Wednesday, October 15, 2008

நேற்று நடந்த அனைத்துகட்சி கூட்டம் ஒரு கற்பனை!!!

கலைஞர்: கழகத்தின் கோரிக்கையை ஏற்று கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் நன்றி, நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் ஆகவே நாம் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்.

ஜீ.கே.மணி: ஏற்கனவே தாங்கள் கேட்டுக்கொண்ட படி தந்தி அனுப்பும் போராட்டம் என்ன ஆனது அதுக்கு வெள்ளை அறிக்கை தரவேண்டும் என்று தமிழ் குடிதாங்கி கேட்க சொல்லி இருக்கிறார்.

கலைஞர்: தந்திகள் லட்சகணக்கில் கழக தொண்டர்களும், பொதுமக்களும் திருவிழா கூட்டல் அலையலையாய் அஞ்சல் அலுவலகத்துக்கு சென்று தந்தி அனுப்பினார்கள், ஆனால் அதில் சிறு பிழை நடந்துவிட்டது, அனுப்பியவர்கள் அனைவரும் தமிழிலேயே அனுப்பிவிட்டார்கள் பிரதமருக்கு தமிழ்படிக்க தெரியாது, அனுப்பியவர்களுக்கு ஹிந்தி தெரியாது, இதுவே கனிமொழி அமைச்சர் ஆகி இருந்தால் அவருக்கு அனைத்தையும் கவிதை நடையில் மொழிப்பெயர்த்து படிச்சு காட்டி இருப்பார், அதனால் கனி மொழிக்கு விரைவில் அமைச்சர் பதவி வாங்கியபின் அனைத்து தந்திகளையும் படிச்சு காட்டி அவசர நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்புமணி: புகைப்பிடிப்பது குற்றம் என்று சொல்லி இங்கு புகையை தடை செய்து இருக்கிறோம், ஆனால் இலங்கையில் ஆயிரம் ஆயிரம் குண்டுகள் போட்டு அந்த புகையினால் பலர் உயிர் இழக்கிறார்கள், ஆகவே பொது இடத்தில் குண்டு போடக்கூடாது என்று நாங்கள் ஆட்சிக்கு வரும் பொழுது ஒரு சட்டம் போடுவோம்.

கலைஞர்: அன்பு தம்பி இலங்கையில் புகையால் தமிழர்கள் மடிவதில்லை சிங்களரோடு இருக்கும் பகையால் தான் மடிகிறார்கள்!

வரதராஜன்: இதுக்காகதான் நாங்கள் அனு ஆயுத ஒப்பந்ததுக்கு எதிப்பு தெரிவித்தோம், அந்த ஓப்பந்தத்தில் இருக்கும் 123 என்ன சொல்லுதுன்னா அதில் இந்தியா கையெழுத்து போட்டபின் இலங்கைக்கு தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்துக்கு எதிர்த்து குரல் எழுப்புவதை அது தடை செய்யும்.

கலைஞர்: வரது அதில் இருந்து வெளியே வாங்க ஒப்பந்தம் எல்லாம் முடிஞ்சு கையெழுத்தும் போட்டு முடிச்சாச்சு!!!

வரதராஜன்: என்னது கையெழுத்து போட்டுவிட்டாங்களா? (என்பதையே திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருக்கிறார்!)

கலைஞர்: காங்கிரஸ் சார்பில் ஒன்னும் கருத்து சொல்லவில்லையே!

காங்கிரஸ்1: அன்னை சோனியா...
காங்கிரஸ்2: இருங்க நாங்க சொல்றோம்...
காங்கிரஸ்3: என்னைதான் பேச சொல்லி இருங்காங்க ...........
காங்கிரஸ்4: உனக்கு என்னய்யா பேச தெரியும்..............
காங்கிரஸ்5: ராகுல் காந்தி என்ன சொல்லி அனுப்பி...

டம் டும் டிஸ்யும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(சண்டை)

கலைஞர்: அமைதி அமைதி இலங்கை வாழ் தமிழர் நலன் காக்க கூடிய இடத்தில் நாமே அடிச்சுக்கலாமா? சகோதரயுத்தம் வேண்டாம் காங்கிரஸ் சார்பா நானே கருத்து சொல்லிக்கிறேன் நீங்க எல்லாம் பேசாம வேடிக்கை பாருங்க.

G.K.மணி: எங்கள் கருத்து எங்கள் தலைவர் கருத்து என்னவென்றால் கொழும்பு விரிவாக்க பணியை நிறுத்தவேண்டும் மீறி அரசு விரிவாங்கம் செய்ய நினைத்தால் ஆங்காங்கே போராட்டம் நடைப்பெறும்.

கலைஞர்: என்னது கொழும்பு விரிவாக்க பணியா? என்ன மணி சொல்றீங்க.

G.K.மணி: தவறு நடந்துவிட்டது தலைவர் வைத்து இருக்கும் ரெடிமேட் அறிக்கை இது, அரசு திட்டம் எது வந்தாலும் அதை எதிர்க்க வைத்து இருந்த அறிக்கைமாடல் இது, சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்பதை மட்டும் மாற்றி துனை நகரம், என்று மாற்றி அறிக்கை கொடுப்போம். அதோ போல் தவறு நடந்துவிட்டது.

கலைஞர்: திருமா நீங்க சொல்லுங்க

திருமா: வாழ்க தமிழ், தமிழுக்காக வாழும் கலைஞர் வாழ்க!!!

கலைஞர்: இதையேதான் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கீங்க இங்க வேறு ஏதாவது சொல்லுங்க.

திருமா: வேறு ஏதுமா? ம்ம்ம் எழுதிக்கிட்டு வரவில்லையே!

அன்புமணி: மக்கள் வணக்கம், தமிழ்பேசு தங்ககாசு.....

கலைஞர்: என்ன அன்புமணி ?

அன்புமணி: மன்னிக்கவும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்சி நிரலை படிச்சிட்டேன்.

கலைஞர்: 8 மணிக்கு முன்பு கூட்டத்தை முடிக்கவேண்டும் 8.30க்கு ஒரு கேசட் வெளியீட்டு விழாவும் அதன் பிறகு மானாட மயிலாடவும் இருக்கு பார்க்க போகனும்.ஆகையால் அனைவரது கோரிக்கையும் ஏற்று பிரதமருக்கு அனைவரும் SMS அனுப்புவோம் என்று முடிவு எடுக்கப்படுகிறது.

