Monday, July 20, 2009

”பிரபல” பதிவர் அடிச்ச பல்டி!

இங்கு பொது விடுமுறை நாட்கள் மிகவும் குறைவு, அப்படி என்றாவது கிடைக்கும் விடுமுறை அன்று காலையில் 11 மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு ஏதும் பாடாவதி படத்தை பார்த்து முடித்தால் அன்றைய நாள் முக்கால்வாசி முடிந்திருக்கும் இந்த முறை அப்படி எதுவும் இல்லாமல் மிகவும் சந்தோசமாக கழிந்தது இந்த ஒருநாள் விடுமுறை.

அய்யனார் அப்பா ஆனதுக்கு நேற்று முதல் நாள் இரவு பார்பிகியு டிலைட்ஸில் ட்ரீட் கொடுத்தார் செம கட்டு கட்டிய பிறகு ஆசிப் அண்ணாச்சியோடு நண்பர் வீட்டுக்கு சென்று அங்கு சீட்டு விளையாடினோம், எதிலுமே முதலில் வந்தே பழகிய அண்ணாச்சி இதிலும் முதல் ஆளாக அவுட் ஆகும் பொழுது நானும் சின்னபுள்ளையில் இருந்தே அப்படிதான் என்று அய்யனாரும் ஒரு 80 வாங்கி அவுட் ஆனார், மீதி இருந்த மூன்று ஆட்களில் நான் மிகவும் குறைவாக இருந்தேன் மற்றவர்கள் கம்பலில் இருந்தார்கள், ஜெயிக்கவேண்டிய நான் அண்ணாச்சியின் உதவியால் வெளியேறினேன். விளையாடி முடித்துவிட்டு நான் அய்யனார் இருவரும் ஆசிப் அண்ணாச்சி வீட்டுக்கு சென்று படுக்கும் பொழுது காலை மூன்று மணி,பின் தூங்கி எழுந்து காலை அங்கிருந்து புறப்பட்டு நீச்சல் குளத்துக்கு சென்றோம் போகும் வரை ஏகப்பட்ட ”பில்டப்பு” , அங்கு போய் பார்த்தால் ஒரு ஈ காக்கா இல்லை நாங்க மூன்று பேரும் ஒரு மணி நேரம் ஆட்டம் போட்டோம் , அய்யனார் அந்த குளத்திலேயே டால்பின் பல்டி, தவக்களை பல்டி என்றுவிதவிதமாக பல்டி அடிச்சு வேடிக்கை காட்டி எங்களை மகிழ்ச்சி அடைய செய்தார். (அப்பாடா தலைப்புக்கான மேட்டர் வந்துட்டு) பின் அங்கிருந்து கிளம்பி பதிவர் சந்திப்புக்கு போனோம்.

சந்திப்புக்கு நிறைய புதிவர்கள் வந்திருந்தார்கள் மொத்தம் ஒரு 25 பேருக்கு மேல் இருந்தது, அறிமுகத்தோடு ஆரம்பம் ஆனது,எப்பொழுதும் போல் கேலி கிண்டல்களோடு கொஞ்சம் இந்த முறை சீரியஸான விசயங்கள் பற்றியும் பேசப்பட்டது. சக்தி, வலையுலக குழு, ஆப்பு, ஆப்பரசன் பற்றியும் பேசப்பட்டது.

போனமுறை சந்திப்புக்கு வாசகராக வந்த நாகா இந்த முறை பதிவராக வந்தார் குறைந்த பதிவுகளே எழுதி இருந்தாலும் நன்றாக எழுதி இருப்பதாக அய்யனார் சொன்னார். (வேற யார் சொல்லி இருந்தாலும் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்திருக்கும் ஆனாஅய்யனார் என்கிற பொழுது கொஞ்சம் பயமாக இருக்கிறது).
போனமுறை கொஞ்சம் பேசிய வினோத் இந்த முறை மிகவும் குறைவாக பேசினார், அப்படி பேசியதும் எனக்கு ஆப்பாக அமைந்தது.

புதியவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்ன என்று கேட்டதற்கு

வினோத் எங்கே பேசினால் பெரிய பதிவர்கள் தொல்லையாக நினைப்பார்களோ என்றும், தொலைப்பேசி எண்கள் எல்லாம் தொலைஞ்சுவிட்டது என்று குசும்பன் போட்ட பதிவை பார்த்து போன் செய்யவும் பயம், அவரை ஆன் லைனில் பார்த்து ஒரு ஹாய் சொல்லவும் பயமாக இருந்ததுஎன்று சொல்ல இப்பொழுது வரை தொடர்கிறது அண்ணாச்சியின் ஆட்டம். “பிரபல பதிவர் குசும்பன் சார் பேசலாமா சார்” ”பயமா இருக்கு சார்” ”சார் உங்களை ஒருமுறை தொட்டு பார்த்துக்கவா சார்” என்று அய்யனாரும் ஆசிப்பும் மாறி மாறி கிண்டல் செய்தார்கள்.
செந்தில் எழுதிய ஒரு நல்ல பதிவுக்கு சென்னை பதிவர் ஒருவர் கிண்டலாக கமெண்ட் போட்டதை நாகா இப்படி செய்தால் எப்படி? என்று வருத்தப்பட்டார்.நான் எங்கேயும் ரொம்ப சீரியஸாக கமெண்ட் போட்டது இல்லை, பைத்தியக்காரன், சுந்தர் பதிவாக இருந்தாலுமே அங்கு கிண்டலாக கமெண்ட்தான் போட்டுவருகிறேன், கிண்டலோ,சீரியஸோ எதாக இருந்தாலும் லைட்டாக எடுத்துக்குங்க என்றேன். சீரியஸ் பதிவுலும் எப்படி நக்கல் செய்தார் என்று ரசியுங்கள் என்றேன்.
கலையரசன் இங்கிருந்து பழய ஆட்களே புதியவர்களான எங்களை கண்டுப்பது இல்லை ஏன் அப்படி என்றார்? அறிமுகம், பழக்கம் இல்லாமல் ஏதும் கருத்து சொன்னால்வந்துட்டாருடா பெரும் பதிவர் கருத்து சொல்லன்னு தப்பாக புரிஞ்ச்சுக்க வாய்பு இருப்பதால் தான் என்றார் அண்ணாச்சி.

ஒருவர் நீங்க எழுதிய பதிவுகளிலேயே எதை பெஸ்ட் என்று சொல்லுங்க என்றார், இப்படி எல்லாம் பொதுவில் வைத்து மானாத்தை வாங்காதீங்க என்றேன்.

கனாகாலம் சுந்தர் மசால் வடையை மட்டும் கொடுக்க வந்தவர் போல் எதுவும் பேசாமல் இருந்தார், அதுபோல் படகும், ஈழத்து நண்பரும் அறிமுகத்தில் பேசியதோடு சரி அதன் பிறகு வாயை திறக்கவே இல்லை.
அனானி கமெண்ட் ஆப்சனை எடுங்க என்று உ.த சொன்னதை ஏன் நீங்க கேட்கவில்லை இன்னும் உங்க பிளாக்கில் அனானி ஆப்சன் இருக்கு என்றார், நான் மிகவும் விரும்புவது அனானி ஆப்சன் வேறு வேறு பெயர்களில் கமெண்ட் கிலானி,மன்மோகன் சிங், இப்படி எல்லாம் கமெண்ட் போட எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இதுவரை அதை திட்ட பயன் படுத்தியது இல்லை அப்படியிருக்க அதை ஏன் நான் நீக்கவேண்டும் அப்படி நீக்குவதற்கும் நான் எதிரி என்றேன்.

பின் 8.30 மணிக்கு எல்லோரும் எஸ்கேப் ஆனோம்!

43 comments:

  1. மன்மோகன் சிங்July 20, 2009 at 2:59 AM

    நன்றி குசும்ப!

    ReplyDelete
  2. கிலானிJuly 20, 2009 at 3:00 AM

    மிக நன்றி குசும்பன்!

