Wednesday, April 22, 2009

என்ன எழவுடா இது? இன்னும் எத்தனை நாடகம்?

இன்னும் எத்தனை நாடகங்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு பார்க்கவேண்டி இருக்குமோ? ஆனால் கண்டிப்பாக மே 13க்கு பிறகு இருக்காது.

போர் நடந்தால் மக்கள் சாகதான் செய்வார்கள் என்று முழங்கிய தலைவி இன்று ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம் அமைய வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிறார்.

ஐந்துவருடம் ஆட்சியில் மந்திரி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இன்று மேடைக்கு மேடை இலங்கையில் போரை நடத்துவதே காங்கிரஸ்தான் என்கிறார் , இந்த ஞானோதயம் எப்பொழுது ஏற்பட்டது என்று தெரியவில்லை ஒருவேளை புத்தருக்கு போதி மரம் போல் இவருக்கு அம்மாவின் நிழல் போல.

ஈழ தமிழர்களுக்கா உண்மையாக பாடுபடுகிறவர் என்று நினைத்து வந்த திருமா, நான் காங்கிரசின் விசுவாசி காங்கிரஸுக்கு எதிராக நடக்கமாட்டேன் என்று சிதம்பரத்தில் முழங்குகிறார்.

கேரளாவில் கம்யூனிஸ்டுக்கள் நடத்தும் போராட்டங்களை பாருங்களேன், ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த பொழுது அங்கிருந்த கோக் தயாரிக்கும் தொழிற்சாலை புல்டோசர் கொண்டு இடித்து நொறுக்கப்பட்டது, தயாரான பாட்டில்கள் கடலில் கொண்டு போய் கொட்டப்பட்டன, அரசு இயந்திரம் ஸ்தம்பித்தது. அதுபோல் பல போராட்டகள் என்றால் அதை கேரள கம்யூனிஸ்ட் மாணவர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். யாராவது தீக்குளிக்கிறார்களா அங்கு? ஒருக்கினைந்து அடிக்கும் அடியில் அரசு இறங்கி வருகிறது. ஆனால் இங்கு இருக்கும்(?) கம்யூனிஸ்டுகள் கொடுக்கும் குரல் பக்கத்தில் இருப்பவனுக்கே கேட்கமாட்டேங்குது.

ஆட்சியில் இருப்பவர்கள் பற்றி ஒன்றுமே சொல்வதுக்கு இல்லை இறுதி எச்சரிக்கை கொடுக்கனுமாம் அதுக்கு தந்தியாம், திரும்ப ஒரு முறை பொது வேலை நிறுத்தமாம், செயற்குழு விரைவில் கூடுகிறதாம். இன்னும் எத்தனை பயங்கர போராட்டங்கள் நடத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுக்கெடுத்தாலும் புள்ளி விவர கணக்கு கொடுத்தே பழகி போனவர்கள், நாங்க எல்லாம் அந்த காலத்தில் என்று இதுக்கும் புள்ளி விவர கணக்கு கொடுக்கிறார்கள். அம்மா அப்பொழுது அப்படி பேசியது, ஐயா இப்பொழுது ஏன் இப்படி பேசுகிறார், அன்பு மணி என்ன செய்துக்கொண்டு இருந்தார், வைகோ ஒரு பச்சை துரோகி என்று எல்லாம் அறிக்கை மேல் அறிக்கையும் தந்தியும் அடிப்பதை தவிர வேற என்ன செஞ்சீங்க என்றால் பதில் இல்லை.
சாவு வீட்டிலுமா நான் இதனை சொட்டு கண்ணீர் விட்டேன் அவன் ரெண்டு சொட்டுதான் கண்ணீர் விட்டான் என்று சொல்லுவீங்க!

ஏதேனும் மாற்றம் செய்து தேர்தல் தேதியை முன்கூட்டியே வெச்சுட்டா கொஞ்சம் விடுதலை கிடைக்கும் இந்த கேடுக்கெட்ட ஜென்மங்களின் நாடகங்கங்களில் இருந்து.

48 comments:

said...

:(((((

said...

ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

குரூப் அமைப்பதற்கான வசதி...
வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு....
ஓட்டளிப்பு பட்டை...
இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்....

தளமுகவரி

nellaitamil

said...

nellaitamil எங்க தலைவர்களே தேவலாம்:(

said...

குசும்பன், நீங்க சொன்னா போல 13 வரை பொறுங்கள். அப்பறம் ஒரு 2 வருடம் எவனும் எதுவும் பேச மாட்டான்.

நெல்லை தமிழ், .........:) :(

said...

:((((

:((((((((((

said...

:((

said...

சொல்ல வார்த்தையில்லை.துயரம் மட்டுமே மிஞ்சுகிறது:(

said...

என்னத்த...சொல்றது, நம்மலால ச்..சும்மா... பொழம்பி பதிவு போட்டு ஹிட்ஸ் வாங்கத்தான் முடியும்..

//இன்னும் எத்தனை நாடகங்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு பார்க்கவேண்டி இருக்குமோ?//

said...

எப்படிக்கத்தினாலும் இடியே விழுந்தாலும் இதெல்லாம் அரசியல்லே சகஜமப்பா... அப்படினுட்டு சொல்லிட்டு போய்கிட்டேயிருப்பான்.. இப்போதைக்கு ஓட்டு வாங்குவதில்தான் அவர்களின் குறி

said...

என்னடே நீ பாட்டுக்கு கலைஞரையும் சேர்த்து திட்டியிருக்க?

அவருக்கு மத்திய அரசு பாராட்டு விழா நடத்த போவுது தெரியும்ல?
விவரங்கள் என் பதிவுல இருக்கு படி.
http://www.maraneri.com/2009/04/blog-post_22.html

said...

நீங்கள் வெளியே புலம்புகின்றீர்கள், நாங்கள் உள்ளுக்குள்...
என்ன... இந்தியாவுக்கு வெளியே இருப்பதால், இந்த எழவுகளை காண்பதிலிருந்து சற்று விலகியிருக்கிறோம் என்ற சிறிய ஒரு ஆசுவாசம்...

said...

:))))

said...

பிணம் எரியும் நெருப்பில் பிரியாணி செய்து போட்டால் கூட பந்திக்கு முந்தும் மந்தி கூட்டமய்யா..

said...

ம்ம்ம்ம்ம்!! :((((((( !!

said...

//கேரள கம்யூனிஸ்ட் மாணவர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். யாராவது தீக்குளிக்கிறார்களா அங்கு? ஒருக்கினைந்து அடிக்கும் அடியில் அரசு இறங்கி வருகிறது. ஆனால் இங்கு இருக்கும்(?) கம்யூனிஸ்டுகள் கொடுக்கும் குரல் பக்கத்தில் இருப்பவனுக்கே கேட்கமாட்டேங்குது.//

தல இந்த வருசம் சீரியஸ் பதிவுகள் அதிகம், இருந்தாலும் தெளிவான கருத்துகள்!

தமிழக அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழிந்து ரொம்ப நாளாச்சு!

said...

ஒரு வேளை, நாம தந்தி அடிச்சா இவங்களுக்கு ஏதாவது கமிஷன் கிடைக்குதோ என்னவோ???!!!

said...

எல்லா மயிரும் நல்லா தெரியுது ஆனா கலைஞரை மட்டும் நொட்டிகிட்டே இருப்பது! போங்கடா போங்கடா போய் இலவச டிவிக்கு வரிசைல நில்லுங்க, மாதம் 300 ரூவாய்க்கு உழைச்சா போதும்யா தமிழ் நாட்டிலே ஒரு பொண்டாட்டி ஃப்ரீ, 2 குழந்தை ஃப்ரீ, 30 கிலோ அரிசி ஃப்ரீ, பொங்கள் வைக்க எல்லாம் ஃப்ரீ!!!

பிச்சகார பயலுங்களே! நாங்க அழகா ஆட்சி செஞ்சா தோற்கடிப்பிங்க! எலேய் உங்களை வாழ்கை முழுக்க பிச்சைகாரனா தான் வைக்கனும்.

said...

