Sunday, December 9, 2007

தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா?

தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக மாறுவது போல் இருக்கிறது எதில் என்றால் இலவச அறிவிப்புகளில்.தமிழகத்தில் நடை முறையில் இருக்கும் இலவச டீவி, இலவச நிலம், இரண்டு ரூபாய்கு அரிசி போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தும் பொழுது ஏன் நம் மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்று மற்ற மாநிலங்களும், குஜராத் சட்டசபை தேர்தலில் இலவச டீவி வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் சொல்லி இருப்பது, ஒரு சில நாட்களுக்கு முன்பு கேரள அமைச்சர் திவாகரிடம் ஏன் தமிழகத்தை போல் அரிசியை விலை குறைத்து தர முடியாது ஏன் விலை அதிகமாக இருக்கிறது எல்லோராலும் அரிசி வாங்க முடியவில்லை என்றதற்கு அரிசி விலை அதிகம் என்றால் பால், முட்டை, கோழி இறைச்சி போன்ற உணவு முறைக்குமாறவேண்டும் என்று சொல்லி அங்கு பிரச்சினை ஆகி இருக்கிறது. தமிழகம் கெட்டது பத்தாது என்று எல்லா மாநிலங்களும் இதை பின் பற்ற தொடங்கினால் இந்தியாவில் விவசாயம் என்ன ஆகும் என்ற கவலை வருகிறது.

இதுக்கும் விவசாயத்துக்கும் என்ன சம்மந்தம்?

கிலோ இரண்டு ரூபாய்கு அரிசியும் , வீட்டில் இருந்து பொழுது போக டீவியும் அதுக்கு இலவச மின்சாரமும் , இலவச கேஸ் அடுப்பும் கிடைக்கும் பொழுது வேலை செய்து சாப்பிட இப்பொழுது யாரும் தயாராக இல்லை, கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஊருக்கு போய் இருந்தபொழுது இதை கண் கூடாக கண்டேன் வயலில் நாற்று பறிக்கு ஆளுக்கு அப்பா சொல்லி இதோ வருகிறோம் அதோ வருகிறோம் என்றுசொல்லி ஒரு 10 நாட்கள் கழித்து வந்தார்கள் அதுவும் நான்கு ஆட்கள் மட்டும் ஏற்கனவே முற்றிய நாற்று ஆகையால் திரும்பி புடுக்கி நட்டாலும் விலைச்சல் குறைவாகதான் இருக்கும் என்று வேறு ஒருவரிடம் விலைக்கு வாங்கினார். ஏறகனவே விதைத்து வைத்து இருந்த நாற்று வீன். பின் நாற்று நட என்று ஆட்கள் தயார் செய்ய மிகவும் கஸ்டபட்டார் ஏன் இப்படி முன்பு எல்லாம் நாற்று நட என்றால் குறைந்தது 50 அறுபது பெண்கள் வருவார்கள் ஏக்கருக்கு இத்தனை ரூபாய் என்று வாங்கி அத்தனை பேரும் பிரித்து கொள்வார்கள், இன்று நாள் சம்பளமாக 80ரூபாயும் மற்ற செலவுக்கு 10ம் வேண்டும் என்றும் பேசி விட்டு குறைந்த ஆட்களே வந்தனர் இரண்டு நாட்களில் முடியவேண்டிய வேலை 5 நாட்கள் நடந்தது.

ஏன் இப்படி என்று அப்பாவிடம் கேட்டேன் அவர் சொன்னார் இங்கு மட்டும் என்று இல்லை எங்கேயும் இதுபோல் ஆட்கள் பிரச்சினை இருக்கிறது அரிசி கிலோ இரண்டு ரூபாய்கு கிடைக்கும் பொழுது யாரும் வேலை செய்து சாப்பிட தயாராக இல்லை, கல் அறுக்க போனால் ஒரு நாளைக்கு 200 வரை கிடைக்கிறது ஒரு வாரம் போகிறார்கள் ஒரு மாதம் வீட்டில் இருந்து சாப்பிடுகிறார்கள் என்றார் பின் அறுவடை அப்பொழுதும் இது போல் ஆட்கள் பிரச்சினை இருந்ததாகவும் நிறைய பணம் நஷ்டம் என்றார் அவரிடம் பேசி வயதான காலத்தில் இது போல் கஷ்டபடாதீங்க நிலத்தை குத்தகைக்கு விட்டு விடுங்க என்றால் சின்ன வயதில் இருந்துவிவசாயம் பார்த்தவர் அது ஒரு கெளரவமாக நினைப்பவர் விடு என்றால் அது இது என்று சாக்கு சொல்லி கொண்டு இருந்தார் பின் பல முறை பேசி சும்மா போட்டாலும் போட்டு வையுங்கள் விவசாயம் பார்கவேண்டாம் என்று கோபமாக சொன்ன பிறகு சவுக்கு போட்டு விடலாம் ஒரு 6 வருடம் பிரச்சினை இல்லை என்றார் சரி என்றேன். இது போல் சித்தப்பாவும் செய்து இருப்பதாகவும் சொன்னார் பல பேர் விவசாயத்தை விடும் அளவுக்கு வந்து இருப்பதையும் உணர முடிந்தது.

