Monday, July 30, 2007

காதல் காதல் காதல் கதை

"டேய் பொறுக்கி"

"என்னம்மா"

"எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை டா"

"என்ன? கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா ஆகனுமா? "

பேசுவீயா இது மாதிரி ! பேசுவீயா !

"அடி பாவி சும்மா சொன்னா அதுக்காக இப்படியா வாயிலேயே அடிப்ப ராட்சசி...சொல்லு என்ன ஆசைன்னு. "

"இல்ல உன்ன கல்யாணத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு போய் என் கையால உனக்கு சாப்பாடு பரிமாறி நீ சாப்பிட்டு முடிச்ச இலையில் நான் சாப்பிடனும் டா. "

"சரி வா போகலாம். "

"சீ விளையாடத, அப்பா தோல உறிச்சு உப்பு தடவிடுவாறு. "

"சரி என்ன பண்ணலாம் "

"அடுத்த வாரம் எங்க வீட்டுல எல்லாரும் பெரிய்பா வீடு குடி போறதுக்கு போவாங்க அப்ப எங்க வீட்டுக்கு வா நான் மட்டும் தனியாக தான் இருப்பேன். "

"தனியா இருப்பீயா? அப்ப நான் முதலில்ல்ல்........அய்யோ அம்மா அடிக்காதடி. "



...................................................................................................................
"ஏய் சீக்கிரம் உள்ள வா, யாரும் பார்க்க போறாங்க. "

"ரொம்பதான் டா உனக்கு திமிர் என்னமோ கல்யாணம் ஆன மாப்பிள்ளை மறு வீட்டுக்கு வர மாதிரி அமத்தலா வர்ர. யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க. "

"ஏய் யாருக்கு திமிர் எனக்கா உனக்கா, நானா வர்ரேன்னு சொன்னேன். நீ தானே சாப்பாடு போடனும் ஐயாவோட எச்சி இலையில் சாப்பிடனும் அது இதுன்னு சொல்லி வர சொல்லிட்டு என்ன திட்டுற. "

"பசி உயிர் போகுது முதல்ல சாப்பாடு போடு...இங்க கொடு இலைய நீ போய் மத்ததை எடுத்து வா! "

"முண்டம் இப்படியா டா இலைய போடுவ...ஒரு இலை போட கூட தெரியல புள்ளைக்கு இத எல்லாம் கட்டிக்கிட்ட எப்படி காலம் தள்ள போறேனோ! "

"என்ன டீ இப்படி வச்ச கண்னு வாங்காம பார்கிற... "

"இல்ல இப்படியே உனக்கு காலம் பூரா எந்த பிரச்சினையும் இல்லாம சமச்சு போட்டா எப்படி இருக்கும் என்று நினைச்சேன். "

"அதுக்கு என்ன எங்க வீட்டுக்கு வேலைகாரியா வந்துடு, வச்சு......................... "

"அம்மாமாமா...அடி பாவி அதுக்காக இப்படியா கரண்டியால அடிப்ப. எப்படி வீங்கிடுச்சு பாரு... "

"எங்க...காட்டு... "

"ம்ம்ம் இப்படி அடிபட்டு வீங்கின இடத்தில் முத்தம் கொடுப்பாயா? அன்னைக்கு நீ வாயில் அடிச்சது கூட இன்னும் வீங்கி இருக்கு பாரு. "

"உனக்கு எத்தனை தடவை அடி வாங்கினாலும் புத்தி வராது டா பொறுக்கி. "

............................................................................................................

"டேய் குமார் இந்தா போய் இத அந்த ஆளுக்கிட்ட கொடு. "

"போம்மா எனக்கு வேலை இருக்கு. "

"ரெண்டு புள்ள பெத்தாச்சு ஒரு சல்லி காசுக்கு பிரோசனம் இல்ல இதுல மல்லாக்க படுத்துக்கிட்டு கணவு...வேற "

"அவள் வைத்த வேகத்தில் முகத்தில் தெரித்த காப்பி துளியினை துடைத்து கொண்டு டீவியை போட்டால்.... "

அசின் விஜயிடம் ....டேய் வர்ர வெள்ளி கிழமை வீட்டுக்கு வா சமைச்சு வைத்து இருப்பேன் உனக்காக.

