Wednesday, October 29, 2008

சிக்ஸ் பேக் முயற்சியில் சில ஸ்டார்ஸ்- ஒரு காமெடி!!!

பொல்லாதவனில் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் நடிச்ச தனுசை பார்த்து விசால், அர்ஜூன், சூர்யா என்று அனைவரும் மல்லு கட்டகிறார்கள் இனி சில சினிமா நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஜே.கே.ரித்தீஸ் அறையில்...ரித்தீஸிடம்

அண்ணே நீங்க நாயகன் படத்தில் ஒருவன் முதுகில் ஊஞ்சலாடியதை கண்டு உலகமே மெரண்டு போய் கிடக்கு அண்ணே அதை அப்படியே மெயிண்டெயின் செய்யனும், ஈக்குச்சி போல உடம்பு இருக்கிறவனுங்க எல்லாம் சிக்ஸ் பேக்கோடு நடிச்சு மிரட்டுரானுங்க அதுபோல நீங்களும்
சிக்ஸ் பேக்கோட நடிக்கனும்...

ஜே.கே: நாம நடிக்கிறத பார்த்தே மிரண்டு போறானுங்க, இதுல எதுக்கு சிக்ஸ் பேக்!

இப்படி சொன்னா எப்படின்னே அப்புறம் உங்க எதிர்கால அமெரிக்க முதல்வர் ஆகும் கனவு கலைஞ்சுடும் அண்ணே!

ஜே.கே: சிக்ஸ் பேக்கும் என் அமெரிக்க முதல்வர் கனவுக்கும் என்ன சம்மந்தம்?

அண்ணே அர்ணால்டு சிக்ஸ் பேக்கோடு நடிச்சதால் தான் அவரு அழகில் அனைவரும் மயங்கிட்டாங்க அதனால் தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு பிரதமர் ஆகி இருக்கார், நீங்களும் அவரை போல் நடிச்சீங்க புஷ் போல நீங்களும் அடுத்த அமெரிக்க முதல்வர் ஆகிடுவீங்க.

ஜே.கே: அப்படியா இருடே இதோ வருகிறேன்,என்று வெளியே ஓடிப்போய்
திரும்ப வருகிறார்..

இதோ பாருடா சிக்ஸ் பேக்

1) இது ஸ்கூல் பேக்

2) இது டிராவல் பேக்

3) இது ஹேண்ட் பேக்

4) இது ஷோல்டர் பேக்

5) இது லெதர் பேக்

6) இந்தாடா கடைசியா கேரி பேக்

எடுத்து மாட்டுங்கடா என் மேலே. இப்ப வந்துச்சா சிக்ஸ் பேக் என் மேலே!!!

மனசுக்குள் (அண்ணே உங்களு சினிமான்னா என்னானு தெரியாதுன்னே நினைச்சேன் ஆனா சிக்ஸ் பேக்ன்னாலும் என்னன்னு தெரியாதா அவ்வ்வ்வ்)

ஜே.கே: ஏய் யாருடா அங்க இந்த ஸ்கூல் பேக் ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் கொடுத்துச்சு அதுக்கு வாங்கி கொடுங்கடா 1000 ஸ்கூல் பேக், டிராவல் பேக் கொடுத்தவனுக்கு வாங்கி கொடுங்கடா ஒரு பஸ்!இப்படி அடுத்த அடுத்த கட்டளைகளை போட்டுக்கிட்டு இருக்கார் ரித்தீஸ் (2011 முதல்வர் நம்பர் 12).

***********************************************************************
எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு தயாரிப்பாளர் நீங்க தான் என் அடுத்த படத்தில் ஹீரோ படம் பேரு புளு பிலிம்..

என்னங்க புளு பிலிம் என்று வெச்சா வரி சலுகை கிடைக்காது நீலப்படம் என்று வெச்சுடலாம்...

தயாரிப்பு: அதுவும் சரிதான் நீலப்படம் என்றே வெச்சுடலாம், ஆனா நீங்க இந்த படத்தில் சிக்ஸ் பேக்கோடு வரும் போல ஒரு ”சீன்” வைக்கனும்...
எஸ்.ஜே: அதுக்கு என்னா ஒரு நாள் டைம் கொடுங்க உங்க எதிர்ப்பார்பை நிறைவேற்றுவது போல சிக்ஸ் பேக்கோடு வருகிறேன்...

மறுநாள் காலை சார் இதோ பாருங்க சிக்ஸ் பேக்கோடு வந்து இருக்கேன்...

இது நமீதா ”பேக்”..

இது ஸ்ரேயா ”பேக்”...

இது அசின் ”பேக்”...

இது திரிஷா ”பேக்”...

இது நயன் தாரா ”பேக்”...

இது பிரியாமணி ”பேக்”... என்று கிளேவில் செஞ்ச நடிகைகளின் ”பேக்”கை காட்டுகிறார். கதைப்படி ஹீரோவுக்கு காலையில் ஒரு பேக் இருக்கும் மாலை ஒரு பேக் இருக்கும் இப்படி ஒன்னு ஒன்னா மாறும் என்று கதைய வெச்சு கலக்கிடலாம்...

