Tuesday, March 31, 2009

ஒபாமாவுக்கு ஆலோசனை சொல்லும் தலைவர்கள்--காமெடி

அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த படாத பாடுபடும் ஒபாமா வயதில் சின்னவர் என்பதாலும், இந்தியாவில் தான் அரசியலில் பழம் தின்னுகொட்டை போட்டவர்கள் நிறையே பேர் இருப்பதாலும் இந்திய தலைவர்களுக்கு போன் போடுகிறார். முதல் போன் மன்மோகனுக்கு டயல் செய்கிறார்.

ஒபாமா: ஹலோ மன்மோகன்! எப்படி இருக்கீங்க?

மன்மோகன்: நல்லா இருக்கேன்!

ஒபாமா: பை பாஸ் ஆபரேஷனில் இருந்து ரெக்கவரி ஆயாச்சா? உடம்பு பரவாயில்லையா இப்ப?

மன்மோகன்: பரவாயில்லை நல்லா இருக்கேன், நல்லவேளை அந்த சமயத்தில் பார்லிமெண்ட் கூட்டத்தொடர் முடிஞ்சுது அதான் சீக்கிரம் குணம் அடைந்துவிட்டேன்!


ஒபாமா: நல்லது, நான் எதுக்கு போன் செஞ்சேன் என்றால், அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஏதும் யோசனை கேட்கலாம் என்றுதான்!

மன்மோகன்: ஒன் மினிட்...ஒபாமா: ஹலோ ஹலோ!மன்மோகன்: சொல்லுங்க ஒபாமா என்ன மேட்டர் வேண்டும்? (திடீர் என்று பெண் குரல்)ஒபாமா: என்னது திடீர் என்று மிமிக்கிரி எல்லாம் செஞ்சு லேடீஸ் வாய்சில் பேசுறீங்க! ஆப்ரேசன் ஹார்டிலா இல்லை த்ரோட்டிலா?

சோனியா: நான் சோனியா பேசுறேன், உடல் நலத்தை சொல்வது வரைக்கும்தான் அவருக்கு பர்மிஷன்,அதுக்கு மேல ஏதும் பேசணும் என்றால் என்னிடம் பர்மிஷன் வாங்கவேண்டும் திடீர் என்று நீங்கள் போன் செய்ததால் என்னிடம் போனை கொடுத்துவிட்டு போய்விட்டார்.

ஒபாமா: மனசுக்குள் (வெளங்கினமாதிரிதான்!) சரி சோனியாஜி அப்புறம் பேசுறேன்.
********************
அடுத்த போன்! அத்வானி
ஒபாமா: ஹலோ அத்வானிஜி எப்படி இருக்கீங்க?
அத்வானி: மிக்க நலமாக இருக்கிறேன்!

ஒபாமா: ஜி அடுத்த பிரமராக வந்தால் எப்படி இந்திய பொருளாதாரத்தை சீரமைக்கப்போறீங்கன்னு சொன்னா கொஞ்சம் எனக்கும் உதவியா இருக்கும்!

அத்வானி: ஜீ நீங்க கையில் எப்பொழுதும் வைத்து இருக்கும் ஆஞ்சனேயர் இராமர் பக்தர், அதுபோல இராமர் பக்தரா ஆயி, அங்க இருக்கும் இரண்டு மசூதியை இடிச்சு அங்க இராமர் கோயில் கட்டி அங்க ஒரு உண்டி வெச்சாசெம கலெக்சன் கிடைக்கும் அப்புறம் என்னா பொருளாதாரம் பிச்சுக்கும்! சும்மா ஒரு ரத யாத்திரை ஆரம்பிப்போம் வாங்க!


ஒபாமா: அவ்வ்வ்வ்
********************
அடுத்த போன் கலைஞர்

ஒபாமா: ஹலோ கலைஞர் எப்படி இருக்கீங்க? முதுகு தசைப்பிடிப்பு எல்லாம் சரி ஆகிட்டா?


கலைஞர்: சரி ஆகி என்ன பயன், ஈழத்தமிழர் நலன் காக்க என்னால் ஏதும் செய்யமுடியவில்லையே என்ற வருத்தம் தான் என் நெஞ்சை கிழிக்கிறது! தேர்தல் வேலைகள் வந்துவிட்டதால் அதை கொஞ்சம் ஒத்திவைத்து இருக்கிறோம்!