    ReplyDelete
  3. மன்மோகன் சிங் & கிலானிJuly 20, 2009 at 3:06 AM

    வேறு ஆப்ஷன் இல்லாததால நாங்க ரெண்டு பேரும் பிரதமர்களா இருக்கிறதால எங்க நிலைமை நீங்க அனானி அதர் ஆப்ஷன் ல கிண்டல் பண்ணுற அளவுக்கு ஆகிடுச்சி!

    ReplyDelete
  4. நான் பின்னோட்டம் போட்டாச்சு , ..... ஆசாத் அண்ணன் சொன்னா மாதிரி, மீதி 90% சரக்கு இனி வெளியல வரனும் ...சொல்லிபுட்டேன்

    ReplyDelete
  5. பான் கீ மூன்July 20, 2009 at 3:11 AM

    குசும்பன் சார் என் பெயரிலும் பின்னூட்டமிடவும்.

    ReplyDelete
  6. பின்னூட்டம் நல்லா வேலை செய்கிறது....

    உங்க பதிவும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. இதோட இந்த பதிவிற்கே அஞ்சு பின்னூட்டாம் ஆச்சு...

    (ஆனா இதுவரை எனக்கு நீங்கள் அனுப்பிய எந்த ஒரு பணமுடிப்பும் வந்துசேரவில்லை என்பதனை நினைவுபடுத்தி கொள்கிறேன் )

    ReplyDelete
  8. அண்ணாச்சிய சந்திக்கிறப்போ கையிலே கட்டோட வந்துட வேண்டியது தான்

    ReplyDelete
  9. /”பிரபல” பதிவர் அடிச்ச பல்டி! /

    இதுல தலக் குத்து இருக்கு, கண்டுபிடிச்சிட்டேன்

    ReplyDelete
  10. துபாய் ஷேக்July 20, 2009 at 3:43 AM

    வினோத் என்று ஒரு நபரை பற்றி குறிப்பிட்டு உள்ளிர்கலே..நீங்கள் சொல்லுவதை பார்த்தால் அவர் மிக நல்லவராக இருப்பார் போல் தெரிகிறது..அவருக்கு அமீரக அரசாட்சியின் சார்பில் ஒரு பெரிய பாராட்டு விழா நடத்தலாம் என்று இருக்கிறேன்..அவருக்கு நேரம் கிடைக்குமா என்று கேட்டு சொல்லவும்..

    ReplyDelete
  11. நல்லா இருக்கு தலைவரே..நேற்று பல பேரின் பேச்சில் மெய் மறந்து உக்கார்ந்து விட்டேன்..அதனால் கடைசி வரை பேச முடியவில்லை..

    ReplyDelete
  12. டைரக்டர் மணிரத்னம்July 20, 2009 at 3:46 AM

    வினோத் பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்..அவரின் புகைப்படம் இருந்தால் தயவு செய்து வெளியிடவும்..

    ReplyDelete
  13. பில்கேட்ஸ்July 20, 2009 at 3:50 AM

    வினோத் அங்க வந்துட்டானா..நேத்து இங்க ஒரு முக்கியமான மீட்டிங் இருந்துச்சு வாஷிங்டன்ல இங்க கூப்பிட்டு இருந்தேன்..அடுத்த வாரம் வரட்டும் வச்சிக்கிறேன்..

    ReplyDelete
  14. இது செல்லாது செல்லாது! படம் வித் கமெண்ட் நிறைய போடனும்...

    ReplyDelete
  15. யாருப்பா அது மணிரத்னம், பில்கேட்ஸ் எல்லாம் ..நான் அந்த அளவுக்கு பெரிய ஆளு இல்லை

    ReplyDelete
  16. //கோவி.கண்ணன் said...
    மீ த பர்ஸ்ட் !//

    கோவியாரே? என்னது இது?

    Me the 22nd

    ReplyDelete
  17. 50 வடை தனியாக பையில் போட்டு கொடுத்தார?

    ReplyDelete
  18. ஹேய், கொக்கரக்கோ கும்மாங்கோ
    சைதாப்பேட்ட வடகறி

    ReplyDelete
  19. சே... இந்த வடை பை பக்கத்துல இனிமே உக்கார கூடாது!
    எப்படி உஷாரா இருந்தாலும், இவரு கமெண்ட்ல மாட்டிகிறோமே...ம்!

