Monday, March 30, 2009

ஜாலி டைம்--சும்மா ஒரு டெஸ்ட்!

எல்லா கேள்விகளுக்கும் விடையளி 10 x 1= 10

1) தமிழ்மணம் ஸ்டார் ஆக என்ன செய்யவவேண்டும்?

அ) எனக்கு தெரியாது

ஆ) உனக்கு தெரியாது

இ) யாருக்கும் தெரியாது

ஈ) தமிழ்மணத்துக்கே தெரியாது



2) யார் பிரபல பதிவர்கள்?

அ) யாருக்கும் பின்னூட்டம் போடாதவர்கள்

ஆ) ஸ்மைலி மட்டும் போடுபவர்கள்

இ) பின்னூட்டத்துக்கு பதில் சொல்லாதவர்கள்

ஈ) இவை அனைத்தும்

3) எது பின்நவீனத்துவம்?

அ) படித்தால் பீதியாகும்

ஆ) படிக்கும்பொழுதே பேதியாகும்

இ) அடுத்தமுறை அங்கு போக பயம் வரும்

ஈ) இவை அனைத்தும்

4)மூன்று தமிழ்மண விருதுகள் வாங்கியவர்
அ)டாக்டர்.புருனோ

ஆ)டாக்டர்.புருஎஸ்

இ)டாக்டர்.நெஸ்கபே

ஈ)டாக்டர்.நரசூஸ்நோ!

5)குறுந்தொகைக்கு விளக்கம் கொடுப்பவர்
அ) ஏர்டெல்சிம்

ஆ) ஏர்செல்சிம்

இ)ஓடோபோன்சிம்

ஈ) நர்சிம்

6)அவியல் எழுதி மக்களை அலறவிடுபவர்
அ) ஓடக்காரன்

ஆ) சமையல்காரன்

இ) பரிசல்காரன்

ஈ) கப்பல்காரன்


7) கதம்பம் எழுதி மக்களை கதறவைப்பவர்
)ஏரிகரை சூலன்

ஆ) தென்கரை பாலன்

இ)வடகரைவேலன்

ஈ)யாரும் இல்லை

8) காக்டெயில் எழுதி மக்களை காண்டாக்குபவர்
அ) கார்க்கி

ஆ) சைக்கிள் கீ

இ) பைக் கீ

ஈ)பீரோக்கி


9) சமையல் குறிப்பு பதிவுகள் எழுதி டாக்டர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பவர்

அ) தூயா

ஆ) பாயா

இ)சாயா

ஈ) மோயா


10)சிங்கப்பூர் பயணக்கட்டுரை எழுதியவர்

அ) யுவான் சுவாங்

ஆ)பான் கின் மூன்

இ)புதுகை.அப்துல்லா

ஈ)ஒளரங்கசீப்



பொருத்துக 5 x 1= 5 (பலருக்கும் நெப்போலியன்,விக்கை பொருத்தலாம் ஆனால் மிகச்சரியாக பொருத்தவேண்டும்)

சஞ்சய் காந்தி--- --------அதீதா
நந்து ---------------------நெப்போலியன்
ஆதிமூலகிருஷ்ணன்-- விக்
ஜ்யோவோராம் சுந்தர்--தங்கமணி
வால்பையன்-------------கேமிரா



கோடிட்ட இடங்களை நிரப்புக 3 x 1= 3
1) திரைவிமர்சனம் என்ற பெயரில் முழு திரைக்கதையையும் எழுதுபவர்...................


2) சுஜாதா என்ற ஒரு எழுத்தாளர் நன்றாக கதைகள் எழுதுவார் என்று புத்தக கண்காட்சியின் பொழுது போய் சுஜாதா புத்தகம் வாங்கி விமர்சனம் எழுதியவர்..............பூ


3) மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கும் சொக்க தங்க பதிவர் கு..ம்பன்



சரியா தவறா? 2 x 1= 2
1) சாரு புத்தகவெளியீட்டின் பொழுது கூட்டம் கடைசிவரை கலையாமல் இருந்ததுக்கு காரணம் வெளியில் பெய்த மழை.

