Tuesday, June 30, 2009

வயல்வெளியில் நொந்தழல் கவி தோன்றும் லைவ் சாட்! (காமெடி ஷோ)

டிஸ்கி: இந்த பதிவை ரசிக்கனும் என்றால் உங்களுக்கு தமிழ்வெளியும் சிங்கை பதிவர்களும் இணைந்து நடத்தும் போட்டி பற்றி தெரிஞ்சிருப்பது அவசியம் (இங்கே கிளிக்கவும்), அதுபோல் சில நாட்களுக்கு முன் ரவியின் சாட்டிங் பற்றியும் தெரிஞ்சு இருக்கனும்.

இனி.............

குழிழ்மணம் ஒரு ஆண்டாக போட்டி அறிவிப்பு செஞ்சு ,அதை இரண்டு வருடமாக நடத்தி, பரிசை மூனுவருடம் கழிச்சு கொடுத்ததில் இருந்து ஒவ்வொரு திரட்டியும் பரிசு, போட்டின்னு அறிவிக்கிறாங்க. திரட்டி ஓனர்ஸ் எப்படிடா நம்ம திரட்டியை பேமஸ் ஆக்குவதுன்னு பாயபோட்டு பிரான்டிக்கிட்டு இருக்காங்க அதுபற்றி ஒரு கற்பனை...

வயல்வெளி ஓனர் மழலி தன் நண்பர் நொந்தழல் கவி கூட பேசுகிறார்

மழலி: நொந்தழல் கவி என்னய்யா இது புதுசு புதுசா திரட்டி ஆரம்பிக்கிரானுங்க விரட்டி.காம், கொல்லை தமிழ்.காம், குழிழர்ஸ்.காம் என்று ஆரம்பிச்சு நீங்கதான் இந்த வார வெள்ளைகாரன், ஆஸ்திரேலியா காரன், இந்த வார தொப்பி உங்களுக்குதான், இந்த வார குரீடம் உங்க தலையில்தான் அப்படி இப்படின்னு தலைப்பு வெச்சு என்ன என்னமோ செய்கிறானுங்க நாம ஏதும் செய்யனும் என்ன செய்யலாம் சொல்லு.

நொந்தழல்: ஆமாம் மழலி இப்ப எல்லாம் எழுதும் அனைவருக்கும் ஒரு பத்து பின்னூட்டமாவது கன்பார்ம் இப்ப எல்லாம் நானே எனக்கு பின்னூட்டம் போட்டுப்பது இல்லைன்னா பார்த்துக்குங்களேன் , ஒவ்வொரு திரட்டி ஆட்களும் எங்க கருவி பட்டைய நிருவினா உங்க போட்டோ எல்லார் பிளாக்கிளும் தெரியும், எங்க கூட இனைஞ்சா சோப்பு டப்பி இனாம் என்று எல்லாம் பின்னூட்டம் போட்டு விடுறாங்க, நாம என்ன செய்வது? கிளு கிளுப்பா ஏதும் செய்யனுமே! கொரிய பொண்ணுங்க பற்றி நான் வேணும்னா எழுதவா?

மழலி: ஆணிய புடுங்கவேண்டாம், நீதான் டெக்னிக்கலானா ஆளாச்சே அதுபற்றி ஒரு வயல்வெளியில் லைவ் சாட்டிங் வெச்சுட்டா என்ன?

நொந்தழல் கவி: சூப்பர் ஐடியா! அப்படியே செய்யுங்க.

வயள்வெளியில் ஒரு விளம்பரம் ”இலவசமாக கிடைக்கும் சுண்டல்களை வாங்குவது எப்படி? ” ” கூட்டம் அதிகமாக இருந்தாலும் தீர்ந்து போவதுக்கு முன்னாடி வாங்குவது எப்படி”எங்கு எங்கு இலவச சுண்டல் கிடைக்கு என்ற விவரங்கள் தெரியனுமா, நொந்தழல் கவி கூட ஞாயிறு காலை 11 மணிக்கு சாட்டுக்கு வாங்க” என்று விளம்பரம்.

