Monday, February 2, 2009

தமிழ் ஈழத்தை தமிழகத்தலைவர்கள் ஆதரிக்கவேண்டுமா? +கார்ட்டூன்

ஈழ சொந்தங்களே உங்களுக்கு ஆதரவாகவும் தமிழ் ஈழத்தை ஆதரித்தும் தமிழகத்தில் ஆட்சியில் அல்லது முக்கிய பொருப்புகளில் இருக்கும் தலைவர்கள் உடனடியாக குரல் கொடுப்பது மட்டும் இன்றி செயலிலும் இறங்க வேண்டுமா இதோ கீழே இருப்பது போல் அறிவிப்பை தலைவர் பிரபாகரனை அறிவிக்க சொல்லுங்கள்.

தமிழ் ஈழம் மலர முதலில் குரல் கொடுத்து ஆதரவு திரட்டும் முதல் 10 தலைவர்களுக்கு கீழ்கண்ட சலுகைகள் வழங்கப்படும் என்று சொல்லுங்கள்.

1) தமிழ் ஈழத்தில் முதல்வர் பதவி ஒன்று ஏற்படுத்தப்பட்டு அது உங்களுக்கே வழங்கப்படும். இதில் இருக்கும் சிறப்பு அம்சம் அவருக்குபின் அந்த பதவி எந்த சிக்கலும் இன்றி மகன்களுக்கோ அல்லது மகள்களுக்கோ வழங்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருப்பின் இரு முதல்வர்கள் பதவி வழங்கப்படும்.

2) தமிழ் ஈழத்தில் அமையவிருக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் எள்ளு பேரன்களுக்கோ அல்லது கொள்ளு பேரன்களுக்கோ வழங்கப்படும்.

3) வானொலி சேவை, DTH சேவை அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும்.

4) தினசரி செய்திதாள்கள் அச்சகங்கள் தொடங்க அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.

5) கப்பல் போக்குவரத்து துறை தங்கள் சகாக்களுக்கே வழங்கப்படும்.

6) கண்டியில் இருந்து கிண்டிக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு டெண்டர் விடும் பொருப்பு உங்களுக்கே வழங்கப்படும்

7) அனைவருக்கும் இலவச டீவி வழங்கப்படும். (யாருப்பா அது சூரியனுக்கே டார்ச் அடிக்கிறது என்று சொல்வது)

இவை அனைத்தையும் அறிவித்தால் ஒரு கட்சியினரின் அமோக ஆதரவு உங்களுக்கு உடனடியாக கிடைக்கும்.

1) முல்லைத்தீவில் திராட்சை தோட்டத்தோடு கூடிய 10000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த எஸ்டேட் பங்களாவும் அதில் அமர்ந்து தினம் மக்கள் பணிகளை செய்ய ஏதுவாக 2 ஹோம் தியேட்டர் வசதியோடு பங்களா ஒன்று வழங்கப்படும்.

இப்படி சொன்னால் அடுத்தகட்சியின் ஆதரவு உங்களுக்கு நிச்சயம்.

1) சுகாதார துறை அமைச்சர் பதவியும், இரயில்வே துறை அமைச்சர் பதவியும் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும்.

2) சிங்களர்களால் வெட்டப்பட்ட மரங்கள் நட மரக்கன்றுகள் வாங்கும் டெண்டர் உங்களுக்கே வழங்கப்படும்.

இப்படி சொன்னால் அடுத்த கட்சியின் ஆதரவும் உங்களுக்கு ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது அடுத்த தேர்தலில் ங்கோத்தாபய ராஜபக்சேவுடன் கூட்டணி வைக்கும் அபாயம் இருக்கிறது.

1) தமிழ் ஈழத்தில் அனைத்து கல்யாணமண்டபங்களும் கட்டிக்கொள்ள தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். (சாலை விரிவாக்கத்தின் பொழுது கூட இடிக்கபடமாட்டாது.)

2) தமிழ் ஈழத்தில் தயாராகும் படங்கள் அனைத்திலும் தாங்கள் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

3)” பார்”கவுன்சிலும் அமைத்து தரப்படும்.
இப்படி சொன்னால் அடுத்தகட்சியின் ஆதரவும் தங்களுக்கு நிச்சயம்.

