Saturday, July 19, 2008

எவன் எக்கேடு கெட்டா எனக்கு என்னா ம--- போச்சு?

கடனை வாங்கி அல்லது உழவு மாட்டை வித்து வாங்கி விதை விட்ட நாற்று பயிறு எல்லாம் கருகி போகும் அபாயம், மேட்டூர் அனையின் நீர் மட்டமும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை,(காவிரி தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேருவதும் இல்லை) மோட்டார் போட்டு விவசாயம் செய்யும் விவசாயிக்கும் மோட்டார் போட மின்சாரம் இல்லை, வழக்கமாக கோடை காலத்தில் தான் மின் வெட்டு இருக்கும்,ஆனால் இந்த ஆண்டோ அதுக்கு முன்பிருந்தே மின் வெட்டு அதிகமாக இருக்க மின் துறை அமைச்சர் வீராசாமியோ தமிழகத்தில் மின் வெட்டே இல்லை என்று சாதித்து வந்தார். போன வாரம் வரை எங்கள் ஊரில் சராசரியாக 3 மணி நேரம் மின் தடை. முன்பாவது வீட்டில் சொல்வார்கள் மதியம் 2ல் இருந்து 4 வரை மின்சாரம் இருக்காது என்று எல்லோரும் அதுக்கு தகுந்த படி வேலையை முடித்துவிடுவார்கள், ஆனால் இப்பொழுதோ எப்பொழுது நிற்கும் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் கொடுமையின் உச்சகட்டம் எப்பொழுதும் போல் மின் தடையே இல்லை என்று அமைச்சர் சொல்லி வந்ததுதான்.ஆனால் இன்று அவரே வாயை திறந்து இனி 2 மணி நேரம் மின் வெட்டு இருக்கும் என்று. சொல்லாமலே 3 மணி நேரம்மின் வெட்டு இருந்தது இனி அறிவிப்பும் வந்தாகிவிட்டது எத்தனை மணி நேரம் மின் வெட்டு இருக்குமோ!

மீன் பிடிக்க போகும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டு கொல்லபட்டு வருகிறார்கள் உடனே 2 லடசம் நிவாரண நிதியில் இருந்து அந்த குடும்பங்களுக்கும் போய் கொண்டு இருக்கிறது அதோடு எப்பொழுதும் எழுதுவது போல் பிரதமருக்கு ஒரு கடிதத்தோடு நின்று விடுகிறது.

விளை நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது விவசாய உற்பத்தியும் மிகவும் குறைகிறது அதை தடுக்க ஏதும் வழி இல்லை விளை நிலங்களை இனி பிளாட் போட கூடாது விற்க வேண்டும் என்றால் அதை அரசு விலை கொடுத்து வாங்கி கொள்ளும் அதை பின் குத்தகைக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்கும் என்று ஏதும் உருப்படியாக சட்டம் போடலாம். இது போல்அவசர நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றால் இன்னும் சில வருடங்களில் நாம் அரிசியை இறக்குமதி செய்ய போவதுஉறுதி.

விலை வாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது, மாநிலங்களுக்கிடையே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது, விவசாயிக்கு வேண்டிய உரம் கிடைப்பது இல்லை, மின்சாரம் பற்றாகுறை, பண வீக்கம் என்று மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினை 1000 இருக்கும்பொழுது எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கு என்னா மசுரா போச்சு என்று அணு ஆயுத ஒப்பந்தத்துக்கும், அனில் அம்பானி குடும்ப பிரச்சினைக்கும் தீர்வு காண இப்ப என்ன அவசரம்? இன்னும் எத்தனை கோடி கொடுத்தாவது 12 MP களை விலைக்கு வாங்கி ஆக வேண்டும்.சரி பிரதமருக்குதான் ஆட்சியை காப்பாற்ற இம்புட்டு பிரச்சினை இருக்கு , முதல்வருக்கு அப்படி என்ன பிரச்சினை அவராவது மீனவர் படுகொலைகளை தடுத்து நிறுத்தலாமல்லவா?