காலை ரொம்ப உற்சாகமாக குளிச்சுட்டு மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்ட நொந்தழல் கவி சிஸ்டம் முன் உட்காந்து ஆன் லைன் சாட்டிங் விண்டோவையே பார்த்துக்கிட்டு இருக்கார் சரியாக 11.15 மணி ஆச்சு யாரையுமே கானும் ஒரே ஒரு ஆள் வருகிறார் எங்கு சுண்டல் வாங்கலாம்? எங்கு என்ன கிடைக்கும் என்று கேட்கிறார் பதில் சொல்லிக்கிட்டே கவி மழலிக்கு போன் செய்கிறார், என்னை 11மணிக்கு வர சொல்லிட்டு எங்கய்யா போய்ட்டீர் பாருங்க ஒரு ஒரு ஆள்தான் சாட்டிங்குக்கு வந்திருக்கான் சீக்கிரம் இங்க வாங்க ஏதாச்சும் செய்யனும்...

மழலி: யோவ் உன் கூட சாட்டிக்கிட்டு இருப்பதே நான் தான், இத விட்டுவிட்டு நான் எங்க வருவது?

நொந்தழல் கவி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

திடிர் என்று மூன்று நான்கு பேர் சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள், அப்பாடா புரோகிராம் சக்ஸஸ் ஆகிவிட்டது என்று கவி ரூமுக்கு சந்தோசத்தில் மழலி ஓடிவருகிறார்,சிஸ்டத்தை பார்த்து டரியள் ஆகிறார்...

(நொந்தழல் கவியே பல பெயர்களில் சாட்டிங் அவருடனே செஞ்சுக்கிட்டு இருக்கார்)

புது ஆள் ஒருத்தர் சாட்டிங்கில் வருகிறார்... ஆஹா லாகின் ஆயிட்டான் என்னமோ கேட்க போகிறான் என்று இருவரும் விண்டோவையே பார்க்கிறார்கள்.

sweet 16: வானா செக்ஸ் சாட்!

நொந்தழல்: ASL plz?

மழலி: யோவ் இது லைவ் சாட்டிங் யாராவது பார்த்துட போறாங்க

நொந்தழல்: ம்கும் அப்படியே பார்த்துட்டாலும் இதுவேலைக்கு ஆவாது வேறு ஏதாவது செய்யனும் என்று யோசிக்கிறார்கள்.

அப்பொழுது பாவி.கண்ணன் கங்கை மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து பேசுறாங்க..விளையாடல் அமைப்பு சிறுகதை போட்டி அறிவிச்சு அது பெரும் வெற்றி பெற்றுடுச்சு அதுபோல நாமும் ஒரு போட்டி வைக்கிறோம் கலக்குறோம் என்று. அப்ப மழலி பாவி.கண்ணனுக்கு போன் போட்டு அண்ணே நீங்களும் போட்டி நடத்தப்போவதாக சொன்னாங்க நாங்களும் வயல்வெளி சார்பாக போட்டி வைக்கப்போறோம் இதுவரை யாரும் செய்யாததா வித்தியாசமாக செய்யனும் பரிசும் அதுபோல் பெருசா இருக்கனும் என்கிறார்.

பாவி.கண்ணன் தன் சகாக்களுடன் பேசும் பொழுது அங்கிருக்கும் நரி என் தலைவர் குஜினியுடம் ஒரு நாள் டின்னர் சாப்பிடலாம் என்று போட்டி வெச்சா என்ன என்று கேட்கிறார்? அவரை அமுக்கி போட்ட பின் அனைவரும் வயள்வெளியுடன் கூட்டணிக்கு சரி என்று சொன்ன பிறகு ஊத்துகேணி2009 என்ற தலைப்பில் குருத்தாய்வு போட்டி பரிசு கூடுவாஞ்சேரி டூ வண்டுவாஞ்சேரி தலைப்புகள் பின்னர் வரும் என்று சொல்லிவிட்டு , தலைப்புக்கா ஆர்வமாக காத்திருந்த மக்கள் அவர்கள் அறிவித்த தலைப்புகளை பார்த்து தலைதெறிக்க ஓடுகிறார்கள் ஓடுகிறார்கள் வாழ்கையின் எல்லைக்கே ஓடுகிறார்கள்

**************
தமிழகத்தில் பீர்க்கி,கரிசல்காரன்,பேதிமூலகிருஷ்ணன்,துன்பூ,குப்துல்லா எல்லாம் ஒன்னு சேர்ந்து ஒரு மீட்டிங் ரகசிய இடத்தில் கூட்டம் போடுகிறார்கள்

பீர்க்கி: எங்கபோனாலும் போட்டி , தொடர்பதிவுன்னு துரத்துறாங்கப்பா. ஏதாவது செஞ்சு மக்களை மிரட்டனும்..