எவனாவது நொங்கு எடுத்தா நாம நோண்டித் திங்கலாம்.

said...

நானும் ஸ்மைலி போடணுமா..?

said...

என்னாச்சு தல/தள

மொய் சரியா வர்லியா.

உங்க கோபத்தை மே13ந்தேதி காண்பிங்க.

வீட்லே பெருசுங்க யாராவது இருந்தா அவங்களை தூங்க விடாம தூக்கிட்டு போயி குத்த வையுங்க.

கண்கள் பனிக்கின்றன!!!
இதயம் கனக்கின்றன!!!!

said...

:(((((((

said...

:((

said...

அபி அப்பா எல்லா மயிரும் நல்லா தெரியுதா? அப்ப கண்ணுல ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லா மயிரும் அப்படியே இருக்கட்டும் நீங்களும் ஒரு மயிரையும் புடுங்கவேண்டாம். தோல்வி பயத்தில் வார்த்தைகள் ஒருமாதிரி வருது போல!
*********************

//என்னாச்சு தல/தள

மொய் சரியா வர்லியா.

உங்க கோபத்தை மே13ந்தேதி காண்பிங்க.//

மொய் வந்தா என்னா வரவில்லை என்றால் என்ன? எப்படி கோவத்தை காட்ட சொல்றீங்க? யாருக்கு ஓட்டு போட சொல்றீங்க? எல்லாருமே இப்படிதானே இருக்காங்க!

said...

//மாதம் 300 ரூவாய்க்கு உழைச்சா போதும்யா தமிழ் நாட்டிலே ஒரு பொண்டாட்டி ஃப்ரீ, 2 குழந்தை ஃப்ரீ, 30 கிலோ அரிசி ஃப்ரீ, பொங்கள் வைக்க எல்லாம் ஃப்ரீ!!!//

இங்கே தான் இம்புட்டு பிச்சை கிடைக்குதுல்ல! அப்புறம் ஏன் துபாய்க்கு பிச்சை எடுக்க போனிங்க!

சன், கலைஞர் டீவீயில் காலையிலிருந்து வரிசையாக படம்.

இலங்கை தமிழர்களுக்காக பந்த் நடத்துறாங்களாம், இல்லை இல்லை கொண்டாடுறாங்களாம்.

அதெல்லாம் ஒரு கட்சி அதுக்கு துபாய்லருந்து ஒரு தொண்டர்!

said...

nellaitamil எங்க தலைவர்களே தேவலாம்:(

வாழ்த்துக்கு நன்றி குசும்பன்.
nellaitamil

said...

//பிச்சகார பயலுங்களே! நாங்க அழகா ஆட்சி செஞ்சா தோற்கடிப்பிங்க! எலேய் உங்களை வாழ்கை முழுக்க பிச்சைகாரனா தான் வைக்கனும்//

ச்சே.. இப்படி கூட இருப்பாங்களா? இவரு என்ன சொல்ராரு? இதுக்கும் குசும்பனின் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?

குசும்பரே நெல்லைதமிழ் எவ்ளோ தேவலாம்..

said...

ஆரம்பித்த போராட்டங்களையெல்லாம் தன் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி அப்படியே அமுக்கிட்டு தினமும் அறிக்கை, பேட்டி, கவிதை, போராட்டம் ன்னு காலத்தை ஒட்டி ஆட்சிய தக்க வைக்க படாத பாடு பட வேண்டியிருக்கு..

கேரள கம்யூனிஸ்ட் மாணவர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்////////

கரெக்ட்தான்.

ஆனா இங்க ஒருத்தனை ஒருத்தன் பார்த்தால் முதல்ல கேட்பது அயன் பாத்தியா, IPL பாத்தியான்னு ????

இவனுங்க கிட்ட வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ..??

said...

ஓட்டு பொறுக்கும் பிச்சைக்காரர்களிடமிருந்து வேறு என்ன பெருசா எதிர்பார்க்க முடியும்? இயலாமையால் புழுங்கி நாமளும் சாவ வேண்டியதுதான். முதன்முறையா தமிழனாக இந்தியாவில் இந்தத் **** பசங்க தலைமையின் கீழ் இருக்குறதுக்கு வெக்கப் படுறேன் :(

said...

