Tuesday, September 4, 2007

ஆபாச பின்னூட்டம் இடும் TBCD யார்?

கடந்த சில நாட்களாக TBCD யிடம் இருந்து பின்னூட்டம் வர தொடங்கியது, அடா அடா யாரோ புது வாசகர் போல நம் பதிவை படிச்சதும் மட்டும் இல்லாமல் பின்னூட்டமும் போட்டு இருக்கிறாரே என்று மகிழ்ச்சியில் இருந்தேன், மறு தினம் அவரிடம் இருந்து மெயில், நீங்கள் கலாய்க்க ஒருவரின் படத்தை இந்த மெயிலுடன் அனுப்பி உள்ளேன் அவரை கலாய்க்கவும் என்று!!!

படத்தை பார்த்தவுடன் தான் புரிந்தது இவர் கொஞ்சம் விவகாரமான ஆளாக இருப்பார் போல என்று!!! ஏன் என்றால் அவர் அனுப்பி இருந்தது என் பிளாக் புரொபைலில் இருக்கும் டாம் பூனை படம்.


சரி நானும் பதிலுக்கு இவர் நல்லவர் , அன்பானவர், இவரை எல்லாம் கலாய்க்க கூடாது என்று பதில் மெயில் அனுப்பினேன்.


திரும்ப அவரிடம் இருந்து ஒரு மெயில்


"பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன். கலாய்க்க புகைபடம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com "
(அப்படியே என் புரோபைலில் இருப்பதை காப்பி பேஸ்ட் செஞ்சு இதுக்கு என்ன பதில் என்கிறார் அவ்வ்வ்வ்வ்வ்:(((( )

அதனால் தான் அனுப்பினேன் கலாய்கவில்லை என்றால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று எச்சரிக்கை!!!
பிறகு அன்பு மழை பொழிந்து பின்னூட்டம் வரும், சாட்டில் வந்தாலே எங்கய்யா நான் அனுப்பின போட்டோவை கலாய்கவில்லையா என்று?
இல்லை என்றால் கொலுத்திவிடுவேன் என்று மிரட்டுவார், நானே அல்ரெடி கொலுத்திவிட்ட மாதிரிதான் இருக்கேன் என்று சொன்னாலும் கவனிப்பது இல்லை... சரி இதிலே எங்கே ஆபாசம் வந்தது என்கிறீர்களா?

ஆஆஆஆ என்று கதறும் அளவுக்கு பாசமாக பின்னூட்டம் இடுகிறார் அப்ப அவரு ஆபாச பின்னூட்டம் தானே இடுகிறார்.


12 comments:

  1. //ஆஆஆஆ என்று கதறும் அளவுக்கு பாசமாக பின்னூட்டம் இடுகிறார் அப்ப அவரு ஆபாச பின்னூட்டம் தானே இடுகிறார்.
    //

    உண்மைதான்!

    அவரை நான் வன்மையாகக்
    கண்(ண)டிக்கிறேன்!

    ReplyDelete
  2. ஆ பாசமுடையவர்களுக்கு..ஆ பாசமாகத் தானே..பின்னுட்ட வேண்டும்...

    என் கோரிக்கையை ஏற்று கலாயத்த...

    குசும்பா...நீ பிறவி குசும்பன்ய்யா..

    இனைய பதிவர்களின் சார்பாக..

    "செவாலியே குசும்பன்" என்று..பட்டம் தருகிறேன்..

    "செவாலியே குசும்பன்" ...கலாய்க்க..கலாய்க்க

    "செவாலியே குசும்பன்" ...கலாய்க்க..கலாய்க்க

    "செவாலியே குசும்பன்" ...கலாய்க்க..கலாய்க்க

    ReplyDelete
  3. //இனைய பதிவர்களின் சார்பாக..

    "செவாலியே குசும்பன்" என்று..பட்டம் தருகிறேன்..
    //

    இணையம் இங்கே இளைத்து இனையமாகி விட்டது!
    :)


    இருப்பினும் நான் இதனை வழி மொளிகிறேன்!

    ReplyDelete
  4. ஆமாம் தள உங்கள் வெற்றிக்காக உழைத்தவர் இவர்...

    ReplyDelete
  5. " TBCD said...
    ஆ பாசமுடையவர்களுக்கு..ஆ பாசமாகத் தானே..பின்னுட்ட வேண்டும்..."

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  6. //ஆமாம் தள உங்கள் வெற்றிக்காக உழைத்தவர் இவர்... //

    அது எனது வெற்றி அல்ல!
    எனக்காக உழைத்தவர்களுக்குக் கிடைத்த வெற்றி அது!

    ReplyDelete
  7. ஆஆஆ........பாசமா இருக்கே இந்தப் பதிவு!

    ReplyDelete
  8. நாமக்கல் சிபி said...

    "இணையம் இங்கே இளைத்து இனையமாகி விட்டது!:)"

    தவறை கூட நகைச்சுவையாக சொல்ல உங்களால் மட்டும்தான் முடியும்!!!!

    ReplyDelete
  9. //தவறை கூட நகைச்சுவையாக சொல்ல உங்களால் மட்டும்தான் முடியும்!!!! //

    உங்களை மாதிரி ரசிப்பதற்கு 4 பேர் இருந்தால் போதும்!

    உற்சாகத்தில் நகைச்சுவை கரைபுரண்டு ஓடும்!

    ReplyDelete
  10. I will recommend ACS to honour you with a Dr. Pattam. Dr. Kusumban..vazhga

    ReplyDelete
  11. I will recommend ACS to honour you with a Dr. Pattam. Dr. Kusumban..vazhga

    ReplyDelete
  12. உங்கள் அனவரையும் கூவத்தி போட்டு நாறடிக்க வேண்டும்.

    புள்ளிராஜா

    ReplyDelete