப அங்க நிக்கும் பொண்ணுங்க கையில் இருக்கும் பொட்டிய எதையாவது ஒன்னை ஓப்பன் செய்ய சொல்லுங்க.


தண்டோரா: மூன்றாவது அடுத்தவரி வரிசையில் அடுத்தவரி இரண்டாவதாக அடுத்தவரி நிற்கும் அடுத்தவரி பெண்ணின் அடுத்தவரி கையில் அடுத்தவரி இருக்கும் அடுத்தவரி பெட்டி அடுத்த வரி எண் அடுத்தவரி இருபத்தி அடுத்தவரி மூன்று அடுத்தவரி திறங்க.


ரிஷி: போன் ரிங் ஆகிறது... சார் இப்ப கால் வந்துச்சு... நீங்க இதுமாதிரி கவிதை சொல்லாம இருந்தா இப்பவே ஷாம்பெயின் பாட்டிலை உங்களுக்கு தருவதாக சொல்லுகிறார், சொல்லுங்க டீலா, நோ டீலா!


தண்டோரா: டீ அடுத்தவரி


ரிஷி: அய்யய்யோ

****************

கேபிள் சங்கர்

ரிஷி: மனசுக்குள்(ஆஹா இவரிடம் அறிமுக படுத்திக்க சொல்லலாமா வேண்டாமா? இவரும் அவரை போல் கவிஞரா இருந்துட்டா?)


(கேபிள் சங்கர், ரிஷியிடம் இன்னொரு சேர் கொண்டு வர சொல்லுங்க என்கிறார், ரிஷி இல்ல சார் நீ மட்டும் தான் இதில் கலந்துக்கமுடியும் வேறு யாரும் ஹெல்புக்கு எல்லாம் வெச்சுக்க கூடாது என்கிறார், இல்லை இல்லை எனக்குதான் இன்னொரு சேரும் என்று சொல்லியபிறகு அவர் கொண்டு வந்த சேரில் தன் தொப்பையை பார்க் செஞ்சுட்டு ஆரம்பிக்கிறார்)

கேபிள்: ஹல்லோ இரண்டாவது வரிசையில் மூன்றாவதா நிற்க்கும் பியூட்டி உன் தலை முடியில் இரண்டு முடி லைட்டா கலைஞ்சு போய் இருக்கு பாரு, அந்தா நாலாவது பொண்ணு மேக்கப் கொஞ்சம் ஹார்டா இருக்கு பாருங்க அதை கொஞ்சம் டச்சப் செய்யுங்க, அந்த கடைசி வரிசையில் நிக்கும் இரண்டாவது பொண்ணு சூப்பரா இருக்கு அதை முதல் வரிசைக்கு கொண்டு வாங்க, மூன்றாவது வரிசையில் இருக்கும் பெண் மேல் படும் லைட்டிங் கொஞ்சம் அவுட்டாப்போக்கசில் இருக்கு அதை கொஞ்சம் சரி செய்யுங்க....


ரிஷி: சார் நிறுத்துங்க...சார் நிறுத்துங்க


கேபிள்: கொஞ்சம் லைட்டிங்கில் கிரீன் டோன் இருக்கிறமாதிரி பார்த்துக்குங்க...அப்புறம் கடைசியில் நாலாவதா நிக்கிறபொண்ணு பிரா கொஞ்சம் வெளியில் தெரியுது இன்னும் நல்லா தெரியுற மாதிரி அட்ஜெஸ் செய்யுங்க..


ரிஷி: சார் நீங்க டைரக்டரா?


கேபிள்: ஆமாம், இதுவரை ஒரு 20 இங்கிலீஸ் படம், ஒரு 30 தமிழ்படம், ஒரு 10 தெலுங்குபடம்...


ரிஷி: இவ்வளோ படம் டைரக்ட் செஞ்சு இருக்கீங்களா? சார் பிளீஸ் சார் எனக்கு அடுத்த படத்தில் சான்ஸ் கொடுங்க சார்...


