Wednesday, January 23, 2008

வலைபதிவர்களை பற்றி வலையுலக கிசு கிசு கிசு கிசு

ஜன்னலில் வந்து அமர்ந்த சிட்டு குருவி ஏய் ஏய் என்று கூப்பிட தூக்கத்தில் இருந்து விழித்தேன் உனக்கு சேதி தெரியுமா என்று கேட்டது?

என்னா சேதி? என்று நான் கேட்க!

எல்லை காவல் தெய்வத்தின் பெயரை உடைய வலை பதிவர் ஒருவருக்கும் அவருடைய மாமன் மகளுக்கும் வரும் மார்ச் மாதம் கல்யாணம் நடந்தாலும் நடக்குமாம் வூட்டுபெருசுங்க பையனோட சிக்னலுக்காக வெயிட்டிங்காம்.
இவரும் போக ரெடி ஆயிட்டே இருக்காராம்.

ம்ம் அப்புறம் என்னா இது தெரிஞ்ச விசயம் தானே புச்சா ஏதும் இருந்தா சொல்லு என்று நான் கேட்க.

மாதவன் நடிச்ச படத்தின் பெயரை கொண்ட ஒரு பதிவருக்கு தினமும் ஒரு பெண்ணிடம் இருந்து மெயிலா வந்து குவியுதாம் சாட்டிலும் அன்பு மழை பொழிகிறார்களாம் அவரும் யாருன்னு புரியாம மெர்சாகி பாக்கிறவனை போனில் பேசுகிறவனை எல்லாம் அவளா நீ? என்று கேட்டு டார்சர் கொடுக்கிறாராம்.

ம்ம் ஓவரா பொண்ணுங்க கூட சாடியதால் சாட்டோபோபியா போல விடு நல்ல டாக்டரை பார்க்க சொல்லலாம்.

மழை பெய்யும் பொழுது மட்டும் வந்து மறையும் ஒன்றினை வலைபதிவு பெயராக கொண்ட பதிவருக்கு லீவ் கிடைக்காததால் நிச்சயம் செய்து வைத்த பெண் வெயிட்டிங் மாதம் பாதி சம்பளம் போன் பில்லுக்கே கொடுக்கிறாராம் அதனால் தான் அவரை முன்பு போல் வலை பதிவு பக்கம் பார்க்க முடிவது இல்லையாம்.

அடா அடா அதான் எப்பொழுதும் அவருக்கு போன் செய்தாலும் போனில் சார்ஜ் இல்லை என்று கட் ஆகிவிடுகிறதா? சரி அப்புறம்?

அப்புறம் சின்னபசங்க பெயரில் வலம் வந்தவரும் சமீபத்தில் பெயரை மாற்றியவருமான ஒருவர் ஸ்டேஜில் ஒரு அழகிய பெண்ணுடன் போட்ட குத்தாட்டத்தை ஒரு குட்டி பெண்ணுடைய அப்பா பதிவு செஞ்சு வெச்சு இருக்கிறார் எனக்கும் அதை போட்டு காட்டினார் அப்பா அப்பா என்னா டான்ஸ் என்னா டான்ஸ் அதை கேட்டதுக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டார் ஆனால் தனியாக மெயில் அனுப்பி கேட்டால் கொடுப்பார்!!! ஆனால் செம கிளாமராக இருப்பதால் அதை பதிவில் போட முடியாது!

அப்ப அது வீக் எண்ட் பதிவு போடும் பதிவர் கையில் கொடுத்தால் போதும் என்று சொல்லு!!! அப்புறம் வேற என்னா விசயம்!

உனக்கு தெரியுமா மொக்கை பதிவரும் எல்லோரையும் கலாய்க்கும் பதிவர் ஒருவர் அவர் பத்து வருடமாக லவ்ஸ் உட்ட பெண்ணையே வரும் ஏப்ரல் மாதம் கல்லாணம் கட்டி வெச்சுடலாம் என்றுமுடிவு செஞ்சு இருக்கிறார்களாம் ஆனா இன்னும் தேதிதான் முடிவு ஆகவில்லையாம்.

