Saturday, October 24, 2009

அப்பா-டா!!!

அப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சு குழந்தையை முதன் முதலில் கையில் கொண்டுவந்து கொடுத்தபொழுது.

ஒரு புதுவரவு அதுவும் முதல் வரவு வீட்டில் எத்தனை மகிழ்ச்சியை கொண்டுவருகிறது. நான் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்ட மாதிரியே ஆண் குழந்தை, அடிக்கடி மனைவி சொல்வார்கள் சண்டை போட்டு விளையாட ஆண் பிள்ளை வேண்டும் என்று கேட்கும் ஒரே ஆள் நீங்கதான் என்று.

சொந்த சகோதரனுக்கு, சகோதரிக்கு குழந்தை பிறந்தது போல் தொலை பேசியில் பேசிய அனைத்து நண்பர்கள் குரலிலும் தெரிந்தது அத்தனை அன்பு. மறக்காமல் அனைவரும் கேட்ட முதல் கேள்வி பையன் உன் கலரில் இல்லைதானே என்று:) நல்லா இருங்க மக்கா!:)

மகனுக்கு இனியன் என்ற பெயரை முடிவு செய்து இருக்கிறோம். தூய தமிழில்தான் பெயர் வைக்கனும் என்று கொள்கை எல்லாம் இல்லை, முதலில் கருவில் இருக்கும் பொழுதே முடிவு செய்து இருந்த ஹர்ஷன் என்ற பெயர் எங்களை தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை. ஆகையால் பெயரை மாற்றிவிட்டோம். பெயர் வைக்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் தான், அதற்கு முன்பு நண்பர்களிடம் சொல்லிவிடலாம் என்று உங்களுக்கு சொல்லிவிட்டேன். மற்றபடி இனியன் சொன்ன பேச்சு ஒழுங்காக கேட்கும் பிள்ளையாக இருக்கிறான்.

தம்பி நிப்பாட்டாம ஒரு ஒரு மணி நேரம் அழுவுடா என்றால் சரியாக செய்கிறான்.

தம்பி இரவு எல்லாம் முழிச்சுக்கிட்டு அம்மாவை தூங்கவிடாம பார்த்துக்கடா குட்டி என்றால் சரியாக செய்கிறான்.

ஒழுங்கா பால் குடிக்காம அடம்பிடிடா என்றால் சரியாக செய்கிறான். இப்படி சொல்வதை எல்லாம் கொஞ்சம் கூட தவறு இல்லாமல் சரியாக செய்கிறான்.

குழந்தைகளை லூலுலுலு , டடாடா டா, ஜூஜூஜூ என்று என்ன என்னமோ வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி கொஞ்சுபவர்களை பார்க்கும் பொழுது சிரிப்பாக இருந்தது. இப்பொழுது எனக்கும் எங்கிருந்து அது எல்லாம் வந்தது என்று தெரியவில்லை. அம்மா சமாதான படுத்தும் பொழுது அப்பா அடிச்சாரா செல்லம் இரு இரு நாம அடிச்சிடலாம் என்று மஞ்சுவும், நான் கொஞ்சும் பொழுது அம்மா ங்கா கொடுக்கலீயாப்பா இரு இரு அம்மாவை நாலு போடு போடலாம் என்று நானும்...மாறி மாறி ஒருத்தரை அடிக்க சப்போர்ட்டுக்கு ஆள் சேர்த்துக்கிட்டு இருக்கோம்.

வாழ்த்திபதிவு போட்ட நண்பர்கள் , வாழ்த்து செய்தி அனுப்பியவர்கள், போனில் பேசி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி!

பிறகு அடுத்த வாரம் ஊர் திரும்பியதும் மொக்கைய ஆரம்பிச்சுடலாம்! அதுவரை வெயிட்டீஸ்... தம்பி அழுவுகிறான் அவனை பார்த்துக்க போகிறேன்... ஹி ஹி ஹி பொறுப்பான தகப்பன் என்று எப்படி எல்லாம் உங்களை நம்ப வைக்க வேண்டியிருக்கு!

95 comments:

  1. எனக்கு ஏன் குசும்பன் என்று பெயர் வைக்கவில்லை என்று பின்னாளில் கேட்பான் பாருங்க !

    ReplyDelete
  2. நான் தான் முதல் போனியா !

    ReplyDelete
  3. மகளோடு சேர்ந்து சைட் அடிக்க முடியாது, மகனோடு சேர்ந்து சைட் அடிக்கலாம் என்ற காரணம் தானே மகன் வேண்டும் என்று சொல்ல வைத்தது...தெரியமப்பா உன்னைப் பற்றி!

