Thursday, April 2, 2009

உலக புத்தகங்கள், உலக படங்களுக்கு விமர்சனம் எழுதுவது எப்படி???

புத்தகங்கள் பற்றி ,திரைப்படம் பற்றி எழுதி எல்லோரும் உங்களை திரும்பி பார்க்கவைக்கணும் அட இவனும், என்ன என்னமோ தெரிஞ்சு வெச்சு இருக்கானே என்று பல நினைக்கணுமா கவலைய விடுங்க...! சூப்பர் சூப்பர் ஆலோசனைகள் கை வசம் இருக்கு.


முதலில் நீங்க புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதை மற்றவங்களுக்கு காட்டனும் அதுக்கு முதல்ல பதிவர்கள் சந்திப்பின் பொழுது சும்மா ’தேமே’ன்னு பராக்கு பார்த்துக்கிட்டு இருக்க கூடாது! அவுங்க பேசும் பொழுது அப்ப அப்ப குறுக்க பூந்து இந்த ஜெயமோகன் எழுதிய புத்தகத்தில் பல ஓட்டைகள் இருக்கு! என்னத்த பெருசா எழுதுறார் முன்ன மாதிரி எழுதறது இல்லை! என்று பீட்டரை எடுத்துவுடணும். சில விசம ஆட்கள் அருகில் இருந்தால், ஏன் கரையான் அரிச்சு ஓட்டை விழுந்துட்டுதா..? என்று கேட்க வாய்ப்புக்கள் இருப்பதால், கொஞ்சம் உஷாராக இருக்கணும்.

அவர் புத்தகத்தை இதுவரை படிக்கவில்லை என்றாலும்,கூட பல புத்தங்கள் படிச்சதாக காட்டிக்கணும். கூடவே, அட்லீஸ்ட் லெண்டிங் லைப்ரரியிலாவது இரண்டு மூன்று புத்தகங்களை எடுத்துக்கிட்டு போய் கையில வெச்சுக்கணும், இப்பதான் கோணங்கியோட பிதிரா புத்தகம் படிச்சுக்கிட்டு இருக்கேன் என்னாமா எழுதி இருக்கிறார் என்று சொல்லிக்கலாம் ஆனால் அந்த புத்தகத்தின் அட்டையை மட்டும் புத்தக கண்காட்சியில் பார்த்தது என்ற ரகசியம் வெளியே தெரியகூடாது.

அடுத்து பதிவு எழுதும் பொழுது பதிவு எருமைநாயக்கன் பட்டியை பற்றியதாகவே இருந்தாலும், அதில் இலக்கியவாதிகள் சொன்னது அல்லது, அவர்களை மேற்கோள் காட்டி எழுதலாம். எடுத்துக்காட்டாக எருமைநாயக்கன் பட்டியில் வளைந்து நெளிந்து ஓடும் ஆற்றை கடப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல! சாருவின் ஜீரோ டிகிரி போன்றது என்று சொல்லணும். ஆக நீங்க ”ஜீரோ டிகிரி” படிச்சாச்சுன்னு என்று மத்தவங்களுக்கு சொல்லியாச்சு..!விமர்சனம் எழுதும் புத்தகம் குறைந்தது குட்டி தலையனை சைஸ் உள்ள புத்தகாமக இருக்கவேண்டும் அதுக்காக லிப்கோ டிக்ஸ்னரிக்கு எல்லாம் விமர்சனம் எழுதலாமா என்று கேட்பவராக இருந்தால் நீங்கள் என் தோழரே!

பெரும்பாலும் இலக்கிய புத்தங்கள் பெயர்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் அதுபோல் உங்கள் பெயரையே ஆங்கிலத்தில் எழுத பிட் அடிப்பவராக இருந்தாலும் ரெண்டு மூன்று ஆங்கில புத்தங்கள் பெயர்கள் தெரிந்துவைத்துக்கொள்ளுங்க அப்ப அப்ப பெயரை ஊடால ஊடால போட்டுவையுங்க.

