Sunday, April 5, 2009

டயலாக்+ கார்ட்டூன் + டரியள் டக்ளஸ்


டயலாக்:

ராமதாஸ்: அச்சிச்சோ என்ன வைகோ இப்படி ஆயிடுச்சு உங்கநிலமை! நான் வேண்டும் என்றால் அம்மாகிட்ட சொல்லி ஒரு எம்.பி சீட் வாங்கிதரவா? ஆனா அதுக்கு நிக்க சரியான ஆள் வேண்டுமே?
வேண்டும் என்றால் நான் எங்க கட்சி ஒன்றிய செயலாளரை ரிசைன் செய்ய சொல்லி அங்க நீங்க ஒன்றிய செயலாளர் ஆகிடுறீங்களா?

வைகோ: ம்ம் இல்லண்ணே சகோதரி ரொம்ப நல்லவங்க இந்த முறைஏதோ ஒரு ஜோசிய காரன் அவுங்க 23 தொகுதியில் நிற்கனும் என்று சொல்லிட்டானாம் அதான் இவ்வளோ பிடிவாதமாக இருக்காங்க, இல்லைன்னா எனக்கு நிறைய தொகுதிகொடுத்து இருப்பாங்க.ஆனா எனக்கு இருக்கும் பயம் என்னன்னா?

ராமதாஸ்: என்ன பயம் உங்களுக்கு சொல்லுங்க?

வைகோ: அடுத்தமுறை அதே ஜோசியகாரன் 9 ராசியான நம்பர் அதனால் 36 தொகுதியில்நிற்கனும் என்று சொல்லிட்டா என்ன செய்வது நாம ரெண்டு பேரும்?

ராமதாஸ்: ஹா ஹா ஹா ஹா

வைகோ: என்ன இவ்வளோ சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க சிரிக்கிறீங்க? அடுத்தமுறை இப்படி ஆச்சுன்னா என்ன செய்வீங்க,உங்களுக்கு இப்ப கொடுத்து இருக்கும் ஏதும் கிடைக்காதுல்ல?

ராமதாஸ்: நீங்க இன்னும் அரசியல் தெரியாதவரா இருக்கீங்க வைகோ! நான் எப்ப ஒரே கூட்டணியில் தொடர்ந்து இரு முறை தேர்தலை சந்தித்து இருக்கிறேன்!
**********************
நம்ம அரசியல் வாதிங்க பிளாக் ஆரம்பிச்சு அதுக்கு கேப்சன் கொடுக்கனும் என்றால் எப்படி கொடுப்பாங்க? ஒரு சிறிய கற்பனை! இப்ப என்னோட வலைப்பூ குசும்பு ஒன்லிக்கு கேப்சனாக கலாய் கலாய் கலக்கலாய் கலாய் என்று வைத்து இருக்கிறேன் அதுபோல்
விஜயகாந்த் “தே.மு.தி.க ” கேப்சன் “ எல்லாம் மண்டபத்துக்காக!”

கலைஞர் “திராவிட முன்னேற்ற கழகம்” கேப்சன் ”இதுவும் குடும்பத்துக்காக!”


ராமதாஸ் “பாட்டாளி மக்கள் கட்சி” கேப்சன் ”அன்பு”ம(ணி)கனுக்கா...


சரத்குமார் “சமத்துவ மக்கள் கட்சி” கேப்சன் “யாருக்காக இது யாருக்காக!”

**********************
செய்தி: கார் விபத்து ஐ பெரியசாமி லேசான காயம்!
டரியள்: அடிங்க ஐ என்று சந்தோசமாகவா இதை சொல்ற!

26 comments:

said...

superb comments on karthik

said...

கார்திக் பாவம் மாப்பி
இன்னுமா அவரையே அடிக்கிறீங்க?

ராமதாஸ், வைகோ உரையாடல் நகைச்சுவை கலந்த உண்மை.

கேப்சன் எல்லாம் நெம்ப அருமைடே.

said...

ரெண்டாவது கமெண்ட் அருமை உண்மையும் கூட :)

said...

பாவம் கார்த்திக் அவரவிட்ருங்க சாமி எப்பவோ தான் அவர் வெளிய்ய வர்ரார் அப்பவும் விடாம இந்த அடி அடிச்சா எப்படி மற்றபடி கமெண்ட் எல்லாம் ஜுப்பர்ர்ர்ர்

said...

உங்களை விமர்சிப்பதற்கு எனக்கு தகுதி இல்லை என்றாலும் என் மனதில் பட்டதை சொல்கிறேன்..

இந்த பதிவு நீங்கள் ஏனோ தானோ என்று எழுதியதாகவே தோன்றுகிறது.. உங்கள் முந்தைய பதிவுகள் அனைத்தையும் படித்ததால் இப்படி தோன்றுகிறதோ என்னவோ..

