Thursday, October 18, 2007

டக்குன்னு ஹிட் ஆக செய்யவேண்டிய ஐந்து

நீங்கள் தமிழ் பதிவுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது நம் பதிவை யாரும் சீண்டவே மாட்டேங்கிறாங்க என்று ரூம் போட்டு அழுபவராக இருந்தாலும் அதுக்கு நீங்கள் செய்யவேண்டியது.

1) "கண்டனம்" இது மிக முக்கியமான வார்த்தை. சும்மா அப்படியே உள்ள என்ன வேண்டும் என்றாலும் எழுதுங்க. தலைப்பில் இந்த வார்த்தை இருப்பது அவசியம்.

எடுத்துக்காட்டாக:

1) மாலனுக்கும் என் கண்டனம்,
2) ஜமாலனுக்கு என் கண்டனம்,
3) டவுசரை கிழிக்கும் லக்கிக்கு கண்டனம்,
4) தோழி தமிழச்சிக்கு கண்டனம்
5) மாசில்லாவுக்கு கண்டனம்

(இதுக்காக மாலன், ஜமாலன் பதிவு எல்லாம் படிச்சு இருக்கனும் என்றே, அல்லது அவுங்க எல்லாம் என்ன சொல்லி இருக்காங்க என்றோ தெரிஞ்சு இருக்க வேண்டும் என்ற அவசியம் கொஞ்சம் கூட இல்லை)

பெரிய ஆளுங்களுக்கு கண்டனம் என்று தலைப்பு வைக்கனும், அரசியல் தலைவர்களுக்கு கூட கண்டனம் தெரிவிக்கலாம் இப்ப பார்த்தீங்கன்னா அமெரிக்கா புஷ்சுக்கு கண்டனம் தெரிவிச்சு தஞ்சாவூர் மணி மண்டபத்துக்கு பக்கத்தில் 10 cm by 5 cmக்கு ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி இருப்பாங்க:)) அது போல் இல்லாமல் கண்டனம் தெரிவிக்கும் பொழுது ஆள் பார்த்து இடம் பார்த்து கண்டனம் தெரிவிக்கனும்.

சரி கண்டனம் என்று தலைப்பு வெச்சாச்சு உள்ள என்ன எழுதனும் என்று பிரச்சினையா அதெல்லாம் நமக்கு எதுக்கு? உள்ள இவுங்க எல்லாம் ஏன் என் பதிவை படிப்பதில்லை அதனால் தான் என் கண்டனம் என்று ஒரு நாலு வரி எழுதுங்க.

முக்கிய குறிப்பு:

குசும்பனுக்கு கண்டனம்,
கோபிக்கு கண்டனம்,
சோமுவுக்கு கண்டனம்,

என்று எல்லாம் தலைப்பு வெச்சா வியாபாரம் ஆகாது.


2) பகிரங்க கடிதம்: இதுவும் முக்கியமான வார்த்தை மேல் சொன்னது போல்
1) ஓசை செல்லாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
2) தமிழ்மணத்துக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
3) பெயரிலிக்கு ஒரு கடிதம்!!!
4) ஞாநிக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!

இப்படி கடிதம் எழுதலாம் , போஸ்ட் செய்யும் செலவும் இல்லை, அவுங்களும் படிக்க போவது இல்லை, ஆனால் நீ எப்படி இப்படி கடிதம் எழுதப்போச்சு என்று பின்னாடி பிரச்சினை வந்தாலும் வரலாம்!!

3)ஒரு கேள்வி?

1) ஓசை செல்லாவுக்கு ஒரு கேள்வி?
2) கோவி கண்ணனுக்கு ஒரு கேள்வி?
3) செந்தழல் ரவிக்கு ஒரு கேள்வி?
4) நட்சத்திரத்துக்கு ஒரு கேள்வி?
5) தமிழ்மணம் நிர்வாகத்துக்கு ஒரு கேள்வி?

காசாபணமா அது என்னா ஒரு கேள்விதான் கேட்கனுமா நிறைய கேள்வி எல்லாம் கேட்க கூடாதான்னு நீங்க அதிக பிரசங்கி தனமாக எல்லாம் யோசிக்க கூடாது, உள்ள எத்தனை கேள்வி வேண்டும் என்றாலும் கேளுங்க ஆனா தலைப்பை இப்படிதான் வைக்கனும்.