டிஸ்கி: என்னடா 10 தலைவர்களுக்கு சலுகை என்று 4 கட்சிகளை மட்டும் வளைக்க ஐடியா கொடுத்து இருக்கேன் என்று நினைக்கிறீங்களா, மீதி இருக்கும் இடத்துக்கு எல்லாம் மச்சான் மாமன் அவர்களே நிரப்பிக்கொள்வார்கள்.
********************************************************************

தயாநிதி: நீங்க ஏன் ஆற்காடார் சோகமாக இருக்கீங்க?
ஆற்காடார்: என் தொகுதியில் எனக்காக வேண்டிக்கிட்டு தீ மிதிக்க போறாங்களாம்?
தயாநிதி: அட சந்தோசமான விசயம்தானே மக்கள் உங்க மேல ரொம்ப பாசமாக இருக்காங்க.
ஆற்காடார்: அட நீங்க வேற அவுங்க தீ மிதிக்கிறது , திருமங்கலம் போல இடைத்தேர்தல் வரனும் என்று வேண்டிக்கிட்டு.

45 comments:

said...

10 நிமிசத்துல அடிச்சு முதல் பக்கத்தில் இருந்து தூக்கிடுவாங்க போல இருக்கே:((((

said...

மாமு உங்களுக்கே இந்த நிலமையா? :(

Anonymous said...

solla mudiyathu ...ipathaan pothu kulu koodi ...annan thambi endru dialogue pesi irukar ...neenga eluthanathu therincha .....ithaiyum pesiirupar...

said...

:)

Anonymous said...

கடைசி வரை நம்மை ஏமாற்ற ....பொது குழு ,தீர்மானம் ...இன்னும் என்ன செய்யமுடியுமோ எல்லாம் செய்வார்.....கில்லாடி

said...

நான் கூட சீரியஸா இருக்குமோன்னு நினைச்சு ஓடியாந்தேன். இதல்லாம் படிச்சாக்கூட அவர்களுக்கு உரைக்காது. அப்புறம் கருணாநிதி கார்ட்டூன். கோபமெல்லாம் நல்லா தெரியுது:)

said...

சொரண கெட்ட ஜென்மங்களுக்கு புரிஞ்சா சரி

said...

நம்ம பொழப்பு இப்படிக் காமெடி ஆகி விட்டதே :-( …

said...

புது பதிவர்கள் போட்டு தாக்குறாங்க!

ஆனாலும் நீங்கெல்லாம் தமிழ் பதிவுகளின் ஐக்கான்கள் அதனால் ரொம்ப நேரம் அடிச்சி ஆடுவிங்க

சூப்பர் போஸ்ட்

said...

இவங்க எப்பவுமே இப்படி தான் பாஸ்... விடுங்க...

Anonymous said...

துபாய்ல இருக்க தைரியமா?

ஏர்போர்ட்டுல சொல்லி வச்சிருக்கோம். எப்ப வந்தாலும் ஆட்டோவுல தூக்கச் சொல்லீட்டோம். உங்க பாஸ்போர்ட்டையும் முடக்க ஏற்பாடு பண்ணியாச்சு.

said...

வேடிக்கையான வேதனையின் உண்மை..

said...

நகைச்சுவையின் ஊடே உங்கள் ஆதங்கத்தை புரிய வைத்து விட்டீர்கள்..

Anonymous said...

//நாமளே தீ மிதிச்சாலும் நம்ப மாட்டானுங்க//

அப்படில்லாம் இல்ல. உடன் பிறப்புகள் எல்லாம் காங்கிரசுகாரனுங்களை விட
மானங்கெட்டவனுங்களாகி பலகாலம் ஆச்சு. அம்மா கட்சில இருக்குறவனுங்களாவது
அடி நக்கி பொழைக்குறதுக்குன்னே பொறப்பெடுத்தவனுங்க.இவனுங்க சுயமரியாதை மண்ணு
தெருப்புழ்தின்னு பேசிப் பேசியே வீணாப் போனவனுங்க. அதனால், இன்னைக்கு அவரு மத்திய
மந்திரி பதவி விலகல்ன்னு பெரிய தியாகம் செய்வாரு. உடன் பிறப்பு எல்லாம் அந்த தியாகத்தைக்
கொண்டாட் அம்மணமா ஆடும். வெளங்குற கூட்டமா இது?

said...

