Tuesday, May 19, 2009

மந்திரி பதவிக்காக டெல்லி பயணமாம் வதந்திகளை நம்பாதீர்!

தலைவர் தன் மகன், பேரன், மகள் ஆகியோருக்கு மந்திரி பதவி வாங்குவற்காக டெல்லி சென்று இருக்கிறார் என்று வதந்தி தமிழகம் முழுவதும் பரவிவருகிறது அதை யாரும் தயவு செய்து நம்பாதீர்கள். அதை பரப்புவர்களின் ஆதீ மூலத்தை பார்த்தால் அவர்கள் முதுகில் ஒரு நூல் இருக்கும், அவர்கள் மூதாதையோர் கண்டிப்பாக மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே அ.தி.மு.க உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். இப்படி வதந்தி பரப்புவர்கள் தான் தமிழன துரோகிகள். இவர்கள் கொள்கை பற்றி நாடே அறியும். தேர்தலிம் மக்கள் அடிக்கொடுத்து உட்காரவைத்தும் அடங்காமல்
தலைவருக்கு எதிராக இப்படி பொய் செய்திகளை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

உடல் நலம் குன்றிய நிலையிலும் டாக்டர்கள் அறிவுரைகளை மீறியும் தமிழ் இனத்தை காக்கவும், ஈழத்தில் போர் நிறுத்தம் கோரவும் தான் தலைவர் டெல்லி சென்று இருக்கிறார் என்பதை ஒருவயது குழந்தை கூட சொல்லும்
அப்படி இருந்தும் இப்படி திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புவர்களை தனிமை படுத்துவோம்! அடுத்த தேர்தலில் ஓட ஓட விரட்டவும் உறுதி எடுப்போம்.


செத்து மடியும் தமிழர்கள் மீது மிகவும் அக்கரையும் தாயுள்ளமும் கொண்ட சோனியாவையும், செயல்வீரர் மன்மோகனையும், இலங்கை அதிபரைவிட அதிகமாக ஈழ தமிழர்கள் மீது அக்கரை கொண்ட பிரணாப்முகர்ஜியையும் சந்தித்து போர் நிறுத்தம் பற்றி பேசி இருக்கிறார் தலைவர்.

கண்டிப்பாக நல்லது நடக்கும் அதுவரை

வாழ்க சோனியா

வாழ்க மன்மோகன் சிங்

வாழ்க பிரணாப் முகர்ஜி

முக்கியமாக தலைவர் டெல்லி பயணம் வெற்றி அடையவும் வாழ்த்துவோம்!

இப்படிக்கு
சமீபத்தில் தேர்தலுக்கு பிறகு கழகத்தில் இனைந்த
குபீர் உடன்பிறப்பு
குசும்பன்

54 comments:

said...

//சமீபத்தில் தேர்தலுக்கு பிறகு கழகத்தில் இனைந்த
குபீர் உடன்பிறப்பு
குசும்பன் //

:))

said...

//தலைவர் தன் மகன், பேரன், மகள் ஆகியோருக்கு மந்திரி பதவி வாங்குவற்காக டெல்லி சென்று இருக்கிறார் என்று வதந்தி தமிழகம் முழுவதும் பரவிவருகிறது அதை யாரும் தயவு செய்து நம்பாதீர்கள்//

ச்சே!

ச்சே!

நானெல்லாம் நம்ப மாட்டேன்ப்பா!

said...

//முக்கியமாக தலைவர் டெல்லி பயணம் வெற்றி அடையவும் வாழ்த்துவோம்!//

வாழ்த்துக்கள் தலைவரே..!

said...

//இப்படிக்கு
சமீபத்தில் தேர்தலுக்கு பிறகு கழகத்தில் இனைந்த
குபீர் உடன்பிறப்பு
குசும்பன்//

இப்படி குபீர் குபீர்ன்னு இடம் மாறாதேடா சண்டாளான்னு வேற ஏதாச்சும் கட்சிக்காரா வந்து திட்டப்போறா உன்னைய!

said...

//சென்ஷி said...

//இப்படிக்கு
சமீபத்தில் தேர்தலுக்கு பிறகு கழகத்தில் இனைந்த
குபீர் உடன்பிறப்பு
குசும்பன்//

இப்படி குபீர் குபீர்ன்னு இடம் மாறாதேடா சண்டாளான்னு வேற ஏதாச்சும் கட்சிக்காரா வந்து திட்டப்போறா உன்னைய!//

அண்ணனின் இக்கருத்தினை அன்போடு வழிமொழிகிறேன்!

said...

:0

said...

//அதை பரப்புவர்களின் ஆதீ மூலத்தை பார்த்தால் அவர்கள் முதுகில் ஒரு நூல் இருக்கும்,//

இல்லையே சமீபத்துல அவர் கோவை வந்தப்போ எந்த நூலும் தெரியலையே. இருங்க எதுக்கும் தாமிராவை கேட்டு கன்பார்ம் பண்ணிக்கிறேன்.

said...

