Monday, November 12, 2007

UAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை!

1) விசா

2) சம்பளம்

விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு வந்து தங்கி இரண்டு மாதம் வேலை தேடுவார்கள் தகுதி இருப்பின் இரண்டு மாத காலத்துக்குள் வேலை கிடைத்துவிடும் இல்லை என்றால் ஒரு மாதம் 500Dhs பணம் கூடுதலாககொடுத்து விசாவின் ஆயுளை நீடிச்சுக்கலாம்.
ஆனால் இப்பொழுது அதுக்கும் ஆப்பு வைத்துவிட்டது விசிட் விசாவில் யாரும் தங்கி வேலை பார்பது தெரியவந்தால் 50000Dhs அபராதம் அந்த company.
ஆகையால் பல company விசிட் விசா ஆட்களை எடுக்கதயங்குகிறார்கள்.

விசிட் விசாவில் வேலைபார்பதின் நன்மை தீமைகள்.

நன்மை: இரண்டு மாத காலத்தில் company நிஜ முகம் தெரிந்துவிடும் சம்பளம் ஒழுங்கா வருமா வராதா? company எதிர்காலம் எப்படி, இல்லை மன்னாரன் companyயா என்று கண்டுபிடித்துவிட்டு ஈசியாக வேறு வேலை தேடிக்கலாம்.

தீமை: லேபர் லா படி எந்த பலனையும் அடைய முடியாது, சம்பளம் தரவில்லை என்றால் கூட ஒன்னும் செய்ய முடியாது.

அடுத்தது எம்ளாயிமெண்ட் விசா:
இதில் இரண்டு வகை இருக்கிறது

1) Free zone visa 2) LLC visa

Free Zone Visa:
இது நம்ம ஊரில் இருக்கும் தொழிற்பேட்டை போன்றது ஒரு இடத்தில் பல companyகள் இருக்கும் அவை அனைத்தும் வெளிநாட்டு முதளீட்டார்களுக்கானது , வெளிநாட்டவர் தனியாக பிசினஸ் செய்யவேண்டும் என்றால் அவர்கள் இது போல் Freezone இடத்தில் ஆரம்பிக்கவேண்டும், அப்படி ஆரம்பிக்கும் company விசாவுக்கு எந்த வித கட்டுபாடும் கிடையாது,
1) படிப்பு சான்றிதழ் சரிபார்பு தேவை இல்லை (இல்லை என்றால் அதுக்கு ஒரு 10000ரூபாய் செலவு ஆகும்)

2) வேலை பிடிக்கவில்லை என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் ரிசைன் செய்யலாம்

3) எங்கு வேண்டும் என்றாலும் அடுத்த வேலைக்கு மாறலாம் எந்த தடையும் கிடையாது.

LLC visa:
Free Zone யை தவிர வேறு எங்கும் ஒரு சிறு டீ கடையோ அல்லது தொழிற்சாலையே ஆரம்பிப்பதாக இருந்தாலும் இங்கு இருக்கும் UAE குடிமக்களில் யாரேனும் ஒருவரை நீங்கள் பார்ட்னராக அவர் பெயரில் ஆரம்பிக்கதான் முடியும், அவர்கள் துனை இன்றி ஆரம்பிக்க முடியாது, ஏன் என்றால் இது அவர்கள் நாட்டில் தொழில் செய்வதால் அவர்களும் பயன் அடையனும், அதுக்கு என்று 40% அவருக்கு லாபத்தில் கொடுக்கவேண்டும் என்று அக்ரிமெண்ட் எல்லாம் போட்டவேண்டும் அப்படி ஆரம்பிக்கும் கம்பெணி LLC ஆகும். அதில் எம்ப்ளாயிமெண்ட் விசா கிடைக்க சான்றிதழ் சரி பார்த்தல் அவசியம்.
இதில் இருந்து அடுத்த company மாறுவது என்பது குதிரை கொம்பு.இந்தவிசாவை நீங்கள் கேன்சல் செய்துவிட்டுதான் அடுத்தவேலை மாறவேண்டும் அப்படி கேன்சல் செய்தால் அட்டோமேட்டிக்காக நீங்கள் ஆறுமாத காலம் இங்கு அமீரகத்தில் வேலை செய்ய முடியாதபடி லேபர் விசா தடை விழுந்துவிடும். ஆனால் நீங்கள் விசிட் விசாவில் வரலாம் அப்படி வந்தால் மேலே சொன்ன பல சிக்கல்கல் இருக்கிறது.
சில நல்ல உள்ளம் படைத்த company ஆட்கள் உங்களை ஒரு வருடம் உள்ளே நுழையமுடியாத படி Entrey Band போட்டுவிடுவார்கள்.

