Tuesday, April 28, 2009

லக்கிலுக் மாதிரியே நானும் ஒரு பதிவு

கேள்வியும் நானே பதிலும் நானே!

கேள்வி: நேற்றய பதிவில் கலைஞரின் படத்தை போட்டு ஜெவுக்கு நன்றி சொன்னதன் நோக்கம் என்ன?

பதில்: கலைஞர் இந்த உண்ணாவிரத முடிவை எடுக்க காரணம் ஜெ அறிவித்த தனி தமிழ்ஈழ முழக்கமும் அதானால் ஏற்பட்ட பயமே இந்த உண்ணாவிரத்துக்கு காரணம்.

கேள்வி: ஜெவின் தனி தமிழ்ஈழ முழக்கத்தை எப்படி எடுத்துக்களாம்?

பதில்: சென்னாரெட்டி என்னை கைய புடிச்சு இழுத்தார் என்று சொன்னதை எப்படி எடுத்துக்கிட்டோமோ அப்படியே எடுத்துக்கலாம். கேக்கை வெட்டி கொடுப்பதுபோல் தனி தமிழ் ஈழம் என்பது அத்தனை சுலபம் இல்லை அதுவும் சிங்களன் கை ஓங்கி இருக்கும் பொழுது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் இரண்டாம் பெரிய கட்சி தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது, அதே சமயம் அந்த குரல் ஜெவுடையது என்பொழுது கொஞ்சம் பீதியும் அளிக்கிறது.

கேள்வி: கலைஞரின் உண்ணாவிரதம் பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்: அபிஅப்பா, லக்கியை தவிர மீதி அனைவரும் என்ன நினைத்தாங்களோ அதையேதான் நினைக்கிறேன். தேர்தலுக்காகவும் ஓட்டுகளை கருத்தில் வைத்து நடத்தப்பட்டது.

கேள்வி: ஏற்கனவே போர் நிறுத்தம் தெரிந்து கலைஞர் சென்று உட்காந்தார் என்பதில் உடன் படுகிறீர்களா?

பதில்: ஆம்/ இல்லை. ஆனால் இவர் உண்ணாவிரதம் இருந்த பின் தான் போர் விமானங்கள் கொண்டு குண்டு போட மாட்டோம் என்று இலங்கையை சொல்லவைக்க முடிந்தது.

கேள்வி: கலைஞர் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை ஒத்துக்கிறீர்களா?

பதில்: ஆம் கலைஞர் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும் ஆனால் அவர் இதுவரை அப்படி இந்த பிரச்சினையில் எந்த ஒரு உறுதியான நடவடிக்கையுமே எடுக்காமல் இருந்ததுதான் வருத்தமான விசயம். தந்தி அடித்தது, மனித சங்கிலி போன்ற போராட்டங்களை தவிர மத்திய அரசை வழிக்கு கொண்டு வர உருப்படியாக என்ன என்ன போராட்டகள் செய்தார் என்று யாரும் சொல்லமுடியுமா?


கேள்வி: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்: இத்தனை காலம் இலங்கை ஒரு சுதந்திர நாடு அந்த நாட்டின் உள் விவகாரத்தில் நம்மால் தலையிட முடியாது என்று சொல்லி வந்த மத்திய அரசு, கலைஞர் உண்ணாவிரதம் என்று உட்காந்த பிறகு எப்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை வாய் திறக்கவைக்கமுடிந்தது, ஹிலாரி பேசிய பொழுதோ, பிரவுண் பேசிய பொழுதோ, பான் கின் மூன் பேசிய பொழுதோ முடியாது என்று ஒற்றை வார்த்தையில் சொல்லமுடிந்த மகிந்தவால் எப்படி விமானம் கொண்டு தாங்கமாட்டோம் என்று சொல்லவைக்க முடிந்தது???ஆகையால் காங்கிரஸ் அரசு இதுவரை போரை நிறுத்தவேண்டும் என்று நினைக்கவில்லை!

கேள்வி: கலைஞரை விமர்சித்தால் விழும் அ.தி.மு.க ஆதரவு பட்டம் பற்றி?

பதில்: என்ன கொடுமைங்க இது? கலைஞரை விமர்சிப்பதால் அவன் அ.தி.மு.க ஆதரவு ஆளாகதான் இருக்கவேண்டும் என்று கட்டாயம் இருக்கா? பட்டம் கொடுக்குறதுதான் கொடுக்குறீங்க சரத், கார்த்திக் ஆதரவு கட்சி ஆட்கள் என்ற பட்டம் கொடுங்க பாவம் அவுங்க ஆளே இல்லாம இருக்காங்க.

