Saturday, May 23, 2009

புலிகளுக்கு ஒரு கடிதம்!

சோகம் சொல்லில் வடிக்கமுடியாத சோகம் கடந்த சிலநாட்களாக. சில மாதங்களாக அவர்களின் வெற்றி செய்திகள் வரும் பொழுது எல்லாம் புலி பதுங்குவது பாயதான் கலக்கம் வேண்டாம் என்றும், பின்பு புலிகள் தற்பொழுது இருக்கும் படைகளை பாதுகாத்து எதிரியை உள்ளே இழுக்கதான் இது போர் தந்திரம் என்று சொல்லப்பட்ட பொழுதும் நம்பிக்கையுடன் தானே இருந்தோம்.

குற்றங்கள் அற்ற தலைநகராக தாங்கள் கட்டி அழகு பார்த்த கிளிநொச்சி வீழ்ந்தபொழுது ஒரு தலைநகராக விளங்கிய இடத்தில் ஆர்மி காரன் என்னத்தை கைப்பற்றினான் வெறும் கட்டிடங்களை தவிர, இதுவும் போர் தந்திரம் என்று சொன்னபொழுதும் நம்பினோம். கிளி வீழ்ந்தாலும் புலி வீழாது என்று கவிதை படித்தோம்!

பின் ஒவ்வொரு இடமாக விழுந்த பொழுது கொரிலா தாக்குதலில் ஒரு புலி ஆயிரம் ஆர்மிகாரனுக்கு சமம் என்று சொல்லி மனசை தேற்றிக்கிட்டோம், இதோ இன்று அல்லது நாளை என்றாவது விரட்டியடிக்கப்பட்ட ஆர்மிகாரன் என்று செய்தி வரும் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம், புலிகளின் மாலதி படையிரணி, கடற்புலிகள், வான்புலிகள்என்று இன்னும் யாரும் களத்தில் இறங்கவில்லை என்றும் அப்படி இறங்கினால் வெற்றி நிச்சயம் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தோம், பழய அணிவகுப்பு படங்களை பார்த்து மனசை தேற்றிக்கொண்டு இருந்தோம். ஓயாத அலைகள் போல் மீண்டு வருவார்கள் என்றும் அதுக்கு பிறக்கபோகும் குழந்தைக்கு பெயர்வைத்து மகிழ்வது போல் நாங்களே பெயர் வைத்துமகிழ்ந்தோம் ஓயாத தீபங்கள், ஓயாத அடிகள் என்று.

ஆர்மிகாரன் பிரபாகரன் சட்டையை பிடித்துவிட்டோம் என்று போட்டோவில் போஸ் கொடுத்த பொழுது எள்ளி நகையாடினோம். இதுவரை எத்தனை ஆயுதங்களை கைப்பற்றி இருக்கிறீர்கள் என்று வேறு கேட்டோம். விமான ஓடுதளங்களை பிடித்த பொழுது விமானத்தை பிடிக்கமுடிந்ததா என்று எள்ளி நகையாடினோம்! விமானம் வைத்திருந்த முதல் போராட்ட இயக்கம் என்றுபெருமை பட்டுக்கொண்டோம். வேறு வழியின்றி வான்கரும்புலிகளாக மாறிய பொழுது அப்பொழுதும் ரன்வேயே இல்லாமல் விமானம் பறந்து வந்தது எப்படி என்று பெருமை பேசிக்கொண்டோம்.

இன்று???

முதலில் தலைவரை கொன்றுவிட்டோம் என்ற செய்தி வந்த பொழுது உடல் எங்கே என்றோம்? பின் உடலை காட்டிய பொழுது அது தலைவர்தானா? அது தலைவர் மகன் தானா? இல்லை இல்லை அது பிளாஸ்டிக் இல்லை அது வேறு உடல் என்று விவாதம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டோம். தலைவர் பத்திரமாக இருக்கிறாராம், தலைவர் மனைவி மக்கள் பத்திரமாக இருக்கிறார்களாம் என்றும் நம் மனதை நாமே தேற்றிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் ஏதும் சமாதானம் சொல்ல காரணம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

30 வருடமாக ஈழம் இன்று பிறகும் நாளை பிறக்கும் எப்படியும் ஒருநாள் பிறக்கும் என்று நம்பிக்கையோடு தினம் தினம் குண்டுகளுக்கு இடையே வாழ்ந்து வந்த நெஞ்சங்களின் நிலை? எத்தனை குண்டு மழை பொழிந்தாலும் நம்பி கூட இருந்த மக்களுக்கு பதில்?