சில பெரிய company நினைத்தால் அல்லது கூடுதலாக 12,000Dhs பணம் கட்டினால் அந்த தடையை நீக்கமுடியும்.
முன்பு நான் இருந்தது Free Zone company ஆகையால் இரண்டு வருடம் கழித்து வேலை மாறினேன் இப்பொழுது இருப்பது LLC சில பல பிரச்சினைகளால் மாறனும் என்று நினைத்தாலும் மாறமுடியாமல் தவிக்கிறேன். நான் விளையாட்டக சொன்னேன் இனி அடுத்தவேலை என்றால் மலையாளி இல்லாத இடமாகதான் மாறனும் என்று தோழர் சொன்னார் அப்ப நீ எங்கயும் வேலை செய்யமுடியாது என்று.

அடுத்து சம்பளம்: துபாயில் ஒரு நான்கு பேர் மட்டும் இருக்கும் ரூமில் ஒரு பெட் ஸ்பேஸ் வேண்டும் என்றால் நீங்கள் கொடுக்கவேண்டியது குறைந்தபட்சம் 800 Dhs,வீட்டில் சமைத்து சாப்பிடும் ஆள் என்றால் பிரச்சினை இல்லை ஆனால் கிட்சனோடு ரூம் என்றால் குறைஞ்ச பட்சம் 1000Dhs கொடுக்கவேண்டும். நான் சொல்வது ஒரு ரூமில் நால்வராக தங்க.கல்யாணம் ஆனவர் மனைவியுடன் தனி ரூமில் தங்க வேண்டும் என்றால் வாடகை 4000Dhs துபையில், சார்ஜாவில் 1800ல் இருந்து கிடைக்கிறது. மற்றொரு குடும்பத்தோடு சேரிங் கிட்சன் என்றால் 2500dhs. முன்பு 25கிலோ அரிசி 45Dhs ஆக இருந்தது இன்று 68 Dhs. single பெட் ரூம் வீடு என்றால் துபையில் 6,000Dhs ஆகும்.

இப்படி எல்லாம் இங்கு விலை அதிகமாகிவிட்டது அதுக்கு தகுந்தபடி பிளான் செய்துப்பது சம்பளத்தை பேசிவிட்டு வருவது நலம்.

அதையும் மீறி பிரச்சினை என்றால் உதவி செய்ய இங்க பலர் இருக்கிறோம், பயப்படாமல் வாங்க.

இந்த பதிவு எழுத சிவாதான் காரணம் அவர் வித்யாகலைவாணி பதிவில்
"மங்களூர் சிவா said...
இங்கயே அப்ரைசல்ல எதிர்பாத்தது இல்லைனா அடுத்த வாரமே பேப்பர் போட்டுடறானுங்க!!!நான் GULF பத்தி ஆஹா ஓஹோன்னுல்ல நினைச்சேன்."


இதுக்காகதான் இந்த பதிவு.

ஜமாலன் அவர்களின் இந்த வசந்தம் பாலையாகும் வளைகுடா இந்தியர்கள். பதிவையும் படியுங்கள்.

34 comments:

  1. அருமையான தகவல்கள் குசும்பா..

    அதிலும் கடைசி வரி நச்.....

    இருந்தாலும் நமக்கு அங்குட்டு வரும் ஆசை இல்லை.... சேருவார் சரியில்லை அங்கன அதான் ;)

    ReplyDelete
  2. Super news, thanks for your information

    www.goldenenterprizes.com

    ReplyDelete
  3. நல்ல பதிவு.

    இது போன்றே

    * வேலை நேரம் பாதி வேலைக்கான பிரயாண நேரம் பாதி என நாளின் முழு நேரமும் பணி நிமித்தமாகவே செலவிடுவது...