    ReplyDelete
  4. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது குசும்பண்ணே.. இளஞ்சிங்கத்த சித்தப்பாக்கள்கிட்ட எப்ப காட்டப்போறீங்க

    ReplyDelete
  5. /TBCD said...
    மகளோடு சேர்ந்து சைட் அடிக்க முடியாது, மகனோடு சேர்ந்து சைட் அடிக்கலாம் என்ற காரணம் தானே மகன் வேண்டும் என்று சொல்ல வைத்தது...தெரியமப்பா //

    நல்ல கருத்தாழம் மிக்க கண்ணோட்டம் டிபிசிடி :)))

    ReplyDelete
  6. //TBCD said...
    எனக்கு ஏன் குசும்பன் என்று பெயர் வைக்கவில்லை என்று பின்னாளில் கேட்பான் பாருங்க //

    குசும்பன் பேரு தானா வைக்கறதில்ல.. அதுவா எடுத்துக்கறது :)))

    ReplyDelete
  7. தலைப்பு சும்மா நச்சுன்னு இருக்குதுண்ணே :)

    ReplyDelete
  8. // மற்றபடி இனியன் சொன்ன பேச்சு ஒழுங்காக கேட்கும் பிள்ளையாக இருக்கிறான்.//

    மற்றபடி :-)))

    ReplyDelete
  9. //வாழ்த்திபதிவு போட்ட நண்பர்கள் , வாழ்த்து செய்தி அனுப்பியவர்கள், போனில் பேசி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி!//

    ஏன் வாழ்த்துன்னு கமெண்ட் போட்டவங்களுக்கு நன்றி சொன்னா சரக்கு குறைஞ்சுருமா :)

    ReplyDelete
  10. //மறக்காமல் அனைவரும் கேட்ட முதல் கேள்வி பையன் உன் கலரில் இல்லைதானே என்று:) //

    உம் புள்ள மேல அம்புட்டு பாசமுண்ணே :)

    ReplyDelete
  11. // இப்பொழுது எனக்கும் எங்கிருந்து அது எல்லாம் வந்தது என்று தெரியவில்லை.//

    எல்லாம் அதுவா வர்றதுதான்னே... :))

    ReplyDelete
  12. //மாறி மாறி ஒருத்தரை அடிக்க சப்போர்ட்டுக்கு ஆள் சேர்த்துக்கிட்டு இருக்கோம்.//

    தமிழ்மணத்துக்கு ஏத்த சோடிதான் அண்ணே :)

    ReplyDelete
  13. தம்பீ..

    இனியனையாவது குசும்பன் மாதிரி வளர்க்காம விடுப்பா..!

    அவனாவது நல்ல புள்ளையா வரட்டும்..!

    நீ எழுதியிருக்கிறதை பார்த்தே இப்பவே உன் ரோதணையை ஆரம்பிச்சிட்ட மாதிரி தெரியுது..

    இனியனுக்கு என் அன்பு முத்தங்கள்..!

    ReplyDelete
  14. அம்மாக்கள் வலைப்பூ மாதிரி அப்பாக்கள் வலைப்பூ ஒன்னு ஆரம்பிச்சுடலாம் அண்ணே :))

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் குசும்பன் :-)

    ReplyDelete
  16. /உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    தம்பீ..

    இனியனையாவது குசும்பன் மாதிரி வளர்க்காம விடுப்பா..!//

    குசும்பன் அங்கிளைப் பார்த்து பேசற பேச்சா இது உ.த.யூத் :)

    ReplyDelete
  17. வாழ்த்துகள் மஞ்சுவுக்கும் தங்களுக்கும்....இனியனுக்கு இனிய வாழ்த்துகள்!! :-)

    ReplyDelete
  18. மகிழ்ச்சி குசும்பன்,
    தம்பிக்கு பிளாக் மட்டும் எழுது கத்துக்குடுத்துராதீங்க...

    ReplyDelete
  19. அன்பு இனியனுக்கு ஆசிகள்!! பெற்றோர்க்கு வாழ்த்துகள்!!! மிக தாமதமாகத்தான் செய்தி தெரிந்தது.அதனால் வாழ்த்த தாமதம்! மன்னிக்கவும்!

    ReplyDelete
  20. குசும்பன்,

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. //தமிழ்மணத்துக்கு ஏத்த சோடிதான் அண்ணே :)//

    இனியன் எப்போ எழுதுறது, ப்ளாக் போடுறது, மொக்கை போடுறது??