தலைவர் பத்திரமாக இருக்கிறார் என்கிறார்கள்! இனி முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டுமா?

ஏன் இப்படி ஒரு நிலை?

இன்னும் இந்த பாழாய் போன மனசுக்கு என்ன சாக்கு போக்குகள் சொல்லி தேற்றிக்கொள்ள போகிறோம்.

இனி எத்தனைகாலம் காத்திருக்கவேண்டும்? இனி யாருக்காக காத்திருக்கவேண்டும்?

இனி அடிக்க ஓங்கும் கை யாருக்காக பயப்படும்?

இங்கு ஒரு ஈழசகோதரன் சொன்னது இன்னும் வலிக்கிறது இனி ”சிங்களவேசம் போட்டுதான் காலத்தை ஓட்டவேண்டும் என்று.”

இதுவரை அரனாக இருந்தீர்கள் இனி? இப்படி எங்களை கலங்கவிட்டது ஏன்?

37 comments:

said...

இத்தனை அவலங்களுக்கும் தாய்த்தமிழக அரசியல் விளையாட்டுகள்தாம் முக்கிய காரணம். பொதுமக்கள் தங்களால் இயன்றவரை ஈழத்திற்கு பல வகையில் ஆதரவு தெரிவித்திருந்தும், தமிழக அரசியல் அம்முயற்சிகளை ஓர் அரசியல் லாப கண்ணோட்டத்தோடு கண்டு பயன்படுத்திக் கொண்டது!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

:((((((((((((

Anonymous said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.
said...

உங்களின் உண்மையான ஆதங்கம் புரிகிறது...

:((

said...

மோசமான பின்னூட்டங்கள் தேவையில்லையே..Triumph

அவரவர்க்கு அவரவர் கருத்து..

உங்கள் கருத்தை நாகரீகமான முறையில் முன்வைத்து எதிர்வாதம் செய்ய முதலில் பழகி கொள்ளுங்கள்...

said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

said...

முட்டாள்களே... ஒரு இயக்கத்தை வழி நடத்த வலிமையான தலைமை தான் முக்கியம்...! அவர் அங்கிருந்து வெளியேறியது தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள அல்ல, அவர் வெளியேறிவிட்டார் என்ற செய்தி உங்களுக்கு வேண்டுமானால் அடிவயிறு எறியலாம்...! அவரின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு அது சுகமான செய்தி தான்...!

said...

அன்பு குசும்பன்

முதலில் கமெண்ட் மாடுரேசன் வைத்து இது போன்ற பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்...

மோசமான பின்னூட்டங்களை முதலில் அழித்து விடுங்கள்..

said...

Hi Kusumban,

Please don't allow unnecessary comments.

-- Ella Thamilan (Kiri)

said...

மிக தைரியமாக பதிவை வெளியிட்டிருக்கிறீர்கள். நமக்கு எப்பொழுதுமே ஒரு ஹீரோ ஒரு MGR ரஜினி, விஜய் நம்மைக் காப்பாற்றி நமது ஊர் அல்லது நாடு சுபிட்சம் அடைந்து மக்களெல்லோரும் கைத்தட்டுவதுபோல் பார்த்துதானே பழக்கம்.

said...

both karunanidhi&jeya may be the traitors but, we are not...certainly we need not...we are always supporting the tamil cause!
though I am from Tamilnadu,iam not an Indian:i am always a tamilian and remain to be.....
k.pathi
karaikal

said...

Triumph ஏன் இத்தனை கமெண்டுகளை போட்டு பின் டெலிட் செஞ்சு இருக்கீங்க?

Anonymous said...

