Saturday, May 16, 2009

வெற்றி தோல்வி பற்றி நானே கேள்வி நானே பதில்!

கேள்வி: தேர்தல் முடிவு பற்றி?
பதில்: முதலில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், பாடுபட்ட உடன் பிறப்புகளுக்கும் வாழ்த்துக்கள். கலைஞர் உடல் நலம் இன்றி அவரது பங்களிப்பு பெரிதாக இல்லாத நிலையில் சோர்ந்துவிடாமல் பாடுபட்டு பெற்ற வெற்றி முழுவதும் அதன் உடன்பிறப்புகளையே சேரும்.

கேள்வி: தமிழகத்தில் தி.மு.க கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றிவாகை சூடும் என்று நினைத்தீர்களா அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: தி.மு.க கூட்டணி 28 இடங்களில் வெற்றிப்பெரும் என்று நினைக்கவில்லை. மிக அதிகப்பட்சமாக 18 இடங்களில் வெற்றிப்பெரும் என்று நினைத்தேன், இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை.நண்பர்களிடமும் பெட் கட்டி இருந்தேன்:(

கேள்வி: இந்த முடிவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதா?
பதில்: 60% இல்லை, 40% ஆம்!

கேள்வி: அது என்ன 60% இல்லை, 40% ஆம்?

பதில்: காங்கிரஸை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று நினைத்தேன் அதில் பாதிமட்டுமே நடந்து இருப்பதால் 50%ஆம், திரும்ப அதே மங்குனி பாண்டியர் பிரதமர் என்கிறபொழுது10% ஆகமொத்தம் 60% மகிழ்ச்சி இல்லை, மீதி 40% மகிழ்ச்சி பா.ம.க 7 தொகுதிகளிலும் துடைத்து எறியப்பட்டது.

கேள்வி: பா.ம.க தலைவர் இது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி, பணம் விளையாடி இருக்கு என்று சொல்லி இருக்கிறாரே, அதோடு பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறாரே அது பற்றி?

பதில்: முதலில் அவர் பா.ஜ.கவையும் லாலுவையும் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, தோல்வியை ஒப்புக்கொண்டு
அதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் என்று சொல்லும் ராஜ்நாத் சிங்கும்,
காங்கிரஸோடு கூட்டணி வைக்காமல் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று சொல்லும் லாலுவிடம் இருந்தும் அந்த பக்குவத்தை பெறவேண்டும். பீகாரில் ஆட்சி பொருப்பில் இருக்கும் நிதிஷ் அதிகாரத்தினால் பெற்ற வெற்றி என்று சொல்லாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதுபோல் தன்னை அரசியல் சாணக்கியராக நினைத்துக்கொண்டு தேர்தலுக்கு தேர்தல் இடம் மாறுவதை மக்கள் ஏற்கவில்லை என்பதை புரிந்துக்கொண்டால் பீனிக்ஸ் பறவை போல் பறந்துவரலாம். மதுரையில் பணம் விளையாடி இருக்கிறது என்பதை அங்கு டயர் ஓட்டி விளையாடும் சிறுவனுக்கும் தெரியும் ஆனால்
மற்ற இடங்களில் பணத்தினால் மட்டும் வெற்றியை விலைக்கு வாங்கிடமுடியாது. மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் என்றும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் இருந்திருந்தால் பணம் ஒன்றும் செய்திருக்கமுடியாது.

கேள்வி: தி.மு.கவின் வெற்றிக்கு என்ன காரணம்?

பதில்: பலபேர் வீடுகளில் இன்னும் மின்சார இனைப்பு இல்லாதது ஒருகாரணமாக இருக்கலாம்:). அனைவராலும் சொல்லப்பட்ட மின் தடை பிரச்சினையை தவிர வேறு எதுவும் பிரச்சினையாக மக்களுக்கு தெரியவில்லை.

கேள்வி: ஈழதமிழர்கள் பிரச்சினை இந்த தேர்தலில் எதிரொலிக்கவில்லையா?

பதில்: உடன்பிறப்புகளும், சில நண்பர்களும் ஈழதமிழர்கள் பிரச்சினை எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று சொல்லிவந்த பொழுது சிலசமயம் கோவம் வந்தது, ஆனால் முடிவுகளை வைத்துப்பார்க்கும் பொழுது உடன்பிறப்புகள் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. ஈழதமிழர்கள் பிரச்சினை இனையத்தோடு நின்றுவிட்டது.

கேள்வி: தங்கபாலுவின் தோல்வி பற்றி?
பதில் : வீட்டில் செய்த பால் பாயாசம் இந்தாங்க மிகவும் சுவையாக இருக்கும் அதை சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்.

