கூபாலபுரம்:
பகத்ரட்சகன் ஓடிவருகிறார்: தலைவரே குபாமா அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார், எங்கே திரும்பினாலும் அவரை பற்றிதான் செய்தியாக இருக்கிறது அவரை சென்னைக்கு வரவழைச்சி அவர் தலைமையில் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினோம் என்றால் இந்த தேர்தலில் நம்மை அடிச்சிக்கமுடியாது...வரவேற்புரையில் வாசிக்க கவிதையும் எழுதிட்டேன்.
"வெள்ளை மாளிகையில்
குடியிருக்கும் கறுப்பு நிலாவே
வா வா
குடிசையில் குடியிருக்கும்
சூரியனை வாழ்த்த
வா வா"
குலைஞர்: தம்பி நீ ஏன் இன்னும் சினிமாவில் பாட்டு எழுதாமல் இருக்கிறாய் என்கிற வருத்தம் எனக்கு இதயத்தில் முள்ளாக குத்துகிறது.
(முள்ளுவாங்கி வேனுமா முள்ளுவாங்கி..)
சத்துமாசுப்பிரமணியம்: தலைவரே அந்த விழாவில் நானும் என்னோட மாணவர்களும் நம்மோட பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் விதமாக ஒரு 10000 பேர் ஆடலாம் என்று நினைக்கிறோம், அவுங்க குடும்பத்துக்கு டான்ஸ் என்றால் ரொம்ப பிடிக்குமாம் முப்பையில் பள்ளி குழந்தைங்க கூட எல்லாம் ஆடியிருக்காங்க. ம்ம் என்று சொல்லுங்க எல்லோரையும் வரவழைச்சிடலாம்.
குலைஞர்: குபாமாவும் நானும் பட்டு வேஷ்டி சட்டையில் சேம் பிஞ்சில் வருவோம்...
பனிமொழி: தலைவரே குபாமா மனைவிய வெச்சி மெரினா பீச்சில் பன்னாட்டுகலை இலக்கிய விழான்னு ஒன்னு நடத்திடுவோம், 5 நாள் விழா ஒவ்வொரு நாளும் ஒரு கலை நடனம் என்று கலக்கிடலாம், அப்ப அப்ப நடுவில் என்னோட கவிதை தொகுப்பை குபாமா மனைவிக்கு படிச்சி காட்டி அவுங்களை உரைஎழுத சொல்லிடலாம்.
குலைஞர்: இதோ இப்போவே பிரதமருக்கு கடிதம் எழுதிடுறேன்..
பனிமொழி: என்கிட்டேயேவா?
குலைஞர்: ச்சே ச்சே பழக்கதோசத்தில் சொல்லிட்டேன், இதோ போன் போட்டு பேசுறேன் குபாமாவை இங்க்க அனுப்ப சொல்லிடுவோம்.
(செல்போன் அடிக்கிறது குலைஞர் பேசுகிறார்)
ம்ம்
ம்ம்
ம்
சரிப்பா பார்க்கிறேன்...
வெச்சிடுப்பா...
பகத்ரட்சகன்: என்ன ஆச்சி தலைவரே ஏன் இப்படி டல் ஆயிட்டீங்க? யார் போனில்?
குலைஞர்: சென்னைக்கு வருவதுக்கு முன்னாடி குபாமாவை மதுரைக்கு அனுப்பிவைக்கனுமாம், அங்க நிகழ்ச்சிய முடிச்சபிறகுதான் சென்னைக்கு அழைச்சிக்கிட்டு போகனுமாம்...
ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே!
*******************
கோயஸ்கார்டனா அல்லது வடநாடான்னு சரியாக தெரியவில்லை ஏதோ ஒரு இடத்தில் நடக்கிறது...
குஷிகலா: யக்கோ யக்கோவ் அமெரிக்காவிலிருந்து குபாமா வந்திருக்கிறாராம், அவர வெச்சி நாம வடசென்னையில் கொசு ஒழிப்பு போராட்டம், மதுரையில் பொதுகழிப்பறையில் சரியில்லாத பராமரிப்புன்னு பெரிய லெவலில் போராட்டம் நடத்தி நம்ம யாருன்னு காட்டனும் யக்கா..
பயலலிதா: ஆஹா சூப்பர் ஐடியா, ஒழுங்கா சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்துக்கு வரனும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிடு இல்லாட்டி அதிபர் பதவியிலிருந்து தூக்கிடுவேன் என்று சொல்லிடு..
