Tuesday, July 31, 2007

யார் திருந்தவேண்டும்?

"ஏய் செல்வி என்னடி வயல் பக்கமே வராத சின்ன ஐயா அடிக்கடி வயலுக்கு வருகிறார்?"

"எனக்கென்ன தெரியும் நீயே அவருகிட்ட கேளு"

"அடி சிறுக்கி அவருக்கு உன்ன புடிச்சு இருக்குன்னு என் கிட்ட சொன்னதை, உன் கிட்ட சொன்னதே நான் தான் என்கிட்டயேவா?"

"அதான் விசயம் தெரியுதுல்ல அப்புறம் என்ன நையாண்டி"

"அடியே பார்த்துடி புள்ள பட்டணதில் படிச்ச புள்ள கம்பி நீட்டிட போகுது"

"அக்கா ஒரு சந்தேகம்"

"என்னடி?"

"இல்ல ஒரு மாசத்து புள்ள வயித்தை உதைக்குமா?"

"அடியே எடுப்பட்டவளே என்னடி சொல்லுற"

"ஆமாக்கா ஒரு மாசமாச்சு படவே இல்ல"

"டேய் அவருகிட்ட சொன்னியாடி"

"சொன்னேன் வா இப்பவே அம்மன் கோயிலில் வச்சு தாலி கட்டுறேன் என்கிறார்"

“பார்துடி உங்க அப்பா நிதானத்தில் இருக்கும் பொழுது விசயத்தை பக்குவமா சொல்லுடி”

"எப்படியும் இன்னைக்கு ஆத்தா கிட்ட சொல்லிட போறேன்"

..................................................................................................................
"என்ன டா கருப்பா ஊர்ல ஒன்னும் இழவு சத்தமே கேட்கல நீ என்ன விறகு அடுக்கிகிட்டு இருக்க, யாருக்கு?"

நம்ம ராமய்யா பொண்னு செல்வி வயத்து வலி தாங்காம தூக்கு போட்டுக்கிட்டு அதுக்குதான்.

"அட போங்க டா இதோட இந்த வருசத்துல அஞ்சாவது வயத்து வலி சாவு" பெத்த புள்ள சங்க திருக எப்படிதான் மனசு வருதோ " எப்பதான் திருந்த போறானுங்களோ?

யார திருந்த சொல்றீங்க?

17 comments:

  1. கவிதை சூப்பர்.



    பின்குறிப்பு: யோவ் குசும்பரே உமக்கு சிறுகதை நல்லாவே வருது. அப்படியே மெயிண்டைன் பண்ணுய்யா. :)

    ReplyDelete
  2. என்ன கொடுமை சரவணன் இது?

    ReplyDelete
  3. chinna kathai thaan but it tells a message of - Ejamaanarkalin aadhikka thanmaiyaiyum plus(+) aan (Male domination) adhikkathin valuvaiyum simple aaka elumaiyaka valavala entu ilukkaamal, mudivirkku thaavi, enna nadanthirukkum enpathai vasakarkalin oogathirku vittu oru sabaass sai thatti sentuviteerkal
    - mr.kusumpan - ippadi sirukathai eluthi thaangalai
    munnerti kollalamae
    mano

    ReplyDelete
  4. யோவ் குசும்பரே உமக்கு சிறுகதை நல்லாவே வருது. அப்படியே மெயிண்டைன் பண்ணுய்யா. :)

    ReplyDelete
  5. Fast Bowler said...
    "பின்குறிப்பு: யோவ் குசும்பரே உமக்கு சிறுகதை நல்லாவே வருது. அப்படியே மெயிண்டைன் பண்ணுய்யா. :)"

    :( நல்லா இருங்க Fast Bowler.

    ஒரு பக்க அல்ல ஒரு நிமிட கதை எழுதி பார்கலாமே என்ற முயற்சி.


    மகேந்திரன்.பெ said...
    என்ன கொடுமை சரவணன் இது?


