Thursday, February 19, 2009

பெண்களை குட்டுவது தப்பா? அதனால் என்ன ஆகும்?

எங்க பள்ளிகூடம் கோ-எஜிகேசன், கூட பல ஊரில் இருந்தும் பல பொண்ணுங்க இருந்தாங்க அப்பொழுதில் இருந்தே நமக்கும் பொம்பள புள்ளைங்களுக்கும் ஆகவே ஆகாது. எப்ப பார்த்தாலும் முதல் மார்க் அது இதுன்னு வாங்கிட்டு நம்மை ஏகத்துக்கும் டென்சன் ஆக்குவாளுங்க, அது கூட பரவாயில்லை எங்களை பார்த்து வாடா போடான்னு வேற கூப்பிடுவாளுங்க அங்கதான் ஆரம்பிச்சிது வினை. ஏய் எங்களை வாடா போடான்னு கூப்பிட்ட நல்லா இருக்காது ஆமா, ஒழுங்க பேர் சொல்லி கூப்பிடு என்று சுமதியிடம் நான் சொல்ல முடியாது டா அப்படிதான்டா கூப்பிடுவேன் டா என்று சொன்னதும் ஏய் அப்புறம் நானும் வாடி போடின்னு கூப்பிடுவேன்டி என்று சொல்ல வாய் பேச்சு கை கலப்பானது.


அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன், கிளாசுக்கு போனா ஊஊஊஊஊஊன்னு சங்கு சத்தம், ஊர்ல மதியம் ஒரு மணிக்குதானே சங்கு ஊதும் ஆனா என்ன டா அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா அடிவாங்கின சுமதி கத்துறா, என்ன டா இது அவளும் தான் அடிச்சா நாம என்னா இப்படியா ஊரகூட்டினோம் என்ன இது சின்னபுள்ள தனமா ராஸ்கல்ஸ் என்று நினைச்சுக்கிட்டு இருக்கும் பொழுதே அப்படியே கொத்தா கோபால் சார் தூக்கிட்டு போனதுதாங்க தெரியும் சட சடன்னு ஒரே சத்தம், டின்னு கட்டுவது என்று கேள்வி பட்டு இருக்கேன் அன்னைக்குதான் வாங்கினேன்.

சரி சரி விடு விடு பெண்ணீயத்தை எதிர்த்து போர் செய்யும் வீரனுக்கு இது எல்லாம் சகஜம் என்று வந்து பார்த்தா இஇன்ன்னு சிரிக்கிறா அவ, அடி பாவி நடிச்சியாடின்னு மனசுக்குள்ளே கருவிக்கிட்டு. உடனே நண்பர்களை எல்லாம் கூட்டி டேய் இது ஒட்டு மொத்த ஆண் சமுகத்துக்கே வந்த இழுக்கு இனி அவளுங்க யாரும் டா போட்டு கூப்பிட்டா நீங்களும் டி போட்டுகூப்பிடனும் என்று சொல்லி சபதம் எடுத்து விட்டு கலைந்தோம்.

கொஞ்சநாட்களில் சுமதி, கவிதா, புனிதவள்ளி என்று எதிரிகள் லிஸ்ட் அதிகமாகிட்டே போனது டெய்லி அவளுங்களும் அடிவாங்கமா இருக்க மாட்டாளுங்க,அவுங்க வீட்டுபாட நோட்டில் இங்கை ஊற்றி மூடி வைத்து விடுவது புஸ்த பையில் இருக்கும் புத்தகத்தை வேறு யாரோட பைக்காவது மாற்றிவிட்டு அந்த பையில் மண் குப்பை எல்லா கொண்டு நிரப்பி வைப்பேன்.கிளாஸ் சாரிடம் போய் புகார் கொடுப்பாங்க ஆனால் குற்றத்தை நான் தான் செஞ்சேன் என்பதற்கு போதிய சாட்சிகள் இல்லாததால் நான் விடுதலை ஆகிவிடுவேன்,இப்படியே ஒரு ரெண்டு வருசம் ஆனது.