சரி இனி விமர்சனம் எழும் பொழுது ஒரு பக்கத்தை படிக்க ஒருநாள் ஆன கதைய வெளியே சொல்லாமல் முழு புத்தகத்தையும் ஒரே நாளில் படிச்சு முடிச்சாச்சுகீழேவைக்க முடியாத அளவுக்கு சுவாரய்ஸம் என்று சொல்லுங்க. புத்தகத்தின் அட்டைய பெருசா படம் புடிச்சு பதிவில் போட்டால் பாதி இடம் அடைத்துவிடும்மீதி நாலுவரிக்கு எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம் திட்டி எழுதினால் உங்களைபோல் ஒருவர் அந்த புத்தகம் படிச்சவர் இருந்தால் எப்படி திட்டலாம் என்று சண்டைக்கு வந்துவிடுவார் ஆகையால் புத்தகம் அருமை ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் என்று புகழ்ந்து எழுதிடுங்க. அது மிகவும் பாதுகாப்பானது.மேலும் பல புத்தங்கள் பெயர் தெரிய அமேசான்.காம் போனால் அங்கு புத்தகத்தின் அட்டைபடம், ஆசிரியர் பெயர், எத்தனை பக்கம் என்று அனைத்து விவரங்களும் இருக்கும் இது போதாதா உங்களுக்கு அடுத்த புத்தகப்பதிவு எழுத?

அடுத்து உலகதிரைப்படம் பற்றி எழுதுவது எப்படி?

உலகதிரைப்படம் என்றால் என்னான்னு தெரியாதா? வெளியே சொல்லாதீங்க அதை கண்டுபிடிக்க வழி நான் சொல்லித்தருகிறேன்

வீடியோ கடைக்கு போங்க அவனிடம் இதுவரை யாரும் பார்க்காத படம்ஏதும் இருக்கா என்று கேளுங்க அப்படி இதுவரை இருவர் மட்டுமே பார்த்த படம் ஒன்னு இருக்கு என்று தமிழ் வில்லு சீடிய கொடுத்தா வாங்காதீங்க உலகபடம் என்பது தமிழில் இருக்காது இது அடிப்படை பாடம்.

உலகப்படம் அல்லது உலகதரத்தில் இதுவரை தமிழில் வந்தது இல்லை என்ற கருத்தில் தாங்கள் பிடிவாதமாக இருக்கவேண்டும்.

வீடியோ கடை ஆரம்பித்த பொழுது வாங்கிய பழய ஆங்கில படம் ஏதும் இருக்கான்னு கேளுங்க,அவரும் ஒரு கருப்பு வெள்ளை படத்தை எடுத்துக்கொடுப்பார் அதன் ரிலிஸ் தேதியை பாருங்கள் அது உங்களை விட வயது மூத்ததாக இருக்கவேண்டும் இது இரண்டாவது விதி.

என்னது தேதி சில சீடியில் ரிலீஸ் தேதி இருக்காதா? சரி கவலைய விடுங்க சீடி கவரில் இருக்கும் படத்தில் அவர்கள் போட்டு இருக்கும் உடை,கார் ஆகியவை தாங்கள் பார்த்தது இல்லையா?ஹீரோயின் தொப்பியில் ஒரு கோழி இறகு இருக்கா? அதெல்லாம் உலக திரைப்படங்கள்தான்.

(மேலே உள்ளே படம் ஒரு சாம்பிள்,இது போல் கவர் இருக்கட்டும்)

அப்படி ஏதும் ஒன்னு இரண்டு தேறும் அதை எடுத்துவந்து போட்டு பாருங்கள் முழுவதும் பார்க்க முடியாது இருந்தாலும், ஓட்டி ஓட்டி பார்த்துவிடுங்கள் .

பார்த்துவிட்டு முக்கியமாக நீங்கள் எடுக்கவேண்டிய குறிப்புகள்
1)நடிகர், நடிகையின் பெயர்

2) இயக்குநரின் பெயர்

3) கேமிரா மேன்


பேருக்கு எல்லாம் தமிழில் சப்டைட்டில் வராது! எழுத்துக்கூட்டியாச்சும் அவுங்க பெயரை படிச்சு எழுதி வெச்சுக்குங்க.இல்லை லேப்டாப்பி படம் பார்த்தால் பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து அந்த நடிகரின் பெயரை googleல் போட்டு தேடி அவர் நடித்த மேலும் சில படங்களின் பெயர்களை தெரிந்துவைத்து இருப்பது நலம்.

