பார்க்க நினைச்சதால்தான் அடி சுண்டுவிரலோடு போனது என்றேன்.
இல்லை இல்லை ஆறு தையல்கள் போட்டு இருக்கிறார்கள் என்றார்.
கால் சுண்டுவிரலில் ஆறு தையல்களா? அவ்வளோ பெரிய சுண்டுவிரலா உங்களோடது என்றேன்.
%$$%#$#$#$# ன்னு திட்டிட்டு போய்விட்டார். அப்படி என்ன தப்பா கேட்டுவிட்டேன்? கேட்டதில் ஒரு நியாயம் இருக்குதானே?:)
*********
ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க ஹெட் ஆபிஸ் வேர்ஹவுஸில் தீ புடிச்சிருக்கு, அதுக்கு அருகில் ரெண்டு வேர்ஹவுஸ் தள்ளி இருந்த எங்களுடைய இன்னொரு வேர்ஹவுசில் இருந்த ஆளுங்க அதை பூட்டிவிட்டு வந்து வெளியே நின்னு இருக்கிறார்கள். தீ அணைக்க வந்தவர்கள் பூட்டியிருந்த தீப்பிடிக்காத வேர்ஹவுஸ் சட்டரை உடைக்க போய் இருக்கிறார்கள், கீ வைத்திருந்தவர் சொல்லியிருக்கிறார், சார் கீ இருக்குன்னு, ம்ம்ம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிட்டு ரொம்ப கஷ்டப்பட்டு நெம்பி ஷட்டரை உடைச்சுட்டு, உள்ளே இருந்த கண்ணாடி டோரை உடைக்க போய் இருக்கிறார்கள், அப்பயும் சார் கீ இருக்குன்னு சொல்லியிருக்கிறார், வேண்டாம் என்று சொல்லிவிட்டு கண்ணாடியையும் உடைச்சுக்கிட்டு உள்ளே சென்று இருக்கிறார்கள்.:))) (விஜயகாந்த் ரசிகர்களா இருப்பானுங்களோ?)
9மில்லியன் திர்ஹாம் பொருட்கள் எரிஞ்சு போனாலும், கீ இருந்தும் கண்ணாடியை உடைச்சுக்கிட்டுதான் போவேன் என்று அடம் பிடிச்ச போலீஸை நினைத்து சிரிச்சுக்கிட்டு இருக்கிறார்கள் எங்க தலைவர்கள்.
***********
இனி பஸ்ஸில் நான் போட்ட மொக்கைகள்....
ஒரே ஒரு டவுட் யாராச்சும் கிளியர் செய்யுங்களேன்!
சூப்பர் கார்களில்(BMW,பென்ஸ்,ப்ராரி,லாண்ட் ரோவர் போன்ற கார்களில்) வந்து இறங்கும் பெண்கள் சூப்பராகவே இருக்க காரணம் என்ன? பத்துக்கு ஒன்னு கூட பழுது இல்லை. காருக்கும் பெண்ணுக்கும் என்ன சம்மந்தம்?
சூப்பர் கார்களில்(BMW,பென்ஸ்,ப்ராரி,லாண்ட் ரோவர் போன்ற கார்களில்) வந்து இறங்கும் பெண்கள் சூப்பராகவே இருக்க காரணம் என்ன? பத்துக்கு ஒன்னு கூட பழுது இல்லை. காருக்கும் பெண்ணுக்கும் என்ன சம்மந்தம்?
**********
எழுதுவதை படிக்க நாலு பேர் இருந்தா நீங்க எழுத்தாளர், உங்களை 40 பேர் பின் தொடர்ந்தால் நீங்கள் செலிபிரட்டி!
*******
அப்படியே என்னை அலேக்கா தூக்கி, ரெண்டு கோடி மூனு கோடிக்கு ப்ரீத்தி ஜிந்தா டீமுக்கு ஏலம் விடமுடியுமா? பாப்பா பக்கத்துல உட்காந்து டீம் தோக்கும் பொழுது எல்லாம் ஆறுதல் சொல்ல!:)
***********
ஆஹா அய்யனாரும் அங்காடித் தெரு படத்தை ஆஹா ஓஹோ என்று சொல்லியிருக்கிறாரே! அய்யனார் நல்லா இருக்குன்னு சொன்னா படத்தை மட்டும் இல்லை படம் போஸ்டரை கூட பார்க்காதேன்னு இணைய பாலபாடம் சொல்லிக்கொடுத்ததே! இப்ப என்ன செய்ய?