அன்புமணி: அய்யய்யோ அப்பா திட்டுவார் அவரு சொன்னதை சொல்லாமல் விட்டால், அவரு இன்னும் இருவாரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டஎங்கள் கட்சி எம்.பிகள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்று சொல்ல சொன்னார்.

ஜி.கே.மணி: தம்பி அப்பா கொடுத்த பேப்பரில் எங்கள் கட்சி எம்.பிகள் என்றுதானே இருக்கு, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட என்று வார்த்தை இல்லையே!

அன்புமணி: சும்மா இருங்க உங்களுக்கு என்னா நீங்க எம்.எல்.ஏ அப்படி சொல்லாம விட்டா என்னையும் நாளை ராஜினாமா செய்யசொல்லிடுவார்!

கலைஞர்: என்ன சோதனை இது ஏதோ ஒரு கூட்டம் கூடி ஒரு கடிதம் எழுதலாம், இல்ல எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என்று பயங்கர போராட்டங்களை அறிவிக்கலாம் என்று நினைச்சால் இப்படி ஒரு குண்ட தூக்கி போடுகிறார்களே! அவ்வ் இருந்தாலும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட என்று ஒரு வார்த்தைய சேர்த்து இருக்கிறார். கனிமொழி தப்பிச்சாங்க!!!

கலைஞர்: வரும் அண்ணா பிறந்நாள் அன்று இதை அறிக்கையாக தரலாமா தம்பி!!!

சரி என்று சொன்ன அன்புமணி இல்லை இல்லை இப்பொழுதே அறிவிக்க சொல்கிறார் அப்பா, இனி அடுத்த வருடம் தான் அண்ணா பிறந்தநாள் வரும் அதுக்குள் மத்திய அரசு 5 ஆண்டு முடிவடைந்துவிடும் என்கிறார்.

வேறு வழி இல்லாமல் இதை அறிக்கையாக தருகிறார் கலைஞர்.

அனைத்து கட்சி தலைவர்களும் தடை இல்லாமல் இரு மணி நேரம் மின்சாரம் வழங்கிய அமைச்சரை பாராட்டிவிட்டு வெளியே வருகிறார்கள்.

வீரமணி: வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கவேண்டிய முடிவை தலைவர் கலைஞர் எடுத்து இருக்கிறார், அதுக்காக அவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும்.

52 comments:

said...

//கலைஞர்: என்ன சோதனை இது ஏதோ ஒரு கூட்டம் கூடி ஒரு கடிதம் எழுதலாம், இல்ல எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என்று பயங்கர போராட்டங்களை அறிவிக்கலாம் என்று நினைச்சால் இப்படி ஒரு குண்ட தூக்கி போடுகிறார்களே! அவ்வ் இருந்தாலும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட என்று ஒரு வார்த்தைய சேர்த்து இருக்கிறார். கனிமொழி தப்பிச்சாங்க!!!
//


நல்ல கற்பனை.. நல்ல நகைச்சுவை உணர்வு.. வாழ்த்துக்கள்.. சிரித்து, சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.. :))

said...

ஏ ..... ஜீப்பரப்பு...

;-)))))

said...

அட்டகாசம் போங்க....

said...

இரத்த சொந்தங்கள் அங்கே உயிருக்கும் உடமைக்கும் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அது குறித்து நம்மால் ஒன்றும் கிழிக்க முடியாவிட்டாலும் ,குறைந்த பட்சம் அதை வைத்து வேடிக்கை செய்யாமல் இருக்கலாம் .இதை வைத்து நகைச்சுவை பண்ணுவதும் ரெண்டு பேர் வந்து வயிறு குலுங்க சிரிக்குறதும் கேவலமாக இல்லை?

என்ன ஜென்மங்களோ?

said...

குசும்பின் உச்சகட்டம் இது.. செம ரகளையா இருக்கு.. யாருக்கு தெரியும் நெஜமாவே உள்ளாற இதுகூட நடந்திருக்கலாம்.. :)))

said...

ஜோ / Joe said...
இரத்த சொந்தங்கள் அங்கே உயிருக்கும் உடமைக்கும் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அது குறித்து நம்மால் ஒன்றும் கிழிக்க முடியாவிட்டாலும் ,குறைந்த பட்சம் அதை வைத்து வேடிக்கை செய்யாமல் இருக்கலாம் .இதை வைத்து நகைச்சுவை பண்ணுவதும் ரெண்டு பேர் வந்து வயிறு குலுங்க சிரிக்குறதும் கேவலமாக இல்லை?

என்ன ஜென்மங்களோ?///

அங்கு நடக்கும் பிரச்சினையை ஏதும் கிண்டல் செய்யவில்லையே,அப்படி செய்யவும் மனசு வராது, நம் தலைவர்கள் இதை வைத்து அரசியல் செய்வதைதான் கிண்டலாக சொல்லி இருக்கிறேன்.

said...

//
ஜோ / Joe

இரத்த சொந்தங்கள் அங்கே உயிருக்கும் உடமைக்கும் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அது குறித்து நம்மால் ஒன்றும் கிழிக்க முடியாவிட்டாலும் ,குறைந்த பட்சம் அதை வைத்து வேடிக்கை செய்யாமல் இருக்கலாம் .இதை வைத்து நகைச்சுவை பண்ணுவதும் ரெண்டு பேர் வந்து வயிறு குலுங்க சிரிக்குறதும் கேவலமாக இல்லை?

என்ன ஜென்மங்களோ?
//

பதிவ போட்டா அணுபவிக்கணும்.

said...

ஜோ / Joe

இரத்த சொந்தங்கள் அங்கே உயிருக்கும் உடமைக்கும் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அது குறித்து நம்மால் ஒன்றும் கிழிக்க முடியாவிட்டாலும் ,குறைந்த பட்சம் அதை வைத்து வேடிக்கை செய்யாமல் இருக்கலாம் .இதை வைத்து நகைச்சுவை பண்ணுவதும் ரெண்டு பேர் வந்து வயிறு குலுங்க சிரிக்குறதும் கேவலமாக இல்லை?

என்ன ஜென்மங்களோ?
//

பதிவ போட்டா அணுபவிக்கணும்.

சொல்லப்போனால் நம் அரசியல்வாதிகள்தான் இதை காமெடி ஆக்குகிறார்கள்..

said...
This comment has been removed by a blog administrator.
said...

சான்சே இல்லை
கலக்கல்

said...

கார்க்கி மன்னிக்கவும், இதேபோல் அனைவரும் கமெண்ட் போட்டால் சண்டை ஆகிவிடும்.

கமெண்டை டெலிட் செஞ்சதுக்காக மீண்டும் ஒரு முறை மன்னிக்கவேண்டுகிறேன்.

said...