பேதிமூலகிருஷ்ணன்: ஆமாய்யா இந்த பசும்பன் கூட புக்கு வாங்கு அதுவாங்கு இதுவாங்குன்னு தொல்லை கொடுக்கிறான் ஏதாவது செய்யனும் எல்லோரும் அரண்டு போகனும்...
துன்பூ: அதுக்கு ஒரே வழி என்று ஒரு ஐடியாவை சொல்கிறார்...

அதன்படி குப்துல்லா வீட்டில் கூடும் பதிவர்கள் குனஜன்யாவிடம் இருந்து கவிதை எழுதி வாங்கி அதை குப்துல்லாவை விட்டு பாடசொல்கிறார்கள் கரிசல்காரன் கீபோர்ட். (ஒரு கொடுமை பத்தாதுன்னு மூனு கொடுமை தாங்குமா இந்த உலகம்)

கரிசல்காரல்: லாலாலாலா லலாலா லா(வாசிக்க ஆரம்பிக்கிறார்)

பீர்க்கி: சகா இங்கயுமா லாலா லாலா வேறு ஏதும் வாசி சகா என்று சொல்லிவிட்டு காதில் பஞ்சை வெச்சுக்கிறார்...

குப்துல்லா பாடி முடிஞ்சதும் வீட்டு காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டு குப்துல்லா போய் கதவை திறக்கிறார் அங்க ஒரு பத்து பேர் நிற்கிறார்கள் அதில் இருந்து ஒரு ஆள் முன்னாடி வந்து பாட்டு பாடியது யாருன்னு கேட்கிறார்

பேதிமூலகிருஷ்ணன் குப்துல்லான்னு போட்டு கொடுக்க... ஸ்வீட் எடுத்து கொடுக்கிறார் அவரிடம்... ரொம்ப நாளா இழுதுக்கிட்டு இருந்த பாட்டி உங்க பாட்டை கேட்டு கபால மோட்சம் அடைஞ்சுட்டு ரொம்ப நன்றிங்கோ என்று சொல்லிவிட்டு அவருக்கு மாலை எல்லாம் போட்டு மரியாதைசெய்துவிட்டு போகிறார்கள்...
இன்னும் வரும்..........:)

50 comments:

  1. மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  2. /மழலி: யோவ் உன் கூட சாட்டிக்கிட்டு இருப்பதே நான் தான், இத விட்டுவிட்டு நான் எங்க வருவது?///

    :))))))))))))))

    ReplyDelete
  3. //பீர்க்கி,கரிசல்காரன்,பேதிமூலகிருஷ்ணன்,துன்பூ,குப்துல்லா எல்லாம் ஒன்னு சேர்ந்து ஒரு மீட்டிங் ரகசிய இடத்தில் கூட்டம் போடுகிறார்கள்//


    டோட்டல் டேமேஜ் !

    பாவம்ய்ய்யா பொலம்பவுட்டுட்டீங்களே அண்ணாச்சிய :))))

    ReplyDelete
  4. பேதி மூலகிருஷ்ணனா?

    ஹாஹாஹாஹா சூப்பர்..!

    பஸ்ட் ஆஃப் நிஜம் மாதிரிதான் இருக்கு..

    செகன்ட் ஆஃப் சூப்பரோ சூப்பர்.. அதும் லாலாலாலா அட அட

    ReplyDelete
  5. அப்பாடா.. அதிக டேமேஜ் இல்ல எனக்கு :))

    ReplyDelete
  6. //பேதிமூலகிருஷ்ணன்//

    :))

    ReplyDelete
  7. //மழலி: யோவ் உன் கூட சாட்டிக்கிட்டு இருப்பதே நான் தான், இத விட்டுவிட்டு நான் எங்க வருவது?/

    செம்ம கலக்கல் :))))))

