Tuesday, October 2, 2007

தமிழன் என்றால் இளிச்சவாயனா?

"நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்கப்படவில்லை என்றால் இது ஒரு அரசா?இது தமிழ்நாடு அரசா? இது தி.மு.க அரசா? ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்இடம் பெற்றுள்ள பலம்மிக்க அரசா? தி.மு.க அரசின் அனுகுமுறை இதுதான் என்றால், அந்த அரசை டிஸ்மிஸ்செய்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு தயங்கக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்."



இது நீதிமன்றம் சொல்லி இருக்கும் கருத்து... இவ்வளோ நாட்கள் சாரி சாரி வருடங்கள் எங்க நீதி ராசாக்களே போய் இருந்தீங்க...

பக்கத்தில் இருக்கும் கர்நாடகா அந்த கடவுளே வந்து சொன்னாலும் தண்ணி விடமாட்டேன் என்கிறான், நீங்க போட்ட உத்தரவு எல்லாம் அவன் விட்ட டூர்ர்ர் போல புசுக்குனு மறைந்து போனது, அப்ப எல்லாம் எங்க போய் இருந்தீங்க?

இதோ பக்கத்தில் இருக்கும் கேரளாகாரன் முல்லை பெரியார் அணை விசயத்தில் யார் பேச்சையும் கேட்கமுடியாதுன்னு திமிரா சொல்கிறான். அப்ப எங்க போய் இருந்தீங்க நீங்க எல்லாம்?

முதலில் இவனுங்களுக்கு எல்லாம் அட்லீஸ்ட் ஒரு கண்டனமாவது சொல்லிட்டு தமிழக ஆட்சியை கலைங்க, இல்ல அவர் தலை முடியை கலைங்க யாரு வேண்டாம் என்று சொன்னது???

*************************
அய்யா முதல்வரே நீங்க இப்ப எதுக்கு 2 1/2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தீங்க? அது என்னாங்க குவிக் லஞ் மாதிரி குவிக் உண்ணாவிரதம் இது யார ஏமாத்த? உச்ச நீதி மன்ற உத்தரவை நாங்க மீறவில்லை என்று சொல்லவா? அல்லது அடுத்த முறை ஓட்டு கேட்க போகும் பொழுது சொல்லுவதற்க்கா? எதுக்கு?

ஈழ தமிழர்களுக்காக அய்யா பழ.நெடுமாறனும் தான் உண்ணாவிரதம் இருந்தார், அதில் இருந்த உணர்வு எங்கே? இப்ப உங்களுக்கு இருக்கும் உணர்வு எங்கே??

**************************

உச்சநீதி மன்ற உத்தரவை மீறியதன் மூலம் தமிழக அரசு ஆட்சியில் இருக்க தகுதி இழுந்துவிட்டது: வைகோ

அய்யோடி!!! எங்க இருந்த ராசா இத்தனை நாளா, தோளில் போட வேண்டிய துண்ட தலையில் போட்டுக்கிட்டு நின்னு போன ஜக்குபாய் ரஜினி ஸ்டில் மாதிரி எங்கயாவது மூலையில் உட்கார்ந்துக்கிட்டு இருந்தியா? இத்தனை நாளா ஒரு வார்த்தை சேது சமுத்திர திட்டத்தை பற்றி பேசி இருப்பீயா?
ஆனா போன தேர்தலுக்கு முன்பு வரை அடிக்கும் போஸ்டரில் எல்லாம் சேது சமுதிர நாயகனே என்று போட்டுகிட்டு இருந்த.. இப்ப எங்க போச்சு அது எல்லாம் இப்ப எதுக்கு இந்த அறிக்கை அம்மாவை குஷி படுத்தவா?

**************************

25 comments:

said...

நாயமான கேள்விகளும் சாடல்களும்.

said...

அந்த நீதியரசர் ஒரு அதிமுக வின் முன்னாள் அமைச்சரின் உறவினர்.அதிமுகவால் டெல்லிக்கு அனுப்பப்பட்டவர். விசுவாசத்தைக் காட்டுகிறார். வேறு ஒன்றும் இல்லை

said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நாயமான கேள்விகளும் சாடல்களும்."

நன்றி யோகன்

said...

"வித்யா கலைவாணி said...
அந்த நீதியரசர் ஒரு அதிமுக வின் முன்னாள் அமைச்சரின் உறவினர்.அதிமுகவால் டெல்லிக்கு அனுப்பப்பட்டவர். விசுவாசத்தைக் காட்டுகிறார். வேறு ஒன்றும் இல்லை"

அவ்வ்வ்வ்:(

மாணவர்களின் எதிர்காலமே அடங்கி இருக்கும் நுழைவு தேர்வு பற்றி தீர்பை எல்லாம் கூட ஞாயிறு அன்று விசாரிக்கவில்லை என்று நினைக்கிறேன்!!!

Anonymous said...

தமிழன் என்றால் இளிச்சவாயனா?

இதில் சந்தேகமா ????