நான் போர்த்திய மஞ்சள் துண்டை உடனே பார்சல் செய்யவும்!

said...

:))))))

said...

//தமிழன துரோகிகள்//

தமிழின துரோகிகள்.

said...

//உடல் நலம் குன்றிய நிலையிலும் டாக்டர்கள் அறிவுரைகளை மீறியும்//

இவர் டாக்டர் அறிவுரையை மீறவில்லை. டாக்டர் தான் இவர் அறிவுரையை மீறிப் போய் ஆப்பு வாங்கிக் கொண்டார். ;)

said...

//ஒருவயது குழந்தை கூட சொல்லும்//

ஒரு வயதுன்னாலே குழந்தை தான் ராசா. அதென்ன தனியா குழந்தைன்னு மென்ஷன் பண்ணிக்கிட்டு. :)

said...

:))

said...

//அடுத்த தேர்தலில் ஓட ஓட விரட்டவும் உறுதி எடுப்போம்.//

அதென்ன எலெக்‌ஷனா இல்லை மாரத்தான் ஓட்டப் பந்தையமா? :)

said...

நீங்க நல்லவருன்னு தேர்தலுக்கு முன்பே நிரூபிச்சிட்டீங்களே? தேர்தலுக்கு அப்புறமும் தொடர்ந்து நிரூபிச்சிக்கிட்டே இருக்கணுமா? :-)

said...

//மிகவும் அக்கரையும் //

”அக்கரை”க்கு ஸ்பெல்லிங்க கரைட்டா மாமா?

said...

எனக்கு ஒண்ணுமே புரியல...
:-)))))))))))

said...

//தாயுள்ளமும் கொண்ட சோனியாவையும், செயல்வீரர் மன்மோகனையும், இலங்கை அதிபரைவிட அதிகமாக ஈழ தமிழர்கள் மீது அக்கரை கொண்ட பிரணாப்முகர்ஜியையும் சந்தித்து போர் நிறுத்தம் பற்றி பேசி இருக்கிறார் தலைவர்.//

உங்கள் கதையில் கற்பனைத் திறன் அபாரமாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள். புக்கர் பரிசு உங்களுக்கே. :))

said...

//முக்கியமாக தலைவர் டெல்லி பயணம் வெற்றி அடையவும் வாழ்த்துவோம்!//

வாழ்த்துவோம். :)

said...

//இப்படிக்கு
சமீபத்தில் தேர்தலுக்கு பிறகு கழகத்தில் இனைந்த
குபீர் உடன்பிறப்பு
குசும்பன்//

தமிழ்நாட்ல நெறைய கலகம் சாரி கழகம் இருக்கு மாம்ஸ். எந்தக் கழகத்தை சொல்றிங்க? :)

said...

குசும்பனை நினைத்தால் பாவமாக இருக்கிறது... :(



இன்னுமாய்யா இவனுவோ (கலைஞ்ர்,வைகோ,திருமா...மற்றும் ) )நல்லது செய்ய்வானுவோனு நினைக்கிறே... :(

said...

இதனால் சகலமானவர்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால், நான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டேன். :)

said...

யாராவது தலைவரை பத்தி தப்பா பேசுனிங்க!
மத்தியானம் வரைக்கும் உண்ணாவிரதம் இருப்பேன் ஆமா சொல்லிட்டேன்!

said...

நன்றி ஆயிலு

நன்றி சென்ஷி

நன்றி கானா

நன்றி சஞ்சய் முடிஞ்சா அப்படியே ஒரு DNA டெஸ்டும் செஞ்சு பாருங்க!

நன்றி அபி அப்பா அது தான் இப்பொழுது முகத்தை மூடிக்க பயன்படுவதால் அதை தரமுடியாது!

நன்றி கார்க்கி

நன்றி தீப்பெட்டி

நன்றி லக்கி என்ன செய்வது இப்படி தொடர்ந்து நல்லவர் என்று நிருப்பிக்கவில்லை என்றால் அபி அப்பா என்னை அதிமுக காரன் என்று சொல்கிறார் அதான் தொடர்ந்து நிருப்பிக்கலாமே என்று! ஆமா தேர்தலுக்கு முன் எந்த பதிவை பார்த்து நல்லவர் என்று நம்புனீங்க?:)))


நன்றி கார்த்திகை பாண்டியன்

நன்றி மின்னல்

நன்றி வால்பையன்

said...

வால்பையன் said...
யாராவது தலைவரை பத்தி தப்பா பேசுனிங்க!
மத்தியானம் வரைக்கும் உண்ணாவிரதம் இருப்பேன் ஆமா சொல்லிட்டேன்!
:))))))))

said...

தமிழினத் துரோகி குசும்பன் ஒழிக..!

said...

//நீங்க நல்லவருன்னு தேர்தலுக்கு முன்பே
நிரூபிச்சிட்டீங்களே? தேர்தலுக்கு அப்புறமும் தொடர்ந்து நிரூபிச்சிக்கிட்டே
இருக்கணுமா?
:-)


//


இங்கிலீஸ்ல Past present continous அப்பிடின்னு சொல்லுவாங்கல்ல..
அதுமாதிரி போல நம்ப குசும்பரும்

:)))



@சஞ்சய்

யோவ் மாப்ள எனக்கு ஏதாவது மிச்சம் மீதி வச்சுட்டுப் போய்யா

:)

said...