    ReplyDelete
  8. யோவ் என்னையும் சேர்த்து பல எதிரிங்களை சம்பாதிச்சிக்கப் போறே. சிங்கையில் சூனியம் வைக்கிற எடம் எதுன்னு எனக்கு தெரியும், அக்னி கோரி ஏவுகணைகளைப் போல் கண்டம் விட்டு கண்டம் தாக்கும், துபாயில தானே இருக்கே. சூனியம் வருது !
    :)

    ReplyDelete
  9. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  10. சகா இங்கயுமா லாலா லாலா
    //


    :)))

    :)))))
    டயமிங் காமெடி :)

    ReplyDelete
  11. /
    அதன்படி குப்துல்லா வீட்டில் கூடும் பதிவர்கள் குனஜன்யாவிடம் இருந்து கவிதை எழுதி வாங்கி அதை குப்துல்லாவை விட்டு பாடசொல்கிறார்கள் கரிசல்காரன் கீபோர்ட். (ஒரு கொடுமை பத்தாதுன்னு மூனு கொடுமை தாங்குமா இந்த உலகம்)
    /

    கற்பனைனாலும் இம்புட்டு டெரர் ஆவாதய்யா.
    :)))))))

    ReplyDelete
  12. super// :))

    June 30, 2009 10:33 PM
    Blogger கார்க்கி said...

    அப்பாடா.. அதிக டேமேஜ் இல்ல எனக்கு :))//
    என்னா பீர்க்கி ரொம்ப வருத்தப்படறாரு, அடுத்த தடவை கவனிச்சிடுங்க

    ReplyDelete
  13. நீ இந்தப் பதிவுலகுல கலாய்காத ஒரே ஆளு குசும்பன் தன். எல்லாரையும் அடிச்சு கழட்டுற போ.

    மணற்கேணி 2009 அப்டிங்கிற பேர ஜெகு கஷ்டப்பட்டு யோசிச்சு சொன்னாரு.

    நடத்து மச்சி.

    ReplyDelete
  14. செம கலக்கல் போங்க. :))

    தரையில உருண்டு புரண்டு இப்படி சிரிச்சதேயில்ல தல :))

    ReplyDelete
  15. வித்தியாசமா என்ன கமண்டலாம்?????

    சிரிப்பு வரலையேயயய!!!

    ReplyDelete
  16. குசும்பரே என்ன ஒரு குசும்பு...ஒருத்தரையும் விடலை போல இருக்கே...:-))

    ReplyDelete
  17. பேரண்பும் பண்பும் மிக்க பெருந்தலைவர் குனுஜன்யாவின் கவிதைகளை கிண்டலடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ( பாவம்யா ஆதிமூலகிருஷ்ணன் :)) )

    ReplyDelete
  18. பேதி மூல கிருஷ்ணன்..

    ?

    :))

    ReplyDelete
  19. கலக்கிட்டீங்க குசும்பன்....வயிறுவலிக்க சிரிக்க வைத்த பதிவு...!!!

    ReplyDelete
  20. இன்னும் வருமா? வரட்டும்.. ஹஹஹ்ஹஹஹஹா தான் படிக்கும் போது

    ReplyDelete
  21. இருடி இருக்கு ஒரு நாளு உனக்கு.

    ReplyDelete
  22. வண்மையாக கண்டிக்கிறேன்..!!!


    ரெண்டு பார்ட் வந்துட்டு இன்னும் எங்க தளபதி சிபியை காணோம்..?


    ஆயிலை கானோம்..?


    அபிஅப்பாவை காணோம்..?


    33% இல்லை ?

    ReplyDelete
  23. கவிதை வரிகளைப் போடாதது ஒண்ணு தான் குறை. நடத்து பசும்பா.

    ஆதி.... ROTFL ........

    அனுஜன்யா

    ReplyDelete
  24. குசும்பன்

    உங்க அக்கபோருக்கு ஒரு அளவே இல்லேயா?

    \\இன்னும் வரும்..........:)\\

    ஹஹஹ்ஹஹஹஹா

    ReplyDelete
  25. கலக்கல் குசும்பா

    ReplyDelete
  26. :))))))))))))))

    வேற என்னத்த சொல்றது.

    ReplyDelete
  27. \\ மின்னுது மின்னல் said...
    வண்மையாக கண்டிக்கிறேன்..!!!


