Sunday, November 30, 2008

உலகிலே எந்த ஊர் பெண்கள் அழகு!

ஒரு வாரத்துக்கு முன்பு பதிவுலக நண்பர்களுடன் மெயில் அனுப்பி ஒரு விவாதத்தில் இருந்த பொழுது இந்த ஊர் அரபி பெண்கள் அல்லது ஈரான் பெண்களின் அழகுக்கு இனை யாரும் கிடையாது என்றேன், நண்பர் அதெல்லாம் கிடையாது நீ சும்மா பொய் சொல்றே என்றார், அவரிடம் பல பாடல்களில் வரும் அரபி பெண்களின் அழகை பற்றி மேற்கோள்களையும் (அரபு நாடே அசந்து நிற்கும் அழகி நீயாம்) பாடல்களையும், அடிக்கடி சொல்லப்படும் அரபி குதிரைக்கு அர்த்தத்தையும் சொன்னேன் அப்பொழுதும் அவர் நம்பவில்லை.

பின் புரியும் படி நம் ஊர் சூப்பர் சூப்பர் பிகர்= இந்த ஊர் சப்பை பிகர் அல்லது அட்டு பிகர் என்றேன் ஆதாரம் வேண்டும் என்றார் பின் அவருக்கு இந்த ஊர் பெண்களின் புகைப்படத்தை அனுப்பினேன், அதன் பிறகு அவர் பேசவே இல்லை! இதோ அவருக்கு அனுப்பிய படங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்க.



*******************************************************************************

மேலும் இந்த விவாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக போன வாரம் ஒரு கணவன் மனைவிக்குள் நடந்த உண்மை சம்பவத்தையும் சொல்கிறேன்!

மனைவி: என்னங்க! (பொதுநலன் கருதி விகுதி மாற்றப்பட்டுள்ளது).

கணவன்: என்னம்மா!

மனைவி: இத்தனை வருசமா இங்கிருக்கீங்க,உங்களுக்கு இங்க ரொம்ப பிடிச்சது என்னனு சொன்னீங்கன்னா நான் வாங்கி தருவேன்ல்ல!

கணவன்: இரவின் இருட்டில் இந்த கருப்பு கலர் லேண்ட் கூருசர் காரில் உள்ளே இருக்கும் சிறு வெளிச்சத்திலும் பெளர்ணமி நிலவு போல் ஜொளிக்கும் படி முகம் மட்டும் தெரிய வலம் வரும் அரபி பெண்களின் அழகு ரொம்ப பிடிக்கும், இதுல பியூட்டியே பேக்ரவுண்டும்கருப்பு, காரும் கருப்பு, அவுங்க டிரஸும் கருப்பு!.....

மனைவி: #%~@$#$ எதாலோ அடிக்க அந்த கணவன் கையில் கட்டு!

(என்னது என் கையில் இருக்கும் கட்டு ஏனா? அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்!ராக்கெட் லாஞ்சர் தீவிரவாதிகள்கையில் மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களே உங்களை நினைச்சா பாவமாக இருக்கு!)

************************************************************************

சென்னையில் மழை பெய்தால் இனி பதிவர்கள் என்ன செய்யவார்கள்!

வெண்பூ வீட்டில்:

என்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு வெளியே நீங்க தொவைச்சு காயப்போட்ட டிரஸ் எல்லாம் நனைச்சுடப்போவுது சீக்கிரம் எடுத்து வந்து அயர்ன் செஞ்சு வெச்சுடுங்க! டீயை அப்புறம் ஆத்தி தரலாம் சீக்கிரம் போங்க!


டீயை பொருப்பாக ஆத்திக்கிட்டு இருந்த வெண்பூ அலறி அடிச்சுக்கிட்டு என்னது மழை தூறுதான்னு கேட்டுகிட்டு செல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்!....

பரிசல் வீட்டில்:

என்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு நம்ம இரண்டு குழந்தைங்களையும் ஸ்கூலில் இருந்து அழைச்சுட்டு வாங்க என்ன இன்னும் சின்னபுள்ளமாதிரி குவீஸ் கேம்ஸ் விளையாடிக்கிட்டு இருக்கீங்க!!!


என்னது மழை பெய்கிறதா! அவரும் மொபைல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்!