***********
குறி சொல்லும் பெண் போல் பெரிய பொட்டு வெச்ச ஒரு லேடி, கேஷ் கவுண்டர் முன்பு நின்னுக்கிட்டே ஏதோ பேசிக்கிட்டு இருந்தது, நான் ஏதோ பிரிண்ட் செய்யதான் வந்திருக்கு போல என்று நினைச்சேன், ரொம்ப நேரம் ரிசப்ஸினிஸ்ட் கிட்ட பேசவும்,என்ன பிரச்சினை? என்ன வேண்டும் என்றேன். கை கால் மூட்டு வலிக்கு தலைலம் விக்கிறவங்க சார் என்று என் ரிசப்ஸினிஸ்ட் சென்னுச்சு. இந்தாம்மா இங்க எல்லோரும் ஹெல்தியா இருக்கோம், மூட்டுவலி தைலம் எல்லாம் வேண்டாம் கிளம்பு என்றேன். டக்குன்னு சொன்னுச்சு "தலைமுடி கொட்டாம, சொட்டையில் முடிவளரவும்" தைலம் இருக்குன்னு. ங்கொய்யாலே. வெளியில் இருந்தும் நம்மை டேமேஜ் செய்யவே வரானுங்க.
***********
ஆதவன் பட 100வது நாள் விழாவில் கமல் சொன்னது
"ஒருமுறை மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவுக்கு நான் போனபோது, அங்கிருந்த லைப்ரரியில் கலைஞர் எழுதிய ஸ்கிரிப்ட்டைப் பார்த்தேன். அதில், அத்தனை நுணுக்கமான விஷயங்கள் இருந்தன.
"ஒருமுறை மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவுக்கு நான் போனபோது, அங்கிருந்த லைப்ரரியில் கலைஞர் எழுதிய ஸ்கிரிப்ட்டைப் பார்த்தேன். அதில், அத்தனை நுணுக்கமான விஷயங்கள் இருந்தன.
அதை படித்த பிறகு, எழுத வேண்டும் என்ற ஆசையை ஆறு வருடங்களுக்கு தள்ளிப்போட்டேன்"
அதே மாதிரி இப்ப அவர் எடுத்த உளியின் தலைவலி ஓசை, பெண் சிங்கம் ஆகிய படங்களை பாருங்க படத்தில் நடிக்கும் ஆசையே போய்விடும்.
******************
//ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தா!//
நல்லா சொல்றாய்ங்கய்யா டீடெயிலு. இதுதான் சமாதி நிலை என்றால் ஊர்ல பல பயபுள்ள எப்பவும் சமாதி நிலையில் தானே இருக்கானுவோ!
******************
சென்னை பதிவகள் ஆரம்பிக்க போகும் சங்கத்துக்கு போட்டியா நான் ஒன்னு ஆரம்பிக்க போறேன் அதன் பேரு "பங்கம்". பைத்தியக்காரன் அண்ணாச்சி "பங்கம்" ஆரம்பிப்பதின் நோக்கம் என்ன? என்று தொடர்ந்து கேள்வி கேட்டு டரியள் செய்வார் என்பதால், அவர் கேட்கும் முன்பே சொல்லிவிடுகிறேன் "பங்கம்" ஆரம்பிப்பதின் நோக்கம் தமிழுக்கு முடிந்த அளவு பதிவு எழுதி பங்கம் உண்டாக்குவதே. அப்பதான் அதை சரி செய்ய என்று ஒரு டீம் இருக்கும், அதனாலேயை தமிழை தொடர்ந்து துடிப்பிலேயை வைத்திருப்பதே இந்த "பங்கத்தின்" நோக்கம்.
இதில் தலைவரை தெரிவு செய்ய போட்டி நடைபெறும், பினா வானா கதை எழுதி தமிழை பங்கம் செய்யும் ஆட்கள்கள் சிறந்தவர்களா? அல்லது என்னை மாதிரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு மொக்கை போட்டு தமிழுக்கு பங்கம் ஏற்படுத்துபவர்கள் சிறந்தவர்களா என்று முடிவு செஞ்சு அவரே தலைவர் ஆக்கப்படுவார்.