இல்ல முதலில் ஒரு பின்னூட்டம் யாருக்காவது போடுங்க அவுங்க பதில் போட்டா பாருங்க இல்லையா? டக்குன்னு கேள்வி கேட்டுவிடுங்க.
இல்ல அவுங்க பதில் சொல்லி இருந்தா எப்படி அவுங்க இப்படி சொல்லலாம் என்று ஒரு பதிவு போட்டுவிடுங்க.

4) வீக் end ஜொள்ளு
வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்
கவர்ச்சி புகைபடங்கள்

தலைப்பை இப்படி வெச்சுட்டு உள்ள படம் போட்டாலும் பார்த்து ரசித்துவிட்டு திட்டு விழும், ஏன் இப்படி பொது இடத்தில் படம் போடுறீங்கன்னு.
படம் போடவில்லை என்றாலும் அனானியாக வந்து திட்டு விழும் ஆனால் இதுபோன்ற தலைப்புக்கு அதிக பின்னூட்டம் கிடைக்காது ஆனால் ரகசியமாக எல்லாம் வந்து பார்த்துவிட்டு போவாங்க நிச்சயம் ஒரு 250 ஹிட்டாவது அதிகமாகும்.

5) ..................எதால் அடிக்கலாம்?
.....................இந்த ஜென்மங்களை எதால் அடிக்கலாம்?
தலைப்பை இப்படி வெச்சுட்டு கொசுவை எதால் அடிக்கலாம், மாட்டை எதால் அடிக்கலாம் என்று டவுட் கேட்டு எழுதுங்க ஆனால் தலைப்பை மட்டும் இப்படி வெச்சுடுங்க.



டிஸ்கி: உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டமாக கூட தெரிவிக்கலாம். இந்த பதிவை தமிழ்மண வழிகாட்டி, துறை சார்ந்த பதிவுகளில் இடம் பிடிக்க இருப்பதால் உங்கள் பெயர் அதில் வரக்கூடும்.

33 comments:

  1. இவ்வளவு சீரியஸா அட்வைஸ்'லாம் கொடுத்துட்டு இந்த பதிவை எதுக்கு ராசா நையாண்டி/நகைச்சுவை'ன்னு வகைப்படுத்தி வைச்சிருக்கே???

    :))

    ReplyDelete
  2. இது குசும்பு..

    ReplyDelete
  3. ஹாஹாஹா.. சூப்பர். ஆனால் இபப்டியெல்லாம் நான் எழுதினால், ஏன் ஃபிரண்டு உனக்கு இந்த வேண்டாத வேலைன்னு எல்லாருமே (நீங்களும்தான்) கேட்பீங்களே? :-P

    ReplyDelete
  4. delphine said...
    குசும்பனுக்கு ஒரு உதை.///

    இந்த தலைப்பு எல்லாம் வியாபாரம் ஆகாது...செல்லாது செல்லாது.:))

    ReplyDelete
  5. இராம்/Raam said...
    இவ்வளவு சீரியஸா அட்வைஸ்'லாம் கொடுத்துட்டு இந்த பதிவை எதுக்கு ராசா நையாண்டி/நகைச்சுவை'ன்னு வகைப்படுத்தி வைச்சிருக்கே???

    :))////

    அப்படியே பழக்கதோசமாயிட்டுங்க!!!
    நீங்க ஏதாவது சொல்லுங்க தல!!!

    ReplyDelete
  6. பெரிய தலைப் பதிவர்களே!குசும்பனை பதிவர் வட்டத்திலிருந்து நீக்குமாறு கண்டனம் செய்கிறேன்.

    ReplyDelete
  7. PRO said...
    இது குசும்பு..////

    வாங்க PRO, மிக்க நன்றி.



    நட்டு said...
    பெரிய தலைப் பதிவர்களே!குசும்பனை பதிவர் வட்டத்திலிருந்து நீக்குமாறு கண்டனம் செய்கிறேன்.////////

    ஆமாம் எப்ப சேர்த்தாங்க? சரி சரி வட்டம் போர் அடிக்குது சதுரம், முக்கோணம் என்று முயற்சிக்கலாம்!!!

