Sunday, February 1, 2009

கலைஞர் கார்ட்டூன் + டரியள் டக்ளஸ் 1-2-09

செய்தி: ஒரு வார சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வீடு திரும்பினார் பிரதமர்.
டரியள் டக்ளஸ்: பிரதமராகதான் நீங்க தேறவில்லை, அட்லீஸ்ட் உடல் நலமாவது தேறினீங்களே!


ஜெ.ஜெ: சிறுதாவூர், கொடநாடு போனாலும் கட்சிப்பணிகளையே கவனிக்கிறேன்.
டரியள் டக்ளஸ்: அடி ஆத்தி ?!!! இது என்ன புதுக்கதையால்ல இருக்கு!

ஜெ.ஜெ: கடந்த 21 வருடகாலமாக நாட்டு நலன், மக்கள் நலன், கட்சிப் பணி ஆகியவற்றில் முழுக்கவனம் செலுத்தி ஒரு பற்றற்ற சன்னியாசி போல் வாழ்ந்து வருகிறேன்.
டரியள் டக்ளஸ்: இந்த விசயம் நிஜ சன்னியாசிங்களுக்கு தெரியுமா?

இலங்கை அமைச்சர் லட்சுமண் அபயவர்த்தன : தமிழகம் இந்திய அரசுக்கு என்ன அழுத்தம் கொடுத்தாலும் இலங்கை மீதான நிலைப்பாட்டில் இந்திய அரசில் மாற்றம் எதுவும் இல்லை. இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகே உள்ளது.
டரியள் டக்ளஸ்:இப்படி ஏதாவது உண்மைய சொல்லி பிரணாப் முகர்ஜிய மாட்டிவிடுவதே உங்களுக்கு வேலையா போச்சு!

20 comments:

said...

மீ த ஃபர்ஸ்ட்:)

said...

முதல் மற்றும் கடைசி கமெண்ட் நச்.
அப்புறம் அம்மா எப்படி இருக்காங்க??

said...

other images are not displaying

said...

நன்றி வித்யா, அம்மா உடல் நலம் தேறி ஒருவாரத்துக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்தாச்சு, நேற்று மாலை திரும்ப துபாயும் வந்துவிட்டேன்.

***************************
ஒரே ஒரு இமேஜ்தான் தள போட்டு இருக்கேன், அதுவும் தெரியலையா?

Anonymous said...

இந்த பவுடர் பாண்டி எப்படா வந்து தாத்தா பக்கத்தில ஒட்டிக்கிட்டான்.

said...

:-):-)

said...

வாங்க...வெல்கம் பேக் டூ சார்ஜா.

ஒரே ஒரு கமெண்ட் தானா? :-(

said...

இந்த மாதிரி கமெண்ட் போட்டது எல்லாம் அய்யாவுக்கும் அம்மாவுக்கும் தெரியுமா?

said...

கம்மெண்ட்ஸ் நல்லா இருக்கு

Anonymous said...

அட போங்கப்பா..

நடுநிலமை..??

said...

:-))))

Anonymous said...

[Photo]செய்தி super...

said...

// செய்தி: ஒரு வார சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வீடு திரும்பினார் பிரதமர்.
டரியள் டக்ளஸ்: பிரதமராகதான் நீங்க தேறவில்லை, அட்லீஸ்ட் உடல் நலமாவது தேறினீங்களே! //

நீங்க இப்படியெல்லாம் குசும்புதம் பன்னுவீங்கனுதான் .. அவுரு காத ரெண்டையும் பொத்துன மாதிரி முண்டாசு கட்டிகிட்டாரு.........//ஜெ.ஜெ: சிறுதாவூர், கொடநாடு போனாலும் கட்சிப்பணிகளையே கவனிக்கிறேன்.
டரியள் டக்ளஸ்: அடி ஆத்தி ?!!! இது என்ன புதுக்கதையால்ல இருக்கு! //


அப்ப மத்த ஊருகளுக்கு போனா....????!!??????


// கடந்த 21 வருடகாலமாக நாட்டு நலன் //


ஏனுங்கோ.. " நாடு " ன்னு சொன்னது இந்திய நாடா???? ... இல்ல தமிழ் நாடா.....????//ஜெ.ஜெ: கடந்த 21 வருடகாலமாக நாட்டு நலன், மக்கள் நலன், கட்சிப் பணி ஆகியவற்றில் முழுக்கவனம் செலுத்தி ஒரு பற்றற்ற சன்னியாசி போல் வாழ்ந்து வருகிறேன்.
டரியள் டக்ளஸ்: இந்த விசயம் நிஜ சன்னியாசிங்களுக்கு தெரியுமா? //

ஓஒ... அதுனாலதான் நம்ம ஊரு செல்வச் செழிப்பா இருக்குதா.........????!!????


// இலங்கை அமைச்சர் லட்சுமண் அபயவர்த்தன : தமிழகம் இந்திய அரசுக்கு என்ன அழுத்தம் கொடுத்தாலும் இலங்கை மீதான நிலைப்பாட்டில் இந்திய அரசில் மாற்றம் எதுவும் இல்லை. இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகே உள்ளது. ///


இத நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெயனும்னு இல்லீங்கோ ... இது பழைய பஞ்சாங்கமுங்கோ............

said...