கேள்வி: அபி அப்பாவின் இந்த பதிவில் குபீர் பார்ட்டிகள் யார் என்று கண்டுபிடிப்பது எப்படின்னு சொல்லி இருக்கிறாரே அதுபோல் தீவிர திமுக
ஆதரவு ஆட்கள் என்று கண்டுபிடிப்பது எப்படின்னு சொல்லமுடியுமா?

பதில்: கலைஞர் ஈழபிரச்சினையை சரியாக கையாண்டார் என்ற தொணியிலேயே பதிவுகள் இருக்கும், முக்கியமாக நேற்றய உண்ணாவிரதமும் முழுக்க முழுக்க ஈழதமிழர்களின் நிலைக்காக எடுக்கப்பட்டதே என்று தொணியில் பதிவு இருக்கும்.

கேள்வி: லக்கி பதிவில் “ “பிரபாகரனுக்கு வன்னியிலே வீரப்பன் கதி ஆச்சுன்னா உங்க கட்சி (திமுக) 91லே தோத்தா மாதிரி 40 தொகுகுதிகளிலும் தோக்கும்”. அடப்பாவிகளா? இதுமாதிரி உள்மன ஆசையை வைத்துக் கொண்டுதான் தமிழீழம் பேசிவருகிறீர்களா?” என்று ஒருவர் சொன்னதாக சொல்லி இருக்கிறாரே அது பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்: சில வாரங்களுக்கு முன் தி.மு.கவின் தீவிர விசுவாசியான ஒரு பதிவருடன் பேசிக்கிட்டு இருந்த பொழுது, சில நாட்கள் முன்பு வரை 25 தொகுதி கிடைக்கும் என்று இருந்தது ஆனால் இப்பொழுது மாறுது, இவனுங்களோட இதே இழவா போச்சு கொல்றாங்களே கொல்றாங்களேன்னு கத்தி தி.மு.க வெற்றிய குறைக்கிறானுங்க, இப்படிதான் ராஜீவ் காந்தி இறந்த பொழுதும் தி.மு.க தோற்றது, எப்பொழுதும் இந்த ஈழத்து ஆட்களால் தி.மு.கவுக்கு பிரச்சினைதான் ஒரே அடியாக எல்லோரும் செத்து ஒழிந்துவிட்டால் இனி அடுத்த தேர்தலில் பிரச்சினை இருக்காது என்று ஒருவர் சொன்னார். இதுக்கு என்ன பதிலோ அதே தான் அதுக்கும் பதில்.ஒருவன் சாகும் பொழுதும் ஓட்டுகணக்கு பார்க்க எப்படி மனசு வருகிறதோ?அது அ.தி.மு.க ஆளாக இருந்தாலும் சரி தி.மு.க ஆளாக இருந்தாலும் சரி.

கேள்வி: இனி கலைஞர் என்ன செய்யனும் என்று நினைக்கிறீங்க?

பதில்: ஒழுங்காக மாத்திரை மருந்துகளை சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாக இருக்கனும், ஏன் என்றால் மே 16 க்கு பிறகு இலங்கையில் திரும்பவும் விமானம் பறக்கும் பொழுது போராட ஆரோக்கியம் அவசியம்.

கேள்வி: காங்கிரஸ் இலங்கை அரசுடன் என்ன பேசி இருக்கும்?

பதில்:காங்கிரஸ் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை என்னவென்றால் தேர்தல் வரை தீவிர தாக்குதல் வேண்டாம் என்றுதான் சொல்லி இருப்பார்களே ஒழிய நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்லி இருக்கமாட்டார்கள். கலைஞர் எதை செய்தாவது போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுது இடும் வரை ஓயக்கூடாது.

33 comments:

said...

பதிவு நல்லா இருக்கு போங்க!நடத்துங்க!

said...

\\கேள்வி: ஏற்கனவே போர் நிறுத்தம் தெரிந்து கலைஞர் சென்று உட்காந்தார் என்பதில் உடன் படுகிறீர்களா?

பதில்: இவர் உண்ணாவிரதம் இருந்த பின் தான் போர் விமானங்கள் கொண்டு குண்டு போட மாட்டோம் என்று இலங்கையை சொல்லவைக்க முடிந்தது.\\

இதுக்கு இதான் பதிலா?

said...