அந்த நீதியரசர் ஒரு அதிமுக வின் முன்னாள் அமைச்சரின் உறவினர்.

இது வேறயா.... ஏற்கனவே காட்டிய விசுவாசம் போதாதா

said...

தமிழன் என்றால் இளிச்சவாயனா?"
//


சந்தேகமா...?

said...

ஞாயமான கேள்விகள். ஆனால் ஞாயமானவர்களிடம் தானே கேட்கவேண்டும், அவர்கள் தானே பதில் சொல்லுவார்கள் ? எனவே தெரிந்தே கேட்டிருக்கும் உங்கள் கேள்விகள் ஞாயமற்றது !
:)

Anonymous said...

நன்றி குசும்பன் வாஸ்தவமான கேள்விகள்.
கர்னாடக கேரள அரசுகளை கலைக்காத நீதிமன்றங்கள் இப்போது என்ன ஆணை இட வந்து விட்டார்கள்?
ஆறரை கோடி மக்களின் நீராகாரத்திற்க்கு இந்த நீதி மன்றங்கள் என்ன நீதி கூறின? அவர்களும் இந்தியர்கள் இல்லையா?

said...

// இவ்வளோ நாட்கள் சாரி சாரி வருடங்கள் எங்க நீதி ராசாக்களே போய் இருந்தீங்க...//

அட்லீஸ்ட் இப்போவாது வாய தொறந்தாங்களேனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்!!

//அந்த நீதியரசர் ஒரு அதிமுக வின் முன்னாள் அமைச்சரின் உறவினர்.அதிமுகவால் டெல்லிக்கு அனுப்பப்பட்டவர். விசுவாசத்தைக் காட்டுகிறார். வேறு ஒன்றும் இல்லை//

அடபாவிங்களா!? இதான் மேட்டரா?என்ன கொடுமை சாஆஆ....

said...

"மின்னுது மின்னல் said...
தமிழன் என்றால் இளிச்சவாயனா?"
//


சந்தேகமா...?"

இருந்தது ஆனால் உங்களை பார்த்த பின்பு போய்விட்டது!!!:))

said...

"கோவி.கண்ணன் said...
ஞாயமான கேள்விகள். ஆனால் ஞாயமானவர்களிடம் தானே கேட்கவேண்டும், அவர்கள் தானே பதில் சொல்லுவார்கள் ? எனவே தெரிந்தே கேட்டிருக்கும் உங்கள் கேள்விகள் ஞாயமற்றது !
:)"

அவ்வ்வ்வ்வ்:(((

இனி அடுத்த முறை தலைப்பு வைக்கும் பொழுது கோவிக்கு ஒரு கேள்வின்னு வைத்துவிடுகிறேன், ஏன்னா நீங்க ஞாயஸ்தன்:))))

said...

"k4karthik said...
// இவ்வளோ நாட்கள் சாரி சாரி வருடங்கள் எங்க நீதி ராசாக்களே போய் இருந்தீங்க...//

அட்லீஸ்ட் இப்போவாது வாய தொறந்தாங்களேனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்!!"

நம்ம சந்தோச படும் படியா தீர்பு சொல்லி இருக்காங்க!!!:(((

said...

"Sabes said...
நன்றி குசும்பன் வாஸ்தவமான கேள்விகள்.
கர்னாடக கேரள அரசுகளை கலைக்காத நீதிமன்றங்கள் இப்போது என்ன ஆணை இட வந்து விட்டார்கள்?
ஆறரை கோடி மக்களின் நீராகாரத்திற்க்கு இந்த நீதி மன்றங்கள் என்ன நீதி கூறின? அவர்களும் இந்தியர்கள் இல்லையா?"

என்ன செய்வது, தீர்பை எதிர்த்து நாம அமைதியான முறையில் எதிர்பை தெரிவிப்பதே இதற்க்கு காரணம், இதே போல் அந்த அரசுகளுக்கு எதிராக தீர்பு வந்திருந்தால் அங்கு நடப்பதே வேறு!!!

said...

அரசியலில் இது எல்லாம் சாதாரணம்ப்பா

said...

//முதலில் இவனுங்களுக்கு எல்லாம் அட்லீஸ்ட் ஒரு கண்டனமாவது சொல்லிட்டு தமிழக ஆட்சியை கலைங்க, இல்ல அவர் தலை முடியை கலைங்க யாரு வேண்டாம் என்று சொன்னது???//

குசும்பன், அவர்களால் கலைக்க முடியாது... கலைக்கலாம் என்று யோசனை தான் கூற முடியும்.

அது போக.... அவன் கேட்கல, இவன் கேட்கல, நான் மட்டும் ஏதுக்கு கேட்கனும் என்பது சும்மா சப்பை வாதம்... இப்படியே எல்லாரும் கேட்காம போயிட்டா அப்புறம் ஏதுக்கு நீதிமன்றம், இழுத்து முடிட வேண்டியது தானே...