ஆஹா நீ எப்பவும் இப்படிதானா!!! என்று ஓடுகிறார் தயாரிப்பு.

********************************************************
அடுத்து டி.ஆர். வீட்டில் சார் உங்க பையன புது படத்தில் புக் செய்ய வந்து இருக்கோம்...

டி.ஆர்: சரி முதலில் கதைய சொல்லுங்க, புடிச்சா கால் ஷீட் வாங்கி தருகிறேன்...

சார் கதைப்படி உங்க பையன் ஒரு பாடி பில்டர் அவரிடம் பாடிய பில்ட் பண்ண வரும் ஹீரோயினுக்கும் கசமுசா ஆகிடுது... இதுல முக்கியமே உங்க பையன் தனுஷ்க்கு இருந்தது போல் சிக்ஸ் பேக் வேண்டும்...


டி.ஆர்: சினிமாவுக்காக அவனுக்கு வந்தது
சிக்ஸ் பேக்..
சிம்பு சினிமாவிலேயே இருக்கு பேக்கு.

அவன் வளந்த பின் வந்தது சிக்ஸ் பேக்
இவன் பிறப்பிலேயே ஒரு பேக்கு.

எங்க வீட்டில் இருப்பது இரண்டு பேக்கு
இதை தெரியதவனை எல்லாம் போட்டு தாக்கு.

ஏ டன் டனக்கா ஏ டனக்குனக்கா!

25 comments:

  1. குசும்பனுக்கு எத்தனை பேக்கு

    ReplyDelete
  2. ரித்தீசை கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  3. ஹாஹாஹா.. ரித்திஷ் கற்பனை மிக அருமை..

    ReplyDelete
  4. //எங்க வீட்டில் இருப்பது இரண்டு பேக்கு//

    நீங்கல்லாம் குறளரசன்(அலை படத்தில் திரிஷாக்கு தம்பியா வருவாரே) சிலிர்த்துக்கிட்டு வந்தாத்தான் அடங்குவீங்க:):):)

    ReplyDelete
  5. )
    )

    )
    )

    )
    )

    உத்துப் பாருங்க சிக்ஸ் பேக் தான் !
    :))))

    ReplyDelete
  6. //வால்பையன் said...
    ரித்தீசை கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்//

    மங்களூர்க்கிறேன் (ந‌ன்றி: கும்க்கி)

    ReplyDelete
  7. //கோவி.கண்ணன் said...
    )
    )

    )
    )

    )
    )

    உத்துப் பாருங்க சிக்ஸ் பேக் தான் !
    :))))//

    அண்னே உங்களுக்குத்தான் 16 பேக் இருக்கே.. குசும்பன் காட்டிய ஃபோட்டோல சொன்னேன்..

    ReplyDelete
  8. நல்லா இருக்கு நண்பா!

    //எங்க வீட்டில் இருப்பது இரண்டு பேக்கு
    இதை தெரியதவனை எல்லாம் போட்டு தாக்கு.
    //
    பட் நீங்க எங்க் ஊருக்கார பயபுள்ளைய நொம்பத்தான் கிண்டலுறீங்க வன்மையாக மென்மையாக கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  9. படத்துல இருக்குற அம்மணிக்கு எத்தனை ஃபேக்ஸ்ங்கண்ணா?...

    நான் கவுன்ட் பண்ணி பார்த்தேன்...முடியல..

    யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்கப்பா..

    ReplyDelete
  10. படத்திலிருக்கிற அம்மணி உங்க கேர்ள்பிரண்டா?

    ReplyDelete
  11. //நாம நடிக்கிறத பார்த்தே மிரண்டு போறானுங்க, இதுல எதுக்கு சிக்ஸ் பேக்!//

    :-))))))))

    //என்னங்க புளு பிலிம் என்று வெச்சா வரி சலுகை கிடைக்காது நீலப்படம் என்று வெச்சுடலாம்...//

    ஆனா ஆங்கில சப் டைட்டில்ல BF வார மாதிரி வைக்கனும்.

    ReplyDelete
  12. 6பேக்ஸ்னா நான் ஏதோ கார்கொ Pant மாதிரின்னு நெனைச்சுட்டு இருக்கேன். சிக்ஸ் பேக்ஸ்ன்னா என்னாங்க?

    ReplyDelete
  13. :))))))))))))))))))

    வந்தாலும் வந்தது
    சிக்ஸ் பேக்கு!
    குசும்பன் லந்து எல்லாமே
    கோக்கு மாக்கு!

    ReplyDelete
  14. //
    1) இது ஸ்கூல் பேக்

    2) இது டிராவல் பேக்

    3) இது ஹேண்ட் பேக்

    4) இது ஷோல்டர் பேக்

    5) இது லெதர் பேக்

    6) இந்தாடா கடைசியா கேரி பேக்//

    //இது நமீதா ”பேக்”..