கேபிள்: இதுக்கு எல்லாம் விமர்சனம் எழுதி இருக்கிறேன்னு சொல்ல வந்தேன்...முதலில் நீங்க மூனு நாளா டாய்லெட் போகாதவன் போல மூஞ்ச வெச்சுக்கிட்டு டீலா நோ டீலான்னு கேட்பதைமாத்தனும், தானாவே உங்களுக்கு சான்ஸ் தேடிவரும்.


ரிஷி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*********************
பைத்தியக்காரன்

ரிஷி: சார் வணக்கம்


பைத்தியக்காரன்: வணக்கம்மா! நல்லா இருக்கியாம்மா?


ரிஷி: நல்லா இருக்கேன் சார்! ஆட்டத்துக்கு போகலாமா சார்?


பைத்தியக்காரன்: இரும்மா, (பொண்ணுங்களை பார்த்து) ஏம்பா கையில் இருக்கும் பொட்டிய மூடி வெச்சுக்கிட்டு மத்ததை எல்லாம் திறந்து வெச்சு இருக்கீங்களே? இது நல்லாவா இருக்கு?கொஞ்சம் ஒழுங்கா உடம்பை மூடுவது போல் ட்ரஸ் போட கூடாதாப்பா?

ரிஷி: மனசுக்குள் (என்ன இவரு என்னை என்னமாங்கிறார், பொண்ணுங்களை என்னப்பா என்கிறார்) சார்...

பைத்தியக்காரன்: மன்னிக்கனும், நான் விளையாட வரவில்லை என் கருத்தினை இங்கு பதிவு செய்யவே வந்தேன். இது என்னோட கருத்து மட்டுமே, கருத்தினை யார் மேலும் நான் திணிக்கவில்லை, கருத்து சொல்வது என் கடமை அதை கேட்பதும் கேட்காமல் போவதும் உங்கள் உரிமை. நன்றி வருகிறேன்.


ரிஷி: நன்றி நான் சொல்லனும் சார்! ரொம்ப நன்றி!(நல்லவேளை போர்வையோட வந்து எல்லோரையும் போத்திவிட்டு போகாம போகிறாரே)

71 comments:

  1. அடி தூள்...

    சத்யமா என் டிராஃப்டுல இதே மாதிரி ஒன்னு நிக்குது.. முதுக்கிட்டிங்களே எசமான்.. :((((

    ReplyDelete
  2. அது “முந்திக்கிட்டிங்களே எசமான”

    ReplyDelete
  3. அண்ணே... என்ன நாலு பதிவரோட நிறுத்திடீங்க... அப்படியே நீளமா பதிவு போடற உ. த அண்ணாச்சி... அப்புறம் முக்கியமா உங்கள விட்டுட்டு டூர் போன ஆசிப்பு அண்ணாச்சி.... இவங்களையும் ஆட்டதுல சேதுருக்கலாம்ல ......
    :-))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  4. அட்டகாசம். நாலு பேருமே சூப்பர். வெல்கம் பேக்.

    அனுஜன்யா

    ReplyDelete
  5. சான்ஸே இல்ல குசும்பன்... பின்னி பெடல் எடுத்துட்டீங்க. ஆனா, என்னை மட்டும் லேசா கலாய்ச்ச மாதிரி இருக்கு... இன்னும் ஸ்ட்ராங்கா செய்திருக்கலாம். மற்றதெல்லாம்... தூள்!

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  6. சிங்கம் களம் இறங்கிடுச்சே......

    ReplyDelete
  7. :))))))))

    (அப்புறம்..... அண்ணே அந்த நிகழ்ச்சி நடத்துபவர் பேரு ‘ரிஷி’. முந்தாநாள் கேட்டீங்களே)

    ReplyDelete
  8. 400க்கு வாழ்த்துகள் தலைவரே!

    ReplyDelete
  9. //நாலாவதா நிக்கிறபொண்ணு பிரா கொஞ்சம் வெளியில் தெரியுது இன்னும் நல்லா தெரியுற மாதிரி அட்ஜெஸ் செய்யுங்க..//

    “ஏ” ஜோக் கூட சொல்லிட்டார் போல!

