Thursday, June 19, 2008

வளரும் பதிவர், வளர்ந்த பதிவர் கண்டுபிடிப்பது எப்படி?

1) ஒரு படம் பார்க்க போனா அது பொழுது போக்கா தெரிஞ்சா நீங்க சாதாரண ஆள் அதுவே உங்களுக்கு ஒரே ஒரு பதிவுவா தெரிஞ்சா நீங்க வளரும் பிளாக்கர். அதுவே உங்களுக்குஒரு மூன்று நான்கு பதிவாக தெரிஞ்சா நீங்க பினாத்தலார் போன்று பெரும் பிளாக்கர் (தாரே சமீம் பர் புகழ் பினாத்தலார்:)) , அதுவே உங்களுக்கு பார்பனிய மலம், பார்பனிய மூச்சாவாக தெரிஞ்சால் நீங்கள் பைத்தியகாரன் போல்ஒரு பின்நவினத்துவ வாதி.

1.1 ) ஹிட் படத்தை போல் நீங்களும் உல்டாவாக ஒரு படம் தயாரித்து எழுதினால் வளர்ந்த பதிவர். அந்த படத்தின் நடிகரே நீங்கள் தான் என்றால் பழம் பெரும் பதிவர்.

2)ஹோட்டலுக்கு செல்லும் பொழுது இருவருடன் சேர்ந்து சாப்பிட்டது ஹோட்டலோடு மறந்து போனால் சாதாரண ஆள்அதுவே ஹோட்டலில் நடந்த வலைபதிவர் மாநாடாக தெரிஞ்சா அப்ப நீங்க வளரும் பதிவர்.

பின் குறிப்பு : ஹோட்டலில் (சலூனில்) கொடுத்த டிப்ஸை கூட தனிபதிவாக போடலாம் என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பழம் பெரும் பதிவர்.

3) உங்களுக்கு கேட்க தோன்றும் கேள்விகளை ஹாய் மதனுக்கோ அல்லது அரசு கேள்வி பதிலுக்கோ அனுப்பினால் சாதாரன ஆள்அதுவே அதை டோண்டுவுக்கோ அல்லது லக்கிலுக்குக்கோ அனுப்பினால் நீங்கள் வளரும் பிளாக்கர், மற்றவர்கள் உங்களிடம் கேட்டால்வளர்ந்த பிளாக்கர்.

4) நண்பனிடம் மட்டும் பக்கத்து வீட்டு பிகரின் ஜல்சா மேட்டரை பேசினால் நீங்கள் சாதாரண ஆள்அதுவே ஜல்சா கதை 1001 என்று தலைப்புவைத்து பதிவாக எழுதினால் நீங்கள் கட்டுடைக்கும் பதிவர்.

5) புத்தகத்துக்கு உரை எழுதுவது போல் மற்றவர்களுக்கு பதிவு எழுதி கொடுத்தா பழம் தின்னு கொட்டைபோட்ட பெரும் பதிவர் (தம்பி எழுதி தந்ததும் இதில் அடங்கும்).

6) நீங்க மொக்கை பதிவாக இருந்தாலும் அங்க போய் 10 கமெண்ட் போடுபவராக இருந்தால் வளரும் பதிவர்பத்துபக்க பதிவுக்கு ஒரே ஒரு ஸ்மைலி மட்டும் போட்டால் நீங்க பெரும் பதிவர், கமெண்ட்டே போடாமல் இருந்தால்பழம் பெரும் பதிவர்.

7) விருது ஏதும் வாங்கி இருந்தா நீங்க ஸ்டார் பதிவர், அந்த விருதுவை கொடுத்ததே நீங்க என்றால் சூப்பர் ஸ்டார் பதிவர்.

45 comments:

  1. "பின் குறிப்பு : ஹோட்டலில் (சலூனில்) கொடுத்த டிப்ஸை கூட தனிபதிவாக போடலாம் என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பழம் பெரும் பதிவர்"

    :-))

    I am Ist

    puduvai siva

    ReplyDelete
  2. அவ்ளோதானா???

    ;-)

    ReplyDelete
  3. :)

    அய்யோ வெறும் ஸ்மைலி இனி போடமுடியாதபடி செய்திட்டீங்களே...