குஷிகலா: யக்கா அவரு என்ன நம்ம பைகோவா சொன்ன இடத்துக்கு நமக்கு முன்னாடியே போய் நின்னுக்கிட்டு கோஷம் போட்டுக்கிட்டு இருக்க இவரு குபாமா அதுவும் நம்ம கட்சியில்
அவரு இல்ல அவரை எப்படி பதவியிலிருந்து தூக்க முடியும்?
பயலலிதா: என்னது குபாமா நம்ம கட்சியில் இல்லையா? நம்ம கட்சியில் தான் இருக்கீங்கன்னு சொல்லி ஒரு போன் போட்டு சொல்லிட்டு கட்சி உறுப்பினர் கார்ட் அனுப்பிடு. முக்கியமா ஒரு கூட்டம் மதுரையில் இருக்கனும்.
**********
பைலாபுரம் மாம்பழ தோட்டத்தில்...
பன்புமணி பாட்டு பாடிக்கிட்டே வருகிறார் ("நைனா நைனா நைனா நைனா நெஞ்சுக்குள்ள எதோ செய்யுது... அர்ஜெண்டா ஒரு அமைச்சர் போஸ்ட் வாங்கி கொடு...நான் வேலை வெட்டி இல்லாம இருப்பது முறையா....ஓ நைனா நைனா ஓ நைனாஆஆஆஆ")
மகனை பார்த்ததும் வராத செல்போனை காதில் எடுத்து வெச்சிக்கிட்டு பேசுகிறார் பாமதாஸ்..
ம்ம் சொல்லு போ.க.மணி ரெண்டு ரவுண்டு பேச்சு வார்த்தை குபாமாவோட முடிஞ்சிட்டா?, நல்லது! நம்ம பன்புமணிக்கு அமைச்சர் போஸ்டிங் கோரிக்கைக்கு என்ன சொன்னாங்க? இன்னும் ஒருவாரத்தில் தூது வரும் என்று சொல்லியிருக்கங்களா அப்ப ரொம்ப சந்தோசம்.எப்படியும் வாங்கிடலாம் தானே? எழுதிவாங்கிட வேண்டியதுதானே? சரி சரி பார்த்து செய்யுங்க அப்புறம்?.. அப்படியே அங்கிருந்து பயலலிதாவையும் பார்த்துட்டீங்களா? அவுங்க 2017ல் ரெண்டு எம்.பி சீட் தருகிறேன் என்று சொல்லியிருக்காங்களா அப்ப ரொம்ப சந்தோசம்...சரி சரி சீக்கிரம் வாங்க நாம நாளை கல்யாணமண்டபத்துல கூடி கூட்டம் போட்டு எங்க போகலாம் என்று முடிவு செஞ்சிடுவோம்... 2011லிருந்து குபாமாவோட அப்புற 2017ல்லிருந்து பயலலிதா கூட...அப்ப வரும் 10 வருசத்துக்கு பன்புமணிக்கு போஸ்ட்டிங் கன்பார்ம்....அப்படின்னா பக்கள் டீவியில் பன்புமணி தொகுத்து வழங்கயிருந்த பல்விளையாட்டு நிகழ்ச்சி ஷூட்டிங்கை நிறுத்த சொல்லிடலாம்...
(கண்ணா இன்னொரு அல்வா வேனுமா...)
இவர் பேசியதை கவனிச்ச பன்புமணி... (ஜிங்கி ஜிங்கி சொக்கா போட்டு பளபளக்கும் பேண்டு போட்டு பார்லிமெண்ட் போகனும் சின்னதங்கமே....ஜிங்ங் ஜிக்கா ச்சிக்கு ஜிக்கா ஜிக்கு ஜிக்கா)ன்னு துள்ளல் பாட்டு மெட்டை பாடிக்கிட்டே பேண்ட் சர்ட்டை எல்லாம் அயர்ன் செய்ய போகிறார்.
****************
குஜயகாந்த்...குபாமாவிடமிருந்து நமக்கு அழைப்பு வருகிறது, நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் ஏன் ஏன்?
(கூட்டத்திலிருந்து ஒருவன்) இங்கிலிஸ் பேச முடியாதுன்னா?
