Tuesday, July 15, 2008

அவனுக்கு வயது 10 அவளுக்கு வயது 32

எனக்கு பக்கத்து வீட்டு நொண்டி அக்காவோடு விளையாடுவது என்றால் மிகவும் பிரியம் அப்பொழுது எனக்கு வயது 10 நொண்டி அக்காவுக்கு வயது 32. நொண்டி என்றால் கை கால் ஊனம் இல்லை சிறு வயதில் மாங்கா பறிக்க மா மரத்தில் ஏறி கீழே விழுந்து கை முறிந்து அதுக்கு டாக்டரிடம் அப்பொழுது காட்டாமல் நாட்டு மருத்துவர் கட்டு போட்டதால் வலது கை ”ட” னா வடிவத்தில் இருக்கும். ஏன் எல்லாரும் நொண்டி வீடுன்னு சொல்லுறாங்க என்று கேட்டபொழுது அக்கா என்னிடம் இதை சொன்னால் அவளால் கையை நீட்டவோ மடக்கவோ முடியாது. அதனாலயோ என்னவோ இன்னும் கல்யாணம் ஆகவில்லை. சில சமயம் அழுது கொண்டு இருப்பாள் என்னக்கா என்றால் சொன்னா உனக்கு புரியாது விடு என்று சொல்லி விடுவாள்.

அது போல் எனக்கு பிடித்த இன்னொரு விசயம் அக்கா வீட்டில் இருக்கும் லெட்சுமி என்கிற பசு மாடு. பசு மாடு என்றாலே சாந்தமாக இருக்கும் ஆனால் இது கொஞ்சம் முரடு, நொண்டி அக்காவையும், என்னையும் தவிர வேறு யாரையும் அருகில் சேர்க்காது வேறு யார் வந்தாலும் முட்ட வரும்.

அன்று அது போல் அக்காவோடு விளையாடி கொண்டு இருக்கும் பொழுது லேசா மழை தூறல் போட வீட்டுக்குள் வந்து பரமபதம் விளையாடி கொண்டு இருந்தோம், அப்பொழுது லெட்சுமி பெருங்குரலெடுத்து ”ம்மே” என்று தொடர்ந்து கத்த நான் அக்காவிடம் அக்கா லெட்சுமி கத்துதுவாக்கா போய் புல்லு கொடுத்துவிட்டு வருவோம் என்றேன். இல்லை அக்கா முன்னாடியே லெட்சுமிக்கு புல்லு கொடுத்துவிட்டேன் அது சும்மா மழைக்காக கத்துகிறது என்று சொல்லி விட்டு,அவுங்க அம்மா காதில் ஏதோ சொல்ல,

அவுங்க அம்மா திண்ணையில் உட்காந்து இருந்த புருசனிடம் ரெண்டு நாளா சொல்லுறேன் லெட்சுமி ஈத்தடிக்குது, ஈத்தடிக்குதுன்னு நாளைக்காவது காளைக்கு கூட்டிட்டு போங்க என்று சத்தம் போட்டாள்.

”என்னாடி மாட்டை நானா இழுத்துக்கிட்டு போக முடியும் முனியனிடம் சொல்லி இருக்கேன் வந்து கூட்டிட்டு போவான்.”

”ம்கும் நல்ல ஆளு பார்த்து சொல்லி இருக்கீங்க அவனுக்கு என்னா வீடா,வாசலா இல்லை நம்ம வீட்டு மாட்டை மட்டும்தான் கவனிச்சுக்கிறானாஅவனுக்கு ஊர்ல இருக்குற எல்லா வீட்டு மாட்டையும் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும், அவன் எப்ப வந்து எப்ப கூட்டிட்டு போக போறானோ!”

அப்பொழுது அந்த வழியா புல்லு கட்டை தூக்கிட்டு வந்த முனியனிடம்

“எலேய் முனியா ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்கேன் லெச்சுமிய கோனார் வீட்டு காளைக்கிட்ட கூட்டிட்டு போன்னு, நாளை காலை சீக்கிரமா வந்து முதலில்அதை பாருடா, முதல் மாடா நம்ம மாடு இருக்கனும் அப்பதான் சட்டுன்னு புடிக்கும்”

”சரிங்கய்யா கருக்கலங்காட்டியும் வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு போனான் முனியன்.