அதுமட்டும் அன்றி விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்கிறார்கள் விவசாயம் அதில் மூன்று வருடம் நடை பெறவில்லை என்று V.A.O சர்டிபிகேட் கொடுத்தால்அதை விற்பனை செய்யலாம் நம்ம ஊரில் சர்டிபிகேட் வாங்குவதா பெரியவிசயம்?

இது உன் வீட்டில் நடந்ததால் இலவச திட்டத்தை எதிர்கிறாயா என்று சொல்ல வேண்டாம் என் வீட்டில் நடந்ததால் தான் அதை பற்றி எனக்கு தெரியவந்தது,அதுமட்டும் இல்லாது இலவச திட்டங்களால் பல சோம்பேறிகளாக மாறுவதை மறுக்க முடியாது.

இதுபோல் எல்லா மாநிலமும் செய்ய தொடங்கினால் விவசாயம் செய்ய ஏதும் அரசே இலவச அறிவிப்புகள் அறிவிக்க நேரிடும் என்பது நிஜம்.
இலவச அறிவிப்புகள் நன்மையா? தீமையா? இதை தவிர வேறு ஏதும் பிரச்சினைகள் இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஓட்டுக்காக மட்டும் இலவச அறிவிப்புகள் இல்லாமல் தொலை நோக்குபார்வையோடு திட்டங்கள் வருவதுதான் ஆரோக்கியமாக இருக்கும்!!!

23 comments:

said...

:-(((((((

Anonymous said...

செளவுக்கு போட்டு விடலாம் ஒரு 6 வருடம் பிரச்சினை இல்லை என்றார் சரி என்றேன்.

1. selavukku...ental enna...puriyavillai...

2. vivasayam nam naatil valuvilakkirathu...kaaranam...
athika silavu orupuram...as you told makkal kidaikka kastam...

3.itharkku kaaranam...Rs.2/- rice mattum thaanaa....or manitharkalin manathil yaerpattirukkum oruvitha maatamumthaana... ethanai kaalangkalukkuthaan naangal ithaiyae seithukondu...enkalukku veru maatam illaiyaa...
intha tholilai mattumae seivathaal thaanae oru muthirai...entu kooda feel pannalam...yaen ental.. nada, kalaiparikka.. entalae oru particular people lin..tholil entu oru name..ithanal..society yil mathipu ilakka naeridukirathu.athanal kooda irukkalam.... etharkkum...sampanthapatti makkalaiyum oru vaarthai kettuvittal nantaga irrukkumae

said...

//பல பேர் விவசாயத்தை விடும் அளவுக்கு வந்து இருப்பதையும் உணர முடிந்தது.
//

உண்மைதான்! அடிக்கடி கடனில் மாட்டி வேதனை அடைவதை விட, விற்று செல்வதே மேல் என்று பலர் விளைச்சல் நிலங்களை விற்ற அவலங்களையும் நான் கண்டதுண்டு :(

said...

ஆயில்யன் said...
:-(((((((///

என்ன பிரச்சினை?

****************
Anonymous said...

///1. selavukku...ental enna...puriyavillai...////

செளவுக்கு என்பது மரம் செலவுக்கு அல்ல:)))

Anonymous said...

உண்மைதான், ஆனா இங்க யாரு இத ஒத்துக்குவாங்கன்னு நினைக்கிறீங்க....பின்னூட்டங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

1. திராவிட ஆட்சிய குறை சொல்லும் வந்தேரி, உனக்கு எம் தமிழ் சகோதரனின் வாழ்க்கை முறையில் டி.வி எல்லாம் வைத்துக் கொண்டு ஏற்றம் பெருகிறானே என்ற பொறாமை

2. காமராசர் இலவச கல்வியும், எம்ஜியார் இலவச உணவும் தந்த போது எங்கே போனது உங்களது இந்த வாதம்.