    ஏற்கனவே குசும்பன் அனானியா பல இடத்துல மொக்கை போடுறான். இனி இனியன் என்கிற பேர்லையும் போடட்டும்.

    ReplyDelete
  22. வாழ்த்துகள் தம்பி சரவணா.

    எல்லாம் வல்ல ஆண்டவன் குழந்தைக்கு எல்லா நலமும், வளமும் அளிக்கப் ப்ராத்திக்கின்றேன்.

    ReplyDelete
  23. இங்கயும் ஒரு தபா வாழ்த்து சொல்லிக்கறேன் :)))

    ஹிஹி.. அக்கபோர இப்பவே ஆரம்பிச்சாச்சா !! பாவம் மஞ்சு. 2 பேர் சேட்டைய இனி சாமாளிக்கனும் :P

    ReplyDelete
  24. இனியன்.... அருமையான பெயர். இங்க வந்து ட்ரீட் கொடுக்க மறந்துராதீங்கண்ணே!

    ReplyDelete
  25. வாழ்த்துகள் குசும்பன்.. நீங்க குடுத்த நெம்பர்க்கு ஃபோன் பண்ண முயற்சி செஞ்சேன். முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது கூப்பிடுங்க..

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  27. அப்பா-டா அப்பா-டா அப்பா-டா!!!!!!!

    ReplyDelete
  28. ரசனையான பதிவு. :)
    குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    //வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி கொஞ்சுபவர்களை பார்க்கும் பொழுது சிரிப்பாக இருந்தது. இப்பொழுது எனக்கும் எங்கிருந்து அது எல்லாம் வந்தது என்று தெரியவில்லை. //
    :))

    ReplyDelete
  29. இனியனுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் :)

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்’ண்ணே... :)

    ReplyDelete
  32. இனியனுக்கு வரவேற்பும் வாழ்த்தும்.

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் குசும்பன். :)

    ReplyDelete
  34. //வாழ்த்துக்கள் குசும்பன்
    இனியனுக்கு என் அன்பு முத்தங்கள்

    ReplyDelete
  35. ;) வாழ்த்துக்கள் பாஸ் இந்த ப்ராஜெக்டாவது கரெக்டா பண்ணியிருக்கீங்களே

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் திரு. குசும்பன்..

    இனியன் நல்ல பெயர்..:)

    ReplyDelete
  37. //நான் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்ட மாதிரியே ஆண் குழந்தை//
    முதலில் பெண் பிள்ளை பிறந்தால் மனைவி சீக்கிரம் பாட்டியாகி விடுவார்கள்.
    அப்புறம் எங்கே .... .... ......
    அதனால்தான் என்று
    எங்களுக்கெல்லாம் தெரியாதா? :))

    குசும்பன் ஜோடிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இனியனுக்கு அன்பு முத்தங்கள்.

    ReplyDelete
  38. நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. Congrats Mr.Saravanan f/o Iniyan.

    OOruku vanthu treat maranthutaadinga..

    ReplyDelete
  40. அருமையான பெயர்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  41. மகனோடு சேர்ந்து சைட் அடிக்கலாம் என்ற காரணம் தானே மகன் வேண்டும் என்று சொல்ல வைத்தது...தெரியமப்பா உன்னைப் பற்றி!

    மறக்காமல் அனைவரும் கேட்ட முதல் கேள்வி பையன் உன் கலரில் இல்லைதானே என்று

    பதிவை விட இது கொமன்ட்ஸ் நல்லாயிருக்கு.. ஹா ஹா ஹா...

    இனியன் நல்ல பெயர்.

    எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்க கூடாதா பெயர் வைக்க முதல். நிறைய பெயர் தந்திருப்போம் அல்லவா..

    Happy Parenting

    ReplyDelete
  42. //சென்ஷி said...

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது குசும்பண்ணே.. இளஞ்சிங்கத்த சித்தப்பாக்கள்கிட்ட எப்ப காட்டப்போறீங்க
    //


    ரிப்பிட்டேய்ய்ய்ய்!

    வாழ்த்துக்கள் பாஸ் :))

    ReplyDelete
  43. இனியன் அழகிய பெயர்.வாழ்த்துக்கள்.

    பாட்டெல்லாம் பாடத்தொடங்கி விட்டீர்களா பாராட்டுக்கள்.

    ReplyDelete
  44. நல்லாருக்கு பேரு! அவனும் குசும்புவானான்னு பாக்கலாம்

    ReplyDelete
  45. வாழ்த்துக்கள் குசும்பன்.