அட நீங்க வேற மதுரை கேபிள் சம்மந்தமாக அழகிரி பிரச்சினை, துனை முதல்வர் பதவி சம்மந்தமாக ஸ்டாலின் பிரச்சினை, கனிமொழிக்கு எந்த இலாக்கா ஒதுக்குவது என்று குழப்பம், இது எல்லாம் பத்தாது என்று எங்களுக்கும் பதவி வேண்டும்என்று தயாளுஅம்மையாரும், ராசாத்திஅம்மாளும் வீட்டில் இப்பொழுது பிரச்சினை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க நான் வேற என்னசெய்ய முடியும்? என்ற நிலையில் அவர் இருக்கிறார் போல.

26 comments:

Anonymous said...

சரியான நேரத்தில் நல்லதொரு போஸ்ட்

Anonymous said...

//இன்னும் சில வருடங்களில் நாம் அரிசியை இறக்குமதி செய்ய போவதுஉறுதி.//

எல்லோருக்கும் இருக்கும் பயம். ஆனால் யார்தான் சரி செய்வது. நம் முன்னோர் நமக்கு தந்ததை ஒரு பாதியேனும் நம் சந்ததியினருக்கு நாம் தரப்போகிறோமா ?

said...

அவனவன் லாபம் பாக்கத்தான் அலையிறான். இவனுங்க லட்சணத்தைப் பாத்துத்தான், புஷ் தன் சொந்த லாபங்களுக்கும், அமெரிக்க லாபத்துக்கும் இவனுங்கள காசால அடிச்சு கால்ல விழ வைக்கிறான்.

நாம வழக்கம் போல ரத்தம் கொதிக்க போஸ்ட் போட்டு நம்ம கோவத்த தணிச்சுக்க வேண்டியதுதான். இதுக்கு ஒரே முடிவு, வெளியில இருந்து விமர்சனம் மட்டும் பண்ணாம, நாமளும் எதாவது ஒரு தருணத்துல அரசியல்ல எறங்கி, சுத்தம் பண்ண முயற்சிக்கனும்.

உங்க கோவத்துலயும், ஆதங்கத்துலயும் நான் பங்கெடுத்துகுறேன்.

said...

//"நாம வழக்கம் போல ரத்தம் கொதிக்க போஸ்ட் போட்டு நம்ம கோவத்த தணிச்சுக்க வேண்டியதுதான். இதுக்கு ஒரே முடிவு, வெளியில இருந்து விமர்சனம் மட்டும் பண்ணாம, நாமளும் எதாவது ஒரு தருணத்துல அரசியல்ல எறங்கி, சுத்தம் பண்ண முயற்சிக்கனும்."//

கட்டாயம் நாம அரசியல்ல இறங்கித்தான் ஆகணும்.
சினிமாகாரங்கள விட்டா, தமிழகத்த ஆளுறதுக்கு ஆளுங்களே இல்லனு ஆயிடுச்சு. இத முதல்ல மாத்துனாத்தான் தமிழ்நாடு உருப்படும்.

இங்க இருக்க எல்லா கட்சிகளும், தங்களோட சொந்த லாபத்த தவிர வேற எதயும் பார்கிறது இல்ல. அதுதான் பிரச்சனையே.

மிக நல்ல பதிவு சரவணண்.

said...

இதை எல்லாம் யோசித்து யோசித்து ரத்த கொதிப்பு வந்து விடும் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே அறிவிக்கப்படாத மின் வெட்டு இருக்கிறது.
அதை விட கொடுமை , சில பகுதிகளுக்கு மின் கட்டணம் மூன்று மாதங்களுக்கு சேர்ந்தாற்போல் வந்திருக்கிறது.இதனால் கட்டணமும் அதிகமாகிவிட , நியாயம் கேட்ட மக்களிடம் ,அப்படிதான் வரும் கட்டிவிட்டு போங்க என்று திமிராக பதில் வேறு சொல்றான் ,என்ன பண்றது??

said...

// இன்னும் எத்தனை கோடி கொடுத்தாவது 12 MP களை விலைக்கு வாங்கி ஆக வேண்டும்.//

இலைமறை காய் மறையாக இருந்த அரசியல் வியாபாரம் இப்போ இவ்ளோ வெளிப்படையா நடக்குது.அந்த 123 அக்ரிமென்ட் நாலா எந்தப்பயனும் இல்லைன்னு நம்ம அணு விஞ்ஞானிகளே அறிவிச்சப்புரமும் கூட அவங்க இவ்வளவு ஆர்வமா இருக்கும் போதே நமக்கு தெரியவேனம் இதுல எவ்ளோ பணம் வெளையாடும்னு.ஒரு அமெரிக்க அரசியல்வாதிக்கு இருக்குற நாட்டுப்பற்றுல ஒரு பத்து சதவீதம் கூட நம்ம அரசியல் வாதிகளுக்கு இல்லாம போச்சு.
நல்ல பதிவுங்க குசும்பன்.

said...

