Monday, May 3, 2010

கும்மோ கும் கும் கும்!

என்னையா வாழ்கை இது வீடு, மனைவி,புள்ளை குட்டிங்களை எல்லாம் பிரிஞ்சு இங்க கஷ்டப்படனுமா இதோ கிளம்புறேன், இதோ அடுத்த மாசம் கிளம்புறேன் என்று 20 வருசமா இங்கிருக்கும் ஆளுங்களை பார்க்கும் பொழுது அனுதாபம் வராமல் எரிச்சல் தான் வருகிறது, அது போல் பைத்தியக்காரன் அண்ணாச்சி & சுந்தர் இருவரும் தேர்வு செய்யும் உலகதிரைப்படங்கள் வரிசையில் இடம்பிடிக்க கூடிய படங்களில் நடிப்பவர் விஜய் இல்லை என்று தெரியும், கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்த இவர் மசாலா படங்கள் பேரரசு படத்தில் நடிக்க ஆரம்பிச்சதும் படு மொக்கையாக மாறிவிட்டது அதில் இருந்து விஜய் படங்களை பார்ப்பது இல்லை. அனைவரும் நல்லா இருக்கு என்று சொன்னதால் பார்த்தது "போக்கிரி". சும்மா பதிவு எழுதனும் என்று முதல் நாளே போட்டி போட்டு டிக்கெட் வாங்கி முதல் ஷோவில் படம் பார்த்துவிட்டு திரும்ப திரும்ப ஒரே டைப் ஒப்பாரி வைக்கும் ஆளுங்களை கண்டால் எரிச்சல்தான் வருகிறது. இனி விஜய் படம் பார்ப்பது இல்லை என்பதும் போல் இதுமாதிரி ஆளுங்க விமர்சனத்தை கூட படிக்க கூடாது போல:))

*****************
சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம் தி எஸ்கேபிஸ்ட், ஒரு ஜெயிலில் இருக்கும் 5 பேர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போடுகிறார்கள், எப்படி திட்டத்தினை செயல்படுத்தினார்கள்? தப்பித்தார்களா இல்லையா என்பதை மிகவும் பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள். முடிவு எதிர்பார்க்காத ஒன்று மிகவும் அருமையாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்!
(லைட்டிங் அருமை, மஞ்சா கலர் டோண்ட் அருமை, கேமிரா கோணம் அருமை, BGM அருமையோ அருமை, வேறு ஏதும் டெக்னிக்கல் வார்த்தைகள் விடுபட்டு இருந்தால் சொல்லுங்க அதையும் சேர்த்துவிடலாம். )
************
எனக்கு இங்க பல பேர் வெச்சிருக்கும் நிஸான் ஆர்மடா என்ற காரை கண்டால் கொஞ்சம் பயம், நாம துக்குனீயோண்டு காரை ஓட்டிக்கிட்டு போகும் பொழுது இந்த ஆர்மடா என்ற யானை குட்டி மாதிரி காரை வெச்சிக்கிட்டு சர்ர்ர்ர்ன்னு நமக்கு முன்னாடி இண்டிக்கேட்டர் கூட போடாம லைன் சேஞ்ச் செய்யும் பொழுது பகீர் என்று இருக்கும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஜெர்மனி பெண் என்று நினைக்கிறேன் ஆர்மடாவை விட கொஞ்சம் சின்ன மாடல் வண்டியை ஓட்டிக்கிட்டு திடிர் என்று என் லைனுக்கு வர நினைத்த பொழுது நான் ஹாரன் அடித்ததால் பயந்து போய் கடுப்பாகி ஆங்கில கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு வேகமாக சென்றது... "ஹி ஹி நானா வேண்டாம் என்று சொன்னேன் இவ்வளோ கோவமா திட்டிட்டு போற" என்றேன் அருகில் இருந்த நண்பர் சிரிப்பு அடங்க ரொம்ப நேரம் ஆனது.
*****************
மனைவியை டெலிவரிக்கு ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்த பொழுது வளைகாப்புக்கு போட்ட கிளாஸ் வளையலை டாக்டர் கழட்டிவிட சொன்னாங்க, அம்மணி ரெண்டு சுத்து பெருத்து இருந்ததால் கழட்ட முடியவில்லை சரி உடைச்சு எடுத்திடுங்க என்று டாக்டர் சொல்லிட்டாங்க, அவுங்க அப்பா ஒவ்வொரு வளையலா உடைச்சிக்கிட்டு இருந்தார் ஒரு வளையல் சட்டென்று குத்தி அவர் விரலில் லைட்டா இரத்தம் வந்துட்டு, அருகில் இருந்த அத்தை டக்கென்று பையில் இருந்த பழைய புடவையை கிழித்து விரலில் சுற்றினார்கள், ம்ம்ம்ம் பொண்ணு டெலிவரிக்கு வந்திருப்பதால் பையில் இருக்கும் பழைய புடவை கிழியுது, இதே 25 வருசம் முன்னாடின்னா கட்டியிருக்கும் புடவை முந்தானை கிழிஞ்சியிருக்கும் என்றேன். கட்டு போட்டுக்கிட்டு இருந்ததை பாதியில் விட்டுவிட்டார்கள்!