    * பணியிடத்தில் மேலாளரின் அரசியல், மலையாளிகளின் ஏகாதிபத்தியம் இன்ன பிற

    * காலநிலை

    இன்னும் இருக்கும் பல கொடுமைகளையும் உங்கள் மொழியில் பதிவிடுவீர்கள் என எண்ணுகிறேன்

    நன்றி
    சிவராமன்
    sivaramang.wordpress.com

    ReplyDelete
  4. இருந்தாலும் நமக்கு அங்குட்டு வரும் ஆசை உண்டு...!!!

    ReplyDelete
  5. நான் இன்னும் மத்த பதிவு படிக்கல ஆனா, 6 வருசம் முன்னாடி இருந்ததை விட இப்ப 3 மடங்கு ஜாஸ்தி ஆகிவிட்டது போல இருக்கு.

    மிக்க நன்றி நண்பா நல்ல பயனுள்ள பதிவு, தேவை வரும் போது காண்டாக்ட் பண்ணரென்.

    ReplyDelete
  6. நல்ல ஆக்கபூர்வமான பதிவு. நன்றிகள் குசும்பன். தொடருங்கள்.

    ReplyDelete
  7. //UAE குடிமக்களில் யாரேனும் ஒருவரை நீங்கள் பார்ட்னராக அவர் பெயரில் ஆரம்பிக்கதான் முடியும், அவர்கள் துனை இன்றி ஆரம்பிக்க முடியாது, ஏன் என்றால் இது அவர்கள் நாட்டில் தொழில் செய்வதால் அவர்களும் பயன் அடையனும், அதுக்கு என்று 40% அவருக்கு லாபத்தில் கொடுக்கவேண்டும் என்று அக்ரிமெண்ட் எல்லாம் போட்டவேண்டும் அப்படி ஆரம்பிக்கும் கம்பெணி LLC ஆகும்.//

    freezone ல் இல்லாத பல வெளிநாட்டு கம்பெனிகள் உண்டு எ.க coopers Lebrand, Price Waterhouse, Meryl Lynch, இவர்கள் அரபிகளின் தொல்லையே வேண்டாம் என்று வங்கியில் Dhs. 500,000 or 1 million deposit செய்து விட்டு ஜாம் ஜாமென கம்பெனி நடத்துகிறார்கள்.

    ReplyDelete
  8. wazhakkampola unga kusumbu pathivaga irukkumonnu ninaichitten....nalla pathivu.....

    ReplyDelete
  9. குசும்பன்,

    மொதல்ல நன்றியை புடிங்க.

    எமிரேட்ஸ்னு இல்லை ஃபாரின் போகனும்னு மோகத்துல இருந்தவன்ல நானும் ஒருத்தன் ஆனா என்னோட ஒரே ஒரு கொள்கையால எனக்கு எந்த ஆஃபரும் கிடைக்கலை. (திறமை இல்லாததால் அல்ல ஏன் அதை இங்கே சொல்கிறேன் என்றால் இன்னைக்கு நான் இங்க ஆண்டவன் கருணையால் ஒரு நல்ல காம்பெனியில் மிக நல்ல வேலையில் இருக்கிறேன்).

    என்னோட கொள்கை என்ன என்றால் பயோடேட்டா பார்வர்ட் பன்றது (அப்பல்லாம் பாரின்க்கு அனுப்ப குறைந்தது 50 - 100ரூ ஆகும் இப்ப எல்லாம் ஆன்லைன் ஆயிடிச்சி) எந்த நாட்டு கம்பெனியா இருந்தாலும் அதுக்கு இந்தியால இன்ட்ர்வியூ அட்டெண்ட் பன்றதுக்கு மட்டும்தான் செலவு செய்வேன் மத்தபடி டிக்கெட்கு, விசாக்கு எல்லாம் கைல இருந்தோ கடன் வாங்கியோ செலவு செய்ய மாட்டேன்ற பிடிப்புல இருந்தேன்.

    இப்ப பாரின் வேண்டாம்கிற முடிவுக்கு நான் வந்துட்டேன். விரைவில் திருமணம் ஆக இருப்பதால்.

    நிறைய பேர் ஏஜன்ட் மூலமாவோ பாடிஷாப்பிங் மூலமாவோ வெளிநாட்டுக்கு போறாங்கன்றது எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.

    என்னுடைய உறவினர்களில் சிலரும் சில நண்பர்களும் கூட அங்கே இருக்கிறார்கள் ஆனால் அங்கிருக்கும் பிரச்சனைகளை இவ்வளவு ஆழமாக விவாதித்ததில்லை.