தாமிரா வீட்டில்:

என்னங்க மழை வரமாதிரி இருக்கு, நீங்க பிழிஞ்சு வெச்ச வடாம் நனைஞ்சுட போவுது கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுங்க!

தாமிரா: என்னது மழை வரமாதிரி இருக்கா! அவரும் செல்போனை எடுத்துகிட்டு வெளியே ஓடுகிறார்!

தாமிரா: மழை வருவது போல் இருக்கு நீ அங்க தனியா இருக்க வேண்டாம்! நாளை மனைவி ஊருக்கு போக போறாங்க வேண்டும் என்றால் இங்க வந்துடு, நாம சேர்ந்து இருக்கலாம், கூச்சப்படாத உடம்ப பார்த்துக்க மழையில் நனையாத, ஏதும் வேண்டும் என்றால் என்னிடம் தயங்காம கேளு! அடிக்கடி போன் செய்!

இவர் பேசியது மனைவி காதி விழுந்துவிடுகிறது!

மனைவி: ஹலோ நில்லுங்க நான் மழையில் நனைஞ்சா கூட இவ்வளோ கவலை படமாட்டீங்க அது யாரு போன்ல!

தாமிரா: அது அது வந்து பிரண்டும்மா!

மனைவி: எனக்கு தெரியாம அது யாரு பிரண்ட்டு! என்ன பேரு!

தாமிரா: அதிஷா!

மனைவி: என்ன தைரியம் இருந்தா ஒரு பொண்ணை நான் இல்லாதப்ப வீட்டுக்கு வா கூட தங்கலாம் என்று கூப்பிவீங்க! எவ அவ திரிஷா மாதிரி இருப்பாளோ! உங்களை எல்லாம்.... என்று ஆயுதத்தை எடுக்க போகும் பொழுது எஸ்கேப் ஆகிறார்!

மற்ற இருவரும் யாரிடமோ பேசிட்டு வீட்டுக்குள் வருகிறார்கள் தங்கமணிகள் முறைக்க மற்ற இருவரும் சொல்கிறார்கள் நீ வேறம்மா வீட்டில் வாங்கும் திட்டு பத்தாதுன்னு மழை பெய்த பொழுது ஏன் போன் செய்யலைன்னு தூ ஆட்டிக்கிட்டு வந்துட்டானுங்கன்னு அதிஷா பதிவு போட்டு திட்டுவார் அதான் பேசிட்டுவந்துட்டேன் என்கிறார்கள்! (இது புரியவில்லை என்றால் லிங்கை கிளிக் செஞ்சு படிங்க புரியும்).


இனி மழை பேஞ்சா அதிஷா நினைவு வரவில்லை என்றால் நீங்களும் டரியள் ஆக்கப்படுவீர்கள்!!!

************************************************************

தலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க!

41 comments:

  1. அப்பாடா ரொம்ப நாள் ஆசை நிறைவேறிடுச்சு....

    ReplyDelete
  2. எனக்கு படத்த பாத்தா மும்பைல வந்து இறங்குன தீவிரவாதிங்க மாதிரியில்ல இருக்கு!

    Jokes apart அரபுப் பெண்களை விட லெபனியப் பெண்கள்தான் அழகு.

    சந்தேகம் இருப்பின் யாராவது லெபனிய பெண்ணைப் பார்த்த பின் அவள் கணவனிடம் கேட்கவும் !(விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல)

    ReplyDelete
  3. //(என்னது என் கையில் இருக்கும் கட்டுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்!//

    ஹஹஹா

    ReplyDelete
  4. //தலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க!
    //

    புளிகள் என்று சொல்லி இருப்பார் !

    ReplyDelete
  5. //சென்னையில் மழை பெய்தால் இனி பதிவர்கள் என்ன செய்யவார்கள்!//
    என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்//

    குசும்பன் ஏரியாவிலும் மழை
    மனைவி:: ஏங்க மழை பெய்யறமாதிரி இருக்கு. வெளிய காயப்போட்டிருக்க ராக்கெட் நனைஞ்சிறப்போவுது , உள்ள எடுத்துட்டு வாங்க...
    குசும்பன் செல்போனை எடுக்கறதுக்கு பதில் ராக்கெட் லாஞ்சர் ரிமோட் எடுத்து ஆன் பண்ணி விடுகிறார். அதுக்கப்பறம் ஆன காயம்தான் அது. :):)