ஒபாமா: (ஆஹா இவரு ரூட்ட மாத்துறாரு) நீங்க அமெரிக்க பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றுவது என்று சில யோசனை சொல்லணும்!

கலைஞர்: உங்களுக்கு இரண்டு பையனா ஒரு பையனா? இரு பையனாக இருந்தால் அமெரிக்காவை இரண்டாக பிரித்து ஒரு மகனை அதுக்கு அதிபர் ஆக்கிடுங்க, இன்னொரு பையனை இன்னொரு பகுதிக்கு அதிபர் ஆக்கிடுங்க. அங்க இருக்கும் கேபிள் டிவி, பத்திரிக்கை எல்லாத்தையும் குடும்பத்தில் ஒருவர் வீதம் ஆள் ஆளுக்கு ஒண்ணு ஒண்ணு பிரிச்சு கொடுத்துடுங்க! பேரப்பிள்ளைங்க இருந்தாஅவங்களை லியாண்டர் டி காப்ரியோவை வெச்சு willuன்னு ஒரு படம் எடுக்க சொல்லுங்க கேப்சன் kill everybodyனு கூட கொடுக்கலாம், இப்படி பல விசயம் இருக்கு பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த!

ஒபாமா: அய்யா நான் கேட்டது நாட்டை முன்னேற்ற, நீங்க சொல்வது வீட்டை முன்னேற்ற!

கலைஞர்: ஏ.... அமெரிக்கப்பதரே,அய்யகோ நாட்டையும் வீட்டையும் தனித்தனியா நினைக்கலாமா? தனி மனிதனின் முன்னேற்றத்தில் தான் நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது. உன்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாகி அமெரிக்கரை காப்பேன் என்று அல்லவா இருக்கவேண்டும்!

ஒபாமா: தமிழ் வாழ்க, தலைவர் வாழ்க! (அப்பீட்)
********************
அடுத்த போன் ஜெயலலிதா!

ஒபாமா: ஹலோ Ms.ஜெயலலிதா வணக்கம்!எப்படி இருக்கீங்க?

ஜெயலலிதா: ம்ம்!

ஒபாமா:ஹலோ Ms.ஜெயலலிதா நான் ஒபாமா பேசுறேன்!

ஜெயலலிதா: ம்ம்ம்ம்!

ஓபாமா: (காதில் விழவில்லை என்று நினைத்து) மேடம் நான் ஒபாமா, ஒபாமா!
ஜெயலலிதா: தெரியுது மேன், என்னா விசயம் சொல்லு, எனக்கு போன் போட்டு தில்லா அதுவும் ஒரு ஆம்பள என் பெயரை சொல்லும் பொழுதே தெரிஞ்சுது நீ உள்ளூர் ஆள் இல்லை என்று!

ஒபாமா: மேடம் பொருளாதாரத்தை முன்னேற்றுவது எப்படின்னு சொல்லித்தாங்க!

ஜெயலலிதா: ம்ம்ம் எவ்வளவோ வழி இருக்கு மேன், சுடுகாடு கொட்டகை, டான்சி நிலம், இப்படி எங்க ஊரில் பல இருக்கு அங்க அதுபோல் எல்லாத்தையும் வளைச்சுப்போடு உன் பேரில்! அதுபோல் திவாலான பேங்குக்கு என்று பணம் ஒதுக்கும் பொழுது இல்லாத பேங்குக்கு ஒரு அமவுண்ட் ஒதுக்கி நீ எடுத்துக்க!

ஒபாமா: மேடம் நான் கேட்டது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற!

ஜெயலலிதா: சாரி ராங் நம்பர்! (யார்கிட்ட வந்து என்ன கேள்வி கேட்கிறான் சின்னபுள்ள தனமா!
(அம்மாகிட்ட பேசும் பொழுது ஒபாமாகூட போல்டா இருக்கமாட்டேங்கிறார்)
********************
அடுத்த போன் விஜயகாந்த்

ஓபாமா: ஹாய் விஜயகாந்து நான் ஒபாமா பேசுறேன்!