    ரெண்டு பார்ட் வந்துட்டு இன்னும் எங்க தளபதி சிபியை காணோம்..?


    ஆயிலை கானோம்..?


    அபிஅப்பாவை காணோம்..?


    33% இல்லை ?

    \\
    சும்மா இருய்யா மின்னலு!

    தம்பி குசும்பன் துபாய் பத்தி வாயை திறந்தா வண்ட வண்டயா வரும்ன்னு நாங்களே பேசாம இருக்கோம் . இதிலே நீ வந்து தூண்டி விடுறீக!!

    ReplyDelete
  28. //
    மணற்கேணி 2009 அப்டிங்கிற பேர ஜெகு கஷ்டப்பட்டு யோசிச்சு சொன்னாரு.
    //
    ஜோசப்பின் இந்த வரிகளை நான் கண்டபடி கண்டிக்கிறேன்!

    "விசமத்தனமான தலைப்புக்களை போட்டிக்கு அறிவித்திருக்கும் ஒருதலைப்பட்சமான மணற்கேணி" அமைப்பிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
    :P

    ReplyDelete
  29. :)))அடுத்த பகுதி எப்போது !!! ??

    ReplyDelete
  30. குசும்புன்னா இது தான்.. நீங்களும் பாயப்போட்டு யோசிப்பீங்க போல?

    ReplyDelete
  31. //மின்னுது மின்னல் said...

    வண்மையாக கண்டிக்கிறேன்..!!!


    ரெண்டு பார்ட் வந்துட்டு இன்னும் எங்க தளபதி சிபியை காணோம்..?


    ஆயிலை கானோம்..?///


    அவ்வ்வ்வ்வ்வ்வ் மின்னலு ஏனய்யா உமக்கு இப்புடி ஒரு ஆசை நாங்க - இல்ல இல்ல குசும்பன் சிவனேன்னுஅவுரு வேலையை செஞ்சுக்கிட்டிருக்காரு போற போக்குல தட்டிவுட்டு போறீங்களே :(

    ReplyDelete
  32. /சும்மா இருய்யா மின்னலு!

    தம்பி குசும்பன் துபாய் பத்தி வாயை திறந்தா வண்ட வண்டயா வரும்ன்னு நாங்களே பேசாம இருக்கோம் . இதிலே நீ வந்து தூண்டி விடுறீக!!//

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  33. எங்கள் கம்பன் பேரவை தலைவர் தர்சிம் விட்டு போனது ஏனோ!

    ReplyDelete
  34. பசும்பன்...கலக்கல்.

    ReplyDelete
  35. அப்படி போடுங்க குசும்மன்.

    \\டிஸ்கி: இந்த பதிவை ரசிக்கனும்\\
    உங்க பதிவை ரசிப்பதற்கு தமிழ் படிக்கத்தெரிந்தா போதும் இஃகிஃகி..

    இந்த இடுகையை ரசிக்கனும் என்பது சரியானதாக இருக்கும்.
    Blog - பதிவு
    Post - இடுகை

    நிறைய மக்கள் இத்தவறை செய்யராங்க.

    ReplyDelete
  36. யாரையும் விடாதீங்க!

    ReplyDelete
  37. ஆயில்யன்
    அதிஷா
    விஜய் ஆனந்த்
    சிபி
    கார்க்கி
    ஜெகதீசன்
    சென்ஷி
    கோவி
    ஜெகதீசன்
    மின்னல்
    ஆதவன்
    சிவா
    சின்ன அம்மிணி
    சோசப்பு
    ஸ்ரீதர்
    சரவணகுமரன்
    கலை
    டொன்லீ
    ஜீவ்ஸ்
    மதிபாலா
    ஜோ
    ரவி
    நர்சிம்
    பதி
    வேலன்
    அனுஜன்யா
    நாஞ்சில் நாதம்
    முரளி கண்ணன்
    அறிவிலி
    பட்டாம்பூச்சி
    அபி அப்பா
    கல்ப் தமிழன்
    செந்தில்வேலன்
    வால்
    கும்க்கி
    மணிநரேன்
    குறும்பன்
    சுரேஷ்
    கிரி
    பப்பு

    அனைவருக்கும் நன்றிங்கோ!!!!

    ReplyDelete