Saturday, November 29, 2008

இழவு வீட்டிலுமாடா அரசியல் செய்வீங்க!!!

தாளம்: டுமீல் டுமீல்,
பாடுபவர்: மன்மோகன்
சரணம்: தீவிரவாத்திற்கு எதிரான போர் தொடரும்! தீவரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! தீவிரவாதத்தை இந்த அரசு வேறோடு அறுக்கும்! இந்த நாசவேலைக்கு காரணம் பாக்கிஸ்தான்! உயிர் இழந்தவர்களுக்கு 5 லட்சம் நஷ்ட ஈடுவழங்கப்படும்.

கீறல் விழுந்த ரெக்காட் ஆகையால் மேற்கொண்டு பாட முடியாமல் அதே சரணமே ரிப்பீட்டாகிக்கிட்டு இருக்கு.

***********************************************
தாளம்: டம் டம்
பாடுபவர்: சிவராஜ் பாட்டில்
சரணம்: தீவிரவாதிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தபடும், உளவுதுறை செயல்பாடு திருப்திகரமாகவே இருக்கிறது, இதற்காக பதவி விலகவேண்டியது இல்லை!

***********************************************
தாளம்:சங்கே முழங்கு
பாடுபவர்: அத்வானி
சரணம்: ஆளும் காங்கிரஸ் கட்சி அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பொடா தேவை, சிவராஜ் பாட்டீல் பதிவி விலகவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவோம்!

இதுவும் கீறல் விழுந்த ரெக்காட் ஆகையால் மேல் சொன்ன ராகத்தையே திரும்ப திரும்ப படிச்சுக்கவும்.
*******************************************
நாட்டுல என்ன பிரச்சினை நடந்தால் நமக்கு என்ன என்று தமிழக தலைவர்கள் பாடும் பாட்டு!

தாளம்: அதிரடிக்காரன்
பாடுபவர்: ஜெ.ஜெ
பாட்டை எழுதியவர்: யாரோ

சரணம்: மைனாரிட்டி தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுகிறது, நயவஞ்சக பேய் கருனாநிதி மீது மான நஷ்டவழக்கு தொடரப்போகிறேன்.
*****************************************
தாளம்: ஜின் ஜாக்
பாடுபவர்: வைகோ
சரணம்: சகோதரி சொன்னதுக்கு ரிப்பீட்டேய்!
*****************************************
தாளம்: டிரம்ஸ்
பாடுபவர்: கலைஞர்
சரணம்: நாளை ஈழ தமிழர் நலன் காக்க 10001 முறையாக அனைத்துகட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது அனைவரும் வந்து வழக்கம் போல் காப்பி டீ குடித்துவிட்டுசெல்லவும்!
******************************************
தாளம்: கமான் இந்தியா
இசை கருவிகள்: பேட் & பால்
பாடுபவர்கள்: இந்திய தேசத்து தூண்கள்
ராகம்: சோகம்

சரணம்: மும்பையில் குண்டு வெடிப்புக்காக எல்லாம் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது எல்லாம் சரி இல்லை, இந்தியாவை ஜெயிக்க முடியாவில்லைஅதுக்கு சாக்காக இதை வைத்து ஊருக்கு போய்விட்டார்கள்.

********************************************************************

மும்பை சம்பவத்துக்கு பாக்கிஸ்தான் அமைப்புகளின் சம்மந்தம் இருப்பதன் ஆதாரங்களை,பாக்கிஸ்தான் அரசிடம் சமர்ப்பிக்க போகிறோம்! :
சிவராஜ் பாட்டில்


டரியள் டக்ளஸ்: ஆதாரங்களை சமர்பிக்கும் பொழுது கொஞ்சம் சாப்ட்டான பேப்பரில் ஆதாரங்களை சமர்பியுங்கள் தலைவர்களே, பேப்பர் மொட மொடப்பா இருந்தா அவுங்களுக்கு தொடைக்கும் பொழுது வலிக்கும்!!!


*******************************************************************
இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்!!!