அட இத முதலில் சொல்லாம வேறு எதை எதையோ சொல்லிக்கிட்டு இருக்க சரி பொண்ணு எங்க இருக்கு அந்த டீட்டெய்ல் எல்லாம் கொடு.

அவரு எப்பொழுதும் தான் மட்டும் அடிவாங்காமல் கூட இருப்பவர்களுக்கும் அடிவாங்கி கொடுத்துவிட்டு பிறகு தான் அடிவாங்கிக்கும் நல்ல உள்ளம் படைத்தவர் அதனால் தான் அப்படி சொன்னேன், அப்புறம் அந்த பெண் டீட்டெயில் எல்லாம் கொடுத்தால் என்னை புடிச்சு சூப் வெச்சு குடிக்கவா நான் மாட்டேன் பத்திரிக்கை அடிச்சு எல்லாம் முடிஞ்ச பிறகு அவரே சொல்வார் அதுவரை வெயிட்டீஸ்.
டாட்டா பை பை என்று சொல்லிட்டு பறந்து போய்விட்டது!!!

52 comments:

  1. //எல்லை காவல் தெய்வத்தின் பெயரை உடைய வலை பதிவர் ஒருவருக்கும் அவருடைய மாமன் மகளுக்கும் வரும் மார்ச் மாதம் கல்யாணம் நடந்தாலும் நடக்குமாம் வூட்டுபெருசுங்க பையனோட சிக்னலுக்காக வெயிட்டிங்காம்.
    இவரும் போக ரெடி ஆயிட்டே இருக்காராம்.//

    எங்கே அய்யனாரைப் பற்றி தகவலாக இருக்குமோ என்று நினைத்தேன்.
    :)

    ReplyDelete
  2. //ஜன்னலில் வந்து அமர்ந்த சிட்டு குருவி ஏய் ஏய் என்று கூப்பிட தூக்கத்தில் இருந்து விழித்தேன் உனக்கு சேதி தெரியுமா என்று கேட்டது?//

    தலயோட சிட்டுக்குருவி ஏன் சினிமா செய்தி சொல்ல மாட்டேங்குதுன்னு நெனச்சேன்.. இப்போதான் தெரியுது குசும்பன் அபேஸ் பண்ணிட்டார்ருன்ன்னு. :--))))

    ReplyDelete
  3. தை மாதம் என்பதுனால நிறைய கல்யாண நியூஸாவே இருக்கே? :-)

    ReplyDelete
  4. கிசுகிசுக்கப்பட்டவர்கள் அனைவரும் அடுத்த கிசுகிசுவில் குடும்பஸ்தனாக இருக்க வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மாமா, 10 வருசமாவா லவ் பண்ணுனீங்க?

    ReplyDelete
  6. உன்ன பத்தி நீயே சொல்லிகிட்டா அதுக்கு பேரு கிசு கிசு இல்ல நைனா

    ReplyDelete
  7. அண்ணே அண்ணியை பத்தி இன்னும் சொல்லவேல்லியே..! ;)

    ReplyDelete
  8. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((((

    ReplyDelete
  9. //உனக்கு தெரியுமா மொக்கை பதிவரும் எல்லோரையும் கலாய்க்கும் பதிவர் ஒருவர் அவர் பத்து வருடமாக லவ்ஸ் உட்ட பெண்ணையே வரும் ஏப்ரல் மாதம் கல்லாணம் கட்டி வெச்சுடலாம் என்றுமுடிவு செஞ்சு இருக்கிறார்களாம் ஆனா இன்னும் தேதிதான் முடிவு ஆகவில்லையாம்.//

    மாம்ஸ் வாழ்த்துக்கள்.... ப்ளீஸ்..ப்ளீஸ்.. சகோதரி பேர மட்டும் நான் இங்க சொல்லிடட்டுமா? எல்லாரும் ரொம்ப ஆவலா இருக்காங்க. :P

    ReplyDelete
  10. ஓ.. இதுக்கு தான் என்னையும் சஞ்சய் பைய்யனையும் ஏப்ரல் மாசம் கண்டிப்பா ஊட்டுக்கு வரனும்னு சொன்னிங்களா? :)

    ReplyDelete
  11. அண்ணே வாழ்த்துக்கள் அண்ணே!...