நல்லா இருக்கு நாசுக்கா சொல்லாம நல்லா தெளிவாவே சொல்லி இருக்கிங்க

said...

இருக்கறதிலேயே இதுதான் அசல் கேள்வி பதில்.நல்லாயிருக்குது.வாழ்த்துக்கள்.

said...

கொஞ்ஞூண்டு நடுநிலை தெரியுது.

said...

கலக்கலா இருக்கு !!!!

//பட்டம் கொடுக்குறதுதான் கொடுக்குறீங்க சரத், கார்த்திக் ஆதரவு கட்சி ஆட்கள் என்ற பட்டம் கொடுங்க பாவம் அவுங்க ஆளே இல்லாம இருக்காங்க.//

:)

said...

அபி அப்பா நன்றி

நன்றி சுரேஷ்

நன்றி ராஜ நடராஜன்

இளா என்ன இப்படி சாச்சுப்புட்டீங்க நான் எல்லாம் பரம்பரை பரம்பரையா அ.தி.மு.க காரன் 2 ஆம் நூற்றாண்டு முதலே, ஒரு அ.தி.மு.க ஆளை பார்த்து இப்படி சொல்லீட்டீங்களே!!!


நன்றி பதி

said...

//பதில்: ஒழுங்காக மாத்திரை மருந்துகளை சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாக இருக்கனும், ஏன் என்றால் மே 16 க்கு பிறகு இலங்கையில் திரும்பவும் விமானம் பறக்கும் பொழுது போராட ஆரோக்கியம் அவசியம்.//

நச்...........

said...

கலக்கிட்டடா மாப்ள!!!!

(எப்பவும் உனக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம்தான் என்னால போட முடிஞ்சுருக்குது. இதுல எனக்கு சந்தோசம்தான் :-)) )

said...

//கேள்வி: கலைஞரின் உண்ணாவிரதம் பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்: அபிஅப்பா, லக்கியை தவிர மீதி அனைவரும் என்ன நினைத்தாங்களோ அதையேதான் நினைக்கிறேன். தேர்தலுக்காகவும் ஓட்டுகளை கருத்தில் வைத்து நடத்தப்பட்டது.//

:-))))))))))))))))))

(ஏஞ்சாமிகளா இங்க பின்னூட்டம் போடுறவங்களை ஸ்மைலி போடுறவங்களை ஏதாச்சும் கட்சியில சேர்த்து உறுப்பினர் கார்டு வாங்கி கொடுப்பாங்களா?

அப்படின்னா எனக்கு சரத் கட்சி ஓக்கே :-)

said...

குசும்பர் அசத்தல்!

said...

// செல்வேந்திரன் said...

குசும்பர் அசத்தல்!//

ஓஹ்.. இதுதான் மரியாதைங்களா :)

அப்ப நாங்களும் இனிமே இவரை குசும்பர்ர்ர்ன்னே கூப்பிடுறோமுங்க

said...

// கொஞ்ஞூண்டு நடுநிலை தெரியுது.// repeatuuuuuu.....

said...

அடடே.. மாம்ஸ் கலக்கல்.. ஃபார்முக்கு வந்துட்டிங்க போல.. அதும் அந்த கடைசி காமெடி.. ஆஹா.. ஓஹோ ரகம்.. :))

said...

நடுநிலைவாதி குசும்பன் சாரி குசும்பர் வாழ்க. :))

பதிவுதான்ன்னு பார்த்தா பின்னூட்டங்கள் இன்னும் கலக்கலா இருக்கே. :)

said...

//காங்கிரஸ் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை என்னவென்றால் //

ISO தரச் சான்றிதழுக்கு அனுகவும் : நடுநிலைவாதி குசும்பர், துபாய் குறுக்கு சந்து, துபாய் பஸ் ஸ்டேண்ட் பின்புறம், துபாய் வடக்கு, துபாய். :)

said...