2) அனுஜன்யாவை பெண் என்று நினைத்து பலர் காதல் கடிதம் அனுப்பினர்!

அருஞ்சொற்பொருள் தருக 5x1=5
1)கும்மி

2)மொக்கை

3)கவுஜை

4)பின்நவீனத்துவம்

5)பியர் போத்தல்கள்

டிஸ்கி: அதிக மதிப்பெண் வாங்குபவர்களுக்கு இந்த வார முடிவில் ஒரு பரிசு காத்திருக்கிறது! ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே மதிப்பெண் வாங்கி இருந்தால் வெற்றிப்பெற்றவர் சீட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

72 comments:

  1. 9 அ

    பெரும் போராட்டம் வெடிக்கும் சொல்லிப்போட்டேன்

    :)

    ReplyDelete
  2. இதுக்கு அப்பால

    நமக்கு தெல்லீங்கோ ...

    ReplyDelete
  3. 1. ஈ
    2. ஈ
    3. ஈ
    4. அ
    5. ஈ
    6. இ
    7. இ
    8. அ
    9. அ
    10. இ

    சஞ்சய் காந்தி--- ---விக்
    நந்து --------------கேமிரா
    ஆதிமூலகிருஷ்ணன்-- தங்கமணி
    ஜ்யோவோராம் சுந்தர்--அதீதா
    வால்பையன்---------நெப்போலியன்

    1. உண்மைத்தமிழன்
    2. வெண்பூ
    3. யாருன்னு தெரியல

    1. சரி
    2. சரி

    பொருள் எதுவுமே தெர்ல:)

    ReplyDelete
  4. எல்லா கேள்விகளுக்கும் விடையளி:
    1)அ
    2)ஈ
    3)ஈ
    4)அ
    5)ஈ
    6)இ
    7)இ
    8)அ
    9)அ
    10)இ

    பொருத்துக:

    சஞ்சய் காந்தி--- --------விக்
    நந்து ---------------------கேமிரா
    ஆதிமூலகிருஷ்ணன்-- தங்கமணி
    ஜ்யோவோராம் சுந்தர்--------அதீதா
    வால்பையன்-----------நெப்போலியன்

    கோடிட்ட இடங்களை நிரப்புக:
    1)உண்மைத் தமிழன்
    2)வெண்பூ
    3)குசும்பன் (ம்கும்:P)

    சரியா தவறா?
    1)தெரியல போனவங்களதான் கேட்கணும் ;))

    2):)))))))))))))

    அருஞ்சொற்பொருள் தருக:

    1)கும்மி-அப்படின்னா??? :(((

    2)மொக்கை- உங்க பதிவுகள் தான்னு நினைக்கிறேன்... சரியா?? ;))

    3)கவுஜை- தெரியலையே :(((

    4)பின்நவீனத்துவம்- இது தமிழ் வார்த்தை தானா??

    5)பியர் போத்தல்கள்-சத்தியமா புரியல:(((

    டிஸ்கி:இருந்தாலும் இந்த question paper கொஞ்சம் கஷ்டம் தான்.. :(( பார்த்து மார்க் போடுங்க அண்ணா.. எனக்கு பரிசு கிடைச்சா ஆளுக்கு 50-50 ;))

    ReplyDelete
  5. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு... Exam-ல answer பண்ற மாதிரி பண்ணிருக்கேன்... திருத்தி மார்க் மட்டும் வரல இருக்கு அண்ணா உங்களுக்கு.. ;)))

    ReplyDelete
  6. /திரைவிமர்சனம் என்ற பெயரில் முழு திரைக்கதையையும் எழுதுபவர்.................../

    திரைக்கதையே 30 பக்கம்தான் இருக்கும். இவர் எழுதுவது 40 பக்கம் வருமாம் :) அதனால் உண்மைத்தமிழன் என்று இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது :)

    அப்புறம் அது யாருங்க சொக்கத் தங்கப் பதிவர் ??