    ReplyDelete
  12. என்ன கமெண்ட்
    மாடுரேசன் இருக்கு??

    ReplyDelete
  13. அண்ணா வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  14. //
    கோவி.கண்ணன் said...

    எங்கே அய்யனாரைப் பற்றி தகவலாக இருக்குமோ என்று நினைத்தேன்.
    :)

    //
    அப்ப இல்லியா!?!?

    ReplyDelete
  15. சரியாத்தான் உங்களோடை பெயரை தெரிவுசெய்திருக்கிறியள்.

    ReplyDelete
  16. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    தை மாதம் என்பதுனால நிறைய கல்யாண நியூஸாவே இருக்கே? :-)//

    மை ஃபிரண்ட் யக்கா...அடுத்து மாசி மாசம்...மாசி மாசம் ஆளான பொண்ணுன்னு பாட்டை இப்படியே கன்டினியூ பண்ணப் போறாரு பாருங்க நம்ம குசும்பன் அண்ணாச்சி! :-)

    //தம்பி said...
    உன்ன பத்தி நீயே சொல்லிகிட்டா அதுக்கு பேரு கிசு கிசு இல்ல நைனா//

    வாழ்த்துக்கள் குசும்பா! :-)

    ReplyDelete
  17. //தம்பி said...
    உன்ன பத்தி நீயே சொல்லிகிட்டா அதுக்கு பேரு கிசு கிசு இல்ல நைனா
    //
    ரிப்பீட்டேய்ய்ய்ய்.....

    ஆபிஸ்ஸ கட்டடிச்சிட்டு பாதில வந்ததால,கருத்து(?) சொல்ல முடியலை.. ,லஞ்சு டைமுல வந்து பாக்கறேன்.. ஆபீஸுஜ்க்கு கெளம்பியாச்சே..:P

    ReplyDelete
  18. 'உங்களுக்கும் நண்பர்களுக்கும் பெண் பார்த்தாகி விட்டது. இன்னும் தேதி குறிப்பிடவில்லை' என்று சொல்வதாகத் தெரிகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

    ReplyDelete
  19. ஆஹா.. அப்போ கூடிய சீக்கிரம் வூட்டுல பூரிக்கட்டை பாத்திரம் பண்டம் எல்லாம் பறக்கப்போகுதுன்னு சொல்லுங்க :)) வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  20. சுப்பரு அப்பு வாழ்த்துக்கள் :)
    அப்புறம் படிக்ககலம் வாங்க எங்க ?

    ReplyDelete
  21. //ஆஹா.. அப்போ கூடிய சீக்கிரம் வூட்டுல பூரிக்கட்டை பாத்திரம் பண்டம் எல்லாம் பறக்கப்போகுதுன்னு சொல்லுங்க :)) வாழ்த்துக்கள் :)//


    அதானே.. மத்தவங்க அடிவாங்கறதை பார்த்தா அடிக்கறவங்க எல்லாருக்கும் சந்தோஷம் தான்...

    ReplyDelete
  22. எல்லா கிசு கிசு வும் உண்மையாகக்கடவது!

    2 மாசத்தில் தொப்பை ன்னு ஆரம்பிச்சப்பவே கரெக்டா கணிச்சேன்.!

    எப்புடி?

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. சூப்பரு செய்தி அண்ணாச்சி!!!
    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!
    B-)

    ReplyDelete
  24. திருமணம் நடக்கவிருக்கும் மற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :-)
    உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் பெருகி வாழ்க!! :-)

    ReplyDelete
  25. //அவரு எப்பொழுதும் தான் மட்டும் அடிவாங்காமல் கூட இருப்பவர்களுக்கும் அடிவாங்கி கொடுத்துவிட்டு பிறகு தான் அடிவாங்கிக்கும் நல்ல உள்ளம் படைத்தவர் // இது அந்த பாவப்பட்ட பத்துவருசக் காதலிக்குத் தெரியுமா?