விஜயகாந்த்: டேய் ஒபாமா உன்னை ஆள் ஆளுக்கு எங்க இருக்கன்னு தேடிக்கிட்டு இருக்கும் பொழுது என்ன தில் இருந்தா நீ போன் போட்டு என்னிடமே பேசுவ? நீ பேசிக்கிட்டே இரு நான் நீ இருக்கும் இடத்தை கண்டு பிடிச்சு அங்கயே வந்து உன்னை மீட் பண்ணுறேன், ட்ட்டூவின் டவரு (இங்கிலீஸ் வராது)இடிச்சப்பயே உன்னை புடிச்சு இருக்கனும். மிஸ் ஆகிட்ட நான் முதல்வர் ஆனதும் உன்னை புடிப்பதுதான் டா என் வேலை! மக்களிடம் காட்டத உன் வெறுப்பு தில் இருந்தா வந்து என் முன்னாடி நில்லுடா பருப்பு! மக்களோடு தெய்வத்தோடும் கூட்டணி வெச்சு உன்னை புடிக்கிறேன் டா! ஆங்ங்ங்

ஓபாமா: ஹலோ ஹலோ ஹலோ நான் ஒபாமா அமெரிக்க அதிபர்!

விஜயகாந்த்: டேய் அமெரிக்கா காரன் வேண்டும் என்றால் நீ செஞ்ச தப்ப மறந்து உனக்கு ஓட்டு போட்டு உன்னை அதிபர் ஆக்கி இருக்கலாம், நான் விடமாட்டேண்டா!நான் பச்சை டமிளன்!

ஓபாமா:டொக் (போனை வைத்துவிடுகிறார்)

(கண்கள் சிவக்க பல்லை நற நறவென்று கடித்தபடி இருக்கும் விஜயகாந்திடம் வரும் )மனைவி என்னங்க இப்படி கோவப்பட்டு உட்காந்து இருக்கீங்க!

விஜயகாந்த்: ஓபாமா இப்ப போன் போட்டு என்னிடம் பேசுறான்!

மனைவி: ஆஹா அமெரிக்கா வரை உங்க புகழ் பரவிடுச்சு போல நீங்க இல்லமா ஒருத்தரும் ஆட்சியபுடிக்க முடியாது என்பது அமெரிக்கா வரை தெரிஞ்சு இருக்கு, அடுத்த2022 ஒபாமா கூட கூட்டணி வைக்காமலேயே நாமா அமெரிக்க அதிபர் ஆகிடலாங்க!

விஜயகாந்த்:( மனசுக்குள் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி....)ஒரு தீவிரவாதி என்னிடம் போன் போட்டு தில்லா ஹலோ சொல்லிட்டானேன்னு நானே கடுப்பில் இருக்கேன் நீ வேற!!!

மனைவி: என்னது தீவிரவாதியா? யாருங்க அது?

விஜயகாந்த்: அவன் தான் ஒபாமா!

மனைவி: அய்யோ அய்யோ அவன் ஒசாமாங்க இவர் ஒபாமாங்க!! ரெண்டு பேரும் வேற வேற!

விஜயகாந்த்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

49 comments:

said...

மீ த பர்ஸ்டேய்ய்ய்!

said...

2ம் நானே!

said...

கலக்கல் கற்பனை!

அதுவும்

விஜய்காந்த் கூட டிஸ்கஸ்ன் சூப்பரேய்ய்ய்ய்ய்ய்!

said...

Me the 2nd :):)

said...

தமிழ்நாட்டுக்காரவுக காமெடி ஏ.ஒன் :)

said...

// ஆயில்யன் said...
கலக்கல் கற்பனை!

அதுவும்

விஜய்காந்த் கூட டிஸ்கஸ்ன் சூப்பரேய்ய்ய்ய்ய்ய்!//

Repeatuuuuuuuuuu... :)))))))))))

said...

சூப்பர்.

said...

ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹாஹஹஹஹஹாஹஹஹஹாஹஹஹஹாஹஹஹஹஹாஹஹஹாஆஆஆஆஆ


மிக ரசித்த ஒன்று.. ஒரு பையனா ரெண்டு பையனா?

தமிழ் மணமே நன்றி.. ஸ்டார் பதிவுகளில் ஒரு சூப்பர்ஸ்டார் பதிவு(அந்த சூன ஸ்டானா இல்லையப்பா)

said...

Weldone

said...