*******************

விடுமுறை நாட்களில் அம்மாவை சீண்டுவது வழக்கம் போன முறை மனைவி செய்திருந்த பிரியாணி அருமையா இருந்தது சாப்பிட்டுக்கிட்டே வீட்டுக்கு போன் போட்டு அம்மா நீயும் இத்தனை வருசம் பிரியாணின்னு ஒன்னை எனக்கு செஞ்சு போட்டு ஏமாத்திட்ட என் பொண்டாட்டி செஞ்சா பாரு பிரியாணி அடா அடா என்னா ருசி என்னா ருசின்னு அம்மாவை வெறுப்பேத்தினேன், டேய் இங்க வரும் பொழுது விரால் மீன் வறுவல் கேட்பில்ல அப்ப கவனிச்சிக்கிறேன் டா உன்னைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. பேசி முடிஞ்சதும் மனைவியிடம் அந்த புளிசாதம் இன்னும் கொஞ்சம் வை என்றேன்...$#$#$#$#@@@@#

***********************

சில விசயங்கள் அனுபவித்து பார்த்தால் தான் புரியும் அதில் ஒன்று தாய்மை, மாசமாக இருக்கும் மனைவியின் அருகில் இருப்பது, பின் குழந்தையோடு இருப்பது. அழகான உலகமாக இருக்கிறது அம்மாக்களின் உலகம். குழந்தை ஏதும் அடம்பிடிச்சால் "பாரு உன் பிள்ளையை" என்றும் சமத்தா இருக்கும் பொழுது "பாரு என் பிள்ளை எப்படி சமத்தா இருக்கான்" என்றும் மாறிவிடுகிறது. நேற்று பட்டாம் பூச்சிக்கு பல் முளைத்து வெளியில் தெரிகிறது அதுக்கு எத்தனை சந்தோசம் எத்தனை போல் கால்ஸ் செய்திருக்கிறார்கள் இதுவரை. அம்மாக்கள் ஆல்வேஸ் அம்மாக்கள்!:))) . அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்.

55 comments:

  1. புளி சாதம் வைக்க சொன்ன உடனே, சோத்துல விஷத்தை வைச்சுடப் போறாங்க!!!

    ReplyDelete
  2. அண்ணனுக்கு அண்ணே அந்த ஜெர்மன் பொம்பளை யாரு :)

    ReplyDelete
  3. //
    அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்.
    //
    Enjoy!

    ReplyDelete
  4. நல்ல பதிவு நன்றி கென்!

    ReplyDelete
  5. இதுக்காகவே கல்யாணம் பண்ணணும் போலயே.....

    என்சாய் மாம்ஸ்...........

    ReplyDelete
  6. அதெல்லாம் பார்த்தா கார் ஓட்டமுடியுமா பாஸ்? நிசான் அர்மடா என்ன A380 யே வந்தாலும் நம்ம வழியிலே போய்க்கிட்டே இருக்கணும். கெட்ட வார்த்தையில திட்டு வாங்கறதெல்லாம் நமக்கு என்ன புதுசா?

    ReplyDelete
  7. நல்ல பதிவு நன்றி குசும்பன் :))))

    ReplyDelete
  8. ஹம்மர் ஓட்டிட்டு வந்த அந்த துபாய் பொண்ணெ பத்தி ஒண்ணுமே சொல்லலெ!