    அடுத்த தடவை பையை உங்க பக்கதுல வச்சி போட்டோ எடுத்து நான்
    என் பதிவுல போடல.. என் பேரு ஆப்பரச.. சே சே கலையரசன் இல்ல!!

    ReplyDelete
  20. வெடிகுண்டு முருகேசன்July 20, 2009 at 4:49 AM

    என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது..!!

    ReplyDelete
  21. வெடிகுண்டு முருகேசன்July 20, 2009 at 4:50 AM

    என் பேரு ஆப்பரச.. சே சே கலையரசன் இல்ல!!
    //


    உண்மை..!

    ReplyDelete
  22. நீச்சல் குளமா? அதெங்க இருக்கு? சில ஹோட்டல் தலைக்கு மேலே இருக்கும்.ஒரு தடவை இந்த மாதிரி நீச்சல் குளம் என்று போய் பார்த்து வெறுத்திட்டேன்.
    இங்கு அதன் நீளம் 50 மீட்டர்.இரண்டு லோப் போய் வருவதற்குள் நாக்கு தள்ளிடுது!!

    ReplyDelete
  23. வெடிகுண்டு முருகேசன்July 20, 2009 at 4:56 AM

    ஜெயிக்கவேண்டிய நான் அண்ணாச்சியின் உதவியால் வெளியேறினேன்.
    ///


    :)

    :)))

    ReplyDelete
  24. வட போச்சா?

    முன்னரே வேறு ஒரு புரோக்ராமுக்கு அப்பாய்ண்ட்மென்ட் இருந்ததால் கலந்துக்கொள்ள முடியாததற்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  25. ஆப்பரசன்July 20, 2009 at 5:08 AM

    யாருய்யா அந்த கலையரசன்? என் பேரச் சொல்லிக்கிட்டு இருக்காரு? அடுத்த ஆப்பு உனக்கு தாண்டி

    ReplyDelete
  26. பிரபலப் பதிவர்July 20, 2009 at 5:09 AM

    நான் எங்கயும் பல்டி அடிக்கலை. அய்யனார் பல்டி அடிச்சா அய்யான் அடிச்ச பல்டின்னு தலைப்பு வையி, இல்ல பங்காளி ஆப்பரசன கூப்புட்டு உனக்கு ஆப்படிக்க சொல்லிருவேன்.

    ReplyDelete
  27. கார்ட்டூன் ....கலக்கல்

    ReplyDelete
  28. பல பிரபலங்கள் சேர்ந்து நடத்திய சந்திப்பா!

    ReplyDelete
  29. ஓ.. அப்ப இந்த பிரபல பதிவர்ங்கிறது நீங்கதானா..?!!!

    தெரிஞ்சுக்கிட்டேங்க..!

    ReplyDelete
  30. முதல் கார்டூன் மிக அருமையா இருக்கு.. :))

    ReplyDelete
  31. சந்திப்பிற்கு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  32. //சக்தி, வலையுலக குழு, ஆப்பு, ஆப்பரசன் பற்றியும் பேசப்பட்டது.//

    இந்த மீட்டிங்கே அண்ணன் சக்திய பாராட்டத்தான. :)

    ReplyDelete
  33. //
    அய்யனார் அந்த குளத்திலேயே டால்பின் பல்டி, தவக்களை பல்டி என்றுவிதவிதமாக பல்டி அடிச்சு வேடிக்கை காட்டி எங்களை மகிழ்ச்சி அடைய செய்தார். (அப்பாடா தலைப்புக்கான மேட்டர் வந்துட்டு) பின் அங்கிருந்து கிளம்பி பதிவர் சந்திப்புக்கு போனோம்//

    அங்க தான் நிற்கிறார் குசும்பன் :))

    ReplyDelete
  34. லேசாக பொறாமை வரவழைத்த கலக்கல் சந்திப்பு.!

    ReplyDelete
  35. உங்களை காப்பி அடிச்சேன்னு யாரும் சொல்லலை, வந்து பாருங்க.. காபி எப்படின்னு

    ReplyDelete
  36. This is the best one sofar..Excellent caption, Flow in the narration, extraordinary humour..Over all avery good coverage..

    ReplyDelete