//கனிமொழி அமைச்சர் ஆகி இருந்தால் அவருக்கு அனைத்தையும் கவிதை நடையில் படிச்சு காட்டி இருப்பார்//

சாதாரணத் தமிழ் புரியாத பிரதமர், கவுஜ நடைல படிச்சா மட்டும் புரிஞ்சிப்பாரா?

said...

குசும்பன் said...

கார்க்கி மன்னிக்கவும், இதேபோல் அனைவரும் கமெண்ட் போட்டால் சண்டை ஆகிவிடும்.
//


ஏய் இங்க பார்ரா குசும்பனுக்கு பயத்தை பார்ரா :)


கலைஞர்,வைகோ, இப்படி எல்லோரையும் கலாய்க்கிறோம் 'ஜோ'வ கலாய்க்க சும்மா எறங்குங்க களத்தில் தல

(உசுபேத்தி விட்டுடு எஸ்கேப்பு ) :)

said...

ஜோ,

உங்கள் உணர்வுகள் புரிகிறது...நம் சொந்தங்களுக்காக நாம் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டும் தான்...

ஆனால் எப்போதும் உணர்வையே வெளிப்படுத்திக்கொண்டிருக்க முடியுமா ?

வலைப்பதிவுகள் எழுதும் அனைவரும் ஓ என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கவேண்டுமா என்ன ?

அதிகம் அரசியல் நிலைப்பாடு இல்லாதவர்கள் லைட்டாக பதிவு போடும்போது லைட்டாகவே எடுத்துக்கொள்வோமே ?

சாவு வீட்டில் கூட ரசம் வைத்து சாப்பிடுவதில்லையா என்ன ?

said...

கமெண்டை டெலீட் செய்ய அவசியம் இல்லை...

ஜோ எப்போதும் கொஞ்சம் சூடானவர் தான்...ஆனால் லைட்டாகவே எடுத்துக்கொள்வார்...

:)))))

Anonymous said...

//காங்கிரஸ்1: அன்னை சோனியா...
காங்கிரஸ்2: இருங்க நாங்க சொல்றோம்...
காங்கிரஸ்3: என்னைதான் பேச சொல்லி இருங்காங்க ...........
காங்கிரஸ்4: உனக்கு என்னய்யா பேச தெரியும்..............
காங்கிரஸ்5: ராகுல் காந்தி என்ன சொல்லி அனுப்பி...

டம் டும் டிஸ்யும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(சண்டை)//

CLASSICAL COMEDY

said...

//கார்க்கி மன்னிக்கவும், இதேபோல் அனைவரும் கமெண்ட் போட்டால் சண்டை ஆகிவிடும்.

கமெண்டை டெலிட் செஞ்சதுக்காக மீண்டும் ஒரு முறை மன்னிக்கவேண்டுகிறேன்.
//

மன்னிப்பு!!! தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை.















sorry சொல்லுங்க..

said...

கலைஞர்,வைகோ, இப்படி எல்லோரையும் கலாய்க்கிறோம் 'ஜோ'வ கலாய்க்க சும்மா எறங்குங்க களத்தில் தல
//

அட அவ்ங்களையும் இவரையும் ஒன்னா சேர்க்காதீங்க.. இவ்ரு சொன்ன விதம் வேறன்னான்லும் உணர்வு சரிதான்..

said...

நகைச்சுவைப் பதிவானாலும், அரசியல் தலைவர்களுக்கு இது ஒரு சவுக்கடி. ஈழத்தில் சாவது தமிழன் என்று உருகாமல் போனாலும், சகமனிதன் என்றாவது இவர்கள் நினைக்கவேண்டும். இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகள் தடுக்கமுடியாது போனால், நாம் தமிழன் என்றோ, மனிதன் என்றோ சொல்லிக்கொள்ள தகுதியற்றவர்கள்.

said...

சூப்பர் காமெடியை ஒரே ஒரு கமண்டால சீரியஸ் பதிவா மாற்றிய ஜோ'விற்கு என் கண்டனங்கள் !!

said...

கற்பனை நல்லார்க்கு

said...

அட அவ்ங்களையும் இவரையும் ஒன்னா சேர்க்காதீங்க.. இவ்ரு சொன்ன விதம் வேறன்னான்லும் உணர்வு சரிதான்..
//

இருங்க பதிவ படிச்சிட்டு வந்து சொல்கிறேன் :)

said...

//காங்கிரஸ் சார்பா நானே கருத்து சொல்லிக்கிறேன் நீங்க எல்லாம் பேசாம வேடிக்கை பாருங்க.//

superrrrrrrr

said...

//கார்க்கி மன்னிக்கவும், இதேபோல் அனைவரும் கமெண்ட் போட்டால் சண்டை ஆகிவிடும்.

கமெண்டை டெலிட் செஞ்சதுக்காக மீண்டும் ஒரு முறை மன்னிக்கவேண்டுகிறேன்.//

சீரியசாகவே சொல்கிறேன். இதை முதலில் டெலிட் செய்யுங்கள்

Anonymous said...

நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் ஆகவே நாம் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்.
//

இங்கு நாம் என்பது குடும்பத்தை குறிக்குமா ..?

புதசெவி

Anonymous said...

பொது இடத்தில் குண்டு போடக்கூடாது என்று நாங்கள் ஆட்சிக்கு வரும் பொழுது ஒரு சட்டம் போடுவோம்.
//

அப்ப உங்க சொந்த இடத்தில் குண்டு போடலாமா..:)

Anonymous said...

வீரமணி: வரலாற்றில் பொன் எழுத்துக்களா பொறிக்கவேண்டிய முடிவை தலைவர் கலைஞர் எடுத்து இருக்கிறார்,
//

ஆகவே கலைஞர் அவர்களுக்கு எடைக்கு எடை இந்த வெடிகுண்டு மாலையை போடுகிறேன் :)

said...

உண்மையில் இப்படி நடந்தாலும் நடக்கும்... :)
காமெடியாக இருந்தாலும் அதற்குள் உண்மை தான் உள்ளது.

said...

உண்மையை விட்டு வெகு தொலைவில் சென்றுவிடாத நல்லதொரு கற்பனைக்கு நன்றி.

Anonymous said...

தமிழ் பிரியன் said...

உண்மையில் இப்படி நடந்தாலும் நடக்கும்... :)
காமெடியாக இருந்தாலும் அதற்குள் உண்மை தான் உள்ளது.
//

ரிப்பிட்டேய்ய்ய்


(மங்களூர் சிவா)

said...