அசத்தலான பதிவு!

said...

சூப்பர் பதிவு...

'குடும்பத்தோட' ஆள்பவங்களுக்கும் பிரச்சினை, குடும்பமே இல்லாதவங்களுக்கும் பிரச்சினைன்னு இருந்தா, பாவம் அவங்களும் என்ன செய்வாங்க சொல்லுங்க!!!

said...

குசும்பன்

அருமையான பதிவு - இன்றைய நிலையை விளக்கும் பதிவு. ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கம் தெரிகிறது.

mmmmm

நிலைமை மாறும் - பொறுத்திருப்ப்போம்

said...

தலைப்பு செய்திகள்

குசும்பன் பதிவை படித்த பிரதமர் மனம் திருந்தினார். அமெரிக்காவுடனான அணு மின்சார ஒப்பந்தம் ரத்து

:)))


/
நாம வழக்கம் போல ரத்தம் கொதிக்க போஸ்ட் போட்டு நம்ம கோவத்த தணிச்சுக்க வேண்டியதுதான். இதுக்கு ஒரே முடிவு
/

said...

எவன் எக்கேடு கெட்டால் என்ன கெழவியை தூக்கி மனையில உக்கார வை!

:)))

said...

suma naru nara kezhikeerenga manbu migu mudhalvarai blogworld ellorum. enaku jolya iruku padika

said...

சூப்பரு மாமா.. :)

said...

யோவ் கும்மி பதிவுன்னு ஓடியாந்தேன், இப்படி பிரச்சனையை எழுதி என் ஆர்வத்தையே புதைச்சிட்டியே நல்லா இருப்பியா ?

said...

நீங்க இப்படியெல்லாம்கூட எழுதுவீங்களா குசும்பன்!?

நல்லாயிருந்துச்சு.

தஞ்சாவூர் பக்கத்து ஆளுன்னு கேள்விப்பட்டேன். தஞ்சாவூர் ஆளுகன்னாலே எனக்கு கொஞ்சம் பயமும் கூட :)

”தஞ்சாவூர் தசுக்கன்/தசுக்கி” -ன்னு சொல்லுவாங்க.
ஆக்கள நம்பவே முடியாதுன்னு சொல்வாங்க. அனுபவமும் இருக்கு.

அத விடுங்க.

உங்க ஊரப் பத்தியும், அந்த வாழ்க்கையைப் பத்தியும் (உங்களோடதாத்தான் இருக்கனும்னு அவசியமில்லை) அப்பப்ப கொஞ்சம் எழுதுங்களேன் :)

அன்புடன்
வளர் ...

Anonymous said...

உங்க கோவத்துலயும், ஆதங்கத்துலயும் நான் பங்கெடுத்துகுறேன்

Naanum kooda

-ILA

said...

//'குடும்பத்தோட' ஆள்பவங்களுக்கும் பிரச்சினை, குடும்பமே இல்லாதவங்களுக்கும் பிரச்சினைன்னு இருந்தா, பாவம் அவங்களும் என்ன செய்வாங்க சொல்லுங்க!!!//

வழிமொழிகிறேன்

said...

//மது... said...
சரியான நேரத்தில் நல்லதொரு போஸ்ட்//

நன்றி.

// மது... said...
எல்லோருக்கும் இருக்கும் பயம். ஆனால் யார்தான் சரி செய்வது. நம் முன்னோர் நமக்கு தந்ததை ஒரு பாதியேனும் நம் சந்ததியினருக்கு நாம் தரப்போகிறோமா ?//

அதற்குள் அரிசிக்கு பதில் மாற்று உணவை சாப்பிட பழகும் படி கேரள அரசு போல தமிழக அரசும் சொல்லிவிடும்.