பல கவலைகளையும் மீறி சிரிப்பு தான் வருகிறது.
.........................................................................................................

27 comments:

  1. குசும்புனு இருந்துச்சின்னா அதுல வகைப்படுத்தி இருக்கலாம்.

    இதுல்லாம் வாழ்க்கை தத்துவம்பா!

    ReplyDelete
  2. :)
    எப்படி அண்ணாத்த உங்க வாழ்க்கையே வெளிச்சம் போட்டு இப்படி கதையா எழுதி வுட்றீங்க!! :P

    வர்ணனை ,வசனங்கள் எல்லாம் ரொம்ப இயல்பா ரசிக்கும் படியா இருந்தது!!
    வசனங்களை "" குள்ளே போடுங்க!!

    இனிமே நிறைய கதைகள் எழுதுங்க,நல்லா வருது உங்களுக்கு!! (I am serious!! :))

    ReplyDelete
  3. தம்பி said...
    குசும்புனு இருந்துச்சின்னா அதுல வகைப்படுத்தி இருக்கலாம்.

    இதுல்லாம் வாழ்க்கை தத்துவம்பா!
    //

    அனுபவஸ்தர் சொல்லுறாரு கேட்டுக்க தல

    ReplyDelete
  4. அடி நான் புடிச்சி கிளியே வாசமலர் கொடியே என் மனசு தவிக்குதடி---தம்பி

    ReplyDelete
  5. இனிமே நிறைய கதைகள் எழுதுங்க,நல்லா வருது உங்களுக்கு!! (I am serious!! :))

    .//

    இது மாதிரி சொல்லி சொல்லி தான் நல்லா இருந்த ராம் இப்ப பதிவே போடுவதில்லை
    இங்கையுமா ம்ம் விதி யாரை விட்டது

    ReplyDelete
  6. தூக்கம் வருதுய்யா தூக்கம் யாராவது "மடியில் வைச்சி" தாலாட்டு பாடுங்க இங்க ஓட்டுற பாட்டு தூக்கம் வரலை..- ம பெ

    ReplyDelete
  7. சித்த ஆப்பு என்ன விஷயம் கதை அதுவும் காதல் கதை ;-)

    ReplyDelete
  8. \\இனிமே நிறைய கதைகள் எழுதுங்க,நல்லா வருது உங்களுக்கு!! (I am serious!! :)) \\

    சி.வி.ஆர் வேண்டாம்...சித்த ஆப்புவை பத்தி உங்களுக்கு தெரியது...அப்புறம் நீங்க ரொம்ப கவலைபடுவிங்க..

    ReplyDelete
  9. //இல்ல உன்ன கல்யாணத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு போய் என் கையால உனக்கு சாப்பாடு பரிமாறி நீ சாப்பிட்டு முடிச்ச இலையில் நான் சாப்பிடனும் டா.// பிச்சைக்காரனா வா சாப்பாடு போடுறேன்னு சொல்லுவாளாக்கும்னு பார்த்தேன். 'கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்கள்' :-)

    ReplyDelete
  10. ஏம்பா இப்படி பப்ளிக்ல உண்மைய சொல்லி .....

    //உனக்கு எத்தனை தடவை அடி வாங்கினாலும் புத்தி வராது டா பொறுக்கி.//

    இத்தோட நிறுத்தி, வேற மாதிரி முடிச்சிருக்கலாம். வெள்ள மனசா உண்மைய அப்படியே சொல்லியிருக்க வேண்டாம்.

    ReplyDelete
  11. //இத்தோட நிறுத்தி, வேற மாதிரி முடிச்சிருக்கலாம். வெள்ள மனசா உண்மைய அப்படியே சொல்லியிருக்க வேண்டாம். //


    படைப்புக்கள் இயல்பா வரணும் ஜே.கே!


    படைப்பாளியின் இயல்பிலயே வரும் படைப்புகள்தான் நல்லா இருக்கும்!

    ReplyDelete
  12. கதை சூப்பர்.


    சத்தியமா படிச்சிட்டுத்தான்யா சொன்னேன். நல்லாருக்கு.

    ReplyDelete
  13. கலக்குங்க குசும்பன்!