சூரியக்காரன் (சூனியக்காரன் இல்லை) குசும்பன் வாழ்க ! இலைக்காரனுக்கு எதிர்பதம் சூரியக்காரன் தானே ?
:)

said...

ஆமாம் வர வர நல்லவரு தொல்லை அதிகமா போச்சே!

said...

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன்.

correct...

said...

:-((

said...

//இவர் டாக்டர் அறிவுரையை மீறவில்லை. டாக்டர் தான் இவர் அறிவுரையை மீறிப் போய் ஆப்பு வாங்கிக் கொண்டார்//
இது டாப்பு.

said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்கைய்யா,

தலைவரை ஒரு வேலையை உருப்படியா செய்ய விடமாட்டாங்கைய்யா

said...

வாழ்த்துக்கள் தலைவரே..!

said...

It is hilarious.Please excuse me for not typing in tamil.

said...

JK அவரின் உடல் நலத்தை பற்றிய பின்னூட்டம் என்பதால் அதை டெலிட் செஞ்சுட்டேன்!

மன்னிக்கவும்!

லக்கி அதையே நீங்கள் காப்பி பேஸ்ட் செய்திருந்ததால் அதையும் டெலிட் செஞ்சுட்டுடேன்!

மன்னிக்கவும்

said...

குசும்பன் நீங்க ரொம்ப நல்லவரு :-)

said...

லக்கிலுக் said...
குசும்பன் நீங்க ரொம்ப நல்லவரு :-)//

அவ்வ்வ் இன்னைக்கு நானா? அவ்வ்வ்வ்! வடிவேலுவை நல்லவன் என்று சொல்லி கும்மிய மாதிரியா?:))))

said...

Super Tala..

said...

லக்கிலுக் said...
நீங்க நல்லவருன்னு தேர்தலுக்கு முன்பே நிரூபிச்சிட்டீங்களே? தேர்தலுக்கு அப்புறமும் தொடர்ந்து நிரூபிச்சிக்கிட்டே இருக்கணுமா?
//

RippEEtu..

:-/

said...

:)))))

Anonymous said...

உண்மையாவே போன‌து த‌லைவ‌ரும் அவ‌ருட‌ உற‌வின‌ருமா என்ட‌ ச‌ந்தேக‌ம் இருந்தால், இல‌ங்கை அர‌சாங்க‌த்திட்ட‌க் கேட்டு ஒரு DNA டெஸ்ட் செய்து பாக்க‌லாம்!

said...

எவ்வளோ நல்லவரு நீங்க?

said...

தலைவர் மாதிரியே....

said...

//பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். //

அப்படி இருந்தாலும் உடன்பிறப்புகள் - ஓட்டு குத்தித் தள்ளுறாங்க போல !!!!

;)

said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//உடல் நலம் குன்றிய நிலையிலும் டாக்டர்கள் அறிவுரைகளை மீறியும்//

இவர் டாக்டர் அறிவுரையை மீறவில்லை. டாக்டர் தான் இவர் அறிவுரையை மீறிப் போய் ஆப்பு வாங்கிக் கொண்டார். ;)
naan athai aamothikkiren

said...

// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//ஒருவயது குழந்தை கூட சொல்லும்//

ஒரு வயதுன்னாலே குழந்தை தான் ராசா. அதென்ன தனியா குழந்தைன்னு மென்ஷன் பண்ணிக்கிட்டு. :)//

அதுக்காக ”ஒரு வயது கூட சொல்லும்.”னா போட முடியும் :)

said...

தமிழ்க்காவலரு,
ஈழம் சோனியா அன்னைகிட்ட வாங்கீட்டு வந்தாக்கா எனக்கொரு துண்டு குடுங்கண்ணே!
ராஜி

said...

ஏண்ணே.. தாத்தா இந்த வயசுல,
டெல்லி போறத்துக்கு பதிலாக
ஒரு தந்தி அடிக்கலாமோ...
இல்லியோooo?

said...

என்னத்தச் சொல்ல தல

said...

ஏன் மாப்பி சொல்லாம கொள்ளாம நீ மட்டும் போயி திரும்ப திமுகல சேர்ந்துட்ட? ஒரு வார்த்த சொல்லியிருந்தா நானும் உங்கூடவே வந்துருப்பேன்ல?

அடப் பாவிங்களா, தலைவரப் பத்தி தப்பாவா பேசுறானுங்க? இதான் மாப்பி கலிகாலம்கிறது.

said...

அபியப்பாவிடம் மஞ்சள் துண்டு பெற்றதற்காக பதிவை மைல்டாக போட்டிருக்கும் குசும்பனுக்கு கண்டனங்கள்.

said...

நச்!

said...

நல்ல குசும்பு சாமி!!