பொன் எழுத்தால் பொறிக்கவேண்டிய பேச்சுக்கு எடைக்கு எடை தங்கம் விக்கிற விலைக்கு தங்கமா ?

வீரமணி கொடுப்பார், அவர் தான் பெரும் பணக்காரர் ஆச்சே !

said...

Sirji,

Who is that black-sheep who gave the complete information of the All party conference ? or did you hide any mic there ?

said...

Sirji,

Who is that black-sheep who gave the complete information of the All party conference ? or did you hide any mic there ?

said...

பதிவை பத்தி எதுனா சொன்னா யார்னா அடிக்க வந்துடுவாங்க.. நமக்கு ஏன் வம்பு?

ஆனாலும் குசும்பனை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.. சந்துல சிந்து பாடிட்டிங்க இல்ல மாம்ஸ்.. கவனிக்கிறேன் :))

Anonymous said...

பொடியன்-|-SanJai said...

பதிவை பத்தி எதுனா சொன்னா யார்னா அடிக்க வந்துடுவாங்க.. நமக்கு ஏன் வம்பு?
//

அடிக்க மாட்டாங்க சும்மா சொல்லுங்க




(ஆட்டோ மட்டும் தான் வரும் :) )

said...

ஜோ.. உணர்ச்சி வசப் படாதிங்க.. பேரணி பொதுக் கூட்டம் அனைத்டுக் கட்சி கூட்டம் உண்ணாவிரதம்னு சீன் காட்டறது தான் உண்மையான அக்கறைனா அதை செய்ய குசும்பனுக்கும் ரொம்ப நேரம் ஆகாது. வாரத்துகு ஒரு முறை நடக்கும் எதாவது போராட்டங்களில் கலந்துகொண்டு விட்டு ஒரு போட்டோ எடுத்து பதிவிட முடியும்.

ஆனால் அப்படி செய்கிற எல்லாரும் சரியான ஏமாற்றுப் பேர்வழிகள். ஈழப் பிரச்ச்னை இன்று வந்ததா?

உண்மையான அக்கறை இருந்தால் வைகோ ராமதாஸ் திருமாவளவன் போன்றவர்கள் தேர்தலை புறக்கணித்து தங்கள் எதிப்பை காட்டி இருக்க வேண்டும். அவ்வாறு எதாவது செய்தார்களா? தன்க்காள் இருபபிக் காட்டிக் கொள்ள அவர்கள் இலங்கைத் தமிழர்களை பயன்படுத்துகிறார்கள். பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இதைவிட வலி இருக்க முடியாது.

சும்மா பம்மாத்து பண்றவங்களை பார்த்து ஏமாறாம , பிரசனையை தொடாமல் இந்த அற்புத தலைவர்களின் வழக்கமான செய்கையை மட்டுமே கிண்டல் செய்திருக்கும் குசும்பனை ரசியுங்கள்.

சும்மா உணர்ச்சிவசப் பட்டு அந்த தலைவர்களின் ஏமாற்று தனத்திற்கு துணைபோய்க் கொண்டே இருக்காதிங்க. அவங்களால உருப்படியா ஒன்னும் கிழிக்க முடியாது.

..சரி.. அப்திவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்.. இதோடு நிறுத்திக் கொள்கிறேன்..

said...

//தன்க்காள் இருபபிக் காட்டிக் கொள்ள//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அது ”தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள” :((

Anonymous said...

தலைவர் கலஞருக்கு அடுத்து தம்பி ஸ்டாலினும் நானும் எப்படி அடிச்சிக்கிறோம்னு மட்டும் பாருங்க. அப்போ இந்த குசும்பன் எதுனா நக்கல் அடிக்கட்டும். மேயர் தேன்மொழிய வச்சி அடிக்கிறேன்.

said...

//இலங்கையில் புகையால் தமிழர்கள் மடிவதில்லை சிங்களரோடு இருக்கும் பகையால் தான் மடிகிறார்கள்!//
:))

said...

அண்ணே நீயுமா ;(

said...

:-))

said...

//குசும்பின் உச்சகட்டம் இது.. செம ரகளையா இருக்கு.. யாருக்கு தெரியும் நெஜமாவே உள்ளாற இதுகூட நடந்திருக்கலாம்.. :)))//



கூட்டத்துல இப்ப்டித்தான் பேசியிருப்பாங்களோ???..

Anonymous said...

தமிழ்நாட்டு தலைவர்களிடமும், மக்களிடமும் வேண்டுகோள்
விடுதலைப் புலிகள் தமது இரும்புக் கதவை எப்போ திறக்கின்றார்களோ உடனடியாக மக்கள் வெளியேறி தத்தம் இருப்பிடங்களுக்கு போகத் தயாராக உள்ளனர்.
அன்புள்ள தமிழ்நாட்டு தலைவர்களே, மக்களே!

விடுதலைப் புலிகளால் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளி செல்லவிடாது அவர்களின் பொறிக்குள் அகப்பட்டுள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழ் நாட்டின் முதல் கடமையாகும். விடுதலைப் புலிகளை காப்பாற்றும் நோக்கோடு தற்போது சென்னையில் தங்கியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் தவறான வழிநடத்தலைத் தவிர்த்து தமிழ் நாட்டு மக்கள் தற்போது இலங்கையில் நிலவும் நிலைமை பற்றிய உண்மையை அறிந்திருக்க வேண்டிய இரண்டாவது கடமையாகும்.