    கதை அருமையா வந்திருக்கு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. //படைப்புக்கள் இயல்பா வரணும் ஜே.கே!


    படைப்பாளியின் இயல்பிலயே வரும் படைப்புகள்தான் நல்லா இருக்கும்! //

    தோடா!

    இவரு பட்டுக்கோட்டை பிரகாருக்கு பக்கத்து வீட்டுக் காரரு!

    படைப்பைப் பத்தியெல்லாம் பேசுறாரு!

    அண்ணாத்தே! கும்மியடிக்கலாம் வாங்க!
    அத்தை விட்டுட்டு கதைய ஆராய்ச்சியெல்லாம் பண்றீங்க!

    ReplyDelete
  15. //நாமக்கல் சிபி said...
    //இத்தோட நிறுத்தி, வேற மாதிரி முடிச்சிருக்கலாம். வெள்ள மனசா உண்மைய அப்படியே சொல்லியிருக்க வேண்டாம். //


    படைப்புக்கள் இயல்பா வரணும் ஜே.கே!


    படைப்பாளியின் இயல்பிலயே வரும் படைப்புகள்தான் நல்லா இருக்கும்!//

    படைப்புனா நல்லா இருக்கும்.

    அனுபவம்???

    ReplyDelete
  16. ஹேய்! இதுல பாதிக்கதை இறந்தகாலம்.. மீதி எதிர்காலமா!! இப்படியெல்லாம் மனசு விட்ரக்கூடாதுப்பா! நம்பிக்கை தான் வாழ்க்கை.:))

    (எதையோ படிச்ச பாதிப்புல எழுதினது போலிருக்கே!!)

    ReplyDelete
  17. //இனிமே நிறைய கதைகள் எழுதுங்க,நல்லா வருது உங்களுக்கு!! (I am serious!! :))//

    ஒரு கதை படிச்சதுக்கே சீரியஸா இருக்காராம் சிவிஆர்! பாவம் குசும்பா விட்ரு.. பொழச்சி போகட்டும்!!

    ReplyDelete
  18. // நாமக்கல் சிபி said...
    கலக்குங்க குசும்பன்!

    கதை அருமையா வந்திருக்கு//

    ஆமா! இவரும் படிச்சிட்டு தான் சொல்வாரு!

    ReplyDelete
  19. நல்லமுயற்சி...கதை தொடர்ந்து எழுதுங்கள். ஆனா பாவம் ஹீரோ...:(

    ReplyDelete
  20. தம்பி said...
    "குசும்புனு இருந்துச்சின்னா அதுல வகைப்படுத்தி இருக்கலாம்."
    "இதுல்லாம் வாழ்க்கை தத்துவம்பா! "

    பாவனாவை கட்டிக்கிட்டா இந்த நிலைதான்னு சொல்லி இருக்கேன் அது உங்களுக்கு புரியுதா?

    CVR said...
    :)
    எப்படி அண்ணாத்த உங்க வாழ்க்கையே வெளிச்சம் போட்டு இப்படி கதையா எழுதி வுட்றீங்க!! :P

    அப்ப லைட் ஆப் செஞ்சுடவா? வெளிச்சம் அதிகமா இருக்கா?


    மின்னுது மின்னல் said...
    தம்பி said...

    "அனுபவஸ்தர் சொல்லுறாரு கேட்டுக்க தல "

    கேட்டுகலாம் மின்னல் யூஸ் ஆகும்.


    கோபிநாத் said...
    சித்த ஆப்பு என்ன விஷயம் கதை அதுவும் காதல் கதை ;-)

    அபி அப்பா உங்களுக்கு அட்வைஸ் செய்ய சொன்னார் அதான் மறைமுகமா உங்களுக்கு சொல்லி இருக்கேன்.

    ஜெஸிலா said...
    " பிச்சைக்காரனா வா சாப்பாடு போடுறேன்னு சொல்லுவாளாக்கும்னு பார்த்தேன். 'கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்கள்' :-)

    ஆஹா எல்லாம் கலைஞ்சு போயுடுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  21. J K said...
    ஏம்பா இப்படி பப்ளிக்ல உண்மைய சொல்லி .....

