Tuesday, August 14, 2007

தமிழ்மண நுழைவு தேர்வு முடிவு

நடந்து முடிந்த நுழைவுதேர்வில் ஆர்வமுடன் பலபேர் கலந்துக்கொண்டனர், தேர்வு முடிவு என்றாலே வழக்கம் போல் பெண்கள் தான் முதல் இடத்தை பிடிக்கின்றனர். அது போல்தான் இங்கேயும் நம்ம ஜெஸிலாதான் முதல் இடத்தை பிடிக்கிறார். அவரை அடுத்து இரண்டாம் இடத்தை நம்ம வெங்கட்ராமனும் மூன்றாம் இடத்தை நம்ம ராம் நான்காம் இடம் இம்சையும் பெற்று இருக்கிறார்கள்.

தினதந்தி முதல் பக்கம்
நடந்து முடிந்த நுழைவு தேர்வில் முதல் இடம் பெற்ற ஜெஸிலா போட்டோவும் பேட்டியும் இடம் பெற்று இருக்கிறது.

கேள்வி: இந்த வெற்றி எப்படி உங்களுக்கு சாத்தியமானது?

பதில் : ஆபிஸில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் கூட வீனாக்காமல் தமிழ் மணத்திலேயே செலவிட்டேன்.

கேள்வி:இதுக்கு பின்னால் யார் இருக்கா?

பதில்: என் பின்னால் யாரும் இருந்தால் தமிழ்மணதை படிக்க முடியாமல் போய் இருக்கும். அதனால் பின்னால் யாரும் இல்லை.

கேள்வி: முதல் மார்க் வாங்கிட்டீங்க அடுத்து உங்கள் லட்சியம் என்ன?
பதில்: டாக்டர் ஆவது தான் என் லட்சியம். (எல்லாம் அப்படிதானே சொல்லுவாங்க).


தினகரன் முதல் பக்க செய்தி
பல சோதனைகளையும் தாண்டி சாதனை புரிந்த மாணவர் வெங்கட்ராமன்.

கேள்வி : நீங்க அதிக அளவில் சோதனைகளை சந்தித்து இருக்கிறீர்களாமே அப்படி என்ன?

முதலில் லக்கி கிட்ட மாட்டினேன் என்ன காரணம் என்றே தெரியவில்லை அவரு என் மேல கோவமா ஆயிட்டார். அடுத்து இளவஞ்சிக்கிட்ட சிக்கிசின்னா பின்னமானேன், அவருக்கும் என் மேல என்ன கொலை வெறியோ தெரியல. இரண்டு நாள் ரூம் போட்டு அழுதேன் தெரியுமா? இப்படி பல சோதனைகலை கடந்துதான் இந்த சாதனையை செஞ்சு இருக்கிறேன்.

தினமலர் செய்தி.

ஆபிஸில் பார்ட் டைமாக வேலை பார்த்து, இரவில் கண் முழித்து வேலை பார்த்த இளைஞர் ராம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.

கேள்வி: நீங்க இந்த வெற்றிய எதிர் பார்தீங்களா?

பதில்: ஜாகிர்கான் நன்றாக பால் போடும் பொழுதே வெற்றிய எதிர் பார்தேன். இந்தியா வெற்றி பெறும் என்று சொல்லி இருந்தேன்அது போலவே நடந்தது.

கேள்வி: நான் அத கேட்கலீங்க நீங்க மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து இருப்பதை கேட்கிறேன்?

பதில்: ஹோ அதுவா இது எல்லாம் சாதாரணம், எங்க ஊரில் நான் படிக்கும் பொழுது நான் தான் முதல் மார்க் வாங்குவேன். ஏன்னா நான் ஒருத்தவன் தானே எங்க ஊர் பள்ளி கூடத்தில் படித்தது.

கேள்வி: இந்த வெற்றிக்கு யார் யார் எல்லாம் காரணம்?

