Thursday, August 16, 2007

இன்னாள் நண்பனுக்கு - எதிர் கவுஜ



நீயோ அல்லது நானோ சில
கணங்களேனும் தாமதித்திருந்தால்
(அந்த லாரி மேல மோதி இருக்கும்).
நிச்சயம் தவிர்த்திருக்கலாம் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட நம் சந்திப்பை....

(ஆமா என்ன செய்ய காலையில் கழுதை முகத்தை பார்த்தா நல்லது என்றார்கள்)


எனக்கான பார்வைகள் எதுவும்

உன்னிடமோ

உனக்கான வார்த்தைகள் ஏதும்

என்னிடமோ

மிச்சமிருக்கவில்லை அப்போது..

(நாங்க இலையில் வச்ச புல் மீல்சையே மிச்சம் வைக்க மாட்டோம் , பக்கத்து இலையையும் சேர்த்து காலி செய்வோம் இதுல பார்வை மிச்சம் இல்லை வார்தை மிச்சம் இல்லை என்று சொல்லிக்கிட்டு).


தப்பித்தல்களின் அவசரத்தோடு(ஜெயில் இருந்தா???)

நொடியொன்று இறக்கும்

அவகாசத்திற்குள்

விரைந்து கடந்தாய் என்னை..

(மின்னல் போல மறைந்தான் என்று சொல்ல என்னவெல்லாம் சொல்வீங்க, நொடி இறக்குது, நிமிசிசம் பிறக்குதுன்னு).


உன் முதுகில் பட்டுத்தெறித்த

என் பார்வைகள்

முனை மழுங்கி

மண்ணில் விழ....

(அதனால் என்ன ஸார்பினர் வச்சு திரும்ப சீவிக்கிட்டா போச்சு)


ஒப்பனைகள் கலைந்து

(உங்க மேக்கப் கலைஞ்சு போச்சா அய்யோ பாவம் மக்கள்)

விகாரமாய்ப் பல்லிளிக்கிறது

(அய்யனார் கிட்ட சொன்னா அந்த பெண் மாட்டி இருந்த கிளிப் ஒன்று ஆர்டர் செய்வார்)

என்றோ வெகு

புனிதமென

நான் கொண்டாடிய

உன் நட்பு...

(தீபாவளி கொண்டாடுவோம், பொங்கல் கொண்டாடுவோம் அது என்னா புச்சா)


டிஸ்கி: ஜெஸிலா நீங்க காயத்ரி பதிவில் போட்ட மாதிரியே இங்கும் அதே பின்னூட்டம் போட வேண்டும் :) அதுக்குதான் நம்ம அய்யனார் போட்டோ.



21 comments:

  1. SUPER KUSUMBAN
    PINNITTEENGA

    ReplyDelete
  2. சரவணா இன்னிக்கு உன்ன பனோரமா கூட்டிட்டு போலாம்னு இருந்தேன் ...நோ....நெவர்...

    :)

    ReplyDelete
  3. குசும்பரே என்னவச்சு காமெடி கீமடி பண்ணலையே! அய்யனார் படத்தை நான் விகாரமா இருக்குன்னு சொல்லணுமாக்கும். இதெல்லாம் சொல்லி தெரியுற விஷயமாப்பா :-))

    'சொல்லாமல் புரிந்துவிடும் விஷயம்' :-)) (பாட்டா படிச்சிடுங்க)

    ஒருவேளை லாரி மோதியிருந்தால் இப்படி ஒரு எதிர் கவுஜை பிறந்திருக்காது. வேறுவொரு கவுஜை கிடைக்காமலா போய்விடும் குசும்பு செய்ய? Cheerless :-)

    ReplyDelete
  4. //சரவணா இன்னிக்கு உன்ன பனோரமா //

    அப்ப குசும்பன் 'உங்கள் நன்பனா'??? ;-))

    ReplyDelete
  5. Mr. Kusumbu, you are crossing your limits and beyond with it. What do you think about கவுஜை'ஸ். DO you think that you are great?

    Yes, you are great and your explanation also.