    நான் அபி அப்பாவின் ஒரு பதிவிலும், கலைவாணி அக்காவின் ஒரு பதிவிலும் 300திராம்ஸ், 400திராம்ஸ்க்கு அங்கு நம்மவர்கள் வேலை செய்கிறார்கள் என அவர்கள் எழுதியதற்கு நான் போட்ட பின்னூட்டமது.

    இன்றைக்கு இந்தியாவில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்றால் நான் அக்காவின் பதிவில் பின்னூட்டம் போட்டபடிதான்.

    அப்ரைசலுக்கு முன்பாகவே எப்படியும் இரண்டு ஆஃபர் லெட்டர் வாங்கிவிடுகிறார்கள் அப்ரைசலில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் அதை காண்பித்து ஹச்.ஆர்ல் பேசுகிறார்கள் ஒத்துவரவில்லை என்றால் அடுத்த தினமோ அல்லது அதற்கடுத்த தினத்திலிருந்தோ ஆள் ஆபீஸ்க்கு வருவதில்லை.

    இது பெரும்பாலான மிடில் லெவல் ஹை லெவல் மேனேஜ்மென்ட்டில் இருப்பவர்கள் பற்றிய பார்த்த கேட்ட எனது அனுபவம்.

    இந்தியாவில் வேலை வாய்ப்பு நிலமை நிரம்ப மாறிவிட்டது. +2 படித்தவர்களுக்கெல்லாம் கால் சென்டர்களில் 10000 ரூ க்கும் மேல் கிடைக்கிறது.

    கஷ்டப்படும் சாதாரண தொழிளாலர்களும் இருக்கிறார்கள் அவர்கள் கூட மாதம் 3000 -4000 எளிதாக சம்பாதிக்கிறார்கள்.

    இன்னும் நிறைய மனசுல இருக்கு பின்னூட்டம் ரொம்ப பெருசாயிடிச்சுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. free zone company யில் பிரச்சினை இல்லையா
    நீங்க மாறும் போது ஒருவேளை
    சுலபமா இருந்துருக்கும் போல
    free zone company யில் இருந்து
    ரிலீஸ் வாங்கறதுக்கு உள்ள
    cancel பண்ணிட்டு போய் வந்தர்லாம்
    ஆனா இங்க திரும்பி வந்து இருக்கற விலைவாசி
    நமக்கு கிடக்கிற சம்பளத்துக்கு ஒத்துவருமா ?

    ReplyDelete
  11. நண்பர் குசும்பனுக்கு...

    நல்ல பயனுள்ள பதிவு. ஓரளவு துபாய் நிலமையை தெளிவுபடுத்தினீர்கள். அங்குதான் அடுத்த படையெடுப்பை நடத்தலாம் என்று இருந்தேன். சவுதியில் எந்த பொழுதுபோக்கும் கிடையாது. சினிமா தொடங்கி தண்ணி வரை - துபாய் போன்று எந்த ரூம் சர்விஸீம் கிடையாது. அதனால் போன் சாப்பாடு போக மற்றவை மிஞ்சும். பெரும்பாலான கம்பெனிகள் அறையோ அல்லது அலவுன்ஸோ தந்து விடுவார்கள். அதனால் ரூம் பிரச்சனை எதுவும் இல்லை.

    ஆமா வாடகை நீங்கள் சொல்லியருப்பவை மாதவாடகைதானே? சவுதியில் பெரும்பாலும் 3 மாதம் 6 மாதம் அல்லது வருட வாடகைதான். single bedroom flat = 12,000 SR / year. double bedroom = 16,000 SR 3 bedroom flat = 20,000 SR. வருட வாடகை. அதனால் நீங்கள் குறித்திருப்பது மாத வாடகையாகத்தான் இருக்கும். 1SR is approximately equal to 1 DHS.

    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  12. குட் குட் சமத்து மாமா, நல்ல பதிவா போட்ருக்கீங்களே

    ReplyDelete
  13. கால்கரி சிவா என்கின்றவர் சவுதி, துபாயைப்பற்றி ஒரு காட்டுமிராண்டி நாடு என்பது போன்று தொடர்கள் எழுதினார். ஆனால், நீங்கள் கூறுவதைப் பார்க்கும் போது ஒரு முன்னேறிய நாட்டில் காணப்படும் நிறை, குறைகளைத்தானே காணமுடிகின்றது. தயவுசெய்து இதைப்பற்றி விளக்கவும். நன்றி.