தமிழக தலைவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பொது மக்கள் ஆகியோர் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள துன்பகரமான நிலைமைபற்றி அக்கறையும் மனக்கிலேசமும், உற்சாகமும் கொண்டுள்ளமை எனது உள்ளத்தை ஆழமாக தொடுகிறது. ஆனால் தற்போதைய நிலைமையை விளக்குவதற்கு கையாளப்பட்ட வார்த்தை எனக்கு அதிர்ச்சியை தருகிறது. வேண்டுமென்றோ அன்றி வேறு வழி மூலமோ யாரையும் யார் ஒழித்துக்கட்ட எந்த முயற்சியும் இலங்கையில் எடுக்கவில்லை. யுத்த பிரதேசத்தில் சில அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் இதை இன ஒழி;ப்பாக வர்ணிப்பது தவறானதாகும். அரசுக்கும், நாட்டுத் தலைவர்களையே விட்டு வைக்காத கொடூரமான பயங்கரவாத இயக்கமாகிய விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஓர் யுத்தம் நடைபெறுகிறது. தமது நாட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பூதவுடலை உருக்குலைந்த சதைப்பிண்டமாக எவ்வாறு கையேற்றோம் என்பதை தமிழகம் இவ்வளவு இலகுவாக மறந்திருக்க முடியாது. இலங்கையில் சிங்கள தமிழ் பிரதேசங்களில் இது போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான பௌத்தர்களும், இஸ்லாமிய சகோதரர்களும் அவரவர் மத ஸ்தனங்களில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் நாட்டின் உதவியோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அகப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க தவறினால் அவர்களுக்கும் இதேபோன்ற நிலைமை ஏற்படலாம்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கேற்ப பொருத்தமான ஓர் நிலைப்பாட்டை எடுக்க தமிழ்நாட்டுக்கு இன்னும் காலம் கடக்கவில்லை. பாக்குத் தொடுவாய்க்கு அப்பால் வாழும் மக்களுக்கு தமிழ்நாடு எடுக்கக்கூடிய நடவடிக்கை சாதகமானதாக அமைய வேண்டுமேயன்றி பாதகமாக அமையக்கூடாது என்பதை வற்புறுத்தி கூற விரும்புகின்றேன். யுத்தமுனை தற்போது கிளிநொச்சிக்கு நகர்ந்துள்ளமையால் கிளிநொச்சியின் களநிலைமை பற்றி நன்கு அறிந்து கொண்டால் மட்டுமே நம் பிரச்சினை பற்றி எவரேனும் பேச முடியும். தமிழ்நாட்டு தலைவர்கள் சிலரும் மக்கள் பலரும் கடந்த பல ஆண்டுகளாக மிகைப்படுத்தப்பட்ட உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளை விடுதலைப் புலிகளில் அக்கறை கொண்ட சிலர் அவர்களை மேம்படுத்தும் நோக்குடன், அவிழ்த்து விட்டமையால் பல வருடங்களாக அவர்கள் தப்பாக வழிநடத்தப்பட்டு வந்துள்ளனர். ஆனால் இலங்கை தமிழரின் பிரச்சினைக்கு அவர்களுக்கு ஏற்புடையதான நியாயமான ஓர் தீர்வை சிபாரிசு செய்யக்கூடிய அறிவுமிக்க தலைவர்கள் தமிழ் நாட்டில் நிறைய உள்ளனர். துரதிஷ்டவசமாக விடுதலைப் புலிகள் விடாப்பிடியாக கொண்டிருந்த பிரிவினை கோரிக்கையினால் இவ் வாய்ப்புக்கள் உபயோகிக்காது தவறவிடப்பட்டது.

இக்கட்டத்தில் தமிழ்நாடு ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட முடியுமானால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி தமிழ் நாட்டவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக கடமை எனக்குண்டு. கிளிநொச்சி மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவன் நானே என்பதால் கிளிநொச்சியுடன் எனக்குள்ள தொடர்பை அறிந்த யாரும் எனது நாணயத்துக்கு சவால்விட மாட்டார்கள்.

நான் 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் உள்ளேன். கிளிநொச்சி மக்களுடன் உண்டு வாழ்ந்தவன். முதலில் என்னை அம் மக்கள் கிளிநொச்சி கிராமசபைத் தலைவராகவும், அதன் பின் கிளிநொச்சி பட்டினசபைத் தலைவராகவும் கடைசியாக என்னை தமது பிரதிநிதியாக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினராக 1970ம் ஆண்டு ஜூலை மாதம் தெரிவு செய்தனர். 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏனைய 17 தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பாராளுமன்றத்தின் காலை எல்லையை ஆறு ஆண்டுகளுக்கு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் நீடிப்பதை ஆட்சேபித்து பதவியை ராஜினாமா செய்தோம். இரண்டாவது உலக யுத்தத்தின் போது நடந்தது போல் உலக யுத்த காலத்தை தவிர வேறு சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற காலத்தை நீடிக்கும் வழக்கம் எந்த நாட்டிலும் நடைபெறவில்லை. இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு இதுவாகும். அவர்கள் 18 பேரின் இடங்கள் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் காலியாகவே இருந்தன. இவ் வேண்டுதல் மிதவாத தமிழ் அரசியற் கட்சியாகிய இக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போதைய தலைவராக பணியாற்றி வருவபவருபவரிடமிருந்து வருகிறது..

கடந்த சில ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் தம் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தமிழ் மக்களை விடுவித்துத் தருமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், பல்நாட்டு தலைவர்கள், பல் நாட்டுத் தூதுவர்கள், சமய குரவர்கள் போன்றோரை வேண்டி வந்துள்ளேன். இம் மக்கள் தம் ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள் அத்தனையும் இழந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருவரின் கற்பனைக்கெட்டாத அளவுக்கு அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன. தங்கு தடையின்றி அவர்கள் பலாத்காரமாக தமது அணிக்கு ஆட்களைச் சேர்;த்தனர். முதியோரை கூட விட்டு வைக்காது ஏதோ பயிற்சிகளை பலாத்காரமாக கொடுத்தனர். அவர்கள் கடத்தியவர்கள் அநேகரை காணவில்லை. அவர்களிடம் சித்திரவதை முகாம்களும், இருட்டறை முகாம்களும் இருப்பதோடு அவர்கள் சித்திரவதைக்கு கையாளும் முறை நாகரீக உலகில் அறியாதவையாகும். அவர்கள் சித்திரவதைக்கு கையாளும் முறைகளில் ஒன்று முக்கோண வடிவம் கொண்ட முட்கம்பியால் சுற்றப்பட்ட ஓர் கூடு. தண்டனைக்குரியவரின் உயரத்திலும் குறைவான அக் கூட்டுக்குள் விடப்படுவார். கை கால் அசைக்கவோ, நிமிர்ந்து நிற்கவோ போதிய இடம் அக்கூட்டுக்குள் இருக்காது. இருட்டறைக்குள் பாம்பை விடுவது மற்றும் ஓர் முறையாகும். அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களின் ஒவ்வொரு வீடும் மரண ஓலம் கேட்கும் வீடாகும். புலிகளின் இயக்கத்தில் சேர்வதை தடுக்கும் பெற்றோரை ஈவிரக்கமின்றி தாக்குகின்றனர். இரும்புத்திரை பிரதேசம் என வர்ணிக்கப்படும் அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடப்பவை. வெளி உலகறிய வாய்ப்பில்லை. என்னுடைய இக் குற்றச்சாட்டை சரியென தற்போது தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன். அத்துடன் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அடிமைகள் போல் வாழும் தமிழ் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை அவர்கள் ஆமோதிக்க வேண்டும். தவறின் அவர்கள் இலங்கை சம்பந்தமாக நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாது கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்களின் உணர்வுகளை தூண்டும் பேச்சுக்கள் தமிழ் நாட்டில் தவிர்க்கப்பட வேண்டும். 50 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்வதால் இவர்களுடைய பேச்சுக்கள் அவர்களுக்கு ஓர் சங்கடமான நிலைமையை உருவாக்கலாம். இப்; பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தால் மோசடி மூலம் தெரிவாகி விடுதலைப் புலிகளின் பினாமிகளாக செயற்படுகிறார்களே அன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அல்ல. என்னுடைய கூற்றை யாரும் மறுத்துரைப்பின் அவர்களை கடந்த தேர்தல் காலத்தில் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு குழுவாக செயற்பட்ட நான்கு அமைப்புக்களி;ன் அறிக்கைகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அக் குழுக்களில் ஐரோப்பிய யூனியனும், பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளும், வெளிநாட்டிலிருந்தும் வந்திருந்தனர். உள்ளுர் அமைப்புக்களாக பவ்ரல், சி.எம்.ஈ.வி ஆகியவை நடந்த தேர்தலை தள்ளுபடி செய்து புதிய தேர்தலை நடத்த வேண்டுமென சிபாரிசும் செய்திருந்தன.