    நீங்க எப்படி செல்றீங்கன்னு தெரியலை மகி இருந்தாலும் சொல்கிறேன், இது போல் பல சம்பவங்கள் நடக்கும் எங்கள் பக்கம்,

    " ஊர்ல ஒன்னும் இழவு சத்தமே கேட்கல" இதில் இருந்தே நீங்க புரிந்திக்கலாம் அக்கம் பக்கம் சொந்தகாரர்கள் யாருக்கும் சொல்ல மாட்டார்கள் யாருக்குமே தெரியாது, போய் காரியம் செய்துவிடுவார்கள்.

    "யார திருந்த சொல்றீங்க? "

    காதலிக்கும் பெண்னை சொல்வதா, கவுரவம் தான் முக்கியம் என்று கொலை செய்யும் அவள் குடும்பத்தை சொல்வதா, இல்லை அந்த பையனை சொல்வதா?

    ReplyDelete
  6. mr.kusumpan - ippadi sirukathai eluthi thaangalai
    munnerti kollalamae
    mano

    மிக்க நன்றி மனோ:)

    ReplyDelete
  7. வெங்கட்ராமன் said...
    யோவ் குசும்பரே உமக்கு சிறுகதை நல்லாவே வருது. அப்படியே மெயிண்டைன் பண்ணுய்யா. :)

    எங்க தல ரொம்ப நாளா ஆள கானும், பிஸியா.

    நீங்க உள் குத்து வச்சு ஏதும் சொல்ல மாட்டீங்க..:) நன்றி

    ReplyDelete
  8. அட அடுத்தடுத்து சிறுகதையா அசத்துங்க.

    ReplyDelete
  9. கொடுமை!. நடக்குறத அப்படியே போட்டுட்டா எப்படி?.
    அதுக்கும் மேல ஒரு தீர்வை அல்லது எதிர்பார்ப்பை அல்லது உங்க குசும்பையாவாது கொஞ்சம் ஒட்ட வச்சு பாருங்களேன். கதை அழகா முடிஞ்ச மாதிரி இருக்கும்.
    கதை பாதியில தொங்குதய்யா!!.

    ReplyDelete
  10. சூப்பர் சிறுகதை.இதையே தொடர்ந்து ரெண்டாவது பகுதி எழுதுங்க. தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்னு முடிங்க.

    ReplyDelete
  11. கோபிநாத் said...
    நல்லா இருக்கு ;-)

    நன்றி கோபி:)

    முத்துலெட்சுமி said...
    அட அடுத்தடுத்து சிறுகதையா அசத்துங்க.

    நன்றி முத்துலெட்சுமி:)

    delphine said...
    கதை நல்லா இருக்கு..ஆனால் வயிற்றுவலி.. சாவு.. என்னவோ மாதிரி இருக்கு.... கதை எழுதலாமே

    கதை எழுதலாமே ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  12. சுல்தான் said...
    கொடுமை!. நடக்குறத அப்படியே போட்டுட்டா எப்படி?.

    வாங்க சுல்தான் கொடுமை கதையா? என்ன செய்ய சும்மா எழுத முயற்சிக்கிறேன். அதுவரை பொறுத்துக்குங்க.


    நாமக்கல் சிபி said...
    Good Narration Kusumban!

    Keep It Up!

    நன்றி தள:)

    Chinna Ammini said...
    "சூப்பர் சிறுகதை.இதையே தொடர்ந்து ரெண்டாவது பகுதி எழுதுங்க."

    சும்மா தானே சொல்றீங்க! காமெடி கீமெடி செய்யிலியே!

    ReplyDelete
  13. நல்ல சிறுகதை... இதுக்கு முடிவுனு ஏதாவது சொல்லி சொதப்பாம இருந்தது இன்னும் நல்லா இருக்கு...

    ReplyDelete
  14. நல்ல முடிவு. குசும்பா கலக்கிட்டீருய்யா.

    ReplyDelete
  15. குசும்பா, இது மாதிரி நிறைய நடக்குது. என்னிக்கு தான் இது எல்லாம் ஒழியுமோ தெரியலை.

    ReplyDelete