பதில் : எங்க மேனேஜர்தாங்க!

கேள்வி: எல்லாரும் அம்மா அப்பா டீச்சர் என்று சொல்லுவாங்க நீங்க வித்தியாசமா மேனேஜர் என்று சொல்றீங்க?

பதில்: ஆமாங்க அவருதானே என்ன ஆபிஸில் சும்மா உட்கார வச்சு இருக்கிறார் அதனால் தானே என்னால் படிக்க முடியுது. அப்ப அவருதானே காரணமாக இருக்க முடியும்.

மறு கூட்டலுக்கு விண்ணபங்கள் வரவேற்கபடுகின்றன. கட்டணம் $5000 செலுத்துபவர்களுக்கு முதல் மார்க் வழங்கபடும்.

18 comments:

  1. ஒன்னும் சொல்றதுக்கில்ல. . . .

    ReplyDelete
  2. vazhaippazhathil oosi etruwathu enpathu ithu thana kusumbu?hahahahah

    ReplyDelete
  3. என் சார்பா எங்கண்ணன் குசும்பர் 10000$ உங்க அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாராம் ;)

    ReplyDelete
  4. உன் பதிவிக்கு வந்து டெஸ்ட் எழுதினது குற்றமா:((

    ReplyDelete
  5. வெங்கட்ராமன் said...
    ஒன்னும் சொல்றதுக்கில்ல. . .

    என்ன வெங்கட்:( சோகமாயிட்டீங்க

    jaseela said...
    vazhaippazhathil oosi etruwathu enpathu ithu thana kusumbu?hahahahah

    அப்படி எல்லாம் ஒன்னும் ஊசி எல்லாம் எற்றவில்லைங்க:)

    ReplyDelete
  6. //மறு கூட்டலுக்கு விண்ணபங்கள் வரவேற்கபடுகின்றன. கட்டணம் $5000 செலுத்துபவர்களுக்கு முதல் மார்க் வழங்கபடும்.//

    இது சூப்பர் :-))))

    ReplyDelete
  7. G3 said...
    என் சார்பா எங்கண்ணன் குசும்பர் 10000$ உங்க அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாராம் ;)

    குசும்பர் எவன் அவன் இன்னும் வரவில்லை:) போலிகளை கண்டு ஏமாறா வேண்டாம் :)

    ReplyDelete
  8. /தினமலர் செய்தி.

    ஆபிஸில் பார்ட் டைமாக வேலை பார்த்து, இரவில் கண் முழித்து வேலை பார்த்த இளைஞர் ராம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.//

    ஹி ஹி... இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..... :)

    ReplyDelete
  9. பரிச்ச எழுதினாதா பாஸ் போடுவீங்களா?

    ReplyDelete
  10. //குசும்பர் எவன் //

    10000$ குடுத்ததால குசும்பன தான் குசும்பர்னு மரியாதையா சொன்னேன் :))

    ReplyDelete
  11. எலே!

    இப்படி பேப்பர்ல போட்டோ வரும்னு தெரிஞ்சிருந்தா பிட் அடிச்சாச்சும் பரிச்சை எழுதி இருப்பனே! இதெல்லாம் ஏன் மொதல்ல சொல்லல?

    ReplyDelete
  12. நீங்க கேட்ட அந்த முக்கியமான கேள்வி பதில் விட்டுப்போச்சே அதற்கு அபராதமா நீங்க $50000 அனுப்பி வையுங்க :-))

    தேர்வில் வெற்றி. பரிசு எங்கப்பா?

    அப்புறம் ஆங்கிலத்தில் jaseela என்று எழுதுவது லொடுக்கு வீட்டிலிருந்துங்கோ. நானில்லை.

    ReplyDelete
  13. Sridhar Venkat said...
    //மறு கூட்டலுக்கு விண்ணபங்கள் வரவேற்கபடுகின்றன. கட்டணம் $5000 செலுத்துபவர்களுக்கு முதல் மார்க் வழங்கபடும்.//

    இது சூப்பர் :-))))

    வாங்க Sridhar Venkat :)

    இராம் said...
    /தினமலர் செய்தி.