கார்த்திக் படத்தை தவிர மற்றவை சிரிப்பை வரவைக்க வில்லை..
ராமதாஸ், வைக்கோ பகுதியிலும் கம்மி தான்..
கேப்சன் சுமார் ரகங்கள் தான்..

உங்களது மற்ற வெற்றி பதிவுகளோடு ஒப்பிடும் போது, உங்களுக்கு இது ஒரு குசேலன்..

இந்த பின்னூட்டத்தை நீக்கும் அனைத்து உரிமைகளும் உங்களுக்கு உண்டு...

said...

ஐய்ய்யா குசும்பா

என்னைய விட்டுடு

நானே நொந்து போயிருக்கிறேன்

:(

said...

பேட்ஜ் கருத்துப்படம் கலக்கல்

said...

உங்களது மற்ற வெற்றி பதிவுகளோடு ஒப்பிடும் போது, உங்களுக்கு இது ஒரு குசேலன்..
//

ஏன் ஏன்??

என் மே இந்த கொல வெறி

:(

said...

இந்த பதிவு நீங்கள் ஏனோ தானோ என்று எழுதியதாகவே தோன்றுகிறது..
//


எல்லோரையும்
திருப்தி படுத்த முடியாதே..


விடுங்க குசும்பா..:)

said...

காலில் விழுந்தா புண்ணியமா? அலகு பேட்ஜ் குத்திக்கிட்டா புண்ணியமா?

said...

நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்தியுள்ளது:
எறிவதை இழுத்தால் கொதிப்பதி நிற்கும்!

said...

hahah:-))

said...

என்னது??? கார்த்திக்கு 10 ஓட்டா? யார் அந்தப் 10 பேர்? கார்த்திக் அவர் ஓட்டையே யாருக்காவது போட்டுருவாரே !!

said...

நன்றி கார்த்திக்

நன்றி சோசப்பு

நன்றி நமிதா

நன்றி வெங்கடேஸ் சுப்ரமணியம்

நன்றி லோகு இதில் என்ன இருக்கு இந்த பின்னூட்டத்தை நீங்க, நீங்க உங்க கருத்தை சொல்லி இருக்கீங்க அதில் தப்பு ஏதும் இல்லை பிடித்த பொழுது பிடித்து இருக்கு என்று சொன்னீங்க இப்பொழுது பிடிக்கலை என்று சொல்லியிருக்கீங்க, ஆகையால் நான் தவறாக நினைக்கவில்லை அடுத்த பதிவில் மேலும் கவனம் செலுத்துகிறேன், நன்றி

நன்றி அனானி நண்பரே:)


நன்றி ராஜ நடராஜன்

நன்றி ttpin ஆனா ஒன்னும் எனக்கு விளங்கவில்லை!

said...

பாவம் வைகோ..

உன்கிட்டேயெல்லாம் மாட்டணும்னு அவர் தலையெழுத்து.!

said...

கார்த்திக் கமெண்ட்டு சூப்பரோ சூப்பரு..!

said...

ttpian said...

நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்தியுள்ளது:
எறிவதை இழுத்தால் கொதிப்பதி நிற்கும்!
//


உங்க ஆதங்கம் புரிகிறது..!
இருந்தாலும் இது ரெத்த(கமெடி) பூமி இங்க வந்து சீரியஸ் பண்ணிகிட்டு...

said...

கார்த்திக் கமெண்ட் சூப்பர் !

ஆனா இந்த எலெக்‌ஷன்ல எத்தனையோ தலைவர்கள் ஓவர் கான்பிடண்டாக நாங்க நிக்கிற தொகுதியில எல்லாம் ஜெயிப்போம் சொல்லிக்கிட்டிருக்கிறச்ச இவரு மட்டும்தான்,எங்க கட்சி எல்லா தொகுதியிலயும் நிக்கும்ன்னு சொன்ன தலைவர்!


:)

said...

எங்க கட்சி எல்லா தொகுதியிலயும் நிக்கும்ன்னு சொன்ன தலைவர்/


//:)

க்கலக்கல்

said...

நான் வேண்டும் என்றால் அம்மாகிட்ட சொல்லி ஒரு எம்.பி சீட் வாங்கிதரவா?
///


வைகோ வுக்கு
இந்த வாரம் ராசியான எண் 1

said...

கார்த்திக் கமெண்ட் சூப்பர்..

said...

:))

said...

கடைசி 'ஐ' மேட்டர் ஆஹா ரகம்.

said...

நன்றி டொன் லீ

நன்றி மகேஷ் பாவுங்க அவர்:)

நன்றி உ.த

நன்றி நமீதா

நன்றி ஆயில்யன்

நன்றி பாலகுமார்

நன்றி தமிழன் கறுப்பி

நன்றி பரிசல்

said...

//யாருக்காக இது யாருக்காக!

ha..ha. kalakkals..! :))

said...

Ha ha everything is nice :)