    ReplyDelete
  7. :)
    நான் பிரபலப்பதிவர் இல்லையப்பா.....

    ReplyDelete
  8. எக்ஸாம் டஃப்பா இருக்கே..ம்ம்

    அலோ.. யாராச்சும் பிட்டு வச்சிருந்தா குடுங்கப்பா..
    புண்ணியமா போவும்.

    ReplyDelete
  9. லேசானா சிரிப்புடன் வாசித்துக்கொண்டே வந்து வெண்பூ மேட்டரில் சிரிப்பை அடக்கமுடியாமல் போய்விட்டது..

    அக்மார்க் குசும்பு பதிவு தல..

    மொதோ கேள்விய கேட்டீங்களே..ரெண்டாவது ரவுண்டு ஸ்டார் வேணாமா?????

    ReplyDelete
  10. எனக்குத் தெரியும் இந்த மாதிரி ஏதாவது வம்பு வளர்த்துவன்னு. நல்லா இரு சரவணா.

    அதெப்படி ஒருத்தர் விடாமக் கலாய்க்கிற?


    தமிழ்மணத்துக்கே தெரியாது, படிக்கும்பொழுதே பேதியாகும், டாக்டர்.நரசூஸ்நோ!, ஏர்டெல்சிம், ஏர்செல்சிம், ஓடோபோன்சிம், ஏரிகரை சூலன், தென்கரை பாலன்,
    சைக்கிள் கீ, பைக் கீ,பீரோ கீ, சமையல் குறிப்பு பதிவுகள் எழுதி டாக்டர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பவர், சுஜாதா என்ற ஒரு எழுத்தாளர் நன்றாக கதைகள் எழுதுவார் என்று புத்தக கண்காட்சியின் பொழுது போய் புத்தகம் வாங்கி விமர்சனம் எழுதியவர்..............பூ, அனுஜன்யாவை பெண் என்று நினைத்து பலர் காதல் கடிதம் அனுப்பினர்!.

    சீரியஸாச்ச் சொல்லுறேன் (அந்த சீரியஸ் இல்லை) உன்னுடைய கிரி்யேட்டிவிட்டி என்னை மலைக்க வைக்கிறது.

    டேமேஜர் வேலையை ரிசைன் பண்ணீட்டு ஏதாவது விளம்பரக் கம்பனியில சேர்ந்தா சீக்கிரமா உன் திறமையால முன்னுக்கு வரலாம்.

    உன் தனித்துவத்தால வெகு சீக்கிரம் பிரபலமாக வாய்ப்பும் இருக்கு.

    மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஆரம்பமாகிவிட்டதடா அரூபத்தின் அற்புத வேலைகள்...

    ReplyDelete
  12. பேப்பர் சேஸ் பண்ண யாரை காண்டாக்ட் பண்ணனும்?? :P

    ReplyDelete
  13. பிட் அடிக்க அனுமதி உண்டா ஆசானே?

    ReplyDelete
  14. :)

    (நான் பிரபல பதிவர் ஆயிட்டேனா..?)

    ReplyDelete
  15. :)))))))))))))))))

    அட்டகாசம். ROTFL

    வெண்பூ.... இன்னமும் சிரிக்கிறேன்.

    எனக்கு காதல் கடிதம் எழுதியவர்கள் எல்லோர் பெயரும் மேலே இருக்கு. நீயுங்கூடத்தான் :)

    ஒரு முறை அனானியாக, ஞாபக மறதியில் நானே எழுதியும் விட்டேன்.

    சூப்பர் பதிவு குசும்பா.

    அனுஜன்யா

    ReplyDelete
  16. நன்றி ஜமால்!

