Thursday, October 8, 2009

இதிலிருந்து என்ன தெரியுது???

எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன் வாரத்தில் ஒரு நாள் நீதி போதனைகள் வகுப்பு இருக்கும், எப்பொழுதும் எதாவது ஒரு கதைய சொல்லி இதுல இருந்து என்ன தெரிகிறது சொல்லு, எங்க மணி நீ சொல்லுடா பார்ப்போம், எங்க குமாரு நீ சொல்லுடா பார்ப்போம் என்று ஒவ்வொரு வாரமும் பிளேடு போடுவார் எங்க வாத்தியார். அன்னைக்கும் வழக்கம் போல ஒரு கதை சொன்னார் ஒரு வீட்டில் ஒரு சோம்பேறி எப்பவும் தூங்கிக்கிட்டே இருப்பானாம் அவனுக்கு வேலைக்கு போவதே பிடிக்காதாம், அப்ப லெட்சுமி சாமி என்ன செஞ்சுச்சாம் ஒரு தேவதைய அனுப்பி அவன் வீட்டு கதவை தட்டிட்டு வீட்டு வாசல் முன்னாடி ஒரு ஓட்ட பானைய வைக்க சொன்னுச்சாம் தேவதையும் போய் கதவை தட்டிட்டு பானையவெச்சுட்டு ஒளிஞ்சுக்கிச்சாம், இந்த சோம்பேறியும் மெதுவா வந்து பார்த்தா ஓட்ட பானை இருந்துச்சாம் காலால் ஒரு உதை விட்டுவிட்டு திரும்ப போய் படுத்துக்கிட்டானாம், திரும்ப வேற ஒரு தேவதைய தட்ட சொல்லி ஒரு அலுமினிய பாத்திரத்தை வைக்க சொன்னுச்சாம் இப்படியே கதை போய்க்கிட்டு இருந்துச்சு கடைசியா லெட்சுமி ஒரு பானை நிறையா தங்க காசை போட்டு அதை அவன் வீட்டுக்கு முன்னாடி வெச்சு கதவை தட்ட சொன்னுச்சாம் இவனும் எழுந்து போய் பார்க்க அலுப்பு பட்டுக்கிட்டு படுத்தே கிடந்தானாம், அப்ப அந்த வழியா வேலைக்கு போய்ட்டு திரும்ப வந்த பக்கத்து வீட்டுக்காரன் அதை பார்த்து எடுத்துக்கிட்டு போய் பெரிய பணக்காரனாக ஆகிட்டான். இதுல இருந்து என்ன தெரியுது என்றார்... என்னை பார்த்து கொடுக்கனும் என்று நினைச்சா சாமி முதல் முறையே கொடுத்துடும் என்று தெரியுது சார் என்றேன்.**&&###@@@%%%^%%^%^*


பத்தாவது படிக்கும் பொழுது ஒருத்தரிடம் டியூசன் போனோம் அப்ப அவரு நடராஜ் என்பவனை கூப்பிட்டு கடைக்கு போ, இதமாதிரி சார் வாங்கி வரசொன்னாருன்னு சொல்லு அவன் ஒரு பொட்டலம் கொடுப்பான் அதை வாங்கிட்டு வா,பிரிச்ச கொன்னேப்புட்டேன் என்று அனுப்புவார். அவனும் ரொம்ப பயந்தபுள்ள ஒழுங்கா வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான், ஒருநாள் அவன் லீவு என்னை கூப்பிட்டு போய்ட்டு வர சொன்னார் போய் கேட்டேன் இதுமாதிரி சார் வாங்கிவர சொன்னாருன்னு,அவனும் என்னத்தையோ ஒரு பேப்பரில் சுற்றி கொடுத்தான், என்னதான் இருக்குன்னு வரும் வழியில் பிரிச்சு பார்த்தேன் அதில் இருந்தது காண்டம் திரும்ப அதே மாதிரி மடிச்சுட்டதா நினைச்சு கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன் வாங்கிட்டு உள்ளே போனவர், என்னை பார்த்து டேய் இதை பிரிச்சியா என்றார் இல்ல சார் என்றேன், டேய் ஒழுங்கா உண்மைய சொல்லு என்றார் இல்ல சார் என்றேன், நாலு அடிய போட்டார் சார் அடிக்காதீங்க அப்புறம் சார் ஏன்டா உன்னை உள்ளே கூப்பிட்டு அடிச்சாரு என்றால் உண்மைய சொல்லிடுவேன் என்றேன். அத்தோட அடிக்கிறத நிப்பாட்டிட்டார். மறுநாள் டியூசனுக்கு போனா அடிபோட்டு நிமித்தினார் அடிக்கும் பொழுது சொன்னார், அடிச்சா சொல்லுவேன் என்று சொன்ன அடிக்காம விட்டேன் அப்படியும் எல்லோரிடமும் சொல்லி ஸ்கூல் வாத்தியார் எல்லாம் கேட்கிறானுங்க பையனை விட்டு வாங்கி வரசொன்னீயா, ஒரே ஒருநாள்தானே உன்னை அனுப்பினேன் என்று போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினார்..