என் வருத்தங்களையும் இங்கே பதிவு செய்கிறேன் குசும்பா..

:-(((

said...

This article commonly said,
but why 'Abi Appa' thinks,
this is against DMK. ?.
Abi appa,
Please come out from crazyness on
Politics.

said...

// பிச்சகார பயலுங்களே! நாங்க அழகா ஆட்சி செஞ்சா தோற்கடிப்பிங்க! எலேய் உங்களை வாழ்கை முழுக்க பிச்சைகாரனா தான் வைக்கனும்.//

சரியாச்சொன்னீங்க அபிஅப்பா

ஒயின்சாப் பார்,நகராட்ச்சி சைக்கில் ஸ்டேண்ட்,பிராத்தல் இந்தமாதிரி கீழ்நிலை தொழில்ல ஆரம்பிச்சு மேல பறக்குர சேட்லைட்வரைக்கும் உங்க கைலதான.அதையும் மீறி வேற எவனாவது வேற எதாவது தொழில் தொடங்கினாலும் அதிலையும் உங்களுக்கு பங்கு குடுக்கனும்.ஆனா உங்க ஆளுக பணமும் போட மாட்டனுக உழைக்கவும் மாட்டானுக.ஆனா லாபத்துல பங்கு குடுக்கனும்.நஸ்டம் வந்த வழக்கம் போல பிச்சக்கார பயளுகளுக்தான்.

சரி கலர் டீவி ரண்டுருவா அரிசி இதெல்லாம் போடுரதுக்கு பதில மக்களோட வாங்கும் திறன அதிபடுத்தி அவங்கலாவே வாங்கும் படி செய்திருக்கலாமே,அதவிட்டுப்புட்டு அவனுங்கல ஏன் நீங்களே பிச்சக்காரனாக்குரீங்க.இந்த கலர் டீவில்லாம் யாருக்கு தெரியுமா கட்சிக்காரங்களுக்குத்தான் அந்த வார்டுல கேள்வி கேக்குர ஒன்னு ரண்டு பேருக்கு தான்.அரிசி கதை உலகரிஞ்ச விசையம் அதவிடுங்க. எங்கையோ திருடி தின்னு நல்லாருங்க.

அது சரி இன்னைக்கு பந்துதான.அப்புறம் ஏன் உங்க டீவி சேனலுக்கு லீவுடுல.ஓ அதுக்கு பதிலாத்தான் இன்னைக்கு படம் போட்டிருக்கீங்களா நல்லாருக்கு.பரகால்ல தலைவரே மக்களுக்கு இன்னைக்கு அழுவுர டீவி சீரியல்ல இருந்து இன்னைக்கு ஒரு நாள் லீவு குடுத்திருக்கீங்க.அதுக்கு பதிலாத்தான் முரட்டுக்காளை படம் போட்டிருக்கீங்க.அதுலகூட கன்னத்தில் முத்தமிட்டால் மாதிரி படம் கிடைக்கல பாருங்க!

விரைவில் பல கோடி பிச்சைகாரர்களை உறுவாக்கப்போராங்க பாத்து அந்தவரிசைல நீங்களும் வரலாம்.

said...

@ அபி அப்பா ...
சட்டமன்றத் தேர்தல்ல உங்க கிட்ட அத்தன கட்சியும் கூட இருந்தும் ஏன் இலவசம் இலவசம்னு அள்ளி வீசுனீங்க? ஓட்டுப் பொறுக்கத்தானே? ஆட்சியப் புடிக்கனும்கிற வெறியில அள்ளி அள்ளி வீசுனது நீங்க. இப்ப வாங்குறவங்கள குறை சொல்ல வந்துட்டீங்களே. வாங்குறவன் எல்லாம் என்ன செயற்குழு, பொதுக்குழுவ கூட்டி எங்களுக்கு இலவச டிவி வேணும், ஒரு ரூபாய்க்கு அரிசி வேணும்னு தீர்மானம் போட்டானுங்களா? ஓட்டுப் பொறுக்க அள்ளி வீசிட்டு இங்க வந்து கன்னாபின்னான்னு வார்த்தைய வீசுறீங்க?