    இனியன் - பெயர் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  46. My other close friend's daughter's name is INIYA.

    Once again congratulations

    ReplyDelete
  47. வாழ்த்துகள் சரவணன் !!

    எல்லாம் வல்ல ஆண்டவன் குழந்தை இனியனுக்கு எல்லா நலமும், வளமும் அளிக்கப் ப்ராத்திக்கின்றேன்.

    ReplyDelete
  48. வாழ்த்துகள் குசும்பன்.!

    (இனிமேதான் இருக்குடியேய்..)

    ReplyDelete
  49. ரசனையா எழுதி இருக்கப்பா... ரசிச்சுப் படிச்சேன். சூட்டோட சூடா அடுத்த பட வேலைகளை ஆரம்பிச்சுடுங்க... :)

    ReplyDelete
  50. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது குசும்பண்ணே.. இளஞ்சிங்கத்த சித்தப்பாக்கள்கிட்ட எப்ப காட்டப்போறீங்க
    //


    rரீப்பீட்டேய்

    ReplyDelete
  51. பெயர் நல்லா இனிமையா இருக்கு அண்ணே.:)

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள் குசும்பன் @ சரவணன்

    ReplyDelete
  53. ”இறைவனை” பார்த்திங்களா பாஸ்..:)













    *குழந்தையின் சிரிப்பில் !!

    ReplyDelete
  54. இனியனையாவது குசும்பன் மாதிரி வளர்க்காம விடுப்பா..!
    //


    அவரு எங்க வளர்க்க போறாரு அந்த வேலையை நாங்க பார்த்துகிறோம் :)

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் குசும்பன்

    ReplyDelete
  56. இனியன் அழகிய பெயர்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  57. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  58. வாழ்த்துக்கள் இனியனுக்கும் உங்களுக்கும்

    ReplyDelete
  59. வாழ்த்துகள். உங்கள் மனைவிக்கு, இனியனுக்கு அப்புறம் உங்களுக்கு:)

    ReplyDelete
  60. தங்கள் துணைவியாருக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  61. மிக்க மகிழ்ச்சிண்ணே ;)

    ReplyDelete
  62. சூப்பர் மாம்ஸ்..

    இனியன் என்ற பெயரை வைத்தது மஞ்சு தான் என்பதை மறைத்த உன் நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன் குசும்பா.. :)

    ReplyDelete
  63. திரு & திருமதி குசும்பன் மற்றும் ஜூனியர் குசும்பனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  64. I wrote it sometimes back.. now only updating after seein ur kids name..

    http://the-nutty-s.blogspot.com/2009/10/some-stylish-tamil-names-for-babies.html

    ReplyDelete
  65. வாழ்த்துகள் குசும்பரே!

    வளமோடு வாழ்க!

    வளம் - குசும்பு

    ReplyDelete
  66. வாழ்த்துக்கள் குசும்பன் அவர்களே. இனி நாள் முழுதும் சந்தோசங்கள் நிறையட்டும்.
    முதல் குப்புற விழுதல், தவழ்தல், நிற்றல் நடத்தல் என அவன் வளரும் போது பல ஆச்சரியங்களை அடைவீர்கள். மழலை மொழியில் இனிமை காண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  67. இனியன் அப்பா அம்மாக்கு வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  68. வாழ்த்துகள் அண்ணா... :)))

    ReplyDelete
  69. வாழ்த்துக்கள் குசும்பன்..

    இனியன் பிறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில்,ஜோசப் பால்ராஜின் பதிவை பார்த்தேன்...உடனே உங்களை
    அழைத்து பேசலாம் என்று தோன்றியது...சரி அதிகாலை 5 மணி......லேசான தயக்கம்....நீங்கள் வேறு
    பிசியாக இருக்கக்கூடும் என்று த்விர்த்து விட்டேன்.

    எனிவே.....புதுவரவு,,,இன்னும் பல செல்வங்களை உங்களுக்கு தருவிக்க ...பிரார்த்தனைகள் !!!

    ReplyDelete
  70. //தம்பி நிப்பாட்டாம ஒரு ஒரு மணி நேரம் அழுவுடா என்றால் சரியாக செய்கிறான்.//

    இனியன் உன் முகத்தில் நிப்பாட்டாம ஒண்ணுக்கு அடிக்க வாழ்த்துகள்.