    ReplyDelete
  8. .:: மை ஃபிரண்ட் ::. said...
    ஹாஹாஹா.. சூப்பர். ஆனால் இபப்டியெல்லாம் நான் எழுதினால், ஏன் ஃபிரண்டு உனக்கு இந்த வேண்டாத வேலைன்னு எல்லாருமே (நீங்களும்தான்) கேட்பீங்களே? :-P////

    ச்சே ச்சே பின்னூட்டமாக கேட்கமாட்டோம் பதிவு போட்டுவிடுவோம்!!!:)

    ReplyDelete
  9. உங்க டெக்னாலஜி-ல ஒரு பதிவு போட்டுட்டேன்...டக்குன்னு ஹிட்டாகலன்னா
    நீங்கதான் பொறுப்பு :-)!!

    ReplyDelete
  10. உங்க டெக்னாலஜி-ல ஒரு பதிவு போட்டுட்டேன்...டக்குன்னு ஹிட்டாகலன்னா
    நீங்கதான் பொறுப்பு :-)!!

    ReplyDelete
  11. //குசும்பனுக்கு ஒரு உதை.///

    இந்த தலைப்பு எல்லாம் வியாபாரம் ஆகாது...செல்லாது செல்லாது.:))//

    இது செல்லுமா பாரு:

    பின்னவீனத்துவ அடிவருடி குசும்பனைக் கொளுத்துவோம் வாருங்கள்!

    ReplyDelete
  12. இந்த வயசில சிவனே என்று ஓரம் குந்துங்கோ மாமா...

    ReplyDelete
  13. பின்னவீனத்துவ அடிவருடி குசும்பனைக் கொளுத்துவோம் வாருங்கள்////
    இது குசும்பு..

    ReplyDelete
  14. சந்தனமுல்லை said...
    உங்க டெக்னாலஜி-ல ஒரு பதிவு போட்டுட்டேன்...டக்குன்னு ஹிட்டாகலன்னா
    நீங்கதான் பொறுப்பு :-)!!///

    உங்க பதிவு ஆங்கிலத்தில் இருக்கு, தலைப்பிலும் பிழை இருக்கு, ஆகையால் இதுக்கு நான் பொறுப்பு அல்ல!!:)))

    ReplyDelete
  15. பினாத்தல் சுரேஷ் said...
    ///இது செல்லுமா பாரு:

    பின்னவீனத்துவ அடிவருடி குசும்பனைக் கொளுத்துவோம் வாருங்கள்!////

    அல்ரெடி கொளுத்திவிட்ட மாதிரிதானேய்யா இருக்கேன், மீண்டும் ஒரு தபாவா? பாவம்யா நீங்க அப்புறம்!!

    ReplyDelete
  16. :-))

    உங்க ' பேர ' நல்லா காப்பாதிட்டீங்க

    ReplyDelete
  17. மங்கை said...
    :-))

    உங்க ' பேர ' நல்லா காப்பாதிட்டீங்க///

    :-))), வாங்க மங்கை தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!!!

    ReplyDelete
  18. i m reading ur blog now a days, soperpa nala panreenga nalaiku aprunga

    ReplyDelete
  19. உங்க டெக்னாலஜிப்படி, பதிவின் உள்ளடக்கத்தை ஆராயக்கூடாது..ஒகேவா!! (அது பாப் மார்லே-வின் விசிறிகளுக்காக!!)
    ஆனால் பதிவின் தலைப்பு..உங்க கீ வேர்டு யூஸ் பண்ணியிருக்கேன்..மேலும்,
    கேள்வி-ன்ற வார்த்தைக்கு பதிலா ?
    போட்டுருக்கேன்..:-)!!

    ReplyDelete
  20. உங்க டெக்னாலஜிப்படி, பதிவின் உள்ளடக்கத்தை ஆராயக்கூடாது..ஒகேவா!! (அது பாப் மார்லே-வின் விசிறிகளுக்காக!!)
    ஆனால் பதிவின் தலைப்பு..உங்க கீ வேர்டு யூஸ் பண்ணியிருக்கேன்..மேலும்,
    கேள்வி-ன்ற வார்த்தைக்கு பதிலா ?
    போட்டுருக்கேன்..:-)!!