பின் சில மாதம் கழித்து

ஒரு மாலை நேரத்தில் ஊர் மக்கள் எல்லோரு கூடி இருக்க.

“எனக்கு அப்பவே தெரியும்ய்யா இந்த பய நொண்டி ஊட்டுக்கு அடிக்க போய் வரும்பொழுதே” ஒரு பெருசு.

“அப்பவே அரசல் புரசலா காதுல விழுந்துச்சு, கையும் களவுமா புடிக்கனும் என்றுதான் காத்து இருந்தேன் இன்னைக்கு வசமா மாட்டினாங்க”

பெருமிதத்தில் இன்னொரு பெருசு.

கையால் கயிறு கட்ட பட்டு முனியன் தலை குனிஞ்சு ஒரு பக்கமும், வாய் ஓரத்தில் இரத்தம் வழிந்து அழுதுகொண்டு வீங்கிய மூஞ்சோடு நொண்டி அக்காவும் நிற்க,அதை பார்த்த அக்கா ஏம்மா அழுறாங்க என்று கேட்ட என் வாய் பொத்தபட்டது.

”இதுக்கு மேல அவனை அடிச்சா செத்துகித்து போய் விடுவான் இனி அவன் ஊருகுள்ள இருக்க கூடாது அவ்வளோதான்” போங்க போங்க எல்லாம் போங்க என்று மீசை தாத்தா சத்தம் போட்டார்.

எல்லாம் முனு முனுத்தபடி கிளம்பி போனார்கள்.


காலை பக்கத்து வீட்டில் இருந்து அய்யோன்னு பெருங்குரல் கேட்க வீட்டில் இருந்த எல்லோரும் ஓடினார்கள், நானும் பின்னாடியே ஓடினேன் அங்கு மா மரத்தில் நாக்கு தள்ளி மாடு கட்டும் கயித்தில் தொங்கி கொண்டு இருந்தாள் நொண்டி அக்கா. ஒரு சிறு கூட்டம் குளக்கரைய நோக்கி ஓட அங்கு குள கரையில் வாயில் நுரை தள்ளி அசைவற்று கிடந்தான் முனியன் உடலை புரட்டி போட்ட பொழுது நெஞ்சில் ராசாத்தி என்று பச்சை குத்தி இருந்தது, நொண்டி அக்காவின் பெயர் ராசாத்தி என்று அவர் அப்பாவுக்கே தெரியாது.

**********************************************************************************
டேய் ராஜா இப்பதான் சித்ரா காலேஜ் முடிச்சு இருக்கா அதுக்குள்ள ஏன் டா கல்யாணம் செஞ்சு குடுத்து விடலாம் என்று புடிவாதமா இருக்க, நமக்கு இருக்குற கடனுக்கு அவளும் வேலைக்கு போனா சீக்கிரமா கடனை அடைச்சிடலாம் இல்லை என்றால் நீ மட்டும் தனியா எவ்வளோதான் டா கஷ்ட படுவ கல்யாண செலவுக்கு என்ன செய்வ என்று எவ்வளோ நேரமா கேட்டு கிட்டு இருக்கேன் அப்படி என்னா யோசனை உனக்கு என்று அம்மா சத்தம் போடுவது என் காதில் லேசா விழுந்தது.

நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க என்று ஒத்தை வரியில் பதில் சொல்லி விட்டு, கண்ணை துடைத்து கொண்டு வீடு பின் பக்கம் போனேன் அந்த மா மரத்தை பார்க்க.

42 comments:

  1. ரொம்ப சோகமாயிடிச்சிப்பா
    :((

    ReplyDelete
  2. :((


    சோகமாக்கிடுச்சுப்பா

    ReplyDelete
  3. அண்ணே, கண்ண கலங்கடிச்சுட்டீங்க.

    ReplyDelete
  4. சூப்பரு அண்ணே...ஆனாலும் ;((

    ReplyDelete
  5. குசும்பன்,

    கதை ஓகே... ஆனால், பிரதியில் எழுதுவதற்காக கூட ஊனமுற்றவர்களை கொச்சையாக அழைக்க வேண்டாமே ப்ளீஸ்...

    ReplyDelete
  6. //மங்களூர் சிவா said...
    கதையா நிஜமா?