சாதகமான தீர்ப்பு வரும் பாராட்டுவது, எதிர்மறையான தீர்ப்பு வரும் போது தீர்ப்பு கொடுத்தவரின் ஜாதகத்தை அலசி ஆராய்வதும் நல்லாவா இருக்கு

Anonymous said...

//தமிழன் என்றால் இளிச்சவாயனா?//

இல்லவே இல்லை.எச்சப் பொறிக்கிகள்.

said...

வழக்கமான கலாய்த்தல்களுடன் இருக்ககூடும் என்று நினைத்து வந்த எனக்கு
ஏமாத்திபுட்டீங்களே..!
ஐயா
ஏமாத்திபுட்டீங்களே.. !
இதிலயும் நான் ரசிச்சது
//அது என்னாங்க குவிக் லஞ் மாதிரி குவிக் உண்ணாவிரதம் இது யார ஏமாத்த?//

said...

"நாகை சிவா said...
அரசியலில் இது எல்லாம் சாதாரணம்ப்பா
"

அப்படி சொல்ல கூடாது புலி...

அரசியலில் இதெல்லா சகஜம்மப்பா!! (கவுண்டர் ஸ்டெலில் சொல்லனும்)

said...

"அது போக.... அவன் கேட்கல, இவன் கேட்கல, நான் மட்டும் ஏதுக்கு கேட்கனும் என்பது சும்மா சப்பை வாதம்... இப்படியே எல்லாரும் கேட்காம போயிட்டா அப்புறம் ஏதுக்கு நீதிமன்றம், இழுத்து முடிட வேண்டியது தானே..."


இன்னும் கொஞ்ச நாட்களில் அதுபோல் நடந்தாலும் ஆர்சர்யபடுவதற்கு இல்லை:((

சாதகமான தீர்ப்பு வரும் பாராட்டுவது, எதிர்மறையான தீர்ப்பு வரும் போது தீர்ப்பு கொடுத்தவரின் ஜாதகத்தை அலசி ஆராய்வதும் நல்லாவா இருக்கு"

நல்லா இல்லைதான் ஆனால் சில சமயங்களில் அப்படி நினைக்கதான் தோன்றுகிறது புலி!!!

said...

"ஆயில்யன் said...
வழக்கமான கலாய்த்தல்களுடன் இருக்ககூடும் என்று நினைத்து வந்த எனக்கு
ஏமாத்திபுட்டீங்களே..!
ஐயா
ஏமாத்திபுட்டீங்களே.. !///

எப்பயாவது இப்படி கொஞ்சமே கொஞ்சமா சீரியஸ் ஆவேன் கண்டுக்காதீங்க!!!:)))


இதிலயும் நான் ரசிச்சது
//அது என்னாங்க குவிக் லஞ் மாதிரி குவிக் உண்ணாவிரதம் இது யார ஏமாத்த?//

இப்படி தேடி பிடித்து நீங்கள் ஒன்றயாவது ரசித்தது மிக்க மகிழ்சியை தருகிறது!!!

said...

சூப்பர் ஷாட் குசும்பா !!!

ஆனாப் பாருங்க அந்த நீதி ராசாக்கள், நம்ம மொதல்வர், அப்புறம் காமெடி கிங் வைகோ சார் எல்லாம் ரொம்ப நல்லவங்க... நாம் எல்லாரும் சேந்து எவ்வளவு திட்டினாலும் தாங்குவாங்க... தாங்குறது மட்டுமா திருப்பி திருப்பி நம்ம அவங்களை வையறதுக்கு வாய்ப்பு வழங்கிட்டே தான் இருப்பாங்க...

தமாஸ் ஒரு புறம் இருந்தாலும் அந்த நீதி ராசா மேட்டர்ல்ல உங்க உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்..

said...

தேவ் | Dev said...
//சூப்பர் ஷாட் குசும்பா !!!//

நன்றி தேவ்:)

///தாங்குறது மட்டுமா திருப்பி திருப்பி நம்ம அவங்களை வையறதுக்கு வாய்ப்பு வழங்கிட்டே தான் இருப்பாங்க...///

அவ்வளோ நல்லவங்களா? அவ்வ்வ்:(((

///தமாஸ் ஒரு புறம் இருந்தாலும் அந்த நீதி ராசா மேட்டர்ல்ல உங்க உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்..///

மீண்டும் ஒரு முறை நன்றி!!

Anonymous said...

amam

Anonymous said...

amam

said...

பக்கத்து மாநிலத்து அரசாங்கம் உச்ச நீதி மன்ற தீர்ப்ப மதிக்கலேன்னா நம்மளும் மதிக்காம இருக்கலாமா. . .?

இன்னிக்கு அவிங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போயிடுச்சே. . . ?

சேது சமுத்திர திட்டம் தொடங்கப் பட்ட நாள்ளேர்ந்து ஒழுங்கா வேல நடந்திருந்தா எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.

இவர்களுடைய அநாவசிய விளம்பரங்களும் அலட்டலகளுமே எதிர்கட்சிகளின் இந்த நிலைக்கு காரணம்.