//
விஜயகாந்த்: டேய் ஒபாமா உன்னை ஆள் ஆளுக்கு எங்க இருக்கன்னு தேடிக்கிட்டு இருக்கும் பொழுது என்ன தில் இருந்தா நீ போன் போட்டு என்னிடமே பேசுவ?//

ஹ ஹா :-) அஹ்ஹ் ஆ

said...

இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்!

said...
This comment has been removed by the author.
said...

//சோனியா: நான் சோனியா பேசுறேன், உடல் நலத்தை சொல்வது வரைக்கும்தான் அவருக்கு பர்மிஷன்,அதுக்கு மேல ஏதும் பேசணும் என்றால் என்னிடம் பர்மிஷன் வாங்கவேண்டும்//

அப்படினா எல்லாத்துக்குமே அப்படி தானா?

said...

கலக்கல்...
நம்ம இனத்துக்கே உள்ள குசும்பு அய்யா உங்ககிட்டே

நல்லாயிருந்தது

said...

//கலைஞர்: ஏ.... அமெரிக்கப்பதரே,அய்யகோ நாட்டையும் வீட்டையும் தனித்தனியா நினைக்கலாமா?//

அதானே!
எப்படி அப்படி நினைக்கலாம்!
சீனியர் புஷ்சையும், ஜூனியர் புஷ்சையும் பார்த்து கூடவா புத்தி வரல

said...

விஜயகாந்து எனும் ஒப்பற்ற வருங்கால டமிழக முதல்வரை கலாய்த்ததற்காக வன்மையாக கண்டிக்கிறேன்..
இது மேலும் தொடர்ந்தால் ரெட் கார்டு மாதிரி தே.மு.தி.க. உறுப்பினர் கார்டு வழங்கப்படும்.
-ரிப்பிட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

கலக்கல் கற்பனை!

said...

\\ஜெயலலிதா: தெரியுது மேன், என்னா விசயம் சொல்லு, எனக்கு போன் போட்டு தில்லா அதுவும் ஒரு ஆம்பள என்பெயரைசொல்லும்பொழுதே தெரிஞ்சுது நீ உள்ளூர் ஆள் இல்லை என்று!\\

செம..செம..செம ரகளை..

விஜயகாந்து எனும் ஒப்பற்ற வருங்கால டமிழக முதல்வரை கலாய்த்ததற்காக வன்மையாக கண்டிக்கிறேன்..
இது மேலும் தொடர்ந்தால் ரெட் கார்டு மாதிரி தே.மு.தி.க. உறுப்பினர் கார்டு வழங்கப்படும்.

முதல போட்டது நாந்தான்...அதனாலதான் திரு.வெங்கடேச சுப்ரமனியம் ரிப்பீட்டு...

said...

//ட்ட்டூவின் டவரு (இங்கிலீஸ் வராது)இடிச்சப்பயே உன்னை புடிச்சு இருக்கனும்.//

//அமெரிக்கப்பதரே,அய்யகோ நாட்டையும் வீட்டையும் தனித்தனியா நினைக்கலாமா? தனி மனிதனின் முன்னேற்றத்தில் தான் நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது. உன்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாகி அமெரிக்கரை காப்பேன் என்று அல்லவா இருக்கவேண்டும்!//

//தெரியுது மேன், என்னா விசயம் சொல்லு, எனக்கு போன் போட்டு தில்லா அதுவும் ஒரு ஆம்பள என் பெயரை சொல்லும்பொழுதே தெரிஞ்சுது நீ உள்ளூர் ஆள் இல்லை என்று!//


சிரிச்சுக்கிட்டே இருக்கேன் குசும்பரே..!
முடியலை!

11 ப்ளேயரும் சச்சினா ஆன மாதிரி பின்றீங்க!

said...

கலைஞரும், கேப்டனும் டாப்

said...

மாப்பி,
இப்ப தான் நட்சத்திர வாரம் சூடு புடிக்குது. அடி தூள் கிளப்பு மாப்பு.

அப்றம் அந்த விசயகாந்த் உரையாடல் & அட அமெரிக்கப் பதரே ரெண்டும் மிக அருமை.

said...

சூப்பர்...

said...

யோசனைகள் எல்லாமே கலக்கல் !!!!