இனி எப்படி பதிவு எழுதுவது..?
தாங்கள் படம் பார்த்த சூழலை விவரிப்பது முக்கியம்! மாலை நேரத்தில் பார்த்தேன் என்று சொல்லிவிடக்கூடாது, ஆதவன் கொஞ்சம் கொஞ்சமாக உலக திரைப்படத்தை பார்க்கும் ஆவல் இன்றி மறைய தொடங்கினான்; ஆதவனுக்கு கொடுத்துவைத்தது அவ்ளோதான், அமைதியான சூழல் இருக்கும், தனிமையில் இருக்கும் பொழுது எல்லாம் என் தனிமையை போக்குவது ********** இயக்குநரின் படங்கள் தான். அன்று அப்படிதான் பல இடங்களில் தேடி வாங்கி வந்த *********** படம் என் தனிமையை போக்கியது. என்று ஆரம்பிச்சு படத்தில் தாங்கள் ஓட்டி ஓட்டி பார்த்த சீன்களை நினைவு வைத்து நான்கு பத்திகள் எழுதுங்கள், பின் சாதாரண பிலிம் போட்ட கேமிராவிலேயே போட்டோ புடிக்க தெரியாத நீங்க அந்த படத்தில் அந்த ஷாட்டுக்கு வைத்த கேமிரா ஆங்கிள் சரி இல்லை அதை அப்படியே 23 டிகிரி சாச்சு வைச்சு எடுத்து இருந்தா அந்த காட்சி சிறப்பா வந்திருக்கும் என்று சொல்லணும்.

அதுபோல, மாலை 6 மணிக்கு மேல் எதிரே லாரி வந்தால் இரண்டு பைக்தான் வருகிறது என்று குறுக்கே பூந்து போய்விடலாம் என்று நினைக்கும் அளவுக்குபார்வை சக்தி இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அந்த படத்தில் லைட்டிங் தான் ஹீரோ என்று அடிச்சு விடுங்க.

அடுத்து முக்கியமாக நீங்கள் தொடவேண்டிய டாப்பிக் இசை, குழாய் ஸ்பீக்கர் யாராவது அலறினாலும் என்னாது தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாமாதிரியாரோ பேசுகிறார்கள் என்று கேட்கும் அளவுக்கு உங்கள் கேட்கும் திறனும், என்னமா வீனை வாசிக்கிரார் குன்னங்குடி வைதியநாதன் என்றும் சொல்லும்அளவுக்கு இசை ஞானம் உள்ளவரா அப்படியே அதை எல்லாம் ஒரு குழிக்குள் போட்டு மூடுங்க, படத்தில் பட இடங்களில் இசைதான் ஆதிக்கம் செலுத்தி இருக்குபடத்தின் பின்னனி இசை படத்தின் முதுகெலும்பு, கால் எலும்பு என்று எல்லாம் சொல்லுங்க.

சில பல கலர் டோன்களின் பெயர் தெரிஞ்சு வைச்சு இருப்பது நல்லது! ஆங்காங்கே படம் முழுவதும் வரும் கிரீன் டோன் பக்காவா இருக்கு! அப்படின்னு எடுத்துவிடுங்க. இப்படி எழுதினா தாங்கள் பாதி உலக பதிவர் ஆகிட்டீங்க...!அடுத்து ஈரான் மொழி படம் ஜப்பான் மொழி படம் என்று தங்கள் எல்லையை விரிவடைய செய்யுங்கள்.

பின்நவீனத்துவ உலக படத்துக்கும் விமர்சனம் எழுதிட்டால் தாங்கள் முழுமையான உலகபதிவர். பின்நவீனத்துவ உலக படத்துக்கு விமர்சனம் எழுதுவது ரொம்ப சிம்பிள் மேலே சொன்ன அதே உலகத்திரைப்பட டெக்னிக் ஆனா படத்தில் பேச்சு இருக்காது,இதை நீங்க ஓட்டி ஓட்டிபார்க்க அவசியம் இருக்காது சிலசமயம் திரும்ப திரும்ப அந்த “சீனை” பார்க்கும் படி இருக்கும் அதிகமாக செக்ஸ் காட்சிகள் இருக்கும். அதுவும் முறையற்ற காட்சிகளாக இருக்கும் அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுங்க, படம் பார்க்கும் பொழுது துணைக்கு பியர் போத்தல்கள் இருப்பது அவசியம்.(நன்றி அய்யனார்).
பியர் போத்தல்களோடு இந்த படங்களை பார்ப்பது என்பது வரம் என்று எழுங்க. தலைப்புகளை எப்பொழுதும் கொஞ்சம் டெரராகவே வையுங்க...!