    ReplyDelete
  14. இப்பத்தான்யா உருப்படியான பதிவு போட்டுருக்க. தொடருக

    ReplyDelete
  15. 13 Comments - Show Original Post
    Collapse comments

    நாகை சிவா said...
    அருமையான தகவல்கள் குசும்பா..

    அதிலும் கடைசி வரி நச்.....

    இருந்தாலும் நமக்கு அங்குட்டு வரும் ஆசை இல்லை.... சேருவார் சரியில்லை அங்கன அதான் ;)////

    நன்றி புலி:)

    அப்புறம் சேருவார் சரி இல்லை என்றால் இங்க இருக்கும் அனைவரும் ரொம்ப நல்லவங்கலா இருக்காங்களோ?:)

    ReplyDelete
  16. golden said...
    Super news, thanks for your information/


    நன்றி:)

    ReplyDelete
  17. siva said...
    நல்ல பதிவு. //

    சிவராமன் நீங்க சொல்லும் அந்த 3 கொடுமை எல்லாத்தையும் தனி தனி பதிவாக போடனும்.

    போட்டுவிடலாம்:)

    ReplyDelete
  18. ஆயில்யன் said...
    இருந்தாலும் நமக்கு அங்குட்டு வரும் ஆசை உண்டு...!!!///

    ஆபிசர்ங்க வரலாம் நடுத்தரவேலைக்கு வருபவர்களுக்குதான் திண்டாட்டம்

    ReplyDelete
  19. இம்சை said...
    நான் இன்னும் மத்த பதிவு படிக்கல ஆனா, 6 வருசம் முன்னாடி இருந்ததை விட இப்ப 3 மடங்கு ஜாஸ்தி ஆகிவிட்டது போல இருக்கு.

    மிக்க நன்றி நண்பா நல்ல பயனுள்ள பதிவு, தேவை வரும் போது காண்டாக்ட் பண்ணரென்.///

    நன்றி இம்சை, நான் வந்தபொழுது இருந்ததை விட இப்பொழுது இருப்பது அப்படிதான் இருக்கும் நீங்க சொல்லும் 6 வருடம் முன்பு என்றால் இன்னும் அதிகமாக இருக்கும் இம்சை.

    கண்டிப்பாக வரும் பொழுது பேசுங்க ஆனா நம்பர் வேண்டுமே உங்களுக்கு.என்ன செய்வீங்க:)

    ReplyDelete
  20. வித்யா கலைவாணி said...
    நல்ல ஆக்கபூர்வமான பதிவு. நன்றிகள் குசும்பன். தொடருங்கள்.///

    நன்றி வித்யா:)

    ************************
    M Poovannan said...
    //freezone ல் இல்லாத பல வெளிநாட்டு கம்பெனிகள் உண்டு எ.க coopers Lebrand, Price Waterhouse, Meryl Lynch, இவர்கள் அரபிகளின் தொல்லையே வேண்டாம் என்று வங்கியில் Dhs. 500,000 or 1 million deposit செய்து விட்டு ஜாம் ஜாமென கம்பெனி நடத்துகிறார்கள்.///

    இது எனக்கு புது தகவல் சொல்லியமைக்கு நன்றி:)

    ReplyDelete
  21. jaseela said...
    wazhakkampola unga kusumbu pathivaga irukkumonnu ninaichitten....nalla pathivu.....///

    நன்றிங்க:)

    ReplyDelete
  22. மங்களூர் சிவா said...
    குசும்பன்,

    மொதல்ல நன்றியை புடிங்க.//

    புடிச்சிட்டேன் அவுட்டேய்:)))))

    நீங்க சொல்வது சரிதான் இந்தியாவில் நல்ல வாய்பு இருக்கிறது என்பது ஆனால் இங்கு இருக்கும் வேலையை விட்டு விட்டு ரிஸ்க் எடுப்பது ரொம்ப கஷ்டம் ஆச்சே:(

    ReplyDelete
  23. ஜமாலன் said...
    நண்பர் குசும்பனுக்கு...