    ReplyDelete
  4. நன்றி சிவா:)

    **************************
    அதிஷா said...
    அவ்ளோதானா???

    ;-)

    மேலதிகவிபரங்களுக்கு
    http://kusumbuonly.blogspot.com/2007/06/blog-post_09.html

    (இந்த மேலதிகவிபரங்களுக்கு என்ற வார்த்தைய எங்க உபயோகிப்பது என்று இதுநாள் வரை தெரியாமல் முழிச்சுக்கிட்டு இருந்தேன்)


    ***************************
    கயல்விழி முத்துலெட்சுமி said...
    :)

    அய்யோ வெறும் ஸ்மைலி இனி போடமுடியாதபடி செய்திட்டீங்களே...//

    யக்கோவ் நீங்க ஸ்மைலி போட்டாலும் போடாவிட்டாலும் நீங்க பழம் பெரும் பதிவர்தான், வலைசர ஆசிரியர்:)))

    ReplyDelete
  5. குசும்பன், உங்களை வச்சு ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன் :)

    அப்போ நான் பழம்பெரும் பதிவனா?

    ReplyDelete
  6. பதிவர்கள் பற்றிய உங்களது இந்த ஆராய்ச்சி முடிவுக்காக உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.

    ReplyDelete
  7. உனக்கு ஆனாலும் குசும்பு ஜாஸ்தியா போச்சு! நான் எந்த வகை லூசு:-)))

    ReplyDelete
  8. கலக்கிட்டீங்க குசும்பன் சார்.

    ReplyDelete
  9. /உங்களுக்கு கேட்க தோன்றும் கேள்விகளை ஹாய் மதனுக்கோ அல்லது அரசு கேள்வி பதிலுக்கோ அனுப்பினால் சாதாரன ஆள்அதுவே அதை டோண்டுவுக்கோ அல்லது லக்கிலுக்குக்கோ அனுப்பினால் நீங்கள் வளரும் பிளாக்கர், மற்றவர்கள் உங்களிடம் கேட்டால்வளர்ந்த பிளாக்கர்./

    அதுசரி இந்த பதிவில் லக்கிலுக் மற்றும் டோண்டுவுக்கு விளம்பரம் கொடுக்கும் நீர் வளர்ந்த பிளாக்கரா? வளரும் பிளாக்கரா?

    ReplyDelete
  10. //நண்பனிடம் மட்டும் பக்கத்து வீட்டு பிகரின் ஜல்சா மேட்டரை பேசினால் நீங்கள் சாதாரண ஆள்அதுவே ஜல்சா கதை 1001 என்று தலைப்புவைத்து பதிவாக எழுதினால் நீங்கள் கட்டுடைக்கும் பதிவர்.
    //

    ஐ லைக் இட் :))

    ReplyDelete
  11. தம்பி said...
    :)//

    தம்பிர் நீங்க பெரும் பதிவர் தான் தம்பிர். அதை அடிக்கடி வேற செய்யனுமா?

    **************************

    ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    குசும்பன், உங்களை வச்சு ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன் :)

    அப்போ நான் பழம்பெரும் பதிவனா?//

    அண்ணே, உங்க கதையில் நான் ஹீரோவா? அவ்வ்வ்வ்வ் இப்பதான்னே கல்யாணம் ஆகி இருக்கு:(((

    அல்ரெடி நீங்க பழம் பெரும் பதிவர்தான்னே ஏன் இந்த புள்ளபூச்சிய அடிக்க போறீங்க????

    ****************************
    சரவணகுமரன் said...
    பதிவர்கள் பற்றிய உங்களது இந்த ஆராய்ச்சி முடிவுக்காக உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.//

    அதுக்கு ரெண்டு வடை வாங்கி கொடுத்தாலவது உபயோகமாக இருக்கும்

    ReplyDelete
  12. குசும்பா...

    உங்கள் குசும்புக்கு அளவே இல்லையா:-))

    அலுவலகத்தில் வேலை பார்க்க முடியாதபடி இப்படி சிரிக்க வைக்கிறீர்களே!!

    தொடருங்கள்!