    வா ராசா வா! எல்லார்க்கும் Wifeology ஸ்பெஷல் க்ளாஸ் வச்சுடறேன்!

    ReplyDelete
  26. அய்யணார்
    மின்னல்
    பொடியன் சஞ்செய்
    சரவணன் - குசும்பன்

    ஆமா - இவ்ளோ பேருக்கு கல்யாணமா - நல் வாழ்த்துகள். சீக்கிரமே சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து

    ஆம்மா குசும்பன் இன்னும் வயசுக்கே வரலியே - சின்னப் பேரனாச்சே - அவனுக்கு என்னாத்துக்கு கண்ணாலம்

    ReplyDelete
  27. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் சரவணண். படிக்கிற காலத்துலயே அரசல் புரசலா காதுல விழுந்துச்சு, ஆனா ரொம்ப தெரியாது. 10 வருட காதல் 100 வருடங்கள் வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. //cheena (சீனா) said...

    அய்யணார்
    மின்னல்
    பொடியன் சஞ்செய்
    சரவணன் - குசும்பன்

    ஆமா - இவ்ளோ பேருக்கு கல்யாணமா - நல் வாழ்த்துகள். சீக்கிரமே சுப விவாஹ ப்ராப்தி ரஸ்த//

    அச்சச்சோ.. இதென்ன புதுக் கதை? :(
    இதுல 3 பேருக்குத் தான் கண்ணாலம். நேக்கு இல்ல. :(

    ... இத ஒருக்கா நன்னா படிங்கோ...

    //அப்புறம் சின்னபசங்க பெயரில் வலம் வந்தவரும் சமீபத்தில் பெயரை மாற்றியவருமான ஒருவர் ஸ்டேஜில் ஒரு அழகிய பெண்ணுடன் போட்ட குத்தாட்டத்தை ஒரு குட்டி பெண்ணுடைய அப்பா பதிவு செஞ்சு வெச்சு இருக்கிறார் எனக்கும் அதை போட்டு காட்டினார் அப்பா அப்பா என்னா டான்ஸ் என்னா டான்ஸ் அதை கேட்டதுக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டார் ஆனால் தனியாக மெயில் அனுப்பி கேட்டால் கொடுப்பார்!!! ஆனால் செம கிளாமராக இருப்பதால் அதை பதிவில் போட முடியாது!//

    இதுல எங்க வந்தது கல்யாண தகவல்?
    புரளிய கெலப்பி விடாதிங்க தெய்வங்களா? :((

    ReplyDelete
  30. சாட்டோபோபியா வந்த அந்த பதிவர் யாருய்யா - தெரிலயே - ஒரு மறு மொழி கூட அதப் பத்திப் பேசலியே

    ReplyDelete
  31. சங்கத்து சிங்கத்துக்கு கஷ்டம் வரதெல்லாம் ஜகஜம். அப்படியே கடைசியா(!?) உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  33. ஜூப்ப்பரு!!

    எல்லா அண்ணாத்தைங்களுக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  34. ////அப்புறம் சின்னபசங்க பெயரில் வலம் வந்தவரும் சமீபத்தில் பெயரை மாற்றியவருமான ஒருவர் ஸ்டேஜில் ஒரு அழகிய பெண்ணுடன் போட்ட குத்தாட்டத்தை ஒரு குட்டி பெண்ணுடைய அப்பா பதிவு செஞ்சு வெச்சு இருக்கிறார் எனக்கும் அதை போட்டு காட்டினார் அப்பா அப்பா என்னா டான்ஸ் என்னா டான்ஸ் அதை கேட்டதுக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டார் ஆனால் தனியாக மெயில் அனுப்பி கேட்டால் கொடுப்பார்!!! ஆனால் செம கிளாமராக இருப்பதால் அதை பதிவில் போட முடியாது!//