டிஸ்கி: நாலுபேர் மதிக்கனும் என்றால் எதுவுமே தப்பு இல்லை!

66 comments:

  1. ஏன் ஏன் கொலை வெறி ?

    ReplyDelete
  2. பத்த வெச்சிட்டியே பரட்டை..!

    ReplyDelete
  3. இதுதான் இந்த வாரத்துக்கான நட்சத்திரப்பதிவு.

    உங்க ஸ்டைல்லே அப்படியே வந்திருக்கு

    கலக்கீட்டிங்க

    ReplyDelete
  4. டெரரா வைக்க சில உதாரணங்கள் கொடுத்திருக்கலாம். 'துரத்தும் பூதங்களின் அலைவரிசை' சரியா வருமா?

    இந்த காஸாப்ளான்கா படம் எங்கேய்யா புடிச்சே. நான் எங்கெங்கேயோ தேடிப்பார்த்தும் கிடைக்கவேயில்லை. அப்படியே போட்டு வைங்க, வந்து வாங்கிக்கரேன்.

    எப்படி? இந்த கருத்துரையை படிப்பவர்கள் நாம உலக புத்தகங்கள் உலகப்படங்கள் பற்றி தெரிந்தவர்னு நம்பிடுவாங்களான்னா?. :))

    ReplyDelete
  5. ச்சான்ஸே இல்ல குசும்பா.

    காமெடி சரவெடி!

    கட் பேஸ்ட் பண்ணி வெச்சுட்டு ஒவ்வொருத்தரும் படிக்க வேண்டிய அடிப்படைத் தத்துவங்கள் அடங்கிய...

    சரி... நான் அப்பீட்டு..

    ReplyDelete
  6. இது யாரை மனதில் வைத்து எழுதியது என்பது புரிகிறது. அவர் விமர்சனங்களை ஒன்றும் விடாமல் வாசிக்கிறீர்கள். மிக நல்ல அவதானிப்பு.
    // சாருவின் ஜீரோ டிகிரி போன்றது என்று சொல்லணும். ஆக நீங்க ”ஜீரோ டிகிரி” படிச்சாச்சுன்னு என்று மத்தவங்களுக்கு சொல்லியாச்சு..!//
    //மாலை நேரத்தில் பார்த்தேன் என்று சொல்லிவிடக்கூடாது, ஆதவன் கொஞ்சம் கொஞ்சமாக உலக திரைப்படத்தை பார்க்கும் ஆவல் இன்றி மறைய தொடங்கினான்; ஆதவனுக்கு கொடுத்துவைத்தது அவ்ளோதான்//

    இந்த இடம் மிக அருமை.
    ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  7. ஆதவனுக்குத் தெரியக் கூடாது என மறைத்து ஒரு மதிய வேளையில் நான் மட்டும் பார்த்தது ”காஸாபிளான்கா”. ஹீரோ எண்ட்ரி சீனில் கேமரா இன்னும் 23 டிகிரி சாஞ்சு இருந்தா சூப்பரா இருக்கும். படத்தின் மெயின் ஹீரோவே லைட்டிங்தான். பிண்ணனி இசைதான் படத்தின் முன்னனியில் உள்ளது.

    **********


    குசும்பு அண்ணே மேல விமர்சன்ம் படிச்சீல்ல. நா பாஸ் மார்க்காண்ணே??

    ReplyDelete
  8. இதுக்குத்தான் பக்கத்து வீட்டுக்காரன பந்தியில சேர்க்கக்கூடாதுங்கிறது.

    ReplyDelete
  9. ஆமா!ஈரானிய திரைப்படங்கள் ன்னு தம்பி உமா கதிர்ன்னு ஒருத்தரு அந்தப் பக்கம் சுத்திகிட்டு இருந்தாரு.இருக்காரா?கடிதாசி போட்டும் பதிலக் காணோம்!கணக்கம்பட்டி போய்ட்டாரோ?