3.ஜெ. ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்தபொது ஏன் போடவில்லை இந்த பதிவு. அவாளுக்கு என்றால் ஒரு சட்டம். இப்போது நடப்பது தமிழன் ஆட்சியல்லவா?, இதுவும் கேட்பீர்கள், இன்னமும் கேட்பீர்கள்.

4. அக்மார்க் தினமலத்தனமான பதிவு.

said...

உண்மைதான்! அடிக்கடி கடனில் மாட்டி வேதனை அடைவதை விட, விற்று செல்வதே மேல் என்று பலர் விளைச்சல் நிலங்களை விற்ற அவலங்களையும் நான் கண்டதுண்டு :(//

நிஜம்தான் ஆயில்யன்

***********************

Anonymous said...

உண்மைதான், ஆனா இங்க யாரு இத ஒத்துக்குவாங்கன்னு நினைக்கிறீங்க....பின்னூட்டங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

1. திராவிட ஆட்சிய குறை சொல்லும் வந்தேரி, உனக்கு எம் தமிழ் சகோதரனின் வாழ்க்கை முறையில் டி.வி எல்லாம் வைத்துக் கொண்டு ஏற்றம் பெருகிறானே என்ற பொறாமை//

இல்லை அனானி இங்கு நான் யாரையும் குறை சொல்லாததால் அதுபோல் எதுவும் வராது. இதுவரை வந்ததும் இல்லை!!!

said...

குசும்பன் உங்கள் அலாதி sense of humour மட்டும் பார்த்த எனக்கு ,இந்தப்பதிவு ஆச்சரியத்தை குடுத்தாலும் சந்தோஷமாகவும் இருக்கு.
விவசாய நிலங்கள் ப்ளாட் போடப்படுவது மிகவும் வேதனை. நான் விவசாயம் செய்ய வேண்டும் என்று நிலம் தேடினால் ஏகப்பட்ட விலை .உண்மயில் அத்தனை விலை இருக்கொ இல்லயோ வேண்டுமென்றே விலை ஏற்றிவிட்டு விடுகிறாற்கள்.

அதேனேரம் ஏழை விவசாயிகள் மட்டும் என்னெ செய்வார்கள் . யாராவது 5லச்சம் பெரும் நிலத்தை 20 லச்சம் கொடுத்து வாங்க தயாரானால் அவர்களும் பிழைக்க வேண்டி விற்றுவிடுகிறர்கள்.

நான் இன்னும் நிலம் தேடுவதையும் , விவசாயக்கனவையும் விடவில்லை

said...

Seetha said...
குசும்பன் உங்கள் அலாதி sense of humour மட்டும் பார்த்த எனக்கு ,இந்தப்பதிவு ஆச்சரியத்தை குடுத்தாலும் சந்தோஷமாகவும் இருக்கு.//

நன்றிங்க எங்க இதையும் நல்ல காமெடி பதிவு என்று சொல்லிவிட்டீங்களோ என்று நினைத்துவிட்டேன்:)))

///நான் இன்னும் நிலம் தேடுவதையும் , விவசாயக்கனவையும் விடவில்லை//

எங்கள் ஊர் பக்கம் முயற்சி செய்து பார்கவும் 25 அடிதூரத்தில் நல்ல தண்ணீர் நல்ல விலைச்சல் கொடுக்கும் நிலம் நிறைய விற்கிறார்கள்.

said...

//குசும்பன் said...
ஆயில்யன் said...
:-(((((((///

என்ன பிரச்சினை?//

அதான் நான் கேட்டேன் உங்கள ஆமாம் என்ன பிரச்சினை?

said...

2. காமராசர் இலவச கல்வியும், எம்ஜியார் இலவச உணவும் தந்த போது எங்கே போனது உங்களது இந்த வாதம். ///

இலவச கல்வி என்பது உழைத்து சாப்பிட மூலதனம் அதை குறை சொல்ல முடியாது!

சாப்பிட வழி இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு படிக்க வைத்தது என்பது அது போலதான் அதில் குறை இல்லை.

///3.ஜெ. ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்தபொது ஏன் போடவில்லை இந்த பதிவு.///

படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச பாஸ் வழங்குவது என்பது எல்லாம் கல்வி கொடுக்கும் செயலில் ஒரு பகுதியே என்பதால் அதில் குறை இல்லை!

நான் சொல்லி இருக்கும் இலவசங்களால் மக்கள் சோம்பேறி ஆகிறார்கள் என்கிறேன்.