    ReplyDelete
  9. //பேசி முடிஞ்சதும் மனைவியிடம் அந்த புளிசாதம் இன்னும் கொஞ்சம் வை என்றேன்.//

    :-))))))))))))))))))

    //"ஹி ஹி நானா வேண்டாம் என்று சொன்னேன் இவ்வளோ கோவமா திட்டிட்டு போற//

    வூட்டுல சொன்னா புளிசாதம் கூட கிடைக்காமப் போய்டும் :-)))))))

    //அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்//

    வாழும்போதே சொர்க்கம் :-) enjoyyyyyyy

    ReplyDelete
  10. //அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்//
    இதுதானுங்க வாழ்க்கை. அழகான பொழுதுகள்.

    //என்னையா வாழ்கை இது வீடு, மனைவி, புள்ளை குட்டிங்களை எல்லாம் பிரிஞ்சு இங்க கஷ்டப்படனுமா இதோ கிளம்புறேன்//
    இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி. கடினமான பொழுதுகள். குடும்பத்திற்காக அவ்வலிகளைத் தாங்குவதிலும் ஒரு வகை இனிமை.

    ReplyDelete
  11. //கட்டு போட்டுக்கிட்டு இருந்ததை பாதியில் விட்டுவிட்டார்கள்//

    என்னா வில்லத்தனம் பண்ணியிருக்கீங்க :)

    ReplyDelete
  12. //
    அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்.
    //

    mee tooooo

    ReplyDelete
  13. அந்த ஜெர்மன் பொண்ணு யாரு ?

    எனி டீடெய்ல்ஸ்

    ;)

    ReplyDelete
  14. //அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்//

    நானும் அதே! அதே!.......மிக மகிழ்ச்சியாய் இருக்கிறது!...

    ReplyDelete
  15. \\அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்.//

    இதே இதே இதைதான் நானும் செய்து கொண்டு இருக்கிறேன் பாஸ். நம்ம ஜூனியர் செய்யுற ஒவ்வொரு சேட்டையும் அழகுதான்..

    அப்பறம் அந்த புளிசாதத்தை நமது சங்கத்தின் தலைவர் ஆதிக்கு ஒண்ணு பார்சல் பண்ணுங்க அதை வைத்து ஒரு எச்சரிக்கை பதிவு போடட்டும்..

    ReplyDelete
  16. குடும்பம் ஒரு கதம்பம்..! அனுபவி ராஜா அனுபவி..!

    ReplyDelete
  17. //புளிசாதம் இன்னும் கொஞ்சம் வை //

    ஓஹோ இதுதான் புளியன் பிரியாணியா :)

    ReplyDelete
  18. //நேற்று பட்டாம் பூச்சிக்கு பல் முளைத்து வெளியில் தெரிகிறது //

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //ஒரு ஜெர்மனி பெண் என்று நினைக்கிறேன் ஆர்மடாவை விட கொஞ்சம் சின்ன மாடல் வண்டியை ஓட்டிக்கிட்டு //

    ஒரு வேள சொப்பன சுந்தரியா இருக்குமோ?

    ReplyDelete
  20. //ஆங்கில கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு வேகமாக சென்றது...//


    சேஸ் பண்ணி புடிச்சு நடு ரோட்டுலயே அவ சொன்னத செஞ்சுட்டு வந்துருந்தா பாராட்டி இருக்கலாம் !

    ReplyDelete
  21. //பாரு பிரியாணி அடா அடா என்னா ருசி //

    பிரியாணியா? பிரியாமணியா?

    ReplyDelete
  22. //சில விசயங்கள் அனுபவித்து பார்த்தால் தான் புரியும் அதில் ஒன்று தாய்மை, //


    நீங்களும் அனுபவிச்சிட்டீங்களா? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  23. //மனைவியின் அருகில் இருப்பது, பின் குழந்தையோடு இருப்பது. //

    ரெண்டும் தூங்கிய பின் நர்ஸுடன் இருப்பதை விட்டுட்டீங்களே !

    ReplyDelete
  24. முதல் பத்தி படிக்க படிக்க ஆசையா இருக்கு :))

    ReplyDelete
  25. அம்மாக்கள் ஆல்வேஸ் அம்மாக்கள்!:))) .

    குட் குசும்பு :))

    ReplyDelete
  26. "பட்டாம் பூச்சிக்கு பல்முளைத்து"

    பல்லுக்கொழுக்கட்டை அவிக்க சொல்லுங்க.

    ReplyDelete
  27. //"பாரு உன் பிள்ளையை" என்றும் சமத்தா இருக்கும் பொழுது "பாரு என் பிள்ளை எப்படி சமத்தா இருக்கான்" என்றும் மாறிவிடுகிறது.//
    வூட்டுக்கு வூடு வாசப்படிங்க ..