    :((((((((//

    இல்லை சிவா ஒரு சிறு முயற்சிதான்.

    ***********************
    நன்றி ராம்

    ***********************

    நன்றி ஆயில்யன்

    **********************

    நன்றி ஜெகதீசன்

    **********************
    நன்றி கோவி கண்ணன்

    **********************
    நன்றி ஜீவ்ஸ்
    *********************

    ReplyDelete
  7. நன்றி கோபி

    *******************
    நன்றி இவன்

    ******************
    பைத்தியகாரன் ”அப்பாவுக்கு கூட அவள் பெயர் மறந்து போய் விட்டது” அவளை பற்றி, அவள் உணர்வுகளை பற்றி யாரும் புரிந்துக்கொள்ள முயற்சிக்கவில்லை, மாடு கத்தினா அதுக்கு என்ன வேண்டும் என்று தெரியும் அவர்களுக்கு மகளுக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் விட்டதையும் அதுக்கு அவள் ஊனம் ஒரு காரணம் என்பதையும் சொல்லவே அப்படி எழுதினேன். இனி திருத்திக்கிறேன்.

    ReplyDelete
  8. குசும்பன்,

    தங்களை விமர்சிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அதை சுட்டிக்காட்டவில்லை. புனைவு எழுத நீங்கள் வந்தது எனக்கு சந்தோஷத்தை தருகிறது. தொடர்ந்து புனைவையும் நீங்கள் எழுத வேண்டும் என்பது என் ஆசையும் கூட.

    இந்தப் புனைவில் நீங்கள் குறிப்பிட விரும்பிய விஷயம் நல்ல விஷயம். ஆனால், அது எந்த ஒரு சாராரையும் காயப்படுத்தவோ, புண்படுத்தவோ வேண்டாமே என்றுத்தான் சொல்ல வந்தேன்.

    தொடர்ந்து உங்கள் புனைவை எதிர்பார்க்கிறேன்... எழுதுங்கள்...

    ReplyDelete
  9. பைத்தியக்காரன் said...
    குசும்பன்,

    தங்களை விமர்சிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அதை சுட்டிக்காட்டவில்லை. ///

    அப்படியே நீங்கள் சொல்லி இருந்தாலும் தப்பு இல்லை.


    //புனைவு எழுத நீங்கள் வந்தது எனக்கு சந்தோஷத்தை தருகிறது. தொடர்ந்து புனைவையும் நீங்கள் எழுத வேண்டும் என்பது என் ஆசையும் கூட.//

    அவ்வ்வ்வ் வேண்டாம் அழுதுடுவேன்.


    //இந்தப் புனைவில் நீங்கள் குறிப்பிட விரும்பிய விஷயம் நல்ல விஷயம். ஆனால், அது எந்த ஒரு சாராரையும் காயப்படுத்தவோ, புண்படுத்தவோ வேண்டாமே என்றுத்தான் சொல்ல வந்தேன். //

    கண்டிப்பாக இனி அப்படி நடக்காத படி பார்த்துக்கிறேன்.

    //தொடர்ந்து உங்கள் புனைவை எதிர்பார்க்கிறேன்... எழுதுங்கள்...///

    அவ்வ்வ்வ் வலிக்குது அழுதுடுவேன்:))

    ReplyDelete
  10. கண்ண கலங்கடிச்சுட்டீங்க.

    ReplyDelete
  11. என்ன ஆச்சு நம்ம வலையுலக நண்பர்களுக்கு.

    சிவா மங்களூர் தருவாள் மங்களாம்பிகை பதிவு போடறார்.

    குசும்பன் இவ்வளவு டச்சிங்கா கதை எழுதியிருக்காரு.

    சிம்பிளி சூப்பர்ப்.

    ReplyDelete
  12. குசும்பு. வாங்க. வாங்க.
    ஆளே மாறிட்டது மாதிரி இருக்கிறதே.
    கதை எல்லாம் நன்றாக எழுதுகிறீர்களே.
    வாழ்க. வாழ்க.

    ReplyDelete
  13. // மாடு கத்தினா அதுக்கு என்ன வேண்டும் என்று தெரியும் அவர்களுக்கு மகளுக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் விட்டதையும்//

    இதுதான் ஹைலைட்...அற்புதமான கதை (நிஜமில்லையே?)

