Tuesday, December 6, 2011

சர்ப் எக்ஸ்சல் நாவல் உருவாகிய விதம்.

பாகம்1:

மனைவி: என்னங்க கொஞ்சம் மளிகை கடையில் சாமான் வாங்க வேண்டியிருக்கு...எனென்னன்னு சொல்றேன்...கொஞ்சம் எழுதிக்கொடுங்க.

எழுத்தாளர்: எழுத்தாளனுக்கு வந்த சோதனை...ஒரு நாவல் எழுதும் பொழுது மளிகை கடைக்கு ரோக்கா எழுத சொல்றீயே...

மனைவி: இட்லி மாவு அரைச்சிக்கிட்டு இருக்கேன்..கையெல்லாம் மாவு..கடை பையன் வந்துடுவான்...கொஞ்சம் எழுதிக்கொடுங்க.

எழுத்தாளர்: சொல்லு..சொல்லித்தொலை...

மனைவி: உப்பு ஒரு கிலோ...மஞ்சள் தூள் கால் கிலோ, புளி ஒரு கிலோ...

எழுத்தாளர்: ம்ம்ம்

மனைவி: சன்பிளவர் ஆயில் 2லிட்டர், எழுதுறீங்களா?

எழுத்தாளர்: ஆஹா நீ சொன்னதை எல்லாம் எழுதிக்கொண்டு இருந்த நாவல் பேப்பரிலேயே ஏழுதிட்டேன்... சரி வுடு...வேற பேப்பரில் எழுதித்தாரேன்.

********

பாகம்2:

மனைவி: என்னங்க ஐய்யப்பன் சரணம் சொன்னா நல்லது நடக்குமாம்...என் ப்ரெண்டு 108 சரணமும் ஏழுதிக்கொடுத்தா...

எழுத்தாளர்: எங்க காட்டு...

மனைவி: இந்தாங்க நீங்களும் முடிஞ்சா சொல்லுங்க..

எழுத்தாளர்: இங்க வெச்சிட்டுப்போ..

(எழுத்தாளர் மறந்துப்போய் எழுத்திக்கொண்டு இருந்த நாவலின் நடுவில் வைத்துவிடுகிறார்...)

ப்ரூப் பார்க்கும் பொழுது...

"சார்...நடுவுல ஐயப்பன் சரணம் பேப்பர் எல்லாம் இருக்கு.."

"அவரு எது ஏழுதினாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். அதுல இருப்பது எல்லாத்தையும் பிரிண்ட் செய்யனும்"

*********

பாகம் 3:


எழுத்தாளர்: இங்க இருந்த காண்டம் பாக்கெட்டை பார்த்தியா?

நண்பி: இல்லீயே...எங்க இருந்தா என்ன? இப்ப நான் கொஞ்சம் பிஸி வரமுடியாது...

எழுத்தாளர்: நீ வரவேண்டாம்...நான் சாட் செய்யப்போறேன்...அதுக்குதான் காண்டம் எங்கன்னு தேடுறேன்...

நண்பி: ங்கேகேகே...:(

(எழுத்தாளர் சிஸ்டத்தில் இருந்து கொஞ்ச நேரத்தில் oh god oh god oh god என்று சத்தம் வருது...)

நண்பி: அடப்பாவிங்களா சாட் செய்யும் பொழுது கூட சவுண்டு எல்லாம் கொடுத்து ஒரு ரியாலிட்டியோடதான் சாட் செய்வீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்

********
பாகம் 4:

எழுத்தாளர்: என்னம்மா சோகமா இருக்க?

மனைவி: சொந்தக்காரங்க ஒருத்தவங்க இறந்துட்டாங்க, அவுங்க வீட்டுக்கு போவனும் இடம் தெரியல...

எழுத்தாளர்: போன் போட்டு இடம் எங்கன்னு கேளு நான் ரூட்டு போட்டு தருகிறேன்....

மனைவி: சரி... சென்னியம்மன் கோவிலுக்கு பக்கத்தில்..வேளச்சேரி 100 அடி ரோட்டில் முதல் லெப்ட் எடுக்கனுமாம்...அங்க ஏரிக்கு பக்கத்தில் இருக்குதாம் சுடுகாடு..

எழுத்தாளர்: லொக்கேசன் மேப் வரைகிறார்...

மனைவி: அட இது தெரிஞ்ச இடம் தான்...நான் போய்க்கிறேன்..

எழுத்தாளர்: இந்தா இந்த பேப்பரை எடுத்துக்கிட்டு போ..

மனைவி: இல்லை வேண்டாம்..தெரியும்.

(எழுத்தாளர் மறந்து போய் அந்த படம் வரைந்த பேப்பரையும் நாவல் எழுதிய பேப்பர் கட்டில் சேர்த்துவிடுகிறார்.)

**********
பாகம்5:

மனைவி: என்னங்க...உங்க டேபிளில் ஒரு சமையல் குறிப்பு எழுதி வெச்சிருந்தேன்.. பார்த்திங்களா?

எழுத்தாளர்: இல்ல.. அதை ஏன் என் டேபிளில் வெச்ச?

மனைவி: இல்லீங்க டீவியில் சமையல் குறிப்பு நிகழ்சி பார்த்துக்கிட்டு இருந்தேன்.. அவசரத்துக்கு பேப்பர் பேனா கிடைக்கவில்லை...அதான் ..

(எழுத்தாளர் அந்த பேப்பரின் பின் பக்கத்தில் தான் நாவலை தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார் என்பது மனைவிக்கும் அவருக்கும் தெரியாது.)

********

பாகம் 6:
பதிப்பகத்தில்...தொகுத்துக்கொண்டு இருப்பவர்..