    நன்றி வித்யா மூனாவது ...க்கு 3. யாருன்னு தெரியலன்னா சொல்றீங்க குலுக்கலில் உங்க பேரை அமுக்கிவிடுகிறேன்.கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    நன்றி ஸ்ரீமதி...மீனிங் கண்டுபிடிப்பதில் கொஞ்சம் வீக்கா இருக்கீங்க உங்களுக்கு பாடம் எடுக்கலாம் எனிவே உங்கள் பெயர் குலுக்கலில் உண்டு:)

    சுந்தர்ஜீ கேள்விகள் சிலசமயம் தவறாகிவிடுவது இல்லையா அதுபோல் தான் உண்மைதமிழன் கேள்வியும் ஆகிவிட்டது:)
    (அப்புறம் அடுத்த பதிலுக்கு கிர்ர்ர்ர்ர்)

    நன்றி ஜெகதீசன்

    நன்றி ரங்கன் உங்க மாமா வந்து தருவார்!

    நன்றி நர்சிம் வெண்பூ வந்து கும்ம போறார்!

    நன்றி வேலன் அண்ணாச்சி உங்க வாக்கு பலிக்கட்டும்! தாங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!

    நன்றி ரமேஷ்வைத்யா---இனி எல்லா பதிவும் வேறுமாதிரி இருக்கும்:)

    நன்றி G3 அதுக்கு துபாயில் இருக்கு ஒரு நல்லவர் அக்கவுண்டுக்கு 100000 அனுப்பவும்!

    கைப்புள்ள தாங்கள் 18+ என்பதால் பிட் பார்கதான் அனுமதி பிட் அடிக்க அனுமதி இல்லை

    ReplyDelete
  17. எல்லா கேள்விகளுக்கும் விடையளி 10 x 1= 10

    1) தமிழ்மணம் ஸ்டார் ஆக என்ன செய்யவவேண்டும்?


    இ) யாருக்கும் தெரியாது


    2) யார் பிரபல பதிவர்கள்?


    இ) பின்னூட்டத்துக்கு பதில் சொல்லாதவர்கள்


    3) எது பின்நவீனத்துவம்?


    ஈ) இவை அனைத்தும்

    4)மூன்று தமிழ்மண விருதுகள் வாங்கியவர்

    அ)டாக்டர்.புருனோ


    5)குறுந்தொகைக்கு விளக்கம் கொடுப்பவர்

    ஈ) நர்சிம்

    6)அவியல் எழுதி மக்களை அலறவிடுபவர்

    இ) பரிசல்காரன்


    7) கதம்பம் எழுதி மக்களை கதறவைப்பவர்

    இ)வடகரைவேலன்


    8) காக்டெயில் எழுதி மக்களை காண்டாக்குபவர்
    அ) அதிமேதாவி, ஆணழகன் கார்க்கி



    9) சமையல் குறிப்பு பதிவுகள் எழுதி டாக்டர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பவர்

    அ) தூயா


    10)சிங்கப்பூர் பயணக்கட்டுரை எழுதியவர்


    இ)புதுகை.அப்துல்லா





    பொருத்துக 5 x 1= 5 (பலருக்கும் நெப்போலியன்,விக்கை பொருத்தலாம் ஆனால் மிகச்சரியாக பொருத்தவேண்டும்)

    சஞ்சய் காந்தி--- -------- விக்
    நந்து --------------------- கேமிரா
    ஆதிமூலகிருஷ்ணன்-- தங்கமணி
    ஜ்யோவோராம் சுந்தர்--அதீதா
    வால்பையன்-------------நெப்போலியன்



    கோடிட்ட இடங்களை நிரப்புக 3 x 1= 3
    1) திரைவிமர்சனம் என்ற பெயரில் முழு திரைக்கதையையும் எழுதுபவர்...உணமைத்தமிழன்................