குசும்பா

உன் ஆதங்கமும் அக்கறையும் புரிகிறது. ஈழச் செய்திகள் கேட்டு எத்தனை நாள் நீ கவலையோடிருந்தாய் என்பதும், 'நான் ஊருக்குப் போற நேரத்துலயாவது முகத்தை கொஞ்சம் சந்தோசமா வச்சுக்க சொல்லுஙக்ண்ணா' என்று சகோதரி மஞ்சு கேட்குமளவுக்கு உன் உணர்வுகள் எவ்வளவு தூரம் ஈழத்தமிழர்களுக்காக அனுதாபம் கொண்டிருந்ததென்பதும் எனக்குத் தெரியும். புலிகள் இனி முதலிலிருந்து தொடங்க் வேன்டியிருக்குமே என்ற உனது கவலையை வேறு மாதிரி புரிந்து கொன்டிருக்கும் டிரம்ப் போன்ற நண்பர்களின் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பாவம், தமிழ்கத் தலைவர்களின் தறுதலைத்தனத்த்தால் உண்மையான உணர்வாளர்களையும் சாடும் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறர்கள் என்பது ஈழத்தமிழர்களின் இன்றைய வாழ்நிலையைப் போலவே மறுக்க முடியாத சோகம் :-(((

said...

நாம் என்னதான் உண்மையிலேயே நமது உள்ளக் குமுறல்களை சொன்னாலும், அடி மேல் அடிவாங்கி வலியோடிருக்கும் ஈழத்து உறவுகள் அவர்கள் இருக்கும் நிலையில் எல்லோர் மீதும் கோபப்படுவது இயல்பு தான். ட்ரையம்ப் என்ற அந்த ஈழ சொந்தத்தின் குமுறலில் எனக்கு கோபம் வரவில்லை குசும்பா. நம்மை பார்த்துக்கூட இப்டி வயிறெரிந்து வார்த்தைகளை இறைக்கும் அளவுக்கு நமது நாடு நடந்துகொண்டுவிட்டதே என்ற சோகம் தான் மேலெழும்புகிறது.
இது அவர் தனிப்பட்ட குசும்பன் மீது காட்டிய கோபம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களின் மேல் காட்டிய கோபம் .

மனசு வலிக்குது, அங்க நம்ம சொந்தக் காரன் விடுற சாபம் நமக்கும் சேர்த்து தானே ?

said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

I had to remove them as I was not happy to curse like that.

ஒரு வார்த்தை கடுமையாகக் கதைக்கத் தெரியாத பெண், இவ்வளவு மோசமாக திட்டி எழுதும் அளவுக்குத் தள்ளப்பட்டது கொடுமையே.

ஆனாலும், திட்ட வேண்டும் என்று force பண்ணி எழுதியது.

said...

இழந்தவனுக்குத் தான் அதன் வலி தெரியும். நாலு நாள், இல்லை நாலு மாதம் எல்லோரும் சும்மா கதைத்துப் போட்டு போய்விடுவீர்கள்.///

ஆம் சகோதரி தாங்கள் சொல்வது நிஜம் தான்.

//வெறுமையைத் தவிர ஏதும் இல்லாத எங்களைப் போன்ற அனாதைகளுக்கு அவர் தான் தாயுமானவர். அவர் இருப்பது எங்களுக்கு யாரோ ஒரு சொந்தம் இருப்பது போல் ஒரு ஆறுதல். அவர் எங்கு இருக்கிறார் என்டு கூட தெரிய வேண்டாம். உயிருடன் இருந்தாலே போதும்.//

அதுவே எங்கள் விருப்பமும்.


//ஒரு வார்த்தை கடுமையாகக் கதைக்கத் தெரியாத பெண், இவ்வளவு மோசமாக திட்டி எழுதும் அளவுக்குத் தள்ளப்பட்டது கொடுமையே.//

:( மன்னிக்கவேண்டுகிறேன்

said...