    ReplyDelete
  14. ரொம்ப நல்லாயிருந்துச்சு
    பாதி வரை கதை இந்த கோணத்தில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
    இம்மாதிரியான செய்திகள் நாட்டில் ஆங்காங்கே நடப்பது தான், அதில் கொஞ்சம் மானுடவியலும் சேர்த்தால் மனிதாபிமானம் மக்களுக்கு வளரும்.

    புனைவு உங்களுக்கு நன்றாகவே வரும், அதை அடக்காதீர்கள், அவிழ்த்து விடுங்கள்

    வால்பையன்

    ReplyDelete
  15. என்னால நம்பவே முடியல சரவணா,
    இந்த கதைய படிச்சுட்டு உன்ன குசும்பானு கூப்பிட எனக்கு மனசு வரல.
    இதுக்கு மேல வேற என்ன நான் சொல்ல??

    ReplyDelete
  16. தெய்வமே இது நீங்களா தெய்வமே...

    ReplyDelete
  17. சோகமா சொல்லிட்டிங்களே...:(

    ReplyDelete
  18. நல்ல கதை அண்ணே கலக்கிட்டிங்க...

    ReplyDelete
  19. Hai,

    Nice story.

    Kathir.

    ReplyDelete
  20. பதிவுக்கு ஏனிந்த தலைப்பு :)

    ReplyDelete
  21. உணர்வுகள் எல்லாருக்கும் சமம்தான்னு மதிச்சு, தங்கையை வேலைக்கு அனுப்பி பொருள் சேர்க்காமல்,சரியான காலத்துல திருமணம் செய்து வைக்கும் அண்ணன்,. அவன் மனதில் யதார்த்தத்தை உரைத்த அனுபவம். கதையை தவறாக புரிந்துக்கொள்ள முடியாத விதத்தில் அருமையா எழுதியிருக்கிங்க மாம்ஸ். சூப்பர்:)

    ReplyDelete
  22. பேச்சற்றுப் போனேன் நண்பரே!

    அபாரம்!

    ReplyDelete
  23. கதையா நீங்க சொல்லிருக்கீங்க ஆனாலும் என்ன தான் நம்ம மக்கள் படிச்சாலும், ஊனமா இருக்கிறவங்களை பாக்கும் பார்வை, அவங்க திறமையை , உணர்வை மதிப்பதில் பெரிய வேறுபாடு வரவில்லை நம் சமுதாயத்தில்...நாம் இன்னும் அவங்களையும் "Handicapped" சொல்லாம,"Physically Challenged" சொன்னா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  24. ஆஹா...! சூப்பர்....!

    யாராவது என்னை நறுக்குன்னு கிள்ளுங்களேன் இது குசும்பன் பிளாக்கான்னு தெரிஞ்சுக்கனும்.கனவா நினைவா?

    உங்க பிட்டுதான்...!

    'தம்பி' தாக்கம் அதிகமா இருக்குறமாதிரி தெரியுது!

    ReplyDelete
  25. நல்லாயிருக்கு குசும்பு.

    பைத்தியகாரன் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள். அதிகம் வாசியுங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. எக்சூஸ்மீ !

    அந்த மண்டப அட்ரஸ் குடுக்கமுடியுமா?

    :))))))))

    ReplyDelete
  27. ananth said...
    கண்ண கலங்கடிச்சுட்டீங்க.//

    அவ்வ், அம்புட்டு மோசமாவா இருக்கு?

    ******************************

    புதுகைத் தென்றல் said...
    என்ன ஆச்சு நம்ம வலையுலக நண்பர்களுக்கு.///

    ஒருத்தருக்கு ”ஆச்சு” ஒருத்தருக்கு ”ஆக” போவுது:)))அதான் மேட்டர் இங்க.

    ///சிவா மங்களூர் தருவாள் மங்களாம்பிகை பதிவு போடறார்.///

    எல்லாம் ”அவள்” செயல்

    குசும்பன் இவ்வளவு டச்சிங்கா கதை எழுதியிருக்காரு.

    சிம்பிளி சூப்பர்ப்.//

    நன்றி நன்றி

    ReplyDelete
  28. சுல்தான் said...
    குசும்பு. வாங்க. வாங்க.
    ஆளே மாறிட்டது மாதிரி இருக்கிறதே.
    கதை எல்லாம் நன்றாக எழுதுகிறீர்களே.
    வாழ்க. வாழ்க.///

    அப்படி எல்லாம் இல்லை சும்மா ஒரு முயற்சிதான் சுல்தான் சார்.