    ReplyDelete
  13. இதையெல்லாம் வெட்டியா ஆராய்ச்சி பண்ணி பதிவு போடுறவர் வளரும் பதிவரா? வளர்ந்த பதிவரா?

    உங்களிடம் கேள்வி கேட்டதால் என்னை வளரும் பதிவர் என்று சொன்னால் மகிழ்வேன் :)

    ReplyDelete
  14. //ஹோட்டலில் (சலூனில்) கொடுத்த டிப்ஸை கூட தனிபதிவாக //

    :)

    ReplyDelete
  15. அபி அப்பா said...
    உனக்கு ஆனாலும் குசும்பு ஜாஸ்தியா போச்சு! நான் எந்த வகை லூசு:-)))//

    ஆஹா இப்ப எல்லாரையும் லூசுங்குறீங்களா?

    ******************************
    நன்றி சென்ஷி சார் சார் சார் சார்

    *****************************

    பைத்தியக்காரன் said...
    குசும்பா...

    உங்கள் குசும்புக்கு அளவே இல்லையா:-))

    அலுவலகத்தில் வேலை பார்க்க முடியாதபடி இப்படி சிரிக்க வைக்கிறீர்களே!!

    தொடருங்கள்!//

    என்னது அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களா? அங்கேயும் வேலை செய்து கட்டுடைப்பு செய்யும் நீங்கள் 100% பின்நவினத்துவர்தான்

    ***************************
    பொன்வண்டு said...
    இதையெல்லாம் வெட்டியா ஆராய்ச்சி பண்ணி பதிவு போடுறவர் வளரும் பதிவரா? வளர்ந்த பதிவரா?

    உங்களிடம் கேள்வி கேட்டதால் என்னை வளரும் பதிவர் என்று சொன்னால் மகிழ்வேன் :)///

    புலிய பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா நீங்க என்னத்ததான் கேள்வி கேட்டாலும் நாம் எல்லாம் ஜூஜூப்பிங்கதான்!!!

    ReplyDelete
  16. தமிழ்சினிமா said...
    அதுசரி இந்த பதிவில் லக்கிலுக் மற்றும் டோண்டுவுக்கு விளம்பரம் கொடுக்கும் நீர் வளர்ந்த பிளாக்கரா? வளரும் பிளாக்கரா?///

    என்னது அவுங்களுக்கு விளம்பரமா என்ன தமிழ்சினிமா நீங்க அவுங்க எல்லாம் பெருங்கையுங்க... நான் எல்லாம் அல்லகைங்க.

    (லக்கி தயவு செய்து அந்த அல்லகை போஸ்டை எனக்கு கொடுத்துவிடவும்:))))

    ReplyDelete
  17. SanJai said...
    .///

    வளர்ந்த பதிவராகிய உங்களை இனி அனைவரும் இனம்கானும் படி செய்ததுக்கு இம்புட்டு கோவமா மூத்தபதிவரே!

    ReplyDelete
  18. தமிழ் வலைப் பதிவுலக

    சான்றோர்களுக்கும்,
    பெரியோர்களுக்கும்,
    அறிஞர்களுக்கும்,
    சகோதரர்களுக்கும்,
    சகோதரிகளுக்கும்,
    நண்பர்களுக்கும்,
    தோழர்களுக்கு,
    தோழியர்களுக்கும்

    என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

    புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

    டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

    எனது அன்பு அழைப்பை ஏற்று
    வருகை புரிந்து
    வாழ்த்துரை வழங்கியும்,
    மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
    பேருதவி புரிந்திட்ட

    அன்புகளுமிய அன்பர்கள்

    திருநெல்வேலி கார்த்திக்
    அதிஷா
    VSK
    dondu(#11168674346665545885)
    லக்கிலுக்
    ajay
    துளசி கோபால்
    உண்மைத் தமிழன்(15270788164745573644
    VIKNESHWARAN
    சின்ன அம்மிணி
    VIKNESHWARAN
    ஜமாலன்
    உறையூர்காரன்
    மதுரையம்பதி
    கிரி
    ambi
    ஜீவி
    வடுவூர் குமார்
    செந்தில்
    SP.VR. SUBBIAH
    தமிழரசன்
    cheena (சீனா)
    சிறில் அலெக்ஸ்
    வால்பையன்
    வெட்டிப்பயல்
    பினாத்தல் சுரேஷ்
    இலவசக்கொத்தனார்
    அகரம்.அமுதா
    குசும்பன்
    கயல்விழி முத்துலெட்சுமி
    சென்ஷி
    தருமி
    தமிழன்
    செந்தில்
    மனதின் ஓசை
    கானா பிரபா
    Kailashi
    மாதங்கி
    முகவை மைந்தன்

    அனைவருக்கும்
    நெஞ்சுநிறை
    நன்றிகள்
    கோடான கோடி

    என்றும் உங்கள்
    விஜய்
    கோவை.