சரி அம்புட்டு இலவசமும் கொடுத்தும் தனி பெரும்பான்மை வரல்லைல, அதுல இருந்தே தெரிஞ்சுருக்க வேண்டாம் எல்லாரும் இலவசத்த பார்த்து மயங்குற ஆளுங்க இல்லன்னு?
தமிழ்நாட்டுல இருக்கவன் எல்லாம் இலவசத்த பார்த்து மயங்குறவன்னா, நீங்க 234 தொகுதியிலயும் ஜெயிச்சுருக்கனும்ல? ஏன் ஜெயிக்க முடியல? இப்ப காங்கிரஸ் உதவியோடத் தானே நொண்டியடிச்சுக்கிட்டு இருக்கீங்க?

உங்க கட்சிக்கு உண்மைத் தொண்டனா மட்டும் இருந்து, கட்சிக்காக உழைச்சு உழைச்சு வீணாப் போன உங்க தொண்டர்களுக்கு வேணும்ணா நீங்க குடுக்குற இலவசங்கள் இனிக்கலாம் ஆனா எல்லாருக்கும் அது எந்த அளவுல இம்சையா இருக்குன்னு ஊருக்குள்ள போயி கேட்டுப்பாருங்க தெரியும்.

இலவசம் இலவசம்னு கொடுத்து தான் மக்களா பிச்சைக்காரங்களா வைச்சுருக்கீங்க. யாருய்யா கேட்டா உங்க இலவசத்த? மக்கள பிச்சைக்காரனா மாத்துனது நீங்க தானே? இனிமே வேற நீங்க பிச்சைக்காரனா ஆக்கனுமா என்ன? இடுப்புல இருக்க ஒத்த துண்டையும் உருவிடாம இருந்தா சரி.
நல்ல வேளை தமிழன் மஞ்சத் துண்டை கோவனமா கட்டல.

நீங்க என்ன வேணும்ணாலும் செய்வீங்க, நாங்க பார்த்துக்கிட்டு சும்மான்னு இருந்தா நல்லவனுங்க. கேள்வி கேட்டா மயிரு மட்டன்னு திட்டுவீங்க. தலைவர் எவ்வழியோ நீங்களும் அவ்வழி.

said...

நீங்க சொன்னா போல 13 வரை பொறுங்கள். அப்பறம் ஒரு 2 வருடம் எவனும் எதுவும் பேச மாட்டான்.

said...

இதே எழவுதான்.. என்னத்தச் சொல்ல..

said...

ஈழத்தில் கிட்டத்தட்ட எல்லாமே அழிந்துபோய்க்கொண்டிருக்கின்ற நிலையில் இப்போது போர் நிறுத்தம் செய்யவேண்டுமாம். அதற்காக பந்தாம்.

இன்னும் இருக்கும் கொஞ்சம் பேரையும் அழித்துவிட்டால் போர் தானாகவே நின்றுவிடும் நிலைமைதான் இப்பொழுது.

இப்ப பந்த் என்ற நாடகத்தை நடத்தி அப்படி தானாக நிற்கும் போரையும் கூட எங்கள் பந்த் மூலம்தான் நிறுத்தினோம் என சொல்லி ஓட்டுகள் வாங்க போடும் திட்டம் தான் இது.

இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது சோனியாவும், மன்மோகன் சிங்கும் போர் நிறுத்தம் உடனடியாக செய்யவேண்டும் என அறிக்கை வேறு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


ஆமா, தமிழ்நாட்டில் பந்த் நடப்பதனால் தமிழ் நாட்டில் தான் பாதிப்பே ஒழிய இலங்கையில் எப்பவும் போல தான் என்பதை ஏன் இந்த அறிவிலிகள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. (புரிந்துக்கொண்டு தங்கள் சுயநலத்துக்காக தான் செய்கிறார்கள் என்பது வேறு விசயம்)

said...