    //உனக்கு எத்தனை தடவை அடி வாங்கினாலும் புத்தி வராது டா பொறுக்கி.//

    இத்தோட நிறுத்தி, வேற மாதிரி முடிச்சிருக்கலாம். வெள்ள மனசா உண்மைய அப்படியே சொல்லியிருக்க வேண்டாம்.

    எப்படின்னு ஆலோசனை சொல்லுங்க
    மாற்றிடலாம்..

    ReplyDelete
  22. நாமகல் சிபி said "படைப்புக்கள் இயல்பா வரணும் ஜே.கே!

    படைப்பாளியின் இயல்பிலயே வரும் படைப்புகள்தான் நல்லா இருக்கும்! "

    எக்ஸ் கூஸ் மி யார பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க... என்னவச்சு காமெடி கீமெடி செய்யலையே!!!


    லொடுக்கு said...
    கதை சூப்பர்.


    சத்தியமா படிச்சிட்டுத்தான்யா சொன்னேன். நல்லாருக்கு.


    நம்பிட்டோம்:)


    காயத்ரி said...
    ஒரு கதை படிச்சதுக்கே சீரியஸா இருக்காராம் சிவிஆர்! பாவம் குசும்பா விட்ரு.. பொழச்சி போகட்டும்!!

    நான் விட்டு விட்டாலும் அவர் நேரா பாலைதிணை வந்து மாட்டிக்க போகிறார்...உங்க கிட்ட மாட்டிகிறத விட இங்க பெட்டர்.

    ReplyDelete
  23. /ஒரு கதை படிச்சதுக்கே சீரியஸா இருக்காராம் சிவிஆர்! பாவம் குசும்பா விட்ரு.. பொழச்சி போகட்டும்!! //

    :))

    யோவ் கடேசி நாலு வரிய படிச்ச்பிறகுதான் பெருமூச்சி வந்தது..ஹப்பா நீ தெளிவாத்தான் இருக்க கெட்டுப்போகல

    ReplyDelete
  24. வாழ்க்கை முழுதுமே காதலிக்கும்போது இருந்த மாதிரி ஒரே மாதிரி போனாலும் கசந்திடும்.
    நினைச்சுப் பார்த்து சிரிக்க முடிந்தால் நல்ல வாழ்க்கைதான். கசந்தால் அல்லது கரித்தால்தான் கோளாறு.

    ReplyDelete
  25. //அய்யனார் said...
    யோவ் கடேசி நாலு வரிய படிச்ச்பிறகுதான் பெருமூச்சி வந்தது..ஹப்பா நீ தெளிவாத்தான் இருக்க கெட்டுப்போகல
    //

    வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி!!

    ReplyDelete
  26. அய்யனார் said...
    "யோவ் கடேசி நாலு வரிய படிச்ச்பிறகுதான் பெருமூச்சி வந்தது..ஹப்பா நீ தெளிவாத்தான் இருக்க கெட்டுப்போகல "

    ஹி ஹி நன்றி:)


    சுல்தான் said...
    வாழ்க்கை முழுதுமே காதலிக்கும்போது இருந்த மாதிரி ஒரே மாதிரி போனாலும் கசந்திடும்.

    எங்களுக்கு என்ன தெரியும் பெரியவுங்க நீங்க சொல்றீங்க சரியாக தான் இருக்கும்.


    லொடுக்கு said...

    "வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி!! "

    அய்யனார் குள்ளமா இருக்கிறார் என்பதை இப்படி எல்லாம் நீங்க கிண்டல் செய்யகூடாது லொடுக்கு.

    ReplyDelete
  27. குசும்பன்,

    நல்லா இருந்துச்சுங்க.... :)

    //
    இது மாதிரி சொல்லி சொல்லி தான் நல்லா இருந்த ராம் இப்ப பதிவே போடுவதில்லை
    இங்கையுமா ம்ம் விதி யாரை விட்டது//

    மின்னலு,

    அதெல்லாம் இல்ல... வேலை கொஞ்சம் அதிகமாயிடுச்சு, அதுதான்...

    இன்னொரு "கிராமத்திலிருந்து காதல் கதை" சீக்கிரமே போட்டுறலாம்... :)

    ReplyDelete