//திருப்பி உங்கள் ஆக்கத்தைப் படித்துப் பாருங்கள். எனக்கு தலைவன் ஏன் இருக்கிறான் என்டு கேட்பது போல் உள்ளது.//

உங்களின் முதல் பின்னூட்டம் பார்த்ததும் திரும்ப திரும்ப படிச்சு நண்பர்களிடம் படிக்க சொல்லி ஏதும் தலைவருக்கு எதிராக எழுதி இருப்பதுபோல் இருக்கா என்றும் பலமுறை கேட்டேன் ஒருவரும் உன் வருத்தத்தைதானே சொல்லி இருக்கிறாய் திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்கனுமா என்று கேட்டுதானே இருக்கிறாய் என்றார்கள். தங்களுக்கு மட்டும் தவறாக பட்டது ஏன் என்று புரியவில்லை.

said...

பூச்சியத்தில் இருந்து தான் ஆரம்பிக்கணும் என்ற நிலை வரும்பட்சத்தில் கூட அதைத் தவர வேறு மார்க்கம் எமக்கு இல்லையே :(

இந்தப் பேரழிவு யுத்தம் உலக நாடுகளின் செயற்பாட்டில் அசைவுத் தன்மையை ஏற்படுத்தாவிடினும், மேற்குலக அறிஞர்கள் பலரை எட்டியிருக்கின்றது, அதன் மூலம் எமது தாயகக் கோட்பாட்டின் நியாயம் இப்போது கிரிபத் கொடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

தலைவரின் இலட்சியத்தை நாம் சோராது எந்த வழியிலாவது போராடிப் பெறுவதே நமக்கிருக்கும் ஒரே பொறுப்பு. போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் கொள்கை மாறாது.

எத்தனையோ வல்லரசுகள் காணாமல் போனதும், ஆட்டம் கண்டதும் வரலாற்றில் பதியப்பட்ட படிப்பினைகள் அது கிட்டும் காலம் வரை நாம் சோராதிருப்போம்.

said...

// போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் கொள்கை மாறாது//

well said கானா பிரபா..

said...

புலிகள் தங்கள் பொய்யை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8066129.stm

said...

சீனாவிட ஆயுத பலமும் இந்தியாவிட உதவியும் இல்லாட்டி, எண்டைக்கோ இலங்கை இராணுவம் புலிகளிட்ட அடி வாங்கிக் கொண்டு ஊர் திரும்பியிருக்கும்...
எந்த ஒரு வெளிநாட்டு ஆதரவும் இல்லாம தனியா ஒரு இயக்கம் இவ்வளவு தூரம் போராடினது எவ்வளவு பெரிய விஷயம் எண்டது அங்க இருந்தவனுக்குத் தான் தெரியும்...
தலைவர் உயிர் தப்பிர வேணும் எண்டு நாங்கள் ஒவ்வொருத்தரும் நேர்ந்துகொண்டு இருந்தனாங்கள்...
முதல் படியில இருந்து தொடங்க வேணுமா எண்டு கேட்டு இருக்கிறீங்கள், ஓம்... முதல் படியில இருந்து தான் தொடங்க வேணும்... 17 வயசில எந்த ஒரு ஆயுதமும் கையில இல்லாமத் தான் இந்தப் போராட்டத்தைத் தலைவர் தொடங்கினார். இப்ப அதைவிடப் பலமான நிலையில தானே இருக்கிறம்.
இழந்ததைத் திருப்பி பெற அடுத்த தலைமுறையும் போராடும்.
புலிகள் வீழ்வதில்லை.
தமிழ் ஈழம் கிடைக்கும் வரை நாங்கள் ஓய்வதுமில்லை.

said...

//புலிகள் வீழ்வதில்லை.
தமிழ் ஈழம் கிடைக்கும் வரை நாங்கள் ஓய்வதுமில்லை. //

Oru thamizhana yengal viruppamum athuve.

said...

மனதளவில் காயம்பட்டவர்களை மேலும் காயப்படுத்துவது போல் சிலரது பின்னூட்டம் இருப்பதால் அனைத்து பின்னூட்டங்களும் நீக்கப்படுகிறது!

