Friday, August 24, 2007

ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)

சிகப்பு கலரில் இருப்பது கண்மணி எழுதிய கவிதை அதற்க்கு கீழே இருப்பது நான் எழுதிய எதிர் கவுஜ:)

ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]

ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)

உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.
பிரிவோம் என நினைத்திருந்தால்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் வேர்விட்டிருக்காது
காதல் பூத்தும் இருக்காது
கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.

தடுக்கி விழுவோம் என அஞ்சியிருந்தால்
அஞ்சு பாபி ஜார்ஜ் ஓடாமலே இருந்திருக்க கூடும்.
உடைவோம் என நினைத்திருந்தால்
எனக்கு பிடித்த முட்டை
கோழி வயிற்றிலேயே இருந்திருக்க கூடும்.
முட்டை வெளியே வந்தும் இருக்காது
வந்து என் கையில் சிக்கியும் இருக்காது.
உடைந்து முட்டைகள் வெந்து தணிந்து
ஆம்லேட் ஆவதுபோல.
வாந்துமுட்டையும், ஆமை முட்டையும்
மண்ணுக்குள்ளே இருந்திருக்கும்.

இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
உன்னிடம் பேசும் வரை
பேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்
காரணமே தெரியாமல்.
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.

இந்த ஆம்லேட்டை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
அதை எடுத்து சாப்பிடும் வரை
சாப்பிட்ட பிறகோ என்னையே வெறுத்து கொள்கிறேன்
காரணமே தெரியாமல்..
வெந்த முட்டைகளை விட வேகாத ஆப் பாயில்கள்
ருசி அதிகம்.


கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்
எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோ
எனப் பார்த்திருப்பதும்
மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில்
எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத்
தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது


கவனமாக திருப்பி போடப்பட்ட ஆம்லேட்டுகளில்
பச்சைமிளகாய் எங்கேனும் ஒளிந்துருக்குமா
என பார்பதும்
அதன் மேல் மிளகு தூள் தூவபட்டு இருக்குமா
எனத் தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது.


இலையுதிர் காலங்களுக்குப் பிறகு
வசந்தம் வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை

எனக்கு முன் ஆடர் செய்த ஆம்லேட்டுக்கு பிறகு
ஆப்பாயில் வந்துதானே ஆகவேண்டும்
காத்திருக்கிறேன் வரும் வரை...(சாப்பிடாமல்)

டிஸ்கி: ....எனக்கும் காதல் கவிதை
டிஸ்கி: எனக்கான ஆப்பாயில்

22 comments:

  1. கவுஜ சூப்பர், உங்களால மட்டும் எப்படி??? (ரூம் போட்டு யோசிப்பிங்களோ???????)

    ReplyDelete
  2. மருதமூரான். said...
    "கவுஜ சூப்பர், உங்களால மட்டும் எப்படி??? (ரூம் போட்டு யோசிப்பிங்களோ???????)"

    நன்றி மருதமூரான் முதல் வருகைக்கு!:))))

    ReplyDelete
  3. வாவ்!!!! அசத்தல். :-)))))

    ReplyDelete
  4. ஒரு சின்ன ஆம்லேட்ட வச்சு இவ்வளவு பெரிய கவிதையா. . . ?

    ஆம்லேட் சாப்டுகிட்டே யோசிச்சீங்களா. ..?

    ReplyDelete
  5. \\ .:: மை ஃபிரண்ட் ::. said...
    வாவ்!!!! அசத்தல். :-))))) \\\\

    ரீப்பிட்டேய் :))

    ReplyDelete
  6. குசும்பா அடுத்தவங்க கவுஜ[!!!!!!!!!] யைப் புடிக்காமா எப்ப சொந்தக் கவுஜயில [கால்ல] நிக்கப் போறே.

    ReplyDelete
  7. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு ஆம்லேட் மேட்டரு

    ReplyDelete
  8. கண்மணி said...
    குசும்பா அடுத்தவங்க கவுஜ[!!!!!!!!!] யைப் புடிக்காமா எப்ப சொந்தக் கவுஜயில [கால்ல] நிக்கப் போறே.