கச்சா எண்ணெய் விலை சரிவு!!!விளக்கெண்ணெய் விக்கிற விலையில் தலைக்கு ரொம்ப அவசியம் பாரு என்று மனைவியின் வசவை காதில் வாங்கியபடி எடுத்த பாட்டிலை பத்திரமாக திருப்பி வைக்கும் குப்பனுக்கு மிகவும் சந்தோசமான செய்திதான் கச்சா எண்ணெய் விலை சரிவு!

தங்கம் விலை சரிவு!!!போன குறுவைக்கு விதை நெல் வாங்க வைத்த இரண்டு வயது மகளின் தொங்கட்டானின் வட்டிஇதன் மூலம் குறைந்து நாளைக்கே மீட்டுவிடலாம் என்ற சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் முனியாண்டிக்கு சந்தோசமானசெய்திதான் தங்க விலை சரிவு!

சென்செக்ஸ் 100புள்ளிகள் உயர்வு!!!போன வருடம் ஆரம்பித்த சரிவு, இதோ இரண்டு நாட்களாக பெய்யும் மழையினாலும் தொடர்ந்து சரிவையே சந்தித்தித்து வரும் தன் வீட்டு மண் சுவரைகவலையோடு எதிர் வீட்டு திண்ணையில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் குருவம்மாளுக்கு சந்தோசமான செய்திதான் சென்செக்ஸ் 100புள்ளி உயர்வு!!!

ஓபாமாவால் அவுட் சோர்சிங்குக்கு ஆபத்து வராது நிதியமைச்சர்!!!
இந்த வாக்குறுதியை கேட்டு சந்தோசமாக கடலில் மீன் பிடிக்க செல்லும் செல்லமுத்துவுக்குயாராவது சொல்லுங்களேன் அவுட்சோர்சிங் என்பது வேறு என்று!!!

************************************************************


நன்றி: இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று டைட்டில் மட்டும் போடாமல் சண்டை அனைத்தையும் லைவ் ரிலேவாக போட்டு
தீவிரவாதிகளுக்கு துனை போன இந்தியாவின் தூண்களாகிய மீடியாக்களுக்கும், ஒப்பாரி வீட்டிலும் மும்பை செய்திகளை 12 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் படித்ததன் மூலம் உங்களை நம்பிக்கை பெற்ற ஒரே நாளிதழ் என்று தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொண்ட நாளிதழகளுக்கும் நன்றி நன்றி நன்றி!

22 comments:

Anonymous said...

5 லட்சம் ஹிட்ஸ்னு படிச்சதும் ரெம்பக் கடுப்பாயிருச்சு குசும்பா.

கோவை fm ஸ்டேசன் படுத்துனது இன்னும் அதிகம். 5 நிமிஷத்துக்கு ஒரு முறை அப்டேட்டுங்கிற பேர்ல தப்பும் தவறுமா உளறினாங்க.

ஒரு அறிவிப்பாளர் சொன்னது. “v.p.சிங் இன்று டெல்லியில் மரணம்.” அடுத்த பாடல் அட்றா அட்றா நாக்க மூக்க

said...

பெரும்பாலோனோரோட வேதனைய கரெக்டா சொல்லியிருக்கீங்க குசும்பா... :(((


//
இழவு வீட்டிலுமாடா அரசியல் செய்வீங்க!!!
//
தல... தமிழ்நாட்டோட முக்கியமான அரசியல் நிகழ்வுகள், திருப்பங்கள், முடிச்சுகள் எல்லாமே எழவு வீடுகள்ல ஆரம்பிச்சதுதான்..

said...

இந்த தொலைக்காட்சி சேனல்களுக்கு நிரந்தர கடன்பட்டிருக்காங்க அந்த தீவிரவாதிகள்... பின்னே அவங்க செஞ்ச உதவிகள் கொஞ்சமா நஞ்சமா!!!

said...

டரியல் டக்ளஸ் அடிபொளி!

//இழவு வீட்டிலுமாடா அரசியல் செய்வீங்க!!!"//

இழவு வீடுதாங்க மெயின் சோர்ஸ் ஆஃப் டூயிங் அரசியல்

said...

பாட்டீல் பல்லவி:
தீவிரவாதிகளின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

said...

ரொம்ப வருத்தப்படவைக்க வேண்டிய விசயங்களெல்லாம் ஒரு சேர வெளிப்பட்டு அது எல்லாருக்குமே கிளியரா புரிஞ்சும் இருக்கு!

