Monday, August 6, 2007

என் பார்வையில் பதிவர் பட்டறை + பாலபாரதிக்கு ஒரு வேண்டுகோள்

சென்னை பதிவர் பட்டறை என் பார்வையில்.







பால பாரதிக்கு சில ஆலோசனைகள்:
1) மேற்கண்ட படங்கள் என் பார்வையில் இப்படிதான் நான் எங்க வீட்டில் இருந்து பார்தால் தெரிந்தது, ஆகையால் அடுத்த முறை பட்டறை நடத்தும் பொழுது எங்கிருந்து பார்தாலும் தெரியும் படி உயரமான இடத்தில் நடத்தவும்.
(தள உலகில் இருக்கும் அனைவருக்கும் நீ கண்ணுக்கு தெரிவாய் ஏன்னா நீதானே எங்கள் ஸ்டார் மற்றவர்களும் தெரியும் படி ஏற்பாடு செய்யவும்.)
***************************************
2) உலகெங்கும் இருக்கும் வலை பதிவர்களும் பங்கு பெற வசதியாக நீங்கள் இலவச விமான டிக்கெட்டும் கூட ரெண்டு டிக்கெட்டுகளும் (குடும்பத்துக்குப்பா தப்பா நினைக்காதிங்க) அனுப்பி அவர்களையும் பங்கு பெற செய்யவேண்டும் (உன் சொந்த செலவில்) என்பதுதான் உன் கணவு என்று எனக்கு தெரியும் அதை உலகுக்கும் சொல்லிவிடு தள.
************************************
3) சாப்பாட்டுக்கு ஒரு டோக்கன் மட்டும் வாங்கி கொண்டு இரண்டாம் முறை சாப்பிட போன பொழுது "........................" வாங்கியதை நான் வெளியில் சொல்ல மாட்டேன், ஆனால் எங்கள் பா.க.ச தலைவருக்கே இந்த கதியா என்று அனைவரும் கொந்தளித்து போய் இருக்கிறோம், ஆகையால் அடுத்த முறை இரண்டு டோக்கன் கொடுக்கவும்.
************************************
4)இந்த முறை இந்தியன் எக்ஸ்பிரஸில் மட்டும் தான் நம் பா.க.ச பெயர் வந்துள்ளது அடுத்த முறை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், கன்யாகுமரி எக்ஸ்பிரஸ், ஜனசதாப்பதி எக்ஸ்பிரஸ் முடிந்தால் அமெரிக்கன் எக்ஸ்பிரஸிலும் உன் பெயர் வர செய்யவேண்டிய பொருப்பை பொன்ஸ் அக்கா, வினையூக்கு, JK, சிபி ஆகியோருக்கு கொடுத்துவிடவும்.
**************************************
இங்கனம்
அன்புடன்
தலைவர்
பா.க.ச கிளை
துபாய்.

17 comments:

  1. ஆகா,
    கிளம்பிட்டாங்கையா. . .
    கிளம்பிட்டாங்க.

    ReplyDelete
  2. பாலபாரதிக்கு ஒரு வேண்டுகோள் - yenaku train ticket kudutha kooda pothum

    ReplyDelete
  3. தல என் பார்வையும் இதே என்பதை தெரிவித்து கொ'ல்'கிறேன். அவசரமாக சின்ன திரை தீபாவெங்கட் போன் நம்பர் வாங்கி அனுப்பவும்!தேவை படுகிறது!

    ReplyDelete
  4. தலைவரா! அண்ணாச்சி, முத்துகுமரன், பெனாத்தலார் எல்லாம் ஊரில் இல்லைங்கிற தில்லுல தலைவர்னு போட்டுக்குறீரோ.. வரட்டும் வத்தி வைக்கிறேன்..

    ReplyDelete
  5. // பொன்ஸ்~~Poorna said...
    தலைவரா! அண்ணாச்சி, முத்துகுமரன், பெனாத்தலார் எல்லாம் ஊரில் இல்லைங்கிற தில்லுல தலைவர்னு போட்டுக்குறீரோ.. வரட்டும் வத்தி வைக்கிறேன்//

    ஆக்சுவலி நான் ஒரு மூத்த தல இருக்கும் போது குசும்பு குழந்தை கொஞ்சம் யோசிச்சி முடிவு எடுத்திருக்கலாம்!:-)

    ReplyDelete
  6. வெங்கட்ராமன் said...
    ஆகா,கிளம்பிட்டாங்கையா. . .
    கிளம்பிட்டாங்க.

    இன்னும் கிளம்பள,ஸ்டாட்டிங் பிராபிளம்.