    ஆபிஸில் பார்ட் டைமாக வேலை பார்த்து, இரவில் கண் முழித்து வேலை பார்த்த இளைஞர் ராம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.//

    ஹி ஹி... இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..... :)

    ஹி ஹி :) நன்றி ராம்

    J K said...
    பரிச்ச எழுதினாதா பாஸ் போடுவீங்களா?

    இல்லேன்னா கொஞ்சம் அதிகம் செலவு ஆகும்:)

    ReplyDelete
  14. G3 said...
    //குசும்பர் எவன் //

    10000$ குடுத்ததால குசும்பன தான் குசும்பர்னு மரியாதையா சொன்னேன் :))

    10000$ குடுத்ததால :( அடங்கொக்கமக்கா பாருங்கய்யா இவுங்க விவரத்தை 10000$ கொடுத்ததால மரியாதையா சொன்னாங்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. தம்பி said...
    "எலே!இப்படி பேப்பர்ல போட்டோ வரும்னு தெரிஞ்சிருந்தா பிட் அடிச்சாச்சும் பரிச்சை எழுதி இருப்பனே! "

    எப்ப பாரு பிட் பிட் பிட் இத விட்டா தம்பி உனக்கு ஒன்னும் தெரியாதா? :)

    "இதெல்லாம் ஏன் மொதல்ல சொல்லல? "

    இதெல்லாம் என்ன பிளான் செஞ்சா எழுதினோம், கடைசியா முடிவு அறிவிக்க போகும் பொழுது தோனுச்சு:)

    ReplyDelete
  16. ஜெஸிலா said...
    நீங்க கேட்ட அந்த முக்கியமான கேள்வி பதில் விட்டுப்போச்சே அதற்கு அபராதமா நீங்க $50000 அனுப்பி வையுங்க :-))

    தேர்வு கமிட்டி: கோர்டில் வழக்கு தொடருங்கல்.

    "தேர்வில் வெற்றி. பரிசு எங்கப்பா?"

    சி.பா சிவந்திஆதித்தனார் அடுத்த வருடம் கொடுப்பார்

    "அப்புறம் ஆங்கிலத்தில் jaseela என்று எழுதுவது லொடுக்கு வீட்டிலிருந்துங்கோ. நானில்லை. "

    அதினாலதான் அவுங்களுக்கு பதில் போன பதிவில் சொல்லும் பொழுது மஞ்சு என்று சொல்லிவிட்டு சாரி சாரி ஜெஸில்லா என்றேன். :)

    ReplyDelete
  17. அதினாலதான் அவுங்களுக்கு பதில் போன பதிவில் சொல்லும் பொழுது மஞ்சு என்று சொல்லிவிட்டு சாரி சாரி ஜெஸில்லா என்றேன். :) ethanai thadavai solrathu???...naan aval illa...naan aval illa ....naan aval illa...manju perai ore oru dhaba thaan use pannen friends...so iam not manjooooooooo.......appuram enga ellaam manju perula pinnoottam wanthaalum ennai thorathi adikka poranuwa:{

    ReplyDelete
  18. //jaseela said...
    அதினாலதான் அவுங்களுக்கு பதில் போன பதிவில் சொல்லும் பொழுது மஞ்சு என்று சொல்லிவிட்டு சாரி சாரி ஜெஸில்லா என்றேன். :) ethanai thadavai solrathu???...naan aval illa...naan aval illa ....naan aval illa...manju perai ore oru dhaba thaan use pannen friends...so iam not manjooooooooo.......appuram enga ellaam manju perula pinnoottam wanthaalum ennai thorathi adikka poranuwa:{
    //

    :)))))

    semma comidy

    senshe

    from sharjah

    ReplyDelete