    சரவணவேலு - மஞ்சு இணையர்களுக்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  71. குழந்தைகளை லூலுலுலு , டடாடா டா, ஜூஜூஜூ என்று என்ன என்னமோ வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி கொஞ்சுபவர்களை பார்க்கும் பொழுது சிரிப்பாக இருந்தது. இப்பொழுது எனக்கும் எங்கிருந்து அது எல்லாம் வந்தது என்று தெரியவில்லை. //

    இன்னும் நெறைய வரும் பாருங்க :))

    வாழ்த்துக்கள் இனியனுக்கு (பேர் ரொம்ப அழகா இருக்கு)

    ReplyDelete
  72. வாவ் வாழ்த்துக்கள் தல.. இனியன் பேர் கலக்கலா இருக்கு.. :)

    ReplyDelete
  73. வாழ்த்துக்கள் குசும்பா

    பெயரைப்போலவே வாழ்க்கை இனியவையாக இருக்க குழந்தைக்கும் என்னோட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  74. இனியனை பார்க்க வருகிறோம் சனிக்கிழமை!

    ReplyDelete
  75. "தல" வாழ்த்துக்கள்....

    "இனியன்" இனிய தமிழ் பெயர்....

    ReplyDelete
  76. இரண்டரை வருடம் முன்னாடி வரை, குழந்தைகள் மேல் அவ்வளவு இண்ட்ரஸ்ட் இருந்ததில்லை குசும்பன்.

    இப்ப... எந்த குழந்தையை பார்த்தாலும்... கொஞ்சறேன். இந்தியாவுல இருக்கற ரிலேடிவ்ஸ் எல்லாம் சிரிக்கறாங்க.

    நீங்க எப்படி ஃபீல் பண்ணியிருப்பீங்கன்னு தெரியுது! :)

    வாழ்த்துகள்!!!! :) :) :)
    ====

    ReplyDelete
  77. hearty welcomes to this wonderful world

    ReplyDelete
  78. வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  79. வாழ்த்துக்கள் பாஸ். பையனோட ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.

    ReplyDelete
  80. வாழ்த்துக்கள் குசும்பன் அண்ணாச்சி
    இனியன் நல்ல பெயர்

    ReplyDelete
  81. //மகளோடு சேர்ந்து சைட் அடிக்க முடியாது, மகனோடு சேர்ந்து சைட் அடிக்கலாம் என்ற காரணம் தானே மகன் வேண்டும் என்று சொல்ல வைத்தது...தெரியமப்பா உன்னைப் பற்றி!
    //

    ரிப்பீட்டேய்

    “இனியன்” - பேர் ரொம்ப சூப்பர். சமீபத்திலே என் நண்பர்கள்/உறவினர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப்பெயரா வைக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    BTW, பெரியப்பூ - உங்க மவன் எனக்கு தம்பி முறையா?

    ReplyDelete
  82. அப்போ மத்தவங்களுக்கெல்லாம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்றால், உங்களுக்கு, இனிய(ன்) தீபாவளி வாழ்த்துக்கள் அல்லவா?

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  83. மீ தி லேட்டே...........................ய்!

    ReplyDelete
  84. //குழந்தைகளை லூலுலுலு , டடாடா டா, ஜூஜூஜூ என்று என்ன என்னமோ வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி கொஞ்சுபவர்களை பார்க்கும் பொழுது சிரிப்பாக இருந்தது. இப்பொழுது எனக்கும் எங்கிருந்து அது எல்லாம் வந்தது என்று தெரியவில்லை.// :))))

    ReplyDelete
  85. மகனுக்கு இனியன் என்ற பெயரை முடிவு செய்து இருக்கிறோம். தூய தமிழில்தான் பெயர் வைக்கனும் என்று கொள்கை எல்லாம் இல்லை,

    உங்களிடம் பிடித்த்தது இந்த நேர்மை தான்.

    வாத்துக்கள்.ரொம்ப அழ்கான பெயர்

    ReplyDelete
  86. உங்களுக்கு வாழ்த்துக்களும்,
    இனியனுக்கு நல்வரவும் !!! :)

    ReplyDelete
  87. திரு குசும்பன் அவர்களே என்ன ஆளையே காணோம்? உங்களுக்கு வர நேரமில்லையா?
    சரி இனியனுக்கு இனிப்பு ஒன்லி - ன்னு ஒரு வலைப்பூவை உருவாக்கி பரிசாகத் தரவும்.
    உங்களுக்கு வயது முதிர்வு காரணமாக விருப்ப ஓய்வு தந்தாச்சு! லம்ப்பா ஒரு செட்டில்மென்ட் வீடு வந்து சேரும்.

    ஒகேவா ?

    ReplyDelete