    2) சுஜாதா என்ற ஒரு எழுத்தாளர் நன்றாக கதைகள் எழுதுவார் என்று புத்தக கண்காட்சியின் பொழுது போய் சுஜாதா புத்தகம் வாங்கி விமர்சனம் எழுதியவர்.........வெண்பூ


    3) மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கும் சொக்க தங்க பதிவர் கு.சு.ம்பன்



    சரியா தவறா? 2 x 1= 2
    1) சாரு புத்தகவெளியீட்டின் பொழுது கூட்டம் கடைசிவரை கலையாமல் இருந்ததுக்கு காரணம் வெளியில் பெய்த மழை. சரி

    2) அனுஜன்யாவை பெண் என்று நினைத்து பலர் காதல் கடிதம் அனுப்பினர்! மிகச்சரி

    ReplyDelete
  18. //அதுக்கு துபாயில் இருக்கு ஒரு நல்லவர் அக்கவுண்டுக்கு 100000 அனுப்பவும்!//

    100000 கேள்வி அனுப்பனுமா? இல்லை இதே கேள்வியை 100000 வாட்டி காப்பி பேஸ்ட் பண்ணி அனுப்பினா போதுமா :P

    ReplyDelete
  19. பின்நவீனத்துவம் படிச்சு பேதியாகுதோ இல்லயோ, இந்தப் பதிவைப் படிச்சு வவுத்து வலி..... :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ROTFL :))))))))))

    ReplyDelete
  20. ;-)

    நல்ல தமாசுங்கண்ணா!

    ReplyDelete
  21. முதல் 10 கேள்விகளில் தனிமனித தாக்குதலும் கொலைவெறியும் தெரியுது....

    சோ சாய்ஸில் ஒமிட் செய்கிறேன். !! :)

    ***************

    3) மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கும் சொக்க தங்க பதிவர் கு..ங்கன்

    குரங்கன்

    ***************

    //அதிக மதிப்பெண் வாங்குபவர்களுக்கு இந்த வார முடிவில் ஒரு பரிசு காத்திருக்கிறது! ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே மதிப்பெண் வாங்கி இருந்தால் வெற்றிப்பெற்றவர் சீட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
    //

    இது சீட்டீங்..!!

    ReplyDelete
  22. செம ஜாலி நண்பரே! வாழ்த்துகள்

    நானும் திருவாரூர் பக்கம்தான் ஆனா ஒங்க அளவுக்கு சரக்கு இல்ல :-)

    ReplyDelete
  23. என்னோடத படிச்சிட்டு "அவ்வ்வ்" ன்னு இருந்திச்சு..

    //சஞ்சய் காந்தி--- -------- விக்/


    ஆனால் இதை படித்ததும் "சபாஸ் சரவணாண்ணா"

    கிகிகி

    ReplyDelete
  24. சினிமா விமர்சனம் என்ற போர்வையில் முழுகதையும்...உண்மைத்தமிழன் இருக்கிறார்.மீதியெல்லாம் கேட்கவே வேண்டாம் எல்லோருக்கும் தெரியும்.
    ஒவ்வொரு கேள்வியிலும் ஒரு "குபுக்" சிரிப்பு ஒளிந்துகொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  25. //10)சிங்கப்பூர் பயணக்கட்டுரை எழுதியவர்

    //

    புலவரே உமது கேள்வியில் சொற்பிழை இருக்கின்றது. பயணக்கட்டுரை எழுதியவர் அல்ல எழுதிக் கொண்டு இருப்பவர் என இருக்க வேண்டும்.காரணம் நான் இன்னும் முடிக்கவில்லை

    :)

    ReplyDelete
  26. 1. எனக்கு தெரியாது.