    ReplyDelete
  6. அய்யனார் said...
    சரவணா இன்னிக்கு உன்ன பனோரமா கூட்டிட்டு போலாம்னு இருந்தேன் ...நோ....நெவர்...

    :)
    //

    நீர் திருடனா அவரு போலிஸா இது என்ன மாமுலா ..??

    ReplyDelete
  7. அடங்க மாட்டிங்களா.. நீங்க

    ReplyDelete
  8. உண்மையிலேயே கவிதையேல்லாம் உங்க பொழிப்புரை படிச்சப்பறம்தான் புரியுது.

    ReplyDelete
  9. :))

    நல்லா சொல்றீங்க டீடெய்லு :))

    ReplyDelete
  10. \\ அய்யனார் said...
    சரவணா இன்னிக்கு உன்ன பனோரமா கூட்டிட்டு போலாம்னு இருந்தேன் ...நோ....நெவர்...

    :) \\

    ம்க்கும்...இப்படி சொல்லிட்டு நேத்து எல்லோரும் எங்க இருந்திங்க ;)

    ReplyDelete
  11. அய்யனார் said...
    சரவணா இன்னிக்கு உன்ன பனோரமா கூட்டிட்டு போலாம்னு இருந்தேன் ...நோ....நெவர்...

    :)

    சீ சீ நாம் எல்லாம் நண்பர்கள் இல்லையா:(

    ReplyDelete
  12. ஜெஸிலா said...
    குசும்பரே என்னவச்சு காமெடி கீமடி பண்ணலையே! அய்யனார் படத்தை நான் விகாரமா இருக்குன்னு சொல்லணுமாக்கும். இதெல்லாம் சொல்லி தெரியுற விஷயமாப்பா :-))

    இதுக்கு நானே தேவலாம்:))))

    ReplyDelete
  13. Sridhar Venkat said...
    "அப்ப குசும்பன் 'உங்கள் நன்பனா'??? ;-)) "

    ஆமாம்:)

    ReplyDelete
  14. ILA(a)இளா said...
    Mr. Kusumbu, you are crossing your limits and beyond with it. What do you think about கவுஜை'ஸ். DO you think that you are great?

    Yes, you are great and your explanation also.

    துரை இங்கிலீஸ் பேசுது இங்கிலீஸ் பேசுது:))) (கோவை சரளா ஒரு படத்தில் இப்படிதான் சொல்வாங்க?)

    ReplyDelete
  15. காயத்ரி said...
    அடப் பாஆஆஆஆஆவீஈஈஈஈஈ!!

    :(

    இது என்ன அடுத்த கவிதைக்கு தலைப்பா? கூளு கொடுக்கிறீங்களா? கவிதாயினி

    ReplyDelete
  16. சும்மா அதிருதுல said...
    "நீர் திருடனா அவரு போலிஸா இது என்ன மாமுலா ..?? "

    சீ சீ லஞ்சம்


    சும்மா அதிருதுல said...
    அடங்க மாட்டிங்களா.. நீங்க

    ஏன் அடங்கனும்? வகுத்தலில் 8ல் 10 அடங்குதா? அது அடங்கினா நாங்களும் அடங்குவோம்:)

    ReplyDelete
  17. சின்ன அம்மிணி said...
    உண்மையிலேயே கவிதையேல்லாம் உங்க பொழிப்புரை படிச்சப்பறம்தான் புரியுது.

    நன்றி சின்ன அம்மிணி:)

    ReplyDelete
  18. G3 said...
    :))

    நல்லா சொல்றீங்க டீடெய்லு :))

    நன்றி நன்றி

    ReplyDelete
  19. கோபிநாத் said...
    "ம்க்கும்...இப்படி சொல்லிட்டு நேத்து எல்லோரும் எங்க இருந்திங்க ;) "

    நாங்க எல்லாம் ஓளிஞ்சு இருந்தோம் நீ கண்டுபிடிப்ப என்று:)))))

    ReplyDelete
  20. பொழிப்புரை நல்லா இருக்கு.
    :))))

    ReplyDelete