அரசியல் தலைவர்கள் பதில்கள் ..


// 1) தமிழ் ஈழத்தில் முதல்வர் பதவி ஒன்று ஏற்படுத்தப்பட்டு அது உங்களுக்கே வழங்கப்படும். இதில் இருக்கும் சிறப்பு அம்சம் அவருக்குபின் அந்த பதவி எந்த சிக்கலும் இன்றி மகன்களுக்கோ அல்லது மகள்களுக்கோ வழங்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருப்பின் இரு முதல்வர்கள் பதவி வழங்கப்படும்.

2) தமிழ் ஈழத்தில் அமையவிருக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் எள்ளு பேரன்களுக்கோ அல்லது கொள்ளு பேரன்களுக்கோ வழங்கப்படும். //


இத நானு நெம்ப கண்டிக்கிறேனுங்கோ , ஏன்னு கேட்டீங்கனா இது பூராவுமே தி.மு.க வுக்கு சாதகமான ஒருதலைபச்சமான கருத்துங்கோ.....

// 3) வானொலி சேவை, DTH சேவை அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும். //

ஆமாங்கோ ... அதுல எப்பவுமே அஜால்.. குஜால்.. பாட்டுதானுங்கோ.......

//4) தினசரி செய்திதாள்கள் அச்சகங்கள் தொடங்க அனுமதி உங்களுக்கு வழங்கப்படும். //

ஆமாங்கோ .. அப்பதானுங்கோ அடிக்கடி கருத்து கணிப்பு போட்டு ஆபீஸ கொளுத்த முடியுமுங்கோ .....


// 5) கப்பல் போக்குவரத்து துறை தங்கள் சகாக்களுக்கே வழங்கப்படும். //

ஏதுங் சாமியோவ் ... மீனு புடிக்குற கப்பலுங்களா .... ????!!??? கொஞ்சோ வெளக்கமா சொல்லிபோடுங் ... இல்லீனா நெம்ப சிரமங்கோ.......

//6) கண்டியில் இருந்து கிண்டிக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு டெண்டர் விடும் பொருப்பு உங்களுக்கே வழங்கப்படும் //

ஆமாங்கோவ் .. ஒலகத்துலையே நெம்பர் ஒன் கம்பனி " மேடாஸ் " க்கு குடுத்தா... வெரசா முடுச்சு குடுத்துருவாங்கோ ....

// 7) அனைவருக்கும் இலவச டீவி வழங்கப்படும். (யாருப்பா அது சூரியனுக்கே டார்ச் அடிக்கிறது என்று சொல்வது) //

எனுங் .. நானில்லீங்கோ ...

தேம்பா.. யாருப்பா சொன்னீங்கோ ??...??

மருவாதியா சொல்லிபோடுங்கோ .. இல்லீனா மசானியம்மங்கோயிள்ள மந்திரிச்சு வெச்சுபோடுவன் பாத்துக்கோங் .......

// இவை அனைத்தையும் அறிவித்தால் ஒரு கட்சியினரின் அமோக ஆதரவு உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். //


நெம்ப சந்தோசமுங்கோ...


// 1) முல்லைத்தீவில் திராட்சை தோட்டத்தோடு கூடிய 10000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த எஸ்டேட் பங்களாவும் அதில் அமர்ந்து தினம் மக்கள் பணிகளை செய்ய ஏதுவாக 2 ஹோம் தியேட்டர் வசதியோடு பங்களா ஒன்று வழங்கப்படும். //

ஏனுங் .. அப்புடியே பக்கத்துல அப்பப்ப பரிகாரம் பண்ணுறதுக்கு கோய.. கொளம் .. ஏதாவது வெச்சு குடுங்கோ .. நெம்ப சவுரியமா இருக்கும் .