    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  19. //பதிவர்கள் பற்றிய உங்களது இந்த ஆராய்ச்சி முடிவுக்காக உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.//

    //அதுக்கு ரெண்டு வடை வாங்கி கொடுத்தாலவது உபயோகமாக இருக்கும்//

    ஹ அ ஹாஅ ஹஅ ஹாஆஆ

    ReplyDelete
  20. .. * . (\ *** /) * . *.*.*
    .* . * ( \(_)/ ) * * .
    .* . * (_ /|\ _) . *. *
    .* . * . /___\ * .

    ReplyDelete
  21. ___00000___00000 *.*. *
    __0000000_0000000. * .
    __0000 OOOO 00000. * .
    ___0000000000000 * . *
    ____00000000000 * . *.
    ______0000000 * . *. *
    ________000 * . *. * .
    _________0* .

    ReplyDelete
  22. புல்லரிக்குது குசும்பன்!...:))

    //அதுக்கு ரெண்டு வடை வாங்கி கொடுத்தாலவது உபயோகமாக இருக்கும்//

    மனம் விட்டு, சிரித்தேன்.

    [உங்க எல்லாப் பதிவும் படிச்சுறுக்கேன், படிக்கிறேன்.பின்னூட்டம் இது தான் முதல் முறை:)]

    ReplyDelete
  23. நீங்க இப்ப வளர்ந்தவரா இல்ல வளரதவரா
    (டிங்கு டிங்க டிங்க டிங்...டிங்க டிங்....)

    ReplyDelete
  24. :)))

    நல்லா இருக்கே!!

    ReplyDelete
  25. //ஒரு படம் பார்க்க போனா அது பொழுது போக்கா தெரிஞ்சா நீங்க சாதாரண ஆள் அதுவே உங்களுக்கு ஒரே ஒரு பதிவுவா தெரிஞ்சா நீங்க வளரும் பிளாக்கர். அதுவே உங்களுக்குஒரு மூன்று நான்கு பதிவாக தெரிஞ்சா நீங்க பினாத்தலார் போன்று பெரும் பிளாக்கர்.//

    சூப்பரு:))

    ReplyDelete
  26. இப்டியெல்லாம் வழிமுறைகள், வகைபடுத்தல்கள் செய்யும் பதிவுகள் போட்டா, நீங்க மிக மிக பழம்பெரும் பதிவர் வகையில் வந்துராலம்னுதானே முயற்சி செய்யிறீங்க?
    நல்ல மொக்கை குசும்பா இது.

    ReplyDelete
  27. இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கின்றார்கள்.

    வேற என்ன சொல்ல? அரசியல் கட்சிகள் ( எல்லா கட்சிகளும் தான்) தொண்டர்களை இப்போதொல்லாம், குண்டர்களாகத்தான் பயன்படுத்துகின்றன.

    உண்மைத்தொண்டர்களை எந்த கட்சியிலும் இனி பார்க்க முடியாது.

    ReplyDelete
  28. //
    பதிவுக்கு ஒரே ஒரு ஸ்மைலி மட்டும் போட்டால் நீங்க பெரும் பதிவர்
    //
    அப்ப நான் பெரும் பதிவரா?? :)

    ReplyDelete
  29. இது எதுக்குள்ளேயும் நான் வரலையே? அப்போ நான் யாரு???

    ReplyDelete
  30. :)

    ஹை... நான் பெரும் பதிவர் :))

    ReplyDelete
  31. ஹாய் குசும்பன்

    ஹூ ஆம் ஐ ?

    டெல் மீ

    Cheena

    ReplyDelete