**************************
தஞ்சாவூரான் said...
அவனவன் லாபம் பாக்கத்தான் அலையிறான். இவனுங்க லட்சணத்தைப் பாத்துத்தான், புஷ் தன் சொந்த லாபங்களுக்கும், அமெரிக்க லாபத்துக்கும் இவனுங்கள காசால அடிச்சு கால்ல விழ வைக்கிறான்.//

இது போல் அமெரிக்க அடிவருடியை பார்த்தது இல்லை.

//நாம வழக்கம் போல ரத்தம் கொதிக்க போஸ்ட் போட்டு நம்ம கோவத்த தணிச்சுக்க வேண்டியதுதான். இதுக்கு ஒரே முடிவு, வெளியில இருந்து விமர்சனம் மட்டும் பண்ணாம, நாமளும் எதாவது ஒரு தருணத்துல அரசியல்ல எறங்கி, சுத்தம் பண்ண முயற்சிக்கனும்.//

ஆமாங்க

உங்க கோவத்துலயும், ஆதங்கத்துலயும் நான் பங்கெடுத்துகுறேன்.//

நன்றி

said...
This comment has been removed by the author.
said...

குசும்பன் said...
ஜோசப் பால்ராஜ் said...
இங்க இருக்க எல்லா கட்சிகளும், தங்களோட சொந்த லாபத்த தவிர வேற எதயும் பார்கிறது இல்ல. அதுதான் பிரச்சனையே. ///

அப்ப அப்பயாவது ஓட்டு போட்ட மக்களுக்கு ஏதாவது செய்யலாமே:((

*************************
babu said...
சில பகுதிகளுக்கு மின் கட்டணம் மூன்று மாதங்களுக்கு சேர்ந்தாற்போல் வந்திருக்கிறது.இதனால் கட்டணமும் அதிகமாகிவிட , நியாயம் கேட்ட மக்களிடம் ,அப்படிதான் வரும் கட்டிவிட்டு போங்க என்று திமிராக பதில் வேறு சொல்றான் ,என்ன பண்றது??//

:(( என்ன செய்வது நாமும் அடங்கி கட்டிவிட்டுதான் போவோம்.

***************************
கார்த்திக் said...
ஒரு அமெரிக்க அரசியல்வாதிக்கு இருக்குற நாட்டுப்பற்றுல ஒரு பத்து சதவீதம் கூட நம்ம அரசியல் வாதிகளுக்கு இல்லாம போச்சு.
நல்ல பதிவுங்க குசும்பன்.//

அட்லீஸ்ட் ஒரு சதவீதம் இருந்தா கூட நாடு நல்லா இருக்குமுங்க.

*************************
நன்றி பரிசல்காரன்

**************************
ச்சின்னப் பையன் said...
சூப்பர் பதிவு...

'குடும்பத்தோட' ஆள்பவங்களுக்கும் பிரச்சினை, குடும்பமே இல்லாதவங்களுக்கும் பிரச்சினைன்னு இருந்தா, பாவம் அவங்களும் என்ன செய்வாங்க சொல்லுங்க!!!///

என்ன செய்வது ஒன்னியும் செய்யமுடியாது, நமக்கும் வேற சாய்ஸே கிடையாது:((

*****************************
cheena (சீனா) said...
நிலைமை மாறும் - பொறுத்திருப்ப்போம்///

நன்றி அய்யா, எம்புட்டு நாள் என்றுதான் தெரியவில்லை.

***************************
நன்றி மங்களூர் சிவா

*************************
Known Stranger அவ்வ்வ் அம்புட்டு
ஜாலியா உங்களுக்கு அப்ப நீங்க எதிர் கட்சியா?:)))

**************************
நன்றி சஞ்சய் மாம்ஸ்
**************************
கோவி.கண்ணன் said...
யோவ் கும்மி பதிவுன்னு ஓடியாந்தேன், இப்படி பிரச்சனையை எழுதி என் ஆர்வத்தையே புதைச்சிட்டியே நல்லா இருப்பியா ?//

ஆமாம் அப்படியே கும்மி அடிச்சிட்டாலும்:)))

***************************
வளர்மதி said...
நீங்க இப்படியெல்லாம்கூட எழுதுவீங்களா குசும்பன்!?///

அவ் உங்களுக்கும் அந்த டவுட் வந்துட்டா!:)

///நல்லாயிருந்துச்சு.