// இப்படி சொன்னால் அடுத்தகட்சியின் ஆதரவு உங்களுக்கு நிச்சயம். //

ஆமாங்கோ .. ஆமாங்கோ...

// 1) சுகாதார துறை அமைச்சர் பதவியும், இரயில்வே துறை அமைச்சர் பதவியும் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும். //

ஏனுங் சாமி .. நீங்க வேற ... பொளப்புல மண் அள்ளி போட்டுபுடுவிங்கலாடிருக்குதே ....

மருத்துவதுறைன்னு புதுசா ஒன்னு ஆரபிச்சு .. அதுலையும் எங்காளுங்க தான் மந்திரி ....

எப்புடி ..??????

// 2) சிங்களர்களால் வெட்டப்பட்ட மரங்கள் நட மரக்கன்றுகள் வாங்கும் டெண்டர் உங்களுக்கே வழங்கப்படும். //

ஆமாமுங்கோ .. எல்லாமே மூலிகை மரமுங்கோ ..

// இப்படி சொன்னால் அடுத்த கட்சியின் ஆதரவும் உங்களுக்கு ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது அடுத்த தேர்தலில் ங்கோத்தாபய ராஜபக்சேவுடன் கூட்டணி வைக்கும் அபாயம் இருக்கிறது. //


ஆமாங்கோ .. ஆமாங்கோ...


//// 1) தமிழ் ஈழத்தில் அனைத்து கல்யாணமண்டபங்களும் கட்டிக்கொள்ள தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். (சாலை விரிவாக்கத்தின் பொழுது கூட இடிக்கபடமாட்டாது.) //


ஆமாங்கோ .. ஆமாங்கோ .. அந்த எடத்துல மட்டும் ரோடு அன்டர்வேயில போகுமுங்கோ .....

// 2) தமிழ் ஈழத்தில் தயாராகும் படங்கள் அனைத்திலும் தாங்கள் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வழங்கப்படும். //

நெம்ப சந்தோசமுங்கோ .. கூட ஒரு அம்சமான பிகர போட்டுபுட்டீங்கன்ன நெம்ப சவுரியமா இருக்குமுங்கோ ....

// 3)” பார்”கவுன்சிலும் அமைத்து தரப்படும்.
இப்படி சொன்னால் அடுத்தகட்சியின் ஆதரவும் தங்களுக்கு நிச்சயம். //


ஆமாங்கோ .. ஆமாங்கோ...


// டிஸ்கி: என்னடா 10 தலைவர்களுக்கு சலுகை என்று 4 கட்சிகளை மட்டும் வளைக்க ஐடியா கொடுத்து இருக்கேன் என்று நினைக்கிறீங்களா, மீதி இருக்கும் இடத்துக்கு எல்லாம் மச்சான் மாமன் அவர்களே நிரப்பிக்கொள்வார்கள். //


நெம்ப சந்தோசமுங் சாமியோவ் ........

தேனுங் சாமி .. அம்மா நல்லா இருக்காங்களா ?

said...

உங்கள் கோவத்தை உங்கள் பாணியிலேயே வெளிப்படுத்திய விதம் மிக நன்று. அதுவும் அந்த ங்கோத்தாபய ராஜபக்‌ஷே அக்மார்க் குசும்பு!

said...

குசும்பு.. பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவே இல்லை..கர்ணனுக்கு கவசகுண்டலம் மாதிரி உங்களுக்கு இந்த நக்கலா?
பிச்சு உதறிட்டீங்க..

அவங்க அவங்க வாசிச்சா தீக்குளிச்சு இறந்துருவாங்க.. (ரோஷம்,மானம் இப்படி ஏதாவது இருந்தா..)

ஆனா நீங்க சொல்றதைப் பார்த்தா அந்த முதலாவது கட்சியின் ஆட்சியில் நீங்க ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கிறதா தெரியுதே.. ;)

ஆற்காட்டு வீராசாமியை சாதா வீராசாமி ஆக்கிட்டீங்களே.. ;)


உறைக்கும் உண்மைகளை குத்தலாக சொன்ன உங்களுக்கு நன்றிகள்..

said...