7 வது 8 வது படிக்கும் பொழுது பேச்சு வார்த்தை கட் ஆனது பேசிக்க மாட்டோம். கிளாசுக்கு வரும் நடராஜ் சார் என்ன செய்யவார் கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்றால் பொண்ணுங்களை விட்டு குட்ட சொல்லுவார் அது அப்ப பெரிய அவமானம். ஒரு பொண்ணு கையால அடிவாங்குறியே புத்திவரவில்லை என்றுவேறு திட்டுவார்.

நம்ம எப்ப கரீட்டா பதில் சொல்லி இருக்கோம் அங்க பொண்ணுங்க எப்ப டா நான் மாட்டுவேன் என்று காத்துக்கிட்டு இருப்பாளுங்க,அங்கேருந்து வந்து முக்கி முக்கி ஓங்கி வேகமா குட்டுவாளுங்க அது அவளுங்களுக்கு வேகம் ஆனா நம்ம மண்டை தான் ஸ்டாராங்கான மரமண்டையாச்சா அதனால் வலி இருக்காது.என்னமோ ஒரு சிங்கத்தை குட்டி சாச்சுட்ட நிம்மதியில் போய் உட்கார்ந்து இருப்பாளுங்க.

அடுத்த முறை அவுங்க பதில் சொல்லாத பொழுது அதிகமாக கொட்டு வாங்கியது யார் என்ற தகுதியின் அடிப்படையில் நமக்குதான் அவுங்களை குட்ட வாய்பு கிடைக்கும், விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சும்மா நங்குன்னு ஒரு குட்டுவைப்பேன் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் வரைக்கும் அழுகை நிறுத்தாதுங்க. மண்டைய தடவி தடவி பார்த்துக்கிட்டு இருக்குங்க வீங்கி இருக்கான்னு மற்ற பொண்ணுங்க எல்லாம் குட்டு வாங்கியவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு என்னை ஒரு முறை முறைப்பாங்க பாருங்க அப்ப நமக்கு அது ஒலிம்பிக்கில் மெடல் கொடுத்த மாதிரி.

நம்ம கூட்டதில் சில குள்ள நரிங்க இருப்பானுங்க போய் குட்டுங்கடான்னா அந்த பக்கம் போய் காசு கொடுத்தா யானை தும்பிக்கையை தலையில் வைக்கும்ல்ல அதுபோல நைசா வலிக்காம குட்டுவது போல் நடிச்சுட்டு வந்துடுவானுங்க. அவளுங்களும் அந்த நன்றி கடனை கிளாஸ் டெஸ்டில் காட்டுவாளுங்க பெஞ்சின் இரு மூலையிலும் இரண்டு பெண்கள் நடுவில் ஒரு பையன் என்று உட்கார வெச்சு டெஸ்ட் வைப்பாங்க. அப்பவே தெரிஞ்சு இருக்கு பொண்ணுங்க ஆண்களின் முன்னேற்றத்துக்கு உதவமாட்டாங்க என்று, குட்டுவது போல் நடிச்ச குள்ள நரிங்களுக்கு மட்டும் பேப்பரை காட்டிடுவாளுங்க.

அப்புறம் 9வது படிக்கும் பொழுது தனி தனி கிளாசில் போட்டுவிட்டானுங்க, பிறகு ரெண்டு வருசம் கழிச்சு 11ல் திரும்ப ஒன்னா படிக்கும் பொழுதுதான் வாழ்கையில் எத்தனை பெரிய தப்பை செஞ்சு இருக்கோம் என்று புரிஞ்சது, ஆமாங்க அழகா தாவணி போட்டுக்கிட்டு அம்சமா இருந்தாளுங்க போய் பிரண்ட் ஆகிக்கலாம் என்று பார்த்தால் அப்பயும் நம்ம மேல இருந்த கோவம் தீரல போல! பேச மாட்டாளுங்க சரி இப்ப யாரும் குட்ட சொன்னா போய் நானும் குள்ள நரி ஆகி சமாதானம் ஆகிடலாம் என்று பார்த்தா கடைசிவரை அதுக்கு வாய்பே இல்லாம போச்சுங்க.

டிஸ்கி: தலைப்புக்கு பதில் கேர்ள் பிரண்டு கிடைக்காமல் போகும்!

இது பழயகுப்பை முன்னாடி எழுதியது! சும்மா கிண்டியதில் கிடைத்தது!

