Tuesday, April 7, 2009

சீக்கியர்கள் உணர்வு என்றால் உசத்தியா?

ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழக்குவது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேற்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் கூறுகையில்'காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய ஜனநாயக கட்சி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்த முடிவும் எடுக்கப்படும், இவர்கள் இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது பற்றி மறுபரிசீலனை செய்வோம்' என்றார்.

அரசியல் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க எனக்கு.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவேண்டும் என்று எல்லா கட்சிகளும்(???), மக்களும் போராடினாங்க அப்ப மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னாத்த செஞ்சாங்க இவங்க?

இதுவரை எத்தனை முறை எப்படி ஈழமக்கள் படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதனால் என்ன பயன் விளைந்தது?

அட விடுங்க எதுக்கெடுத்தாலும் அயல் நாட்டு பிரச்சினையில் தலையிடுவது சரி இல்லை என்று சொல்லுவீங்க.

தமிழக மீனவர்கள் சுட்டபடும் பொழுது அதை தடுக்க என்ன செய்து இருக்கீங்க?

தமிழக தலைவர் உங்களுக்கு லெட்டர் எழுதுவார் திரும்ப அவருக்கு நீங்க லெட்டர் எழுதுவீங்க இதுஎன்னா சாலமன் லெட்டர் எழுதும் தொடர் விளையாட்டா? மாறி மாறி லெட்டர் எழுதி விளையாடுறீங்க?

எத்தனை தமிழர்கள் தீக்குளித்தார்கள் அதுக்கு என்ன அறிக்கை கொடுத்தீர்கள்? சீக்கியர்களின் உணர்வு என்றால் ஒசத்தியா? தமிழர்களின் உணர்வு என்றால்.......???

அதே மாதிரி இந்நேரம் வேறு ஒரு மாநில அமைச்சர் மீது ஒரு தமிழன் செருப்பு வீசி இருந்தா என்னா நடந்து இருக்கும்?

27 comments:

  1. அடப் போங்க. அவரு பேரனுக்கும் புள்ளைக்கும் கேபினட்ல சீட் வாங்கறத பார்ப்பாரா? இல்ல பிஞ்சுக் குழந்தை சாவறத பார்ப்பாரா? எது முக்கியம் சொல்லுங்க?

    ReplyDelete
  2. நம்மாளுங்கள சொல்லுங்க. இந்த தேர்தலில் எத்தனை பேர் வோட்டு போடப் போறாங்க? அப்படியே போட்டாலும் அது 2000 ரூபாய்க்கும், மூக்குத்திக்கும், கறி சோறுக்கும் தானே இருக்கும். நாளைக்கு பேரணியாம். எத்தனை ஊர்வலம், எத்தனை தீக்குளிப்புகள்? எல்லாம் ஈழத்துல இருக்கிறவனெல்லாம் செத்தப்புறம் தான் நிற்கும்.

    ReplyDelete
  3. //
    அதே மாதிரி இந்நேரம் வேறு ஒரு மாநில அமைச்சர் மீது ஒரு தமிழன் செருப்பு வீசி இருந்தா என்னா நடந்து இருக்கும்?//


    செருப்பு சைஸ், கம்பெனி, கலர் எல்லாத்தையும் பத்திரிக்கைக்காரங்க கவர் செஞ்சு கவர்ஸ்டோரி போடுவாங்க.. செருப்பை பத்தி :(

    ReplyDelete
  4. குசும்பல்லாத பளீர்..பளார்.

    ReplyDelete
  5. சீக்கியர்களும் காங்கிரசை துறத்தி அடிக்கனும்.

    கொடுத்த செருப்படி சரியானதே என்று மக்கள் கருதுகிறார்கள்
    :)