    நல்ல பயனுள்ள பதிவு. ஓரளவு துபாய் நிலமையை தெளிவுபடுத்தினீர்கள். அங்குதான் அடுத்த படையெடுப்பை நடத்தலாம் என்று இருந்தேன். சவுதியில் எந்த பொழுதுபோக்கும் கிடையாது. சினிமா தொடங்கி தண்ணி வரை///

    இங்கு அதுதானே முக்கியமான பொழுது போக்கு. எல்லோரும் காசை அதுக்குதானே கொட்டுகிறார்கள்.

    ///ஆமா வாடகை நீங்கள் சொல்லியருப்பவை மாதவாடகைதானே?//

    சந்தேகமே வேண்டாம் மாதவாடகைதான். அங்கு நீங்கள் சொல்லும் வாடகை மிகவும் குறைவாக இருக்கிறதே!!

    ReplyDelete
  24. நிலா said...
    குட் குட் சமத்து மாமா, நல்ல பதிவா போட்ருக்கீங்களே//

    நன்றி நிலா:)

    ReplyDelete
  25. வெங்கட்ராமன் said...
    நல்ல பயனுள்ள பதிவு.///

    நன்றி நண்பா!

    ReplyDelete
  26. அரசனூரான் said...
    கால்கரி சிவா என்கின்றவர் சவுதி, துபாயைப்பற்றி ஒரு காட்டுமிராண்டி நாடு என்பது போன்று தொடர்கள் எழுதினார். ஆனால், நீங்கள் கூறுவதைப் பார்க்கும் போது ஒரு முன்னேறிய நாட்டில் காணப்படும் நிறை, குறைகளைத்தானே காணமுடிகின்றது. தயவுசெய்து இதைப்பற்றி விளக்கவும். நன்றி.///

    இன்னைக்கும் இங்கு இருப்பவர்கள் சவுதியை பற்றி அப்படிதான் சொல்கிறார்கள் அதை பற்றி தெரியவில்லை. ஆனால் இங்கு துபாயில் அப்படி பட்ட பிரச்சினை ஏதும் கிடையாது எனக்கு இதுவரை அதுபோல் எந்த அனுபவமும் ஏற்பட்டது இல்லை. இங்கு பெண்களுக்கு என்றால் தனி மரியாதை இருக்கு, எந்த நேரமும் தனியாக வெளியே போகலாம் வரலாம், எந்தவித பிரச்சினையும் கிடையாது, விலைவாசி உயர்வு, அனைத்துக்கும் காசு போன்ற பிரச்சினைதான் இருக்கிறது. மற்றபடி இன பிரச்சினை, மதபிரச்சினை என்று எதுவும் கிடையாது.

    ReplyDelete
  27. முரளி கண்ணன் said...
    இப்பத்தான்யா உருப்படியான பதிவு போட்டுருக்க. தொடருக//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(((((((

    நன்றி:(((((((((((((((((((((

    ReplyDelete
  28. இன்னும் 2 மாத்தில் துபாய் செல்லவிருக்கும் எனக்கு பயனுள்ள விசயத்தை கூறியுள்ளீர்கள்..நன்றி...வேறு ஏதாச்சும் இருந்தா சொலலிருங்க தலைவா...கொஞ்சம் உதவியா இருக்கும்

    ReplyDelete
  29. Boston Bala said...
    Your blog mentioned in Dinamani kathir. தினமணிக் கதிரில் தமிழ் வலைப்பதிவர்கள் குறித்த அறிமுகம்

    Congrats :)///

    நன்றி பாலா ,இல்லை என்றால் எனக்கு தெரியாமல் போய் இருக்கும். மிக்க மகிழ்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  30. ஆகா, இது யாராச்சும் மண்டபத்துலே எழுதிக் கொடுத்து, குசும்பரு வான்ங்கிட்டு வந்து போட்டுட்டாரா - இல்ல தினமனிக் கதிர்லே வரணும்கறதுக்காக எழுதுனாரா ??

    எப்படி இருந்தாலும் குசும்பும் தொடரட்டும். இது- பரவா இல்ல தொடரட்டும்

    ReplyDelete
  31. வலைப்பதிவர்களுக்கு உருப்படியான தேவையான, தேவைப்படும் நேரத்தில் போடப்பட்ட பதிவு..

    குசும்பனாருக்கு ஒரு ஜே..

    ReplyDelete
  32. தகவல்களின் தேக்கிடமாக இருந்தது பதிவு,
    பயனுள்ள நல்ல பதிவு, தகல்வளுக்கு நன்றி.

    ReplyDelete