சர்வதேச சமூகத்திடம் பல தடவை நான் வேண்டுகோள் விடுத்தும் அவர்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் புகும் அனுமதியின்மையால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் செல்ல அனுமதியிருந்ததே அன்றி அதேபோன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு எவரும் போகக்கூடிய மாற்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கவில்லை. அதன் விளைவாக விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தோடு, அரச கட்டு;ப்பாட்டுப் பிரதேசத்தையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக் கூடிய வாய்ப்பு இருந்தது. அவர்கள் பிரதேசத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகள் வெளிவருவதே இல்லை. விடுதலைப் புலிகளே அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் ஆதிக்கம் செலுத்தி வந்தமையால் அங்கே நடைபெறும் அனேக மனித உரிமை மீறல்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கையில் நடைபெறும் அனைத்து மனித உரிமை மீறல்களும் விடுதலைப் புலிகளால் ஏற்படுவதாக நான் கூற வரவில்லை. நான் கூறுவதெல்லாம் மனித உரிமை மீறல்களில் பெரும் பகுதிக்கு இவர்களே பொறுப்பென்றும் அவர்களின் நடவடிக்கையால் உண்மையான குற்றவாளிகள் பிடிபடாமல் தப்பித்துக் கொள்கின்றார்கள் என்பதேயாகும். தமிழ் பொலிஸ் அதிகாரிகள் பலரை விடுதலைப் புலிகள் ஏற்கனவே கொன்று விட்டனர். புதிதாக எவரும் பொலிசாக விண்ணப்பிக்க முடியாது தடை விதித்திருந்தனர். அதன் விளைவாக மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள தமிழ் அதிகாரிகள் இருப்பதால் தமிழ் பிரதேசத்தில் இயங்கும் அநேக பொலிஸ் நிலையங்கள் சிங்கள அதிகாரிகளின் கீழே இயங்கி வருகின்றன. தவறுதலாக ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் ஏற்பட்ட மரண விசாரணையை நடத்த ஒரு சிங்கள பொலிஸ் அதிகாரி சென்றபோது நிராயுதபாணியாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் எதுவும் இல்லாமலும் வரவேண்டுமென சில இளைஞர்கள் வற்புறுத்தியதற்கு இணங்க பொதுவாக நல்ல பெயருடன் செயற்பட்ட இவ் அதிகாரி சென்ற போது சொற்ப நேரத்துக்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீதியில் வீசப்பட்டிருந்த அவரது புகைப்படம் விடுதலைப் புலிகளின் சார்பான இணையத் தளத்தில் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இன்னொரு சிங்கள அதிகாரி சுதந்திரமாக செயற்பட முடியுமா? இச் சம்பவம் ஏன் எப்படி? குற்றவாளிகள் பிடிபடாமல் தப்பிக் கொள்கின்றனர் என்பதற்கு ஒரு உதாரணமாகும். மேலும் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் யுத்தம் நடைபெறுகிறது. அரசுடன் சம நிலையை கோரி நிற்கும் விடுதலைப் புலிகளை யாரால் என்ன செய்ய முடியும்? விடுதலைப் புலிகள் விமான மூலம் குண்டுபோடும் போது அரசு படைகள் விமானத் தாக்குதல் நடத்தும் போது அவர்களை எவ்வாறு குற்றம் கூற முடியும்? இருப்பினும் விமானத் தாக்குதலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் வேளையில் அதைச் சுட்டிக்காட்ட நான் தவறவில்லை. இரவு வேளையில் குண்டுத் தாக்குதலை தவிர்க்குமாறு விடப்பட்ட எனது கோரிக்கைக்கு அரசு செவிமடுத்து வந்துள்ளது.

இனப்படுகொலையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதென்ற விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டு மிக அபாண்டமானது. 50 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்கின்றார்கள். அவர்களில் அநேகர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பியோடியவர்களே. ஓர் இனக்கலவரத்தை தூண்டுவதற்கு புலிகள் எடுத்த பல்வேறு முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தது. சிங்கள பிரதேசத்தில் புலிகளால் மேற்கொள்ளப்படும் கிளேமோர் தாக்குதல், அரச படையினரையும், பொது மக்களையும் இலக்கு வைத்து இனக்கலவரத்தைத் தூண்டும் முயற்சிகளாக அமைகின்றன. இத்தகைய சம்பவங்களில் அப்பாவி பொது மக்கள் பலியாகின்றனர். விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள், கல்விமான்கள், அதிபர்கள், வர்த்தகர்கள் பல்வேறு இயக்கங்களின் உறுப்பினர்கள் போன்றோர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள். ஒப்பிட்டுப் பார்ப்பின் இத்தகைய கொலைகள் ஒன்றேனும் சிங்கள மக்களால் செய்யப்பட வில்லை. 1983ம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜூலை கலவரமே கடைசியாக நடந்தேறிய கலவரமாகும். அதைத் தூண்டியவர்கள் கூட விடுதலைப் புலிகளே. 13 இராணுவ வீரர்களின் படுகொலையே இதற்குக் காரணமாக இருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு கொலைகள், தீ வைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் சிங்கள காடையர்களே. பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை பாதுகாத்துக் கொடுத்த பெருமை சிங்கள மக்களுக்கே உரியதாகும்.