    ReplyDelete
  10. ஒரு பாட்டில் கூட கொடுக்கமால் என்னை வெளியே அனுப்பியதற்கு வன்மையாக கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  11. சூப்பர்டா மச்சி :))

    கண்ணு கலங்கிடுச்சு.. அடுத்த பார்ட் ரெடி செய். ஆர்வத்தோட இருக்கோம்

    ReplyDelete
  12. ஆகா குசும்பன் ஆரம்பிச்சுட்டார். சூப்பர் சார். சிரிப்பு தாங்க முடியவில்லை. நன்றி.

    ReplyDelete
  13. மின்னுது மின்னல்November 18, 2009 at 9:51 PM

    சூப்பரூ... :)

    ReplyDelete
  14. அடப்பாவி மாமா.. இதைப் பத்தி பாதி எழுதி வச்சிருக்கேன்னு 2 நாள் முன்னாடி தான் அண்ணாச்சிகிட்டயும் செல்வேந்திரம் கிட்டயும் சொல்லிட்டிருந்தேன். புதிய செருப்பா பழய செருப்பான்னு தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். :))

    ReplyDelete
  15. சூப்பர் தல, ரொம்ப ரசிச்சேன்.

    ReplyDelete
  16. ஐயோ வட போச்சே !!!!!

    -இப்படிக்கு வடை சுந்தர்

    ReplyDelete
  17. நீ

    கொடுத்த
    ஸ்காட்ச்சுக்கும்
    டகீலாவிற்கும்
    எவ்வளவு அடிச்சாலும்
    வலிக்காதுடீ

    ReplyDelete
  18. :)

    kusumban Returns..!

    BACK TO FORM

    ALL THE BEST !

    ReplyDelete
  19. தண்டோரா கவிதை சூப்பர்! :) :)

    ReplyDelete
  20. //ரிஷி: என்ன கொடுமை சார் இது?


    தண்டோரா: ஆஹா பின்னூட்டம் வேற போட்டுவிட்டீங்களா?//

    ஹைய்யோ :-))))))))))))))))

    ReplyDelete
  21. super .. i was ROFTL =)) nice creativity .. hats off !

    ReplyDelete
  22. பைத்தியக்காரனை இதைவிடவும் யாரும் கலாய்க்க முடியாது..! சூப்பரப்பூ..!

    ReplyDelete
  23. அதிலும் ரிஷியை பத்தின கமெண்ட் ஹா..அஹ..ஹா.... சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  24. எசமான் நீ

    கொடுத்த அடுத்தவரி
    ஸ்காட்ச்சுக்கும் அடுத்தவரி
    டகீலாவிற்கும் அடுத்தவரி
    எவ்வளவு அடுத்தவரி அடிச்சாலும்
    வலிக்காதுடீ அடுத்தவரி

    அட்டகாசம். நாலு பேருமே சூப்பர்

    ReplyDelete
  25. ஆபிஸ்லேயே அடக்க முடியாம சத்தம் போட்டு சிரிச்சுட்டேன். முடியலைங்க.

    ReplyDelete
  26. ஆஹா!!குசும்பன் அடுத்தவரி
    கலக்கல்:))))))))))))))))

    ReplyDelete
  27. ஹா ஹா ஹா....

    ஜீப்பரு....

    :-)

    ReplyDelete
  28. kusumbuonlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllly!!!!!! :()

    ReplyDelete
  29. // என் பெயரை கவிதையா சொன்னேனுங்க, எழுதும்பொழுது என்றால் ஒரு Enter தட்டி தட்டி கவிதையா மாத்திடுவேன், பேசும்பொழுது இப்படி சொன்னாதானே கவிதைன்னு புரியும்//

    //முதலில் நீங்க மூனு நாளா டாய்லெட் போகாதவன் போல மூஞ்ச வெச்சுக்கிட்டு டீலா நோ டீலான்னு கேட்பதைமாத்தனும், தானாவே உங்களுக்கு சான்ஸ் தேடிவரும்.//

    //ஏம்பா கையில் இருக்கும் பொட்டிய மூடி வெச்சுக்கிட்டு மத்ததை எல்லாம் திறந்து வெச்சு இருக்கீங்களே? இது நல்லாவா இருக்கு?கொஞ்சம் ஒழுங்கா உடம்பை மூடுவது போல் ட்ரஸ் போட கூடாதாப்பா?//

    superb....