இதெல்லாம் எதாவது மாற்றங்களை கொண்டு வருமான்னு தெரியல !? :((

பட் ஒண்ணும் கிளியரா தெரியுது அடுத்து பேஸ் 2 பேஸ் தீவிரவாதிகள் போலீஸ் ஃபைட்டிங்க் லைவ் ரிலேக்கு ஆயத்தமாகிடுவாங்க நம்ம சேனல்ஸ் !

said...

இந்த மீடியாக்கரனுங்க தொல்ல தாங்கவே முடியல. தீவிரவாதிங்க புடிச்சது நட்சத்திர ஹோட்டல்கள. அங்க டிவி இருக்காது? உள்ள இருந்து இவன் லைவ் காட்டுறத அவனும் பார்க்கமாட்டான்? நம்ம கமாண்டோக்கள் கட்டிடங்கள்ல ஏறுவத கூட காட்டியிருக்கானுங்க.
இந்த வார ஜூனியர் விகடன் இதழ்ல மதுரையில பயங்கரவாதிகள்னு சந்தேகிக்கப்படும் சிலரை கைது செய்துட்டு, ஏதோ சாதரண வழக்குகள் போட்டுட்டாங்களாம், அதுகுறித்த செய்தியில கடைசி பத்தி அப்டியே இங்க ஒட்டுறேன்.

மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸார், முக்கிய வழக்குகளில் குற்றவாளிகள் சிக்கினால் அவர்களுக்குப் பின்னாலிருக்கும் சதிகாரக் கும்பலை வளைக்க, பிடிபட்டவர்களை சுதந்திர மாக உலவ விட்டு வலை பின்னுவார்கள். ஷகில் அகமது விவகாரத்திலும் அதுதான் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது.மதுரை போலீஸ் வட்டாரம். என்ன நடக்கப் போகிறதோ..?

இப்டியெல்லாம் செய்தியப் போட்டா வெளங்கிறாது? என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கானுங்க இவனுங்க? அடுத்தவங்கள குறை சொல்றப் பத்திரிக்கையும், மீடியாக்களும் முதல்ல தாங்கள் தங்களோட சமூகக் கடமைகளை உணர்ந்து செயல்படணும்.

said...

எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபம் இவன்களுக்கு....:(

said...

CROWD CHEERING COMMANDOS அப்டீன்னு ஒரு விடியோ கிளிப் லைவ்வா. அந்த ட்ரக்ல நாலஞ்சு மிலிட்டரி ஆளுங்க ஒக்காந்துட்ருக்க, தெருவுல ஒரு நூறு நூத்தம்பது கைதட்டி விசிலடிச்சு - அடடா மக்களுக்கு பொறுப்பும் தேசபக்தியும் ஜாஸ்தியாயிடுச்சு போலருக்கேன்னு நெனச்சு முடிக்கறதுக்குள்ள அந்த நூத்தம்பது பேருல நூத்து நாப்பத்தொம்பது பேரு கைல எல்ஸிடி திரையோட டிஜிடல் கேமரா விடீயோ கேமரான்னு எல்லாப் பயலும் மீடியா காரங்க போல. 144 தடையுத்தரவுன்னு எங்கிட்டோ படிச்ச நினைவு. ஆனா கூட்டம் தெருவுல அம்மிக்கிட்ருக்கு.

“நான் தொழிலதிபர்”ன்னு செந்தில் சொன்னதும் ஒரு படத்துல கவுண்டமணி சொல்வாரு “அட ஆண்டவா.. பிளேடு விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன், எல்லாரும் தொழிலதிபன்னு சொல்லிக்கிறானுங்க. வரவர இந்த தொழிலதிபனுங்க தொல்லை தாங்க முடியலடா.”. அது மாரி இந்த “மீடியா காரங்க“ தொல்லை நிஜமாகவே தாங்க முடியலை!
புற்றீசல் மாதிரி கௌம்பி வந்துர்ராய்ங்க. ஈசல் மாதிரியே இந்த ட்ரெண்டும் அல்பாயுசுல போனா நல்லது.

இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகள். தீரமாகச் செயல்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் சல்யூட் - மற்றபடி நெருப்பில் குளிர்காயும் அரசியல்வியாதிகள் உள்ளிட்ட எல்லாருக்கும் ம்ம்..நடுவிரல் காண்பிக்கறதுக்கு என்ன ஐகான்?

said...

"இழவு வீட்டிலுமாடா அரசியல் செய்வீங்க!!!"
//

அன்ணே எப்பவும் எல்லாத்துக்கும் நக்கலடிக்கிற உங்களையே இப்படி ஒரு தலைப்பு வைக்க வச்சுட்டானுங்களே :(

said...

//
இழவு வீட்டிலுமாடா அரசியல் செய்வீங்க!!!
//

நச்!

said...

மாற்றம் மனிதனை வேறு விதமாக்ககி விடுகிறது...

said...

தொழில் னு வந்துட்ட பிறகு இழவு வீடு இருந்தா என்ன வேற எதா இருந்தா என்ன... அவங்க பொழப்பு நடக்குதுல.. அதான் அவனுங்களுக்கு வேணும்.....

Anonymous said...

சோனியா காந்தி பாவையாக உள்ள பிரதமர் என்பதால் மட்டும் அல்ல ....ஒரு தலைவர் ,பிரதமர் என்பதற்கும் ...ஒரு மிக பெரிய நாட்டுக்கு தலைவர் என்பதற்கும் ....வீரமும் விவேகமும் துணிச்சலும் இருப்பது அவசியம் ..என்பதை இந்த தாக்குதல் உறுதி படுத்து கிறது

said...

எழுதிய அனைத்தும் சரி, 'கறுப்பு நகைச்சுவை' (black humour) என்ற வகையில் அருமையாக சொல்லியிருக்கீர்கள் !!!

said...

//பிடிபட்டவர்களை சுதந்திர மாக உலவ விட்டு வலை பின்னுவார்கள். ஷகில் அகமது விவகாரத்திலும் அதுதான் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது.மதுரை போலீஸ் வட்டாரம்.//

what a transparency...!! :-(

said...

//ஆதாரங்களை சமர்பிக்கும் பொழுது கொஞ்சம் சாப்ட்டான பேப்பரில் ஆதாரங்களை சமர்பியுங்கள் தலைவர்களே, பேப்பர் மொட மொடப்பா இருந்தா அவுங்களுக்கு தொடைக்கும் பொழுது வலிக்கும்!!!//

அபாரம் குசும்பா. வேதனையை இதைவிட யாராலும் சொல்லிவிட செய்யமுடியாது. உங்கள் உணர்வும், அதையும் பாலா சொன்னதுபோல ப்ளாக் ஹ்யூமரில் பகிர்ந்துகொண்ட விதமும் அருமை.

said...

//இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று டைட்டில் மட்டும் போடாமல் சண்டை அனைத்தையும் லைவ் ரிலேவாக போட்டு
தீவிரவாதிகளுக்கு துனை போன இந்தியாவின் தூண்களாகிய மீடியாக்களுக்கும், ஒப்பாரி வீட்டிலும் மும்பை செய்திகளை 12 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் படித்ததன் மூலம் உங்களை நம்பிக்கை பெற்ற ஒரே நாளிதழ் என்று தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொண்ட நாளிதழகளுக்கும் நன்றி நன்றி நன்றி! //
super!

said...

ஹலோ குசும்பு,

கிழிய விட்டுருக்கிறீர் போங்க.....

சுறுக்.. நறுக்....

:-)

said...

//இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்!!!//

Malgone maranthuteenkalea !!!!!!

But we Proud for ATS Cheif

said...

என்னை பொறுத்த வரை இது சீரியஸ் பதிவு தான், காரணம் படிக்கும் போது எனக்கு சிறு புன்னகை கூட வரவில்லை

said...

//இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று டைட்டில் மட்டும் போடாமல் சண்டை அனைத்தையும் லைவ் ரிலேவாக போட்டு
தீவிரவாதிகளுக்//

போட்டாங்களே.. டைம்ஸ் நவ் நினைக்கிறேன்.. first time in media" pictures of terrorists போட்டாங்க.