    இது ஸ்ரேயா ”பேக்”...

    இது அசின் ”பேக்”...

    இது திரிஷா ”பேக்”...

    இது நயன் தாரா ”பேக்”...

    இது பிரியாமணி ”பேக்”... //

    குசும்பன் எவ்ளோ நல்லவர் என்பதை மேல இருக்கும் 6 பேக்ஸ் மற்றும் கீழ இருக்கும் 6 பேக்ஸ் பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.. :)

    ReplyDelete
  15. இத்தன விதமான சிக்ஸ் பேக்கா? நீங்க பெரிய பேக்கா இருப்பீங்க போல.. ஐ மீன் சிக்ஸ் பேக்கா இருப்பீங்க போலன்னு நெனச்சேன்.. :)))

    ReplyDelete
  16. உங்க சிக்ஸ் பேக்ஸ் பற்றிய ஜெ.கே.ரித்திஷ்ஷின் சிக்ஸ் பேக் போட்டோ வெளி இடாதத்ற்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  17. ஆகா - சிக்ஸ் பேகுன்னா என்னான்னு தெரியாம பதிவு படிச்சேன் - அப்புறம் தெரிஞ்சிகிட்டேன் - ரித்தீஷ் சொல்ற ஆறும் சூர்யா சொல்ற ஆறும் - இப்ப எதுயா சிக்ஸ் பேக்கு ?

    ReplyDelete
  18. Its really really awesome!!!!

    ReplyDelete
  19. super..super...super...

    ReplyDelete
  20. நன்றி வால்பையன்

    குசும்பனே ஒரு பேக்கு அவனுக்கு எதுக்கு எக்ஸ்டா பேக்கு?:)))

    ****************************

    பூச்சாண்டி நன்றி

    ********************************
    ராப் வேண்டாம் அழுதுடுவேன்

    *********************************
    கோவி அண்ணாச்சி அது என்னாது?

    ********************************
    நன்றி கார்க்கி
    ********************************
    ஆயிலு உங்க ஊர் எனப்தற்காகதான் கொஞ்சமா செஞ்சுருக்கேன்.
    *******************************
    நன்றி நான் மட்டும்...
    அவுங்க வீட்டுக்கு போனா எண்ணி சொல்லுவாங்க:))))
    *******************************
    ஆமாம் வாலு என் பிரண்டுதான், கொஞ்சம் டிரைனிங் கொடுக்கவேண்டி இருக்கு, பழனி படிக்கட்டு மாதிரி ஆக்க டிரைனிங்கொடுத்துக்கிட்டு இருக்கேன்:))
    *******************************
    வடகரை வேலன் அண்ணாச்சி அது என்னாது BF? Boy Friend தானே?
    *******************************
    இளா... (இப்படி பப்ளிக்கா கேட்டா நான் என்னத்த சொல்லுவேன்:(( தெரியாமல் தான் நானே பதிவு போட்டேன்)

    *********************************
    நன்றி சுரேகா (இதுக்கும் கவிதையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
    *********************************
    நன்றி விஜயஆனந்த்
    ***********************
    நன்றி தாமிரா
    ***********************
    பொடியன் அண்ணாச்சி பதில் மரியாதை செய்யப்படும்:)))

    ***************************
    வெண்பூ நம்ம மாதிரின்னு சொல்லுங்க:))
    ***************************
    மக்கு பிளாஸ்திரி நாடு தாங்காது:))
    *****************************
    நன்றி சீனா இப்பயாச்சு புரிஞ்சுதா இல்ல ரித்தீஸ் போட்டோ போடவா?:))
    *******************************
    நன்றி அனானி

    நன்றி சத்யா

    ReplyDelete
  21. //பொடியன் அண்ணாச்சி பதில் மரியாதை செய்யப்படும்:))//

    பேச்சி பேச்சா இருக்கனும் மாமா.. நானும் கோட்டத் தாண்டி வர மாட்டேன்.. நீங்களும் வரப் படாது.. :(

    ReplyDelete
  22. //
    பொடியன்-|-SanJai said...

    //
    1) இது ஸ்கூல் பேக்

    2) இது டிராவல் பேக்

    3) இது ஹேண்ட் பேக்

    4) இது ஷோல்டர் பேக்

    5) இது லெதர் பேக்

    6) இந்தாடா கடைசியா கேரி பேக்//

    //இது நமீதா ”பேக்”..

    இது ஸ்ரேயா ”பேக்”...

    இது அசின் ”பேக்”...

    இது திரிஷா ”பேக்”...

    இது நயன் தாரா ”பேக்”...

    இது பிரியாமணி ”பேக்”... //

    குசும்பன் எவ்ளோ நல்லவர் என்பதை மேல இருக்கும் 6 பேக்ஸ் மற்றும் கீழ இருக்கும் 6 பேக்ஸ் பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.. :)
    //

    ரிப்ப்பீட்டு

    ReplyDelete