அயோக்கிய அரசியல்வாதிகள் இருக்கும்வரை இது போன்ற கூத்துகள் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும்.

said...

\குசும்பன் said...
அபி அப்பா எல்லா மயிரும் நல்லா தெரியுதா? அப்ப கண்ணுல ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லா மயிரும் அப்படியே இருக்கட்டும் நீங்களும் ஒரு மயிரையும் புடுங்கவேண்டாம். தோல்வி பயத்தில் வார்த்தைகள் ஒருமாதிரி வருது போல!
*********************

குசும்பா! நான் உன்னை எப்ப திட்டியிருக்கேன். அதும் மயிறு மட்டன்னு? தமிழக வாக்காளர்களை தான் திட்டினேன்!

தோல்விக்கு நானோ என் கட்சிகாரனோ என் தலைவனோ பயந்தது இல்லை! எங்க ஆசை எல்லாம் போராட்டம் சிறை விடிவுகாலம் என்பதே!

தயவு செஞ்சு எங்களை எதிர் கட்சி ஆக்குங்க!
சேது சமுத்திர திட்டம் ரத்து என தேர்தல் அறிக்கையிலே சொன்ன வைக்கோ வை பிடிச்சு உள்ளே ப்போடட்டும்
நெடுமரம் நாக்கு அறுபடட்டும். எனக்கு என்னகவலை. ஆனா திருமா, என் தலைவர் எல்லாம் அப்பவும் பேசுவார்கள்.

said...

// யாருக்கு ஓட்டு போட சொல்றீங்க? //

என்ன இப்படி சொல்லிடீங்க '49 ஒ' போட்டு இவங்களுக்கு நல்லா நாமம் சாத்தலாம்

said...

//எல்லா மயிரும் நல்லா தெரியுது ஆனா கலைஞரை மட்டும் நொட்டிகிட்டே இருப்பது! போங்கடா போங்கடா போய் இலவச டிவிக்கு வரிசைல நில்லுங்க, மாதம் 300 ரூவாய்க்கு உழைச்சா போதும்யா தமிழ் நாட்டிலே ஒரு பொண்டாட்டி ஃப்ரீ, 2 குழந்தை ஃப்ரீ, 30 கிலோ அரிசி ஃப்ரீ, பொங்கள் வைக்க எல்லாம் ஃப்ரீ!!!

பிச்சகார பயலுங்களே! நாங்க அழகா ஆட்சி செஞ்சா தோற்கடிப்பிங்க! எலேய் உங்களை வாழ்கை முழுக்க பிச்சைகாரனா தான் வைக்கனும்.//

எங்களைப் பிச்சைக்காரர்களாக வைச்சி இருக்கத்தான் அழகா ஆட்சி நடத்துறீங்கன்னு நல்லாத்தெரியுது.இந்த ஆட்சியை மக்கள் ரொம்ப விரும்பினா நீங்க ஓட்டு பிச்சைக் கேட்கப் போகாம வீட்டிலேயே இருந்தாக்கூட தேடிவந்து பிச்சை போடுவாங்க!.பின்ன ஏங்க வெயில்லே வீதிவீதியா பிச்சைக் கேட்டு அலையுறீங்க! :)

said...

பிசு பிசுத்து கொண்டிருக்கும் கருணாநிதியின் கபட நாடக வேலை நிறுத்தம்.

காலை பத்து மணிமுதல் நமது குழு சென்னையை சுற்றி நிலவரத்தை சொன்னார்கள்.