//கேள்வி: லக்கி பதிவில் “ “பிரபாகரனுக்கு வன்னியிலே வீரப்பன் கதி ஆச்சுன்னா உங்க கட்சி (திமுக) 91லே தோத்தா மாதிரி 40 தொகுகுதிகளிலும் தோக்கும்”. அடப்பாவிகளா? இதுமாதிரி உள்மன ஆசையை வைத்துக் கொண்டுதான் தமிழீழம் பேசிவருகிறீர்களா?” என்று ஒருவர் சொன்னதாக சொல்லி இருக்கிறாரே அது பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்: சில வாரங்களுக்கு முன் தி.மு.கவின் தீவிர விசுவாசியான ஒரு பதிவருடன் பேசிக்கிட்டு இருந்த பொழுது, சில நாட்கள் முன்பு வரை 25 தொகுதி கிடைக்கும் என்று இருந்தது ஆனால் இப்பொழுது மாறுது, இவனுங்களோட இதே இழவா போச்சு கொல்றாங்களே கொல்றாங்களேன்னு கத்தி தி.மு.க வெற்றிய குறைக்கிறானுங்க, இப்படிதான் ராஜீவ் காந்தி இறந்த பொழுதும் தி.மு.க தோற்றது, எப்பொழுதும் இந்த ஈழத்து ஆட்களால் தி.மு.கவுக்கு பிரச்சினைதான் ஒரே அடியாக எல்லோரும் செத்து ஒழிந்துவிட்டால் இனி அடுத்த தேர்தலில் பிரச்சினை இருக்காது என்று ஒருவர் சொன்னார். இதுக்கு என்ன பதிலோ அதே தான் அதுக்கும் பதில்.//

சபாஷ் சரியான போட்டி..

இதுக்குப் பேர் தான் ரிவெஞ்சா மாமா? :))))))

said...

வரவர சீரியஸ் பதிவுகள் அதிகமாகது!
நல்லதுக்கில்ல!

said...

குசும்பன், நானும் உங்க கட்சி தான் (அதுக்காக அதிமுக அனுதாபின்னு யாராவது சொன்னா, ஆவ்வ்வ்வ், அழுதுடுவேன்)

said...

//சென்ஷி said... (ஏஞ்சாமிகளா இங்க பின்னூட்டம் போட்டுறவங்களை ஸ்மைலி போடுறவங்களை ஏதாச்சும் கட்சியில சேர்த்து உறுப்பினர் கார்டு வாங்கி கொடுப்பாங்களா?

அப்படின்னா எனக்கு சரத் கட்சி ஓக்கே :-)//

அண்ணன் காட்டிய வழியில் நானும்...!
:)

said...

//பிரேம்குமார் said...
குசும்பன், நானும் உங்க கட்சி தான் (அதுக்காக அதிமுக அனுதாபின்னு யாராவது சொன்னா, ஆவ்வ்வ்வ், அழுதுடுவேன்)
//

நானும் !

நானும்!! (அழப்பிடாது தைரியமா இருக்கணும்!)

said...

//இளா என்ன இப்படி சாச்சுப்புட்டீங்க நான் எல்லாம் பரம்பரை பரம்பரையா அ.தி.மு.க காரன் 2 ஆம் நூற்றாண்டு முதலே, ஒரு அ.தி.மு.க ஆளை பார்த்து இப்படி சொல்லீட்டீங்களே!!!
///

:))))))

said...

//வால்பையன் said...
வரவர சீரியஸ் பதிவுகள் அதிகமாகது!
நல்லதுக்கில்ல!
//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

டூ - வாலு!

நானெல்லாம் சொன்னா எங்க கேக்குறாங்க எதோ பெருசுங்க நீங்க சொன்னாத்தான் புரிபடுது..! :))

said...

செம குசும்பு

Anonymous said...

//போர் நிறுத்தம் தெரிந்து கலைஞர் சென்று உட்காந்தார்//

"அவசர உதவி: பாதுகாப்புப் பகுதியில் உள்ள எல்லாத் தமிழர்களையும் கொல்லப் போகிறார்கள்" என்று தமிழ்மணத்தில் இரு நாட்களாக் ஒருவர் அலரிக் கொண்டிருந்ததுக்கும், கலைஞர் உண்ணாவிரதத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை என குசும்பன் சொல்வதை நம்புவோமாக.

//இனி கலைஞர் என்ன செய்யனும் என்று நினைக்கிறீங்க?//

கவிஞர் புலமைப்பித்தன் சொன்னதுபோல, கலைஞரிடம் மட்டும்தான் ஈழப்பிரச்சினையில் இன்னும் என்ன செய்யப்போறீங்கன்னு கேட்க முடியும்.

//தமிழகத்தில் இருக்கும் இரண்டாம் பெரிய கட்சி தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது//

அம்மையாரிடம் பட்டதெல்லாம் மரத்துப்போன தமிழ் உணர்வாளர்களால் மட்டுமே இப்படி சொல்ல முடியும்.