37 comments:

  1. மீ த பர்ஸ்ட்.. :)))

    ReplyDelete
  2. மீ த பர்ஸ்ட்டு!

    ReplyDelete
  3. இருங்க பதிவைப் படிச்சிட்டு வர்ரென்..:)

    ReplyDelete
  4. ///அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன்,///
    என்ன கொல வெறிங்ண்ணா..

    ReplyDelete
  5. ///கிளாசுக்கு போனா ஊஊஊஊஊஊன்னு சங்கு சத்தம், ஊர்ல மதியம் ஒரு மணிக்குதானே சங்கு ஊதும் ஆனா என்ன டா அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா அடிவாங்கின சுமதி கத்துறா,///
    ரசித்தேன்!

    ReplyDelete
  6. ஹிஹிஹிஹி நானெல்லாம் குள்ளநரியாக்கும்... அதனால நிறைய கேர்ள் பெரண்டுங்கோ..;))

    ReplyDelete
  7. ம்

    நடக்கட்டும் நடக்கட்டும் :)

    ReplyDelete
  8. "பெண்களை குட்டுவது தப்பா? அதனால் என்ன ஆகும்?"
    //


    சிக்கி சின்னா பின்னமாயிடுவே..

    :)

    ReplyDelete
  9. sms க்கு பதிலையே காணும் :)

    ReplyDelete
  10. என் பதிவு முதல் பக்கத்தில் வருவதே 2 நிமிடம் அதுக்கும் ஆப்பு வைக்கிறமாதிரி 40 கமெண்ட் அடிச்சு தூக்கிடுறீயே ரங்கா! அதான் மாடுரேசன். நீங்க கும்முறத கும்முங்க நான் ஒன்னு ஒன்னா ரிலீஸ் செய்கிறேன்:)))

    ReplyDelete
  11. குசுமபா நீ ஒகே சொன்னாதான் இன்னைக்கும் அடிச்சி ஆடுவதா இல்லையானு முடிவு பன்னுவேன் :)


    ஸ்டேடஸ் மெசேஜ்ல சொன்னாலும் ஒகே தான் :)

    ReplyDelete
  12. படிக்கும்போதே எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்.. மீள் பதிவா :)

    ReplyDelete
  13. நீங்க கும்முறத கும்முங்க நான் ஒன்னு ஒன்னா ரிலீஸ் செய்கிறேன்:)))
    //


    சாரி

    :)

    பை பை

    ReplyDelete
  14. அப்போ கையால குட்டு வாங்கினீங்க. இப்போ பூரிகட்டைலயா. ம்ம்ம் நடக்கட்டும்:)

    ReplyDelete
  15. முழுக்க முழுக்க ராப் அக்காவை வம்புகிழுக்க மீள்பதிவு செய்யப்பட்டதா?

    சிறுபான்மையினார பெண்களை(1000 க்கு 900 தானாம்) ஆணாதிக்கத்தால் கொடுமை படித்திய குசும்பனுக்கு அதிகபட்ச தண்டனையாக இன்னொரு கல்யானம் பண்ணி வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்,

    தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!

    ReplyDelete
  16. :)) கொசுவத்தி சூப்பர்.

    ReplyDelete
  17. நம்ம பள்ளி குறிப்பை எவனோ திருடி போட்ட மாதிரி இருக்கே!

    அப்பால ஜடையில் கண்டதை சொருகி விடுவது, ரிப்பனை பெஞ்சு முனையில் சேர்த்து கட்டுவது போன்றவற்றை எல்லாம் ஏன் எழுதல சரவணா...

    ஆனா அந்த முறைப்பு மேட்டரு சொன்ன பாரு! சான்ஸ்சே இல்ல.. கண்ணாலே எரிப்பது என்பது அது தான்!

    ReplyDelete
  18. //வித்யா said...
    அப்போ கையால குட்டு வாங்கினீங்க. இப்போ பூரிகட்டைலயா. ம்ம்ம் நடக்கட்டும்:)
    //

    repeatttttteeeeeeeeee

    ReplyDelete
  19. //அப்பொழுதில் இருந்தே நமக்கும் பொம்பள புள்ளைங்களுக்கும் ஆகவே ஆகாது. //

    இப்ப மட்டும் என்னவாம்???