ஹரி: என்னய்யா நாவலுக்கு நடுவில் காண்டம் பாக்கெட் இருக்கு?

கிரி: அன்னைக்கே சீனியர் சொல்லிட்டாரு...அதுல எது இருக்கோ அப்படியே பிரிண்ட் செய்யனும் ஏன்று...

ஹரி: இதை எப்படியா பிரிண்ட்ல ஏத்த முடியும்..

கிரி: பாக்கெட்டை பிரிச்சி...அதை வெளியில் எடுத்து ...ஒரு பேப்பரில் வெச்சி அவுட் லைன் வரைஞ்சிடு..

*********

பாகம் 7:

ஜோசியக்காரன்: என்ன சார் ஜோசியம் பார்க்கனுமா? பில்லி சூனியம் ஏவல் எடுக்கனுமா?

எழுத்தாளர்: ஜோசியம் எல்லாம் வேண்டாம்...எனக்கு இந்த பேப்பரில் எந்திரம் ஒன்னைப்போட்டுக்கொடு..

ஜோசியக்காரன்: என்ன எந்திரம் வேண்டும்? தனலெட்சுமி வீட்டுக்கு வர ஒரு எந்திரம் இருக்கு போட்டுதரவா? ஆனா அதை தகட்டில் தான் போடனும்..பேப்பரில் எல்லாம் போடக்கூடாது.

எழுத்தாளர்: தகட்டை எல்லாம் பதிப்பகத்தில் கொடுக்கமுடியாது...நீ இந்த பேப்பரிலேயே வரைந்து கொடு.

ஜோசியக்காரன்: சரி

எழுத்தாளர்: தனலெட்சுமி வீட்டுக்கு வருவதுக்கு இருப்பது மாதிரி குஷ்பூ புத்தக வெளியீட்டுக்கு வரவைக்க எதுவும் எந்திரம் இருக்கா?

ஜோசியக்காரன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*************



29 comments:

  1. என்னத்த சொல்ல :-)))))))))))))))

    ReplyDelete
  2. //கூட்டத்தில் எக்ஸைல், எக்ஸைல் என பலமுறை சொல்லக்கேட்டு, இடையிடையே செக்ஸ், செக்ஸ் என பலமுறை சொல்லக் கேட்டு, இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரு ரசவாதம் ஏற்பட்டு, நேற்றிரவு கனவில் ஷகீலா, ஷகீலா என எதிரொலித்துக்கொண்டிருந்தது. இதுவரை என் கனவில் ஷகீலா வந்ததே இல்லை. சாருவின் புண்ணியத்தில் ஷகீலா வந்துவிட்டார். சாரு எழுத்தின் ரகசியம் புரிந்தது.//

    http://socratesjr2007.blogspot.com/2011/12/blog-post_06.html

    ReplyDelete
  3. "சர்ப் எக்ஸ்சல் நாவல் உருவாகிய விதம்." குசும்பு........

    ReplyDelete
  4. அதுசரி. போட்டால குறுந்தாடி இல்லையே

    ReplyDelete
  5. சாட் ஹிஸ்டரி பிரிண்டுக்கு போகலையா?

    ReplyDelete
  6. Nice......super....
    Innum ethir parkkiren.......

    ReplyDelete
  7. போட்டு தாக்குங்குங்க .....

    ReplyDelete
  8. செம்ம்ம்ம்ம:))))))))))))

    ReplyDelete
  9. கலக்கல்ஸ் மாப்பி :-))))

    ReplyDelete
  10. பின்னிட்டீங்க குசும்பரே! ::))))

    ReplyDelete
  11. சூப்பர், இதையும் சேர்த்துக்குங்க. பழைய புஸ்தகதையெல்லாம் பேப்பர் பேப்பரா பிய்த்து தண்ணிர் சுட வைக்கப் வெச்சுருந்த குப்பையில கொஞ்சமும் பிரெஸ்ஸுக்குப் போய் சேந்துடுச்சு. அதனால் தான் நான் - லீனியர் நாவலா ஆய் டுச்சு.

    ReplyDelete
  12. செம்ம செம்ம ..,சார்

    இப்படிக்கி உங்கள் நீண்ட கால வாசகன்
    பனங்காட்டு நரி

    ReplyDelete
  13. ஹ..ஹ...ஹா.....வி.வி.சி.

    அடுத்தது யாரோ ???

    ReplyDelete
  14. எனக்கு பஸ்ஸில் பகிர்ந்த எந்திரன் நாவல் ரொம்ப பிடிச்சிருந்தது, அது எப்போ பப்ளீஷ் ஆகும்!?

    ReplyDelete
  15. குமுதம் வார இதழ், குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் ஜோதிடம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் சினேகிதி, குமுதம் ஹெல்த் ஸ்பெஷல், குமுதம் தீராநதி ஆகிய ஒவ்வொன்றிலும் சில பக்கங்களைக் கிழித்தெடுத்து சீட்டுக்கட்டு போல் கலக்கியெடுத்து அச்சுக்கனுப்பி நாவலாக்கி விட்டார்களோ எனத்தோன்றுகிற‌து. - :-)))//

    இது சி.எஸ்.கே விமர்சனம்!

    ReplyDelete
  16. kalakkal..... thanks to share...

    please read my kavithaigal blog www.rishvan.com and join as follower of my blog.

    ReplyDelete
  17. Very nice! Where is the 'Thanni' list .. I mean, drinks! You were cautious not to mix wife and 'Nanbi'! - R. J.

    ReplyDelete
  18. inruthaan ungal pathivai paditthen
    really superb

    ReplyDelete