Friday, January 28, 2011

த்தூ!

த்தூ! வெட்கமாயில்லை சாகும் மீனவனை வெச்சி அரசியல் செய்கிறோமே என்று. நேற்று முதல்வர் புள்ளி விவரம் சொல்கிறா அ.தி.மு.க ஆட்சியில் 38 மீனவர்கள் செத்தார்கள் அப்ப எல்லாம் ஏன் நேரில் போய் ஆறுதல் சொல்லவில்லை? என் அரசு மீனவன் செத்த அன்றே 5 லட்ச ரூபாய் கொடுத்தது, அக்கன்வாடியில் அவர் மனைவிக்கு வேலைக்கான லெட்டரும் அன்றே கொடுக்கப்பட்டதை சாதனையா ஒரு முதல்வர் சொல்கிறார். த்தூ வெட்கமாயில்லை இப்படி செத்தவனுங்களை வெச்சி அரசியல் செய்ய.

ஒருமாசத்துக்கு முன்னாடி சீனாவின் மீன்பிடி படகு ஜப்பானின் ரோந்து படகில் மோதிட்டுன்னு ஜப்பான் காரன் சீன மீனவனை அரெஸ்ட் செஞ்சி கூட்டிட்டு போயிட்டான். சீனா என்னா செஞ்சிது? லெட்டரோ தந்தியோ அடிக்காம...மறுநாள் நடைபெற இருந்த சீனா- ஜப்பான் உயர்மட்ட பிரதிநிதிகளின் மீட்டிங்கை ரத்து செய்துவிட்டு, நாளைக்குள் மீனவன் விடுவிக்கப்படனும், இல்லை என்றால் நடப்பதே வேறுன்னு மிரட்டல் கொடுத்துச்சு. ஜப்பான் வேற வழியே இல்லாம மன்னிப்பு கேட்டு அந்த மீனவரையும் படகையும் ரிலீஸ் செஞ்சிது. அதில் பாதி சூடு சொரனையாவது வேண்டாம்?

மீனவன் சாகிறான் என்ற கவலையை விட தேர்தல் நேரத்தில் சாகிறானே என்ற கவலை முதல்வருக்கும், இன்னொரு மீனவன் சாகமாட்டானா என்ற கவலை எதிர்கட்சி தலைவருக்கும் இருக்கும். இவிங்கதான் நமக்கு தலைவரு?

த்தூ வெட்கமாக இருக்கிறது எனக்கு. இதுமாதிரி தலைவர்கள் இருக்கிறார்களே என்று.

18 comments:

said...

த்தூ - இது அவர்களுக்கு.

said...

எனது எதிர்ப்பையும் இங்கே பதிவுசெய்கிறேன்.

ஒவ்வொரு நாளும் விபத்துகள், நோய்கள் காரணமாக எத்தனையோ பேர் இறந்துபோகிறார்கள். ஆயினும் ஒரு உயிரானாலும் மானமில்லாமல், எதிர்க்கத் திராணியில்லாமல் இழப்பதுதான் வேதனை தருகிறது.

said...

அவங்க எல்லாம் தலைவர்கள் மாதிரி ஆனா தலைவர்கள் இல்ல.

சுதந்திர இந்தியாவில் படேல் மாதிரி ஒரு சிலரே தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனா நேரு மாதிரி ஒரு உதவாக்கரை கையில நாடு அகப்பட்டது.

சைனா கிட்ட வாலைச் சுருட்டிப் பழகிவிட்டார்கள். இப்ப இலங்கை,இனி நேபாள், பூட்டான் என்ற வரிசை வரலாம்

said...

செருப்பால அடிக்கனும் அவனுங்கள, நாசமா போனவங்க, அவங்க வீட்டுல இழவு வுழுந்தா கவலப்பட மாட்டானுகளா, பன்னடை பரதேசி பசங்க

said...

Please make a cartoon post.

said...

வெட்கமா .... அரசியல்வாதிகளுக்கு அது இருக்கா என்ன???

said...

எந்த மாதிரி ஆட்கள் கையில் நாட்டின் ஆட்சி இருக்குன்னு பாருங்க:(

என் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

said...

இந்த மகாபுருஷர்களிடம்தான் நம்மை ஒப்படைத்திருக்கிறோம். வெட்கக்கேடு.

நடந்த துயர் பற்றிய கவலை கொஞ்சமுமின்றி ஒப்பனை முகங்களுடன் 'ஆகவே வாக்காளப் பெருமக்களே' என்று யாசகம் கேட்டு இன்னும் சில நாட்களில் நம் வீதிகளில் வலம் வரத் தொடங்கிவிடுவார்கள். ஓட்டுப் பொறுக்கிகள்.

said...

இந்தக் கோபம் தேர்தல் மாற்றத்திற்கு வழி வகுக்குமா? எங்கே சீமான்? இந்த உணர்வுகளைத்தானே வழி நடத்தி முன்னெடுத்துச் செல்வீர்கள் என்று எதிர்பார்த்தோம்?

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

said...

தமிழனுக்கென நல்ல தலைவர்கள் இல்லாதது வெட்கக்கேடு.

said...

இந்த தேர்தலில் பதில் சொல்வோம்!

said...

நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே எனது ஆழமான கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.
இன்று தமிழர் மத்தியில் மூண்டிருக்கும் இத்தீக்கனல் அணையாதிருக்கட்டும்

said...

நன்றி பதிவுக்கு !!! ட்விட்டரிலும் வரவும்.

said...

பொ. அழகனுங்க பண்ணுவாங்க...
நாமளும் பொ#$%அ இழுச்சுகிட்டு ஓட்டு போடணும்....

வாழ்க ஜனநாயகம்.... வாழ்க!

(எவனாவது கைல சிக்குனா சங்குதான் மாப்ளெய்!)

said...

அனைத்து பதிவர்களே
நீங்கள் எல்லாம் சும்மா பதிவு எழுதி விட்டு மறந்து விடுவீர்கள் என்று அரசு எந்திரம் நினைக்கலாம். ஆனால் மக்களின் மௌனம் எரிமலை மாதரி வெடிக்கும் நாள் மிக அருகில் அன்று இருக்கு வோட்டு பொறிகிகளுக்கு தீபாவளி.

said...

எனது எதிர்ப்பையும் இங்கே பதிவுசெய்கிறேன்.

said...

த்தூ நானும் உங்க கூட சேந்து துப்பிக்கிறேன்.

said...

//இந்த தேர்தலில் பதில் சொல்வோம்!//

எப்டின்னுதான் தெரியலை!