    ReplyDelete
  6. //இந்த ஊர் பெண்களின் புகைப்படத்தை அனுப்பினேன், அதன் பிறகு அவர் பேசவே இல்லை!//

    அந்த அப்பாவி பதிவர் நானில்லை பரிசலும் இல்லை. :))

    எலேய் குசும்பா, மாட்டாமயா போவ? உனக்கு இருக்குடி தீவாளி. :))

    @அறிவன் சார், அப்படியா? ஆதாரம் இல்லாம நாங்க எதையும் நம்பறதா இல்லை, அதானல் நீங்களும் ஒரு போட்டோ.. ஹிஹி. :)))

    ReplyDelete
  7. //சிறு வெளிச்சத்திலும் பெளர்ணமி நிலவு போல் ஜொளிக்கும் படி முகம் மட்டும் தெரிய வலம் வரும் அரபி பெண்களின் அழகு ரொம்ப பிடிக்கும், இதுல பியூட்டியே பேக்ரவுண்டும்கருப்பு, காரும் கருப்பு, அவுங்க டிரஸும் கருப்பு!.....//

    வரிகளிலும் ரசித்தேன் :)

    ReplyDelete
  8. கைல மாவுகட்டு போட்டாலும் உம்ம குசும்பு அடங்கலியே...

    தங்கபாலு ஜோக் சூப்பர்.. சிரிப்பை அடக்கவே முடியல..

    //
    என்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு வெளியே நீங்க தொவைச்சு காயப்போட்ட டிரஸ் எல்லாம் நனைச்சுடப்போவுது சீக்கிரம் எடுத்து வந்து அயர்ன் செஞ்சு வெச்சுடுங்க!
    //
    நிஜமாவே கொஞ்சநாள் முன்னால வரைக்கும் இதை நாந்தான் செஞ்சிட்டு இருந்தேன்.. பையன வெச்சிகிட்டு தங்கமணியால ரெண்டு மாடி ஏறி மொட்டை மாடியில போய் காயவெக்க முடியாதுன்றதால. அப்புறம் ஹவுஸ் ஓனர் மொட்டை மாடியில இன்னொரு ஃப்ளோர் கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிச்சிட்டதால வீட்டு கிட்டயே ஒரு கொடி கட்டி இப்ப தங்கமணியே துணி காயப் போட்டுடறாங்க.. அதனால இப்பல்லாம் வீட்டுல செஞ்சிட்டு இருந்த அந்த ஒரு வேலையும் கிடையாது.. ஒன்லி சாப்பாடு & தூக்கம்தான்.. ஹி..ஹி..

    ReplyDelete
  9. //வரிகளிலும் ரசித்தேன் :)//

    ஆயில்ஸ் அண்ணாச்சி, நீங்க ரசி்த்ததை நானும் ரசித்தேன்! :)

    குசும்பன் பதிவில் சொன்ன நண்பர் நீங்க தானோ? :)

    ReplyDelete
  10. @ Kusumban request services:

    இது சைவப் படம் 1
    http://www.flickr.com/photos/orcaman/207401612/

    இது சைவப் படம் 2
    http://www.flickr.com/photos/orcaman/207402655/

    இது அசைவம் 1

    http://www.flickr.com/photos/kingofdark/142249998/
    இது அசைவம் 2

    http://www.flickr.com/photos/kingofdark/142231639/

    இந்த கமெண்ட் போட்டது நான் இல்லை,என் ஆவி !!!!!!

    ReplyDelete
  11. //ambi said...

    //இந்த ஊர் பெண்களின் புகைப்படத்தை அனுப்பினேன், அதன் பிறகு அவர் பேசவே இல்லை!//

    அந்த அப்பாவி பதிவர் நானில்லை பரிசலும் இல்லை. :))//

    ஆமா.. ஆமா.. நாங்க இல்லவே இல்லை.


    அப்பறம்..

    இந்தத் தலைப்புக்கு சாருதான் சரியா பதில் சொல்லணும் குசும்பா..

    ReplyDelete
  12. //தலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க!//

    செத்த பாம்பையும் விட்டு வைக்கமாட்டீங்களா?