    ReplyDelete
  10. ரொம்ப பெருசா இருக்கு.. படிச்சிடுதான் பின்னூட்டம் போடனுமா?

    ReplyDelete
  11. சே..சே.. இது அவரை கிண்டல் பண்றதா இருக்காது... அவரே வந்து பின்னனூட்டம் போட்டுட்டாரே..

    ஆனாலும் அவருதானே கடைசியா கருப்பு வெள்ளை படத்த பத்தி எழுதுனாரு...அப்ப அவரத்தானோ???

    ReplyDelete
  12. //பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருவாரூர் மாவட்டத்தில்
    இருக்கும் ஒரு சிறிய கிராமம் திப்பணம்பேட்டை,
    கல்லூரி படிப்பு தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியில். //

    அடடே நம்ம மாவட்டம்
    நல்லா இருங்கய்யா

    ReplyDelete
  13. @கோவி.கண்ணன் எங்கே எங்கே?

    @உண்மைத் தமிழன் அண்ணாச்சி எப்பொழுதும் போல் இதுவும் ஒரு ஐடியா பதிவுதான் அண்ணாச்சி

    @விஜய் நன்றி

    @ஸ்ரீமதி நன்றி

    @நன்றி முரளிகண்ணன்

    @சுல்தான் பாய் நீங்களும் விரைவில் பின்நவீனத்துவ உலகபதிவராக வாழ்த்துக்கள்

    @விக்கி நன்றி

    @பரிசல் நன்றி

    @இராம் நன்றி

    ReplyDelete
  14. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    இது யாரை மனதில் வைத்து எழுதியது என்பது புரிகிறது. அவர் விமர்சனங்களை ஒன்றும் விடாமல் வாசிக்கிறீர்கள். மிக நல்ல அவதானிப்பு.//

    அவ்வ்வ்வ் யாரையும் தாக்கி எழுதியது அல்ல,கற்பனையே, நீங்கள் சொல்லும் அவர் துனை இயக்குநர் என்பதால் அவர் கிடையாது. அதுபோல் வேறுயாரும் கிடையாது!

    (அவர அவசரமாக பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல வெச்சீட்டிங்களே)

    ReplyDelete
  15. //அடுத்து உலகதிரைப்படம் பற்றி எழுதுவது எப்படி?

    உலகதிரைப்படம் என்றால் என்னான்னு தெரியாதா? வெளியே சொல்லாதீங்க அதை கண்டுபிடிக்க வழி நான் சொல்லித்தருகிறேன்

    வீடியோ கடைக்கு போங்க அவனிடம் இதுவரை யாரும் பார்க்காத படம்ஏதும் இருக்கா என்று கேளுங்க அப்படி இதுவரை இருவர் மட்டுமே பார்த்த படம் ஒன்னு இருக்கு என்று தமிழ் வில்லு சீடிய கொடுத்தா வாங்காதீங்க உலகபடம் என்பது தமிழில் இருக்காது இது அடிப்படை பாடம்.
    //

    இதெல்லாம் தேவையே இல்லண்ணே !!!!

    வோர்ல்ட் மூவிஸ்னு ஒரு சேன‌ல் வ‌ருது...அத‌ ம‌ட்டும் பார்த்தா போதும்,

    இங்க‌ நிறைய‌ பேரு அப்ப‌டி தான் உல‌க‌ சினிமா விம‌ர்ச‌ன‌ம் எழுத‌றாங்க‌..

    ReplyDelete
  16. அப்துல்லா அண்ணாச்சி நீங்க எப்பவோ உலகபதிவர் ஆகிட்டிங்க இப்ப என்னா இதுமாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு!

    ***********************
    ராஜ நடராஜன் தம்மி இப்பொழுது இருப்பது சென்னையில், அவர் ஏன் ஈரானிய படங்கள் தேடி அலைந்தார் என்று சொல்லி இருக்கிறாரா?
    ************************
    அறிவிலி ஒரு முடிவோடதான் வந்து இருக்கீங்க போல இந்த பதிவு அவர் கருப்பு வெள்ளை படம் பத்தி போடும் முன்பே எழுதியது, ஸ்டார் வாரம் அழைப்பு வந்ததும் எழுதி வைத்தது.
    *************************
    நன்றி G3

    *************************

    நன்றி கூத்தாநல்லூரான் உங்க ஊருக்கு பக்கம் தான்:)
    ************************
    நன்றி மணிகண்டன்

    ReplyDelete
  17. உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லாமப் போயிட்டுருக்கு...

