Tuesday, December 4, 2007

PIT யின் பூ போட்டிக்கு

போன மாசம் முழுவதும் ரோடு ரோடா அலையவிட்டாங்க ரோடு ரோடா அலைஞ்சு உருண்டு பிரண்டு போட்டோ எடுத்து, ஒரு முறை உருண்டு நடுரோட்டுக்கு வந்து லாரி காரன் திட்டியது வேறு விசயம் இப்படி பல தடைகளை கடந்து வந்து போஸ்ட் போடலாம் என்று பார்த்தா தேதி இப்பதான் பத்துநாளைக்கு முன்பே முடிஞ்சு போச்சு என்று சொல்லிட்டாங்க.

சரி ஒரு திறைமையான கலைஞன் உருவாகும் பொழுது இது போல் தடைகள் எல்லாம் வரதான் செய்யும் என்று மனச தேத்திக்கிட்டு இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாகவே போட்டியில் கலந்துக்கலாம் என்று ஒரு சிறு முயற்சி! இதுவே காஞ்சு போன ஊரு இதுல எங்க இருந்து வகை வகையா பூக்களை போட்டோ எடுப்பது ஏதோ இருப்பதை வைத்து கொஞ்சம் அட்ஜெஸ் செஞ்சுக்குங்கப்பா!!!























இங்க ஏன் நமீதா போட்டோ என்று கரீட்டா சொல்லுங்க பார்கலாம்:)) இதில் ஒரு சூது இருக்கு.

அப்புறம் இதுபோல போட்டியின் மூலம் போட்டோ எடுக்கும் ஆர்வத்தை என்னிடம் ஏற்படுத்தியது போல பல பேருக்கும் ஏற்படுத்தி இருக்கும் என்பது நிச்சயம். ஆகவே அந்த PIT குழு நண்பர்களுக்கு என் பாராட்டுகள்.

19 comments:

  1. ம்ம்ம் மைன்ட்ல வெச்சிகரேன்

    ReplyDelete
  2. நமீதா ஸ்கர்ட்ல பூ படம் போட்டிருக்கே அதனால தானே !!

    ReplyDelete
  3. Baby Pavan said...
    ம்ம்ம் மைன்ட்ல வெச்சிகரேன்///

    பூவை மத்தவுங்க காதில்தான் நாம வைக்கனும் நீ ஏன் மைண்டில் வெச்சுக்க போற?:))))

    ********************
    மங்களூர் சிவா said...
    நமீதா ஸ்கர்ட்ல பூ படம் போட்டிருக்கே அதனால தானே !!////

    பின்னாடி கூட மரத்தில் பூ இருக்கு! அதெல்லாம் கிடையாது! கண்டுபிடிங்க பாருங்க!!!

    ***********************

    ReplyDelete
  4. ரொம்ப சிம்பிள், நீங்க விளையாடுறது அழுகுனி ஆட்டம் , ஓசை செல்லாவுக்கு லஞ்சமா.

    ReplyDelete
  5. நமீதா ஆன்டியே ஒரு பூன்னு சொல்றீங்களா

    ReplyDelete
  6. ஒப்பாரி said...
    ரொம்ப சிம்பிள், நீங்க விளையாடுறது அழுகுனி ஆட்டம் , ஓசை செல்லாவுக்கு லஞ்சமா.///

    ஹி ஹி கரீட்டா சொல்லிட்டீங்க. ஆனா லஞ்சம் என்று எல்லாம் தப்பா சொல்லபிடாது!

    ***********************
    Anonymous said...
    நமீதா ஆன்டியே ஒரு பூன்னு சொல்றீங்களா

    சித்தப்புங்களா கஷ்டபட்டு காஞ்சு போன ஊர்ல இருந்துக்கிட்டு போட்டோ எடுத்தா போட்டவ பத்தியும் ஏதும் சொல்லுங்கப்பா!!!:((
    எதை போட்டிக்கு அனுப்பலாம்?
    ************************

    ReplyDelete
  7. சித்தப்புங்களா கஷ்டபட்டு காஞ்சு போன ஊர்ல இருந்துக்கிட்டு போட்டோ எடுத்தா போட்டவ பத்தியும் ஏதும் சொல்லுங்கப்பா!!!:((//brother!summa kaanjipona oorunnu sollatheenga....paalaiwanathai solaiwanama aakki wechirukkaanga....lodukku kitta kelunga...photo edukkiren perwazhinnu ennai pora edam ellaam kaal kadukka nikka widuraru.....

    ReplyDelete
  8. //இதுவே காஞ்சு போன ஊரு இதுல எங்க இருந்து வகை வகையா பூக்களை போட்டோ எடுப்பது ஏதோ இருப்பதை வைத்து கொஞ்சம் அட்ஜெஸ் செஞ்சுக்குங்கப்பா!!!
    //

    இது ரொம்ப ஓவர். இத்தனை விதமான பூக்களை படம் புடிச்சு போட்டுட்டு... இத்தனை விதமான பூக்களை இங்கே (அமீரகத்துல) சாதரணமா சாலையோரங்களில் பார்க்கலாம். :)

    சரி சரி, எனக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சு. 'நச்'சுன்னு லஞ்சம் வேற கொடுத்திருக்கீங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. //!!!:((//brother!summa kaanjipona oorunnu sollatheenga....paalaiwanathai solaiwanama aakki wechirukkaanga....lodukku kitta kelunga...photo edukkiren perwazhinnu ennai pora edam ellaam kaal kadukka nikka widuraru.....//