//கலைஞரை விமர்சிப்பதால் அவன் அ.தி.மு.க ஆதரவு ஆளாகதான் இருக்கவேண்டும் என்று கட்டாயம் இருக்கா? //

கலைஞரை விமர்சிக்க ஆரம்பித்தவர்கள் எல்லாம், இப்போது அம்மா கட்சிக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்ட "லேட்டஸ்ட் ந்யூஸ்" குசும்பனுக்கு தெரியலயா.

said...

//மே 16 க்கு பிறகு இலங்கையில் திரும்பவும் விமானம் பறக்கும் பொழுது //

அது நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

said...

//கலைஞரை விமர்சித்தால் விழும் அ.தி.மு.க ஆதரவு பட்டம் பற்றி?

//

ஆமா அதுனால நீங்க அ.தி.மு.க . அப்புறம் என்னையக் கூப்பிட்டு வீட்ல சோறு போட்டதால நீங்க தி.மு.க. அப்புறம் டிபிசிடி யோட போன்ல பேசுரதால நீங்க.... வேணாம்...இத்தோடு நிறுத்திக்கிறேன்.

:))

said...

நன்றி அத்திரி

நன்றி செல்வேந்திரன்

நன்றி சஞ்சய்மாம்ஸ் உங்க ஆட்கள் அடிக்கும் காமெடிமாதிரியே இருந்தா சரி, இத்தனை நாள் இலங்கை பிரச்சினை வெளிநாட்டு பிரச்சினை தலையிடமுடியாது என்று சொல்லிக்கிட்டு இருந்த உங்க ஆட்கள் எப்படி திடீர் என்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கமுடிந்தது? கலைஞர் உண்ணாவிரத்தை முடிக்கனும் என்றா? அல்லது ஒன்னு ரெண்டு சீட் கூட கிடைக்கனும் என்றா! இப்பவும் சொல்லாம் இந்தியா நினைச்சால் மட்டுமே அவனுங்களுக்கு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைக்கமுடியும்!


மாம்ஸ் என்னை நடுநிலைவாதின்னு சொல்லாதீங்க பிளீஸ் அட்லீஸ் கார்த்திக் ஆள் என்றாவது சொல்லுங்க!


நன்றி வால் இனி குறைச்சுக்கலாம்!


நன்றி பிரேம்

நன்றி ஆயிலு நீங்க கத்தார் நாட்டு சரத் கட்சியின் பிரச்சாரபீரங்கி!

நன்றி கேபிள்சங்கர்

நன்றி Poonai //கலைஞரை விமர்சிக்க ஆரம்பித்தவர்கள் எல்லாம், இப்போது அம்மா கட்சிக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்ட //

அவ்வ்வ் :(


அப்துல்லா அண்ணாச்சி இறைவனை வேண்டுவதை விட கலைஞர் சாமி மனசு வெச்சு அண்ணாச்சி நிஜமா மனசு வெச்சா இது பிசாத்து மேட்டர்!


ஆமாம் அண்ணாச்சி உங்க கூட பழகுவதால் திமுக, டிபிசிடி கூட பேசுவதால் தேமுதிக, ரவி கூட பேசுவதால் அதிமுக. என்று எப்படி வேண்டும் என்றாலும் சொல்லுங்க...ஆனா சஞ்சய் கூட பழகுவதால் காங்கிரஸ் என்று மட்டும் சொல்லிடாதீங்க அண்ணாச்சி அந்த அவமானத்தை மட்டும் என்னால் தாங்க முடியாது!

said...

"அகில இந்திய லெட்டர்பேடு... சாரி... நாடாளும் மக்கள் கட்சி"யை சேர்ந்த குசும்பனை வன்மையாக கண்டிக்கிறேன்..!

said...

"அகில இந்திய சித்தி.. சாரி... சமத்துவ மக்கள் கட்சி"யை சேர்ந்த குசும்பனை வன்மையாக கண்டிக்கிறேன்..!

said...

வாங்க குஷ்ம்பன் நீங்கடான் இன்மே நம்ம கட்சியோட வெளிநாட்டு கிளைகள்கு தல்வர். பத்வி கொடுத்தாச். இன்மே நீங்க எங்க ஆளு.

-
கார்திக்
த‌லைவ‌ர்,
அ இ ந‌ ம‌ க‌

said...

ம்ம்ம்ம்

said...

// ILA said...
கொஞ்ஞூண்டு நடுநிலை தெரியுது.
//

செம குசும்பான கமெண்ட் இது.. கலக்கல் தலைவா..