    ReplyDelete
  6. நீங்க வேணுமின்னா பாத்துக்கிட்டே இருங்க!
    தமிழன் திருந்தவே மாட்டான்...
    திரும்பத் திரும்ப ஏமாந்துக்கிட்டேதான் இருப்பான்...
    தமிழன்னாலே இந்தியாவுல எல்லாருக்கும் இளப்பம்தான்,,
    நம்ம என்னாதான் காட்டுக்கத்து கத்துனாலும் நடக்காது..
    ஒருவேளை நம்மளும் செருப்ப வச்சுதான் எறியனுமோ..
    அப்படி எறிஞ்சாலும், யாரு மேல எறியறது..அந்தாளும் தமிழன் தான!
    அந்த உணர்வு அவ்ருக்கு இருக்கற மாதிரியே தெரியலயே!
    படிச்சு என்ன பண்ன?
    இங்க என்னாடான்னா தன்னோட மகனுக்கும் பேரனுக்கும் மந்திரி பதவிக்கு
    தன்னோட தள்ளாத வயசுலயும் ஒருத்தரு போராடுறதுல ரொம்ப பிஸியா இருக்காரு...!
    நம்ம இன்னும் "கையறு நிலை" யில் தான் இருக்கின்றோம்.
    இந்த மலம் தின்னும் அரசியல் வாதிகள் இருக்கும் வரையில் இன்று மட்டும் அல்ல‌
    எனறுமே தமிழன் உருப்படவே மாட்டான்...

    ReplyDelete
  7. எப்போது எமக்கு விடிவோ!?

    ReplyDelete
  8. அட ஏனுங்கோ தம்பி......!! நம்ம ஊரு அரசியல் வியாதிங்க பொணத்து வாயில இருக்குற அரிசியகோடா உட்டு வெக்கமாட்டானுங்கோ .... இவுனுங்களுக்கெல்லாம் உயிரோட மதிப்பு எங்கீங்கோ தம்பி தெரிய போவுது..........!!!! தமிழ் மக்கள கோமாளி ஆக்குற இந்த கம்முனாட்டிங்கள எத்தன தடவ அசிங்கபடுத்தினாலும் திருந்தவே திருந்தாதுங்க.......!! இவுனுங்களுக்கெல்லாம் ஒரே குறிக்கோள் ...... அவனுங்களும் அவுனுங்க குடும்பமும் நெறையா காசு சம்பாருச்சு அவுனுங்க மட்டும் நல்லாருக்கோனும்.....!!!!

    ReplyDelete
  9. //நேற்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் கூறுகையில்'காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய ஜனநாயக கட்சி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்த முடிவும் எடுக்கப்படும், இவர்கள் இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது பற்றி மறுபரிசீலனை செய்வோம்' என்றார்.//

    இதை கேட்டதும் நானும் பதிவு எழுத வேண்டும் என நினைத்தேன் குசும்பரே, நீங்கள் எழுதி விட்டீர்கள்.

    சேம் பிளட்.

    முழுவதும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  10. இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்....

    :(

    ReplyDelete
  11. எவ்வளவு போராட்டம், எவ்வளவு உயிர் இழப்புக்கள். இவ்வளவு நடந்த பிறகும் இங்கு உள்ள புடுங்கிகளுக்கே உணர்வு ஒன்று இல்லாத போது அங்குள்ளவர்களிடம் எப்படி அதை எதிர்பார்க்க முடியும்.

    ReplyDelete
  12. சரியா சொன்னிங்க :(

    ReplyDelete
  13. என்ன இருந்தாலும் கடைசிக்கேள்வி கொஞ்சம் நியாயமாகத்தான் படுகிறது. பிரிச்சிருக்க மாட்டாங்க இதுக்குள்ள..?

    ReplyDelete
  14. நியாயமான கேள்விகள் தான்...

    ஆனால்,

    //அதே மாதிரி இந்நேரம் வேறு ஒரு மாநில அமைச்சர் மீது ஒரு தமிழன் செருப்பு வீசி இருந்தா என்னா நடந்து இருக்கும்?//

    1) அது ஏதாவது ஆளும் திமுக அமைச்சராக இருந்திருந்தால், 'சாணநக்கியன்' பெரிதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி, இது அதிமுக வின் வேலை அல்லது புலிகள் குண்டு வீச ஏற்பாடு என்று 'கழக விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு' ஒரு கடிதம் வந்திருக்கும்.

    2) செருப்பு வீசியவரின் வம்சத்தையே துடைத்திருப்பர்.... அவ்வளவே...

    ReplyDelete
  15. "சீக்கியர்கள் உணர்வு என்றால் உசத்தியா?"

    //

    தமிழன் மேல் செருப்பு வீசியதற்கு தாங்களும் தமிழன் என்ற முறையில் உங்களுக்கு உணர்வு உள்ளதா..?


    இல்லையே.. :(


    இங்க உள்ள தமிழனுக்கு ஒண்ணுனா எதிர்ப்பு தெரிவிக்க கூட ஒருத்தரும் இல்லை

    ஈழ தமிழர்களுக்காக அரசியல் வியாதிகளை எதிர்பார்பது யாருடைய தவறு..?