    ReplyDelete
  30. முடியலே...!!!

    ஆஅவ்வ்வ்வ்

    ReplyDelete
  31. சிரிச்சு..

    சிரிச்சு..

    சிரிச்சு..

    தாதாதாதாதாதாங்க முடியலை..

    சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  32. முடியல..சிரித்து சிரித்து வயிறு வலிக்குது....

    ReplyDelete
  33. மற்ற பதிவர்களை பற்றி உங்க பதிவுகள் மூலமாக நல்லாவே தெருஞ்சுக்க முடியுது.கலக்குறீங்க..
    தொடருங்கள் உங்கள் சேவையை..

    //புகையிலை, பீடி, சிகரெட், பில்டர், கஞ்சா, சாராயம், கள்ளு, பீர், ஒயின், விஸ்கி, பிராந்தி, ஓட்கா, டகிளா,ஷாம்பெயின்//
    பதிவுலகத்துல அதிகமா பயன்படுத்தப்படுகிற வார்த்தைகள்.
    ஒரு சின்ன கண்டுபிடிப்பு..ஹி ..ஹி ..

    ReplyDelete
  34. ஆஹா.... பையன் பொறந்த நேரம் குசும்பு டபிளாயிடுச்சு !!!

    ReplyDelete
  35. \\
    //ரிஷி: என்ன கொடுமை சார் இது?


    தண்டோரா: ஆஹா பின்னூட்டம் வேற போட்டுவிட்டீங்களா?//

    ஹைய்யோ :-))))))))))))))))//

    வழிமொழிகிறேன்...:)

    ReplyDelete
  36. செமத்தியான கலாய்..!!

    வால் சூப்பர்னு சொல்ல வந்தால், அடுத்தது அதைவிட அட்டகாசம்னு போடலாம் னு பார்த்தா.. அதற்கடுத்து அதைவிட தூள்னு பின்னிட்டீங்க..

    அதுவும் போற போக்குல ரிஷியை போட்டதுதான் இருப்பதிலேயே டாப்பு.!

    ReplyDelete
  37. அடுத்தபாகம் எதிர்பார்க்குறோம்..!!

    ReplyDelete
  38. தொடர்பவர்கள் நானூறினைத் தாண்டியதற்கு நல்வாழ்த்துகள் சரவணன்

    டீலா நோ டீலா

    வாலு தண்டோரா கேபிள் எல்லாரும் ந்லலாத்தான் சொல்லி இருக்காங்க

    நல்ல இடுகை

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  39. //.. ரிஷி: இப்ப முதல் ரவுண்ட்

    வால்: எனக்கு ஒரு லார்ஜ் ..//

    இங்க ஆரம்பிச்ச சிரிப்பு நிக்கரதுக்க கொஞ்சம் நேரமாச்சு..

    ReplyDelete
  40. //ரிஷி: நீங்க ரூல்ஸை பாலோ செய்யாததால் உங்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறேன்.

    வால்: ஹல்லோ அப்ப முதலில் ரூல்ஸை என்னை பாலோ செய்ய சொல்லுங்க, நான் உடனே ரூல்ஸை பாலோ செய்யுறேன், இதுதான் என் கொள்கை!//

    இது தான் இருக்கறதுலயே டாப்பு :)

    ReplyDelete
  41. ஆஹா சூப்பர் ஆனா நாலு பேரோடு நிறுத்திட்டிங்களே :)

    ReplyDelete
  42. ஆஹா... கிளம்பிட்டாருய்யா... சூப்பரப்பு

    ReplyDelete
  43. ஆஹா... கிளம்பிட்டாருய்யா... சூப்பரப்பு

    ReplyDelete
  44. நிகழ்ச்சியைவிட ரொம்ப மொக்கையா இருக்கு.

