Monday, August 3, 2009

குடநாட்டு எஸ்டேட் ஓய்வும் ஒரு காமெடியும்!

குடநாட்டு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் பயலலிதாவும், குஷிகலாவும்.


அங்கு பதறியடித்துக்கொண்டு ஓடிவருகிறார் வெண்ணீர்செல்வம். அவர் பின்னாடியே பங்கோட்டையன்,எல்லாம் ஓடி வருகிறார்கள்.

வெண்ணீர்செல்வம் குஷிகலாவிடம் மேடத்தை பார்க்கனும் என்கிறார்.

குஷிகலா: மேடம் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர் ஆகி ரெஸ்ட் எடுக்கிறாங்க இப்ப அவங்களை டிஸ்டர்ப் செஞ்சா ரொம்ப கோவப்படுவாங்க அவுங்க கண் முழிச்சு யாரை பார்க்கிறாங்களோ அவுங்களுக்கு பீஸ் புடுங்கிடுவாங்க.

வெண்ணீர்செல்வம்: மனசுக்குள் (ஒருநாள் கூட உங்க முகத்தில் முழிக்கலையா)

பரவாயில்லை சின்னமேடம் நாங்க வெயிட் பண்ணுறோம், மேடம் வரப்ப வரட்டும். என்று காலை போனவர்கள் மதியம் வரை காத்திருக்கிறார்கள் மதியம் சாப்பிட எழுந்தவரிடம், குஷிகலா இதுபோல் வந்து இருக்காங்க என்றதும் எதுக்கு பர்மிசன் இல்லாம இவங்களை எல்லாம் உள்ளே விட்ட!

பயலலிதா:என்ன இப்ப தலைபோற காரியம் எதா இருந்தாலும் ரெண்டு மாசம் வெய்யில் எல்லாம் குறையவிட்டு பார்த்துக்கலாம்.

குஷிகலா: இல்ல மேடம் என்னான்னு சும்மா கேட்டுக்கிட்டு அனுப்பிடுங்க...என்று சொல்லி சமாதானபடுத்தி அழைத்து வருகிறார் குஷிகலா.

மேடத்தை பார்த்ததும் எல்லாம் ஒரு நாலு அடி உயரம் கம்மி ஆகி பம்மி நிற்கிறார்கள், மேடம் வந்ததும் வெண்ணீர் செல்வம் ஏதோ சொல்ல ஆரம்பிக்கிறார்..

குஷிகலா: இருங்க வெண்ணீர் ஏன் இவ்வளோ அவசரப்படுறீங்க, இப்பதான் மேடம் அங்கிருந்து நடந்து வந்திருக்காங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.அப்புறம் சேதிய சொல்லுங்க.

ஒரு பத்து நிமிடம் கழிச்சு ம்ம்ம் என்று பயலலிதா சொன்னதும்..

வெண்ணீர்செல்வம்: (ஸ்கூலில் ஒன்னாம் வாய்பாடு ஒப்பிக்கும் மாணவன் போல் எழுந்து கை கட்டி நின்று )மேடம் மேடம் இந்த தேர்தல் கமிசன் நம்மை கேட்காம திடிர் என்று 5 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிச்சுட்டாங்க,நாம கூட்டணி தலைவர்கள் கூட பேசி முடிவெடுத்து அவுங்களுக்கு எந்த தொகுதின்னு பங்கீடு முடிவுசெ .........

பயலலிதா முறைக்க

இல்ல இல்ல நாம முடிவெடுத்து கூட்டணி தலைவர்கள் கிட்ட இவுங்கதான் உங்க கட்சி வேட்பாளர் என்று சொல்லிடலாம், அதுதானே நம்ம வழக்கம். எப்பொழுதும் போல பைகோவும், கோமதாஸும் ஒன்னும் சொல்லாம வாங்கிப்பாங்க. ஆளும் கட்சிக்கு நாம யாருன்னு காட்டனும்.

குஷிகலா: வெண்ணீர் மைனாரிட்டிய விட்டுவிட்டிங்க

வெண்ணீர்: ஆளும் மைனாரிட்டி அரசுக்கு நாம யாருன்னு காட்டனும் என்று திருத்தி சொல்கிறார்

பயலலிதா: வாட்? திரும்ப தேர்தல்? என்ன மேன் இப்பதானே இரண்டு மாசம் முன்னாடி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து செஞ்சு, ஹெலிபேடில் இருந்து மேடைக்கு நடந்து எல்லாம் போய் ரொம்ப டயர்டா இருக்கேன் இப்ப திரும்ப தேர்தலா? என்னால திரும்ப இந்த வெய்யிலில் எல்லாம் பிரச்சாரம் செய்ய முடியாது..

பங்கோட்டையன்: ஆமாம் மேடம் , இந்த தேர்தல் கமிசன் சரி இல்லை நம்ம கிட்ட ஒரு வார்த்தையும் கேட்க மாட்டேங்கிறாங்க, நாம ஆட்சிக்கு வந்ததும் இவுங்க பவரை புடுங்கனும்.