நீங்கள் சொன்ன இலவசங்களால் மாணவர்கள் படித்தார்கள் இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது.

said...

குசும்பு சொல்வது சரிதான் நானும் ஏற்க்கனவே இந்தவேலையை செய்துவிட்டேன் 10 ஏக்கர் சவுக்குபோட்டு நல்லா தன்னீர் பாய்ச்சுகிறேன் எப்படியும் 4 வருடத்தில் வெட்டிவிடலாம் என்று நினைக்கிறேன் நன்றாகவே உள்ளது அனைவரும் விவசாயத்திலே உழன்று கொண்டிருப்பதைவிட மாற்று தேவைதான் இலவசங்களை குறாஇ சொல்லமுடியாது ஆனால் மாற்று தொழிலும் தேவைப்படுகிறது இதுவும் உன்மைதான் இப்போதெலாம் யாரும் யாருக்கும் கூலிவேலை செய்யவேண்டிய நிலை இல்லை என்று வந்திருந்தால் நல்லதுதான் ஆனால் மக்கள் ஏதாவது வேலை செய்தே ஆகவேண்டும் சும்மா இருப்பதுதான் நாட்டுக்கு கேடு.

Anonymous said...

ஐயா குசும்பரே,

நான் போட்ட முந்தைய பின்னூட்டத்தில் (முந்தைய அனானி 4 பாயிண்ட் எழுதியது) எழுதியது நமது சில பளாக்கர்களின் பாணியிலான கம்பேரிசனும், ரியாக்சனும். சில திமுக முரட்டு பக்தர்கள் எப்படி எடுத்துக்குவாங்க அப்படிங்கறதைத்தான் நான் அப்படி எழுதினேன். நீங்க என்னடான்னா தெளிவா எனக்கு விளக்க ஆரம்பிச்சுட்டீங்க.....

said...

'சவுக்கு மரம் போட்டு விடலாம்' என்பதைத்தான் 'சௌக்கு' என்று எழுதினீர்களா? நான் ஏதோ குத்தகைக்கு போல, வாரத்துக்கு விடுதல் போல, இதுவும் ஒரு முறை என நினைத்து பின்னூட்டம் படித்துத் தெளிந்தேன்.

Anonymous said...

In my grandfather's house land is kept barren for 20 years. They say, it is not worth cultivating. Most of the labor have gone for thirupur factories. so labor is too costly and price for produce is too low.

said...

இரண்டு ரூபாய் அரிசி மட்டும் வானத்திலிருந்தா வரும்?

80ரூபாய்க்கு நாத்து அறுக்க போறதைவிட 200ரூபாய்க்கு கட்டிட வேலைக்கு போறது பரவாயில்லைன்னு நினைக்கிறாங்க. நாமெல்லாம் சாப்ட்வேர்க்கு போகற மாதிரி.எல்லாம் ஒரு சுழற்சி(cycle).


இதன் தொடர்விளைவாகதான் எல்லா உணவுப் பொருள்களும் மிக மிக அதிக விலை ஏறியுள்ளது.

நல்ல தரமான அரிசி கிலோ 20ரூ க்கு குறைவாக இல்லை. பருப்பு 40ரூ. காய்கறிகளின் விலை சொல்லவே தேவை இல்லை. இப்படி ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டே போகலாம்.

எதாவது ஒரு கட்டத்தில் சுழற்சி கண்டிப்பாக மாறும். விவசாயத்தின் தேவை அப்போது புரியும். Necessity is the mother of invention.

அந்த நிலை வரும்போது பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களே விவசாயம் செய்தாலும் செய்யும்!!

@அனானி

உங்க நாலு பாயிண்ட்டும் அல்ட்ரா!!

said...

// பல பேர் விவசாயத்தை விடும் அளவுக்கு வந்து இருப்பதையும் உணர முடிந்தது.//

நெசமாவே வேதனைப்பட வைக்கும் உண்மை. சரியா சொன்னிங்க குசும்பரே..

said...

இலவசமாக ஒரு சில வசதிகள் அந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு அரசு கொடுக்கலாம். அது எல்லாம் எப்போ என்றால் தேவைக்கு அதிகமாக நாம் தன்னிறைவு அடையும் போதும் மக்களுக்கு பயன் அளிக்கும் விதமாக இருக்கும் போதும்.