குஜயகாந்த்: என் கல்யாணமண்டபத்தை இடிச்சாங்க, படத்தை வாங்கமாட்டேன் என்று சொன்னாங்க, ரோட்டில் ஷூட்டிங் நடத்த முடியாம அரசு பஸ்ஸை ஓடவிட்டு இடைஞ்சல் செஞ்சாங்க...இருந்தும் நம்மோட வளர்ச்சியை தடுக்கமுடியல, நம்மை கண்டு அகில உலகமே பயந்துகிடக்கு...நான் எப்பவும் மக்கள் கூடதான் கூட்டணி
கூட்டம் விசில் அடிச்சி கைதட்டுது
குஜயகாந்த் (இன்னுமாடா மச்சான் இந்த உலகம் நம்மை நம்புது)
குதீஷ்: இது அவிங்க விதி
************
கத்தியமூர்த்திபவன்
களங்கோவன்: குபாமா ஆறு வயசா இருக்கும் பொழுது இந்தியா வந்தப்ப கறுப்பு சட்டை போட்டுக்கிட்டு முன்னாடி போய் நின்னது யாருன்னு வரலாறு மறந்திடுமா? அவர் போகும் இடம் எல்லாம் கறுப்பு கலர் காக்காவை பறக்கவிட்டு எதிர்பு தெரிவிச்சது மறந்திடுமா?
பாசன்: காக்கா கறுப்பாதானே அண்ணே இருக்கும்...
களங்கோவன்: குபாமாவை இன்று அன்னை போனிய்யாஜி அழைத்து வந்ததும் இனிக்க இனிக்க பேசிக்கிட்டு ஒட்டி உறவாட ஓடிவருகிறார்கள், எங்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுங்க எல்லாத்தையும் எச்சி தொட்டு அழிச்சிடுறோம்.
வெண்கலபாலு:அன்னை காட்டிய வழியிலும், இளம் தலைவர் கோகுல்ஜி காட்டியவழியிலும் அமைதியான வழியில் நடப்போம். கூட்டணி பலமாக இருக்கிறது. வாழ்க அன்னை, வாழ்க கோகுல்.
*************
பருமாவளவன்:
தலைவரே குபாமா போஸ்டர் மேல யாரோ சாணி அடிச்சிட்டாங்களாம் அதுக்கு எல்லாம் களங்கோவன் எங்க கட்சி ஆளுங்களை திட்டுறாரு தலைவரே...
குலைஞர்: கோபப்படாதே தம்பி கோபப்படாதே நம்மை பிரிக்க சதி செய்கிறார்கள், உன் கோபத்தை எல்லாம் கடிதமாக எழுதி அன்னை போனீயாஜிக்கு அனுப்பு.
பருமாவளவன்: சரிதலைவரே அப்படியே செய்யுறேன்... ஆமா நான் எப்ப கோவப்பட்டேன்?
போனியாஜி புகழ்பாடி ஒரு பத்துபக்க கடிதம் எழுதும் பொழுது...
பின்னனி பாடல்(சிறுத்தைய புடிச்சி கூண்டில் அடைச்சி மியாவ் மியாவுன்னு கத்த சொல்லும் உலகம், கால புடிச்சு பேனா வெச்சி மன்னிப்பு கடிதம் எழுத சொல்லுகிற உலகம்...சிறுத்தை எப்படி கத்துமய்ய்யா...சிறுத்தை எப்படி எழுதுமய்யா ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ....)
*********
பன்டீவி ஏரியா
பக்சேனா: குபாமாவுக்கு பயங்கர மாஸ் இருக்கும் போல அவர வெச்சி ரோபோ ரிட்டர்ன்ஸ் பார்ட் 2 எடுத்தோம் என்றால் பன் பிக்சர்ஸ் எங்கயோ போய்விடும்...
பலாநிதி: சொல்லாதீங்க செய்ங்க...புடிங்க ஆளை தூக்குங்க...உலகம் முழுவது தியேட்டரை புடிங்க...முதன்முதலாக நிலாவில் வெச்சி கேசட் ரிலீஸ் செய்யுறோம்...செவ்வாய் கிரகத்தில் ஸ்பெசல் ஷோ போடுறோம்... விண்வெளி ஆராய்சிகூடத்திலும் படத்தை ரிலீஸ் செய்யுறோம்...
பக்சேனா: அதுக்கு முன்னாடி பொங்கலுக்கு சிறப்பு நிகழ்சியா குபாமா இந்தியா வந்த விதம் என்று அவரு பேண்ட் சட்டை போட்டதிலிருந்து எல்லாத்தையும் காட்டுறோம்...