    அது என்னமோ தெரியலைங்க இந்த கவிதை மட்டும் வரவே மாட்டேங்குது:) என்ன என்னமோ செஞ்சுபார்துட்டேன், காதலிச்சா கவிதை வரும் என்றார்கள் சரின்னு ஐஸ்வர்யா ராயை காதலிச்சேன் அப்பயும் கவிதை வரவில்லை என்றால் பார்த்துகுங்களேன் :(

    ReplyDelete
  9. //சூப்பர், உங்களால மட்டும் எப்படி??? (ரூம் போட்டு யோசிப்பிங்களோ//

    இதுக்கெல்லாம் ரூம் போடுவாங்களா டாக்டர் சும்மா கலாய்க்கனும்னா தானா வரனும் இன்னொரு ரகசியம் நான் குசும்பன் மட்டும் இல்லை

    ReplyDelete
  10. //அது என்னமோ தெரியலைங்க இந்த கவிதை மட்டும் வரவே மாட்டேங்குது:) //

    ஏன் கயிறு கட்டி இழுக்கவேண்டியதுதானே?

    ReplyDelete
  11. //என்ன என்னமோ செஞ்சுபார்துட்டேன், காதலிச்சா கவிதை வரும் என்றார்கள் //

    எனக்கு தெரிஞ்சு காதலிச்சா கடிதம் வரும் அதுல கவிதை வருமான்னுல்லாம் தெரியாது

    ReplyDelete
  12. //சரின்னு ஐஸ்வர்யா ராயை காதலிச்சேன் அப்பயும் கவிதை வரவில்லை என்றால் பார்த்துகுங்களேன் :( //

    கணவுல அபிசேக் வந்தத சொல்லு குசும்பா

    ReplyDelete
  13. //ரீப்பிட்டேய் :)) //

    கோபி சொல்லாதது

    நான் அப்பீட்டோய்

    ReplyDelete
  14. //இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு ஆம்லேட் மேட்டரு //

    ஆம்லேட்டுன்னாலே டேஸ்ட்டுத்தான்

    ReplyDelete
  15. ரவுசு தான் போங்க

    ReplyDelete
  16. தேவ் | Dev said...
    "ரவுசு தான் போங்க"

    :)))))

    ReplyDelete
  17. Ayyiswarya vai kaathalithaal, abishek thaan varuvaar Ayyish ellaam varathu...abishek vaasal kathavai adaitthu viduvaar

    kavithai varavendum ental ayyis sai kaathalikaatheerkal, pakkatthu veettu ambujathai yo or ethirveettu alamelu vaiyo kaathaliyunkal...enna
    vij

    ReplyDelete
  18. இந்த ஆம்லேட் கவிதைக்கான கரு வெள்ளையா, மஞ்சளா?

    ReplyDelete
  19. நெசக்கவுஜய வுட உங்க கவுஜதான் சூப்பருங்கோ

    ReplyDelete
  20. சுகுணாதிவாகர் said...
    இந்த ஆம்லேட் கவிதைக்கான கரு வெள்ளையா, மஞ்சளா?

    அவ்வ்வ்வ் அது தெரியலையே:(((((

    ReplyDelete
  21. சின்ன அம்மிணி said...
    நெசக்கவுஜய வுட உங்க கவுஜதான் சூப்பருங்கோ


    சின்ன அம்மிணி, கண்மணி என்னை ஏற்கனவே தேடிக்கிட்டு இருக்காங்க இதுல நீங்கவேற:)))))))

    ReplyDelete
  22. //நெசக்கவுஜய வுட உங்க கவுஜதான் சூப்பருங்கோ //
    //வாவ்!!!! அசத்தல். :-))))) //
    ரீப்பிட்டேய் :))


    மங்களூர் சிவா.

    ReplyDelete