Sunday, October 21, 2007

ஆயுத பூஜை வந்தா கொண்டாட்டம் ஏன்?

டேய் தம்பி !!!

என்னம்மா?

அந்த கதவு சன்னல் நிலை எல்லாத்துக்கும் பட்டை போட்டு பொட்டு வை, அந்த மாவிலை தோரணத்தை எடுத்து கட்டு.

உன் சைக்கிள துடைச்சு பூ போடு..

சரிம்மா.அப்புறம் அந்த மம்புட்டி, அருவா, ஏர் கலப்பை எல்லாத்தையும் எடுத்து சாமி படத்துக்கு கீழ வை.

சரிம்மா

அப்புறம் உன் புக்கஸ்ல ஒன்னு ரெண்டு எடுத்து வை. அதை நாளை வரை திரும்ப எடுக்க கூடாது.


டேய் தம்பி எங்க பொழுது போன நேரத்தில் கிளம்புற...

கேரம் விளையாடம்மா...

டேய் பொழுது போன நேரத்தில் புக்க எடுத்து வெச்சு படிப்பா.

நீதானம்மா நாளை வரை புக் எல்லாம் எடுக்க கூடாதுன்னு சொன்ன. அதான் எல்லா புக்கையும் அங்க வெச்சுட்டேன்.

அம்மா:??????????????????????????

(புள்ளன்னா என்ன மாதிரி இருக்கனும் என்ன நான் சொல்வது)


எல்லோருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

13 comments:

  1. நீயி எப்படி உருப்படாமப் போனேன்னு ஊருக்கே பதிவு போட்டு சொல்லனுமாக்கும்

    ReplyDelete
  2. சேம் பிளேட் :)


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கண்மணி said...
    நீயி எப்படி உருப்படாமப் போனேன்னு ஊருக்கே பதிவு போட்டு சொல்லனுமாக்கும்////////


    "டீச்சர்" இல்லேன்னா மட்டும் தெரியாமலா போய்ட போகுது "டீச்சர்", என்ன நான் சொல்வது "டீச்சர்"? சரிதானே டீச்சர்?

    (டிஸ்கி: எதுக்கு இத்தனை டீச்சர் என்று யோசிக்கிறீங்களா, பசங்க உருப்பிடாம போவதுக்கு ஒரு காரணம் டீச்சருங்க கூடதான், இவுங்க என் கிளாஸ் டீச்சர் வேற, ஒரு மரியாதைதான்!!!)

    ReplyDelete
  4. நாகை சிவா said...
    சேம் பிளேட் :)

    வாழ்த்துக்கள்////

    நம்ம ஊரு ஆளுங்கல தட்டிக்க யாருமே இல்ல புலி... அதான் நீங்க சூடான்ல நான் இங்க துபாயில் :)

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்ம்ம் ஏமாந்தா காரம் போர்டைக் கூட பூஜைலே வைக்கலாம். எல்லாப் புத்தகமும் ( நாம எதுலே வீக்கோ அதெ வைச்சா நாம ஸ்டார்ங்க் ஆயிடுவோம் இல்லெ) வைச்சிடுவோம். பாட்டாப் பாடி பொம்பெளெங்க எல்லாம் முடிக்கற வரைக்கும் உக்காந்து சுண்டல் சாப்டுட்டு ஒடிப் போயிரலாம்.
    மறு நா காலைலே படிக்கனும்

    ReplyDelete
  6. :)

    ம் கொண்டாட்டம்தான்!

    ReplyDelete
  7. இன்னிக்கு தான் ஆயுதபூஜைய்யா !!!

    ReplyDelete
  8. எங்க வூடு எம்புட்டோ தேவலை.. மூணு நாளைக்கு புக்க அங்க இருந்து எடுக்கப்புடாதுன்னு சொல்லிடுவாங்க )

    ReplyDelete
  9. cheena (சீனா) said...
    சுண்டல் சாப்டுட்டு ஒடிப் போயிரலாம்.
    மறு நா காலைலே படிக்கனும்///

    சேம் பிளட்:))

    ReplyDelete
  10. கோபிநாத் said...
    இன்னிக்கு தான் ஆயுதபூஜைய்யா !!!///

    இதெல்லா கரீட்டா கேளு:(

    ReplyDelete
  11. நாமக்கல் சிபி said...
    :)

    ம் கொண்டாட்டம்தான்!//

    ஆமாம் தள:)

    ReplyDelete
  12. மின்னுது மின்னல் said...
    வாழ்த்துக்கள்//

    நன்றி மின்னல்

    ReplyDelete
  13. G3 said...
    எங்க வூடு எம்புட்டோ தேவலை.. மூணு நாளைக்கு புக்க அங்க இருந்து எடுக்கப்புடாதுன்னு சொல்லிடுவாங்க )///

    எவ்வளோ சூப்பரா இருக்கும் அதுபோல இருந்தா, இனி ரூல்ஸை மாற்ற சொல்லிடலாம்!!!

    ReplyDelete