கேள்வி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தோல்வி பற்றி?
பதில்: இருங்க இருங்க அடுத்து நெய் மைசூர் பாகு வருது அதையும் சாப்பிட்டுவிட்டு பேசுவோம், அதுக்குள்ள என்ன அவசரம்.

ம்ம்ம் சாப்பிட்டாச்சா மக்கள் மனம் பற்றி தெரியாமல் தான் தோன்றி தனமாக பேசியதுக்கு கிடைத்த பலன் மேலே கேட்டு இருக்கும் இரு கேள்விகளுக்கும் பதில். அதோடு மின் தடையும் இளங்கோவனை பாதித்தது.

கேள்வி: வேறு யார் தோல்வி அடைவார்கள் என்று நினைத்தீர்கள்?
பதில்: கப்பல் ஓட்டும் தமிழன் கரை தட்டிவிடுவார் என்று எதிர்பார்த்தேன் ஆனா கப்பல் கரை ஏறிவிட்டது!

கேள்வி: காங்கிரஸ் 16தொகுதியில் பாதிக்கு பாதி வெற்றிப்பெற்று இருப்பது பற்றி?

பதில்: எந்த காங்கிரஸ் வெற்றி பெற்றது? வாசன் காங்கிரஸா? தங்கபாலு காங்கிரஸா? இளங்கோவன் காங்கிரஸா? அல்லது தேசியகாங்கிரஸா......etc என்ற புள்ளிவிவரம் தெரியாமல் இதுபற்றி கருத்து சொல்லமுடியாது.

கேள்வி: சீமாம், பாரதிராஜா பிரச்சாரம் பற்றி!
பதில்: இராமர் பாலம் கட்டும் பொழுது அணில் ஒருகல்லு கொண்டு வந்து போட்டது என்று அதனால் அணில் நல்லது என்றும் ஓணான் கொட்டாங்கச்சியில் ஒன்னுக்கு அடிச்சு கொடுத்தது என்பதால் அது தீயது என்று இன்றும் ஓணானை அடிப்போம் அதுபோல் அவர்கள் பிரச்சாரமும் காங்கிரஸ் தோற்க சிறிது பயன்பட்டு இருக்கிறது . அதோடு தமிழகத்தில் காங்கிரஸை தோற்கடிக்க வேறுயாரும் தேவை இல்லை அதன் தலைவர்களே போதும்.

31 comments:

said...

:-))))

என்னமோ போங்க சார்.. கன்னாபின்னான்னு கலக்கிட்டு இருக்கீங்க.

//கேள்வி: காங்கிரஸ் 18 தொகுதியில் பாதிக்கு பாதி வெற்றிப்பெற்று இருப்பது பற்றி?

பதில்: எந்த காங்கிரஸ் வெற்றி பெற்றது? வாசன் காங்கிரஸா? தங்கபாலு காங்கிரஸா? இளங்கோவன் காங்கிரஸா? அல்லது தேசியகாங்கிரஸா......etc என்ற புள்ளிவிவரம் தெரியாமல் இதுபற்றி கருத்து சொல்லமுடியாது.//

இது எனக்கு ரொம்ப புடிச்சுருக்குது... :)

said...

kolai:-)

said...

குசும்பா, பதிவுலக சமீபத்திய அளவுகோல் படி நீங்க ஒரு மிகச் சிறந்த உடன்பிறப்பு என்பதை நிரூபித்துவிட்டீர்கள். வாழக கழகக் கண்மணியே.. :))

said...

நன்றி சென்ஷி!

ஏன் இப்படி ஒரு கொலைன்னு பின்னூட்டம்??? அவ்வ்வ் காசி சார் நான் பாவம்:)))


நன்றி சஞ்சய் காங்கிரஸ் என்று பச்சை குத்தாதற்கு!

said...

//காங்கிரஸோடு கூட்டணி வைக்காமல் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று சொல்லும் லாலுவிடம் இருந்தும் அந்த பக்குவத்தை பெறவேண்டும்.//

நீயா பேசியது? குசும்பா நீயா பேசுவது? :))

“ லாலுவைப் போல காங்கிரசின் பல தெரிந்த ஒருவர் திமுகவின் தலைவராக இருக்க வேண்டும்”

இந்த முத்தை உதிர்த்த மானஸ்தனை உங்களுக்குத் தெரியுமா மாமா? அவர் பேருக்கு ஒரு க்ளூ தரேன்.
முதல் 2 எழுத்து வெளியே போகும். கடைசி 2 எழுத்து உள்ளே போகும். :)))

said...