    :)))))))))))))))))))))))))))))))

    நீங்க இப்பிடியெல்லாம் எழுதினாலும் நான் "ஒலக்க" புத்தகம் ஜினிமாக்கெல்லாம் விமர்சனம் எழுதறதா நிறுத்தவே மாட்டேன்....

    பாத்துருவோம்... உங்களுக்காச்சு... எனக்காச்சு... :)))))))))

    ReplyDelete
  18. //ஆதவன் கொஞ்சம் கொஞ்சமாக உலக திரைப்படத்தை பார்க்கும் ஆவல் இன்றி மறைய தொடங்கினான்; ஆதவனுக்கு கொடுத்துவைத்தது அவ்ளோதான், //

    என் பெயரை உபயோகப்படுத்தி பதிவை ஹிட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குசும்பரே....எச்சரிக்கிறேன்

    கலக்கல் சரவெடி போஸ்ட் :)))

    ReplyDelete
  19. உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லாமப் போயிட்டுருக்கு...
    //


    :)))

    :)))

    ReplyDelete
  20. அட

    இம்புட்டுதானா!

    நானும் டிரை பண்ணப்போறேன் பாஸ் :))))))))))))

    ReplyDelete
  21. சூப்பர்
    நட்சத்திர குசும்பு :)

    ReplyDelete
  22. ஏன் மாப்பி இப்டி ரகசியத்தையெல்லாம் வெளிய சொல்லிட்டன்னா காம்படீசன் அதிகமாயிரும்ல? ஆளாளுக்கு உலகப் பட விமர்சனம், புத்தக விமர்சனம்னு எழுத ஆரம்பிச்சுருவாய்ங்கள்ல.

    ReplyDelete
  23. நான் ஒரு தடவை ட்ரை பண்ணி பார்டர்ல பாஸ் பண்ணினேன்!

    ReplyDelete
  24. இவ்வளவு சரக்கு பைக்குள் இருந்தும் இதுவரை ஒரு படத்துக்கும் (எனக்கு தெரிந்து) விமர்சனம் எழுதாததை வன்மையாக கண்டிக்கிறேன். :-)

    ReplyDelete
  25. //அதுபோல் உங்கள் பெயரையே ஆங்கிலத்தில் எழுத பிட் அடிப்பவராக இருந்தாலும் ரெண்டு மூன்று ஆங்கில புத்தங்கள் பெயர்கள் தெரிந்துவைத்துக்கொள்ளுங்க அப்ப அப்ப பெயரை ஊடால ஊடால போட்டுவையுங்க.//

    :):):):)

    ReplyDelete
  26. ஓஹோ... அவ்வளவுதான் மேட்டரா?

    நீங்க யாரையெல்லாம் குறிவச்சு தாக்கியிருக்கீங்கன்னு புரியுது :)

    ReplyDelete
  27. nalla erukku. unga stylea alaga idea koduthu erukkinga.
    arumai arumai..

    ReplyDelete
  28. ஒரு குற்ற மனப்பான்மை ஏற்படுறது மாதிரி பண்ணிர்ரீங்களே

    ReplyDelete
  29. சான்ஸே இல்லை கலக்கீட்டீங்க,இந்த பதிவை சாரு படிச்சா இனி ஜென்மத்துக்கும் உலக படம் பத்தி வாயே திறக்க மாட்டாரு.

    உங்க எழுத்து நடை ஈரான் நாட்டு எழுத்தாளர் ஆல்பட் ரிக்காட்ரா ரோட்ரிக்கையும் உகாண்டா இலக்கியவாதி பெர்முன் காண்ட்லாவோக்கியான் போலவே இருக்கிறது.வாழ்த்துகள்..

    ReplyDelete
  30. சூப்பர்.இனிமே நானும் படம் பாக்கமலே விமர்சனம் எழுதறேன்.