    உங்க பாராட்டுக்கு நன்றி.

    ********************************

    வெண்பூ said...
    // மாடு கத்தினா அதுக்கு என்ன வேண்டும் என்று தெரியும் அவர்களுக்கு மகளுக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் விட்டதையும்//

    இதுதான் ஹைலைட்...அற்புதமான கதை (நிஜமில்லையே?)///

    மிக்க நன்றி, நிஜம் இல்லை
    *****************************
    வால்பையன் said...
    ரொம்ப நல்லாயிருந்துச்சு
    பாதி வரை கதை இந்த கோணத்தில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
    இம்மாதிரியான செய்திகள் நாட்டில் ஆங்காங்கே நடப்பது தான், அதில் கொஞ்சம் மானுடவியலும் சேர்த்தால் மனிதாபிமானம் மக்களுக்கு வளரும்.//

    ஆமாங்க நீங்க சொல்வது சரிதான்.

    ///புனைவு உங்களுக்கு நன்றாகவே வரும், அதை அடக்காதீர்கள், அவிழ்த்து விடுங்கள் ///

    வால் பையன் வால் தனம் செய்யவில்லையே!!!:))))

    ********************************

    ஜோசப் பால்ராஜ் said...
    என்னால நம்பவே முடியல சரவணா,
    இந்த கதைய படிச்சுட்டு உன்ன குசும்பானு கூப்பிட எனக்கு மனசு வரல.
    இதுக்கு மேல வேற என்ன நான் சொல்ல??//

    நன்றி பால் ராஜ்.

    *************************
    தமிழன் நன்றி,

    நானேதான் நம்புங்க பிளீஸ்:))

    உள்ளே இழுக்கதான் இந்த தலைப்பு

    ******************************
    நன்றி கதிர்
    *******************************

    ரசிகன் said...
    உணர்வுகள் எல்லாருக்கும் சமம்தான்னு மதிச்சு, தங்கையை வேலைக்கு அனுப்பி பொருள் சேர்க்காமல்,சரியான காலத்துல திருமணம் செய்து வைக்கும் அண்ணன்,. அவன் மனதில் யதார்த்தத்தை உரைத்த அனுபவம். கதையை தவறாக புரிந்துக்கொள்ள முடியாத விதத்தில் அருமையா எழுதியிருக்கிங்க மாம்ஸ். சூப்பர்:)///

    மாம்ஸ் நன்றி மாம்ஸ்:)
    ******************************
    பரிசல்காரன் said...
    பேச்சற்றுப் போனேன் நண்பரே!

    அபாரம்!//

    நன்றி பரிசல்காரர்
    ***************************
    கப்பி பய said...
    அருமை!//

    தள நன்றி.

    ***************************

    Ramya Ramani said...
    கதையா நீங்க சொல்லிருக்கீங்க ஆனாலும் என்ன தான் நம்ம மக்கள் படிச்சாலும், ஊனமா இருக்கிறவங்களை பாக்கும் பார்வை, அவங்க திறமையை , உணர்வை மதிப்பதில் பெரிய வேறுபாடு வரவில்லை நம் சமுதாயத்தில்...நாம் இன்னும் அவங்களையும் "Handicapped" சொல்லாம,"Physically Challenged" சொன்னா நல்லா இருக்கும்.//

    ஆமாங்க சமுகம் பார்கும் பார்வையில் மாற்றம் வரவேண்டும்.

    *****************************

    சுரேகா.. said...
    ஆஹா...! சூப்பர்....!

    யாராவது என்னை நறுக்குன்னு கிள்ளுங்களேன் இது குசும்பன் பிளாக்கான்னு தெரிஞ்சுக்கனும்.கனவா நினைவா?///

    இது வரை பாராட்டி விட்டு, கீழே ஏன் இப்படி திட்டனும்

    //'தம்பி' தாக்கம் அதிகமா இருக்குறமாதிரி தெரியுது!///

    ReplyDelete
  29. //ஆடுமாடு said...
    நல்லாயிருக்கு குசும்பு. //

    நன்றி ஆடுமாடு.