வெண்ணீர்: மேடம் வரவர நம்ம கட்சி எம்.எல்.ஏ எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வருது ஏதாச்சும் செய்யனும்...


பயலலிதா: என்னமேன் இந்த 5 சீட் ஜெயிச்சா நான் என்ன திரும்ப சி.எம் ஆக முடியுமா? இல்லீல்ல அப்புறம் எதுக்கு அலட்டிக்கனும் பேசாம தேர்தலை புறக்கனிச்சுடலாம்...


வெண்ணீர்: சரிங்க மேடம் அப்ப அப்படியே பைகோ,கோமதாஸ் இவங்களுக்கும் போன் போட்டு சொல்லிடவா?

பயலலிதா: தேவை இல்லாம எதுக்கு மேன் ரெண்டு கால் வேஸ்ட் பன்னுற பேப்பரில் நியுஸ் கொடுத்துடுங்க அத பார்த்து தெரிஞ்சுக்கிட்டும்.


வெண்ணீர்: சரிங்க மேடம்

40 comments:

  1. "வெண்ணீர்செல்வம்: (ஸ்கூலில் ஒன்னாம் வாய்பாடு ஒப்பிக்கும் மாணவன் போல் எழுந்து கை கட்டி நின்று )மேடம் மேடம் "

    ஹா!ஹா! அது போல ஒரு ஃபோட்டோ போட்டிருக்கலாம்.
    ஸுப்பர்! நடத்துங்க!

    ReplyDelete
  2. சத்தம் போட்டு சிரிக்க வைச்சுட்டீங்க அண்ணே. படிச்சுட்டு கண்ணுல தண்ணி வந்துடுச்சு. பாத்துய்யா அம்மா அமீரகத்துக்கே ஆட்டோ அனுப்பிடப்போறாங்க :)))))))))

    ReplyDelete
  3. //குஷிகலா: இருங்க வெண்ணீர் ஏன் இவ்வளோ அவசரப்படுறீங்க, இப்பதான் மேடம் அங்கிருந்து நடந்து வந்திருக்காங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.அப்புறம் சேதிய சொல்லுங்க.//

    ROTFL :))

    ReplyDelete
  4. பய லலிதாவும், குஷிகலாவும் இம்புட்டு ஃபார்மலாவா இருக்காங்க .. ?

    ReplyDelete
  5. எஙகே ஐயா சிவப்புத் துண்டுத் தோழர்கள். அவர்கள் பற்றியும் ஒரு வரி எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
  6. மின்னுது மின்னல்August 4, 2009 at 12:03 AM

    ரைட்டு :)

    ReplyDelete
  7. சூப்பர்ங்கண்ணோவ் :))

    ReplyDelete
  8. //வெண்ணீர் மைனாரிட்டிய விட்டுவிட்டிங்க//

    இஃகி.. இஃகி.. இஃகி..
    இதுதான் குசும்பனின் டச்சுன்னு சொல்றது!

    ReplyDelete
  9. சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது.

    மாத்திரை செலவு உங்களோடதுதான்.

    நல்ல கற்பனை.

    ReplyDelete
  10. சான்சே இல்ல குசும்பா. சிரிச்சு சிரிச்சு வயிறு வலி கண்டு போச்சு

    ReplyDelete
  11. கார்டூன் இல்லையா தலைவா? இதோட கார்டூனும் போட்டிருந்தா இன்னும் தூக்கலா இருந்திருக்கும்

    ReplyDelete
  12. மைனாரிட்டி திமுக ஆட்சி முடிந்ததும் அடுத்த ஆட்சி அம்மாதான். குசும்பனை கவனிக்க கடல்மார்கமாக கப்பலில் ஆட்டோக்கள் துபாய் வரும்.
    :)

    ReplyDelete
  13. // என்ன மேன் இப்பதானே இரண்டு மாசம் முன்னாடி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து செஞ்சு, ஹெலிபேடில் இருந்து மேடைக்கு நடந்து எல்லாம் போய் ரொம்ப டயர்டா இருக்கேன் இப்ப திரும்ப தேர்தலா? என்னால திரும்ப இந்த வெய்யிலில் எல்லாம் பிரச்சாரம் செய்ய முடியாது..//

    :-)))

    ReplyDelete
  14. " கோவி.கண்ணன் said...

    மைனாரிட்டி திமுக ஆட்சி முடிந்ததும் அடுத்த ஆட்சி அம்மாதான். குசும்பனை கவனிக்க கடல்மார்கமாக கப்பலில் ஆட்டோக்கள் துபாய் வரும்"

    I am eagerly waiting to see that moment!
    Thank you Mr. Kovi

    ReplyDelete
  15. பேர் மாற்றங்கள் - ரசனை :)) இன்னும் சில 'பம்மல்' சம்பந்தங்களச் சேத்திருக்கலாம்.