    ReplyDelete
  31. \\அதுக்காக லிப்கோ டிக்ஸ்னரிக்கு எல்லாம் விமர்சனம் எழுதலாமா என்று கேட்பவராக இருந்தால் நீங்கள் என் தோழரே! \\
    ஹிஹிஹி

    ReplyDelete
  32. தல.. நீங்க என்னோட விமர்சனங்களை படிச்சி பாருங்க.. இன்னும் நிறைய ஐடியாக்கள் கிடைக்கும்.

    ----

    இனிமே எழுதறதா வேணாமான்னு ஒரு யோசனையே வந்துச்சி...

    சான்சே இல்ல.. கலக்கல்.! :-) :-)

    ReplyDelete
  33. இனி நாங்களும் அகிரா குரோவாசாவா, சார்லஸ் டிக்கன்ஸ் என்று எடுத்து விடுவோமுள்ள.

    ReplyDelete
  34. இனி நாங்களும் அகிரா குரோவாசாவா, சார்லஸ் டிக்கன்ஸ் என்று எடுத்து விடுவோமுள்ள.

    ReplyDelete
  35. //அதுக்காக லிப்கோ டிக்ஸ்னரிக்கு எல்லாம் விமர்சனம் எழுதலாமா என்று கேட்பவராக இருந்தால் நீங்கள் என் தோழரே!//

    அப்ப telephone directory க்கு எழுதலாமா தோழரே.....

    :)))))

    ReplyDelete
  36. //என்னமா வீனை வாசிக்கிரார் குன்னங்குடி வைதியநாதன் என்றும் சொல்லும்அளவுக்கு இசை ஞானம் உள்ளவரா //

    அப்ப அவர் வாசிக்கறது வீனை இல்லையா........????

    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    :))))))

    ReplyDelete
  37. டேஞ்சரஸ் பெல்லோ உம்ம கிட்டே கொஞ்சம் கேர்புள்ளாத்தான் இருக்கனும்...

    ReplyDelete
  38. தல அப்படியே பதிவ படிக்காமையே படிச்சமாதிரி கமண்டு எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க.

    ReplyDelete
  39. /
    நாலுபேர் மதிக்கனும் என்றால் எதுவுமே தப்பு இல்லை!
    /

    ரைட்டு!

    ReplyDelete
  40. /
    தலைப்புகளை எப்பொழுதும் கொஞ்சம் டெரராகவே வையுங்க.
    /

    :))))))))))

    ReplyDelete
  41. ////வீடியோ கடைக்கு போங்க அவனிடம் இதுவரை யாரும் பார்க்காத படம்ஏதும் இருக்கா என்று கேளுங்க அப்படி இதுவரை இருவர் மட்டுமே பார்த்த படம் ஒன்னு இருக்கு என்று தமிழ் வில்லு சீடிய கொடுத்தா வாங்காதீங்க உலகபடம் என்பது தமிழில் இருக்காது இது அடிப்படை பாடம்/////


    யாரந்த இரண்டு துரதிஷ்டசாலிகள்? :-)

    ReplyDelete
  42. \\டிஸ்கி: நாலுபேர் மதிக்கனும் என்றால் எதுவுமே தப்பு இல்லை!\\

    இது உங்களுக்கும் சேர்த்து தானே அண்ணே ;))))

    ReplyDelete
  43. வலிக்காத சாட்டையடி! அருமையான கிண்டல், அழகான எழுத்துநடை. கலக்கிட்டீங்க குசும்பன் :)

    ReplyDelete
  44. adada ... enna idhu ... ippadi kalandhu katti adikiriye samy ... rasicchu padichen :))))

    ReplyDelete
  45. கூட்டத்தில கட்டுச்சோத்த அவுக்காத

    ReplyDelete
  46. ""எந்த மேட்டரும் இல்லாமல் பதிவெழுதுவது எப்படி"" ..??


    மேலும் விபரங்களுக்கு அணுகவும்: குசும்பன்.



    கலக்கல். வாழ்த்துகள்.

    ReplyDelete
  47. யூத் விகடன். குட் பிளாக் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ளது.


    வாழ்த்துகள்.