    இதுல எங்க வந்தது கல்யாண தகவல்?
    புரளிய கெலப்பி விடாதிங்க தெய்வங்களா? :((////

    பாவம்,நம்ம சஞ்ஜய்ய விட்டுறலாம் மாம்ஸ்..இன்னிக்கு முழுக்க பாக்கறவங்க கிட்டேல்லாம் "சத்தியமா அந்த வீடியோவுல இருக்குரது நானில்லைங்க..நம்புங்க"ன்னு பொலம்பிக்கிட்டிருக்கார்...:P
    ஆனாலும் அவர் குட்டிஸ்கார்னல மணிக்கொருதரம் உங்களுக்கு வச்ச ஆப்புக்கெல்லாம், மொத்தமா இந்த ஒத்த பதிவுல பழி வாங்கரது அநியாயம் மாம்ஸ்..:)))))))))

    ReplyDelete
  35. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் எல்லாருக்கும்...:)

    ReplyDelete
  37. // கோவி.கண்ணன் said...

    //எல்லை காவல் தெய்வத்தின் பெயரை உடைய வலை பதிவர் ஒருவருக்கும் அவருடைய மாமன் மகளுக்கும் வரும் மார்ச் மாதம் கல்யாணம் நடந்தாலும் நடக்குமாம் வூட்டுபெருசுங்க பையனோட சிக்னலுக்காக வெயிட்டிங்காம்.
    இவரும் போக ரெடி ஆயிட்டே இருக்காராம்.//

    எங்கே அய்யனாரைப் பற்றி தகவலாக இருக்குமோ என்று நினைத்தேன்.
    :) //

    நாங்கூட, யாருன்னு நீங்க கண்டுப்புடிச்சிட்டிங்களோன்னு நெனச்சேன் :P

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள்

    அய்யனார்

    தம்பி

    குசும்பன்

    :)

    ReplyDelete
  39. ஆமா அந்த விருந்து கொடுத்த படம் போடலையா... :)

    ReplyDelete
  40. தம்பி said...
    உன்ன பத்தி நீயே சொல்லிகிட்டா அதுக்கு பேரு கிசு கிசு இல்ல நைனா
    //

    நீங்க போட்டு குடுத்துட கூடாதுனு முன்ன்கூட்டியே சொல்லிட்டாரு...:)

    ReplyDelete
  41. மாதம் பாதி சம்பளம் போன் பில்லுக்கே கொடுக்கிறாராம் அதனால் தான் அவரை முன்பு போல் வலை பதிவு பக்கம் பார்க்க முடிவது இல்லையாம்.
    //

    இருக்கும் இருக்கும் :)

    ReplyDelete
  42. .:: மை ஃபிரண்ட் ::. said...
    தை மாதம் என்பதுனால நிறைய கல்யாண நியூஸாவே இருக்கே? :-)
    //

    தை பிறந்தால் வழி பிறக்கும் சும்மாவா சொல்லிருக்காங்க :)

    ReplyDelete
  43. குசும்பன் உங்க கிசு கிசு எல்லாமே உண்மைதான்.

    எனக்கும் ஒரு இல்ல ரண்டு உண்மை தெரியும். கிட்டத்தட்ட வாக்குமூலமுன்னே வெச்சுக்கலாம்.

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.


    உங்க லிஸ்ட்ல இன்னோரு ஆளு பேரும் கூடிய சீக்கிரம் சேந்திடும். இது ஏதோ என்னால முடிஞ்ச லேட்டஸ்ட் கிசு கிசு. :)))

    ReplyDelete
  44. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    கிசுகிசுக்கப்பட்டவர்கள் அனைவரும் அடுத்த கிசுகிசுவில் குடும்பஸ்தனாக இருக்க வாழ்த்துக்கள். :-)
    //
    ரிப்பீட்டேய்

    ********

    //
    நிலா said...
    வாழ்த்துக்கள் மாமா, 10 வருசமாவா லவ் பண்ணுனீங்க?
    //

    பத்து வருசமா மாத்தி மாத்தி அவரு லவ்விகிட்டுதான் இருக்கார் எதுவும் இவரைத்தான் திரும்பி பாக்கமாட்டிங்குதுங்க!!