காலேஜ் முடிச்சுட்டு தஞ்சாவூரில் ஒரு கம்பெணியில் மார்க்கெட்டிங்கா ஜாயிண்ட் செஞ்சேன், எங்க எம்.டி, சரவணன் உங்க காலேஜில் ஒரு செமினார் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் யாரையும் தெரியுமா? பர்மிசன் வாங்கி தரமுடியுமா என்றார், என்ன சார் இப்படி கேட்டுப்புட்டிங்க என்னா நேமு எனக்கு ,எப்ப தேதி வேண்டும் என்று சொல்லுங்க வாங்கி தருகிறேன் என்றேன். இல்ல நீங்க புதுசு எப்படி சொல்லி கேட்கனும் என்று தெரியாது நானும் வருகிறேன் வாங்க போகலாம் என்றார். சரிவாங்க என்று அவரையும் அழைச்சுக்கிட்டு எங்க CS டிப்பார்ட்மெண்ட் HOD ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போனேன், எப்பயும் அவரை பார்க்க நாலஞ்சு பேரு நின்னுக்கிட்டு இருப்பாங்க, நானும் மார்கெட்டிங் ஆனதால டை கட்டி ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு அவரு ரூமுக்கு போனேன். எங்க எம்.டியையும் அழைச்சுக்கிட்டு, எதோ எழுதிக்கிட்டு இருந்தவரு என்னை எதிரில் டை எல்லாம் கட்டி பார்த்ததும் என்ன டா டை எல்லாம் கட்டிக்கிட்டு இந்த பக்கம் என்றார், இதமாதிரி மார்க்கெட்டிங்கா ஜாயிண்ட் செஞ்சு இருக்கேன் என்றேன், உனக்கு எல்லாம் எந்த கேன டா வேலை கொடுத்தான் என்றார், சார் இவருதான் சார் என்று டக்குன்னு எங்க எம்.டியை காட்டிட்டேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஹி ஹின்னு நின்னார். HODயும் இதை எதிர்பார்க்கல...அப்புறம் ஒருவழியா பேசி டேட் வாங்கி கொடுத்தேன் பேசுறேன்னு வந்தவர் ஒன்னும் பேசல. அதன் பிறகு ரொம்ப நாள் கிண்டலா சொல்லிக்கிட்டே இருந்தார் என்னை உங்க HODக்கு அறிமுகம் செஞ்சு வெச்ச மாதிரி யாரும் இப்படி அறிமுகம் செஞ்சு வெச்சு இருக்கமாட்டாங்க என்று...

இதில் இருந்து எல்லாம் என்ன தெரியுது......என்னை மாதிரி எப்பவும் உண்மை பேசிக்கிட்டே இருக்க கூடாதுன்னு தெரியுதா?:)))

56 comments:

  1. //என்னை பார்த்து கொடுக்கனும் என்று நினைச்சா சாமி முதல் முறையே கொடுத்துடும் என்று தெரியுது சார் என்றேன்.**//

    வெரிகுட்!