1983ம் ஆண்டு இருந்த சனத்தொகை அரைவாசியாக குறைந்து விட்டது. சிலர் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம்களோடும், சிலர் தமிழ்நாட்டிலும், பலர் வெளிநாடு சென்று இங்கிலாந்து, ஐரோப்பியா, ஸ்கண்டிநேவியா, கனடா, அமெரிக்க போன்ற நாடுகளில் குடியேறி உள்ளனர். இலங்கைத் தமிழருக்கு விடுதலை பெற்றுத் தருவோம் என்று கூறிய போராளிகள் இறுதியில் தமிழ் மக்களை இக் கதிக்கு ஆளாக்கியுள்ளனர். இறந்த பொது மக்களும், போர் வீரர்களும் ஒரு லட்சத்துக்கு மேல் ஆகும். பல்லாயிரக்கணக்கானோர் வாழ்விழந்தவர்களாகவும் விதவைகளாகவும், கை கால்கள் கண்பார்வையை இழந்துள்ளவர்களாகவும் உள்ளனர். விடுதலைப் புலிகளின் கணக்கின்படி தமது போராளிகள் 20,000 பேருக்கு மேற்பட்டவர்களை போர்முனையில் பலிகொடுத்துள்ளனர். அவர்களால் ஏற்பட்ட பொருள் சேதம் பல கோடி.

நவீன ஆயுதங்களோடு ஒரு யுத்தத்திலேயே விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர். பெரிதோ, சிறிதோ யுத்தத்துக்கு விமானங்களையும் பாவிக்கின்றனர். ஏறக்குறைய சகல உரிமைகளும் பறிக்கப்பட்டு ஒரு பகுதி மக்களை அடிமைகள் போல் வாழ வைத்துள்ளனர். சில பகுதிகளில் இந்நிலை கால்நூற்றாண்டுக்கு மேல் நீடிக்கிறது. 20-25 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் தம் வாழ்நாளில் ஒரு புகையிரதத்தை தன்னும் காணவில்லை. அவர்கள் அறிந்துள்ள தலைவர்கள் பிரபாகரன், பொட்டுஅம்மான், தமிழ்ச்செல்வன் போன்றவர்களே. சட்ட விரோதமான ஓர் பயங்கரவாத இயக்கமாகிய விடுதலைப் புலிகளின் கெடுபிடியிலிருந்து தம் மக்களை மீட்டெடுக்க வேண்டிய கடமைப்பாடு அரசுக்குண்டு. நீண்ட காலமாக இம் மக்கள் தம் விடுதலையை வேண்டி நிற்கின்றனர். சில அப்பாவி ஆண், பெண் பிள்ளைகள் அநியாயமாக கொல்லப்படுவது மிக்க வேதனையை தருகிறது. இவ்வாறு நானும் சில நண்பர்களையும், உறவினர்களையும் இழந்துள்ளேன். பிரபாகரனுடைய தற்கொலை குண்டுதாரிகள் கிளேமோர் குண்டுத் தாக்குதல் போன்ற சம்பவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது யுத்தத்தால் இறந்தவர்களி;ன் எண்ணிக்கை கணக்கில் கொள்ள முடியாதளவுக்கு மிகச் சிறியளவே. இவ்வாறு கூறுவது அரச படைகளின் தாக்குதலால் கொல்லப்படுவதற்கு அங்கீகாரம் அளிப்பதல்ல. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் யாரைக் குற்றம் காண்பது என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை. இனப்படுகொலை என்ற வார்த்தை உபயோகிப்பதை நான் எதிர்க்கிறேன். ஏனெனில் அப்படி நடக்கவில்லை. அதைத் தவிர இவ்வாறு கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போவது பெரும் துன்பத்தை தருகிறது. அதிலும் குறிப்பாக மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக்கொண்டிருக்கின்ற சில இலங்கை பா.உ க்கள் தமிழ் நாட்டில் வாழும் ஆறு கோடி தமிழ் பேசும் மக்களுக்கு பிழையான தகவலை கொடுப்பதோடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவுக்கு தவறான வழிநடத்தலை செய்வதும் வேதனையை தருகிறது.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். அவர்களிடமிருந்தே தமி;ழ் மக்களுக்கு விடுதலை வேண்டும். விடுதலைப் புலிகளிடமிருந்து பெரும் பகுதியை - கிழக்கை முற்றாகவும், வடக்கின் 75 வீத பிரதேசத்தையும் மீட்டுள்ளனர். எஞ்சியுள்ளது ஒரு சிறு பகுதியே. மன்னார் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதியில் இடம்பெயர்ந்த அத்தனை பேரும் இச் சிறு பகுதிக்குள்ளே தள்ளப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்புக்காக இவர்களை கட்டாயப்படுத்தியே இங்கே கொண்டு வந்துள்ளனர். இப்பொழுது அவர்களை மனித கேடயமாக பாவிக்கின்றனர். அவர்களுக்கு முறையான உணவோ, இருப்பிடமோ இல்லை. ஒவ்வொருவரும் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதிலேயே அக்கறை காட்டுகின்றனர். இரு தினங்களுக்கு முன் இடம் பெயர்ந்த மக்கள் இராணுவத்துக்கு பயந்தே கிளிநொச்சியை விட்டுப்போக விரும்புகிறார்கள் இல்லையென பாராளுமன்றத்தில் ஒரு த.தே.கூ உறுப்பினர் புழுகியிருந்தார். இது வெறும் புரட்டாகும். விடுதலைப் புலிகள் தமது இரும்புக் கதவை எப்போ திறக்கின்றார்களோ உடனடியாக மக்கள் வெளியேறி தத்தம் இருப்பிடங்களுக்கு போகத் தயாராக உள்ளனர். மக்களின் துன்பங்களை பொருட்படுத்தாது புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான சிருஷ்டிப்பாகும். இன்றைய நிலைப்பாடு கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா போன்ற பகுதிகளில் பெரும் பகுதி காட்டுப்பிரதேசமாகவும், விஷப் பாம்புகள் நிறைந்த பிரதேசமாகும். பலர் பாம்புக்கடியால் இறந்துள்ளனர். விரைவில் மழை காலம் ஆரம்பித்துவிடும். இக் கொடுமையை மக்களால் மேலும் தாங்க முடியாது. இதில் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. விடுதலைப் புலிகளை சமாதானப் படுத்தியோ அன்றேல் ஆதரவு நல்குவதை நிறுத்தி விடுவோம் என அச்சுறுத்தியோ புலிகளை கொண்டு மக்கள் தப்பிப் போகக் கூடிய வகையிலே பாதையை திறந்துவிட வற்புறுத்த வேண்டிய புனிதமான கடமை தமிழ் நாட்டுக்கு உண்டு. பல ஆண்டு காலமாக விடுதலைப் புலிகளின் அடிமைத்தனத்தால் பல துன்பங்களை அனுபவித்து வரும் மக்கள் மீது தமிழ் நாட்டுக்கு அக்கறை இருப்பதால் தாம் இருக்கும் இடத்தை தாமே தெரிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படை உரிமையை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். யுத்த சூழ்நிலையில் பயத்துடனும், பீதியுடனும் கிளிநொச்சியில் வாழும் மக்களை விடுதலை புலிகளுக்கு அழுத்தம் கொடுத்தேனும் தமிழ்நாடு பாதுகாக்க வேண்டும்.