இதோ உங்களிடம் கொடுக்கப்படும் பேப்பரில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.
அகில உலக வலைப்பதிவர்கள் பங்கம். என்ற பெயர் ஓக்கேவா? ஆமாவா? (ரெண்டு ஆப்சன் தான்)
இனிமே பதிவு எழுதலாமா கூடாதா? (எழுதாம எப்படி பங்கம் செய்வது?)
தமிழுக்கு பங்கம் உண்டாக்குவது குழுவாகவா? இல்லை தனியாகவா?
கலைஞரிடம் பேசி தலைமைச்செயலத்தில் ஒரு மாடியை பங்கத்துக்காக ஒதுக்க சொல்லலாமா?
தேர்தல் நடத்தினால் மின்னனு வாக்கு பதிவு முறையை அறிமுகப்படுத்தலாமா?
இல்லை ஓட்டு சீட்டு முறை என்றால் ஓட்டு பெட்டியை தூக்கிட்டு ஓடாமல் தடுப்பது எப்படி?
தேர்தலில் வாக்களிக்க ஆட்களை லாரியில் கூப்பிட்டு வருவதுக்கான செலவை சமாளிப்பது எப்படி?
*********
சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகள் ஏன்? விடை கிடைத்தது... http://www.youtube.com/user/wilbursargunaraj#p/a/u/1/3oW1oR61FMw
32 comments:
:-)))
ரைட்டு !
பஸ்ஸுலே பேசிக்கிட்டே இங்க வந்தாச்சா !
தலைவர் வில்பர் வாழ்க :)
அங்காடி தெரு படம் பார்க்கல..
ஆனா முத்துக்குமாரோட ஒரு வரி
“அவள் அபப்டியொன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அபப்டியொன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை”
ம்ம்ம்
வில்பரின் புகழ் பரப்பும் புனித சேவையில் இணையத்தில் இணைந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள்
ஆயில்யன்
வில்பர் பேரவை
:)))
/அகில உலக வலைப்பதிவர்கள் பங்கம். என்ற பெயர் ஓக்கேவா? ஆமாவா? (ரெண்டு ஆப்சன் தான்) /
:-)))
உங்க எழுத்து நடைல(!) டீடெய்லா, குசும்பு மார்க் இடுகைய எதிர்பார்த்தேன்...
சின்னதா வந்துடுச்சு.
ஆனாலும் கடுகு மாதிரி :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அடப்பாவி! :)
//சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகள் ஏன்? விடை கிடைத்தது..//
ஹே யாருப்பா இந்தாளு??? நம்ம கூட்டத்தச் சேர்ந்தவன மாதிரியே இருக்காரு!!!! மத்த வீடியோவெல்லாம் பார்த்திங்களா? மெரட்டுறாரய்யா மனுசன்
//வேண்டாம் என்று சொல்லிவிட்டு கண்ணாடியையும் உடைச்சுக்கிட்டு உள்ளே சென்று இருக்கிறார்கள்.:)))//
தீப்பிடிச்சிட்டா பூட்டி இருக்கிற இடத்தை உடைச்சிட்டுப் போய் தீயை அணைங்கன்னு சொல்லிக் கொடுத்திருப்பாங்க :-)))
;)அங்காடித் தெரு பாருங்க..உலக காவியங்களின் வரிசையில் முதன்மையானதாகப் போற்றப்படக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு..;););)
)))))))))))
:))))
வில்பரின் புகைப்படத்தை இணைத்திருக்கலாம் :-))))))))))))))
Buzzல வந்த முக்கியமான மொக்கை மிஸ்ஸிங்...சச்சின் 200 ....................!!! :-))))
:-))))))))))))))))))
நல்லா கிளம்ப்புறாங்கய்யா பட்டயை
//அதே மாதிரி இப்ப அவர் எடுத்த உளியின் தலைவலி ஓசை, பெண் சிங்கம் ஆகிய படங்களை பாருங்க படத்தில் நடிக்கும் ஆசையே போய்விடும்.//
சூப்பர்.
என்னையும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவும்.
தல பதிவு சின்னதா போச்சு..