தஞ்சாவூர் பக்கத்து ஆளுன்னு கேள்விப்பட்டேன். தஞ்சாவூர் ஆளுகன்னாலே எனக்கு கொஞ்சம் பயமும் கூட :) ////

படிச்சது கொஞ்ச காலம் வேலை பார்தது எல்லாம் தஞ்சை, சொந்த ஊர் திருவாரூர் அருகில்.


///”தஞ்சாவூர் தசுக்கன்/தசுக்கி” -ன்னு சொல்லுவாங்க.
ஆக்கள நம்பவே முடியாதுன்னு சொல்வாங்க. அனுபவமும் இருக்கு.//

அது என்னாங்க தசுக்கன்/ தசுக்கி? இதுவரை கேள்வி பட்டதே இல்லை?

//அத விடுங்க.
உங்க ஊரப் பத்தியும், அந்த வாழ்க்கையைப் பத்தியும் (உங்களோடதாத்தான் இருக்கனும்னு அவசியமில்லை) அப்பப்ப கொஞ்சம் எழுதுங்களேன் :)

அன்புடன்
வளர் ...

///

அட்லீஸ்ட் உளியின் ஓசையை கலைஞர் மட்டும் பார்த்தது போல நான் மட்டுமாவது படிப்பேன் என்று நீங்க உறுதி மொழி கொடுக்கனும்:)))

பதிவு எழுத மேட்டர் இல்லாத பொழுது அப்படி எழுதலாமா என்று யோசிப்பேன் ஆனா அதுக்குள்ள யாராவது மாட்டிக்கிறாங்க.

said...

Anonymous said...
உங்க கோவத்துலயும், ஆதங்கத்துலயும் நான் பங்கெடுத்துகுறேன்

Naanum kooda

-ILA//

நன்றி இளா

said...

உங்க கோவத்துலயும், ஆதங்கத்துலயும் நான் பங்கெடுத்துகுறேன்.
அதோடு இயலாமையால் வரும் ஆற்றாமையையும் சேர்த்துக்கிறேன்.

said...

குசும்பன் விளைனிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டாம். வயிறு எரிகிறது...வயல் வெளின்னா என்னனு எதிர்கால சந்ததி கேட்ட்கும் நிலைமை வரும் போல

said...

உங்க கோவத்துலயும், ஆதங்கத்துலயும் நான் பங்கெடுத்துகுறேன்

Anonymous said...

//ஆக்கள நம்பவே முடியாதுன்னு சொல்வாங்க. அனுபவமும் இருக்கு //

Ippadi podhuva solla koodathunga.

//அட்லீஸ்ட் உளியின் ஓசையை கலைஞர் மட்டும் பார்த்தது போல நான் மட்டுமாவது படிப்பேன் என்று நீங்க உறுதி மொழி கொடுக்கனும்:)))

பதிவு எழுத மேட்டர் இல்லாத பொழுது அப்படி எழுதலாமா என்று யோசிப்பேன் ஆனா அதுக்குள்ள யாராவது மாட்டிக்கிறாங்க.//

Namma voora pathi eludhunga kusumban. Kandippa aadharavu tharrom....


PS: Innum enakku tamil font type panna varala. Will try to do in future.

Kathir.

said...

தருமி said...
உங்க கோவத்துலயும், ஆதங்கத்துலயும் நான் பங்கெடுத்துகுறேன்.
அதோடு இயலாமையால் வரும் ஆற்றாமையையும் சேர்த்துக்கிறேன்.//

கண்டிப்பாக ஐயா ஆற்றாமையும் உண்டு.

***************************
Seetha said...
குசும்பன் விளைனிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டாம். வயிறு எரிகிறது...வயல் வெளின்னா என்னனு எதிர்கால சந்ததி கேட்ட்கும் நிலைமை வரும் போல///

ஆமாங்க இன்னும் ஒரு 10 வருடத்தில் வயல்களை போட்டோவில் காட்ட போறோம் அல்லது குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்து செல்வது போல் வேறு எங்கயாவது போக போறோம்.

***************************
நன்றி கதிர், நீங்களும் நம்ம ஊரு பக்கமா?

தமிழில் டைப் செய்வது ரொம்ப சுலபமாச்சே அதில் என்ன பிரச்சினை உங்களுக்கு? உதவி வேண்டும் என்றால் கேளுங்க.