1. ஆளும் கட்சி யின் அழைப்பு என்பதால் (அல்லது மிரட்டப்பட்டதால், அல்லது எந்த ஆளும் கட்சி அழைப்பு கொடுத்தாலும்) பஸ்கள் ஓடவில்லை. அதன் காரணமாகவே பஸ் இல் பயணிக்கும் மக்கள் கூட்டம் கொஞ்சம் குறைந்து இருந்தது.
2. வழக்கம் போல் ஆட்டோ ஓடுகின்றது.
3. வழக்கம் போல் மகிழுந்து இன்ன பிற தனியார் வாகனங்களுக்கு குறைவில்லை.
4. ரோட்டோர கடைகள் அனைத்து திறந்து உள்ளன.
5. யார் அழைப்பு விடுத்தாலும் கடைகளை மூடும் வியாபாரிகள் கடைகளை மூடி உள்ளனர்.
6. அரசாங்கம் நடத்தும் மது பானகடைகளுக்கு எந்த விடுமுறையும் இல்லை. வழக்கத்தை விட மிக நன்றாய் வியாபாரம் நடக்கிறது. இது அரசாங்கத்தின் அல்லது கருணாநிதியின் கேவலமான நடத்தையை காட்டுகிறது.திமுகவின் உண்மையான தொண்டனை கேவலப்படுத்துகிறது.
7. நாம் பேசியவரையில் திமுக வில் எழுபது சதவீதம் பேர் கருணாநிதியின் இந்த நாடகத்தை விமர்சனம் செய்கிறார்கள் . அதன் வெளிப்பாடே நேற்று கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் தாக்கப்பட்டது.
8. இன்றைய முடிவு திமுகவின் உண்மையான தொண்டர்கள் கருணாநிதியை விட்டு விலகியே , எதோ ஒரு நிர்பந்தத்திற்காக கட்சியில உள்ளார்கள்
9. சென்னையின் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கம் உள்ளது. போக்குவரத்து நன்றாய் உள்ளது.
10. கருணாநிதியின் நாடக பந்த் பிசுபிசுத்து கொண்டிருக்கிறது.


-பதினோரு மணி நிலவரம் . முழு விவரத்தோடு மாலை சந்திப்போம்.
www.mdmkonline.com

said...

//தயவு செஞ்சு எங்களை எதிர் கட்சி ஆக்குங்க!//

நாங்க எப்படி ஆக்குவது? பதவியை ராஜினாமா செஞ்சுட்டா வேற கூட்டணி வரும் அல்லது தேர்தல் வரும் அப்படி ஆகிக்கலாம்.

//ஆனா திருமா, என் தலைவர் எல்லாம் அப்பவும் பேசுவார்கள்.//

ஒரு சின்ன திருத்தம் அப்பொழுதுதான் பேசுவார்கள்... ஆனா அப்பொழுது பேசும்பொழுது கேட்க ஈழத்தில் யாரும் இருக்கமாட்டார்கள்:(

said...

குசும்பா! நான் உன்னை எப்ப திட்டியிருக்கேன். அதும் மயிறு மட்டன்னு? தமிழக வாக்காளர்களை தான் திட்டினேன்!
//


உங்க குடும்பமும் தமிழக வாக்காளர் லிஸ்டில் தானே உள்ளது..??


அப்ப சரி :)

said...

என்ன செய்வது தமிழ் நாட்டில் பிறந்து விட்டோம்:-((

said...

என்ன சொல்றதுன்னே தெரியலை குசும்பா :(

said...

//மிக சோகமான பின்னூட்டங்கள்
அருகிலேயே சிரித்தபடி
அன்னார் புகைப்படங்கள்//

இப்படி யார் மனமாவது புண்படலாம் என்பதால், பின்னூட்டத்திற்குப் பொருத்தமான புகைப்படங்கள் வைத்துக்கொள்வது நலம். நா ரொம்பக் கோவமா தான் இருக்கேன்.

said...

//jegan // மன்னிக்கவும் தாங்கள் போட்டு இருந்த பின்னூட்டத்தை நீக்கியதற்கு.

said...

//சாவு வீட்டிலுமா நான் இதனை சொட்டு கண்ணீர் விட்டேன் அவன் ரெண்டு சொட்டுதான் கண்ணீர் விட்டான் என்று சொல்லுவீங்க//

ச‌ரியான‌ சாட்டைய‌டி

said...

//ஏதேனும் மாற்றம் செய்து தேர்தல் தேதியை முன்கூட்டியே வெச்சுட்டா கொஞ்சம் விடுதலை கிடைக்கும் இந்த கேடுக்கெட்ட ஜென்மங்களின் நாடகங்கங்களில் இருந்து.//
:)