:-))...:-(((
smile panratha feel panrathanne theriyaleenga..

said...

//வடகரை வேலன் said...

துபாய்ல இருக்க தைரியமா?

ஏர்போர்ட்டுல சொல்லி வச்சிருக்கோம். எப்ப வந்தாலும் ஆட்டோவுல தூக்கச் சொல்லீட்டோம். உங்க பாஸ்போர்ட்டையும் முடக்க ஏற்பாடு பண்ணியாச்சு.//

இனி இங்கிருந்து சென்னைக்கு செல்லும் எங்கள் தலைவர் குசும்பருக்கு "A to Z" பிரிவு பாதுகாப்போடு அனுப்பி வைக்க படுவார் என குசும்பர் நற்பணி மன்றத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மீறி தலைவர் வரும் போது கருப்பு கொடி மற்றும் உண்ணாவிரதம் இருப்பவர்களை கண்டதும் சுடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

said...

Entire tasmak supply will be offered to those party which supports....
Thuklak 1000 copies free
Dinamalar 1000 free
The Hindu 10000 copies free+
I MEGA TOILET FREE

said...

:-)))))))))))))))
:-(((((((((((((((

said...

;)

Anonymous said...

Please sign petition to Obama to stop war...

in www.tamilsforobama.com

Please participate in a poll too

in www.citynews.ca/polls.aspx?pollid=4786

said...

Please sign petition to Obama to stop war...

in www.tamilsforobama.com

Please participate in a poll too

in www.citynews.ca/polls.aspx?pollid=4786

said...

நக்கல், நையண்டியுடன் பதிபோட்டிருப்பது சிறப்பு,படித்துவிட்டு சும்மா போக எனோ குற்றஉணர்ச்சியாக உள்ளது ஆதலால் என பதிப்பை இங்கு விட்டு செல்கிறேன்
ஈழதமிழன் - தமிழக அரசியால்வாதியை பார்த்து என்ன வச்சி அரசியல் கிரசியல்(காமெடி கிமடி) பண்ணலையே

said...

:-))

said...

:-)))

Anonymous said...

:)

said...

இப்படி மானம் கெட்டு தமிழக தலைவர்களுக்கு சலுகைகள் அறிவித்து தனி ஈழம் வாங்குவதைவிட, புலிகளின் வீரமரணத்தை வரவேற்கிறேன். ஈழத்திலாவது தமிழர்கள் சுரணையோடு இருக்கட்டும் ...

Anonymous said...

Good Post..
Its very powerful even though it is a comedy.

sorry for my english comments in a tamil page.

said...

போட்டுத்தாக்குங்க அண்ணே..

said...

//Guess Me said...
Good Post..
Its very powerful even though it is a comedy.//

உண்மை... நேரடியான சாடலை விட இந்த நையாண்டி வலிமையாக உறைக்க வைக்கிறது.( என்ன சொன்னாலும் உறைக்காதென்றபோதிலும்)

said...

Not only Super Kusumpu! It is True as well. Ashamed of those Tamil Leaders(So called leaders).

said...

தம்பீ...

சூப்பரு கண்ணு..

அந்த மொத கமெண்ட்டு சூப்பரோ சூப்பர்..

இது மாதிரி வாரத்துக்கு ஒரு தபா போட்டுத் தாக்கு..

கடைசியா குசும்பனின் குசும்பல்கள்ன்னு ஒரு புத்தகம் வரணும்..

said...

// கண்டியில் இருந்து கிண்டிக்கு மேம்பாலம் //
super!

said...

:-))

said...

/
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது அடுத்த தேர்தலில் ங்கோத்தாபய ராஜபக்சேவுடன் கூட்டணி வைக்கும் அபாயம் இருக்கிறது
/

haa haa
ROTFL
:)

said...