    ReplyDelete
  48. அண்ணே கொஞ்ச நேரம் சிரிச்சுக்கிட்டே இருந்தேன் வெள்ளிக் கிழமைங்கிறதால வேலை செய்யுற இடத்து ஒருத்தரும் இல்ல அதனால தப்பிச்சேன்...:)

    ReplyDelete
  49. //சும்மா ’தேமே’ன்னு பராக்கு பார்த்துக்கிட்டு இருக்க கூடாது! //

    ம்ம்..இப்படியெல்லாம் பராக்கு பாக்க வேண்டி இருக்கேன்னு நான் அந்த பக்கமே போறது இல்ல.. :(

    ReplyDelete
  50. சூப்பர்யா.... வயிறு வலிக்க குடும்பத்துடன் வாசித்து சிரித்த பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. நன்றி அ.மு.செய்யது அப்படியா சேதி? இருக்கட்டும் இருக்கட்டும்

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி மகேஷ் யாருங்க நிறுத்த சொன்னா எல்லோரும் அப்படி
    எழுததானே ஐடியா கொடுக்கிறேன்!

    நன்றி ஆதவா, சூர்யா கூட உங்க பெயரை பயன் படுத்தி
    ஹிட் ஆகிடலாம் என்று ஒரு படம் எடுக்கிறார்.

    நன்றி வெடிகுண்டு

    நன்றி ஆயில்யன்

    நன்றி பாண்டி பரணி

    நன்றி சோசப்பு எல்லோரும் நல்லா இருக்கனும் அதுதான் நம்ம ஆசை! எழுதட்டும் எல்லோரு எழுத்தட்டும்:)

    நன்றி அபி அப்பா

    நன்றி வடுவூர் குமார் ஆனா பாருங்க நமக்கு எப்பொழுது தெரியாத மேட்டரை தொடுவது கிடையாது! ஆலோசனை எல்லாம்
    மற்றவர்களுக்கு மட்டும் தான் என்பது உங்களுக்கு தெரியாதா!

    நன்றி மஞ்சூரார்

    நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்ஜீ நீங்களும் உங்க பங்குக்கு பத்த வைக்கிறீங்களா?:)

    நன்றி சுந்தர்

    நன்றி மகா

    நன்றி ச்சின்னப் பையன்

    நன்றி தருமி ஐயா

    நன்றி பிளீச்சிங்பவுடர் அவ்வ்வ்வ்வ்!

    நன்றி குடுகுடுப்பை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க படத்தை பார்க்கனும் ஆனா டெக்னிக்கலா ஒன்னும் தெரியாமலேயே விமர்சனம் செய்யனும்!

    நன்றி பட்டாம்பூச்சி

    நன்றி ஹாலிவுட் பாலா நீங்க எல்லாம் பெரும் தலைகள் நீங்கள் எல்லாம் இந்த வட்டத்தில் வரமாட்டீங்க!

    நன்றி மரைக்காயர்

    நன்றி கதிர் குட் கொஸ்டின் நீங்கள் கண்டிப்பாக என் தோழர்தான்!

    நன்றி கீழை ராஸா

    நன்றி கார்த்திக் அதுபோல முன்பே எழுதியாச்சு:)

    நன்றி மங்களூர் சிவா

    நன்றி சம்பத் நம்ம ஆட்கள்தான்:)

    நன்றி கோபி -ஆமாம்

    நன்றி ஓவியா

    நன்றி வளர்மதி @ ரொம்ப நாட்களுக்கு பிறகு!

    நன்றி தஞ்சை ஜெமினி

    நன்றி வண்ணத்துப்பூச்சியார், அதைதானே நான் தினம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்
    அந்த பதிவை எல்லாம் படிச்சாலே போதும்:)

    நன்றி சிவகுமார்

    நன்றி தமிழன் கறுப்பி

    நன்றி கவிதா

    நன்றி சே.வேங்கடசுப்ரமணியன்

    ReplyDelete
  52. நிஜமாவே சரியான குசும்பு பதிவு.. கலக்கிட்டீங்க..

    ReplyDelete
  53. Kusumbu athihamappa,yarra vachu intha pathivu.You've copied my experience-rendu bikenu lorry lightukkulla vandiya vittan.

    ReplyDelete
  54. அன்புள்ள ஆசிரியர்க்கு
    நான் ஒரு புதிய வலைப்பதிவை உருவாக்கி எழுதிவருகிறேன்... www.thiru-rationalism.blogspot.com தங்களின் பார்வையிட்டு...தங்களின் விமர்சனங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  55. சர்வ நாசம்... தாறு மாறு தக்காளி சோறு! :):)

    ReplyDelete