    ReplyDelete
  45. "Jamal Sharif wrote a large number of residents in Aziziyah sundar on dissatisfaction with the poor condition of streets and roads and a slowdown in infrastructure projects cahru infrastructure in the region and the many twists in the asphalt layer and the growing Narsim excavations everywhere is cause for concern and a threat of accidents"
    உங்களோட பின்னூட்டம் ஒன்று நர்சிம் ஆர்கேவ்ல படிக்க நேர்ந்தது ...சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  46. நன்றி சின்ன அம்மிணி

    நன்றி ஆயில்யன்

    நன்றி செந்தில்வேலன்

    நன்றி கார்க்கி, அதனால் என்ன போடுங்க எசமான்!

    நன்றி எறும்பு

    நன்றி அனுஜன்யா

    நன்றி பைத்தியக்காரன் அண்ணாச்சி!
    (உங்களுக்காக ஒரு ஸ்பெசல் ஷோ போட்டுவிடுவோம்:)

    நன்றி சுபைர்

    நன்றி ராபின்

    நன்றி ஆதவன், உன் சேவைக்கு:)

    நன்றி குழலி

    நன்றி வால்

    நன்றி சென்ஷி

    நன்றி பித்தனின் வாக்கு

    நன்றி சென்22 (என்னங்க இது சிக்கன்65 மாதிரி சென்22??)

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

    நன்றி மின்னல்

    நன்றி அப்துல்லா

    நன்றி மாமோய்:)

    நன்றி இஸ்மத் பாய்

    நன்றி சித்து

    நன்றி பீர்

    நன்றி சுந்தர் சார்

    நன்றி ஸ்ரீமதி

    நன்றி கவிஞர் தண்டோரா அண்ணாச்சி:)

    நன்றி சுரேகா

    நன்றி சுந்தர் ஜீ( இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...)

    நன்றி இராகவன் அண்ணாச்சி

    நன்றி கல்யாணி சுரேஷ்

    நன்றி துளசி டீச்சர்

    நன்றி ஸ்ரீவாத்ஸன்

    நன்றி அதி பிரதாபன்

    நன்றி கலகலப்ரியா

    நன்றி தல

    நன்றி உ.த

    நன்றி கேபிள் சங்கர்

    நன்றி சதீஷ் குமார்

    நன்றி விக்னேஷ்வரி

    நன்றி நர்சிம்

    நன்றி வல்லிசிம்ஹன்

    நன்றி அகல்விளக்கு

    நன்றி பிளாக்பாண்டி

    நன்றி Sachanaa

    நன்றி அபு அஃப்ஸர்

    நன்றி பின்னோக்கி

    நன்றி Mrs.Menagasathia

    நன்றி வண்டிக்காரன்

    நன்றி மகேஷ்

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி ஆதி!

    நன்றி சீனா அய்யா

    நன்றி பட்டிக்காட்டான்

    நன்றி வெட்டிப்பயல்

    நன்றி Kiruthikan Kumarasamy

    நன்றி தாரணி பிரியா

    நன்றி பிரதாப்

    நன்றி மங்களூரார்

    நன்றி வண்டிக்காரன்

    ReplyDelete
  47. ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹஹஹஹஹஹ்ஹஹஹஹஹஹா

    ReplyDelete
  48. அருமை :-)
    தொடரவும்

    ReplyDelete
  49. ஹா..ஹா...அதகளம் குசும்பன்!தண்டோரா பார்ட் தாங்க முடியலை....
    .
    :-))))))))))))

    ReplyDelete
  50. தண்டோரா மேட்டர் கலக்கல். அவர் எழுதிய கமெண்டும் தான்

    ReplyDelete
  51. நல்லாயிருந்ததுங்க :)

    ReplyDelete
  52. இணையத்திற்கு புது வரவு நான்..
    யாரும் பரிச்சயமில்லை என்றாலும் நண்பர்களை நன்றாக கலாய்த்த திருப்தி..

    ReplyDelete