    2.இவை அனைத்தும்

    3.இவை அனைத்தும்

    4.டாக்டர்.புருனோ

    5.நர்சிம்(ஆனா ஒரு போன் கூட பண்ண மாட்டிங்கிறார்)

    6.பரிசல்காரன்(தண்ணிர் வறட்சி)

    7.வடகரைவேலன்

    8.கார்க்கி

    9.தூயா

    10.புதுகை.அப்துல்லா

    ReplyDelete
  27. நரசூஸ்னோ - ஹிஹிஹி ஹஹாஹ

    ReplyDelete
  28. //8) காக்டெயில் எழுதி மக்களை காண்டாக்குபவர்
    அ) அதிமேதாவி, ஆணழகன் கார்க்கி//

    இது எப்ப இருந்து கார்க்கி

    ReplyDelete
  29. சஞ்சய் அங்கிள்-விக்

    நந்து-கேமரா

    ஆதிமூலகிருஷ்ணன்-தங்கமணி

    ஜ்யோவ்ராம் சுந்தர்-அதீதா

    வால்பையன்-நெப்போலியன்
    (எப்படி தெரியும் என்னோட ஃபேவரட் பிராண்ட்)

    ReplyDelete
  30. இதுக்கு மேல எவ்வளவு பரிசு தருவிங்களோ வாங்கிகிறேன்

    ReplyDelete
  31. //3) மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கும் சொக்க தங்க பதிவர் கு..ங்கன்

    குரங்கன்//

    அச்சச்சோ- ஆனா இதுக்கும் சிரிப்பு வருதே :)

    ReplyDelete
  32. அந்த சொக்கத்தங்க பதிவர் மட்டும் என் கையில் கிடச்சா ...






















































    கை குலுக்கிக் கொள்வேன்.

    ReplyDelete
  33. காபி பேஸ்ட் பண்ணி பதில் சொன்னா ஒத்துக் கொள்வீர்களா...

    ReplyDelete
  34. :))))))))))
    ஒரு ஸ்மைலி இல்லை நிறைய ஸ்மைலி தான் போட்டிருக்கேன் நான் சாதா பதிவர்..

    ReplyDelete
  35. அப்பாடா எனக்கு டேமேஜ் இல்லை! தப்பிச்சேன்!

    ReplyDelete
  36. அப்பா’டா எனக்கு ஒன்னுக்குமே விடை தெரியல...:))

    ReplyDelete
  37. 1) இ
    2) ஈ
    3) ஈ
    4) உ (அனைத்தும் சரியான பதில்)
    5) உ (அனைத்தும் சரியான பதில்)
    6) உ (அனைத்தும் சரியான பதில்)
    7) உ (அனைத்தும் சரியான பதில்)
    8) உ (அனைத்தும் சரியான பதில்)
    9) உ (அனைத்தும் சரியான பதில்)
    10) ஈ

    11) ஹம்ம்ம் :(

    12) அ) தங்கத்தமிழன்
    ஆ) வாழைப் பூ
    இ) குரும்பன்

    13) அ) சொல்லமாட்டேன்
    ஆ) கேட்டு சொல்றேன்

    14) அ) அடிப்பது
    ஆ) போடுவது
    இ) வெறுப்பது
    ஈ) விழி பிதுப்பது
    உ) தீர்த்தம் தெளிப்பது.

    15) கேள்வி எங்கே? சீக்கிரம் கேளும்...

    ReplyDelete
  38. தங்கம்.. செல்லம்.. பவுனு.. வைரம்.. வைடூரியம்..

    அசத்திட்ட போ..!

    நீதாண்டா எங்களை வாழ வைக்குற தெய்வம்..!

    வீட்டுக்குப் போனவுடனே தங்கச்சிக்கிட்ட சொல்லி திருஷ்டி சுத்திப் போடச் சொல்லு..

    ReplyDelete
  39. தங்கம்.. செல்லம்.. பவுனு.. வைரம்.. வைடூரியம்..

    அசத்திட்ட போ..!

    நீதாண்டா எங்களை வாழ வைக்குற தெய்வம்..!