மன்னிக்கவும்

Sakthi said...
நாட்டுல தமிழ் மக்களுக்கு என்ன நடக்குது...அகதி பச்சைக் குழந்தையில இருந்து வயது முதிர்ந்த ஆக்கள் வரை எல்லாரும் என்ன துன்பங்கள அனுபவிக்கினம்,
இதெல்லாம் உங்களுக்கு தெரியப் போறதில்ல, உங்களோட இதப் பற்றிக் கதைச்சும் பயனில்ல!
ஏற்கனவே நொந்து போய் இருக்கிறம், உங்களால எங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாட்டியும் பரவாயில்ல...எங்களுக்ககாப் போராடி உயிர் தரத் துணிந்த, நாங்கள் ஒவ்வொருவரும் மதிக்கிற விடுதலைப் புலிகளைப் பற்றிக் கதைக்காம இருந்தாலே பெரிய புண்ணியம்!

May 24, 2009 10:01 PM

said...

/புலிகளாள் 1cm சதுரப் பரப்பு நிலத்தையாவது ஈழத் தமிழருக்குச் சொந்தமாப் பெற்றுக் கொடுக்க முடிந்ததா????//


அண்ணா, நீங்கள் எந்த இடம்?
இந்தியாவா? நல்ல விஷயம், உங்களுக்கு அங்க வீடு இருக்கா சொந்தமா?? உங்கட சொந்தக்காரர் எல்லாரும் சுகமா இருக்கினமா? இண்டைக்கு மத்தியானம் நல்லாச் சாப்பிட்டனீங்களா? சந்தோசம்!
அப்பிடி எண்டா உங்களுக்கு எங்கட நிலை விளங்குகிறது கொஞ்சம் கஷ்டம் தான்!

இது எல்லாத்தையும் இழந்து நின்ற எங்கட மக்களுக்கு, இவ்வளவு காலம் காவல் தெய்வமா இருந்தவர்களைப் பற்றி நல்லாவே கதைக்கிறீங்கள். நிச்சயமாப் புலிகளால எங்கட நிலத்த எல்லாம் மீட்டுக் கொடுக்க முடிஞ்சிருக்கும், சர்வதேசமும்,முக்கியமா இந்தியாவும் எங்களுக்கு ஆதரவளிச்சிருந்தா! தமிழீழத்திட நிர்வாகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ தெரியாது. எதையுமே அந்த இடத்துல இருந்து பாக்காமக் குற்றஞ் சொல்லுறது சரியான இலகுவான வேலை. அதச் செய்யுறதுக்கு எங்கட நாட்டுலேயே நிறையப் பேர் இருக்கினம், நீங்களும் அந்த லிஸ்ட்ல இணையாதீங்கோ. உங்களுக்குப் பொழுது போகவேணும் என்டதுக்காக எல்லாம் ஈழத்தப் பற்றியும் புலிகளைப் பற்றியும் கதைக்காமல், TV இல ஏதாவது நிகழ்ச்சி போகும், இருந்து பாருங்கோ!

said...

// Sakthi said...

உங்களுக்குப் பொழுது போகவேணும் என்டதுக்காக எல்லாம் ஈழத்தப் பற்றியும் புலிகளைப் பற்றியும் கதைக்காமல், TV இல ஏதாவது நிகழ்ச்சி போகும், இருந்து பாருங்கோ! //

எதையும் ஆராயாமல் எழுதும் எழுத்து எத்தனை பேரை எவ்வளவு தூரம் காயபடுத்துகிறது என்பதை விரக்தி வரியில் எழுதியிருக்கிறார்..

கம்யூட்டரும் கீ போர்டும் கிடைச்சுட்டுன்னு என்ன வேணா எழுதலாம்னு எழுத கூடாது...

அது தமிழனின் இன போராட்டத்தை எந்தளவு பாதிக்கும் என்பதையும் உணரவேண்டும்...

இன்றைய நிலையில்..நாம் உதவாவிட்டாலும் ( என்றைக்கு உதவியிருக்கிறோம்.?) கூட உபத்திரவம் செய்ய வேண்டாம் என்பதுதான் ஈழதமிழனின் கோரிக்கை...

நமக்கு புரியுமா..??????!!!!

said...

இதுவரை அரனாக இருந்தீர்கள் இனி? இப்படி எங்களை கலங்கவிட்டது ஏன்?

நியாயமான கேள்வி

Anonymous said...

Ah... Sry was not online for sometimes. I dun know how it sounded to me. I was planning to delete few comments. Thnx. Sry again