    பிரில்லியண்ட் பாய்!!! :)

    ReplyDelete
  2. //உனக்கு எல்லாம் எந்த கேன டா வேலை கொடுத்தான் என்றார், சார் இவருதான் சார் என்று டக்குன்னு எங்க எம்.டியை காட்டிட்டேன். //

    :)))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  3. ஆஃபீஸ்ல வேல இல்லன்னா இந்த மாதிரி பதிவு வரும்னு தெரியுது

    ReplyDelete
  4. //என்னை மாதிரி எப்பவும் உண்மை பேசிக்கிட்டே இருக்க கூடாதுன்னு தெரியுதா?:)))//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்ப என்ன உண்மை இதிலிருந்து தெரியுதுன்னா.....!

    சிக் லீவு சர்டிபிகேட் கொடுக்கவேண்டிய டாக்டருக்கிட்ட நீங்க என்னா சொன்னீங்கன்னு தெரியுது :)))

    ReplyDelete
  5. சூப்பரு,
    அப்பவே அப்படித்தானோ......

    ReplyDelete
  6. அப்பவே..கலாய்க்கலா?கலக்கல்.

    ReplyDelete
  7. ஏன் அந்த பொட்டலத்தை திறந்தீங்க தல..

    ஆபிஸ்ல எம்.டிய அறிமுகப்படுத்தின எங்க எம்.டி. ய நான் அறிமுகப்படுதினா. யோசித்து பார்த்தேன். சிரிப்பு வருது..

    ReplyDelete
  8. //உனக்கு எல்லாம் எந்த கேன டா வேலை கொடுத்தான் என்றார், சார் இவருதான் சார் என்று டக்குன்னு எங்க எம்.டியை காட்டிட்டேன். //

    பாவம் அந்த மனுஷன். வேலையும் உங்களுக்கு குடுத்து கேனனு வேற பட்டம் வாங்கறார் :)))

    ReplyDelete
  9. //இதில் இருந்து எல்லாம் என்ன தெரியுது......என்னை மாதிரி எப்பவும் உண்மை பேசிக்கிட்டே இருக்க கூடாதுன்னு தெரியுதா?:)))//

    இது...இது....இது... உண்மை... நிஜம்...சத்தியம்.... :-)))

    ReplyDelete
  10. // நானும் மார்கெட்டிங் ஆனதால டை கட்டி ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு //

    தஞ்சாவூருக்கு பேண்ட்டே ஜாஸ்தி. இதுல டை,ஷூவெல்லாம் வேற...
    ம்ம்ம்

    ReplyDelete
  11. இன்னைக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு கெடையாதுன்ற மாதிரி எப்பவுமே ஒரே மாதிரியா (குசும்பு, குசும்பு மட்டுமே) இருக்கிங்க தல. அப்படியே மெய்டென்டெய்ன் பண்ணுங்க

    ////இதில் இருந்து எல்லாம் என்ன தெரியுது......என்னை மாதிரி எப்பவும் உண்மை பேசிக்கிட்டே இருக்க கூடாதுன்னு தெரியுதா?:)))//

    இது...இது....இது... உண்மை... நிஜம்...சத்தியம்.... :-)))//

    ஆமா ஆமா ஆமா.

    ReplyDelete
  12. சின்ன வயசுலருந்தே இப்புடிதானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  13. //அதில் இருந்தது காண்டம் //

    எந்த காண்டம்னு சொல்லவே இல்லியே சுந்தர காண்டமா இல்ல ஆரண்ய காண்டமா?

    ReplyDelete
  14. இனிமையான அனுபவங்கள். உண்மைதானே? பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. மனசாட்சிOctober 8, 2009 at 6:03 AM

    :))
    :))

    ReplyDelete
  16. மனசாட்சிOctober 8, 2009 at 6:04 AM

    ஜெஸ்வந்தி said...

    இனிமையான அனுபவங்கள். உண்மைதானே?

    //

    படிச்சமா சிரிச்சமானு போய்கிட்டே இருக்கனும் ரொம்ப ஆராயகூடாது :)

    ReplyDelete
  17. ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

    ReplyDelete
  18. வயசாக ஆக லொள்ளு கூடிக்கிட்டே வந்திருக்குன்னு தெரியுது

    ReplyDelete
  19. குசும்பு கூடவே பொறந்தது போலிருக்கு..!