    வீட்டுக்குப் போனவுடனே தங்கச்சிக்கிட்ட சொல்லி திருஷ்டி சுத்திப் போடச் சொல்லு..

    ReplyDelete
  40. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதயுடன்)
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்

    ReplyDelete
  41. //3) மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கும் சொக்க தங்க பதிவர் கு..ங்கன்

    குரங்கன்//

    ரிப்பீட்டு

    ReplyDelete
  42. உன்னை தமிழ்மண ஸ்டார் ஆக்கியது தப்பில்லை தல !!!

    ReplyDelete
  43. 1. ஈ
    2. ஈ
    3. ஈ
    4. அ
    5. ஈ
    6. இ
    7. இ
    8. அ
    9. அ
    10. இ

    ReplyDelete
  44. :))))))))))))))))))))))))))))))))))))))

    ஜி3 பாஸை விட அதிகம சவுண்டு வுட்டு சிரிப்போமாக்கும் :)

    ReplyDelete
  45. hello ,
    pathiva padhichu
    sirichu siruchu officela pakkathu anuty even oru loosu polanu nenaichikichy Kusumba !!! antha aunty ya correct panna nan evlo kastapaten nu theriyuma ???

    ReplyDelete
  46. பழைய கேள்வித்தாள் ஏதும் பார்த்தீரா? அல்லது பக்கத்து வீட்டில யாரும் பள்ளிக்கூடம் போறாங்களா?

    ReplyDelete
  47. எக்ஸாம் டஃப்பா இருக்கே..ம்ம்

    ReplyDelete
  48. அலோ.. யாராச்சும் பிட்டு வச்சிருந்தா குடுங்கப்பா..
    புண்ணியமா போவும்.

    ReplyDelete
  49. 1) தமிழ்மணம் ஸ்டார் ஆக என்ன செய்யவவேண்டும்?
    அ) எனக்கு தெரியாது

    2) யார் பிரபல பதிவர்கள்?
    அ) யாருக்கும் பின்னூட்டம் போடாதவர்கள்

    3) எது பின்நவீனத்துவம்?
    ஈ) இவை அனைத்தும்

    4)மூன்று தமிழ்மண விருதுகள் வாங்கியவர்
    அ)டாக்டர்.புருனோ

    5)குறுந்தொகைக்கு விளக்கம் கொடுப்பவர்
    ஈ) நர்சிம்

    6)அவியல் எழுதி மக்களை அலறவிடுபவர்
    இ) பரிசல்காரன்

    7) கதம்பம் எழுதி மக்களை கதறவைப்பவர்
    இ)வடகரைவேலன்

    8) காக்டெயில் எழுதி மக்களை காண்டாக்குபவர்
    அ) கார்க்கி

    9) சமையல் குறிப்பு பதிவுகள் எழுதி டாக்டர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பவர்
    அ) தூயா

    10)சிங்கப்பூர் பயணக்கட்டுரை எழுதியவர்
    இ)புதுகை.அப்துல்லா

    ReplyDelete
  50. அய்யோ மாப்பி, சிரிச்சு சிரிச்சு இருமல் வந்து கண் எல்லாம் தண்ணி வந்துடுச்சு.
    என்னையும் என் சித்தப்பூவையும் டேமேஜ் பன்னாம விட்டதுக்கு நன்றி சொல்லிக்கிற அதே வேளையில் என் அன்புத் தங்கையை கிண்டல் செய்ததுக்கு கடுமையான கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எல்லாக் கேள்விகளுமே மிக அருமை. அதுலயும் என் மாப்ள சஞ்செய்க்கு நீ வைச்சுருந்த பதில் இருக்கே, அது சூப்பர் டாப் டக்காரு. ( டாப்புல ஒன்னும் இல்லாத மேட்டர டாப்பு டக்கராக்கிட்ட போ)

    ReplyDelete
  51. ச்சான்ஸே இல்ல. சூப்பர்! (ஆமா.. அலறவா விடறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    அதெப்படி உங்களுக்கு மட்டும் அப்படி ஒரு கேள்வி..? இருடி. வெச்சுக்கறேன்!!