இதே போல் இந்த இலவசங்களை ஆக்க பூர்வமாக கூட பயன்படுத்தலாம். மின்சாரத்தை தொடர்ந்து ஆறு மாதங்கள் குறைந்த அளவில் முதல் ஆறு மாதங்களை கணக்கில் கொண்டு அவர்களுக்கு பயன்பாட்டு தொகையில் 100 யூனிட் இலவசம்.

ஒட்டுக்காக இலவசங்களை அறிவிக்காமல் உண்மையிலே மக்கள் நலனுக்காக அறிவித்தால் சரி தான். ஒன்னு பண்ணலாம், ஆட்சியில் இருக்கும் போது மட்டும் தான் இது போன்ற இலவசங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறிதியாகவோ அல்லது தேர்தல் நடைப்பெறும் சமயத்திலோ கூடாது என்று.

நாம் பேசிக்கிட்டு மட்டும் தான் இருக்கோம், இலவச டிஷ் கொடுக்கும் படலம் ஆரம்பிக்காம இருந்தா சரி தான்.

said...

\\இலவச திட்டங்களால் பல சோம்பேறிகளாக மாறுவதை மறுக்க முடியாது.\\

இது மறுக்க முடியாத உண்மை.


விவசாய நிலங்கள் மட்டுமல்ல, விவாசாயிகளே நாளடைவில் காணாமல் போய்விடுவார்களோ என எண்ண வைத்தது உங்கள் பதிவு!

உங்கள் குறும்பும், குசும்பும் நிறைந்த பதிவுகளை மாத்திரமே படித்து பழகிய எனக்கு, இது உங்கள் வலைத்தளம் தானா? என்று ஒரு சந்தேகமே வந்தது![அதிர்ச்சி கலந்த சந்தேகம்!!]

நீங்கள் பார்வைக்கு கொண்டுவர நினைத்தக் கருத்துக்களை மிகவும் தெளிவாக பதிவிட்டிருக்கிறீர்கள், பாராட்டுக்கள் குசும்பன்!

said...

//இலவச திட்டங்களால் பல சோம்பேறிகளாக மாறுவதை மறுக்க முடியாது//

இதைத்தான் ஆளுங்கட்சி மந்திரியான ஆற்காட்டாரே சொல்லிட்டார். "முற்றும் அறிந்த கலைஞருக்கா யாம் எடுத்துரைப்பது?"

//அந்த நிலை வரும்போது பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களே விவசாயம் செய்தாலும் செய்யும்!!//

அதை விட கேடுகாலம் வேறு இல்லை. மீண்டும் பன்னாட்டு நிறுவணங்களுக்கு தான் நாம் அடிமை ஆவோம். அமெரிக்காவில் உள்ளதை போல அரசாங்கமே கோதுமையை விலைக்கு வாங்கி கடலில் கொட்டுவதை போல ஆகிவிடும்.

//@அனானி

உங்க நாலு பாயிண்ட்டும் அல்ட்ரா!!//

ரிப்பீட்டே...

இப்போவெல்லாம் கிராமத்துல கதிரருக்க ஆளே இல்லையாம். எல்லோரும் பட்டணத்துக்கு வந்துட்டா? நாம் இப்பொழுது செய்யும் சாப்டுவேர் போன்றவை எல்லாம் service oriented. இவையெல்லாம் அமெரிக்காவும், சிங்கப்பூரும் மற்ற நாடுகளும் செழிப்பாக இருந்தால் தான் நமக்கு சோறு. ஆனால், விவசாயம் என்பது நமக்கு நாமே சோறு போட்டுக் கொள்வது. எக்காலத்திற்கும் பொருந்தும்.

இன்று இலவசங்களையும் மாணியங்களையும் ஆதரிப்பவர்கள் பின்னாளில் கண்டிப்பாக வருத்தப்படத்தான் செய்வார்கள்.

வீட்டுக்கு வீடு கலர் டி.வி. கொடுக்கிற காசில் வீட்டுக்கு வீடு கழிப்பறைகள் கட்டி தரலாம் என்று ஞாநி சொன்னது ஏனோ நியாபகம் வருகிறது.

said...

புரட்ச்சி தமிழன் said...
விவசாயத்திலே உழன்று கொண்டிருப்பதைவிட மாற்று தேவைதான் ////

நன்றி புரட்ச்சி தமிழன் , அப்ப பூவாவுக்கு என்ன செய்வது?:((((

said...