//ஏ.... அமெரிக்கப்பதரே,அய்யகோ நாட்டையும் வீட்டையும் தனித்தனியா நினைக்கலாமா? தனி மனிதனின் முன்னேற்றத்தில் தான் நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது. உன்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாகி அமெரிக்கரை காப்பேன் என்று அல்லவா இருக்கவேண்டும்!//

:)

ஆனால், விஜயகாந்திடம் இருந்து புள்ளிவிவரக் கணக்கு தரமால் ஏமாற்றியது படுமோசம் !!!!

said...

விஜயகாந்த் டிஸ்கசன் :)

Anonymous said...

விஜயகாந்த் காமெடி சூப்பர்.

மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது இங்க பொள்ளாச்சியிலதான் சூட்டிங்ல இருந்தாரு. இது பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டதுக்கு. எனக்கு ஏதும் கருத்து இல்லைன்னு சொன்ன பெருந்தலைவர் அவரு.

said...

:)
::)))))


:::::::))))))


எதுக்கும் பாத்து சூதனமா இருந்துக்க :)

said...

சோனியாவும், ஜெயலலிதாவும் தூள்..!

said...

மண்ணுமோகன் ஒபாமா கிட்டே' I love you. Indians love you' ன்னு சொன்னத சென்சார் செய்த குசும்பனுக்குக் கண்டனம்.

நல்ல கற்பனை, மற்றபடி.

said...

கலக்குறேய்யா.. :)))

said...

விஜயகாந்த் டிஸ்கஸன் சூப்பர்....
:))))

said...

குசும்பன் ரொம்ப சிரிக்க வச்சுட்டாரு அதனால,

ஒபாமா: ஹலோ விஜய டி.ஆர் எப்படி இருக்கீங்க? விராசாமி வெற்றிக்கு அடுத்து என்ன படம் கொடுக்கபோறீங்க?
விஜய டி.ஆர் :
ரயில்வே பட்ஜெட்க்கு லல்லுனா.
தமிழ் நாட்டுக்கு லட்சிய திமுக.

பூமில் இருக்கிற அண்ணன் சூரியனில் இருக்கிற பையனுக்கு தங்கச்சிய கல்யாணம் செஞ்சு வைக்கிறான். அவன் தங்கச்சியை கொடுமபடுத்த புதன் கிரகத்த துணைக்கு குத்திட்டு போய் முக்க மணி நேரம் பேசுறான், அந்த பையன் திருந்தி தங்கச்சிய சந்தோசமா வச்கிகிறான். இதுக்காக நாசா செட் ரெடி பண்ணிட்டேன்.

ஒபாமா : அப்ப இன்னும் கொஞ்ச நாளுல தமிழ் நாடே அதிரும்மு சொல்லுங்க. சரி, அமெரிக்க பொருளாதார விழ்ச்சிய சரிபண்ண எதாவது ஐடியா கொடுங்களேன்.

விஜய டி.ஆர் :
சிம்முவ வச்சு அலை படம் மாதிரி டைட்டானிக் டைரக்டரா வச்சு படம் பண்ணு,
அப்புறம் லட்சிய திமுகவுக்கு அமெரிக்க செயலாளரா பில் கேட்சை புக் பண்ணு,

சிம்புன சிங்கம்,
ராஜேந்திரன்ன ரம்பம்.

ஒபாமா: சூப்பர் ஐடியா சார்! இதவிட்டா அமெரிக்க மக்களை முக்காடு பேட வைக்க வழியேயில்லை.

said...

சிரித்து சிரித்து என்னை வலையில் இட்டாய்:)

தமிழுக்கு அரசியல் சிரிப்பும் அழகு!

said...

:-)))....

செம்ம காமெடி தலைவரே...

சூப்பரு!!!

said...

:-)

said...

குசும்பரின் முத்திரைப்பதிவு.. (எல்லாப் பதிவுகளையும்போலவே).

வடகரை வேலன் said...
விஜயகாந்த் காமெடி சூப்பர்.
மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது இங்க பொள்ளாச்சியிலதான் சூட்டிங்ல இருந்தாரு. இது பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டதுக்கு. எனக்கு ஏதும் கருத்து இல்லைன்னு சொன்ன பெருந்தலைவர் அவரு.//

இது எப்போ? சொல்லவேயில்ல..

said...

ultimate..super..best one..

said...

சூப்பரோ சூப்பரப்பு !