//அவர்கள் பிரச்சாரமும் காங்கிரஸ் தோற்க சிறிது பயன்பட்டு இருக்கிறது . //

அட ச்ச.. இது காமெடி பதிவா? இது தெரியாம நான் 3 கமெண்ட் போட்டுட்டேனே மாமா.. :(

சீ திஸ் மேன் : காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி - ஈழப் பிரச்சனைக் காரணமில்லை : http://thinkcongress.blogspot.com/2009/05/blog-post_17.html


//அதோடு தமிழகத்தில் காங்கிரஸை தோற்கடிக்க வேறுயாரும் தேவை இல்லை அதன் தலைவர்களே போதும்.//

இதென்னவோ நிஜம் தான், கோவைல நடந்தது இது தான். :(

said...

பாமாகவை மக்கள் முற்றிலும் நிராகரித்து விட்டனர்.விஜயகாந்த் தனக்கு கொடுக்க பட்ட அசைன்மெண்டை கச்சிதமாக முடித்து விட்டார்.இந்த தேர்தல் முடிவுகள் ராஜபக்ஷெக்கு கீரின் சிக்னல்

said...

மிக நேர்மையான அருமையான :-) சிரிப்பும் உண்மையும் கலந்து இருக்கு நண்பா

said...

//மதுரையில் பணம் விளையாடி இருக்கிறது என்பதை அங்கு டயர் ஓட்டி விளையாடும் சிறுவனுக்கும் தெரியும்//
அல்டிமேட்டு!

//கேள்வி: தங்கபாலுவின் தோல்வி பற்றி?
பதில் : வீட்டில் செய்த பால் பாயாசம் இந்தாங்க மிகவும் சுவையாக இருக்கும் அதை சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்//
சூப்பர்பூ !

//தமிழகத்தில் காங்கிரஸை தோற்கடிக்க வேறுயாரும் தேவை இல்லை அதன் தலைவர்களே போதும்//
அக்மார்க் நக்கலு !

said...

என்னவோ நல்லது நடந்தா சரிதான்.

said...

/பாடுபட்டு பெற்ற வெற்றி முழுவதும் அதன் உடன்பிறப்புகளையே சேரும்.

//

மன்னிக்கவும்...எங்களுக்கு உழைக்கக் கற்றுத்தந்த தலைவரையே சேரும்.

said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
நீயா பேசியது? குசும்பா நீயா பேசுவது? :))//

நானேதான் ஒருவன் மமதையில் பேசியதை அன்றுநான் தவறாக பேசிவிட்டேன் என்று ஒத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும் மாமோய்! அது லல்லுவிடம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் இப்பவும் சொல்கிறேன் தமிழக காங்கிரஸில் மாற்றம் கொண்டுவராமல் தனியாக நின்றால் டெப்பாசிட் கூட வாங்கமுடியாது!

********************
நன்றி தண்டோரா

நன்றி சுரேஸ்

நன்றி சிவா

நன்றி அப்துல்லா! ஓவர் அடக்கம் உடம்புக்கு ஆவாதுங்கோ!!!!!:)

said...

குபீர் ஈழ ஆதரவாளி இன்று முதல் குபீர் கழக கண்மணியா நடத்துங்க. தனியா வந்த வரை சரி, பாமகவையும் கூட கூட்டிகிட்டு வராம!

said...

//குபீர் ஈழ ஆதரவாளி இன்று முதல் குபீர் கழக கண்மணியா நடத்துங்க. தனியா வந்த வரை சரி, பாமகவையும் கூட கூட்டிகிட்டு வராம!//

அபிஅப்பா.. உங்களுக்கு விவரம் பத்தாது. அதான் தேர்தல் முடிஞ்சது இல்லை. இனி யாரும் ஈழம் பத்தி எல்லாம் எழுத மாட்டாங்க. அப்டி எழுதினாலும் போணி ஆகாதுன்னு தெரியும். இனி அவரவர் கட்சிப் பணிக்கு திரும்பிடுவாங்க. குசும்பன் இன்று முதல் கழகப் பணிக்குத் திரும்பிட்டார். ஒரு மஞ்சள் துண்டு போட்ருங்க. :))

said...

//கேள்வி: தங்கபாலுவின் தோல்வி பற்றி?
பதில் : வீட்டில் செய்த பால் பாயாசம் இந்தாங்க மிகவும் சுவையாக இருக்கும் அதை சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்.

கேள்வி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தோல்வி பற்றி?
பதில்: இருங்க இருங்க அடுத்து நெய் மைசூர் பாகு வருது அதையும் சாப்பிட்டுவிட்டு பேசுவோம், அதுக்குள்ள என்ன அவசரம்.//

ஆஹா..பாயாசமும்..மைசூர்பாகும் பிரமாதம்..ஒரு ஜாங்கிரி எதிர்பார்த்தேன். 3000 ஓட்டுல மிஸ்ஸாகிடுச்சு! அதானே! :)

said...

//அபி அப்பா said...
குபீர் ஈழ ஆதரவாளி இன்று முதல் குபீர் கழக கண்மணியா நடத்துங்க. //

அபிஅப்பா நான் எப்பொழுதும் குபீர் ஈழ ஆதரவாளியாகவே இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு இந்த கழக கண்மணி கருமணி எல்லாம் வேண்டாம்!