    இம்சை said...
    பாலபாரதிக்கு ஒரு வேண்டுகோள் - yenaku train ticket kudutha kooda pothum

    இம்சை என்ன இது சின்ன புள்ள தனமா டிரெயின் டிக்கெட் எல்லாம் கேட்டு பால பாரதிய அசிங்க படுத்துறீங்க...

    பக்கதுல இருந்தாலும் எட்டி போய் பிளைட் புடிச்சு வாங்க...எல்லாம் எங்கள் தள பார்துப்பார்.

    அபி அப்பா said...
    தல என் பார்வையும் இதே என்பதை தெரிவித்து கொல்கிறேன்.

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  7. பொன்ஸ்~~Poorna said...
    தலைவரா! அண்ணாச்சி, முத்துகுமரன், பெனாத்தலார் எல்லாம் ஊரில் இல்லைங்கிற தில்லுல தலைவர்னு போட்டுக்குறீரோ.. வரட்டும் வத்தி வைக்கிறேன்...

    வத்தி வைங்க சூடம் வைங்க இல்ல பூ வைங்க ஒன்னும் பிரச்சினை இல்ல ஏன்னா என்னை இந்த பதிவு போட தூண்டி விட்டதே நீங்கதான்னு சொல்லிவிடுவேன்:)

    தள பால பாரதி உங்கள கலாய்ச்சா மட்டும் தான் அக்கா கமெண்ட் போட்டு ஊக்குவிக்கிறாங்க.....என்ன பிரச்சினை அக்கா கூட:)

    (அப்பாடா ரொம்ப நாள் ஆச்சு நாராயன வேலை பார்த்து)

    ReplyDelete
  8. அடடா!

    உங்க கடமை உணர்வை நாம் மெச்சினோம்!!

    பாலாபாய் இதைவிட பெரிய திட்டம் வைத்திருப்பாரு! வெயிட் பண்ணுங்க வந்து சொல்லுவாரு ;)

    :)))))))))))))

    பா.க.ச
    தலிம களகம்,
    சென்னை

    ReplyDelete
  9. அடுத்த பட்டரையை நிலவில் வைக்க சொல்லவும் நான் போனதே இல்லை...:(

    ReplyDelete
  10. \\அபி அப்பா said...
    // பொன்ஸ்~~Poorna said...
    தலைவரா! அண்ணாச்சி, முத்துகுமரன், பெனாத்தலார் எல்லாம் ஊரில் இல்லைங்கிற தில்லுல தலைவர்னு போட்டுக்குறீரோ.. வரட்டும் வத்தி வைக்கிறேன்//

    ஆக்சுவலி நான் ஒரு மூத்த தல இருக்கும் போது குசும்பு குழந்தை கொஞ்சம் யோசிச்சி முடிவு எடுத்திருக்கலாம்!:-) \\

    ;-))))) மிக சிறந்த நகைச்சுவை

    ReplyDelete
  11. We The People said...
    அடடா!

    உங்க கடமை உணர்வை நாம் மெச்சினோம்!!

    பாலாபாய் இதைவிட பெரிய திட்டம் வைத்திருப்பாரு! வெயிட் பண்ணுங்க வந்து சொல்லுவாரு ;)

    :)))))))))))))

    நன்றி. எங்க இன்னும் அவர காணும். ரொம்ப பெரிய திட்டமோ!!!

    ReplyDelete
  12. மின்னுது மின்னல் said...
    அடுத்த பட்டரையை நிலவில் வைக்க சொல்லவும் நான் போனதே இல்லை...:(

    இன்னுமும் நீ நிலா மேல பைத்தியமாதான் இருக்கீயா?

    கோபிநாத் said...
    ";-))))) மிக சிறந்த நகைச்சுவை "

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  13. 'தல' நம்மல விட பெரிய திட்டமா எதாவது வச்சிருப்பார்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. //அதை உலகுக்கும் சொல்லிவிடு தள.//

    'தல' எப்போ 'தள' ஆனார்? இப்படியே போனா, எங்க தலயை கள ஆக்கிடுவீங்க போல?

    ReplyDelete
  15. பா.க.ச. துபாய் கிளை தலைவருக்கு வணக்கமுங்கோ :-)

    ReplyDelete
  16. Kaleidoscope said...
    //அதை உலகுக்கும் சொல்லிவிடு தள.//

    'தல' எப்போ 'தள' ஆனார்? இப்படியே போனா, எங்க தலயை கள ஆக்கிடுவீங்க போல?

    இன்னும் ஆவலையா?


    ஜெஸிலா said...
    பா.க.ச. துபாய் கிளை தலைவருக்கு வணக்கமுங்கோ :-)

    வணக்கம் வணக்கம் வணக்கம்:) யாரு தலைவர்?

    ReplyDelete