    ReplyDelete
  16. DMK, PMK, VC and ADMK are not truthful in the Tamil Ellam people support. They are all cheating tamil people. Looks like only Vaiko is truthful in his voice and political stand on this. At least he should win and go to parliment to talk for Tamil.

    ReplyDelete
  17. @ குசும்பன்

    // வெறும் படம் மட்டும் ஏன்???//

    ஹா ஹா அதான் கார்ட்டூன் போட குசும்பன் இருக்கறே

    அதான படம் காட்டுறோம்ல :-)

    தலைவா என்னோட 'தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி" இந்த இடுக்கை நிறைய பேற போய் சேரனும் அதான் இந்த பதிவு
    இப்போ தமிழ்மண்த்தில் இது கூட அதுவும் தெரியும்
    நாறோட பூவும் முதல் முறையா மணக்கும்

    ReplyDelete
  18. வித்யா said...

    நம்மாளுங்கள சொல்லுங்க. இந்த தேர்தலில் எத்தனை பேர் வோட்டு போடப் போறாங்க? அப்படியே போட்டாலும் அது 2000 ரூபாய்க்கும், மூக்குத்திக்கும், கறி சோறுக்கும் தானே இருக்கும். நாளைக்கு பேரணியாம். எத்தனை ஊர்வலம், எத்தனை தீக்குளிப்புகள்? எல்லாம் ஈழத்துல இருக்கிறவனெல்லாம் செத்தப்புறம் தான் நிற்கும்.

    unmai

    ReplyDelete
  19. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவேண்டும் என்று எல்லா கட்சிகளும்(???), மக்களும் போராடினாங்க அப்ப மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னாத்த செஞ்சாங்க இவங்க?

    onnum seyyamatanga

    ReplyDelete
  20. ♥ தூயா ♥ Thooya ♥ said...

    எப்போது எமக்கு விடிவோ!

    kandipaga oru naal vidiyum aanal eppo nu than solla theriyalai

    ReplyDelete
  21. தவறு அது யார் செய்து இருந்தாலும்.

    சரவண், நம்ம அரசியல் தலைவர்கள் பற்றி தெரியாதா? இப்போதைய அரசியல் நிலைமைய நினைத்தால் தலைய சுத்துது.. என்ன நடக்கபோகுதோ போங்க.. எல்லாம் நம்ம கைய விட்டு போன மாதிரி இருக்கு... :((

    ReplyDelete
  22. அரசியல் பத்தி பேச வந்த வித்யா, தூயா, கவிதா எல்லாருக்கும் என் வந்தனம்!

    குசும்பன் கருத்துகளுக்கு ஒத்து போகிறேன்!

    ReplyDelete
  23. வருடங்கள் இருப்பத்தைந்து கடந்தாலும் இன்னமும் தன் இன உணர்வோடு ஒன்று கூடி எதிர்க்கும் சீக்கியர்களின் நிலையையும் நேற்று நடந்ததை இன்று மறந்து விட்டு நாளை யாருக்கு எப்படி காவடி தூக்கலாம் என்று யோசிக்கும் நம் இனத்தின் இழி நிலையையும் ஒப்பிட்டு பார்க்கையில் சீக்கியர்களின் உணர்வுகள் உசத்தி தாங்க குசும்பரே.

    ReplyDelete
  24. அதே மாதிரி இந்நேரம் வேறு ஒரு மாநில அமைச்சர் மீது ஒரு தமிழன் செருப்பு வீசி இருந்தா என்னா நடந்து இருக்கும்?


    என்ன உங்களுக்கு பதிவு போட இன்னொரு மேட்டர் கிடைச்சிருக்கும்

    ReplyDelete
  25. சாணியை அள்ளி எறிஞ்சாலும் திருந்தாத ஜென்மங்களை செருப்பெறிஞ்சு திருத்த முடியுமா?

    ReplyDelete
  26. When Tamil People are going to recognise the true leader of them then only these problems will atleast start getting international attention. Tamil people vote only for Hospital Drama Rascals and their heirs who are no 1 rogues and also for the backboneless congressmen. Some will vote for PMK, Poor people vote for ADMK but nobody is going to vote for true leaders. When they try to think and vote then only these problems can get international attention and get solved.We have to get ourselves educated to distinguish between political rascals and true leaders.
    I agree with SRINI's comments on this. Thiruppathi

    ReplyDelete