    **********
    //

    SanJai said...
    மாம்ஸ் வாழ்த்துக்கள்.... ப்ளீஸ்..ப்ளீஸ்.. சகோதரி பேர மட்டும் நான் இங்க சொல்லிடட்டுமா? எல்லாரும் ரொம்ப ஆவலா இருக்காங்க. :P
    //

    இன்னுமா நீ சொல்லலை
    கிர்ர்ர்ர்ர்ர்ர்

    *************
    //
    நந்து said...
    ஓ.. இதுக்கு தான் என்னையும் சஞ்சய் பைய்யனையும் ஏப்ரல் மாசம் கண்டிப்பா ஊட்டுக்கு வரனும்னு சொன்னிங்களா? :)
    //
    அட என்னையும் வர சொன்னார்பா!!

    ReplyDelete
  45. //
    G3 said...
    ஆஹா.. அப்போ கூடிய சீக்கிரம் வூட்டுல பூரிக்கட்டை பாத்திரம் பண்டம் எல்லாம் பறக்கப்போகுதுன்னு சொல்லுங்க :)) வாழ்த்துக்கள் :)
    //
    என்னா ஒரு சந்தோசம் பாருய்யா!!

    *********
    //
    Jeeves said...

    அதானே.. மத்தவங்க அடிவாங்கறதை பார்த்தா அடிக்கறவங்க எல்லாருக்கும் சந்தோஷம் தான்...

    //
    அதானே
    ரிப்பீட்டேய்

    ********
    //
    //அப்புறம் சின்னபசங்க பெயரில் வலம் வந்தவரும் சமீபத்தில் பெயரை மாற்றியவருமான ஒருவர் ஸ்டேஜில் ஒரு அழகிய பெண்ணுடன் போட்ட குத்தாட்டத்தை ஒரு குட்டி பெண்ணுடைய அப்பா பதிவு செஞ்சு வெச்சு இருக்கிறார் எனக்கும் அதை போட்டு காட்டினார் அப்பா அப்பா என்னா டான்ஸ் என்னா டான்ஸ் அதை கேட்டதுக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டார் ஆனால் தனியாக மெயில் அனுப்பி கேட்டால் கொடுப்பார்!!! ஆனால் செம கிளாமராக இருப்பதால் அதை பதிவில் போட முடியாது!
    //

    என்னாண்ட குடுங்கப்பா வீக் எண்ட் வீடியோனு போட்டுடறேன்!!

    ReplyDelete
  46. எல்லாமே நல்ல செய்திகள்தான், குத்தாட்டத்தைத் தவிர :) குத்தாட்டம் போட்டவர் உங்கள நேராப் பாத்தா, சாமியாடிடப் போறார், பாத்து :)

    கல்யாணம் பண்ணிக்கப் போறவங்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  47. //தலயோட சிட்டுக்குருவி ஏன் சினிமா செய்தி சொல்ல மாட்டேங்குதுன்னு நெனச்சேன்.. இப்போதான் தெரியுது குசும்பன் அபேஸ் பண்ணிட்டார்ருன்ன்னு. :--))))//
    ரிப்பீட்டே!

    ReplyDelete
  48. கோவி.கண்ணன்

    மை ஃபிரண்ட்

    நிலா

    தம்பி

    கோபிநாத்

    சஞ்ஜெய்

    JK

    மங்களூர் சிவா

    துர்கா

    நளாயினி

    kannabiran, RAVI SHANKAR

    ரசிகன்

    G3

    Pondy-Barani

    Jeeves

    சுரேகா

    CVR

    பினாத்தல் சுரேஷ்

    cheena (சீனா)

    Joseph Paulraj

    ILA(a)இளா

    முத்துலெட்சுமி

    வெட்டிப்பயல்

    கப்பி பய

    ஜி

    மின்னுது மின்னல்

    தஞ்சாவூரான்

    Dreamzz

    அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  49. யோவ்,
    அங்கங்க எல்லாரும் அருவா கம்போட சுத்திட்டு திரியறாங்க !!

    எப்படியா ஒன்னால மட்டும் இப்படியெல்லாம் எழுத முடியுது.

    ReplyDelete