    ஹி ஹிஹிஹி

    ReplyDelete
  13. நன்றி ஆதவன்!(என்ன ஆசைன்னு சொல்லவே இல்லை! :)

    **************************

    அறிவன்#11802717200764379909 said...
    Jokes apart அரபுப் பெண்களை விட லெபனியப் பெண்கள்தான் அழகு.//

    அவுங்கள் கண்கள் அரபி பெண்கள் கண் போல் அவ்வளோ அழகு கிடையாது!( எவ்வளோ நல்லவன் நான் பாருங்க மக்களே!!!)


    ///சந்தேகம் இருப்பின் யாராவது லெபனிய பெண்ணைப் பார்த்த பின் அவள் கணவனிடம் கேட்கவும் !(விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல)//

    கல்யாணம் ஆன பெண்களையும் பார்க்ககூடாது (மீண்டும் எவ்வளோ நல்லவன் நான் பாருங்க மக்களே!!!)

    *****************************
    சின்ன அம்மிணி said...
    ஹஹஹா//

    அவ்வ்வ் அம்புட்டு சந்தோசமா உங்களுக்கு!!!

    ****************************
    கோவி.கண்ணன் said...
    புளிகள் என்று சொல்லி இருப்பார் !//

    புளி ஒத்துக்காதோ!!!

    ******************************
    ambi said...
    அந்த அப்பாவி பதிவர் நானில்லை பரிசலும் இல்லை. :))//

    கிகிகி அப்புறம் எனக்கு பிடிச்ச ஊரு பெண்ணுங்க பஞ்சாப்பிங்கதான் என்றும் அதுக்கு காரணமும் சொன்னாங்களே அதுவும் நீங்க இல்லை சொல்லிடுங்க!:)))

    *****************************
    முத்துலெட்சுமி-கயல்விழி
    :)// நன்றி
    ****************************
    ஆயில்யன் said...
    வரிகளிலும் ரசித்தேன் :)//

    என்னது வரிகளிலுமா!அவ்வ்வ்வ்
    ***************************

    வெண்பூ said...
    நிஜமாவே கொஞ்சநாள் முன்னால வரைக்கும் இதை நாந்தான் செஞ்சிட்டு இருந்தேன்.. //

    கொஞ்சநாள் முன் என்றால் நேற்றுவரை என்று அர்த்தம் எடுத்துக்கலாமா? இம்புட்டு நல்லவரா நீங்க!
    *******************************

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ஆயில்ஸ் அண்ணாச்சி, நீங்க ரசி்த்ததை நானும் ரசித்தேன்! :)//

    அவர் ரசித்தயை நீங்களும் ரசிக்கலாமா? வேற பிகருங்களா இல்லை!

    குசும்பன் பதிவில் சொன்ன நண்பர் நீங்க தானோ? :)//

    அப்ப ஆயில்யன் கல்யாணத்துக்கு பெண் பார்க்கனும் என்று சொன்னாரே அது?

    ****************************
    நன்றி விஜய் ஆனந்த் இப்ப எல்லாம் ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுவிட்டு எஸ் ஆகிடுறீங்க! ரொம்ப உசாரா ஆயிட்டீங்க!!!
    *******************************
    அறிவன் சார் புலி பசித்தாலும் சைவம் சாப்பிடாது! அசைவமும் சரி இல்லை
    மெயிலில் அனுப்புங்க அப்ப ஒத்துக்கிறேன்!:)

    ReplyDelete
  14. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //வரிகளிலும் ரசித்தேன் :)//

    ஆயில்ஸ் அண்ணாச்சி, நீங்க ரசி்த்ததை நானும் ரசித்தேன்! :)

    குசும்பன் பதிவில் சொன்ன நண்பர் நீங்க தானோ? :)//


    அவ்வ்வ்வ்வ்

    அண்ணாச்சி

    நான் அவன் இல்லை!

    ReplyDelete
  15. இப்ப எங்க ஊரில் மழை பெய்யுது.

    அதிஷாவை நினைச்சுக்கிட்டோம்:-)

    ReplyDelete
  16. Please Dont Irritate other religios things, U must know abt wht the Use of BURKA !!!

    ReplyDelete
  17. பரிசல்காரன் said...
    //ambi said...
    ஆமா.. ஆமா.. நாங்க இல்லவே இல்லை.//

    எஸ் இவர் இல்லை அதுவேற பரிசல்!


    அப்பறம்..