    ReplyDelete
  28. வழக்கமான குசும்போடு, உறவுகளின் உன்னதம் பற்றியும் பேசியிருக்கிறீர்கள். முக்கியமாக பட்டாம்பூச்சிக்கு பல் முளைத்தது பற்றி சொன்னது வெகு அழகு. மிக ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  29. புளிசாதம் :)))

    லாஸ்ட் பேரா... வயசானலே இப்டிதானுங்க...

    ReplyDelete
  30. யு மீன் புளியம்பிரியாணி.? ஓகே ஓகே.!

    ReplyDelete
  31. அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்.
    //

    அடடா.. கவுஜ.. கவுஜ.!

    1. இருக்குடி இனிமேதான்..

    2. வலிக்காத மாதிரியே எம்மா நாளுதான் நடிப்பேன்னு பாக்குறேன்.

    ReplyDelete
  32. அம்மாக்கள் ஆல்வேஸ் அம்மாக்கள்!
    Good

    ReplyDelete
  33. //இனி விஜய் படம் பார்ப்பது இல்லை என்பதும் போல் இதுமாதிரி ஆளுங்க விமர்சனத்தை கூட படிக்க கூடாது போல:))//

    விஜய் படம் எப்படி இருக்கும் என்று தெரிந்தே செல்வதால் எனக்கு ஏமாற்றமாக இருப்பதில்லை.. வேட்டைக்காரனை ரசித்துப் பார்த்தேன்.. சுறாவையும் விரும்பியே பார்ப்பேன் :))

    ReplyDelete
  34. //இனி விஜய் படம் பார்ப்பது இல்லை என்பதும் போல் இதுமாதிரி ஆளுங்க விமர்சனத்தை கூட படிக்க கூடாது போல:))//

    விஜய் படம் எப்படி இருக்கும் என்று தெரிந்தே செல்வதால் எனக்கு ஏமாற்றமாக இருப்பதில்லை.. வேட்டைக்காரனை ரசித்துப் பார்த்தேன்.. சுறாவையும் விரும்பியே பார்ப்பேன் :))

    ReplyDelete
  35. //"ஹி ஹி நானா வேண்டாம் என்று சொன்னேன் இவ்வளோ கோவமா திட்டிட்டு போற"//

    மானம்கெட்ட ஆளுய்யா இந்த குசும்பன்.. :))

    ReplyDelete
  36. //ஒரு ஜெயிலில் இருக்கும் 5 பேர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போடுகிறார்கள், எப்படி திட்டத்தினை செயல்படுத்தினார்கள்? தப்பித்தார்களா இல்லையா என்பதை மிகவும் பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.//

    பய புள்ளைக ரேனிகுண்டாவை காப்பி அடிச்சிடிச்சிங்க போல :)

    ReplyDelete
  37. இயல்பான நகைச்சுவை உணர்வு இயற்கையாக உங்களிடம் இருக்கு.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. //ஆயில்யன் said...

    நல்ல பதிவு நன்றி குசும்பன் :))))//


    Repeatae :)))))))))))

    ReplyDelete
  39. ..//முதல் பத்தி படிக்க படிக்க ஆசையா இருக்கு :))//..

    சிரிப்பு சிரிப்பா வருது ...

    ReplyDelete
  40. இயல்பான நகைச்சுவை உணவு இயற்கையாக உங்களிடம் இருக்கு.

    ஐ மீன் புளியம்பிரியாணி...

    ReplyDelete
  41. ..//வேட்டைக்காரனை ரசித்துப் பார்த்தேன்//..

    பார்ரா... இப்படியும் ஒரு ரசிக சிகாமணிய...

    ReplyDelete
  42. ..//1. இருக்குடி இனிமேதான்..

    2. வலிக்காத மாதிரியே எம்மா நாளுதான் நடிப்பேன்னு பாக்குறேன்.//..

    இத .. இதத்தான் ..
    நானும் சொல்றேன்.

    ReplyDelete
  43. ..//அக்பர் said...
    மிக அருமை.//..

    புளியம்பிரியாணிய சொல்றாருன்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete
  44. ..//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    குடும்பம் ஒரு கதம்பம்..! அனுபவி ராஜா அனுபவி..!//..

    இனிமேதான் எதிர்நீச்சல்...