இந் நாட்டிலுள்ள பிரச்சினை பல்வேறு இனத்தவர்களுக்கிடையிலானது அல்ல. ஒருவருக்குரிய உரிமைகள், சலுகைகள் போன்றவை சம்பந்தமானதால் அப்பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மேசையில் வைத்தே தீர்க்கக்கூடியவை. விடுதலைப் புலிகள் பிரிவினை கோரிக்கையை கைவிட்டு ஆயுதங்களையும் கைவிடுவார்களேயானால் பேச்சுவார்த்தையில் முக்கிய பாத்திரம் ஏற்கக்கூடிய வகையில் எம்மால் உதவ முடியும். இந்தியாவிலும், இலங்கையிலும் உலகி;ன் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் தனித் தமிழீழம் அமைப்பது முடியாத காரியமென அறிவர். இந்திய அரசு இதை வன்மையாக எதிர்க்கிறது. அதேபோன்றே சர்வதேச சமூகமும் எதிர்க்கிறது. நமக்குள்ள ஒரேயொரு வழி ஓர் சமஷ்டி அமைப்பை உருவாக்குவது அன்றேல் அதற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய சாசனத்தை ஒத்ததாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களுக்கு தமிழ் நாடு போன்று பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்ற ஓர் அமைப்பு முறையை ஏற்படுத்துவதாகும்.

மறைந்த தலைவி கௌரவ இந்திராகாந்தி அவர்களும், மறைந்த தலைவர் கௌரவ ராஜீவ்காந்தி அவர்கள் போன்றோர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய அரும் பெரும் சேவையை நன்றியுடன் நினைவு கூர்கிறோம். அதேபோன்று மறைந்த கௌரவ டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கும், கௌரவ டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் நன்றியுடையவர்களாக உள்ளோம். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முறைப்படி செயற்படுத்த வேண்டுமென இத் தலைவர்கள் கூறிய நல்ல ஆலோசனையை பிரபாகரன் ஏற்று நடந்திருப்பாரேயானால் எமது நாட்டு மக்கள் சம உரிமையுடனும் பரஸ்பர நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்பி மிகச் சிறப்பாகவும், செழிப்பாகவும் எமது நாடு மாறியிருக்கும். பல்லாயிரக்கணக்கான உயிர்களும் கோடானுகோடி பெறுமதியான சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் திரு. பிரபாகரன் அவர்கள் நாடு திரும்பியதும் நன்றி கெட்டத்தனமாக அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு மாறாக செயல்பட்டமையே நம் நாடு இன்று எதிர்நோக்கும் சீhகெட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கௌரவ செல்வி டாக்டர் ஜெயலலிதா ஜெயராமன் அவர்கள் தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் பற்றி எடுத்துள்ள நிலைப்பாட்டையும் மற்ற அத்தனை விடயங்களிலும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து மக்களை இன்றுள்ள இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுக்க உறுதி பூண்டுள்ளதையும் நாம் மிகவும் பாராட்டுகின்றோம்.

தமக்குள்ள வேற்றுமைகளை மறந்து தமது உரிமைகள், சொத்துக்கள், சுய கௌரவம் ஆகியவற்றை இழந்து நிற்கும் இலங்கைத் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டிய நேரம் தமிழ் நாட்டு தலைவர்களுக்கு வந்துள்ளது. வெளியேறும் உரிமை மறுக்கப்பட்டு கிளிநொச்சிக்குள் அகப்பட்டு தவிக்கும் மக்களை காப்பதே அவர்களின் உடனடி நடவடிக்கையாகும். இதை செய்யத் தவறின் மக்களின் எதிர்காலம் பெரும் அனர்த்தத்தில் முடியும் என்பது உறுதி.

அன்புடன்

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

http://www.thenee.com/html/161008-4.html

said...

//கழகத்தின் கோரிக்கையை ஏற்று கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் நன்றி,//

அப்படியே எல்லோரும் டொனேஷன் கொடுத்துட்டு கிளம்புங்க

said...

//நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் ஆகவே நாம் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்.//

ரஜினி என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நமிதா என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் ஆகவே நாம் அனைவரும் நமீதா கூட சேர்ந்து முடிவு எடுப்போம்.

said...

//தந்தி அனுப்பும் போராட்டம் என்ன ஆனது//

மக்கள் தப்பா புரிஞ்சிகிட்டு தண்ணி அடிக்க போயிட்டாங்களாம்

said...

//காங்கிரஸ்1: அன்னை சோனியா...
காங்கிரஸ்2: இருங்க நாங்க சொல்றோம்...
காங்கிரஸ்3: என்னைதான் பேச சொல்லி இருங்காங்க ...........
காங்கிரஸ்4: உனக்கு என்னய்யா பேச தெரியும்..............
காங்கிரஸ்5: ராகுல் காந்தி என்ன சொல்லி அனுப்பி...

டம் டும் டிஸ்யும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(சண்டை)//

இன்னும் கூட நிறைய க்ரூப் இருக்காமா

said...

//அனைத்து கட்சி தலைவர்களும் தடை இல்லாமல் இரு மணி நேரம் மின்சாரம் வழங்கிய அமைச்சரை பாராட்டிவிட்டு வெளியே வருகிறார்கள்.//

இது டாப்பு

said...

//அவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும்.//

வெங்காயம் தானே கொடுப்பாங்க

said...

நான்தான் 50

said...

கலக்கல்.. விகடன் படிச்சா மாதிரி இருக்குது.! (தயவு செய்து இதைப்பாராட்டாக எடுத்துக்கொள்ளவும்)

said...

ஐயா குசும்பரே

பின்னுறீங்க போங்க

அன்புடன்

ஈ ரா