    ReplyDelete
  20. அப்பவே இப்டித்தானா?

    (நான் வாத்தியாருக்கு பொட்டலம் வாங்கிட்டு வந்தத கேட்கல)

    ReplyDelete
  21. முன்னாடியே ஓட்டுப்போட்டாச்சு!

    ReplyDelete
  22. இதுல இருந்து என்ன தெரியுதுனா.. உங்களுக்குக் குசும்பு ரத்தத்திலயே ஊறினதுனு தெரியுது :)

    ReplyDelete
  23. மனசாட்சிOctober 8, 2009 at 7:48 AM

    இதிலிருந்து என்ன தெரியுது???

    //

    உங்க மேனேஜர் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருனு தெரியுது :)

    ReplyDelete
  24. மனசாட்சிOctober 8, 2009 at 8:04 AM

    இப்பவெல்லால் நீங்க மூத்த பதிவர் போல் பதிலே போட மாட்டங்கிறிங்க


    :)

    ReplyDelete
  25. மனசாட்சிOctober 8, 2009 at 8:06 AM

    ஆமா அந்த பொட்டலத்தில் ஒண்ணு கொறைஞ்சதாமே..?


    அதுக்காகதான் அடித்தாராமே..?

    எது உண்மை பாஸ்

    ReplyDelete
  26. //உனக்கு எல்லாம் எந்த கேன டா வேலை கொடுத்தான் என்றார், சார் இவருதான் சார் என்று டக்குன்னு எங்க எம்.டியை காட்டிட்டேன். //
    உங்களுக்கெல்லாம் வேலை கொடுத்ததுக்கு தேவைதான்!

    ReplyDelete
  27. குட் காமெடி... :))))))))

    ReplyDelete
  28. சூப்பர் மாப்பி..

    //வயசாக ஆக லொள்ளு கூடிக்கிட்டே வந்திருக்குன்னு தெரியுது//
    அதூஊஊஊஊஊ

    ReplyDelete
  29. குசும்பு ஜாஸ்திதான் - சும்மா சொல்லக் கூடாது - ரொம்பவே நல்லாருக்கு

    ReplyDelete
  30. :) எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரியெல்லாம் :)

    ReplyDelete
  31. //என்னை பார்த்து கொடுக்கனும் என்று நினைச்சா சாமி முதல் முறையே கொடுத்துடும் என்று தெரியுது சார் என்றேன்.**//

    வெரிகுட்!

    பிரில்லியண்ட் பாய்!!! :)

    ReplyDelete
  32. கலக்கல்! :)
    அப்பவே..கலாய்க்கலா?கலக்கல்.

    ReplyDelete
  33. பாவம் அந்த மனுஷன். வேலையும் உங்களுக்கு குடுத்து கேனனு வேற பட்டம் வாங்கறார் :)))

    ReplyDelete
  34. இப்பவெல்லாம் நீங்க மூத்த பதிவர் போல் பதிலே போட மாட்டங்கிறிங்க


    :)

    ReplyDelete
  35. // இதில் இருந்து எல்லாம் என்ன தெரியுது......என்னை மாதிரி எப்பவும் உண்மை பேசிக்கிட்டே இருக்க கூடாதுன்னு தெரியுதா?:))) //

    இதை நாங்க சொல்லனும். ஆனா எங்களுகு இன்னேனும் தெரியுது, இது மாதிரி பண்ணும்போது உங்கள மாதிரி குசும்பனை பக்கத்துல வச்சுக்க கூடாதுன்னு. என்ன நான் சொல்லறது கரக்ட்டா? நல்ல பதிவு. நீங்க இங்க் சிங்கை பதிவர் ஜெசப் பால்ராஜ் பள்ளித் தோழராமா. உங்க இரண்டு பேரையும் எப்படி சமாளிச்சாங்க?

    ReplyDelete
  36. //இதுல இருந்து என்ன தெரியுதுனா.. உங்களுக்குக் குசும்பு ரத்தத்திலயே ஊறினதுனு தெரியுது :)///

    ரிப்பிட்டே

    ReplyDelete
  37. //வாத்தியார் எல்லாம் கேட்கிறானுங்க பையனை விட்டு வாங்கி வரசொன்னீயா, ஒரே ஒருநாள்தானே உன்னை அனுப்பினேன் என்று போட்டு சாத்து சாத்துன்னு //

    LOL!