    நான் சொன்ன காஞ்சி போன ஊரு வேற!!!:))))) அப்புறம் போட்டோ எடுப்பது போல் பால்வா காட்டிக்கிட்டு வேற எங்கயாவது லுக் விட்டுக்கிட்டு இருக்க போகிறார். ஜாக்கிரதை கவனம் தேவை:)))

    ReplyDelete
  10. லொடுக்கு said...
    /// இத்தனை விதமான பூக்களை இங்கே (அமீரகத்துல) சாதரணமா சாலையோரங்களில் பார்க்கலாம். :)///

    இப்படி எல்லாம் உண்மையை போட்டு உடைக்க கூடாது ஆமா,ரொம்ப கஷ்டபட்ட மாதிரி பில்டப் கொடுத்து வெச்சு இருக்கேன்:))

    ///சரி சரி, எனக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சு. 'நச்'சுன்னு லஞ்சம் வேற கொடுத்திருக்கீங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!////

    அவ்வ்வ்வ் நீங்க வேற போட்டிக்கு வர்றீங்களா, அப்ப நான் ஜகா வாங்கிக்கிறேன்!

    ReplyDelete
  11. குசும்பன்
    வேண்டாம் இந்த விளையாட்டு.. உங்களுக்கு வரவில்லை. (கடைசி போட்டோ தவிர):-))

    ReplyDelete
  12. படம் எல்லாம் சூப்பரா இருக்கு.

    எனக்கு பிடித்த சாமந்தி பூ வேற இருக்கு :)

    மரத்தில் சில மலர்கள் இருக்கலாம் ஆனால் ஒரு பூந்தோட்டமே மரத்தில் இருப்பதை இப்ப தான் பாக்குறேன்

    ;)

    ReplyDelete
  13. ஓசை நாட்டாமையா?அப்ப முதல் பரிசு உங்களுக்குத்தான்.கடைசிப் படமும் மற்றவற்றில் ஏதாவது அனுப்புங்க.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நமிதா வை பார்த்துகிட்டே போட்டிக்கு எந்த 2 படம்ன்னு சொல்லவே இல்லை.. நாங்க by default முதல் 2 படத்தை கணக்கில் எடுத்துக்கலாமா.. இல்லே.. நீங்களே சொல்லர்தா உத்தேசம் இருக்கா... முடிஞ்சா 15 தேய்திக்குள்ளேயாவது சொல்லுங்கப்பா.. பிளீஸ்...

    ReplyDelete
  15. delphine said...
    கண்ணா! நமீதா படம் நீ எடுத்ததா... நல்லா எடுத்திருக்கே. அதுதான் நல்லா இருக்கு.///

    உங்கள நல்ல டாக்டர் விட்டு உங்க கண்ண செக்கப் செய்ய சொல்லனும்:))
    ***************

    வடுவூர் குமார் said...
    குசும்பன்
    வேண்டாம் இந்த விளையாட்டு.. உங்களுக்கு வரவில்லை. (கடைசி போட்டோ தவிர):-))////

    என்னங்க போட்டோ அவ்வளோ மோசமாக எடுத்து இருக்கேனா? பரவாயில்லை, அதுக்காக வரவில்லை என்பதற்கா விட்டு விட முடியுமா.:)))

    **************************

    நாகை சிவா said...
    படம் எல்லாம் சூப்பரா இருக்கு.

    எனக்கு பிடித்த சாமந்தி பூ வேற இருக்கு :)

    மரத்தில் சில மலர்கள் இருக்கலாம் ஆனால் ஒரு பூந்தோட்டமே மரத்தில் இருப்பதை இப்ப தான் பாக்குறேன்

    ;)

    நன்றி சிவா! ஆனா பூந்தோட்டம் உட்கார்ந்த உடனே மரம் சாஞ்சிட்டே!!ஏன்?
    ************************

    நட்டு said...
    ஓசை நாட்டாமையா?அப்ப முதல் பரிசு உங்களுக்குத்தான்.கடைசிப் படமும் மற்றவற்றில் ஏதாவது அனுப்புங்க.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.///

    நன்றிங்க. பரிசு எல்லாம் கிடைக்காது, சும்மா ஒரு முயற்சிதானே!!

    ReplyDelete
  16. Deepa said...
    நமிதா வை பார்த்துகிட்டே போட்டிக்கு எந்த 2 படம்ன்னு சொல்லவே இல்லை.. நாங்க by default முதல் 2 படத்தை கணக்கில் எடுத்துக்கலாமா.. இல்லே.. நீங்களே சொல்லர்தா உத்தேசம் இருக்கா... முடிஞ்சா 15 தேய்திக்குள்ளேயாவது சொல்லுங்கப்பா.. பிளீஸ்...///

    இன்னும் எடுக்க வேண்டிய போட்டோக்கள் நிறைய இருப்பதால் சொல்லவில்லை, அதான் காரணம்.
    அப்படி இல்லை என்றால் முதல் இரண்டு போட்டிக்குன்னு வெச்சிடலாம்:)
    நன்றி தீபா!

    ReplyDelete
  17. the single one i think the 3rd one (single flower only) attracts me eventhough it is single out..another...group of double colour flowers....

    the last one - wat kind of flower it is...its name namitha...

    ReplyDelete
  18. இப்படி எல்லாம் போட்டோ போட்டா, நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

    அப்படியே இந்தப் புகைப்படப் போட்டிக்கும் டெம்ப்ளேட் ரெடி பண்ணுங்களேன்...

    ReplyDelete
  19. வலைச்சரம் சுட்டிய வழியில் வந்தேன். மலர்களை ரசித்தேன். அத்தனையும் அழகு. சரி இம்மாதப் போட்டிக்கு இன்றே கடைசி நாள். படம் அனுப்பி விட்டீர்களா?

    ReplyDelete