    ReplyDelete
  52. ஹாஹா... முடியல...

    அக்மார்க் குசும்பன் பதிவு....

    :-))))))))))))))

    ReplyDelete
  53. 3) மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கும் சொக்க தங்க பதிவர் கு..ம்பன்,

    இந்த கேள்வி அவுட் ஆஃப் சிலபஸ். அப்படி ஒரு சொக்க தங்க பதிவர் யாரும் இல்லை. இங்கு வந்தும் வராமலும் போன எல்லாருக்கும் போன்ஸ் மார்க் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  54. அருஞ்சொற்பொருள் தருக 5x1=5
    1)கும்மி - ப்ளாக்கர் தினர தினர பின்னூட்டம் போடுவது

    2)மொக்கை - பதிவுல என்ன இருக்குன்னு பதிவருக்கும் படித்தவருக்கும் தெரியாமல் இருப்பது

    3)கவுஜை - கவிதை மாதிரி ஆனா கவிதை இல்லை

    4)பின்நவீனத்துவம் - கேள்வி கேட்டு பின்னூட்டம் போட்டவன பின்னங்கால் பிடறில அடிக்க ஓட விடறது

    5)பியர் போத்தல்கள் - (பதிச் தெரியல சாமி)

    ReplyDelete
  55. //சுல்தான் said...
    பழைய கேள்வித்தாள் ஏதும் பார்த்தீரா? அல்லது பக்கத்து வீட்டில யாரும் பள்ளிக்கூடம் போறாங்களா? //

    கேள்வித்தாள்கள எல்லாம் நாங்க அம்புட்டு சீக்கிரம் மறந்துடுவோமா?

    ஏன் மாப்பி, நாமள்லாம் ஒரே பாடத்துக்கு எத்தன தடவ பரிட்சை எழுதியிருக்கோம்? ஒவ்வொரு பரிட்ச்சையிலயும் வெறும் கேள்வித்தாள மட்டுமே 3 மணி நேரம் முறைச்சுப்பார்த்துக்கிட்டு உக்காந்துருப்போம்ல, அதெப்டி அம்புட்டு சீக்கிரம் மறந்து போவும்?

    சுல்தான் அய்யா எல்லாம் பள்ளிக்கூடத்துல முத பெஞ்ச் போலருக்கு, அவரு கூட எல்லாம் சேர்ந்து கெட்டு போயிராத மாப்பு. நமக்கு நம்ம டிசிப்ளின் முக்கியம்.

    ReplyDelete
  56. //மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கும் சொக்க தங்க பதிவர் கு..ம்பன்//
    இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரியாததுனால செண்டம மிஸ் பண்ணிட்டேன் ச்சே.

    ஆனா சொக்க தங்க பதிவர் என்னமோ அவுட் ஆப் சிலபஸ்தானு தோணுது :).

    ReplyDelete
  57. //என்னோடத படிச்சிட்டு "அவ்வ்வ்" ன்னு இருந்திச்சு..

    //சஞ்சய் காந்தி--- -------- விக்/
    ஆனால் இதை படித்ததும் "சபாஸ் சரவணாண்ணா"
    கிகிகி//
    என்னா கொலைவெறி தூயா :)?

    ReplyDelete
  58. கேள்விகள் ரொம்ப கஸ்டமாக இருப்பதால்...

    பரீச்சைக்கு லீவ்வு..!
    :)

    ReplyDelete
  59. ROTFL.. விழுந்து விழுந்து சிரித்தேன்.. இந்த லட்சணத்துல சீரியஸா பதில் சொன்ன கார்க்கி முதலானோரை நினைத்து இன்னும்.. ஹாஹா...

    ReplyDelete