//சன்னியாசி போல் வாழ்ந்து வருகிறேன்.

//

நா நல்லா வசதியா செல்வச் செழிப்போட இருக்கேன்னு சிம்பாளிக்கா சொல்லிருக்காரு :))

said...

கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் விரைவில் வெளிப்படும்.3ம் தேதி நடக்கயிருக்கும் கட்சிகூட்டத்தில் தடாலடியாக தமிழக எம்பிக்கள், அமைச்சர்கள் ராஜினாமா என்ற குறைந்தப்பட்ச அறிவிப்போ அல்லது முதல்வர் பதவி ராஜினாமா என்ற அறிவிப்போ வெளியிட்டு, முத்துக்குமார் மரணத்தால் ஏற்ப்பட்டுள்ள உணர்ச்சித்தீயை பயன்படுத்தி,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு அறுவடையை நடத்தி 40 தொகுதியிலும் வெற்றிப்பெற முயர்ச்சிப்பார்.

நாமும் அவரின் தமிழினப்பற்று, பதவியை தோள்துண்டுப்போல துச்சமென நினைத்து உதறியப்பாங்கு என வழக்கம்போல மெய்சிலிர்த்து அவர்சார்ந்தக் கூட்டணிக்கு ஓட்டளிப்போம்.

எப்படியோ இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது.எம்பி பதவி,அமைச்சர் பதவி இழப்பால் அவருக்கு பெருத்த நஷ்டம் கிடையாது. தமிழீழ மக்களுக்காக மத்திய அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ் என்கிற அவரது கோஷம்,வழக்கம்போல உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்கும் தமிழ்மக்கள் மத்தியில் அவரின் 'தமிழினத் தலைவர்' என்ற இமேஜிற்கு பங்கம் வராமல்,பெரும்பாலான தொகுதியில் வெற்றிப்பெற்று,மீண்டும் காங்கிரஸோ,பிஜேபியோ ஏதாவதொரு கூட்டணியில் சேர்ந்து அவரின் புதல்விக்கும்,பேரன்களுக்கும் மந்திரிப்பதவி வாங்கிக்கொடுத்து, குடும்பங்களையும்,தொழில்களையும் செவ்வன செய்துக்கொள்வார்கள்.

கருணாநிதிக்கு அவர் கையில் சுக்கான் இருக்கவேண்டும்,ஈழத்தமிழர்களுக்கானஎவ்விதப்போராட்டமும் அவர் தலைமையில் நடந்தால்தான் அவரால் ஓட்டு அறுவடை செய்யமுடியும்.அவரின் ஒரேப் பிரச்சனை... முத்துக்குமாரின் மரணமும், அதையொட்டி எழுந்துள்ள இளைநர்களின் எழுச்சியும்.அவர் கண்டிப்பாக எதிர்ப்பாராத அதிர்ச்சி திருப்பம்.இதை நீர்த்துப்போகச் செய்யவே,கல்லூரிகள் காலவரையற்ற மூடல், முழுஅடைப்புக்கு எதிர்ப்பான அரசின் அறிவிப்பு.

பொறுத்திருந்துப் பார்க்கலாம்...என் கணிப்புகள்,நிஜமாகப்போகிறதா..இல்லையா என்பதை....

said...

துபாய் போயிட்ட தைரியமா?

அங்கேயும் ஆட்டோ வரும்

said...

Anonymous said...
இந்த பவுடர் பாண்டி எப்படா வந்து தாத்தா பக்கத்தில ஒட்டிக்கிட்டான்.//

என்ன அனானி கண்கள் பனித்து இதயம் இனித்தது எல்லாம் தெரியாதா உங்களுக்கு?:(((((

**************************
நன்றி கபீஷ்

நன்றி புலி

நன்றி ஆதவன் எக்னாமிக் கிரசைசில் புகைப்படம் கிடைக்கமாட்டேங்குது:)))
(எல்லாத்துக்கும் எக்காமிக் கிரைசஸ் என்று சொல்றாங்க இதுக்கும் சொல்லுவோமே!!!)

said...

தாரணி பிரியா said...
இந்த மாதிரி கமெண்ட் போட்டது எல்லாம் அய்யாவுக்கும் அம்மாவுக்கும் தெரியுமா?//

அய்யாவும் அம்மாவும் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி ஓய்வில் இருக்கிறாங்க:))))

***********************
நன்றி பூர்ணிமா சரன்

வெடிகுண்டு முருகேசன் நடுநிலமை?????

நன்றி இயற்கை

நன்றி VJ

நன்றி மேடி உங்க கமெண்ட்ஸும் அருமையாக இருக்கு!

நன்றி புதுகை அப்துல்லா அண்ணம் போல் தேவையானதை மட்டும் எடுத்துக்குங்க:))

said...

நன்றி மோகன் நீங்கள் சொல்வது நிச்சயம் நடக்கும்.

நன்றி வால்பையன். அனுப்புறதுதான் அனுப்புறீங்க பிளைட் அனுப்பினா அங்க வருவதுக்கு வசதியாக இருக்கும்

said...

Kalaiger appeared in my dreams and told me that he will go to Ayyappan koil(with 49 days fasting) once tamileelam formed:Kurusamy singh will also come to Ayyappan koil:
Pranab will take "KAVADI"
Sonia will hold "FIRE BOX"
hi...hi....