    இந்தத் தலைப்புக்கு சாருதான் சரியா பதில் சொல்லணும் குசும்பா..//

    ஏன் ராசா என் மேல உமக்கு என்ன கோவம்!
    ******************************
    அத்திரி said...
    செத்த பாம்பையும் விட்டு வைக்கமாட்டீங்களா?
    //

    சைஸ் கொஞ்சம் பெருசா இருந்தா அது பாம்பு ஆகிடுமா அது மண்புழு:)))
    ஹி ஹிஹிஹி


    *******************************
    ஆயில்யன் said...

    அவ்வ்வ்வ்வ்

    அண்ணாச்சி

    நான் அவன் இல்லை!//

    இல்லை இல்லை இவரேதான் புடிங்க புடிங்க!!!

    ******************************
    துளசி கோபால் said...
    இப்ப எங்க ஊரில் மழை பெய்யுது.

    அதிஷாவை நினைச்சுக்கிட்டோம்:-)//

    அதிஷா பாருங்க டீச்சரையே உங்களை நினைச்சு பார்க்க வெச்சிட்டோம்!
    *******************************
    ஆட்காட்டி என்னது அது ஒரே ஸ்டாரா இருக்கு?
    *******************************

    நன்றி இராம்!

    *******************************
    Busy said...
    Please Dont Irritate other religios things, U must know abt wht the Use of BURKA !!!//

    ஐயா பிஸி இதுல எங்கே அடுத்த மதத்தினரை இரிட்டேட் செய்கிறேன், தவறாக பார்க்கவேண்டாம்! நண்பர்களை வெறுப்பேற்றவே முகம் மறைத்த போட்டோவை அனுப்பினேன்!

    ReplyDelete
  18. பெத்து உட்டானுங்களா இல்ல செஞ்சு உட்டானுங்களானு அடிக்கடி தோணும்... அதை இன்னும் தீர விசாரிக்க முடியவில்லை ;((

    //தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க!//

    செத்த பாம்பை எவன் அடிக்க போறான்.

    ReplyDelete
  19. மத்திய கிழக்கில் நாமெல்லாம் இருக்கிறதுக்கு இந்த அழகுப் பெண்களும் ஒரு காரணமா குசும்பன்?

    ReplyDelete
  20. //
    ராஜ நடராஜன் said...
    மத்திய கிழக்கில் நாமெல்லாம் இருக்கிறதுக்கு இந்த அழகுப் பெண்களும் ஒரு காரணமா குசும்பன்?
    //

    என்ன சொல்ல வர்றீங்க? குசும்பன் அங்க‌ இருக்குறதால மத்திய கிழக்கோட அடுத்த தலைமுறை அழகா இருக்காதுன்னு சொல்றீங்களா??? :))))

    ReplyDelete
  21. /
    //(என்னது என் கையில் இருக்கும் கட்டுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்!//
    /

    ஆமாப்பா ஆமாம்

    குசும்பன் கொலை வெறிப்படை
    மங்களூரு

    ReplyDelete
  22. நீங்க இன்னும் ஈரோடு வரலைன்னு அது தான் அவசரப்பட்டு ஒரு பதிவு போட்டுட்டீங்க சரி பரவால்ல.அதுக்கு பரிகாரமா அடுத்ததடவ வரும் போது நம்ம ஊறு (ஈரோடு) பிகருங்கலபத்தி ஒரு பதிவு போட்டிருங்க.

    http://www.flickr.com/photos/nilanandhu/2832408373/in/set-72157607410125561/

    http://www.flickr.com/photos/nilanandhu/2870957074/in/set-72157607410125561/

    ReplyDelete
  23. வெறும் அழகிகளில்லை.

    பாக்தாத் பேரழகிகள்.

    ReplyDelete
  24. தலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க!///
    ROTFL..
    சிரித்து உருண்டேன்.. க‌ல‌க்கிட்டீங்க‌..

    வடகரை வேலன் said...
    வெறும் அழகிகளில்லை.
    பாக்தாத் பேரழகிகள்.// நீங்க‌ளுமா வேல‌ன்.?