Monday, November 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
ரைட்டு :)
/
பக்சேனா: அதுக்கு முன்னாடி பொங்கலுக்கு குபாமா இந்தியா வந்த விதம் என்று அவரு பேண்ட் சட்டை போட்டதிலிருந்து எல்லாத்தையும் காட்டுறோம்...
/
நல்லவேளை இன்னும் டீப்பா திங்க் பண்ணலை
:)
கலக்கல்
:)))))))))))))))))
எல்லாமே சூப்பர் :)
:))))))))))
ஆ”
பசும்பன்: (மனதிற்குள்) ஓபாமா வந்ததுக்கு இவ்ளோ கவரேஜ்ஜா இதை வச்சு ஒரு பதிவை தேத்திற வேண்டியதுதான்.
. பதிவு
பதிவர் 1 : :))
பதிவர் 2 : :))))
பதிவர் 3 : //:))))//
ரிப்பீட்டேய்
பதிவர் 4 : ROTFL :))))
பதிவர் 5 : பசும்பா..இதை படிச்சதும் சிரிப்பை அடக்க முடியலை :))
பதிவர் 6 : விழுந்து விழுந்து சிரிச்சேன்
பதிவர் 7 : வி வி சி (ஷார்ட்டா சொல்றாராமாம்)
.
.
.
.
.
.
.
பதிவர் 50: பசும்பா... பாத்து சூதானமா இருந்துக்கோப்பு.... ஆட்டோ வந்துறப்போவுது
:) அள்ளிட்ட போ !
50 கமெண்டு வரும்னு குசும்பனுக்கு நம்பிக்கையூட்டும் கண்ணாவுக்கு வாழ்த்துகள்
என்னது கும்மியடிக்க இன்னும் கூட்டம் சேரலையா:)
//பதிவர் 50: பசும்பா... பாத்து சூதானமா இருந்துக்கோப்பு.... ஆட்டோ வந்துறப்போவுது//
கண்ணா!யாருமே எப்பவுமே ஆட்டோவில உட்கார்ந்துகிட்டே இருந்ததா சரித்தரமே இல்ல!
:)))
Expecting Still More
சூப்பர்டா..
சிபியை வழிமொழிகிறேன்..
சூப்பர்...
:))))))))))) பன் டிவிதான் சூப்பர் :)) அப்படியே குபாமா தலைமையில் அடுத்த பொங்கலுக்கு போடற மாதிரி ஒரு பட்டிமன்றமும் ரெடி பண்ண சொல்லிடுங்க
தினவு தினை செய்:
யாரோ ஒபாமாவாம், அமெரிக்காவாம், இங்கு வருகிறாராம். ஒபாமாவை யாரும் பாக்காதீங்க, அதுவே நீங்க நாட்டுக்கு செய்யும் சேவை.
சூப்பர் காமெடி
unga pathivu arumai nalla iruku nanbare
Super Boss.. :))
சூப்பர் குசும்பா - கலக்கறே
குபாமா வந்தாச்சே எங்க கொசு'ம்பரை காணோம்னு பாத்தேன்.. :))
நையாண்டி மன்னா,பதிவுலக நகைச்சுவை மன்னா,எங்கள் அண்ணா,நீர் வாழ்க பல்லாண்டு
சூப்பர்
பசும்பா... பாத்து சூதானமா இருந்துக்கோப்பு.... ஆட்டோ வந்துறப்போவுது
வீட்டுக்கு ஆட்டோ.. டாக்ஸி.. சுமோ வராம இருந்தா சரிதான். கவிதை டாப் டக்கர்
மின்னல் நன்றி
மங்சிங் நன்றி
பிரியமுடன் ரமேஷ்
மாமா நன்றி
நன்றி கும்க்கி
கண்ணா 25 கூட வரல இதுல 50ல்லாம் ரொம்ப ஓவருய்யா..
நன்றி கோவி
நன்றி ஜீவ்ஸ்
நன்றி ராஜ நடராஜன்
நன்றி அருணையடி
நன்றி சந்தோஷ்
நன்றி அமுதா
நன்றி விஜி
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி ஆர்.கே.சதீஷ்
நன்றி வெங்கியாரே
நன்றி பிரபு
நன்றி சீனா
நன்றி கவிதா
நன்றி சி.பி.செந்தில்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி முகிலன்
நன்றி கவிதை காதலன்
Eventhough it is too late to read really enjoyed your NIYYAANDI. Sense of humour is plenty from word to word. keep going
Post a Comment