    //பைத்தியகாரன் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.//

    //திருத்திக்கிறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள். அதிகம் வாசியுங்கள்.
    வாழ்த்துகள்.///

    கண்டிப்பாக.

    ***********************

    சுரேகா.. said...
    எக்சூஸ்மீ !

    அந்த மண்டப அட்ரஸ் குடுக்கமுடியுமா?

    :))))))))///

    கொடுத்துட்டா போச்சு

    Mr.குசும்பன்
    விவேகானந்தர் தெரு
    குறுக்கு சந்து
    துபாய்
    (பஸ் ஸ்டாண்ட் அருகில்)

    ReplyDelete
  30. பின்நவீனத்துவவாதி திரு.குசும்பன் அவர்களே.
    இதே மாதிரி பல புனைவுகளைக் கொடுத்து பெரிய இலக்கியவியாதியாக வர வாழ்த்துக்கள்.

    (கல்யாணம் ஆனா அப்புறம் என்ன ஆகும்ன்னு முன்னாடி கேட்டீல்ல. இப்போ தெரீதா?)

    ReplyDelete
  31. ஒத்துக்கொண்டோம்...

    மண்டபமே உங்களுடையது என்பதை
    ஒத்துக்கொண்டோம்..

    கதையும் சத்தியமாக உங்களுடையதுதான்!

    வாழ்த்துக்கள்!
    ச்சும்மா உலுலுவாங்காட்டிக்கு!

    ReplyDelete
  32. நந்து f/o நிலா said...
    பின்நவீனத்துவவாதி திரு.குசும்பன் அவர்களே.//

    இது நாலு அடி அடிச்சு இருக்கலாம்.

    //இதே மாதிரி பல புனைவுகளைக் கொடுத்து பெரிய இலக்கியவியாதியாக வர வாழ்த்துக்கள்.//

    போதும்பா இப்ப நீங்க கொடுத்த பட்டமே வயத்தை கலக்குது.

    //(கல்யாணம் ஆனா அப்புறம் என்ன ஆகும்ன்னு முன்னாடி கேட்டீல்ல. இப்போ தெரீதா?)//

    இது கூடவா தெரியாம கல்யாணம் செஞ்சுப்பாங்க அய்யோ அய்யோ!!!

    **********************
    சுரேகா.. said...
    ஒத்துக்கொண்டோம்...

    மண்டபமே உங்களுடையது என்பதை
    ஒத்துக்கொண்டோம்..///

    ம்ம்ம் அது!!!

    ReplyDelete
  33. /////புனைவு உங்களுக்கு நன்றாகவே வரும், அதை அடக்காதீர்கள், அவிழ்த்து விடுங்கள் ///
    வால் பையன் வால் தனம் செய்யவில்லையே!!!:))))//

    நான் கற்பனையை தாங்க அவுத்து விட சொன்னேன்
    நீங்க வேறு எதையும் கற்பனை பண்ணிகிட்டா நான் எப்படி பொறுப்பு

    வால்பையன்

    ReplyDelete
  34. Nice Story.. நல்ல விஷயம்... keep going and I expect more.

    ReplyDelete
  35. //வால்பையன் said...
    நான் கற்பனையை தாங்க அவுத்து விட சொன்னேன்
    நீங்க வேறு எதையும் கற்பனை பண்ணிகிட்டா நான் எப்படி பொறுப்பு

    வால்பையன்///

    அவ்வ் நான் இதுவரை நல்ல படியாதான் யோசிச்சேன்:))
    ******************************
    Sunny said...
    Nice Story.. நல்ல விஷயம்... keep going and I expect more.///

    மிக்க நன்றிங்க. கண்டிப்பா எழுதுறேன்.

    ReplyDelete
  36. சரவணன்

    அருமையான உள்ளம் தொடும் கதை. நல்ல நடை. எளிய சொற்கள். கிராமத்தின் வர்ணனை. நல்வாழ்த்துகள்

    தொடர்க இம்முயற்சியினை

    மிடிவு நசென - மாமரத்தினைப் பார்க்கச் செல்லும் நாயகன். சிறுவயதில் பதிந்த ஆழமாகப் பதிந்த நினைவுகள் வாழ்வு முழுவதும் நினைவிலிருக்கும்

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. நேரடியாப் பாத்த பீலிங். ;)

    ReplyDelete