    என்னது என் கையில் இருக்கும் கட்டு ஏனா? அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்!ராக்கெட் லாஞ்சர் தீவிரவாதிகள்கையில் மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களே உங்களை நினைச்சா பாவமாக இருக்கு!)//

    இந்த‌ உதார‌ண‌த்தை க‌டுமையாக‌ எதிர்க்கிறேன். இதுபோல‌ உய‌ர்வு ந‌விற்சியாய் எழுதினால் இது ஜோக்குக்காக‌ எழுத‌ப்ப‌டுகிற‌து என‌ யூத்துக‌ள் நினைத்துக்கொள்ளும் அபாய‌ம் இருக்கிற‌து. ஆக‌வே வெண்பூவுக்கு நிக‌ழ்ந்த‌ உண்மைச்ச‌ம்ப‌வ‌ங்க‌ளையே கூட‌ நீங்க‌ள் எழுத‌லாம்.

    ReplyDelete
  25. தலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க!

    LOL

    ரொம்பதான் துணிச்சல் உங்களுக்கு, குசும்பு ஜாஸ்தியா போச்சு.

    ReplyDelete
  26. தலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க
    //

    உங்களுக்கு ரொம்ப தைரியம்ணே. இல்லாட்டி பூனைய இவ்வளவு கேவலமா நக்கலடிக்க முடியுமா???

    :))))

    ReplyDelete
  27. /
    ,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்!
    /

    அண்ணே நம்பல்லாம் யாரு ராக்கட் லாஞ்சர சுண்டு வெரல்லயே தடுத்து நிறுத்தறவங்க. இந்த தடவை உங்களுக்கு எதோ ஸ்லிப் ஆகிடுச்சு போல
    :)

    ReplyDelete
  28. ஆனா இது தெரியாம இந்த சின்ன பசங்க எதெதோ நினைக்கிறாங்களே அத நினைச்சாதான் சிப்பு சிப்பா வருது!!

    ReplyDelete
  29. தல, தீர்ப்பை மாத்துங்க... மெக்சிக்கன் பெண்கள்தான் நிரம்ப அழகு... கருமை நிற விழிகளும், கரிய கூந்தலும், நல்ல உடல் வாகும்... மெக்சிகன் மெக்சிகன் தான்...

    ReplyDelete
  30. //இனி மழை பேஞ்சா அதிஷா நினைவு வரவில்லை என்றால் நீங்களும் டரியள் ஆக்கப்படுவீர்கள்!!!//

    இனி மழை என்றாலே அதிஷா தான்!
    அந்த ம்ழையின் ஆரம்பத்தில் நானும் சென்னையில் தான் இருந்தேன். என்னால் அவரது கஷ்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது

    ReplyDelete
  31. oh
    www.kts-news.blogspot.com

    ReplyDelete
  32. விஜய் ஆனந்த் said...
    :-)))...

    ரிப்பீட்டு....

    ஹி..ஹி.(இதுக்கெல்லாம் ரிப்பீட்டாடா....வந்துட்டானுங்க..நற நறப்பது புரிகிறது.ப்லோக் உங்குளுதாச்சே அதான்)

    ReplyDelete
  33. வெண்பூ said...
    //
    ராஜ நடராஜன் said...
    மத்திய கிழக்கில் நாமெல்லாம் இருக்கிறதுக்கு இந்த அழகுப் பெண்களும் ஒரு காரணமா குசும்பன்?
    //

    என்ன சொல்ல வர்றீங்க? குசும்பன் அங்க‌ இருக்குறதால மத்திய கிழக்கோட அடுத்த தலைமுறை அழகா இருக்காதுன்னு சொல்றீங்களா??? :))))


    அய்ய்ய்ய்ய்ய்யய்யோஓஓஓஓஓஓஓஒ.

    ReplyDelete
  34. அந்த ஒரு வேலையும் கிடையாது.. ஒன்லி சாப்பாடு & தூக்கம்தான்.. ஹி..ஹி..வெண்பூ said...

    ஆப்பீஸ்லியுமா?????????????????????

    ReplyDelete
  35. அடிக்கடி எங்க காணாம போயிடறீங்க தல?

    ReplyDelete
  36. குசும்பா ,
    என்ன தான் இருந்தாலும் நம்ம நாட்டு கோழி பிரியாணிக்கு இருக்கிற சுவை துபாய் ப்ரைலேர் கோழி பிரியாணிக்கு இல்லே மாமு!!!!

    இப்பதானே கல்யாணம் ஆனது!!!! சில வருசத்துல எல்லாம் புரிஞ்சுகிவே !!!!!!.


    துபைலிருந்து அனுபவஸ்தன்

    ReplyDelete