    ReplyDelete
  45. ..//கென்., said...
    அண்ணனுக்கு அண்ணே அந்த ஜெர்மன் பொம்பளை யாரு :)//..

    ..//அதிஷா said...
    நல்ல பதிவு நன்றி கென்//..

    இது மேட்டர்...

    ReplyDelete
  46. நல்ல பதிவு நன்றி அண்ணாச்சி

    ReplyDelete
  47. /
    நானா வேண்டாம் என்று சொன்னேன்
    /

    ROTFL
    :))))))))))

    ReplyDelete
  48. பிள்ளையாண்டான் ஏங்க இப்படி பீதிய கிளப்புறீங்க:)))

    கென் அண்ணே அந்த டீடெயிலு தெரியலைன்னே:))

    ஜெகதீசன் நன்றி

    நன்றி லக்கிலுக்

    அகல்விளக்கு தோனும் இப்படிதான் தோனும்:)))அப்புறம்........

    நன்றி ஜாக்:) நமக்கு திட்டும் ஆளுங்கதான் புதுசு:)))

    நன்றி ஆயில்

    நன்றி மஞ்சூர் ராசா

    நன்றி KVR சித்தப்பு

    நன்றி சுல்தான் பாய்

    நன்றி சின்ன அம்மிணி, வில்லத்தனம் இல்லை சும்மா மனசில் பட்டதை சொன்னேன்:))

    நன்றி அபுஅஃப்ஸர்

    நன்றி நேசமித்ரன்

    நன்றி நேசன்

    நன்றி பாலபாரதி அண்ணே

    நன்றி ரோமியோ

    நன்றி உ.த

    நன்றி பிரசன்னா

    நன்றி ராஜ நடராஜன்

    நன்றி வித்யா

    நன்றி ராஜன் (குடும்பத்தில் குண்டு வைப்போர் சங்க ஆளா நீங்க?:))))

    நன்றி கார்க்கி (இருக்கும் இருக்கும் பொய்யையே அனைவரும் இரசிப்பார்கள்)))

    நன்றி மயில்

    நன்றி மாதேவி அன்று மாலையே அவிச்சாச்சு:)))

    நன்றி இளா (எங்கேயும் இந்த டயலாக் உண்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

    நன்றி தமிழ் பிரியன்

    நன்றி அக்பர்

    நன்றி சரவணக்குமார்

    நன்றி அசோக்

    நன்றி ஆதி இங்க டேமேஜ் கம்மிதான்:)))

    நன்றி கூல் பாய்

    நன்றி மாம்ஸ் (நாம் எல்லாம் ஒரே இனம்)

    நன்றி காவேரி கணேஷ்

    நன்றி G3

    நன்றி மோனி (ஏன் இம்புட்டு கோவம்?:)))

    நன்றி பிளேயிங் கிங்

    நன்றி மங் சிங்

    ReplyDelete
  49. அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்.///


    சேமியா, சேமி சாரி...
    சேமிய்யா... சேமி.....
    அழகா இருக்கு படிக்கும்போதே...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. மிகவும் அருமையான பதிவு. இந்த விடுமுறை நாளின் தொடக்க பொழுதை இனிமையாக்கியது. நன்றி.

    ReplyDelete
  51. //ஒரு ஜெர்மனி பெண் என்று நினைக்கிறேன் ஆர்மடாவை விட கொஞ்சம் சின்ன மாடல் வண்டியை ஓட்டிக்கிட்டு //

    பாஸ் பார்த்தோனெயே ஜெர்மனி பொண்ணு தான் எப்படி கண்டுபிடிச்சீங்கே? அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும்.

    //"பாரு உன் பிள்ளையை" என்றும் சமத்தா இருக்கும் பொழுது "பாரு என் பிள்ளை எப்படி சமத்தா இருக்கான்" என்றும் மாறிவிடுகிறது.//

    பாஸ் நானும் உங்கள் கட்சி தான். ஆமா எல்லா ஆண்களும் நம்ம கட்சிதான். அதுதான் சரியாக இருக்கும்னு நினைக்கிறேன்.

    அந்த பிரியாணியை எந்த கடையில் வாங்கினீர்கள்? இல்லை நிறைய இடங்களில் புளியம் பிரியாணி போடுவதாக சொல்லுகிறார்கள்.இல்லையென்றால் நீங்கள் தான் சமைத்தீர்கள் என்று ஒத்துக் கொள்ளுங்கள். (பத்த வச்சிட்டியே பரட்ட)

    ReplyDelete