    ReplyDelete
  20. // வித்யா said...
    அப்போ கையால குட்டு வாங்கினீங்க. இப்போ பூரிகட்டைலயா. ம்ம்ம் நடக்கட்டும்

    //

    கொஞ்சம் லேட்டா வந்தா நம்ப நினைக்கிறத யாராவது எழுதிபுடுறாங்கப்பா :(

    ReplyDelete
  21. // வித்யா said...
    அப்போ கையால குட்டு வாங்கினீங்க. இப்போ பூரிகட்டைலயா. ம்ம்ம் நடக்கட்டும்

    //

    கொஞ்சம் லேட்டா வந்தா நம்ப நினைக்கிறத யாராவது எழுதிபுடுறாங்கப்பா :(

    ReplyDelete
  22. டெரர் தலைப்பாவே வைக்கிறீங்களே எப்படி ...

    ReplyDelete
  23. \\அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன்\\

    மர்டர் வெறியாக்கீதே ...

    ReplyDelete
  24. அப்ப எல்லாம் எதாவது குறும்பு பண்ணா ரெண்டு பொண்ணுங்களுக்கு நடுவுல‌ உக்கார‌ வச்சிருவாய்ங்க...அதெல்லாம் எட்டாம் ஒம்பதாம்பு வ‌ர‌...

    அதுக்கப்புற‌ம் எல்லா டீச்ச‌ருங்க‌ளும் உசாராயிருய்ங்க‌ளே !!!! எப்ப‌டி ??

    ReplyDelete
  25. ரசித்து சிரித்தேன்

    ReplyDelete
  26. ungal valikaielum oru sumathiya ???? aiyahoo.......

    ReplyDelete
  27. ஏற்கனவே படிச்சா மாதிரியே இருக்கேன்னு நெனச்சுகிட்டே மறுபடியும் கடைசி வரை படித்து சிரித்தேன்.
    ஆரம்பத்தில் உங்களுடைய ஆம்லெட் பதிவுக்கு பிறகு நான் படித்த பதிவு இது.

    ReplyDelete
  28. குடுத்து வச்ச ஆளுங்கண்ணே நீங்க ஆனா மிஸ் பண்ணிட்டிங்களே..:)

    ReplyDelete
  29. 11ல் திரும்ப ஒன்னா படிக்கும் பொழுதுதான் வாழ்கையில் எத்தனை பெரிய தப்பை செஞ்சு இருக்கோம் என்று புரிஞ்சது.

    ippayachi purinjithey

    ReplyDelete
  30. அட்டகாசமான ROTFL..போஸ்ட்.! படம் மிகவும் பொருத்தம், அருமை.!

    கடைசியில் சிங்கம் சாய்ந்துபோனதுதான் பெருத்த சோகம்..

    ReplyDelete
  31. வாவ்!!!

    சூப்பரான பதிவு:)

    ReplyDelete
  32. இந்த மாதிரி எங்க ஸ்கூல்லையும் நடந்திருக்கு.. ஆனால் அடிச்சிட்டது இல்லை..

    ReplyDelete
  33. ரங்கன்

    தமிழ் பிரியன்

    அனானிகள்

    ஜ்யோராம்

    வித்யா (ஹி ஹி மண்டை செம ஸ்டார்ங்)

    வால்

    புதுகை தென்றல்

    புலி

    ச்சின்னப்பையன்

    அப்துல்லா அண்ணாச்சி (கமெண்டை படிக்கவேண்டிய ஆள் படிச்சாச்சு, உங்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு இருக்கு)

    ஜமால் இப்படி வெச்சாதான் நாலு பேராவது வருவாங்க!

    செய்யது ஏது செய்யாம இருந்தா பக்கத்துல வெச்சு இருப்பாங்க:)

    பாபு

    உங்களுக்குமா? அவ்வ்வ்வ்

    நர்சிம்

    பட்டாம்பூச்சி ஆம்லேட்டுக்கு பிறகு இந்த பதிவுதானா? அவ்வ்வ்வ் ரொம்ப கேப்புங்கோ!!!:(((

    தமிழன் கறுப்பி

    காயத்ரி

    தாமிரா

    பூர்ணிமா சரவணகுமார்

    அனைவருக்கும் நன்றிங்கோ!!!

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்..


    இன்னும்..

    ReplyDelete