நன்றி நிலா
********************
நன்றி ஜெயசந்திரன்
************************
நன்றி ஜெகதீசன்
**********************
நன்றி வித்யா
************************
நன்றி அன்பு, எங்க புரியபோகுது?:((
**************************
நன்றி ஸ்ரீதரன்
************************
நன்றி வால், ஐகானா அவ்வ்வ் ஒரு லேபிள் கூட கிடையாதுங்க!
**********************************
நன்றி புலி
*******************************
நன்றி வேலன் அண்ணாச்சி,இந்த முறை அப்துல்லா கார் அனுப்பினார் சொல்லி இருந்தா
அவரே கொண்டு வந்து விட்டு இருக்கபோறார்:))
********************************
நன்றி அதிஷா
*******************************
நன்றி கார்க்கி
********************************
நன்றி அண்ணாச்சி, எப்ப நீங்க தி.மு.க காங்கிரசை விட மானங்கெட்டவனுங்க என்று சொன்னீங்களே
இனி தி.மு.க சகவாசமே வேண்டாம்!
*********************************
நன்றி மேடி, வழக்கம் போல் உங்க கமெண்ட்!
******************************
நன்றி பரிசல், ராஜபக்‌ஷே என்ற பேரையும் பிரிக்கலாமான்னு பார்த்தேன் சரி நல்லா இருக்காதுன்னு விட்டுவிட்டேன்!
நன்றி!
******************************
லோசன் அண்ணாச்சி அடிக்க கல்லுதான் கிடைக்கவில்லை என்பார்கள், நீங்க வார்த்தை கிடைக்கவே இல்லை என்று சொல்றீங்க!
********************************

நன்றி இயற்கை!
********************************
நன்றி ஆதவா, இப்படி உசுப்பேத்திவிட்டு ரணகளம்மாக்கிவிட்டு விடுங்க:)))
**********************************
நன்றி ttpian
*********************************
நன்றி ச்சின்னப் பையன்
********************************
நன்றி கானா
********************************
நன்றி அனானி,இராஜன் முன்பே போட்டாச்சு.
*******************************
நன்றி தாமிரபரணி
*******************************
நன்றி கிரி
*********************************
நன்றி டொன் லீ
**********************************
நன்றி கவின்
***********************************
நன்றி தஞ்சாவூரான்
***********************************
நன்றி கெஸ்மீ
**********************************
நன்றி தமிழன் கறுப்பி
*****************************
நன்றி நிலா
*****************************
நன்றி ஜோதிபாரதி
****************************
நன்றி உண்மைத் தமிழன் அண்ணாச்சி புத்தகமா
பிட்டு நோட்டிஸ் கூட அடிக்கும் அளவுக்கு வரவில்லை!
******************************
நன்றி சுந்தர்
****************************

said...

அனேகமாக D.M.K தன்னை காங்கிர‌சில் உடன் கட்டை ஏற்றி விடும்

said...

புது விளையாட்டு!
தொப்புலிள் பம்பரம் விடுவது:
தேவையான பொருட்கள்
அரை /அல்லது முக்கால் கிழம்
பழய பம்பரம்
தொப்புல்(அ)சுகன்யா
பழய அரை ஙான் கவுறு
னாட்டு/வெளினாட்டு சரக்கு

said...

புது விளையாட்டு!
தொப்புலிள் பம்பரம் விடுவது:
தேவையான பொருட்கள்
அரை /அல்லது முக்கால் கிழம்
பழய பம்பரம்
தொப்புல்(அ)சுகன்யா
பழய அரை ஙான் கவுறு
னாட்டு/வெளினாட்டு சரக்கு

said...

புது விளையாட்டு!
தொப்புலிள் பம்பரம் விடுவது:
தேவையான பொருட்கள்
அரை /அல்லது முக்கால் கிழம்
பழய பம்பரம்
தொப்புல்(அ)சுகன்யா
பழய அரை ஙான் கவுறு
னாட்டு/வெளினாட்டு சரக்கு

said...

கான்கிரசுக்கு உயிரினும் மேலான மயிரைத் தருவேன்

said...

தம்பி!
ஈழம் அமய நான் செய்த வேலைகல்...
எனக்கு அன்கு முதல்வர் பதவி தருவாயா?
ஓடி வந்து ஊழியம் செய்வேன்

said...

நாம் தமிழர்கள்!
எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!
சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!