அத்வானி சோனியாவுக்கு வாழ்த்து சொல்லியதால் அத்வானி காங்கிரஸில் இனைந்ததாக அர்த்தம் இல்லை:))
வெற்றி களிப்பில் இருப்பவர்களுக்கு வாழ்த்து சொன்னாலும் அது அவர்களுக்கு துதிபாடுவதுபோல் தான் இருக்கும்:)

//தனியா வந்த வரை சரி, பாமகவையும் கூட கூட்டிகிட்டு வராம!//

ஹி ஹி அடுத்தமுறை நீங்களாகவே சேர்க்காமல் இருந்தால் சரி!:)

said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ அதான் தேர்தல் முடிஞ்சது இல்லை. இனி யாரும் ஈழம் பத்தி எல்லாம் எழுத மாட்டாங்க. அப்டி எழுதினாலும் போணி ஆகாதுன்னு தெரியும்.//

உங்கள் தலைவர்களை போல் ஈழம் என்பது தேர்தல் ஸ்டெண்டு அல்ல, இது எங்களுக்கு உணர்வு! உணர்வு என்றும் அறுந்து போகாது.


//குசும்பன் இன்று முதல் கழகப் பணிக்குத் திரும்பிட்டார். ஒரு மஞ்சள் துண்டு போட்ருங்க. :))//

கொஞ்சம் நீளமாக கொடுங்க அப்படியே அதை வைத்து தூக்கு போட்டுக்கலாம் இந்த பொழப்புக்கு!

said...

ரேகா.. said...
ஆஹா..பாயாசமும்..மைசூர்பாகும் பிரமாதம்..ஒரு ஜாங்கிரி எதிர்பார்த்தேன். 3000 ஓட்டுல மிஸ்ஸாகிடுச்சு! அதானே! :)//

அது திருப்பதி லட்டு சைஸுக்கு பெரிய ஜாங்கிரி மிஸ் ஆனதில் வருத்தம் தான்!

said...

//உங்கள் தலைவர்களை போல் ஈழம் என்பது தேர்தல் ஸ்டெண்டு அல்ல, இது எங்களுக்கு உணர்வு! உணர்வு என்றும் அறுந்து போகாது. //

வழிமொழிகிறேன் !

said...

கலக்கல் தல :)

said...

http://madhavipanthal.blogspot.com/2009/05/blog-post_17.html



குட் !!!!

said...

:-)))

said...

////உங்கள் தலைவர்களை போல் ஈழம் என்பது தேர்தல் ஸ்டெண்டு அல்ல, இது எங்களுக்கு உணர்வு! உணர்வு என்றும் அறுந்து போகாது. //

அழகாய் சொன்னீர்கள்.நிலம் பறிக்கலாம்.உணர்வை எங்கிருந்து பறிக்க முடியும்?

said...

கேள்வி பதிலும் மறுமொழிகளும் அருமை அருமை

said...

:)

said...

சூப்பரான கேள்வி பதில்...

கலக்கல் பாஸ்....

said...

கேள்வி: வேறு யார் தோல்வி அடைவார்கள் என்று நினைத்தீர்கள்?
பதில்: கப்பல் ஓட்டும் தமிழன் கரை தட்டிவிடுவார் என்று எதிர்பார்த்தேன் ஆனா கப்பல் கரை ஏறிவிட்டது!////

நேரோவா கரையேறுவார் என்று நண்பர்களிடம் ஏற்கெனவே திருச்சி சந்திப்பில் சொன்னேன்!! அதேபோல் ஆகிவிட்டது!!

said...

உங்க பதிவு செம..

எம்.எம்.அப்துல்லா said...
/பாடுபட்டு பெற்ற வெற்றி முழுவதும் அதன் உடன்பிறப்புகளையே சேரும்.
//மன்னிக்கவும்...எங்களுக்கு உழைக்கக் கற்றுத்தந்த தலைவரையே சேரும்.

இந்தப் பின்னூட்டம் செம.. செம..

said...

ரைட்டு..

said...

//இன்று முதல் குபீர் கழக கண்மணியா நடத்துங்க.//

இவருக்கு என்ன ஆச்சு!

கழகத்தை விமர்சிச்சா ரத்ததின் ரத்தமாங்குறார்.

ஒரு எதிர்கட்சிய விமர்சிச்சா கழக கண்மணியாங்குறார்!

said...

//நீங்க ஒரு மிகச் சிறந்த உடன்பிறப்பு என்பதை நிரூபித்துவிட்டீர்கள். //

அழகிரி
ஸ்டாலின்

உடன்பிறப்புகளா?

மாமன், மச்சானுங்களா?