;-)))))
/அகில உலக வலைப்பதிவர்கள் பங்கம். என்ற பெயர் ஓக்கேவா? ஆமாவா? (ரெண்டு ஆப்சன் தான்) /
:-))
அங்காடித் தெரு நல்லாயிருக்குப்பா..! அவசியம் பார்த்திரு..!
அப்புறம் பங்கம் சங்கத்துலயாவது எனக்கு இடம் கொடுக்குறியா..?
இன்னிக்கு நிலைமைல எனக்கு இங்கன இருக்குற "ரெண்டு" சங்கத்துலேயும் இடம் இருக்காதுன்னு நினைக்கிறேன்..!
\தமிழை தொடர்ந்து துடிப்பிலேயை வைத்திருப்பதே இந்த "பங்கத்தின்" நோக்கம். \\
இதுவல்லவோ உயர்ந்த நோக்கம்:)))
//எழுதுவதை படிக்க நாலு பேர் இருந்தா நீங்க எழுத்தாளர், உங்களை 40 பேர் பின் தொடர்ந்தால் நீங்கள் செலிபிரட்டி!//
400 பேர் பின் தொடர்ந்தால்.........
தலிவரே.....?!
//அப்படியே என்னை அலேக்கா தூக்கி, ரெண்டு கோடி மூனு கோடிக்கு ப்ரீத்தி ஜிந்தா டீமுக்கு ஏலம் விடமுடியுமா?//
தெலிவா சொல்லிடுங்க தலீவா. பைசா நீங்க கொடுப்பீங்களா? அவங்க தரணுமா?
பங்கத்தில் என் பொறுப்பு என்னாங்குற சொல்லிட்டா பணியை இப்போதே துவங்கிடுவேன்
:))
"பங்கம்" குழுவிற்கு பொறுப்பாளர் பதவி கொடுத்து என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணே! ;-)
//BMW,பென்ஸ்,ப்ராரி,லாண்ட் ரோவர் போன்ற கார்களில்) வந்து இறங்கும் பெண்கள் சூப்பராகவே இருக்க காரணம் என்ன? பத்துக்கு ஒன்னு கூட பழுது இல்லை. காருக்கும் பெண்ணுக்கும் என்ன சம்மந்தம்//
பல முறை பலரால் சோதனை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பொருள்களில் குறைகள் பெரும்பாலும் இருக்காது... எப்பேர்பட்ட காரானாலும், சர்வீஸ் செய்ய சர்வீஸ் ஸ்டேசனுக்கு போய்த் தான் ஆகவேண்டும். (நான் காரை சொன்னேன் ராசா)
When there is any fire near by your place, you are not suppose to open the doors normally. You have to break the doors. That is the way. Check with some fireman's
பங்க தலைவரின் குசும்பு மொக்கை, அட்டகாசமாக வந்திருக்கு. ha,ha,ha,ha....
சிரித்து முடியவில்லை. குறிப்பாக அங்காடித்தெருவும், பங்கமும்.
பங்கத்துல நமக்கும் ஒரு சீட்டு போட்டு வைங்க பாஸ் :-)
நீங்க தான் பாஸ் அடுத்த "வில்பர் சர்குனராஜ்" ஹா ஹா
பங்கம் ;)))))))))))))))))))
சர்குணராஜ் விடியோ பார்த்துக்கிட்டு விளையாட போனால் சிரிச்சிகிட்டே விக்கெட்டை விட வேண்டியது தான்.
//9மில்லியன் திர்ஹாம் பொருட்கள் எரிஞ்சு போனாலும், கீ இருந்தும் கண்ணாடியை உடைச்சுக்கிட்டுதான் போவேன் என்று//
தீ பிடித்திருக்கும் சூழ்நிலைகளைக் கவனத்தில்கொண்டு, அதற்கேற்ப உள்ளே போக வழி ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று வாசித்த நினைவு.
http://cfbt-us.com/wordpress/?tag=door-entry:
Often overlooked is the fact that the entry point is a ventilation opening; sometimes an inlet, sometimes an outlet, and often both. When the fire is ventilation controlled, opening the door and increasing air flow to the fire will result in increased heat release rate. Depending on the stage of fire development and conditions within the compartment or structure, this may result in extreme fire behavior such as a ventilation induced flashover or backdraft
http://cfbt-us.com/wordpress/?p=50
Post a Comment