Wednesday, September 15, 2010

செமஸ்டரும் தேர்தலும்

செமஸ்டரும் தேர்தலும்!

நான் படிச்சிருக்கேன் படிச்சது எல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறது தேர்வை நல்ல முறையில் எழுத முடியும் என்று நினைப்பது காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாக உள்ளது,தேர்தலை நல்ல முறையில் சந்தித்து வெற்றி பெறுவோம் என்று திரும்ப திரும்ப கலைஞர் சொல்லுவதுக்கு சமம்.

தேர்வு எழுதும் பொழுது ஓட்டு போட வராமல் இருக்கும் மேட்டுக்குடி மக்கள் போல், மேல் மண்டையில் இருந்து பேனாவுக்கு மேட்டர் இறங்கவே இறங்காது.

சரி எதுக்கும் இருக்கட்டும் என்று எடுத்து போகும் பிட்டையாவது வெச்சி எழுதலாம் என்றால் நமக்குன்னு வரும் சூப்ரவைசர் மட்டும் நரேஷ் குப்தா மாதிரி ஸ்ட்ரிக்ட்டான ஆளாக இருப்பார்.

எக்ஸாம் முடிஞ்சு வெளியே வந்ததும் மத்த பிரண்ட்ஸ்கிட்ட மச்சி எல்லாம் பக்காவா எழுதிட்டேன் டா சென்டம் வந்துடும் என்று நினைக்கிறேன் என்றா பாத்துக்க..என்பது 230 தொகுதியிலும் நமதேன்னு பேட்டி கொடுக்கும் சரத்குமார் மாதிரி இருக்கும்.

எக்ஸாம் ரிசல்ட் வரும் பொழுது எல்லாத்திலும் கப்பு வாங்கினாலும் மச்சி பாரேன் எல்லா பேப்பர் டோட்டலையும் கூட்டினா பாஸ் மார்க் வருது என்பது கலைஞர் ரிசல்ட் வந்ததும் வாங்கிய ஓட்டு சதவீதத்தை சொல்லி இப்பவும் நாங்கதான் மக்கள் பக்கம் என்பதுமாதிரி இருக்கும்.

ஆனா பாரு மச்சி எல்லாம் பக்காவாதான் எழுதினேன் பேப்பர் திருத்த வந்தவனுக்கு வூட்டுல பொண்டாட்டி கூட என்ன பிரச்சினையோ பெயில் போட்டு விட்டான் என்றுசொல்லுவதும் எக்ஸாம் முறையே சரி இல்ல மச்சி இதை மாத்தனும் அப்படியே வாந்தி எடுத்தால் தான் பாஸ் போடுறானுங்க என்று சொல்லுவது பா.ம.க ராமதாஸ் ஓட்டு இயந்திரத்தையும் தேர்தல் ஆணையத்தையும் குறை சொல்வது மாதிரி இருக்கும்.

சரக்கே இல்லை என்றாலும் மச்சி ரீவேல்யுவேசன் போடலாமான்னு பார்க்கிறேன் என்று சொல்லுவது எங்க தொகுதியில் மறு தேர்தல் வைக்கனும் மறுவாக்கு எண்ணிக்கை வைக்கனும் என்றுசொல்லும் சுயேட்சை எம்.எல்.ஏ மாதிரி இருக்கும்.

நம்மள மாதிரியே கப்பு வாங்கியவனுங்க கூட சேர்ந்துக்கிட்டு விடு மச்சி அடுத்த செம்முல பாரு எல்லா பேப்பரையும் அடிச்சி தூக்குறோம் நில் அரியரா வெளியே போறோம் என்பது சுதிஷ் கூட்ட கூட்டணி போட்டு 2011 நாமதான் முதல்வர் என்று சொல்லும் விஜயகாந்து மாதிரி இருக்கும்.

நம்மை நம்பி காலேஜ்ஜுக்கு அனுப்பும் அப்பா அம்மா கதி இந்த அரசியல்வாதிங்க வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு சமம் என்பது சொல்லியா தெரியனும்.

*****************
வாழ்கை ஒரு வட்டம் என்பதை புரிஞ்சுக்க ஈசியான வழி, நாட்டை திருத்தனும் என்றால் முதலில் அதை உன் குடும்பத்திலிருந்து ஆரம்பி ஒவ்வொருவரும் இப்படி யோசிக்க ஆரம்பிச்சா நாடு தன்னாலேயே திருந்திடும் என்று சொல்லுவாங்களே அதுமாதிரி வாழ்கை ஒரு வட்டம் என்ற தத்துவத்தை நாம வீட்டிலிருந்தே புரிஞ்சுக்கலாம் வாங்க...

நான்: திங்கள் கிழமை உங்க வீட்டுல என்ன குழம்பு?

நீங்க: சாம்பார்

நான்: செவ்வாய் கிழமை?

நீங்க: ரசம்

நான்: புதன் கிழமை?

நீங்க: கத்திரிக்காய் வத்தகுழம்பு

நான்: வியாழக்கிழமை?

நீங்க: மோர்குழம்பு

நான்: வெள்ளிக்கிழமை?

நீங்க: சிக்கன் கிரேவி

நான் : சனிக்கிழமை?