    ஹ்ம்ம்ம்... தனி ஹெலிகாப்டர் அமீரகம் வருதாம். சாக்கிரதை.

    ReplyDelete
  16. கலக்கல்!!சிரிக்க வெச்சுட்டீங்க.

    ReplyDelete
  17. வெண்ணீர்செல்வம்

    /\*/\

    கண்ணீர்செல்வம் என்பதே சரியாக இருக்கும். மற்ற பெயர்கள் சூப்பராக செலக்ட் செய்து இருக்கிறீர்கள்

    ReplyDelete
  18. கலக்கல் குசும்பு....

    :))))

    குஷிகலாவிற்கும் பயலலிதாவிற்கும் இன்னும் கொஞ்சம் நீ வா போ டயலாக் பொட்ருக்கலாம்...

    ReplyDelete
  19. குளிர் விட்டு போச்சு!
    ஆட்டோ அனுப்பினா தான் சரிபட்டு வரும்!

    ReplyDelete
  20. மிக்க நன்றி நளினா! போட்டோ போட்டா சிக்கல் என்றுதான் போடவில்லை:)

    நன்றி சென்ஷி, அப்படி ஆட்டோ வந்ததுன்னு ஐடியா, ஆக்கம் எல்லாம் சென்ஷின்னு உண்மைய சொல்லமாட்டேன்:)))

    நன்றி நாஞ்சில் நாதம்

    நன்றி தண்டோரா

    நன்றி தருமி:))

    நன்றி வந்தியதேவன் தோழர்கள் நிலையாவது பரவாயில்லை:)

    நன்றி மின்னல்

    சுந்தர் சேர் கால் சரி இல்லையா?:)))

    நன்றி சுல்தான் பாய்

    நன்றி கலை

    நன்றி வேந்தன்

    நன்றி குடிகாரன்

    நன்றி கோஸ்ட்

    நன்றி ஆதவா

    நன்றி கோவி, சென்ஷியை தாண்டிய பிறகுதான் யாரும் என்னை தொடமுடியும்:)))

    நன்றி ஜோ

    நன்றி நளினா என்ன ஒரு வில்லதனம்:)

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

    நன்றி டொன் லீ

    நன்றி தஞ்சாவூரான்:)

    நன்றி Menagasathia

    நன்றி உடன்பிறப்பு என்னை தோழர் ஆக்கிட்டீங்களா?அவ்வ்வ்வ்வ்வ்

    நன்றி ஆ இதழ்

    நன்றி வால், இங்க வெய்யில் டவுசரை கிழிக்குது:))

    ReplyDelete
  21. அதென்ன ..
    எனக்கு மட்டும் :))
    அப்புறம், சுந்தர், கோவிக்கெல்லாம் :)))
    சிலருக்கு :)
    என்ன கணக்கிது???

    ReplyDelete
  22. வழக்கம் போல.. ஹிஹி..

    ReplyDelete
  23. குசும்பனின் அட்டகாசம் அரசியலையும் விட்டுவைக்க வில்லை.. ரசித்து சிரிச்சேன்

    ReplyDelete
  24. அட்டகாசம் போங்க... எனக்கென்னமோ இது உண்மை மாதிரி தெரியுது...

    ReplyDelete
  25. ஒவ்வொரு வரிக்கும் சிரிக்க வச்சுட்டிங்க..

    ReplyDelete
  26. குசும்பு ரொம்ப கூடிப் போச்சு மகனே..!

    எங்க ஆத்தாவையா கமெண்ட்டு அடிக்கிற..?

    அடுத்த ஆட்சி ஆத்தாதான்.. வரட்டும்.. வைக்குறோம் ஆப்பு..!

    ReplyDelete
  27. koda naadai kuda nattu ena aakki migavum nagaichuvaiyaaga ezuthiyirukkireergal. Innum konjam ezuthiyirukkalaam. padangal illaathaththum varuththame.

    ReplyDelete
  28. koda naadai kuda nattu ena aakki migavum nagaichuvaiyaaga ezuthiyirukkireergal. Innum konjam ezuthiyirukkalaam. padangal illaathaththum varuththame.

    ReplyDelete
  29. நம்ம நாட்டு அரசியல்வாதிகள்,குறிப்பா நம்மூர்காரங்க என்ன அரசியலா பண்ராங்க....காமெடி தான் பன்ராங்க...இதுக்கு நாமலும் முக்கிய காரணம்..நல்லாவெ சொல்லிருக்கீங்க...ஒரு பதிவுல வெண்ணீரோட பணிவ பாத்தேன்...அம்மா இருக்குர வேன் சக்கரத்த தொட்டு வணங்கிகிட்டு இருந்தார்...கடவுளுக்கு கூட அவ்வளவு மரியாத செய்ய மாட்டார்...
    தன்மானத்த விட்டுட்டு என்ன அரசியல்?.......நாரப்பசங்க....

    ReplyDelete