கலக்குறீங்க!!!!

said...

குசும்பன் செம காமெடி ஹா ஹா ஹா

அதுவும் விஜயகாந்த் ஒசாமா பற்றி சொன்னதும் என்னால சிரிப்பை அடக்க முடியல ..இன்னும் அதை நினைத்து சிரிக்கிறேன் ஹா ஹா ஹா

said...

விஜயகாந்த் மேட்டர் தூளோ தூள்.

(எங்க அண்ணன் டிபிசிடி திரும்ப என்னைய திட்டப் போறாரு)

:)

said...

குசும்பனுக்கு இந்த பதிவு ஆலோசனை வழங்கியது யாரு... குசும்பியா?

அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு ஏதோ ஆலோசனை தேவையாம்... நீங்க ரெடியா?

said...

முரளி சொன்னது தான். அட்டகாசம்.

அனுஜன்யா

said...

அது என்னங்க மீ ஃப்ர்ஸ்ட்....மீ ஃப்ர்ஸ்ட்.... குசும்பன் இங்க என்ன பிச்சையா பேர்டுகிறார்.. நாந்தா ஃபஸ்ட்....நாந்தா ஃபஸ்ட் நு...
விஷயத்துக்கு வாங்க....

said...

விஜயகாந்த் பேச்சின் கடைசியில்

”கார் ஒச்சிந்தா?” என்று போட்டிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.

கலைஞர் - செம தூக்கல்.

said...

//மனைவி: என்னது தீவிரவாதியா? யாருங்க அது?

விஜயகாந்த்: அவன் தான் ஒபாமா!

மனைவி: அய்யோ அய்யோ அவன் ஒசாமாங்க இவர் ஒபாமாங்க!! ரெண்டு பேரும் வேற வேற!

விஜயகாந்த்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஹாஹா... அண்ணா, உங்களால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும்! சிரிப்பு தாங்கல!

said...

சூப்பர் தலைவா..நல்லவேளை ஒபாமா என்கிட்ட பேசலை..பேசியிருந்தா உங்களை நாடு கடத்தியிருப்பேன்...அமெரிக்காவுக்கு :)

said...

நன்றி ஆயில்யன்

நன்றி ஸ்ரீமதி

நன்றி சென்ஷி

நன்றி குடுகுடுப்பை

நன்றி நர்சிம்

நன்றி செல்வா

நன்றி சுரேஷ்

நன்றி சிபி

நன்றி வால்

நன்றி அபு அஃப்ஸர்

நன்றி வெங்கடேஷ் சுப்ரமணியன்

நன்றி ச்சின்னப் பையன்

நன்றி டக்ளஸ்

நன்றி சுரேகா

நன்றி முரளிகண்ணன்

நன்றி சோசப்பு

நன்றி விக்கி

நன்றி பதி

நன்றி வித்யா

நன்றி வடகரை வேலன் -வி.காந்த் அப்படியா சொன்னார்?

நன்றி மின்னுது மின்னல்

நன்றி உண்மை தமிழன் வயசுல பெரியவர் நீங்க இப்படி சொல்லலாம்?

நன்றி தஞ்சாவூரான்

நன்றி தமிழ்பிரியன்

நன்றி ஜெகதீசன்

நன்றி விஷ்ணு

நன்றி ராஜ நடராஜன்

நன்றி விஜய் ஆனந்த்

நன்றி பரிசல்

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி பாலகுமார்

நன்றி இளைய கரிகாலன்

நன்றி கிரி

நன்றி அப்துல்லா! அவரு கூட தோஸ்த் ஆகிடுங்க:)

நன்றி அரசூரான்

நன்றி அனுஜன்யா

நன்றி ponnakk முதல் பின்னூட்டம் போடுவது என்பது
ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாடு அதுக்கு ஏன் கோவப்படனும்.

நன்றி வடுவூர் குமார்

நன்றி தமிழ்மங்கை

நன்றி ரிஷான்

said...

கலக்கல்!

said...

விஜய்காந்த் டிஸ்கஸ்ன் சூப்பரேய்!

said...

//கலைஞர்: ஏ.... அமெரிக்கப்பதரே,அய்யகோ நாட்டையும் வீட்டையும் தனித்தனியா நினைக்கலாமா?//

:))))