சுல்தான் said...
'சவுக்கு மரம் போட்டு விடலாம்' என்பதைத்தான் 'சௌக்கு' என்று எழுதினீர்களா? நான் ஏதோ குத்தகைக்கு போல, வாரத்துக்கு விடுதல் போல, இதுவும் ஒரு முறை என நினைத்து பின்னூட்டம் படித்துத் தெளிந்தேன்.////

சாரி சுல்தான் சார் எங்க பக்கவும் அப்படி சொல்லுவோமா அதையே அப்படி எழுதிட்டேன்.

*********************Anonymous said...
ஐயா குசும்பரே,

//சில திமுக முரட்டு பக்தர்கள் எப்படி எடுத்துக்குவாங்க அப்படிங்கறதைத்தான் நான் அப்படி எழுதினேன். நீங்க என்னடான்னா தெளிவா எனக்கு விளக்க ஆரம்பிச்சுட்டீங்க.....//

எப்படி இருந்தாலும் விளக்கம் சொன்னது போல் இருக்குமே அதுக்காகதான்:)))

********************

ரசிகன் said...
// பல பேர் விவசாயத்தை விடும் அளவுக்கு வந்து இருப்பதையும் உணர முடிந்தது.//

நெசமாவே வேதனைப்பட வைக்கும் உண்மை. சரியா சொன்னிங்க குசும்பரே..///

நன்றி ரசிகரே!!!

*******************

மங்களூர் சிவா said...
இரண்டு ரூபாய் அரிசி மட்டும் வானத்திலிருந்தா வரும்?
//

வராதுதான் பூமியில் இருந்து தொடர்ந்து வரவைக்க ஏதாச்சும் செய்யனும்:)))

**************************

நாகை சிவா said...
//ஒட்டுக்காக இலவசங்களை அறிவிக்காமல் உண்மையிலே மக்கள் நலனுக்காக அறிவித்தால் சரி தான். ஒன்னு பண்ணலாம், ஆட்சியில் இருக்கும் போது மட்டும் தான் இது போன்ற இலவசங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறிதியாகவோ அல்லது தேர்தல் நடைப்பெறும் சமயத்திலோ கூடாது என்று.///

புலி அருமையான ஐடியா புலி செயல் படுத்துவது யாரு?:))))

**********************

Divya said...
\\இலவச திட்டங்களால் பல சோம்பேறிகளாக மாறுவதை மறுக்க முடியாது.\\

இது மறுக்க முடியாத உண்மை.///

எங்க ஒத்துக்கிறாங்க:)))

///உங்கள் குறும்பும், குசும்பும் நிறைந்த பதிவுகளை மாத்திரமே படித்து பழகிய எனக்கு, இது உங்கள் வலைத்தளம் தானா? என்று ஒரு சந்தேகமே வந்தது![அதிர்ச்சி கலந்த சந்தேகம்!!]///

அப்ப அப்ப இதுபோல் ஏதாவது வரும் கண்டுக்காதீங்க:))))

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி:)))

***************************

சீனு said...
//இலவச திட்டங்களால் பல சோம்பேறிகளாக மாறுவதை மறுக்க முடியாது//

இதைத்தான் ஆளுங்கட்சி மந்திரியான ஆற்காட்டாரே சொல்லிட்டார். "முற்றும் அறிந்த கலைஞருக்கா யாம் எடுத்துரைப்பது?"///

சீனு தங்கள் வருகைக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி!!!

said...

இப்போ நம்ம வேலை பாக்கிறோம் அப்படிதான் சொல்றாங்க, அதுவே போதும் . அதிக வருமானம் இல்லாதவங்க "அதான் கிலோ 2 ரூ க்கு அரிசி தற்றாங்க இல்லயா" அப்புறம் என்ன வேண்டி கிடக்கு பூவாவுக்கு

said...

இந்த தலைப்புக்கு தொடர்பனா இன்னொரு விசயம். ஒரிசாவில இருக்கிற பூரி ஜெகன்னாதர் கோவில்ல தமிழ் நாட்டுல இருக்கிற கோவில்கள் மாதிரி சட்டதிட்டம் எல்லாம் மாத்தனும்மாம். மதுரை மீனாட்ச்சி அம்மன் கோவில், காஞ்சி காமாட்ச்சி அம்மன் கோயில் இங்க எல்லாம் வேற்று மதத்துகாரங்களை கோவிலுக்குள்ள அனுமதிக்கிறதில்லையாம் அதேமாதிரி பூரியிலயும் ஏற்ப்பாடு செய்யனுமாம். தமிழ் நாடு எதுல எல்லாம் முன்மாதிரியா இருக்கு பாருங்க இத நான் சொல்லவில்லை தி இந்தியா டைம்ஸ் பத்திரிக்கை சொல்லுது