    ReplyDelete
  21. கார்த்திக் பிரபு said...
    i m reading ur blog now a days, soperpa nala panreenga nalaiku aprunga///

    மிக்க நன்றி கார்த்திக் பிரபு.
    (nala panreenga nalaiku aprunga) புரியலைங்க:(


    சந்தனமுல்லை said...
    ///உங்க கீ வேர்டு யூஸ் பண்ணியிருக்கேன்..மேலும்,
    கேள்வி-ன்ற வார்த்தைக்கு பதிலா ?
    போட்டுருக்கேன்..:-)!!///

    ஆங் அது எப்படி செல்லாது செல்லாது, அந்த ஒரு வார்த்தை இல்லை, நீங்க செல்லாவுக்கும் பொழுது.

    "நச்" செல்லாவாவுக்கு ஒரு "நறுக்" கேள்வி?

    செல்லாவால் இதுக்கு பதில் சொல்ல முடியுமா?

    அப்படின்னு உங்க கற்பனையையும் கொஞ்சம் சேர்த்துக்கனும் சந்தனமுல்லை.

    ReplyDelete
  22. குசும்பனுக்கு கண்டனம

    ReplyDelete
  23. குசும்பன்,

    //பினாத்தல் சுரேஷ் said...
    இந்த வயசில சிவனே என்று ஓரம் குந்துங்கோ மாமா...

    October 18, 2007 4:19 AM// இது நான் போட்ட பின்னூட்டம் அல்ல!

    ReplyDelete
  24. 2) கோவி கண்ணனுக்கு ஒரு கேள்வி?
    //

    குசும்பரே,

    குப்பை கூட சூடான இடுகைக்கு போய்விட்டது !

    ஆக்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி !
    :)

    ReplyDelete
  25. அடங்கு மவனே! இல்லாட்டி ஒரு பதிவு போட வேண்டி வரும்:-))

    ReplyDelete
  26. கலைஞரே இது நியாயமா...

    ஜெ. இது உங்களுக்கே அடுக்குமா...

    இது போல இருக்குற அத்தனை அரசியல் தலைவர்கள் பெயரை போட்டு ஒரு கேள்வி எழுப்பினால் இன்னும் எடுக்கும்...

    அது போக பெண்ணீயம்.. வேணாம் நமக்கு இது வேணாம்... ஆள விடுங்க சாமி...

    ReplyDelete
  27. இந்தப்பதிவால உங்க ஹிட் சர்ருன்னு ஏறிருக்குமே. ஆனாலும் பதிவு நல்லாருக்கு

    ReplyDelete
  28. குசும்பா !!! இது என்ன குசும்பா !!!
    ------------------------------

    குசும்பன் குசும்பை குசும்பாக அறிமுகப் படுத்தி உள்ளார்.

    ReplyDelete
  29. ஸ்ஸப்பாஆஆஆஆஆஆஆஆ
    இப்பவே கண்ணை கட்டுதே!!!!!!!!!!!

    ReplyDelete
  30. நல்ல பதிவு...!!!

    பல குசும்பர்களை உருவாக்குகின்ற பதிவு...!!!!


    பி.கு:-
    பின்னுட்டம் போடனும்மின்னா, பதிவு படிக்கனும்மா..பின்னுட்டததை மட்டும் படித்து இதை எழுதுகிறேன்...

    ReplyDelete
  31. Thalaippu seithikal
    -------------------
    Azhagana Pengkal mathiyil Sikkikonda Kusumbar..
    Virivana Seithikal
    ------------------
    Kusumbar enpavarin PHOTO eppadiyo leak aaki ilam pengal mathiyil sikkikondathaga sollappadukirathu..
    Appenkalukidaiyae enakku unakku enpathil nadantha ilupari sandaiyil..adithadi kalaattaa...
    மிக்க நன்றி கார்த்திக் பிரபு.
    (nala panreenga nalaiku aprunga) புரியலைங்க:(
    athavathu..neega nallaa eluthukireerkalam.. athuvum romba nalaikku appuramaga..not understand. you are writing/doing the things very well..that too after a long gap/time...is it correct..
    what a pity the person who made the said comment..leave it..he does not know, "u don't know how to read tanglish"
    am i correct?

    ReplyDelete