    ReplyDelete
  38. அட்டகாசம். எப்படி சமாளிக்கறாங்க வீட்லயும், ஆபிசிலும்?

    அனுஜன்யா

    ReplyDelete
  39. இதிலிருந்து தெரியரது என்னானா சரியான பெயர் தான் உங்களுக்கு...

    ReplyDelete
  40. டியூசன் வாத்தியாரிடம் வேற என்னவெல்லாம் கத்துகிட்டிங்க!?

    துபாயில் அதை பயன்தருதா!?

    ReplyDelete
  41. /

    இதில் இருந்து எல்லாம் என்ன தெரியுது...
    /

    நீ நெம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்னு தெரியுது
    :))))))))

    பதிவு முழுக்க சிரிச்சிகிட்டே இருந்தேன் மாப்பி. சூப்பர்!

    ReplyDelete
  42. மனசாட்சிOctober 9, 2009 at 7:00 AM

    தஞ்சாவூருக்கு பேண்ட்டே ஜாஸ்தி. இதுல டை,ஷூவெல்லாம் வேற...
    ம்ம்ம்
    //

    நல்ல வேலை பேண்டோட விட்டிங்க :)

    ReplyDelete
  43. நல்ல வேளை, பிரித்து மட்டும் பார்த்தீர்கள்...

    ReplyDelete
  44. ஆயில்யன் ஆனா அவரு அப்படி சொல்லவில்லையே:(

    shabi நன்றி

    நன்றி பாலகுமாரன்

    நன்றி சென்ஷி

    நன்றி நர்சிம்

    நன்றி யோ வாய்ஸ்

    G3 பட்டம் வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை:)

    நன்றி ராட் மாதவ்

    அண்ணே தஞ்சாவூர் பெருமை என்னா ஏதுன்னு தெரியாம பேசுனீங்க, டவுசரை உருவிடுவோம் ஜாக்கிரதை:)

    நன்றி வரதராஜலூ

    நன்றி சஹானா

    அறிவிலி அது கோஹினூர் வைரம்

    நன்றி புருனோ

    நன்றி கதிரவன்

    நன்றி வடகரை

    நன்றி ஜெஸ்வந்தி

    ReplyDelete
  45. ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
    http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  46. நன்றி ஜெஸ்வந்தி அனைத்தும் நடந்தவைதான்!

    நன்றி கல்யாணி சுரேஸ்ஷ்

    நன்றி மனசாட்சி

    செல்வேந்திரன் என்ன ரியாக்சன் இது?

    நன்றி வானம்பாடி

    நன்றி உண்மைதமிழன்

    நன்றி பீர்

    நன்றி தேவன் மாயம்

    நன்றி செந்தில்வேலன்

    நன்றி பப்பு

    நன்றி அக்கிலீஸ்

    நன்றி சந்தோஷ்

    நன்றி பட்டிக்காட்டான்

    நன்றி சீனா

    நன்றி சின்ன அம்மிணி

    நன்றி ஜெகதீசன்

    நன்றி பித்தன், பால்ராஜ் என்னோட
    கல்லூரி தோழன், இப்ப எப்படியோ அப்பயும்
    அப்படிதான் சமாளிச்சாங்க:)

    நன்றி ஸ்ரீமதி

    நன்றி ஆதவன்

    நன்றி யூத் அனுஜன்யா

    நன்றி அமுதா

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

    நன்றி வால், இப்ப யூஸ் இல்ல:)

    மங்களூரான் டைப் எல்லாம் செஞ்சு பின்னூட்டம்
    போட்டு இருக்க ரொம்ப நன்றி:)

    நன்றி பட்டா பட்டி அப்ப யூஸ் செஞ்சு
    பார்க்கும் அளவுக்கு ”வளரவில்லை”:)

    ஆப்பு திரும்பவுமா? இன்னும் கொஞ்ச நாளைக்கு மாத்தி மாத்தி சந்தேகப்படபோறாங்க!

    ReplyDelete