நீங்க: மீந்து போன சிக்கன் கிரேவி..

நான்: ஞாயிறு?

நீங்க: லீவுங்க ஹோட்டலில் சாப்பிட போய்விடுவோம்...

நான்: திங்கள் கிழமை?

ஹி ஹி ஹி இதுதான் வாழ்கை ஒரு வட்டம் ஆரம்பிச்ச இடத்திலேயே முடியும், பணக்காரன் ஏழை ஆவான், ஏழை பணக்காரன் ஆவான் என்பது மாதிரி இது சிம்பிள் தத்துவம்!

20 comments:

said...

அண்ணே எனக்கு அந்த தத்துவம் புடிச்சிருக்கு !

ஆமாம் ஏன் சட்’டுன்னு செவ்வாய் கிழமை ரசம் ? #டவுட்டு

said...

//நம்மை நம்பி காலேஜ்ஜுக்கு அனுப்பும் அப்பா அம்மா கதி இந்த அரசியல்வாதிங்க வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு சமம் என்பது சொல்லியா தெரியனும்.///


டாப்பு! :))))

said...

அம்மா மற்றும் கம்யூனிஸ்ட்கள் ???????

said...

//நம்மள மாதிரியே கப்பு வாங்கியவனுங்க கூட சேர்ந்துக்கிட்டு விடு மச்சி அடுத்த செம்முல பாரு எல்லா பேப்பரையும் அடிச்சி தூக்குறோம் நில் அரியரா வெளியே போறோம் என்பது சுதிஷ் கூட்ட கூட்டணி போட்டு 2011 நாமதான் முதல்வர் என்று சொல்லு விஜயகாந்து மாதிரி இருக்கும்.//

:)))))))))))))))

said...

அய்யோ...வாழ்க்கை ஒரு வட்டம் தத்துவம் புல்லிரிக்குது... எப்படி குசும்பா..
இதெல்லாம் ??? :)))))))

said...

அம்மாவை குற்றம் சொல்லாததிலேருந்தே குசும்பனின் நுண்ணுரசியல் தெரியுது...
குசம்பன் அம்மா கட்சி.

said...

\\ஓட்டு போட வராமல் இருக்கும் மேட்டுக்குடி மக்கள் போல்\\

யூ மீன் கார்த்திக், நக்மா, கவுண்டர் & கோ????

said...

விஜயகாந்த் இப்ப 2016ஆ டார்கெட் பண்ணிருக்காராமே? அப்படியா??

Anonymous said...

வெள்ளிக்கிழமை சிக்கனா??? பெருமாளே...அபச்சாரம் :)

said...

//நான் : சனிக்கிழமை?

நீங்க: மீந்து போன சிக்கன் கிரேவி..//

சனிக்கிழமை எங்க வீட்டுல சிக்கன் செய்ய மாட்டோம் .. அப்படின்னா வாழ்க்கை ஒரு வட்டம் இல்லையா ..?

said...

// ஓட்டு இயந்திரத்தையும் தேர்தல் ஆணையத்தையும் குறை சொல்வது மாதிரி இருக்கும்.//

ஹி ஹி ..!!

said...

:))))

said...

என்னே ஒரு தத்துவம்...

said...

அன்பின் குசும்பன்

செமஸ்டரும் சரி தேர்தலும் சரி - புத்திசாலிகள பாஸ் போடறதே இல்ல - என்ன பண்றது ....

எப்படித்தான் இப்படி எல்லாம் உனக்குத் தோணுதோ - பலே பலே

நல்வாழ்த்துகள் குசும்பா
நட்புடன் சீனா

said...

என்னே ஒரு தத்துவம்...

said...

அம்மாவ பத்தி ஒன்னும் சொல்லவே இல்லேயே.. ஒரு வேலை அவங்க பரிட்சை எழுத மாட்டாங்களா :)

said...

நன்றி ஆயில்ஸ்

சிவகாசி மாப்பிள்ளை அவுங்களுக்கு ஏத்தமாதிரி ஒன்னும் தோன்றவில்லை!

நன்றி கண்ணா

நன்றி நாஞ்சில்

நன்றி வித்யா, வேற வழி அப்படியே ஒவ்வொரு தேர்தல் தேதியா சொல்லிக்கிட்டு
போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

நன்றி மயில் சிக்கன் சாப்பிட நாள் கிழமை எல்லாம் இருக்கா என்ன?:))

நன்றி செல்வக்குமார்

நன்றி சுசி

நன்றி வெறும்பய

நன்றி சீனா

நன்றி ஜெகதீசன்

நன்றி இரமசாமி கண்ணன்

said...

நல்ல சிரிச்சேன் சார்

said...

@ குசும்பன்
//
அவுங்களுக்கு ஏத்தமாதிரி ஒன்னும் தோன்றவில்லை!//

பிட் அடிச்சு பாஸ் ஆனவன் என்கிட்டே வந்து "பெயில் ஆயிட்டியே"ன்னு இளிக்கறானே என்று முனகுவது "இந்த மைனாரிட்டி அரசு என்னைப் பழி வாங்க நினைக்கிறது" என்று ஜெயலலிதா சொல்லுவது போல் இருக்கிறது.

said...

nallave kalaikringa anna !!!